தேன்மழை💞 (21)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

அவளது கேள்வியில் திகிலடைந்தவன் விலகி நின்று, புருவ முடிச்சுகள் விழ யோசனையாக பார்த்தான்.

 

"என்ன கேக்குற புரியல.."

 

"இல்லை ஒருநாள் நான் திடிர்னு இல்லாம.. காணாம போய்ட்டா என்ன செய்வீங்க?" என்றவள் நேர்த்தியாக தோளை குலுக்கி அவனது பதிலுக்காக காத்திருக்க..

 

"அப்படி ஏதாவது ஒன்னு நடக்கணும் நினைச்சா இப்போவே நீ என்கிட்ட இருந்து தூரமா போய்டு. இன்னொரு வலியையும், ஏமாற்றத்தையும் தாங்கிக்கிற நிலையில நான் இல்லை.."என்றதோடு வேறேதும் பேச முனையாமல் கடந்து செல்ல..

 

குதர்க்கமாக கேட்டதுமின்றி, "பிரதீஷ்.. பிரதீஷ்.." என அழைத்துக் கொண்டு பின்னாடியே ஓடினாள்.

 

அவனோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஓட்டமாக ஓடியவள் ஒருவழியாக மூச்சிரைக்க வந்து அவனது கரம் பற்றி தடுத்து நிறுத்த, பொசுக்கி விடுவது போல் பார்த்ததில் மௌனமாக தலை தாழ்த்தினாள்.

 

"இல்லை.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? சிரிச்சு பேசிட்டு மண்டையை மண்டையை ஆட்டிட்டு போறனால எதுவும் பேச மாட்டேன்னு நினைச்சியா?

 

எது பேசுனாலும் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சு பேசு. இதே கேள்வியை நான் வேற மாதிரி கேக்கவா?" என்றவன் ஒற்றை புருவம் உயர்த்தி அவள் தவறை சுட்டிக்காட்ட, அவளோ "ஸாரி பிரதீஷ்!" என்றாள் நிமிர்ந்து பாராமலே.

 

 

"நான் நீ வேணாம்ன்னு சொன்னா என்ன பண்ணுவ? இல்லை.. அது கூட ஏன்!! ம்ம்ம்.. கல்யாணத்தை ரெடி பண்ணிட்டு அந்த ஸ்பாட்க்கு வராம மறந்துட்டேன்னு சொன்னா என்ன செய்வ?" என்றவன் கேள்வியில் தவறை உணர்ந்தவள், விழிகள் கலங்க அவனை காண..

 

"முதல அழுறதை நிறுத்து.. அதென்ன எது பேசுனாலும் ஸாரின்னு ஒரு வார்த்தையில சொல்லுறது?" என்றவன் அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்து வைத்தான்.

 

மீண்டும் ஸாரி என சொல்ல துடித்த உதடுகளை பிரிக்காது பூட்டிக் கொண்டாள்.

 

"ஒன் மோர் திங் ராசிகா.. நீ உருகி காதலிச்சா அதே அளவு லவ் உன்மேல காட்டுவேன். அதே நேரம் நீ போடான்னு சொல்லிட்டு போனா போய்டுவேன்..

 

ஆனால், என் நிம்மதியை காரணம் இல்லாம கெடுத்துருந்த நிச்சயம் என்னை வேற மாதிரி பாக்க வேண்டியதா இருக்கும்.." என அவன் முழுமையாக கூறி முடிக்க, பேதையவள் விளையாட்டாக கேட்ட கேள்வி விஸ்வரூபம் எடுத்ததில், வழிந்த நீரை துடைத்துக் கொண்டு வெளியேறினாள்.

 

அவள் வந்த பின்பு தான் அவன் நடவடிக்கை, பேச்சு, செயல் எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டான். முழுக்க முழுக்க அவளுக்காக மாற்றிக் கொண்டான்.

 

கள்ளங்கபடமில்லாத அன்பை காட்டியவள், பூடகமாக இப்படி கேட்டு வைத்ததில் கொதித்து போன மனமோ அமைதியடைவில்லை.

 

அலைபேசி வாயிலாக அவளுக்கு அழைத்தான். இரண்டு மூன்று ரிங்கிற்கு பின்பு தான் அழைப்பை ஏற்றாள்.

