காதலி 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 17

 

 

இரவில் வாஹினி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் பழக்கமாக.. அவள் கட்டிக் கொள்ள அந்த ஆறடி டெடி வேண்டுமென அடம் பிடித்தது மனம் வெகுவாக...

 

"என்னை இப்படி அடிக்ட் ஆக்கி வைச்சிட்டானே.. குடிக்காரன் கை டயத்துக்கு சரக்கு இல்லாம நடுங்குவது போல.. என் கையெல்லாம் இப்போ அந்த பெரிய டெடி பியர் இல்லாமல் நடுங்குதே.. தூக்கம் வரமாட்டேங்குதே.. ஏடு கொண்டலவாடா!! என்னை ஏன் இப்படி சோதிக்கிற!!" என்று புலம்பி அவள் புரண்டு புரண்டு படுத்து ஒருவாறு நள்ளிரவில் கண்கள் தூக்கத்திற்கு செல்ல..

 

திடீரென நீண்ட கையின் இரும்பு பிடி அவள் தேகத்தை இறுக்க.. அதிர்ந்து பயந்து திமிறி விலக நினைத்தவள், அக்கையின் ஸ்பரிசத்தில் கள்வனை கண்டு கொண்டவள் கட்டுண்டு கிடந்தாள் பாந்தமாக!! அவனின் சொந்தமாக!!

 

"நீயில்லாமல் தூக்கம் வரலடி பால் டப்பா.." என்றவனின் ஏக்க பார்வையில் அவன் கழுத்தோடு உறவாடியது அவளது பூங்கரங்கள் மாலையாக!!

 

சிறிது நேரம் அவள் அண்மையில் பெண்ணவள் வாசத்தை அவனும்..

அவன் நெருக்கத்தில் ஆணின் வியர்வை வாசத்தோடு கூடிய அவனின் மணத்தை அவளும்.. ஆழ்ந்து சுவாசித்து தங்கள் இதயங்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர். பேச்சில்லா மௌன பாஷையாய் காதல் களவாடிக் கொண்டிருந்தது அவர்கள் நேரத்தை!!

 

ஒரு காமம் இல்லை..

துளி தாபம் இல்லை..

பெரும் மோகம் இல்லை..

காதல்.. காதல்.. காதல் மட்டுமே!!

 

அந்நிலையில்!! அவர்களிடையில்!!

 

 

மெல்ல அவனது கழுத்தில் புதைந்து இருந்த முகத்தை நெஞ்சத்துக்கு மாற்றியவள் "எப்படி இத்தனை காவலையும் மீறி உள்ள வந்தீங்க?" என்று கேட்டாள்.

 

அவள் ஏதோ ஜோக் சொன்னதைப் போல அந்த நடு ஜாமத்தில் கடோத்கஜனாய் அவன் கடகடவென்று சிரிக்க.. சட்டென்று பாய்ந்து அவனது வாயை பொத்தியவள் சுற்று முற்றும் பார்த்தாள்.

 

 

"இப்படியா சிரிப்பிங்க யாராவது கேட்டு வந்துட்டா?" என்று பயந்து கூற...

 

 

"உன் ரூமே பெரிய ப்ளேக்ரவுண்ட் மாதிரி தான் இருக்கு. இதை தாண்டி சத்தம் வெளியில் கேட்குமா என்ன?? முதலில் என் வாயிலிருந்து கையை எடுடி.. பால் டப்பா.." என்றவனின் வாயிலிருந்து கையை இறக்காமல் அவனை முறைத்துப் பார்க்க.. அவனோ சில்மிஷ மன்னன்.. சேட்டைகளில் கண்ணன்.. சும்மா இருப்பானா? அவளது உள்ளங்கையில் மீசையால் குளுகுறுக்க செய்ய.. கூச்சத்தில் சிலிர்க்க கையை எடுத்தாள்.

 

 

அவள் இடை வளைத்து தன் மீது போட்டு கொண்டவன், "இது பெருந் தொற்று காலமடி" என்றவன் கண்கள் கள்ள சிரிப்பில்..

 

"அதற்கு? இப்போது அதற்கு என்ன?" புரியாமல் வாஹினி.

 

"கை சானிடைஸ் பண்ணிட்டு தான் யூஸ் பண்ணனும்" அப்போதும் அவளுக்கு புரியவில்லை.

 

"மக்கு மக்கு பால் டப்பா.. இனி வாய் வாயை அடைக்க கை யூஸ் பண்ணாத.. சுத்தம் முக்கியம் இல்லையா?" என்று சுத்தம் பற்றி பேச..

