காதலி 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 24

 

கல்யாணம் பண்ணனுமா?? அது கல்யாணம் ஆகாத கன்னி பெண்களுக்கு தானே.. எனக்கு தான் ஆகிடுச்சே மாமாகாரு!!" என்று ஒட்டு மொத்த உறவினர் கூட்டத்துக்குப் பெரிய குண்டாய் வாஹினி போட.. எட்டி நின்று பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்த ஜித்தேந்தருக்கும் அந்த பாம் பாஸாகி.. பின் ஷாக்காகி அவளை பார்க்க..

 

'இவ்வளவு நேரம் என்னை பார்த்தியா பாவா?? இப்போ மட்டும் இங்க என்ன பார்வை? திரும்பு டா அந்த பக்கம்!!' என்று‌ கோபத்தோடு முணுமுணுத்தன வாஹினியின் சிவந்த உதடுகள்!!

 

'கோபத்தில் முகம் தானே சிவக்கும்? இவளுக்கு என்ன இதழ்கள் சிவக்கிறதே?' என்று அரும்பெரும் சந்தேகம் கொண்ட பாண்டிய மன்னனாய் நம் ஜித்தேந்தர் லுக் விட..

 

பக்கே இல்லாமல் அந்த லுக்கின் அர்த்தம் புரிந்த வாஹினி 'இந்த ரணகளத்திலும் உனக்கு குஜால்ஸ் கேக்குதா பாவா?' என்று இம்முறை பல்லைக் கடித்தாள்.

 

அதே சமயம் அவள் அருகில் இருந்த ஒன்று விட்ட மாமனோ.. "என்ன வாஹினிமா? இப்படி சொல்ற?" என்று அதிர்ந்து கேட்டார்.

 

"என்ன சொல்லிட்டேன்?? உண்மை எதுவோ அதை தான் சொன்னேன்?" என்றாள் தன் மிடுக்கு மாறாமல்..

 

இவள் சொல்லியதை கேட்ட.. ஒன்று விட்ட, இரண்டு விட்ட சொந்தங்கள் மட்டுமில்ல தொன்று தொட்டு வந்த சொந்தங்களும் "என்னது கல்யாணம் ஆகிடுச்சா??" "எப்போது?" "எங்க?" "யாரு மாப்பிள்ளை??" என்று தங்களுக்குள்ளேயே குசுகுசுக்க..

 

அவந்திகா.. நீலிமா.. சோமையா.. அனுமாலி.. கொண்டல்ராவ்.. ரிதி அனைவருக்கும் ஏதோ புரிந்தும் புரியாத நிலை!!

 

ஆனாலும் மகள் ஒன்று சொல்ல அதை மறத்து பேசி அவளின் கௌரவத்தோடு அவர்களின் வம்சத்தின் பெருமையையும் இங்கே வந்திருக்கும் உறவினர்களின் வாய்க்கு அவலாக்க விரும்பவில்லை அவர்கள். ஆனாலும் அவந்திகாவின் பெத்த மனது ஏன் இப்படி பேசுகிறாள்? உறவினர்களுக்காக பொய் பேசுகிறாளா?? இல்லை மகள் யாரையாவது விரும்புகிறாளா? என்று அவளை அறிந்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தது.

 

ஜித்தேந்தரோ இவள் என்ன இப்படி சொல்கிறாள் என்று அதிர்ந்து பார்த்தவன், வேண்டாம் என்பது போல் தலையாட்ட.. 'போடா.. திருடா!' என்று அவளின் முணுமுணுப்பை கண்டுக்கொள்ள.. 'அடியே.. பால் டப்பா என்னடி பண்ற? என்னடி பண்ண போற? அய்யோ.. வேண்டாமடி!! எதையும் உளறி வைக்காதே!!' என்று அவளை போலவே இவனும் உதட்டு அசைவில் கூற.. சரியாக கண்டு கொண்டவளோ உதட்டை சுழித்து "முடியாது போ.. ப்பாவ்வா!!" என்று இறுக்கமாக இதழ்களை இறுக்கி பிரித்து கூற.. அதனுடன் பறந்து வந்த அவள் முத்தத்தையும் கண்டு கொண்டவனின் வதனத்தில் வெட்க சிவப்பு!! கூடவே சிரிப்பு!!

 

'இவளை.. அடங்க மாட்டேங்குறாளே??' என்று தலைகோதி பிடரி வருடியவன், கர்னலை பார்க்க.. அவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார் சற்று கோபமாக..

 

'நான் என்ன செய்தேன்? எல்லாம் அவள் தான்??' என்பது போல கண்ணை காட்டிவிட்டு, தோளை குலுக்கிக் கொண்டான்.

