அழகன் 14
காலையில் அழகன் தன் உடற்பயிற்சியை முடித்து வரும் போது அவனை எதிர்பார்த்து காத்திருந்த பொம்மாவை பார்த்து ஆச்சரியப்பட்டவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “அட..!” என்பதாய் அவளை பார்த்தான்.
“என்ன.. அத்தையோட லிட்டில் பிரின்சஸ் காலையில் இவ்வளவு சீக்கிரமா எழுந்து குளிச்சு ரெடியா இருக்கீங்க? அதுவும் என்னை எதிர்பார்த்து காத்திருக்கிறது போல இருக்கே.. என்ன விஷயம்?” என்றவன் துண்டை எடுத்து அவன் வேர்வையை துடைத்துக் கொண்டிருக்க…
வழக்கம்போல கையில்லா அந்த பனியனில் அவனின் உருண்டை திரண்ட புஜங்களும்.. விரிந்து பரந்த திண்ணிய மார்பும்.. அந்த பனியன் ஊடே வெளிப்பட்ட சுருள்சுருள் கருகரு முடிகளும்.. அதன் மேல் பூத்திருந்த வியர்வையும் அவனை ஒரு கந்தர்வனாக காட்டியது அவளுக்கு..!
அன்று நண்பிகள் பாராட்டுவதை தொடர்ந்து கணவனை கவனிக்க ஆரம்பித்தவள் தான்.. இன்று வரை கணவனை விட்டு கண்களை திருப்ப முடியவில்லை ஆண்டாளால்..!
அதுவும், இரவு வேளையில் அவன் அணியும் அந்த வெள்ளை பனியன் மற்றும் வேட்டி, உடற்பியற்சியின் போது அணியும் ட்ராக் பேண்ட் பனியன், வெளியே வேலைக்கு செல்லும் போது அணியும் வெண்ணிற சட்டை கருநீல நிற ஜீன்ஸ் பேண்ட் என்று வகைத்தொகை இல்லாமல் அவனையும் அவனது உடைகளையும், அதில் தெரியும் அவனது ஆண்மையின் மிடுக்கையும் சில சமயம் இவ்வாறு தோன்றும் கவர்ச்சியையும்.. அத்தனையும் அத்தனையும் கண்டுக்களித்தாள் ஆண்டாள் என்பது உண்மை..!
ஆனால் அதை அவன் அறியாமல் பாதுகாக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்..!
அவள் ஆசையாக அவனை பார்க்க.. அவனுக்கு அது வேறு மாதிரி அர்த்தம் கொடுக்க..
“என்ன பொம்மா.. வெறிக்க வெறிக்க மாமன பாக்குறவ? என்ன விஷயம்?” என்றபடி அவள் அருகில் வந்தான்.
அவர்கள் அறை கதவு தாழிடவில்லை. மாடியில் இருப்பதால் சட்டென்று யாரும் இங்கே வந்து விடவும் மாட்டார்கள்.
அதுவும் புதிதாக திருமணமானவர்கள் என்பதால் சற்று சலுகையோடு நன்கு விடிந்த பிறகு தான் ஆண்டாளே கீழே செல்வாள். அதுவரை யாரும் அவளை தொந்தரவு செய்யும் மாட்டார்கள்.
அதிலும் அவள் தாமதமாக எழுந்தால் கண்டிக்க வேண்டிய மாமியாரே.. அவளது சொந்த அத்தை என்னும்போது, அவளை தாங்கு தாங்கு என்று தாங்கும் போது, பிறகு ஏன் அவளுக்கு அந்த கவலை எல்லாம்..!
அதற்காக சொக்கியம்மாள் கண்டிப்பாய் திட்டுவார் என்று அர்த்தம் இல்லை.
இப்பொழுது தான் ஒரு வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். இங்குள்ள பழக்கவழக்கங்கள் அறிந்து கொள்ள.. அதை புரிந்து நடந்து கொள்ள.. சில காலங்கள் பிடிக்கும். இவளும் என் பேத்தி போல சிறு பெண் தானே? மெதுவாக கற்றுக் கொள்ளட்டும் என்றுதான் விட்டு பிடிக்கிறார்.
ஆனால் அந்த விட்டு பிடித்தல் எல்லாம் பேரனின் மனைவி இடம் மட்டுமே.. தன் மகனின் மனைவியிடம் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டார். ஒன்றும் விட்டு வைக்காமல் அத்தனை நொட்டம் சொல்வார்..!