 

"அவுனு.. அவுனு!!" என்று ஆட்டுக்குட்டியாய் தலையாட்டினாள் வாஹினி. 

 

"அதனால.. அதனால.. என் வாய் அடைக்க.. இந்த சிப்பி இதழ்கள் போதும்!! சரியா?" என்றதும் தான் அவளுக்கு புரிய..

 

"அடேய் ஜித்து!!" என்று அவனது நெஞ்சில் அடிக்க.. 

 

"ஏய்ய்… அடிக்காதடி ரவுடி.. என் பொண்டாட்டி இருக்கிற இடமடி!!" 

என்றவனின் பேச்சில் கை ஒரு நிமிடம் தாமதித்து பின் இன்னும் வேகமாக அடிக்க.. அவள் கைகளை சிறை செய்தவன், "இங்க பாரு டி.. எனக்கு தூக்கம் வருது. நேத்தும் சரியா தூங்கல.‌ மனுஷன தூங்க விடு!" என்று அணைத்தவாறு அவன் தூங்க முயல..

 

"முதலில் எனக்கு பதில் சொல்லு ஜித்து.. நீ எப்படி இத்தனை காவலையும் மீறி வந்தேனு கேட்டதற்கு இன்னும் பதிலே காணோம்?? இதுல கவிதை பேசறான் இப்பத்தான்!!" என்று நெஞ்சில் தாடையை பதித்த அவன் முகம் பார்த்து கேட்க..

 

"ஏண்டி.. உன் பிறந்த நாள் அன்னைக்கு நான் வந்ததை நீ மறந்துட்டியா? நான் காவலன் மட்டும் கிடையாது கள்வனும் கூட.." என்று அவன் கண் சிமிட்டி சிரிக்க.. 

 

"ஆமா கள்வன்!! சரியான திருடனே தான்!!" என்றவளை அதற்கு மேல் பேசவிடாமல் "கொஞ்ச நேரம் தூங்கு ஹிமா. நானும் உன் அருகாமையில் கொஞ்சம் சார்ஜ் ஏத்திக்கிறேன். நாளையிலிருந்து நமக்கான ஓட்டம்.. அது ரொம்ப வேகமெடுக்கும்.." என்று ஒரு அழுத்தமான குரலில் கூறியவனை, இவள் கேள்வியோடு பார்க்க.. தன் முக மாற்றத்தை மறைத்தவன் கண்சிமிட்டி சிரித்து "தூங்கு!!" என்று உதட்டை மட்டும் அசைக்க.. ம்ம்ம் என்று அவளும் துயிலில் ஆழ்ந்தாள்.

 

 

அவள் தூங்கும் வரை அமைதியாக படுத்திருந்தவன். அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவுடன் மெதுவாக அவளைப் படுக்கையில் விட்டு தன் கையில் வைத்திருந்த சிறிய லைட்டை வைத்து அந்த அறையை சுற்றி வந்தான். உள்ளே நுழைந்ததும் ஒரு வரவேற்பறை அதற்குப்பின் அவளது படுக்கையறை.. படுக்கையறை பக்கத்தில் குளியலறை, உடைமாற்றும் அறை.. சற்று தள்ளி பால்கனி!! அங்கேயும் சோபாக்கள் போடப்பட்டு ஒரு மினி வரவேற்பறையை போலிருந்தது. அனைத்தையும் ஒன்று விடாமல் நோட்டம் விட்டவன் ஆங்காங்கே சின்ன ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு வந்தான். உடைமாற்றும் அறையில் மட்டும் சற்று யோசித்தவன், அவனது மொபைலுக்கு மட்டும் காட்டும் பிரத்யேக சிறு ஸ்பை கேமிராவை பொருத்திவிட்டு அமைதியாக அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

 

 

நான்கு மணிப்போல் அவளை எழுப்பியவன் அவளோ தூக்கக்கலக்கத்தில் இருக்க.. "ஏய் ஹிமா எழுந்திரு.. எழுந்திரு டி!! எனக்கு நேரமாச்சு இதற்குமேல் தாமதிக்க முடியாது. நான் கிளம்புறேன். பத்திரமா இருந்துக்கோ!!" என்று அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எப்படி வந்தானோ அப்படி யாருக்கும் தெரியாமல் மறைந்து போனான் கள்வன்.

