காதலி 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  
கள்வன் 25
 
அதற்கு தலைமை எல்லாம் மாற்ற வேண்டாம்!! வம்சா வழியாக ஆண்தானே ஆண்டு கொண்டிருந்தான். இவர்களுக்கு வாரிசு இல்லை என்றால் அவரது தம்பி மகன் இருக்கிறான் தானே?? அவனை அடுத்த வாரிசாக நியமித்து கொள்ளலாம்!!" என்று பெரிய யோசனை சொல்லி விட்டதால் அந்த கூட்டத்திலிருந்ல பெருசு ஒன்று மீசையை முறுக்கிக் கொள்ள..
 
 
அய்யய்யோ சரித்திரம் திரும்புறதே!! என்று பயந்தனர் நீலிமாவும் சோமையாவும்…
அவந்திகாவுக்கு இவர்களின் வம்சா வழி கதையை தெரிந்தாலும், அதனால் பெரிய பாதிப்பு எல்லாம் அவரிடம் இல்லை. அவருக்கு தெரிந்தது தன் மகள் கணவனோடு நன்றாக வாழ வேண்டும் என்பதே.. இந்த அரசும் சிம்மாசனமும் எதற்கு என்றுதான் அவரது மனநிலை.
 
ஆனால் நீலிமாவும் சோமையாவும் அப்படி அல்லவே?? வழிவழியாக போதிக்கப்பட்டு வந்தவர்கள். இது அவர்களது உரிமை!! அவர்களுக்கு பின் அவர்களது வாரிசு.. அதுவும் முதல் வாரிசு தான் செய்ய வேண்டும் என்று!! இப்படி ஒவ்வொருவராக பேசிக்கொண்டே இருந்தால்.. திரும்பவும் சரித்திரம் திரும்பிவிடுமோ?? இப்போதுதான் கணவன் என்று ஆரம்பித்திருக்கிறாள். இது நடக்கவில்லை என்றால்.. மீண்டும் அவள் நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ? அதாவது 
 
'வேந்தனை மணம் செய்யவில்லை என்றால் வது மீண்டும் இருபத்திரெண்டு வயதுக்கு முன் இறந்து போவாள்!! அந்த சாபம் நம்மையும் நம் வம்சத்தையும் சும்மா விடுமா?' என்று தான் அக்காவும் தம்பியும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
 
"என்ன மாமா?? என்னமோ புதுசா தலைமையை மாத்தனும் அடுத்தவருக்குனு எல்லாம் பேசுறீங்க நீங்க? நம்ம வம்சத்தை பற்றி தெரியாதா உங்களுக்கு? முதல் வாரிசோட வாரிசு மட்டுமே அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர.. ஆண்வாரிசு அடுத்து இருந்தாலுமே உரிமை கொண்டாட முடியாது!! இது தான் நம் வம்ச நியதி!! இதை எக்காலத்திலும் மாற்றம் எண்ணம் எங்களுக்கு இல்லை!! இந்த வம்சத்தில் யாருக்கும் இருக்க கூடாது!! எனக்கோ என் பிள்ளைக்கோ இதில் துளி விருப்பம் கிடையாது!" என்றார் சோமையா தெளிவாக..
 
சில பேரு தலைமையை மாற்ற வேண்டும் என்றும்.. சிலர் இவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி வாரிசு பிரச்சனையை உண்டாக்கி விட்டால் அதன் பிறகு தலைமையாவது ஒன்னாவது அவனவன் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும்.. இன்னும் சிலர் சதித் திட்டத்தில் இறங்க அனைத்திற்கும் தன்னிடம் உங்களின் சதி வேலை செய்யாது என்று கூறிவிட்டார் சோமையா!!
 