 

"இப்போ எதுக்கு போன நீ? நான் போக சொன்னேனா?"

 

"........."

 

"ராசிகா!!"

 

அவனது அழைப்பில் அத்தனை அழுத்தம், கோவம். அதுவும் அவளின் விசும்பல் மேலும் ரத்தக் கொதிப்பை உண்டாக்க கத்தி விட்டான்.

 

"இப்போ என்ன டி நடந்துச்சு அழுதுட்டு இருக்க? நீ தானே நான் இல்லாம போய்ட்டான்னு கேட்ட? எதுக்கு இப்படி கேட்ட. அதை முதல எக்ஸ்பிலைன் பண்ணு.

 

சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். எல்லாம் லவ் பண்ணும் போது கேப்பாங்க. செத்தா என்ன செய்வ? நான் இல்லாம இருப்பயா? அப்படின்னு இனி தேவையில்லாம கேட்ட, அன்னேக்கி தான்.." என கூறும் முன்னே போனை வைத்து விட்டாள்.

 

அவளது செயலில் சினமடையவில்லை பிரதீஷ். நிச்சயம் தவறை உணர்ந்து, மனம் தாளாமல் தான் துண்டித்து விட்டாள் என அறிந்து கொண்டான்.

 

அவனை பொறுத்த மட்டில் வீணாக டையலாக் பேசுவது, உயிரை விடுவேன், கல்லறை கட்டுவேன், காலமெல்லாம் காத்திருப்பேன் என்னும் கூற்று நிஜத்திற்கு ஒத்து வராது என நினைப்பவன். சில விடயங்களில் பிரதீஷை பற்றி புரிந்து கொண்டாலும், ஏனோ அப்பாவியாக கேட்டு விட்டாள் அபலை.

 

பழகிய குறுகிய நாட்களில் அவள் மீது அப்படியொரு மையல். மனமோ அவள் எதற்காக இப்படி கேட்டாள் என மீண்டும் மீண்டும் நினைத்து சஞ்சலமடைந்தது தான் மிச்சம். அனைத்ததையும் ஓரங்கட்டி வைத்து விட்டு, நிம்மதியான நித்திரையை தேடினான்.

 

உறக்கமும் இல்லை.. நிம்மதியும் இல்லை.. மையலை தேடி வந்து விதைத்தவள், நெட்டுக்குத்தலாக கேள்வி கேட்டால் எங்கிருந்து உறக்கம் வரும்?

 

மெசேஜ் செய்திருந்தாள். படித்தவனுக்கு மீண்டும் சினம் மூண்டது.

 

இதுவரை பொறுமை காத்தவன் அழைத்து விட்டான். மீண்டும் அவளை தாளித்தெடுக்க..

 

அவள் பேசும் முன்னமே அவனே நிபந்தனை விதித்து பேச்சை துவங்கினான்.

 

"இங்க பாரு.. அழுத நேரா வந்துடுவேன்.. ஒழுங்கா கேக்குறதுக்கு தெளிவா பதில் சொல்லு. அதை விட்டுட்டு ஸாரி, மேரின்னு சொன்ன.." என்னும் போதே அவளது பாடு தான் பெரும்பாடாக போனது.

 

ஓரளவிற்கு அவன் குணநலன் நன்கு தெரியும். காதலின் பித்தில் எல்லோரும் காதலன் அல்லது காதலியிடம் இது போல் கேள்வியை கேட்டு குளிர் காய்வது இயல்பு. ஆனால், அவன் அதற்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான் என்பதை இப்போது தான் நினைவு கூர்ந்தாள்.

 

அவளோ அவனது பதிலில் குளிர்காய நினைக்க, அவனுக்கோ எப்படி இப்படியொரு கேள்வி உதயமாகும்? உண்மையில் நடந்து விடுமோ என்னும் உணர்வு அவனை சூழ, அதில் தான் மெசேஜ்ஜை பார்த்ததும் அழைத்தான்.

 

"ஏன் அப்படி கேட்ட? என்ன நினைச்சு அதை கேட்ட? என்கிட்ட அதுக்கு என்ன பதில் எதிர்பார்த்த?"

 

"பிரதீஷ்.. அது.. வந்து.. அது.."

