கள்வன் 18
"பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன நாகார்ஜூனா!! அதுவும் ஜென்மங்கள் கடந்து… ஆயினும் ராணியவள் திறம்பட எதிர்கொள்வாள் தன் வேந்தனின் துணைக் கொண்டு!!" என்று அவர்
அழுத்தமாக கூஹ..
"நாங்கள் இன்னும் எங்கள் மகளுக்கு வரன் பார்க்கவே இல்லையே??" என்று சோமையா குழப்பத்துடன் கேட்க.. கர்னலை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தார் குரு. ஏனென்றால் சோமையா முகத்தில் தெரிந்த அந்த அதிர்ச்சியோ? கேள்வியோ? குழப்பமோ?? கர்னல் முகத்தில் இல்லை!!
"வதுவோடு தானே இருக்கிறான் வேந்தனும்!!" என்றார் மறை பொருளில்..
அது சோமையாவுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். ஆனால் கர்னலுக்கு நன்றாக தெரியும் அல்லவா.. அது யார் என்று!!
ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது தான் என்ன சொன்னாலும் அது பிரச்சினையில் தான் சென்று முடியும். அதுவாகவே ஒவ்வொன்றாக வரட்டும் நாம் எதிர்கொள்ளுவோம்!! நாமாக ஏன் ஆரம்பித்து வைக்க வேண்டும்? என்ற எண்ணத்தில் கர்னல்..
சோமையா 'வது என்றால் வாஹினியையா சொல்கிறார்? வேந்தன் யாரு?? அதுவும் கூடவே வா?? இப்போதைக்கு வாஹினியை திருமணம் செய்து கொள்ளும் முறையில் யாருமில்லையே அருகில்? பின் யாராக இருக்கும்??' என்று தன் போக்கில் யோசனை யோசனை செய்து கொண்டிருந்தவர் கர்னல் மற்றும் குருவின் பார்வை பரிமாற்றத்தை கவனிக்கவில்லை.
"சரித்திரம் திரும்பலாம் நாகார்ஜூனா!!" என்று அவர் கூற..
"என்ன!! எந்த சரித்திரம்?? பழைய சரித்திரமா?? தாங்குமா இந்த வம்சம்?? இல்லை வாஹினி.. அவள் தான் இதையெல்லாம் சமாளிப்பாளா??" என்று அதிர்ந்தார் சோமையா. ஆனால் கர்னல் எதற்கும் அசரவில்லை. அதிரவில்லை. தெரியும் தானே ஜித்தேந்தரை பற்றி.. எதையும் விட மாட்டான். விட்டு கொடுக்கவும் மாட்டான் என்று!!
"பொறு சோமையா!! யாருக்கும் பாதகமில்லை என்று கூற முடியாது. ஆனால் அது வராமல் தடுக்கவும்.. வந்தால் எதிர் கொள்ளவும் தயாராகுங்கள்!! ஆனால்.. என்றும் மறவாதே.. உன் வம்ச பெருமையை!! உன் குலம் காக்க பிறந்திருக்கும் பெண்ணரசியை!! பல ஆண்டுகள்.. ஏன் ஜென்மங்கள் கழிந்து வேந்தனை சேர போகும் வதினையை!! பக்க பலமாக இரு!! உற்ற துணையாக இரு!!" என்றார் குரு.
சட்டென்று அவர் பாதங்களை நமஸ்கரித்த சோமையா.. "குருவே.. எங்கள் வம்சத்தில் பெண் பிள்ளைகள் பலர் பிறந்தாலும் மூத்த மகனுக்கு முதல் மகளாக பிறந்து நிலைத்ததில்லை.. அப்படிப் பிறந்த பெண்களும் இருபத்திரெண்டாவது வயதில் மரணமடைந்துள்ளனர். அதனால் தான் எங்கள் வாஹினிக்கு சீக்கிரம் வரன் பார்க்க துடிக்கிறேன். அவளுக்கு எந்த குறையும் வராமல் நல்லபடியாக திருமணம் செய்து வைப்பது எங்கள் கடமை!! அதனாலதான் அவளது இருபத்தொரு வயது முடியும் முன்னர் அவள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அப்போது இருந்து நான் படாத பாடுபடுகிறேன். மாப்பிள்ளை தான் தகயவில்லை!!" என்றார் பவ்வியத்துடன்!!
