கள்வன் 22
ஜித்தேந்தருக்கு தான் தான் ஜலந்திரன் என்று தெரியுமா??
நீலிமா இங்கே கொண்டலராவிடம் கதையை சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜித்துவையும் ஹிமாவையும் நெருக்கமாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கர்னல்.
ஏற்கனவே ஜித்தேந்தரை பற்றி அனைத்தும் தெரிந்தவர் தான் கர்னல்!! ஆனால் இவர்களின் இந்த நெருக்கம் எங்கு கொண்டு போய்விடுமோ? என்று தான் அவருக்கு கவலை. முதலில் எந்த பிரச்சினையுமின்றி வாஹினிக்கு பட்டம் சூட்ட வேண்டும். அதன் பிறகு தான் இவர்களின் கல்யாணத்தை எதிர்கொள்ள முடியும்!!
"இவன் அதற்குள் ஏதும் பிரச்சனை செய்து விடுவான் போல சொல்பேச்சு கேட்காத கேடி பய!! நான் இவனை வைத்துக் கொண்டு.." என்று புலம்பிக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் அவர்கள் இருந்த திரையை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தார். ஆனால் அவரின் கண்களில் இருவரும் இல்லை.. கருத்தில் மட்டுமே நிறைந்திருந்தனர்.
ஓரளவு இங்கு உள்ள அனைவருக்கும் அவர்களின் பெண்ணரசியின் வரலாறு தெரியும்!! ஆனால் அவற்றையெல்லாம் மீறி நல்லபடியாக இருவரும் இணைய வேண்டும் என்பதே கர்னலின் ஆகப் பெரும் கவலை இப்பொழுது.
இப்படி அவர் அமர்ந்திருக்கும்போது "கர்னல்…!!" என்று கர்ஜிக்கும் குரலில் சட்டென்று அதிர்ந்து திரும்பி பார்க்க.. அங்கே அந்த அறையின் வாசலில் கையை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவரைத்தான் சிவந்த கண்களோடு பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் ஜிதேந்தர்.
அப்போதுதான் அவருக்கு புரிந்தது "நாம் அந்த ஸ்கிரீனை பார்த்ததை பார்த்து விட்டான் போல!!" என்று அவர் நினைத்துக் கொண்டே இருக்க..
"உங்க வயசுக்கும் இப்ப நீங்க பார்க்குற வேலைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை கர்னல்!!" என்று கடித்த பற்களிடையே வார்த்தைகளை இவன் துப்ப..
"தஸ்யூதா…!!" என்று சமாதானம் சொல்ல அவர் முனைய கைகளை அவர் முன் நிறுத்தி..
"உங்களுக்கு என்னிடம் பேசணும்னா என்னை கூப்பிட்டு இருக்கலாம். ஆனால்... இது முறையல்ல!!" என்று அவன் முறைக்க..
"டேய்.. அவ ரூம்ல கேமரா பிக்ஸ் பண்ணது நீனு.. அதை லேப்டாப்ல கனெக்ட் கொடுத்து வெச்சு பாக்குறது நீனு.. ஆனா இப்ப வந்து நீ என்ன முறைப்பியோ??" என்று அவரும் கோபமும் நக்கலும் கலந்த தொனியில் கேட்டார்.
"அவ ரூம்ல கேமரா பிக்ஸ் பண்றதுக்கும் மட்டுமல்ல அதை பாக்குறதுக்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு.. எனக்கு மட்டும் தான் இருக்கு. ஆனா உங்களுக்கு இங்கே நுழைய எந்த பர்மிஷன் இல்லை!!" என்றான் அவனும் தெனாவெட்டாக..
"ஆனா.. இது உன் பர்ஸனல் ரூம் இல்லையே? தஸ்யூதா!" என்று அவரும் மடக்கி பேச..
"இந்த லேப்டாப் ஆன்ல இருந்தா இந்த ரூமுக்குள்ள என் ஆளுங்க யாரும் வர மாட்டாங்க..!!" என்றான் ஆளுமையோடு.
"தஸ்யூதா.. உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனால் உங்களை இப்படிப் பார்க்கும்போது... ம்ப்ச்.. என்ன சொல்றது?? உனக்கு ஏன் பொறுமையை இருக்க மாட்டேங்குது??" என்று அவர் அலுத்துக் கொண்டு அவனைப் பார்க்க..
"ரொம்ப.. ரொம்ப.. நான் பொறுமையா இருக்குறது ஹீமா விஷயத்தில் மட்டும் தான்!! கர்னல்.. இல்லை என் பொறுமையின் அளவு யாருக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம் உங்களுக்கு தான் தெரியுமே!!" என்று அவன் இருகை விரித்து தோளைக் குலுக்கிக் கொண்டு கூற..
"அது தான்.. இன்னும் இன்னும் எனக்கு பயமா இருக்கு தஸ்யூதா… புரிஞ்சிக்கோ.. முதலில் வாஹினிக்கு பட்டம் சூட்டடும். அது பின்…"
"அதன் பின் என்ன?? என்ன அதன் பின்?? அவளின் அதிகாரத்தையும் பதவியையும் காட்டி என்னை தூர நிறுத்தவா?? ம்ம்ம் சொல்லுங்க..??" என்று அவன் ரௌத்திரத்தோடு கேட்க..