 

"என்ன?"

 

"அது.. அது.. நான்.."

 

"நீ??"

 

"என்ன சொல்லுவீங்கன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன். வேற ஒண்ணுமில்லை.."

 

"சரி.. என்ன சொல்லிருந்தா நீ சந்தோச பட்டுருப்ப? என்ன சொல்லியிருந்தா, ஃபீல் பண்ணுவ?"

 

"என்னை தேடி வருவேன்னு சொல்லிருந்தா ஹாப்பி ஆகிருப்பேன். "

 

"ம்ம்.. செகண்ட் ஒன்?"

 

"அப்படியே விட்டுட்டு போய்டுவேன்.." என வஞ்சியவள் கூற, "ரெண்டும் இல்லை.. தேர்ட் ஒன் நடக்கும் போது உன் டிக்க்ஷனரில ஆட் பண்ணிக்கோ." அவன் கூறியதில், அவளுக்கு தான் அவனை சோதித்து பார்த்தது மிகப்பெரிய தவறு என தோன்றியது.

 

"என்னோட விளையாடு.. என் உணர்வோட விளையாடாதே.. அப்படியொரு எண்ணம் இருந்தா விலகி போய்டு ராசிகா.." என்றவன் குரல் வெடித்ததில், அவனது வலியை உணர்ந்தவள் "இனிமேல் இந்த மாதிரி பேச மாட்டேன்.." என்றாள் அடிபட்ட குரலாக.

 

"கல்யாணம் பண்ணிக்கலாம் தானே கேட்ட.. அப்பறம் ஏன் இந்த கேள்வி வருது உனக்கு? ரெண்டுல எதை செய்யன்னு ஒருவாரம் டைம் எடுத்து சொல்லு..

 

ஏன்னா எனக்கும் வீட்டுல பொண்ணு பாத்தபடி இருக்கு.. டக்குன்னு ஒரு முடிவை சொன்னா நானே ஒரு கும்பிடு போட்டு கிளம்பிடுவேன்.." என்றவன் படபடவென பேசியிருந்தாலும், அவள் இனி இப்படியொரு வார்த்தை கனவில் கூட தன்னிடம் பேச நினைக்கக் கூடாது என்று தான் எச்சரித்தான்.

 

அவன் பேசி விட்டு வைக்க, அவன் கூறிய விடயங்கள் எல்லாம் ரீங்காரமாக கேட்டது. அவன் தெளிவாக கூறியிருந்தான் கல்யாணத்தை நிறுத்தி விட்டு, அவளை திருமணம் செய்து கொள்வதாக.

 

அதுவும் அப்பெண்ணிற்கு குடுத்த வார்த்த்தை ஒன்று தான் உறுத்தலாக உள்ளது.. வேறேதும் தனக்கு பிரச்சனை இல்லை என கூறியது நினைவுக்கு வர, சிறு பிள்ளைத் தனமாக அவள் பேசியதையெண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.

 

'ஐயோ.. எப்படி சமாளிப்பேன்.. தெரிஞ்சே இவன்கிட்ட விளையாடிருக்க.. எல்லாமே தெளிவா சொல்லி, முட்டாள் மாதிரி விட்டு போய்ட்டான்னு கேட்டு வைக்கிற.. பைத்தியமா டி நீ?' என அவள் தானாக புலம்பி தலையில் அடித்துக் கொள்ள, ஜனனி தான் போர்வையை விலக்கி விட்டு எழுந்து அவளை உறுத்து பார்த்தாள்.

 

"ஆர் யூ ஓகே? எனி பிராப்லேம்?"

 

"ஹ்ம்ம்.. எல்லாம் பிராப்லேம் தான் இப்போ.."

 

"என்ன டி ஆச்சு? உன் ஆளு எதுவும் சரியா பேசலையா?"

 

"அவரு சரியா தான் பேசுனாரு.. நான் தான்.." என்றவளை, குறுகுறுவென பார்த்த ஜனனியும் என்னவென கேட்க..

 

"நான் திடீர்னு இல்லாம போய்ட்டா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டேன்.." என்றவள் சரியாக தான் கேட்டேன் என்பது போல் பாவனை செய்ய, ஜனனியோ "ஏன் இல்லாம எங்க போக போற? எதை வச்சு அப்படி கேட்ட?" என அவளும் அவனை போல் பேசியதில் ராசிகா தான் பே'வென விழித்தாள்.