பெருங்குரல் எடுத்து சிரித்த குருவோ.. "அவளனன் இன்றி மற்றொருவனை மணவாளனாக உன்னால் கொண்டு வந்திட முடியுமா?? அதற்கு அவனும் தான் விடுவானா?? இல்லை உன் பொண்ணும் தான் மாற்றானை கண் கொண்டு தான் பார்ப்பாளா?? வேந்தன் வந்து விட்டான் இனி அவளை தன்னுடையவள் ஆக்குவது அவன் கடமை!! உரிமை!! அதில் தலையிடாமல் தழைந்து போவது மட்டுமே உனக்கும் நல்லது.. உன் சுற்றாத்தாருக்கும் நல்லது!!" என்று கூற..
"கண்டிப்பாக குருவே!!" என்று வாக்கு கொடுத்தார்.
"குருவே.. அப்புறம் அந்த கிரீடம்?? அது பட்டம் கட்டும் நாளன்று சூட்ட வேணுமே.. உங்களிடம் ஒருவார்த்தை கூறலாம்னு தான்…" என்று சோமையா இழுக்க..
"அது இவ்வளோ நாள் எப்படி பத்திரமாக இருந்ததோ.. அதே போல இனியும் இருக்கும். சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டிய இடம் சேரும். கவலைப்படாதே!!" என்றவர் மூவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார்.
அரண்மனையில் இருந்து சற்று தூரத்தில் இருக்கும் அவர்களது குலதெய்வம் ஹிரண்மாயி அம்மாள்.. கோவிலுக்கு பின்னே இருக்கும் ஆசிரமம் தொன்றுதொட்டு பல காலமாக இருந்து வருகிறது. அதன் குலகுருவும் வம்சாவழியே.. இப்போது வரை ஆஷ்டான அனுஷ்டானங்கள் குறையாமல் அந்த அம்பாளுக்கு அனைத்தும் செய்வது ஆசிரமத்தில் இருக்கும் குலகுரு. அதன்படி அவர்களது வம்ச கீரிடமும் அவரின் பாதுகாப்பில் தான்!!
நீலிமாவின் கணவருக்கு இவர்களின் குடும்ப பாரம்பரியமான ரெட்டி வம்சம் என்று மட்டுமே தெரியும்!! ஸ்ரீனிவாச திருமணத்தின் போது அவருக்கு ராஜாவாக முடி சூட்டி, அவந்திகாவுக்கும் ராணியாக முடி சூட்ட.. ஏதோ அவர்களின் குலவழக்கம் என்று அமைதியாகி விட்டார்.
"மச்சான்.. இந்த குரு என்ன ஜென்ம ஜென்மம் என்கிறார்?? பெண் வாரிசுக்கு இருபத்தொன்றாவது வயதில் மணமுடித்து முடி சூட்டப்பட வேண்டும் என்கிறார்?? வேந்தன் வந்து விட்டான் என்கிறார்?? பிரச்சினைகள் வரும் என்கிறார்?? அதென்ன கிரீடம்?? உங்க அண்ணனுக்கு அப்படி ஒன்னும் வைக்கலையே.. ஏதோ.. துணியால் ஆன முண்டாசு மாதிரி தானே கட்டினாங்க?? என்ன நடக்கிறது? என்னதான் நடந்தது அப்போது?? ஒன்றுமே புரியல.. மண்டை காயுது.. மூளை குழம்பி குழம்பாகி காது வழியே வழிஞ்சிடும் போல... எனக்கு புரிய வைங்க.. இல்லைனா பைத்தியம் பிடிச்சிடும். இந்த வயசுல உங்க அக்கா உங்க வீட்டோட வந்தா நல்லாவா இருக்கும்??" என்று அவர் புலம்ப.. சோமையா என்ன சொல்வது? எதுவரை சொல்வது என்று புரியாமல் கர்னலை பார்த்தார்.
