கள்வன் 27
நீலிமாவின் பக்கத்தில் அம்மா என்ற சிறு அழைப்பு வர.. சட்டென்று கொண்டல்வராவும் நீலிமாவும் திரும்பி பார்க்க.. அங்கே வஸ்தவ் தான் நின்று கொண்டிருந்தான் அருகே ஜித்தேந்தர்..
மகனை பல நாட்களுக்கு பிறகு கண்ட தவிப்பில் அவனை அணைத்து நினைத்து ஒரு எட்டு வைத்த நீலிமா.. அடுத்த எட்டு வைக்க முடியாமல் நின்று, கணவன் புறம் திரும்பிக் கொண்டார். அன்னையின் இந்த முகம் திருப்பும் தந்தையின் பாசமில்லா பார்வையும் கண்டு உள்ளுக்குள் வெந்து போனான் வத்ஸவ்.
பிறந்தது முதல் ஒற்றை வாரிசாய் ராஜ குடும்பத்தில் சகல வசதிகளுடன் வளர்ந்தவன் தான். சொத்துபத்து குறைவில்லாது.. பாசத்துக்கும் குறைவில்லாது வாழ்ந்தவன்!! ஏன் இப்படி நாக பிரசாத்திடம் விழுந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. சட்டென்று இருவரின் காலில் விழுந்தவன், "அம்மா சத்தியமா நான் ஏன் அப்படி பண்ணனேனு எனக்கு தெரியல மா.. என்ன மன்னிச்சிடுங்க அம்மா!! ஏதோ சொத்து பார்த்து ஆசைப்பட்டு பண்ணிட்டேன். மத்தபடி வாஹினிக்கு எந்த கெடுதலும் நான் நினைக்கல.. 'உன்னால வாஹினியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஒதுங்கிப் போன உனக்கு சொத்து தரேன்னு சொன்னான். மண்ட கிறுக்குல ஆசைப்பட்ட செஞ்சுட்டேன். மன்னிச்சுடுங்க!!" என்று அவன் அழுக..
அதுவரை இருந்த ஆத்திரம் மேலோங்க மகனின் கன்னத்தில் மாறி மாறி அடித்தார் நீலிமா. "சொத்தா?? என்னடா பெரிய சொத்து?? நம்மகிட்ட இல்லாத சொத்து?? அவன்கிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டி இருக்க.. அறிவில்ல உனக்கு?? எந்த சொத்தும் இந்த வம்சத்தின் பெருமையை தரமுடியுமா? சொல்லு தர முடியுமா? அப்படிப்பட்ட வம்சத்தில் வந்துட்டு சொத்துக்காக ஆசைப்பட்டு போய் சேர்ந்தேனு சொல்றியே.. நீ எல்லாம் என் பிள்ளையே கிடையாது!! என்ன தான் ஜித்து அவளை ஆசைப்பட்டாலும் ஒவ்வொரு நேரத்திலும் அவளை காப்பாற்றியிருக்கிறான். இவன் தான் எங்களுக்கு பிள்ளை!! நாளைக்கு அம்மாவா அப்பாவா இவனுக்கு நாங்க தான் இந்த கல்யாணத்தை செய்து வைக்கப் போறோம். இனி என் முகத்தில் நீ முழிக்காத!! என்காவது வெளிநாடு போய் தொலைஞ்சிரு!! நிம்மதியா இருப்போம்!!" என்று கத்தி தீர்த்தார் நீலிமா.