 

"இதே தான் அவங்களும் கேட்டாங்க.." என்றவள் முகத்தை தொங்க போட்டுக் கொள்ள, "யாரா இருந்தாலும் அப்படி தான் கேப்பாங்க. ஒழுங்கா மூடிட்டு படு. மார்னிங் கன்வின்ஸ் பண்ணு. இப்போ எதுவும் பேசாதே அவங்க கிட்ட.." என அவளின் நிலை உணர்ந்து புதிதாக அறிமுகமாகி தோழி ஆனவளே அறிவுரை கூறினாள்.

 

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து தோழியாக பழகியவளோ, அண்ணன்காரனிடம் அவள் சரியில்லை என்று பட்டும் படாமல் பேசி வைத்தது நள்ளிரவு வரை அவனுக்கு உறக்கம் வரவில்லை. தங்கை தூங்கிக் கொண்டிருப்பாள் என கூட யோசிக்காமல் கதவை தட்டி கேட்க நினைத்தான் அஸ்வத்.

 

ஆம்.. பேசியது மனதில் உள்ளவளை பற்றிய விஷயம் என்பதால் அவனுக்கு எங்கிருந்து தூக்கம் வரும்?

 

"ஆர்த்தி.. ஆர்த்தி.. தூங்கிட்டயா?"

 

"என்ன ணா? இந்நேரத்துல.. கதவை தட்டுற?" கொட்டாவி விட்டப்படி, அரை தூக்கத்தில் கதவை திறந்தாள். விட்டால் கீழேயே சரிந்து விழுந்து விடுவாள். அப்படியொரு சோம்பலில் அவள் நிற்க, "ராசிகா பத்தி ஏன் அப்படி சொன்ன? என்ன விஷயம்?" என அவன் நள்ளிரவில் வந்து கதவை தட்டி அவளை பற்றி கேட்டதில் கடுப்பானாள்.

 

"அதை கேட்க.. இதான் நேரமா? இப்போ போய் படுங்க.." என்றவள் மீண்டும் கதவை தாழிட நினைக்க, "இல்லை ஏதோ ஒன்னு சொன்ன அதான்.. தெரிஞ்சுக்க.." என்றவன் விழிகள் ஏதேனும் கூறுவாளா என எதிர்பார்க்க, அவளோ ஒரே வார்த்தையில் "ஒண்ணுமில்ல.. ஒரு சின்ன சண்டை எங்களுக்குள்ள.." என்றாள் உறக்கத்தின் காரணமாக.

 

"வேற எதுவும் இல்லைல?"

 

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீ போய் படு ணா.." என்றவள் கதவை மூடிட, அவனுக்கு தான் ராசிகா ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்ற சந்தேகம் உறுதியானது.

 

வழக்கம் போல் ஒரு ஹாய்.. ஹலோ.. போன் எதுவும் அவளிடமிருந்து வரவில்லை. அழைத்து பார்த்தாலும் பிஸி அல்லது சுவிட்ச் ஆஃப். அவனால் அவள் காதலில் விழுந்து விட்டாள் என்ற நினைவை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

இரவு 1.44மணி..

அறையின் சாளரம் வழியே வீசிய மெலிதான தென்றல், பலமாக வீசியது

சில மணித்துளியில். உறங்கி கொண்டிருந்த பிரதீஷிற்கு எங்கிருந்தோ வந்த கரிய நெடியப் புகை நாசியில் ஏற, புரை ஏறியதில் எழுந்தான்.

 

அறை முழுவதும் கும்மிருட்டு.. புகை போல் ஏதோ ஒன்று சுழல்வதை இருளில் அவனால் காண முடியவில்லை. நெஞ்சாங் கூடு வரை நெடி ஏறி மூச்சடைக்க வைத்தது.

 

சட்டென அருகில் இருந்த விளக்கை உயிர்பித்து பார்த்தான். இயல்பான சூழலிலே காட்சியளித்தது அவ்வறை. ஏதோ ஒன்று தன்னை சுற்றி நிகழ்வதை அவனால் நன்கு உணர முடிந்தாலும், சில மணி நேரங்களுக்கு பின் அவன் மயக்கம் அடைந்தால் அது நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை.