“ஆச்சு வயசு.. அத்தன கழுத வயசு..! உனக்கும் மருமக வந்துட்டா கலை.. இன்னும் ஒரு கூறு இருக்கா உனக்கு” என்று ஏசுவார்.
அதுவும் நேற்றிரவு மகனிடம் கலையரசி அழுததை இரவில் பார்த்துவிட்டு மறுநாள் அத்தனை காய்ந்தார்.
“அதில்ல அய்த்த.. வந்து கண்ணி..” என்று திக்கித் திணறி அவர் ஆரம்பிக்க..
“என்ன பெரிய வயசு ஆயிட்டு என் பேத்திக்குன்னு இப்போ அவள உடனே புடிச்சி யாரு கையிலயாவது தள்ளி விடணும்னு நிக்கிறவ? அதெல்லாம் ஆகும் போது அவளுக்கு நல்லபடியாக ஆகும். எதுக்கு அண்ணனும் அப்பனும் இருக்காய்ங்க.. எடுத்துக்கட்டி ஊரு மெச்ச நல்லாவே செய்வியான்.. நீ இந்த மாதிரி கவலைப்படுறத வுட்டு.. பொலம்புறத வுட்டுபுட்டு பொழப்ப பாரு..” என்று பெரியவராய் அவருக்கு புத்திமதி சொல்லித்தான் சென்றிருந்தார்.
ஆச்சரியம்தான்..! இரண்டு தலைமுறை மூத்தவரே சிறு பெண்ணாக இருக்கும் கண்ணிக்கு திருமணம் வயது வரட்டும். பொறுத்து செய்யலாம். அறிவுரை கூறுவதெல்லாம் உண்மையிலேயே பெரிய மனுஷி தனம் தானே?!
ஆனாலும்.. அம்மாவின் மனதோ.. பெற்ற பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் வரை ஓயாது அல்லவா?
கலையரசி ஒருவிதமாய் அழகனிடம் அங்கே கண்ணியின் திருமணத்தை பற்றி கூறியிருக்க..
இங்கே ஆண்டாளும் அதைத்தான் வேறு விதமாய் சொல்ல காத்திருந்தாள்.
அறைக்கு வெளியே திரும்பி திரும்பி பார்த்துவிட்டு.. அவனைப் பார்த்தாள் ஆண்டாள்.
“இப்ப எதுக்கு திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்குறவ? உங்க அய்த்த எதுவும் சொல்ல சொன்னாய்ங்களா? இல்ல வெளியில நிக்கிறாய்ங்களா?” என்று அவனும் திரும்பி பார்க்க..
“இல்லை னா.. அப்படி எல்லாம் ஒன்னுமில்லை.. அத்த ஒன்னும் சொல்லல.. நேக்கு தான்.. உங்களாண்ட..” என்று உரைத்தாள் ஆண்டாள்.
“பின்ன ஏன் டி திரும்பத் திரும்ப பார்த்துட்டு இருக்குற?” என்றவன் அவளை நெருங்க..
”அது நேக்கு கொஞ்சம்…மனசு சரியில்லனா..” என்று கையை பிசைந்தாள் ஆண்டாள்.
”சரி… அதுக்கு?” என்று கையைக் கட்டி அவள் முன்னால் நின்றான் அழகன்.
”நா.. நேக்கு.. உங்களாண்ட கொஞ்சம்.. பேசனும்னா..” என்று தயங்கினாள்.
”ஓஓஓ..?”
” என்ன.. ஓ..? என்னனு கேட்காம?” என்று அவள் முறுக்க..
”அப்போ.. என்கிட்ட பேசினா.. செரியாகிருமா.. உன் மனசு..?” அவன் கிண்டல் செய்வதாக நினைத்து அவனை லேசான முறைப்புடன் பார்த்தாள்.
அவனோ அவள் தலையில் செல்லமாக தட்டினான்.
அவள் அமைதியாக முறுக்கிக் கொண்டு நிற்க,
இவன் மெதுவாகக் கேட்டான்.
”சரி.. சரி.. முஞ்ச தூக்காத..! என்ன.. பேசனும்..?”
”அது.. அது.. பர்ஸ்னல்..” என்றாள் குசுகுசுப்பாய்..!
”ஓ.. பர்சனல்? சரி சொல்லு?” என்றான்.
”இங்க இல்ல னா.. கொஞ்சம்.. தனியா பேசனும்..” என்றாள் நெளிந்து கொண்டே..
”சரி பேசு…” என்றான் அவளின் உடல் நெளிவை ரசித்துக் கொண்டே..