 

 

மறுநாள் காலையில் அவள் விழிக்கும் போது அவன் வந்தது கற்பனையோ என்று தோன்றும் அளவு இருந்தது. ஆனால் அவளது படுக்கையிலும் தலையணையிலும் அவளது மேனியிலும் அவன் விட்டுச் சென்ற அவனது வாசம் உண்மை என கூறியது!!

 

 

அந்தத் தலையணையில் சிறிது நேரம் முகம் புதைத்து அவன் வாசத்தை சுவாசித்தவள் அதன் பின்னே தயாராகி கீழே சென்றாள்.

 

 

சோமையாவும் நீலிமாவும் சோகமாகவே சோபாவில் எதிரெதிராக அமர்ந்து இருந்தனர். அனுமாலியும் ரிதியும் இவர்களிடம் பேச முயன்று தோற்று அவர்களும் மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்தனர். இன்னும் அவந்திகா ரெட்டி தனது காலை பூஜையை முடித்துவிட்டு வந்திருக்கவில்லை.

 

 

வாஹினி அனைவரையும் பார்த்தவள் சித்தப்பாவின் அருகில் அமர்ந்து "என்ன ஆச்சு சித்தப்பா? இப்படி சோகமாக இருக்கிங்க?" கேட்க..

 

 

"இல்லடா வாஹி.. எல்லாம் என்னால தான்!! நான் பார்த்த மாப்பிள்ளை சரியாக விசாரிக்கவில்லை. பணம் கௌரவம் அந்தஸ்து பாரம்பரியம் மட்டும் விசாரிச்சுட்டு அவன் நல்லவனா கெட்டவனா என்பதை சரியாக விசாரிக்காமல் விட்டுவிட்டேன். நல்லவேளை இன்னும் திருமணம் நடக்கவில்லை. நடந்திருந்தால்... நினைக்கவே எனக்கு நெஞ்சமெல்லாம் பதறுகிறது டா!! என் அண்ணன் உன்னை என்னை நம்பி விட்டு சென்றிருக்கிறார். அவருக்கு நான் உண்மையாய் இருக்கனும் அல்லவா?" என்று கண்கள் கலங்க கூறிய சித்தப்பாவை பார்த்தவளுக்கு மனது வலிக்கத்தான் செய்தது.

 

 

"இதுல உங்க தவறு ஒண்ணுமே இல்ல சித்தப்பா.. நீங்க அதை நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க!! அவன் உங்களையும் ஏமாற்றி தானே உள்ளே நுழைந்து இருக்கான். ஆனால் அவனது திட்டம் பலிக்காமல் பாதியிலேயே ஓடிட்டான். விடுங்க!! இனி எது வந்தாலும் கர்னல் அங்கிள் பாத்துக்குவார். சரியா? உங்க கடமையை இதுவரை நீங்க சரியாதான் செய்து இருக்கீங்க" என்று அவரைத் தேற்றியவள், அடுத்து அத்தையிடம் செல்ல அவரோ அவளே எதிர் பார்க்காத வண்ணம் கையை பிடித்துக்கொண்டு அழுதே விட்டார்.

 

 

"வாஹி குட்டி... நான் உன்னை என் வீட்டுக்கு மருமகளாக நினைச்சது சொந்தத்தோடு சொந்தம் சொத்து விட சொத்து சேரும். கூடவே தாய் தகப்பன் இல்லாத உன்னை நல்லபடியா பிற்காலத்திலும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான். என் அண்ணன் எங்களை எல்லாம் அப்படி தாங்கி தாங்கி வளர்த்தார். அவர் பொண்ணையும் அதே மாதிரி பார்த்துக்கனும் என்ற எண்ணத்தில்தான் வத்ஸவை உனக்கு திருமணம் செய்து கொள்ள அவனை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் அந்த துரோகி இப்படி ஒரு காரியத்தை செய்வான் என்று எனக்கு தெரியவே தெரியாது டா!! அதனால் ஏற்பட்ட உன் மன உளைச்சலுக்கு என்னிடம் வெறும் மன்னிப்பு மட்டுமே உள்ளது. வாஹி என்னை மன்னிப்பாயா??" என்று அவள் கரங்களில் தன் முகத்தை புதைத்து அழும் அத்தையை கண்டவள் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

 

"அத்தை.. உங்களை என் அத்தையாக எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் மாமியார் என்ற பந்தத்துக்குள் உங்களை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. நீங்கள் இருவரும் என் இருபத்தி ஒன்றாவது வயதை கணக்கில் வைத்து கல்யாணத்திற்கு என்னை நெருக்குவது எனக்கும் தெரிந்தது, புரிந்தது. ஆனால் நீங்கள் ஒன்று நினைத்தால் கடவுள் வேறு ஒன்று அல்லவா நினைத்திருக்கிறார்?" என்று இரு அர்த்தத்தில் அவள் கூற..