அவரை அம்மா என்று அழைக்க முடியாமல் வேறு எந்த முறை சொல்லி அழைப்பது என்று புரியாமல் சற்று தவிப்போடு இருந்த ஜித்தேந்தர் பெருமூச்சு ஒன்று விட்டு, "இரண்டு மாதமா அவன் என் கண்காணிப்பில் தான் இருக்கிறான். அவன் செய்த தப்புக்கு மனம்விட்டு வருந்தியதை பார்த்து தான் இருந்தேன். எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போமே.. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு அவன் மாறினால் அவனுக்கும் நல்லது. அப்படி இல்லையென்றால் இதுவரை அனுபவித்தது எல்லாம் ஒன்றுமில்லை என்கிற மாதிரி இதைவிட நரகத்தை அவனுக்கு நான் காட்டுவேன் என் ஹிமா பக்கம் அவன் பார்வை திரும்பினால் கூட..!!" என்று மெதுவாக ஆரம்பித்து வத்ஸவ்-ஐ பார்த்து கர்ஜித்த ஜித்துவின் குரலில்.. நடுங்கி தான் போனான் வத்ஸவ்.
கொண்டலராவ் அருகில் சென்றவன் "அவன் எடுப்பார் கைப்பிள்ளை!! சிறு வயதில் இருந்தே அவனுக்கு அன்பு பாசம் மட்டும் கொடுக்காது நல்லது கெட்டதுக்கும் போதிக்காமல்.. அவன் விஷயத்தில் அவனை முடிவெடுக்க வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அதுல நீங்க சரிக்கிட்டீங்க.. ஆனாலும் திரும்ப அவனை உன்கிட்ட ஒப்படைக்கறேன். இனி அவனை பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்படி எல்லாரும் சந்தோசமா இருக்கிற நேரத்தில்.. என்னதான் உங்க முகத்தில் சந்தோசம் இருந்தாலும் கண்களில் ஒரு வலி இருக்கு!! எங்கள் கல்யாணத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு எதிர்பார்த்தனால்தான் அவனை திரும்ப உங்களிடம் ஒப்படைக்கிறேன். இனி அவன் எங்கள் புறம் திரும்பாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை!!" என்று பேசியவனை கொண்டலராவ் இறுக்க அணைத்துக் கொண்டார்.
"கண்டிப்பா ஜிதேந்தர் இனிமே வத்ஸவால் எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது. அப்படியே வந்தால் அவனை வெட்டி போடும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்!!" என்று கொண்டலராவ் கூற.. தலையை குனிந்து கொண்டு நின்றிருந்த மகன் தான் செய்த பின் வீரியத்தைப் புரிந்து மீண்டும் கண் கலங்ககினான்
அவன் கையில் ஒரு பையை கொடுத்து "இதில் உனக்கு ஆடைகள் இருந்து மாற்றிட்டு போய் சங்கீத்ல சந்தோஷமா என்ஜாய் பண்ணு!" என்று ஜித்து சொல்ல..
"சாரி.. சாரி!!" என்ற வத்ஸவ் அவன் உடை மாற்றிக் கொண்டு சங்கீத்தில் அவனும் கலந்துகொள்ள.. வாஹினி அவனை ஒருமுறை தீர்க்கமாக பார்க்க.. அவளிடம் சென்றவன் அவளிடமும் தன் மன்னிப்பை கேட்க.. அங்கிருந்து ஜித்தேந்தரை பாவை பார்த்தாள்.
அவன் தலையசைக்க "சரி பழசெல்லாம் மறந்துவிடு.. ஆனால் மறக்காத நம் வம்ச பெருமையை!! எங்கேயும்!! எப்போதும்!! சரியா? இனி யாருக்கும் துரோகம் பண்ணாதே!!" என்றவள் அமர்ந்து கொண்டாள்.
இப்படியாக ஆட்டம் கொண்டாட்டம் என்று அனைத்தும் அழகாக செல்ல இரவில் கையில் போட்டிருந்த மெஹந்தியோடு மாடிப்படி ஏற முடியாமல் ஏறிக்கொண்டிருந்தாள் வாஹின்.. கூடவே அந்த லெஹங்கா வேறு. .