”இங்க வேணாம் னா.. தனியா..” என்றாள் மீண்டும்..!
”தனியானா? நீ மட்டுமா..? அப்போ போய் அப்படி ஓரமா பேசிட்டு வா..! யாரும் உன்னை தொந்தரவு செய்யாம பாத்துக்குறேன்” என்றான் சிரிக்காமல் அழகன் சீரியஸாய்..! ஆனால் அவன் கண்களோ அத்தனை விஷம சிரிப்பை சிரித்தது.
”என்ன.. நக்கலா..?” என்று அவள் மூக்கு விடைக்க கேட்க..
”பின்ன என்ன டி..? நாம தனியாதான இருக்கோம்..? சொல்ல வேண்டியது தான..? என்னமோ பர்சனல்ங்குறா.. தனியா பேசுனும்ங்குறா? என்னமோ இவளோடு சேர்ந்து இன்னும் ரெண்டு பொண்டியாட்டிய கட்டி ஒரே ரூமுல நாம குடித்தனம் நடத்துற மாதிரி?” என்றவன் முறைக்க..
”அதில்ல னா..! இங்க வேணாமே னா.. வெளியில எங்காவது கூட்டிட்டு போறேளா?” என்று அவள் கண்கள் விரிந்து கேட்க,
எதற்காக இத்தனை பிட்டு போடுகிறாள் மனைவி என்று யோசித்தபடியே “சரி காலையில சாப்பிட்டு கிளம்பலாம். சீக்கிரம் ரெடி ஆகு” என்று இவன் குளியலறை செல்ல உடையை எடுத்தவன்,
“அப்படி என்னடி ரகசியம் மாமன் கிட்ட நீ பேச போற? இத்தனை பம்மு பம்முற??” என்றபடி அவள் எதிர்பார்க்காத விதமாக சற்றென்று அவளின் மெல்லிடையை வளைத்து தன் இடையோடு இறுக்கமாக அணைத்து கூர்ந்து பார்த்து கேட்டவனின் முகத்தை அன்னார்ந்து பாராத்தவளுக்கோ தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கியது.. திக்கியது..!
“சொல்லு டி.. பொம்மா” என்றவன் நெற்றி முட்ட..
“அது.. அது.. னா.. இங்க பேசினா எல்லாருக்கும் கேக்கும்..”
”அடியே நாம தனியா நம்ம ரூம்ல தான இருக்கோம்? அப்படி என்ன ரகசியம் பேசப்போற..?”
”பர்ஸனல் னா…” என்றவளை ஆயாசத்துடன் பார்த்தவன், பின் நெற்றி சுருங்க..
“நம்ம பர்சனல் பத்தி பேச தான் நமக்குன்னு ஒரு ரூம் இருக்குல? எதுக்கு வெளியில? அப்போ வேற யாரைப் பத்தி பேச போற நீ?” அவள் கண்களை உற்றுப் பார்த்து கேட்டான்.
அவளது கண்களோ அவனைத் தான் மென்று தின்றது. அவனின் கேள்விகளோ.. கூர் பார்வையோ.. எதுவுமே பதியவில்லை அவளுள்..!
அருகில் நின்றிருந்த அவன் ஆண்மை தந்த வாசமும் அவள் சுவாசத்தில் ஏற கிறுக்கம் கொண்டது இளம் பெண்ணின் மனது..! அதுவும் புதிதாய் அவன் மீது ஈர்க்கப்பட்ட மனது..!
அவள் மனதில் தோன்றிய உணர்ச்சியை என்னவென்று சொல்வது..? வடிப்பது??
“அடியே பொம்மா.. என்ன டி பேசணும்? நீ இப்படி இருக்கிறத பார்த்தா.. எனக்கு பேச்சு எல்லாம் வராது டி” என்று குளித்து வந்தவளின் அந்த ஈர மணமும்.. அவளின் தனி பெண்மை வாசமும்.. கஸ்தூரி மஞ்சளின் மணமும்.. அவளது ஈர தேகமும்.. அவனுக்கு உடலில் சூட்டை ஏற்றி தாபம் கொள்ளத்தான் செய்தது.
“ப்ளீஸ் னா.. கூட்டிட்டு போங்கோ..” என்று
அப்படியே பின்னால் சாய்ந்து
படர்ந்து விழுந்த அவளது ஈரக்கூந்தலை.. ஒரு பக்கமாக ஒதுக்கிப் போட்டுக்கொண்டு.. அவனைப் பார்த்து.. மெலிதாக முறுவலித்தாள் .!