கர்னல் ஸ்ரீனிவாசனின் நண்பர் என்பதால் அவர்களின் குடும்ப அத்தனை பழக்கவழக்கங்களில் இருந்து சம்பிரதாயங்கள் மற்றும் பழையகால அவர்களின் வம்ச விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி!!
அண்ணன் பெண்ணை கர்னலை நம்பியே ஒப்படைத்தார் என்பதும் சோமையாவுக்கும் தெரியும். ஆனால் சொந்தம் என்பதற்காக பயாலஜிக்கல் பாடிகார்ட் என்ற வகையில் வாஹினியையும் அவளது சொத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் சோமையா…
இந்த கல்யாணம் விஷயம் கூட கர்னலிடம் அவர் முழுதாக கொண்டு செல்லவில்லை. நாக பிரசாத் வந்து பேசும் பொழுது இவருக்கு மனதில் ஒரு எண்ணம் இருந்ததால், முதலில் பெண்ணிடம் கேட்போம்.. பிறகு கர்னலிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று சற்று அலட்சியமாக இருந்ததின் விளைவால் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்துவிட.. இனி கர்னலின் முடிவே என்பதுபோல் தான் மச்சான் கேட்டதும் ஒன்றும் கூற முடியாமல் கர்னலை பார்த்து நின்றார் சோமையா.
கர்னலும் சுற்று யோசனையோடு இருந்தவர் " இதை உங்க மனைவியிடம் நீங்கள் கேட்கலையா?? நீலிமாவுக்கு தான் எல்லா விஷயங்களும் தெரியுமே!! இதைப்பற்றி அவர் உங்களிடம் ஒன்றும் கூறவில்லையா?" என்று அவரிடமே போட்டு வாங்க..
"நல்லா சொன்னீங்க போங்க!! என்னைக்கு பொண்டாட்டிங்க எல்லாம் பிறந்த வீட்டை பத்தி முழுசா நம்ம கிட்ட சொல்லி இருக்காங்க?? இங்கே உள்ள இண்டு இடுக்கில் இருந்து சந்து பொந்து வரைக்கும் அம்மா வீட்டுக்கு சொல்வார்களே தவிர.. அங்கிருந்து ஒரு ஈ பறந்தால் கூட நமக்குத் தெரியாது!!" என்று பெரு மூச்சு விட்டவர், "கூடவே நான் ஏன் கேக்கறேன்னா?? ஏற்கனவே எங்களுக்கே தெரியாமல் நாக பிரசாத் கூட வத்ஸவ் சேர்ந்து ஏதோ ஒரு பிராடு பண்ணி வச்சிருக்கான். மறுபடியும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் நாங்களும் பார்க்கிறோம். அதுமில்லாமல் ஜென்மாந்திர தொடர்பு அது இதுன்னு சொல்கிறார்.. கூடவே கிரீடம்னு வேறு சொல்கிறார்.. ஜாக்கிரதையாய் இருக்கலாமே என்று தான் கேட்டேன்!! சொல்வதும் சொல்லாததும் உங்கள் உரிமை!" பெருந்தன்மையாக கூறிவிட்டு அவர் முன்னே நடக்க..
கர்னலுக்கும் சோமையாவுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் எதுவும் பேசவில்லை. கர்னல் அவருடன் நடந்து கொண்டே "இதையெல்லாம் இங்கு வைத்து பேசுற விஷயம் இல்லை. நம்மை சுத்தி பாதுகாப்புக்கு ஆளு இருந்தாலும், அதையும் மீறி நம்மை யாராலோ கண்காணிக்கப்படுகின்றமோனு எனக்குள் ஒரு உணர்வு இருந்துகிட்டே இருக்கு. கண்டிப்பா இந்த விஷயம் பட்டம் கட்டுறதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிய வரும்" என்று கூற அவரும் புரிந்தது போல தலையாட்ட மூன்று ஆண்களும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அந்தி சாயும் வேளை கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு தொடங்கியிருக்க காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டே வந்தான் ஜித்து. அவ்வப்போது அவன் பார்வை தன் அருகே சீட்டில் இருக்கும் வாஹினையையும் கண்ணாடியோடு பின்னாடி அரைத்தூக்கத்தில் இருக்கும் ரிதியையும் கண்காணித்துக் கொண்டே தான் வந்தது.