'எத்தனை பூசல்களும் வந்தாலும்.. எத்தனை எத்தனை எதிர்ப்பு வலுத்தாலும்.. உறவினரே எதிரியாய் நின்றாலும் நாம் கொண்ட கடமையிலிருந்து வழுவல் ஆகாது ஹிமா!! அந்த கடமை நாட்டுக்கு தாம் செய்வது போல தான் வீட்டுக்கும்!! எவ்வளவுக்கு எவ்வளவு நம் பொது வாழ்க்கை முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் தனி வாழ்க்கையும் முக்கியம்!! இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டது இதற்கு நியாயம் செய்ய அதற்கு அநியாயம் செய்ய கூடாது!! எதற்கும் துணிந்து நில் ஹிமா.. நீ என் செல்ல இளவரசி மட்டுமல்ல.. எங்களின் பெண்ணரசியும் கூட!!' என்று அவ்வப்போது தந்தை கூறும் போது அவ்வயதில் புரியாதது எல்லாம் ஆழ் மனதில் பதிந்து இப்போது வாஹினிக்கு தெளிவாய் புரிய..
 
"எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறிங்களா!!" என்ற அவளது அதிகார ஆளுமையான குரலில் கூடியிருந்த கூட்டம் வாயை மூடிக் கொள்ள..
 
"இது என் வம்சம்!! இதன் அரசி நான் தான்!! இதில் எந்த மாற்றமும் இல்லை.. மாற்றம் வேண்டுபவர்கள் மாறிக் கொள்ளலாம். அதில் தலைமை தலையிடாது. அதன் பின்னே.. எதற்கும் அந்த குடும்பம் உள்ளே வர அனுமதி இல்லை!! 
 
அதென்ன.. பெண் அரசியாய் இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களோ?? ஆணாதிக்க சிந்தனை.. ம்ம்ம்!! ஆனால் பாதகமில்லை.. ஏனெனில் நீங்கள் தான் இனி இவ்வம்சத்தின் நிழலில் இருக்க போவது இல்லையே!! 
 
சித்தப்பா.. தலைமை ஏற்க மாட்டோம் என்பவர்களை பிரித்து விடுங்கள். அந்த குடும்பத்தை பற்றிய செய்தியையும் பொதுவில் சொல்லி விடுங்கள்! இனி எக்காலத்திலும் அவர்கள் இவ்வம்சத்தோடு ஒட்டில்லை என்று!!" என்றவளின் அதிரடியில் அதிர்ந்து போயினர் பேசியவர்கள் எல்லாம்.
 
என்னதான்.. சொத்து பத்து இருந்தாலும் இவ்வம்சத்தின் வாரிசுகள்… கிளை வாரிசுகள் என்று சொல்லவதில் தான் பெருமையே!! வெறும் பணம் மட்டும் தருமா அப்பெருமையை??
எத்தனை எத்தனை மரியாதை போகுமிடம் எங்கும். இவ்வம்சத்தை குடும்பத்தை விட்டு முதலில் பிரிந்து சென்றவர்கள் எல்லாம் இப்பொழுது இருக்கும் இடம் தெரியவில்லை. அதையெல்லாம் நினைத்துப் பார்த்த அந்த வாய் கொடுத்தவர்கள் விழிபிதுங்கி நின்றனர் இப்பொழுது!!
 
"என்ன சித்தப்பா.. கணக்கு எடுத்து விட்டீர்களா? முதலில் அவர்கள் எல்லாம் அப்புறப்படுத்துங்கள்!! இக்குடும்பத்தைச் சாராத யாருக்கும் என்னுடைய விளக்கத்தை சொல்லும் அவசியம் எனக்கில்லை!!" என்று அதே திமிருடன் இருந்தவளைப் பார்த்து மற்றவர்கள் தான் எப்பொழுது பயந்து அமைதி ஆகினர். 
 
அப்படியும் அதில் ஒரு சிலர் நாங்கள் பிரிந்து செல்கிறோம் என்று வீம்புடன் சென்றால் மற்றவர்களும் வந்து ஒட்டிக் கொள்வார்கள் என்ற நப்பாசையுடன் இருவர் செல்ல.. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே அவர்களை பின் தொடராமல் இருப்பதை பார்த்து பெருத்த அவமானத்தோடு அவர்களே வெளியேறினர்.
 