 

இருமலோடு சேர்ந்த குமட்டல். ஏதோ எரிவது போன்ற புகையின் நெடி மிக அதிகமாக பரவியதில், இருமிக்கொண்டே வாஷ் பேஷன் நோக்கி ஓடினான்.

 

பயங்கரமான அலறலோடு சேர்ந்த குரல் கேட்டு அதிர்ந்தவன், அவ்வுருவத்தை முதன் முறையாக கண்டான்.

 

புகை போல் சூழ்ந்திருந்த 51/2 அடி உருவம்.. கர்ஜனையாக சிரித்தது.. துர்நாற்றம் நிறைந்த புகையை சுவாசிக்க முடியாதவன் வாயோடு சேர்ந்து மூக்கை மூடிக்கொள்ள, "மரணம்.. மரணம்.. தேடி வரும் நாள் மிக அருகில்.." என்றதில் விழிகள் விரிய அதிர்ந்தவன்..

 

"யா... ர்ர்.. நீ? யாருக்கு.. மரணம்?"

 

"நாளை எண்ணிக்கோ.. புதைக்க வேண்டிய இடம் எதுன்னு நீயே முடிவு பண்ணு.. " என அது பேசி சென்ற நொடி மாயமாகி மறைந்தது.

 

சுவாசம் உட்செல்கிறதா என்று கூட அவன் நிதானிக்கவில்லை. இதுநாள் வரை இது போன்ற நிகழ்வு வந்ததும் மயக்கம் வந்து விடும். இன்று அவன் மயங்கி சரியவில்லை. வெகுவாக குழம்பி போனான்.

 

'யாருக்கு மரணம்? யாரு இது? ஒன்னும் புரியலையே ஆண்டவா? ஒருவேளை நமக்கா இருக்குமோ?' என்றவன் நினைவில் வந்து போனது ராசிகாவும், அவனது பாட்டியும் தான்.

 

இது கனவா? எச்சரிக்கையா? இல்லை அமானுஷ்யமா? என பலவாறாக யோசித்தவன், தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான். இன்றைய நிகழ்வில் தான், ஒன்றரை மாதங்களுக்கு முன் இதே போல் துடியலூரில் நடந்தது நினைவுக்கு வந்தது.

 

அன்றும் இதே போல் இருமலோடு சேர்ந்த மயக்கம். எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என யோசித்தவனுக்கு, யாரோ தலை கோதிவிடுவது போல் உணர்வு.

 

அந்த வருடலில் மென்மையை உணர்ந்தவன், பயத்தை விட கலக்கமான பார்வையால் அறையை சுற்றி முற்றி நோட்டாமிட்டான். இதுநாள் வரை அவன் தேடிய ஒன்று, காண நினைத்த விடயம் கண் முன் நிழலாட சிலிர்த்து போனான்.

 

மாலை 5மணி..

எப்படியும் அழைத்து பேசுவான் என எதிர்பார்த்தவள் மாலை வரை மிதப்பில் இருந்தாள். அவன் அழைக்கவில்லை. வழக்கம் போல் அவன் அனுப்பும் காலை வணக்கம், இரவு வணக்கம் வரவில்லை என நினைத்து பித்து பிடிக்காத ஒரு குறை தான் அவள் நிலை.

 

அவளே பொறுமையிழந்து அழைத்து விட்டாள். நல்ல மனநிலையில் இருந்திருப்பான் போலும் அழைப்பை ஏற்று விட்டான்.

 

"ம்ம்ம்.."

 

"எப்போ வருவீங்க?"

 

"ஏன்?"

 

"உங்களை பாக்கணும்.."

 

"பின்னே விளிக்கா.."

 

"பிரதீஷ்!"

 

"எந்தானு பரை.."

 

"என்ன மலையாளத்துல பேசுறீங்க?"

 

"உனக்கு தான் எப்படி பேசுனாலும் புரியாதே டி. அப்பறம் எதுல பேசுனா என்ன?"

 

"கோவமா?"

 

"நோ.."

 

"அப்பறம் ஏன் மார்னிங் சொல்ல?"

 

"காணாம போயிருப்பன்னு சொல்லல.."