வாஹினி அந்த ஒரு பப்ளி பப்ளி சாக்லேட்டை வேண்டும் என்றே மிக மெதுவாக தின்று கொண்டிருக்க அதற்குள் வீடு வந்து விட.. ரிதியை எழுப்பினாள் "ரிதி.. எழுந்துக்கோ.. வீடு வந்திடுச்சு!!" என்க அவள் அரைத் தூக்கத்திலேயே விழித்துக் கொண்டு நிற்க..
"இவளை கூட்டிட்டு போங்க அவ ரூம்க்கு!" என்று அங்கிருந்த பெண் பணியாளரை பார்த்து உரக்க குரலில் வாஹினி கூற.. அவரும் ரிதியை அவளது அறைக்கு கூட்டிச் சென்றார்.
அவர்கள் பின்னாலேயே இரண்டு அடி எடுத்து வைத்தவள், காரில் சாய்ந்தவாறு கையை கட்டிக் கொண்டு மொபைலை பார்த்துக் கொண்டிருந்த ஜித்தை பார்த்தவள், "உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் பாவா.. அப்புறம் நான் ஹிமாவே இல்ல டா! இன்னும் உன்னை வெறுப்பேத்தனும்!!" என்று மனதில் நினைத்து கொண்டு "ஹலோ பாடிகாட் சார்.. அப்படியே நின்னா என்ன அர்த்தம்? லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டு என் ரூமுக்கு வாங்க!!" என்று விட்டு அமர்த்தலாக அவள் செல்ல..
"வாட்.. லக்கேஜ் நான் தூக்கனுமா?" என்று ஜித்து அலற..
"லக்கேஜ் தானே தூக்கிட்டு வர சொன்னேன். என்னமோ என்னை தூக்கிட்டு வர சொன்னது மாதிரி இப்படி அலறுறிங்க.. பாடிகார்டு!"
"அதுக்கு நான் லக்கேஜையே தூக்கிவேன் மேடம்.. புளி மூட்டையை விட.. இட்ஸ் பெட்டர் யூ க்நோ?"
"யாரு?? நான் புளி மூட்டையா???" என்று அவள் காலை உதைத்துக் கொண்டு கத்தியதை காதில் வாங்காமல் அவன் லக்கேஜ் எடுத்து செல்ல..
மெகா வேகமாக அருகில் வந்து "ஐ வில் ஹெல்ப் யூ பாஸ்!" என்று லக்கேஜ் வாங்க முனைய, அவனை பார்வையாலேயே தடுத்த ஜித்து.. "நானே!!" என்றவன், லக்கேஜ் எடுத்துக் கொண்டு செல்ல..
விழி விரிய பார்த்தவனின் தோளில் தட்டிய ஜிகா.. "அது தான் பாஸ் பத்தி தெரியும் தானே.. போ.. போ.. வேற வேலையை பாரு!" என்றான்.
அடுத்து ஜிகாவும் மெகாவும் அந்த வீட்டை சுற்றி பாதுகாப்பு விஷயத்தை கவனிக்க சென்றனர்.
முன்னே சென்ற வாஹினி அவளது பார்சல்கள் அடங்கிய பைகளை வரவேற்பறையில் வைக்க சொன்னவளை பார்த்தவன், காதில் வாங்காதது போல, அவளது படுக்கையறையில் வைக்க சென்றான்.
"ஹலோ.. பாடிகார்ட்.. அங்கெல்லாம் போக உங்களுக்கு பர்மிஷன் இல்லை! அது பெட்ரூம்.. எனக்கும் என் ஹஸ்ஸூக்கும் மட்டுமே ஆன பர்சனல்!! காட் இட்??" என்றாள் இன்னுமே அந்த காட்ப்ரீஸை சுவைத்துக் கொண்டு..