 
அனைவரையும் தீர்க்கமாக ஒருமுறை பார்த்தவள் எல்லோருக்கும் முன் நின்று.. 
"ஒரு வம்சத் தோன்றல் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாத்தியமானது கிடையாது!! எங்கோ ஒரு இடத்தில் அடிமைத்தனத்துக்கு எதிராக தோன்றிய ஒரு சிறு எதிர்ப்பு.. இல்லை ஸ்திரமற்ற ஆளுமையால் நொடிந்த சரிந்த இடத்தில் இருந்து தோன்றிய சிறு விதை விருட்சமாய் வளர்ந்து இன்று எவ்வளவு பெரிய ரெட்டி சமுதாயத்தை ஸ்தாபித்து இருக்கிறது என்றால் அதன் முன்னே இருந்த எத்தனை எத்தனை சோதனைகளைத் தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். அப்படி வளர்ந்த நமக்குள் ஒரு சட்டம் இருக்கிறது அல்லவா?? அதை மீறி.. அது எனக்கு வேண்டாம்.. மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு இங்கே இடமில்லை!! தாராளமாக வெளியில் செல்லலாம்.. அதைப்போல இத்திருமணம் என் தனிப்பட்ட விருப்பம் மட்டும் கிடையாது. என் அப்பாவின் விருப்பம். சிறுவயதிலேயே எனக்கு இவர்தான் என்று முடிவெடுத்து, அதை கட்டிக் காக்கும் பொறுப்பை கர்னல் அங்கிளிடம் கொடுத்து விட்டு தான் சென்றார் என்‌ அப்பா!! அக்காலத்தில் சத்திரியர்களுக்கு காந்தர்வ மணம் உட்பட்டது…" என்று அவள் நிறுத்த.. எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி அவளை பார்க்க ஜிதேந்திரனோ "ஐய்யோ அந்த காட்டுக்குள்ள நடந்ததெல்லாம் இவள் வெட்ட வெளிச்சமாக போறா போல.. அந்தரங்கம் இப்படி அம்பலத்தில் ஏறப் போகுதே!!' என்று முழித்துக் கொண்டிருக்க.. 
 
 
"அதேபோல.. எனக்கு எங்கள் குலதெய்வம் முன்னால் எங்கள் வீர வாளை வைத்து திருமணம் முடித்துவிட்டார் என் தந்தை. அதை தக்க சமயத்தில் உரைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இதோ இந்த நாளில் இதை விட்டால் வேறு என்று உரைக்க முடியும்?" என்றாள்.
 
அவர்கள் குல தெய்வம் கோவில் அதுவும் வீர வாளுக்கு முன்னால் திருமணம் நடந்துவிட்டது என்று கூறிவிட.. இதற்கு மேல் இதில் என்ன தடை சொல்ல முடியும். அதுவும் ஸ்ரீனிவாச ரெட்டியின் விருப்பத்தின் பேரில் நடந்தது. அவர் எத்தனை நல்ல மனிதர் என்பதை விட.. எத்தனை நல்ல அரசர் என்பதை அனைவருக்கும் தெரிந்து இருந்தது. அதனால் இதைப் பற்றி மேலே ஆராய அவர்கள் விருப்பம் இல்லை.
 
 
"சரி வாஹினி.. அப்பாவை முன்னே இருந்து உங்க கல்யாணத்தை நடத்தி இருக்கிறார். நாங்கள் ஒத்துக்கிறோம்!! ஆனாலும் திரும்பவும் ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி அதுவும் நம் குல வழக்கப்படி உன் திருமணம் நடந்தால்தான் எங்களுக்கெல்லாம் திருப்தி!!" என்று உறவினர்கள் சார்பாக ஒருவர் முன்வந்து கூற அவள் உடனே தன் குடும்பத்தினரை தான் பார்த்தாள்.
 
