கள்வன் 23
முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகுதான் அப்போது ஜித்துவின் அலுவல் அறையை நோக்கிச் செல்ல போதும் அந்த செக்யூரிட்டி கேமரா சர்வைவலென்ஸ் பண்ணிக் கொண்டிருப்பதை சொல்கிறான் என புரிந்து கொண்டவர், நிஜமாலுமே கோபத்தோடு "அடேய்… தஸ்யூதா!!!!!" என்று அலற போக…
அதை அறிந்தவன் போல் தன் உதடு மேல விரல் வைத்தவன் "ஷ்ஷ்ஷ்!!! நோ சத்தம்! நோ சத்தம்!" என்று புருவத்தை உயர்த்தி கூறியவன், "ப்ளீஸ்… கர்னல்!!" என்று கண்களால் இறைஞ்சி விட்டு திரும்பவும் மறைந்துவிட்டான் மாயக்கண்ணனாக!!
வாஹினியின் அறை கதவை திறந்துகொண்டு மென் அடிகளால் உள்ளே நுழைந்தான் ஜித்தேந்தர்.
அவனுக்கு வர என்று விருப்பமில்லை ஆசையும் இல்லை இப்போது. கர்னலை வெறுப்பேற்றுவதற்காக தான் உள்ளே நுழைந்தான். ஆனாலும் யாரும் பார்த்து விட்டால்.. அது இன்னும் அவள் ஒழுக்கத்திற்கு இழுக்கு என்று பயந்து பயந்து வந்தது அவனுக்கு!!
ஆம்! பயமே தான்!! தன்னவளின் ஒழுக்கத்தையும் கற்பையும் யாரும் ஒரு சதவீதம் கூட தவறாக புனைந்து கூறி விடக்கூடாது என்ற பயம்!!
வந்தது வந்தாகிவிட்டது அவளை சென்று பார்த்துவிட்டு திரும்புவோமே என்ற காதல் கொண்ட மனது பித்தேறி புலம்ப..
அடக்க முடியாமல்.. அடக்க நினையாமல்.. ஏன் அடக்க வேண்டும்? என்ற கேள்வியோடு.. தன் எட்டுகளை அவள் அறை நோக்கி துரிதப்படுத்தினான்.
முகம் முழுவதும் மென்னகையில் மலர்ந்திருக்க அவனது மலரினி படுக்கையில் மலரென உறங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல அவள் புறம் குனிந்து காற்றிலாடும் கற்றை குழல்களை கை விரல்களால் துழாவ.. "ம்ம்ம்.. பாவா…" என்ற மெல்லிய முனகல் பெண்ணிடமிருந்து!!
"தூக்கத்திலும் என் அண்மையை அறிகிறாயா பெண்ணே??
உறக்கத்திலும் என் ஸ்பரிசத்தை
உணர்கிறாயா பெண்ணே??"
என்று அவளது நெற்றி முட்டி மென் முத்தம் வைக்க.. "ம்ம்ம்.. பாவா…" என்று சிணுங்கினாள் உறக்கத்திலேயே.. சட்டென திரும்பி அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டாள் நங்கை!!
அவனுக்குள் சுக அலைகள் படர்ந்து.. சுறுசுறுவென மின் அதிர்வுகளாக உடலெங்கும் பரவி அவனை தாக்கியது.
அவன் விரல்கள் அவள் விரல்களோடு பிண்ணின… அவனது ஆழ் மனதின் வருத்தம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அவள் அணைப்பில்.. அருகாமையில்..
அந்த சுகந்த அலைகளின் சுகத்தை தாங்க முடியாமல் அவளின் விரல்களை அவன் இறுக்கி நெறித்ததில் லேசாய் விழித்து.. சிறிதாய் அலறினாள்.
"அலறாதடி.. என் பால் டப்பா!!" என்று மென்மையாக கூறியவன் அவளது செழுமையான கன்னங்களில் மெல்ல கடித்தான்.
அவள் வலியில் முகத்தை சுழித்து கன்னத்தை அவன் பற்களிடமிருந்து விடுவித்தாள். அந்தோ பாவம்!! உதட்டை மறந்து விட.. அவள் கன்னத்தை விட்ட மாயவனோ.. சட்டென அவளின் இதழ்களைக் கவ்விக் கொண்டான். மொத்தமாக.. இதழ் யுத்தமாக!!