"ஆஹான்.. முதல்ல நான் நுழைந்த பின் தான் உங்க ஹஸ்பண்டு நுழைய முடியும். ஏனென்றால் நான் உங்களின் பர்சனல் பாடிகார்ட்.. சோ.. பர்சனல்குள் நுழையலாம்.. ப்ரைவசிக்குள் தான் நுழைய கூடாது மேடம்!!" என்றான் இயந்திரத்தனமாக...
"பெரிய ப்ரைவசி.. ம்க்கும்!!" என்றாள் உதட்டை சுழித்துக் கொண்டு..
"சீக்கிரம் அந்த சாக்லெட்டை சாப்பிட்டு முடிங்க மேடம்!!" என்று கோபத்தோடு கூறியவர், அவளது பெட் ரூமுக்குள் நுழைந்து அந்த பார்சல்களை அங்கிருந்த கப்போர்டில் அவன் வைக்க..
"இவன் மட்டும் மேடம்.. மேடம்னு கூப்பட்டு கடுப்பேத்துவானாமாம்.. நான் மட்டும் இவன் சொன்னதை கேட்கணுமா? முடியாது போடா!!" என்று மீண்டும் அவள் சற்று உருகிய அந்த சாக்லேட்டை ரசித்து ருசித்து சாப்பிட..
"சொன்னா கேளுங்க மேடம்!!" என்று பற்களைக் கடித்தபடி அவன் உறும..
உதட்டை சப்புக் கொட்டி அவள் இன்னும் வேண்டும் என்றே அவள் செய்ய..
'காலையிலிருந்து நானும் கஷ்டப்பட்டு தள்ளி இருக்கலாம் என்று பார்க்கிறேன்.. இவ என்ன விட மாட்டேங்கிறா!! இவளுக்கு இருக்கு மொத்தமா மாட்டும் போது.. இன்னும் இன்னும் டேம்ட் பண்றாளே!!' என்று தனக்குள் முணுமுணுத்தவன் சற்றே திரும்பி சிகையை அழுத்தமாக கோதிக்கொண்டு பிடரியை நீவிவிட்டு கொண்டான்.
"என்னாச்சு பாடிகார்ட்??" என்று அவன் முன்னால் நின்றாள்.
ஆனாலும் அவனின் பால் டப்பா அவனை மிகவும் சோதித்தாள்!!
வாஹினியின் மயக்கும் விழிகள்… பெர்ரி இதழ்கள் சாக்லெட்டில் நனைந்து அவனை இழுக்க.. செர்ரி சிவந்த நாக்கோ அவளது வாய்க்குள் இருந்து வந்து இதழ்களை ஒரு சுழட்டு சுழட்டி சுத்தம் செய்து போக..
அவளது எச்சில் ஈரத்தில் பளபளத்த ஈர இதழ்கள் கவர்ச்சியாய் அவன் கண் முன்னே..
ஹிமா! ஹிமா!! ஹிமா!!!! என்று அவன் மனம் ரீங்காரமிட..
அவளது வெண்மைப் பற்களால்.. அவ்வப்போது அந்த உதடுகளிலுள்ள சாக்லேட்டுகளை கடித்து சுரண்டி உள் இழுக்கப் பட..
அவளது அந்த தேமதுர இதழ்களோ உறிஞ்சுக் கொள் என அழைப்பு விடுக்க.. இதில் அவன் ஆண்மை திணவு கொள்ள.. ஜித்துவுக்கு கண்களில் அப்பட்ட தாபப் பார்வை வந்து அமர்ந்து கொண்டது, கட்டுப்படுத்த முடியாமல்!!
ஜித்தேந்தர் கண்கள் அவள் விழிகளைக் கவர்ந்து படிப்படியாக.. கீழே இறங்கி அவளது செழித்த இளம் சிவப்பு நிற உதடுகளை மொய்க்க..
''ஹிமா.. ஷல் ஐ டேஸ்ட்?'' எனக் கேட்டான்.
''வாட்..?'' என்றாள் புரிந்தும் புரியாமல்..
''சாக்லேட்?''