ரிதிஷா அவள் கூட வந்தவள் வெகு நாளைக்கு பிறகு வந்த அண்ணன் அழைத்தவுடன் வாஹினியிடம் சொல்லிவிட்டு அண்ணன் அறைக்கு சென்றாள். அங்கே அவளுக்கும் வாஹினிக்கும் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அவன் காட்ட.. அதையெல்லாம் சந்தோஷத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள் மறுநாள் இருவருக்கும் என்ன பரிசு கொடுப்பது என்பதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அதில் வத்ஸவும் வந்து கலந்து கொண்டான்.
வாஹினி ஏற முடியாமல் இரண்டு படிகளை மெதுவாக தத்தித்தத்தி ஏற.. சட்டென்று அவள் அருகில் வந்த ஜித்து சட்டென அவளை தூக்கிக் கொண்டான்.
"கீழே இறக்கி விடுங்க யாராவது பாக்க போறாங்க!!" என்று அவள் சங்கடப் பட்டுக் கொண்டே சுற்றுமுற்றும் பார்க்க.. அரண்மனை முழுக்க ஆட்கள் இருந்தாலும் இவர்களை பார்த்தும் பார்க்காதது போல பலரும் சென்றுகொண்டிருந்தார்கள். அதிலும் இரவு நேரம் பாதிக்குமேல் உறங்க சென்றிருக்க..
"யாரும் பார்த்தா என்ன? பார்க்கலைன்னா என்ன? என் பொண்டாட்டியை நான் தூக்குறேன்!"
என்றவன், சுற்றி இருந்தவர்களை பார்த்து "என் பொண்டாட்டியை நான் தூக்குவதில் யாருக்காவது அப்ஜக்ஷன் இருக்கா?" என்று சத்தமாக கேட்க, சுற்றி இருந்த உறவினர்கள் முகத்தில் புன்னகை மட்டுமே..
அதிலும் ஒரு துடுக்கான பெண் "மாமாகரு நீங்க பர்மிஷன் வாங்கி ரொம்ப நாள் ஆகுது.. இப்பவே நீங்க லேட் தான்!!" என்று அவள் கண்ணடித்து சிரிக்க.. மற்றவர்களும் சிரிப்போடு நகர்ந்து விட்டனர்.
"பார்த்தேல!!" என்றவாறு அவனை தூக்கிச் சென்றான்.
"ஏண்டி அங்கதான் லிப்ட் இருந்துச்சே?" என்று முக்கால்வாசி படிக்கட்டை தாண்டிய பிறகு அவன் கேட்க, அவளோ சிரித்துக் கொண்டு தன் அறையின் முன்னே இறங்கியவள் "லிட்டில போயிருந்தா இப்படி தூக்கிட்டு வந்திருப்பீர்களா?" என்று கிளுக்கி சிரித்தாள்.
"அடிப்பாவி!! பால் டப்பா.. தேறிட்ட.. தேறிட்ட!!" என்று சிரித்தவன், அவள் அறைக்குள் உள்ள நுழைய.. சட்டென்று அவனை தடுத்தவள், "இன்னைக்கு இங்க கிடையவே கிடையாது பாவா!! தனியா தான் படுக்கனும். நாளை காலைல சீக்கிரமே எழனும்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ரிதி வந்து என்கூட படுத்துக்குவா. அதனால இன்னைக்கு நைட் நீங்க சிங்கிள் தான்.. நாளைக்கு நைட்டு தான் நம்ம மிங்கிள்!!" என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தவள் கதவை அடைத்துக் கொள்ள. ..
"அடியேய்… பால் டப்பா!! நாளைக்கு மாட்டுவல அப்ப இருக்குடி உனக்கு!!" என்று சிகையை கோதிக் கொண்டவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.
அண்ணன் கொடுத்த பரிசுகளை எல்லாம் தன் அறையில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்த ரிதிஷாவை அனுமாலி அழைக்க அங்கே சென்றாள். அவளுக்கும் வாஹினிக்கும் நாளை உடுத்த வேண்டிய புடவை நகைகளை கொடுத்தார்.