அவள் சாதாரணமாக கேட்டாளே சரி என்று கூறி விடுவான், இப்படி கண்களால் இறைஞ்சி கொஞ்சல் நிறைந்த வார்த்தைகளோடு கேட்டபின் மறுக்கவா போகிறான்?
ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் அவளுக்கு ஒத்துக்கொள்ள கூடாது என்று பார்த்தவன், “நம்மள பத்தி பர்சனலா நீ பேசணும்னா அதை கணவன் என்கிற முறையில் நான் கேட்டு தான் ஆகணும். உனக்கு உண்டான பதிலை சொல்லித்தான் ஆகணும். ஆனா நீ வேற ஆள் பத்தி போது அதையேன் நான் கேட்கணும்?” என்று அவன் சீண்டலாய் கேட்க..
இவளோ திருத்திரு என்று முழித்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்.
ஆனாலும் அங்கயற்கண்ணி விஷயத்தை கணவனிடம் பேசி தான் ஆக வேண்டும்.
ஏற்கனவே இருவருக்கும் பெரிதாக ஏதோ ஒரு திரை ஒன்று இருக்கிறது. இப்பொழுது அவள் கூறிய ஒருத்தலை.. அந்த காதல் இன்னும் அவள் மனதில் இருக்கிறது என்றால்.. பின் எப்படி கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வாள்?
‘அத்தாச்சியின் வாழ்க்கையை அப்படியே விட முடியாது.! நான் இதுக்கு ஏதாவது செய்தே ஆகணும்.!’ என்று முடிவு எடுத்து கணவனை பார்த்தவள்,
“அதெல்லாம் இல்ல னா.. கண்டிப்பா உங்களாண்ட நேக்கு பேசியே ஆகணும்” என்று சிறு குழந்தை போல அவள் முகம் சுருக்கி வீம்புடன் நிற்பதை பார்த்தவன், அதனை உள்ளுக்குள் அத்தனை ரசித்தான்.
வெறும் ரசித்தல் மட்டும் போதுமா இளம் கணவன் அவனுக்கு? ருசித்தாலும் வேண்டும் அல்லவா?
“அப்போ கிஸ் மீ டி” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து..!
“வாட்? என்ன சொன்னேள்?” என்று அதிர்ந்தவள் அவனை அதிர்ச்சியோடு பார்க்க..
“என்ன இப்ப கேட்டுட்டேனு உனக்கு இவ்வளவு அதிர்ச்சி? ஜஸ்ட் கிஸ் தானடி பொம்மா ?” என்று அவள் முன்னே அவள் உயரத்துக்கு குனிந்து கூறியவனின் மீசை அவளின் கனிந்த சிவந்த கன்னங்களை உரசி உரசி முத்தமிட்டன..!
அவளுக்கு அவனின் நெருக்கம் ஏற்கனவே கிறக்கத்தை கொடுத்து இருக்க.. இப்பொழுதோ அவன் கற்றை மீசையில்ன் உரசலும் அவளுக்குள் புதுவித உணர்வை தோற்றுவித்தது..!
இம்மாதிரி எல்லாம் இதற்கு முன் உணர்வுகள் அவளுள் பிரவாகம் எடுத்ததா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது எடுத்திருக்கும் இந்த நேச பிரவாகம்.. அவள் அவளையே அடித்து வீழ்த்தி செல்ல.. உதடு துடிக்க கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆண்டாள்.
அவனும் வாகாக அவள் முன் தன் முகத்தை காண்பித்து நீ கொடுத்தால் தான் ஆச்சு என்று வம்படியாக இருக்க..
தன் கால்களை எக்கி அவனின் உயரத்துக்கு எழுப்பி, அவன் மீசைக்குள் புதைந்திருந்த அந்த முரட்டு இதழ்களை தன் மெல்லிய இதழ்களால் தீண்டினாள்.
முதல் முறை அவளாக கொடுக்கும் முத்தம்.. அவனின் உயிர் வரை உள்ளிறங்கியது..!
கண்களை மூடி அதனை அனுபவித்தவன் பின் மெல்ல கண்களைத் திறந்து,
“இதெல்லாம் பத்தவே பத்தாது. நானும் அகோர பசியில இருக்கேன். நீ என்னமோ அளந்து அளந்து இத்துனூண்டு முத்தம் கொடுக்கிற..” என்றவனின் பேச்சில் இவள் அதிர்ந்து பார்த்து,
‘என்ன இவரு இப்படி எல்லாம் பேசுறாரு?’ என்று யோசித்தாலும்.. இவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
இதே மற்ற நாளாக இருந்தால் ‘நீ என்ன வேண்டுமானாலும் என்னை செய்து கொள்.. என்னை செய்ய சொல்லாதே.!’ என்று அத்தனை மறுப்பவள் தான்.