 

"............."

 

நல்ல நேரம் அவள் வாய் திறக்கவில்லை. ஏதாவது வாய் திறந்தாள், நேற்று இரவு பாதியோட விட்ட தாளிப்பை தொடர நினைத்தான்.

 

"நான் இனிமேல் அப்படி பேச மாட்டேன்.."

 

"ஏன் வேற எதுவும் பிரீப்பேர் பண்ணிட்டயா?"

 

"பிரதீஷ்!!"

 

"வாட்?"

 

"ஐம் சோ ஸாரி.."

 

"வெயிட்.. கால் யூ பேக்.."

 

"ஒன் செகண்ட்.. செகண்ட்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."

 

"எந்தா டி?"

 

"வெளியே போலாமா?"

 

"எப்போ?"

 

"நீங்க தான் சொல்லணும். என்கிட்டே கேட்டா?"

 

"ம்ம்ம்.. 8ஓகிளாக் போலாம்.."

 

"எங்க?"

 

"ரெஸ்டாரண்ட்?"

 

"டியூப்லைட்.." என முணுமுணுத்தவள் குரல் காதில் நன்கு விழுந்தது. இருந்தும் அதை கண்டும் காணாதது போல் இருந்தவன், ரசனையாக கள்ளச்சிரிப்பு சிரித்தான்.

 

"ஒன் ஸ்நொக்!"

 

"என்ன? கேக்கல.."

 

"டேக் கேர் சொன்னேன்.. பை.. கேஸ் பாக்கணும் டி.."

 

அவனோ வேலை  என்று கூறி போனை வைக்க.. அவளோ என்ன கூறினான் என யோசித்து பார்த்து பதில் சுழியம் ஆகிட, ஏதோ ஒன்று என ஆராயாமல் இருந்து விட்டாள்.

 

பிரதீஷ் வீட்டில் அவர்களின் காலியிடத்தில் மனை கட்ட என்ஜினீயரிடம் பேசி முடித்து, வாஸ்து செய்திட நாளும் குறித்தாயிற்று. அந்த களிப்பில், சண்முகம் அவர்கள் மகன்கள் இருவரிடமும் தீவிரமாக எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

 

சாவித்திரி அவர்கள் ஒரே பிடிவாதமாக, இவ்வீடு தனது பேரன் ஒருவனுக்கு மட்டும் தான் உரிமையாக இருக்க வேண்டும் எனக் கூறியதில் களேபரம் ஒன்று மட்டும் தான் உருவாகவில்லை.

 

"அவ அப்படி தான் அதெல்லாம் கண்டுக்காதே சதாசிவா. எல்லாத்தையும் அவனுக்கே குடுத்துட்டா, ராஜீவ் என்ன பண்ணுவான்?" என மற்றொரு பேரனை பற்றியும் பேசி வைத்தார் சண்முகம் தாத்தா அவர்கள்.

 

அதில் முருகன் அவர்கள் முகம் தான் தவுசன்ட் வாட் பல்பு போல் மின்னியது. அவர் வாங்கிய கேரள வீட்டில் இரு மகன்களுக்கும் பங்குண்டு. பிரதீஷிற்கு தான் அவ்வீடு என கூறியதில் இருந்து, மனைவியிடம் ஒரே வாக்கு வாதம் தான்.

 

சதாசிவம் தனியே வீட்டை கட்ட நினைக்க, முருகன் அவர்களோ தானும் பாதித் தொகை தருகிறேன் என்றார். கீழும், மேலும் சேர்த்து கட்டிக் கொள்ளலாம் என்னும் ஆசையை தூண்டி விட்டார்.

 

மூவரும் சுவாரஸ்யம் குறையாது பேசிக்கொண்டிருந்த நொடி, அலைபேசி ஒலி எழுப்பியது. அழைப்பை ஏற்றார் சதாசிவம்.

 

"ஹலோ.. சொல்லுங்க.."

 

"............"

 

"ஐயோ! என்ன சொல்லுறீங்க? எப்போ?"  அவர் முகத்தில் பெரிதாக படிந்த பதட்டத்தின் ரேகையும், திடுக்கிடும் குரலும் எல்லோரையும் ஒருக்கணம் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க வைத்தது.

 

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top