''இதையா.. இப்படியா வா..?'' என்று உருகிய சாக்கேட்டை காட்ட..
''ம்ம்ம் ஹிமா!! இப்போவே!! இப்படியே!! நாளை நாளை என்று ஒத்திப்போடும் எந்த காரியுமும்.. வீண் என்று நினைப்பவன் நான்!!" என தத்துவத்தை அவனுக்கு சாதகமாய் பேச..
''ஆசைப்பட்ட எதையும் அப்போதே அந்த நொடியே செய்துவிட வேண்டும் ஹிமா!! நேரம் கடத்தினால் அதன் மீதான வேகமும் வேணும் என்கிற தாபமும் மாறி போகும்!!" என்றான் அவளது கண்களை தனது கண்களால் கவ்விக் கொண்டு..
அவள் உதடுகள் கேட்பரீஸில் சுவைத்து ஓரத்தில் ஒழுகியிருக்க.. அவள் கண்களே நெருங்கி வரும் அவன் மீதான ஆழமான பார்வையை வீசிக் கொண்டிருக்க..
பெண்ணவளின் உதட்டு வளைவு கூட பித்தம் கொள்வதாய்!!
நங்கை அவளின் கொங்கைகள் இரண்டும் மன்னவன் அவனின் நெருக்கத்தால் ஏறி இறங்க...
நெருக்கமாக நெருங்கி அவள் முன்னால் போய்க் குனிந்து கேட்பரீஸ் சுவைத்துக் கொண்டிருந்த அவளது மெல்லிய உதடுகளில் வழிந்த சாக்லேடட்டை ஒரு விரலால் வழித்து எடுத்து சுவைத்தவன்,
"செம டேஸ்ட்!!" என்றான்.
அடுத்த நிமிடமே சாக்லேட்டை
உறிஞ்சினான் ஜித்து!! அவளது உதட்டுகளின் வழியே!!
அவனது அதிரடி முத்தத்தை எதிர்பார்க்காதவள் லேசாக நிமிர்ந்து உள்ளங் கையில் வைத்திருந்த மீதி சாக்லெட்டை நெறிக்கப்படி
''ம்ம்ம்.. ஜித்து....'' எனச் சிலிர்த்து சிணுங்கினாள் பெண்!!
சாக்லெட் சுவையுடன் இருந்த அவள் உதடுகள் அதி தித்திப்பாக இருக்க. அவள் உதடுகளை அவன் வாய்க்குள் கொத்தாக இழுத்து பற்களால் கடித்துச் சுவைத்தான்.
நங்கையவளின் அழகிய விழிகள் தானாக மூடியது.
கிறக்கத்திலா? மயக்கத்திலா??
அவளது உதடுகள் பிளந்து வாய் விரிய மிச்ச சொச்சம் இருந்த சாக்லெட்டையும் தன் வாய்க்குக் கொண்டு வந்து சுவைத்தான் அவளை மாதிரியே சப்புக்கொட்டி.. கண் சிமிட்டி!!
அவனின் உறிஞ்சலில் உதடுகளின் வலி பொருக்க முடியாமல் அவளே.. அவனிடமிருந்து தனது உதடுகளைப் பிடுங்கிக் கொண்டு, "ஏன் பாடிகார்டு இப்ப மட்டும் மேடம்னு தெரியலையா?" என்று பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.
"இந்த வாய் ரொம்ப பேசுதடி!!" என்று அவளது உதட்டை இரு விரல்களால் பிடித்து இழுத்தவன் "நானே உன்கிட்ட வந்தால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாதுனு எனக்கு நானே கவசம் போட்டு 'மேடம் மேடம்னு' சொல்லி உன்னை தள்ளி நிறுத்தினா.. காலையிலிருந்து ரொம்ப டெம்ட் பண்றடி பால் டப்பா!! இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவி டி!!" என்றவன் மீண்டும் அவள் இதழ்களில் முத்து குளிக்க தயாரானான்.