அவள் சுதாரித்துக்கொண்டு இதழ்களை உள்ளே இழுக்கும் முன் அவள் உதட்டை சுவைக்க ஆரம்பித்திருந்தான் கள்வன். அவள் இதழ்களின் இன்பச் சுவை அவனது இதயத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.. சில்லென்ற உணர்வோடு.. சிலிர்ப்பாக!!
கள்வனின் கை கள்ளியின் இடுப்பில் படர்ந்து… ஆராய்ந்து.. விரல்கள் மெல்ல வருடின. அவள் நெளிந்து… உடல் குழைந்து.. தேகம் சிலிர்த்து.. பொன்னிற பூனை மயிர்க்கால்கள் எல்லாம் சிலும்பி கொண்டு நின்றன… மன்னவன் ஸ்பரிசத்தில்!!
"செம சாப்ட் டி.. பால் டப்பா!!" மெல்லிடையைத் தடவியவன் சட்டென இறுக்கிப் பிடித்தான் கிடுக்கிப்பிடி போட்டு!!
அதில் அவள் திடுக்கிட.. அவளது இடையோடு இதழ்களும் துவண்டு, ஓங்கார மூச்சை இழுத்துப் பிடித்தது.
இறுக்கி அணைத்தவனின் நெஞ்சோடு நெஞ்சம் சேர்க்க..
அவ்விரவிலும் இருவரின் கண்களும் ஒன்றில் ஒன்று மூழ்கி அன்றிலென ஒன்றி கிடந்தது.
அவள் கண்களுக்குள் அவனின் தேடல்!!
அவன் கண்களில் அவளின் காதல்!!
நிமிடங்கள் கரைய..
"பாவா???"… என்று கேள்வி எழுப்பினாள் பாவை பாவலனின் பார்வை மொழி அறிய..
அவனோ ஒன்றுமில்லை என்று தலையாட்டினாலும், அவன் முகம் ஏதோ யோசனையில் இருந்தது. பின் மாற்றிக் கொண்டவனின் முகம் அவளின் கழுத்துச் சரிவில் புதைந்தது. கன்றுக் குட்டியாய் சிலிர்த்தபடி அவனைத் தழுவிக் கொண்டாள்.
மெல்ல மெல்ல அவன் வசமானவளின் வாசம் பிடித்தவனுக்கு, மோகம் பிய்த்துக் கொள்ள.. அவளை ஒரு சுழற்றி சுழற்றி மெத்தையில் சாய்த்து அழுத்தி, இரு கைகளையும் இறுக பற்றியவன்..
அவள் கழுத்தில் முத்தமிட்டு.. காதோரத்தில் உதடுகள் உரசி.. கன்னத்தில் எச்சில் தடங்களை பதித்து.. உதடுகளைக் கொவ்வை கனி இதழ்களை கொய்தான்!!
அவனது கைகளும் இதழ்களும் தீண்டாத இடமில்லை பெண்மையை! முதலில் தீண்டலில் மெல்ல நடுங்கத் தொடங்கிய அவளது மென் தேகம் தனக்குள் எழுந்த படபடப்பை அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொள்ள பிரம்பிரயத்தனம் செய்தாள்.
அதி காமமில்லை..
பெரு மோகமில்லை.. ஆனாலும் வெடித்து சிதறிய எரிமலையாய் அவளை பலமுடன் இறுக்கி தன்னுள் பொதித்துக் கொண்டான். உதடுகளை மெல்லச் சுவைத்தவனோ வெறி வந்தவன் போல மென்று சுவைத்தான்.
சில நிமிடங்கள் கழித்து உதடுகள் பிரித்தாலும் தேகங்கள் பிரியாமல் இடுப்பை இருபக்கமும் இறுக்கிப் பிடித்தபடி இருவரும் இருக்க.. அவள் மூக்கோடு மூக்கு உரசி "என்னை எவ்வளவு பிடிக்கும் பால் டப்பா?" என்றான்.
இருவரும் நிலையையும் கண்களால் ஆராய்ந்து அவனுக்கு சுட்டிக்காட்டி..
"இதற்குப் பின்னுமா கேட்கிறாய் என் மனதை?" என்பது போல அவள் பார்க்க..