ஆனால் இன்று அவனிடம் அவன் தங்கை பற்றி பேசியே ஆக வேண்டும் என்று ஒரு நெருக்கடியில்.. அதை மீறிய உள் மன ஆசை உந்துதலில் அவனுக்கு முத்தமிட்டு விட்டாள். ஆனால் அவன் போதாது என்று நிற்க இவ்வளோ பாவமாய் பார்க்க..
“சரி ஒன்லி 10 கிஸ் மட்டும் ஓகேவா?” என்றதும்..
“பத்தா?” என்று யோசித்தவள் பின்பு சரி என்றாள்.
மீண்டும் அவன் கன்னத்தை நோக்கி சென்றது அவளது துடிக்கும் அதிரங்கள்..!
மென்மையாக அவள் முத்தமிட்டு நகர்ந்து ஒன்று என்று விரல் தூக்கிக் காட்ட தலையாட்டி சிரித்துக் கொண்டவன்,
“இதெல்லாம் ஒரு முத்தமாடி? நல்ல மாமானு சொல்லி அழுத்தமா கொடு.. சொல்லிட்டே கொடு.. இல்லேன்னா எனக்கு வேலை இருக்கு.. எனக்கு கிளம்புறேன்” என்று திரும்பியவனினை கண்டு அதிர்ந்தவள், அவன் கையைப் பிடித்து நிறுத்தி தன் புறம் திருப்பி அவனை முகத்தை இரு கைகளால் அழுத்தமாக பற்றிக்கொண்டு..
மாமா.. மாமா.. மாமா.. மாமா.. என்று ஆயிரம் முத்தங்களாத் அர்ச்சித்தாள் அவனது முகத்தினை..! அழகனை..!
முத்தங்களுக்கிடையே மாமாவா? இல்லை மாமாவுக்கு இடையினில் முத்தமா? என்று திகைத்து திண்டாடி தான் போனான் இந்த புதிய கணவன், இளம் மனைவியின் காதலில்!!
அதில் சந்தோஷம் அல்ல.. பேரானந்தம் கொண்டான் மாயவன்!! அதை அவனது வழியில் அவளது கன்னத்தில் அழுத்தம் முத்தம் வைக்க.. கன்னங்களோ கன்றிச் சிவந்தது.
கன்றிச் சிவந்த கன்னங்களை கைகளில் தாங்கியவாறு அவனை மிரட்சியாகப் பார்த்தாள் பாவை. அவள் உதடுகள் மெல்ல நடுங்கின. நாக்கை நீட்டி உலர்ந்த உதடுகளைத் தடவி எச்சில் ஈரம் செய்து, உதடுகளை கடித்து மடித்துக் கொள்ள..
"ரிலாக்ஸ் பொம்மா" மெல்ல கிசுகிசுத்தான் அவள் கையைப் பற்றியவாறு!!
அவள் கைகளோ இன்னும் நடுங்கின. அவளின் தளிர் விரல்களை தன் விரல்களுடன் இணைத்து பின்ன, அவளும் தன் நடுக்கத்தை விடுத்து மன்னவன் விரல்களோடு இறுக்கி கொண்டாள்.
"லவ் யூ டி பொம்மா!!" என்று கிசுகிசுத்தபடி அவளை அள்ளியவன் அவர்கள் மெத்தையில் பூவாய் அவளை கிடத்தி..
பிறை நெற்றியில் முத்தமிட, அவள் சிலிர்த்து சிணங்கினாள்!!
கூர் மூக்கில் முத்தமிட, அணங்கு அவள் தடுமாறினாள்!!
கனிந்த சிவந்த கன்னங்களில் முத்தமிட, அவள் அழுத்தமாக அவனை இறுக்கினாள்!!
துடிக்கும் செர்ரி உதட்டில் முத்தமிட, அவள் மயங்கினாள்!!
அழுத்தமாய்!! ஆழமாய்!! முத்தமிட்டு.. வேகமாக மூச்சு
வாங்க இதழ்களை விடுவித்தவன், மீண்டும் அவள் முகமெங்கும் முத்தமிட்டான் தாபத்தோடு!!
அவனின் இந்த முத்த யுத்தத்தில்
அவள் அவனின் பரந்த மார்பில் தஞ்சமடைந்து இறுக்கிக் கொண்டாள்.
தொடரும்..