காலையில் வாஹினியோடு ஷாப்பிங் சென்ற ஜிதேந்திரை அதற்குப்பின் கர்னல் காணவில்லை. இரவு அவர் வீட்டுக்கு செல்ல முன் இங்க பாதுகாப்பு பற்றி அவரிடம் பேச வேண்டும். கூடவே அன்று ஃபங்ஷனுக்கு நடப்பதை பற்றியும் அவனுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவனை தேடிக்கொண்டே அவர் செல்ல.. இவர்களுக்கு பாதுகாப்பு என்று இருக்கும் சிறு ஓய்வு அறையில் இருந்து அப்போதுதான் மெகாவும் ஜிகாவும் வெளியேறி இருந்தனர். இவர் "தஸ்யூதா..!!" என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்தார்.
அப்பொழுது அங்கிருந்த ஸ்கிரீனில்
லாப்டாப் ஸ்கிரீனில் வாஹினியின் அறை தெரிய, முதலில் அதை கண்டு கொள்ளாமல் அந்த ஓய்வு அறையில் ஜிதேந்தர் இருக்கிறானா என்று தேடியபடி குரல் கொடுக்க.. அவன் ஸ்கீரினில் அல்லவா இருந்தான்.
தனது பால் டப்பாவோடு சரசமாடியப்படி!!
எதார்த்தமாக திரும்பிய கர்னலின் பார்வையில்.. பதார்த்தமாக மாட்டிக்கொண்டார்கள்.. தங்கள் முத்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜித்தேந்தரும் வாஹினியும்!!
அதே நேரம் அந்த வீட்டின் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறையில் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்த நீலிமாவின் கண்கள் பெரும் யோசனையில் இருந்தது..
நீலிமாவை தேடி வந்த அவரது கணவர் "என்ன நீலி அப்படி இந்த போட்டோவை உற்று உற்றுப் பார்த்துவிட்டு இருக்க? என்ன இருக்கிறது இதில்?? என்று கேட்க..
அந்த போட்டோவில் இருந்து முகத்தை திருப்பாமல் கணவனின் முகத்தை பிடித்து திருப்பி அந்த போட்டோவை காட்டிய நீலிமா "இது யாருனு தெரியுதா உங்களுக்கு??" என்று கேட்டார்.
"ஏன்டிமா.. எனக்கு நம்ம வாஹியை தெரியாதா?? அவளைத்தான் நான் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேனே??" என்று கேட்டார்.
"என்ன தான் இந்த காலத்தில் அட்வான்ஸாக போட்டோஸ் எல்லாம் இருந்தாலும் இம்மாதிரி பெயிண்டிங் செய்வதெல்லாம் ரொம்ப அரிது!! ஆமாம் இது எப்போ பெயிண்டிங் செய்தீங்க? ரொம்ப அழகா இருக்கு!!" என்று அதனை தொட முயன்ற அவரின் கையை சட்டென்று தட்டிவிட்டார் நீலிமா.
"அது ஓவியம் தான்!! ஆனால் ரத்தத்தால் வரைந்த ஓவியம்!! அதை தொடாதீங்க!! அதை தொடும் உரிமை நம்ம யாருக்கும் கிடையாது" என்றார் நீலிமா.
"என்னடி லூசு மாதிரி உளறுற?? ரத்தத்துல ஓவியம் வரைய முடியுமா? இது யார் வரைந்தது? எதுக்கு இப்படிப்பட்ட ஆளுங்க கிட்ட எல்லாம் வாஹினி போட்டோவை வரையும் சொன்னிங்க?" என்று அவர் சற்றே பதட்டத்துடன் கேட்க..
"இது நம்ம வாஹினி கிடையாது!!" என்ற அவரின் பார்வை எங்கோ வெறிக்க..
"என்ன டி நடக்குது இங்க.. எனக்கு தலையை பிய்க்குது!!" என்றார்.
"இது வாஹி இல்லை.. நம்ம குலதெய்வமாக கும்பிடும் ஹிரண்மாயி!! எங்க குல பெண்ணரசி!! இதை வரைந்தது ஒரு திருடன்!!"
"என்னது திருடனா???" என்று அதிர்ந்தவருக்கு கடந்த காலத்தை கூற தொடங்கினார் நீலிமா!!