"பாவையின் பார்வை மொழி வேண்டாம். வாய் மொழி மட்டுமே வேண்டுமடி!!" என்பது போல அவனின் பார்வை..
"ஆதாரம் சொல்லனுமோ? இல்லை அச்சாரம் வேண்டுமோ?'" அவள் விழிகள் கேட்க..
"ஏதோவொன்று?? ஆழமாய்.. அழுத்தமாய்.. உன் அன்பை முற்றிலும் உரைப்பதாய் வேண்டும்!!" அவன் விழிகள் பதில் கூற..
அவனை போலவே அவனைச் சுழற்றியவள், இப்போது அவன் மீது வாகாக படுத்துக் கொண்டு தன் வார்த்தை விடுத்து வாய் ஜாலத்தை காட்டினாள். அழுத்தமாய்!! ஆழமாய்!! அவனுள் இறங்கிக் கொண்டு!!
இக்காதல் கிளிகளின் இரவு நேர காதல் கூடல்.. களித்தல்.. எல்லாம் செவ்வனே நடந்து கொண்டிருக்க.. மற்றொரு புறம் வாஹினிக்கு பட்டம் கட்ட ஏற்பாடும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
நித்திரை முழுக்க மன்னவன் வசத்தோடு வாசத்தோடு இருக்க.. காலையில் அவனை காணும் வேளையில்.. அவன் கண்களில் காணும் ஏதோ ஒரு பாவம்
இவளை குழம்பத் தான் செய்தது.
அவன் கண்கள் எதையாவது யோசிக்கிறதா?? எதையாவது கேட்கிறதா?? இல்லை ஏதேனும் யாசிக்கிறதா?? ஒன்றும் புரியாமல் மொத்தமாக குழம்பித்தான் போனாள் வாஹினி.
அவனிடம் அதை கேட்க நினைத்தால்.. இரவில் வருபவன் ஒன்று அவளின் வாயை அடைத்து விடுவான்.. இல்லை வாகாக சுருண்டு படுத்து விடுவான். இதில் எங்கு கேட்க அவள்?? அவளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள். அவனது வேலையின் அழுத்தத்தையும்.. ஓய்வில்லாமல் அவன் செய்வதையும்.
ஒருபுறம் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் பட்டம் சூட்டும் நாளுக்கென்று அழைப்பை நீலமா கொண்டலராவ் தம்பதி ஒருபுறமும்.. சோமையா தம்பதியர் ஒருபுறமும்.. கொடுத்துக் கொண்டிருந்தனர். விழாவுக்கு அக்காவும் தங்கையும் ஆடை ஆபரணங்கள் என்று பார்த்து பார்த்து தயாராகிக்கொண்டு இருந்தாலும் மனதின் மூலையில் நெருஞ்சு முள்ளாய் ஜித்துவின் யோசனை முகம் வந்து வந்து போனது.
அவனின் ஏக்கப்பார்வை.. கோபப்பார்வை.. அழுத்தமான பார்வை.. காதல் பார்வை.. காதல் மீறிய தாப பார்வை.. மோகத்தில் கட்டுண்ட பார்வை.. என பலவிதங்களில் கண்டு இருக்கிறாள். ஆனால் இது எந்த வகையிலும் சேர்த்து இல்லாமல் புது வகை!!
இப்போதெல்லாம் அவன் பார்க்கும் இந்த பார்வையில் என்னதான் இருக்கிறது. "பாவா.. உனக்கு என்னதான் வேண்டும் என்னிடம்? எல்லாமே கொடுத்தபின் இன்னும் எதை எதிர்பார்க்கிறாய்? என்னிடம் கேட்க முடியாமல் உனக்குள்ளே வைத்து தவித்துக் கொண்டிருக்க காரணம் என்ன? உன்னிடம் நான் ஏதும் மிஸ் செய்கிறேனா?" என்று யோசனையோடு இவளும் சுற்ற…
யாருக்கும் நிற்காமல் நேரமும் காலமும் அதன் போக்கில் சுற்றுச்சூழன்று கொண்டிருக்க அழகாய் விடிந்தது. ஹிரண்மையா வாஹினியின் பட்டாபிஷேக பெருவிழா!!