 

திரும்பவும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு விட்டு, அப்படியே திரும்பி அவளை பார்க்க.. 'என்னங்கடா மொத்த கூட்டமும் நம்மை திரும்பிப் பார்க்குது?' என்று உள்ளுக்குள் ஜெர்க் ஆனாலும்.. வெளியில் தைரியத்தை கூட்டி அனைவரையும் அரசியின் ஆளுமையோடு பார்த்தவள்..

"என்ன இப்போ.. என் பாவா யாருன்னு தெரியுனுமா? சொல்லறது என்ன? காட்டிட்டா போச்சு?" என்று அவளின் பேச்சில் இப்பொழுது உள்ளுக்குள் பெரும் தவிப்பும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது ஜித்தேந்தரிடம்!!

 

"பாவா… இக்கட ரண்டி?" என்று ஜிதேந்தரை பார்த்து கூறியவள் 'என்ன சொல்ல போகிறாய்?' என்பது போல ஒற்றை புருவத்தை தூக்கி காட்டி மென் புன்னகை சிந்த.. அச்சிரிப்பினுள் மொத்தமாய் விழுந்தான் பால் டப்பாவின் பாவா!!

 

வாஹினி விழி சென்ற வழி பார்த்த மற்றவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த ஜிதேந்திரனை பார்த்து அதிர்ச்சிதான்!! அவளுக்கு நிகர் சமமாக ஒருவனை அவர்களெல்லாம் எதிர்பார்த்திருக்க.. அவனோ மெய்க்காப்பாளர்கள் உடையை தரித்து கம்பீரத்தோடு நின்றாலும் அத்தனை உவப்பாக இல்லை வாஹினியைச் சேர்ந்த உறவினர்களுக்கு..

 

ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு அவனின் அந்த காவலன் தோற்றம், கூடவே வாஹினியாய் அவன் தான் தன் கணவன் என்று கூறியதை கேட்டதும்.. பழங்காலத்தின் விட்ட பந்தம் இப்போது தொடர்கிறது என்று தெள்ள தெளிவாய் புரிய.. பெரியவர்கள் அனைவரும் முகத்திலும் அதிர்ச்சி இல்லை ஆனந்தமே!!

 

ராணியின் கணவன் காவலனே ஆனாலும் அதை மறுக்க அவர்களுக்கு ஏது அதிகாரம்!!

அது அவளின் உரிமை!! 

 

ஆதரிக்க ஆசிர்வதிக்க மட்டுமே தங்களால் இயலும் என்று புரிந்தவர்கள் அவர்கள்!!

 

அவந்திகாவுக்கு மகள் நல்லபடியாக கண்ணிறைந்த கணவன் பிள்ளைகள் என குடும்பமாய் வாழ்ந்தால் போதும். மாட மாளிகை கூட கோபுரம் தேவையில்ல.. அவர்களிடம் இல்லாத சொத்தா.. மகளின் மனம் நிறைந்த அவளின் குணம் புரிந்தவனாய் இருந்தால் போதும்!!

 

இப்படி ஆளாளுக்கு தங்கள் நினைவில் உழன்று கொண்டிருக்க‌.. ஜித்தேந்தர் என்ன செய்வது என்று தெரியாமல் முதல் முறையாக தவித்தான்!!

 

இந்நேரம் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால்.. இல்லை வாஹினியே முடியாது என்று மறுத்திருந்தால்.. "போடி!!" என்று தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போய் கொண்டே இருந்திருப்பான். ஆனால்.. வாஹினியின் உரிமை பேச்சில் அவனுள் கூச்சம்! அதைவிட, புருஷன் என்றதில் இன்னுமே நம்ப முடியா ஆச்சரியம்!!

 

சிலையென சமைந்து நின்றவனின் முதுகை தட்டி.. "பாஸ்.. உங்களை தான் வதின கூப்பிடுறாங்க.. போங்க!!" என்று மெகா சிரிப்புடன் கூற..

 

"அட வாங்க பாஸ்!! என்ன புதுசா வெட்கம் எல்லாம்!! வதின சொந்தங்களை எல்லாம் பார்த்திங்க இல்ல.. எல்லாம் உங்களை கண்ணாலேயே ஃபயர் பண்ணி பஸ்மாக்கிடுவாங்க போல.. உங்களை நம்பி வதின வேற வாயை விட்டுடாங்க.. நீங்க என்னடானா சமஞ்ச புள்ள மாதிரி சமைஞ்சு நிக்குறிங்க.. வாங்க.. வாங்க.." என்று‌ மறுபுறம் வந்து ஜிகா இழுக்க..