"வாஹினிக்கு உன் மீது உண்மையான காதலும் அன்பும் இருந்தால்.. அவள் ஏன் உன்னை தூர நிறுத்தப் போறா?? உண்மையான காதல் எதற்கும் யாருக்கும் கட்டுப்பட்டு நிற்காது!! அணையை உடைத்து வரும் வெள்ளம் போல.." என்று அவர் பாடம் எடுக்க…
கண்களை அழுத்த மூடி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உதடு கடித்து அமைதியாக நின்றான். ஆனால் அந்த அமைதியானது புயலுக்கு முன் வரும் அமைதியாகவும்.. வெடிக்கும் முன் எரிமலையின் அமைதியாகவும் இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் சீறி வெடிப்பேன் என்று!!
ஜித்தேந்திர அப்படிப் பார்க்க கர்னலுக்கும் வலித்தது. மெதுவாக அவனது தோளை தட்டி கொடுத்து.. "தஸ்யூதா.." என்று அழைக்க அவரை வலி நிறைந்த கண்களோடு பார்த்தவன் "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை கர்னல்!" என்று அதே வலி அவன் குரலிலும் பரதிபலிக்க.. அவனை இறுக அணைத்துக் கொண்டார் கர்னல்.
"எல்லாம் சரியாப் போகும்!! எல்லாம் நல்லாத்தான் முடியும்!!" என்று அவனுக்கு மென்குரலில் ஆறுதல் அளிக்க..
"ஹா.. ஹா.. என்ன ஆறுதலாக்கும்!! பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு எப்ப என்ன ஆறுதல் வேண்டி கிடக்கு? போங்க!! போங்க!!" என்று அவரை தள்ளி நிறுத்தினான்.
"டேய்.. டேய்.." என்று அவரும் அவனை பிடித்து இழுக்க.. "போங்க!! போங்க!!" என்று சிறு பிள்ளையாக அவரை தள்ளிவிட்டான். அவரும் அவனை பிடித்து இழுத்து அவனது புஜங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டு "என்னை நம்பு டா!!" என்று இறைஞ்சும் குரலில் கேட்க..
அவரை அறிந்தவன் தான். அவரை பார்த்தவனின் கண்களில் இப்பொழுது குறும்பும் மீண்டு இருக்க.. "உங்களை நம்பாம யாரை நாம போறேன் கர்னல்??" என்று கண்ணடித்தவன், "சரி.. சரி.. போய் தூங்குங்க!! லேட் லேட் ஆகுது" என்று அவரை அவரது ரூம் வரை கொண்டு விட்டவன், இவன் விடுவிடுவென்று மாடியில ஏற "எங்கடா போற?" என்றவனைப் பார்த்து அதிர்ந்து கேட்டார். ஏனென்றால் இவனது அறையும் அவரது அறையின் அருகில் தான் இருந்தது..
"நீங்க தான் சும்மா இருந்தவனை சுரண்டி விட்டீங்க.. அதான் எல்லாம் நான் பாத்துக்குறினிங்களே… சோ.. நான் இப்போ என் பொண்டாட்டிய பார்க்க போறேன்!!" என்றவன் நொடியும் தாமதிக்காமல் விரைந்து ஹிமாவின் அறையை நோக்கி ஓடி விட்டான்.
"இவனை…" என்று பல்லைக் கடிக்க மட்டுமே கர்னலால் முடிந்தது. மெல்ல அவர் தனது அறை பக்கம் திரும்ப மீண்டும் "கர்னல்..!!" என்ற விளிப்பு சற்றே குசுகுசுப்பாக மெலிதாக…
யாரென்று திரும்பிப் பார்த்தவர் அங்கே மாடி படியின் முடிவில் நின்று இவரைத்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தான் ஜித்தேந்தர்.
"என்ன??" என்று இவரும் அவனைப் போலவே கேட்க, "அந்த லேப்டாப்பை லாக் அவுட் பண்ணிடுங்க!" என்று கண்ணடித்துக் கேட்டான்.
முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகுதான் அப்போது ஜித்துவின் அலுவல் அறையை நோக்கிச் செல்ல போதும் அந்த செக்யூரிட்டி கேமரா சர்வைவலென்ஸ் பண்ணிக் கொண்டிருப்பதை சொல்கிறான் என புரிந்து கொண்டவர், நிஜமாலுமே கோபத்தோடு "அடேய்… தஸ்யூதா!!!!!" என்று அலற போக…
அதை அறிந்தவன் போல் தன் உதடு மேல விரல் வைத்தவன் "ஷ்ஷ்ஷ்!!! நோ சத்தம்! நோ சத்தம்!" என்று புருவத்தை உயர்த்தி கூறியவன், "ப்ளீஸ்… கர்னல்!!" என்று கண்களால் இறைஞ்சி விட்டு திரும்பவும் மறைந்துவிட்டான் மாயக்கண்ணனாக