காலை பரபரப்பில் ஜித்துவை மனம் தேடினாலும், இப்பொழுது அவனை பார்க்க முடியாது என்ற நிதர்சனம் புரிய.. ரிதியோடு தயாராகிக் கொண்டிருந்தாள் ஹிரண்மையா வாஹினி.
அவர்களது பாரம்பரிய முறையில் பட்டு உடுத்தி.. அதற்கு தோதான அணிகலன்கள் அணிந்து.. வானில் இறங்கி வந்த அப்ஸரஸா இல்லை தேவ கன்னிகையா.. இல்லையில்லை அந்த சுடர்விடும் இரு விழிகளை பார்க்கும் போது ஈஸ்வரனின் இடப்பக்க உமையாளே வந்தது போல இருந்தது. அந்த நிமிர்வும்!! அந்த செருக்கும்!! அவள் கண்களில் தெரிந்த தேஜஸூம்!!
பட்டம் கட்டுவதற்கு தேவையான விசயங்களை எல்லாம் ஒவ்வொருத்தராய் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குலகுருவின் தலைமையில்..
பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உறவினர்களும் ஒரு எல்லைக்குட்பட்டது அமர வைக்கப்பட்டிருந்தனர். வாஹினியைச் சுற்றி அவளது ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களான நீலிமா கொண்டல்வராவ்.. சோமையவாச ரெட்டி... அனுமாலி.. ரிதிஷா அதற்கெல்லாம் அவளுக்கு மிக அருகில் அவந்திகா ரெட்டி.
ஆனந்தக் கண்ணீரோடு தன் பெண்ணை தான் பார்த்துக் கொண்டிருந்தார். தன் கணவனின் பல வருட கனவு.. இன்று நிறைவேற போவதை நினைத்து நினைத்து உள்ளம் பூரித்து மகளையே பார்த்திருந்தார் அவந்திகா.
அப்போது குலகுருவால் க்ரீடம் முதலில் பூஜிக்கப்பட்டு.. பின் அவளுக்கு சூட்டப்பட கொண்டு வர..
அவளது கண்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு தன்னவனைத்தேடி அலைபாய்ந்தது.
சற்றே தூரத்தில் நின்றிருந்தான் அவளவன். அவள் பார்வையைத் தவிர்த்து.. ஏனோ அவன் கண்கள் அவள் கண்களை தவிர்க்க.. இவளோ தீர்க்கமாக அவனையே பார்க்க..
அப்பொழுது குலகுரு.. அவர்கள் முறைப்படி எல்லா சம்பிரதாயங்களை செய்து அவள் தலையில் கிரீடத்தை சூட்டினார்.
அப்போதும் வாஹினியின் கண்கள் ஜித்துவையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது அவன் கண்களில் தெரிந்த அந்த பாவம்.. அந்த வலி.. கண்டு கொண்டாள் எதனால் என்று!!
"பாவா…" பாவை மெல்ல உதடு அசைக்க..
சரேலென்று அவன் கண்கள் அவளை பார்க்க.. அழகிய புன்னகை ஒன்றை சிந்தினாள் வாஹினி!!
பட்டம் சூட்டும் விழா வெற்றிகரமாக முடிந்ததும் அங்குள்ள உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் வந்து வாழ்த்திவிட்டு அமர.. அப்போது அவர்கள் சொந்தத்திலேயே இருந்த ஒருத்தர் "எப்பவும் திருமணத்தையொட்டி தானே நீங்கள் பட்டம் கட்டுவிங்க ஆண்களுக்கு.. ஆனால் ஏனோ வாஹினிக்கு மட்டும் முதலில் பட்டம் கட்டி விட்டீர்கள்?? அப்போது திருமணத்தை நடத்தி விட வேண்டியது தானே.. மாப்பிள்ளைக்கா பஞ்சம்?" என்றார் அவள் முறைக்கு இவர் வீட்டிலும் ஒரு பையன் இருப்பதால்..
"மாமா… அதெ
ல்லாம் கல்யாணம் ஆகாத பெண்ணிற்கு தான். எனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே!! என்று குண்டைத் தூக்கி போட்டவள், "பாவா.. இக்கட ரண்டி!!" என்றாள்
ஜித்தேந்தரை பார்த்து!!