 

"அடேய்களா!!!! விடுங்க டா என்னை!!" என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

 

அவ்வளவு சீக்கிரம் அவளை சேர்ந்தவர்கள் அவனை ஏற்பார்கள் என்று நம்பிக்கை இல்லை அவனிடம். இவர்கள் எல்லாம் வழி வழியாய்.. கிளையாய் அதே ரெட்டி வம்சத்தில் வந்தவர்கள் தான். அவர்களின் ஆதரவு இல்லையென்றால் ராணியாய் கோலாச்சுக்க முடியாது வாஹினியால்!!

 

சொத்து பத்து என்று இருந்தாலும்.. அதிகாரமாய் ஆளுமையாய் ஆட்சி நடத்தவில்லை என்றாலும், இவளை அரசியாய் ஏற்கவென்று அவர்களின் ஒத்துழைப்பும் வேண்டும் அல்லவா? அதை தான் கர்னல் சொல்லிக் கொண்டிருந்தார். வாஹினியின் உரிமை அது!! அதை அவள் பெற்றிட ஜித்துவோ.. அவனது காதலோ தடையாய் இருந்திட கூடாது என்று!!

 

மெல்ல அவளை நோக்கி அவன் முன்னேறிட.. கர்னல் தள்ளியே நின்று கொண்டார்.

 

"எங்களால் நீ சொல்வதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை வாஹினி!! என்னதான் அரசியாக நீ இருந்தாலும்.. இப்பொழுது எங்கள் குடும்பங்களில் எல்லாம் உங்கள் குடும்பத்தை தான் தலைமை ஏற்று நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக கொஞ்சமும் தகுதி தராதரம் பார்க்காமல் எப்படி திருமணம் நிடந்துவிட்டதுனு கூறுவது எங்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை!!" என்று வருத்தத்துடன் மாமா ஒருவர் கூறினார்.

 

 

இதுதான் சாக்கு என்று சில புல்லுருவிகளும் அந்த கூட்டத்தில் இருந்து கொண்டு "தலைமை இடம் சரியில்லை எனும் போது இனி தலைமை எதுக்கு?? பேசாம இந்த அரசு முறை எல்லாம் ஒழித்துவிட்டு அவங்க அவங்க அவங்க தொழிலையும் வேலையும் பார்க்கலாம்!!" என்றான் பல நாட்களாக இவர்கள் குடும்பத்தின்மீது வன்மத்தில் இருந்த ஒரு உறவினன்..

 

"ஏன் மாத்தனும்?? எதிர்க்கும் ஆற்றலும் தலைமைனு ஒன்னு இருந்தா தான் அதன் கீழே சில சமூகக் கட்டுப்பாடுகளும் நமக்குள் இருக்கும். அதெல்லாம் ஒன்னும் அவசியம் கிடையாது மாற்றவேண்டியது தலைமையை தான்!!" என்றான் மற்றொருவன்.

 

"தலையை மாத்தனும்னா?? என்ன சொல்ல வரீங்க??" என்று இன்னொருவன் கேட்க..

 

"ஆம்!! எவ்வளவு நாளைக்கு தான் இந்தக் குடும்பமே வாரிசு வாரிசாக அவர்களே தலைமை கொண்டாடிக் கொண்டிருக்க முடியும்? நாமும் அந்த வம்ச கிளையில் வந்தவர்கள் தானே!! அந்த தலைமையை நம் குடும்பத்தில் யாருக்காவது தரக்கூடாதா??" என்று இன்னொரு உறவினன் கேட்க..

 

 

"சரிதானே அவன் சொல்றதும்!! இது என்ன அரசியல் கட்சியா?? அப்பாவுக்குப் பின்னால் வரிசையாக.. வாரிசாக அவங்க குடும்பமே ஆட்சி செய்துக்கொண்டிருக்க?? நாமும் அதை வாங்கிக் கொள்ளலாம் தானே!!" என்று மற்றொருவன் நக்கலாய்..

 

"சாதாரணமாக ஒரு காவலன் வெளியிலிருக்க வேண்டும்!! இவன் நமக்கு தலைமையாக அமைந்தால்.. நம் வம்சத்தின் பெருமை என்னாவது?" 

 

"அதற்கு தலைமை எல்லாம் மாற்ற வேண்டாம்!! வம்சா வழியாக ஆண்தானே ஆண்டு கொண்டிருந்தான். இவர்களுக்கு வாரிசு இல்லை என்றால் அவரது தம்பி மகன் இருக்கிறான் தானே?? அவனை அடுத்த வாரிசாக நியமித்து கொள்ளலாம்!!" என்று பெரிய யோசனை சொல்லி விட்டதால் அந்த கூட்டத்திலிருந்ல பெருசு ஒன்று மீசையை முறுக்கிக் கொள்ள..

 

 

அய்யய்யோ சரித்திரம் திரும்புறதே!! என்று பயந்தனர் நீலிமாவும் சோமையாவும்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top