பெரும்பாலும் அவர்கள் குடும்ப நகைகளை கையாள்வது அனைத்தும் அனுமாலி தான். இப்போதுமே அப்படித்தான். கூடவே அவந்திகாவும் இருக்க… "ரிதிமா இதுல இருக்கிறதா நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் போட்டுகோங்க. அதுக்கு அப்புறம் உங்களை ரெடி பண்ண ஃப்யூடிசன்ஸ் வந்திடுவாங்க. ரெண்டு பேருக்குமே தனித்தனியே அப்பாயிண்டமெண்ட் பண்ணியிருக்கேன் பியூட்டிஷியன்களை.. அக்காவுக்கு திருமண பட்டு அதுக்கப்புறம் வைத்து தருவாங்க. நம்ம குலதெய்வம் கோவிலில் போய் வைத்துதான் எடுத்துட்டு வருவாங்க. அதுக்கு முன்னாடியே இத கட்டி விட சொல்லு சரியா?" என்று அவந்திகா செல்ல.. அனுமாலியும் அவர்களின் புடவைக்கு தோதான நகைகளை பார்த்து பார்த்து எடுத்து கொடுத்தார்.
னஇரண்டையும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வாஹினியின் அறைக்குள் நுழைந்தவள் அங்கே அக்காவை காணாமல் பாத்ரூம் போய் இருப்பாங்க என்று யோசித்துக்கொண்டே நகைகளையும் புடவையும் கப்போர்டில் வைத்து பத்திரப்படுத்தி விட்டு படுத்தாள். ஆனால் வெகு நேரமாகியும் பாத்ரூமிலிருந்து அக்கா வரவில்லையே என்று அங்கே திறந்து பார்க்க அங்கே வாஹினி இல்லை. சற்றே பதட்டம் தொற்றிக்கொண்டது ரிதிக்கு.
"அன்னைக்கும் இதே மாதிரிதானே ஆனது. இன்னைக்குமா.. ஐயையோ..!!" என்று திகைத்தவள் மீண்டும் ஒருமுறை பால்கனி அங்கிருக்கும் மற்ற அறைகளில் பார்த்துவிட்டு. . அதன்பின் வாஹினி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள், பதட்டத்துடன் கர்னலிடம் போய் கூறினாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் வாஹினியை தேடும் படலம் நடந்தது. ஜித்தேந்தர் கடும் கோபத்தில் இருக்க.. அதே நேரம் உள்ளே பரிதவிப்பு கூட. கோபம் வாஹினியை கவர்ந்து சென்றவன் மீது!! தவிப்போ தன் மனையாளை நினைத்து!!
இப்படியாக நேரம் சென்று கொண்டிருக்க வேண்டும் சிசிடிவி கேமரா உதவியால் ஏதேனும் துப்பு இருக்கிறதா என்று பார்க்க.. கல்யாண வேலை நடப்பதால் பல வண்டிகள் வருவதும் போவதுமாய் இருந்தது. அதில் ஏதேனும் ஒன்றில் தான் வாஹினி கடத்தப்பட்டு இருப்பாள் என்று திண்ணம். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்த போன் கால் ஒன்று வந்தது. அதில் அதில் சிரித்த நாகபிரசாத், "கிரீடத்தை கொடுத்துவிட்டு பெண்ணை எடுத்துச் சொல்லுங்க.. இல்லையென்றால் அவளை என்னவளா மாத்திக் கொள்வேன்.. அதே மூகூர்த்த நேரத்தில்!!" என்று அவன் கூற.. அருவருப்பாய் முகம் சுளித்தாள் அப்போதுதான் மயக்கத்திலிருந்து தெளிந்த வாஹினி.
அதுவும் நாக பிரசாத் அருகில் இருந்தவனை பார்த்து அவ்வளவு அதிர்ச்சி அவளுக்கு!!