 
சோமையா அவருடைய குலகுரு அருகில் சென்று ஏதோ பேச.. 
அவரும் கண்மூடி சில நேரம் தியானத்தில் இருந்து தன் கையிலிருந்த சோலிகளை பார்த்து கணக்கு எழுதியவர்.. "நாளை மறுநாள் திருமணத்திற்கான அனைத்து யோகமும் கொண்ட பெருநாள்!! அன்றைக்கு இவர்கள் திருமணத்தை நடத்திவிடலாம்!!" என்று அனைவருக்கும் பொதுவாக கூறினார்.
 
 
"அது வரை அனைவரும் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டு திருமணத்தை நல்லபடியாக முடித்துக் கொடுக்க வேண்டும்!!" என்று சோமையா கைகூப்பி வேண்டிக்கொள்ள உறவினர் மொத்த கூட்டமும் அவ்வரண்மையிலேயே தங்கியது.
 
அந்த நொடியை அனுபவித்தப்படி கண்களை மூடி நின்றிருந்தான் ஜித்து. மெல்ல கண்களை திறந்து பார்க்க.. அங்கே அழகிய பெண்ணவளோ ஆங்காரமாய் நின்றிருந்தாள், இரு கைகளையும் இடுப்பில் வைத்துப்படி…
 
'இப்போ என்ன?' அவன் பார்க்க..
 
'என்னை நம்பலைல??' என்று குற்றச்சாட்டியது அவன் பார்வை..
 
'அது.. அது..' என்று திணறின அவன் கண்கள்.. எப்படி சொல்வான் அனைத்தையும்?
 
அவள் இன்னும் முறைத்தப்படி நிற்க.. "ப்ளீஸ் டி.. இந்த சந்தோஷத்தை அனுபவிக்க விட டி ராட்சசி!!" என்றான் ஜித்தேந்தர்.
 
"அப்போ.. என்னை ஒரு லாங் ட்ரைவ் கூட்டிட்டு போ!" என்றாள் கைகளை கட்டிக்கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டே..
 
"சரி வா போகலாம்!" என்று அவளை அழைத்துச் சொல்ல முனைய..
 
மெகவும் ஜிகாவும் வந்து வழிமறித்தனர். என்ன என்று பார்க்க.. 
 
"சாரி பாஸ்.. உங்களுக்கு வெளியில் செல்ல பர்மிஷன் இல்ல.." என்றார்கள் கோரஸாக!!
 
"வாட்?? கம் எகைன்??" என்றான் அதிர்ந்து விழி விரிய..
 
"எஸ் பாஸ்.. கர்னல் ஆர்டர்!! கல்யாணம் முடிவாகி இருக்க..‌ சோ.‌.. நோ அவுட்டிங்.. நோ டேட்டிங்.. நோ டச்சிங்..!!" என்றவர்கள் ஜித்தேந்தர் இருபக்கமும் இருவரும் பிடித்தவாறு தூக்கிச் செல்ல…
 
 
"டேய்!! விடுங்கடா.. விடுங்கடா.." என்று கத்தல் எல்லாம் அவர்கள் காதில் விழவில்லை.
 
"டேய்.. ஒரே ஒரு தடவை.. ஒரே ஒரு ஹக் மட்டும் பண்ணிக்கிறேன் டா.. அடேய்களா… விடுங்கடா!!" என்று மீண்டும் கத்த..
 
அவர்களோ விட மாட்டோம் என்று தூக்கி செல்ல.. "கர்னல்!!!!! வைச்சு செஞ்சிட்டிங்கள.. " என்று அவரை பார்த்து அவன் கோபத்தில் கத்த.. போடா.. போடா.. என்பது போல அவர் கை அசைத்தார்.
 
வாஹினியோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். வெகு நாள் பிறகான மகளின் சிரிப்பை கண்களில் நிரப்பிக் கொண்டு பார்த்திருந்தார்கள் குடும்பத்தார்.
 
அதே நேரம்.. அவர்களின் கல்யாணத்தை நிறுத்த.. அக்கீரிடத்தில் உள்ள வைடூரித்தை அடைய.. அடுத்த முயற்சியை மேற்கொண்டான் நாகபிரசாத்.. முற்பிறவி சைதன்யா!!
 
இம்முறை புது கூட்டாளியுடன்.
 
யாராக இருக்கும்???

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top