 

"ஆமாம்!! அந்த கடவுள் இருக்காரு தான்.. அது தான் உனக்கு எல்லாத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டார். இனி என் மகனே ஆனாலும் அவனை இந்த வீட்டுக்குள்ளோ இல்லை என் வீட்டுக்கோ சேர்ப்பதாக இல்லை!!" என்று கோபத்தோடு கூறினார் நீலிமா.

 

 

"சரி வாங்க சாப்பிட போகலாம்!!" என்று இவளே அனைவரையும் அழைத்து அன்று அவள் கையாலேயே பரிமாற.. சற்று நேரத்திற்கெல்லாம் அவந்திகா வந்தவர், தன் மகளின் செயலைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டார் கூடவே அதில் ஒரு சொட்டு கண்ணீரும்..

 

 

எப்பொழுதுமே பிடிவாதமாக தான்தோன்றித்தனமாக தன் இஷ்டத்துக்கு நடந்து கொள்ளும் பெண், இன்று பாந்தமாய் அந்த குடும்ப அமைப்புக்குள் பொருந்துவதை பார்த்துதான் அவருக்கு ஏக சந்தோஷம். அவந்திகா செல்வ செழிப்பில் வளரவில்லை என்றாலும் அன்பு செழிப்பில் வளர்ந்தவர்.

 

 

அம்மாவை பார்த்தவள் "மா.." என்று கன்னுக்குட்டியாய் அவர் அருகில் உரசிக்கொண்டு நின்றவள் "வாங்க மா சாப்பிடலாம்" என்று அழைத்து வந்தாள். அவருக்கும் அவளேப் பரிமாற அருகில் இருந்த இருக்கையை காட்டிவிட்டு அவள் பரிமாறியது அவளுக்கும் ஊட்டிவிட்டார் அன்னை.

 

 

சற்று நேரத்தில் கர்னல் வர அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

 

நேற்று வாஹினி சொன்னதிலிருந்து கர்னல் மேலிருந்த சிறு கசப்பு அவர்களுக்கு ஓடிவிட்டது. எல்லாம் அவர் பண்ணி இருக்கிறார் என்று நினைத்து..

 

 

"வாங்க.. வாங்க கர்னல்" என்று பலத்த வரவேற்பை கண்டவர், வாஹினியை நோக்கி கண்களால் 'என்ன இது?' என்று காட்ட, அவளோ தோளை குலுக்கினாள்.

 

 

"சோமையா உனக்கே தெரியும் வாஹினியின் இருபத்தொன்றாவது வயசுல அவ ராணியாய் இங்கே பொறுப்பு எடுத்துக்கணும். அதற்கான அபிஷியல் மற்றும் டிரடிஷனல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யணும். அந்த நிகழ்ச்சிக்கு நிறைய இடத்தில் இருந்து நிறைய பேர் வருவாங்க.. ஏற்கனவே நாகப்ரசாத் தப்பிட்டான். அடிபட்ட பாம்பாய் அவன் எந்நேரமும் திரும்பி வரும் அபாயம் இருக்கிறது. அதனால் நம் வாஹினிக்கு தனியா ஒரு செக்யூரிட்டி டீம் நியமித்து இருக்கிறேன். 10 பேர் கொண்டது. வாஹினி அறைக்கும், வெளியே அவள் போகும்போது வரும்போது எஸ்கார்ட்டாக இருப்பார்கள்" என்று அவர் நீளமாக பேசி முடிக்க அனைவர் முகத்திலும் அதிர்ச்சி பயம் விருப்பமின்மை எல்லாம் கலந்து தெரிந்தது.

 

 

"என்ன?? என் பெண்ணுக்கு ஆபத்தா? என்ன ஆபத்து?? யாரால்? எதனால்?" என்று அவந்திகா பதறிக்கொண்டு முதல் ஆளாக கேட்க..

 

 

கண்களாலேயே குற்றம்சாட்டினாள் வாஹினி கர்னலை..

அவரும் கண்களை சுருக்கி இறஞ்சுவது போல் காட்டி மன்னிப்புக் கேட்டுவிட.. 

 

"ஆபத்து என்று ஒன்றுமில்லை அவந்திகா.. என்னதான் இருந்தாலும் ராணியாக முடி சூடிக்கொள்ள போகும் போது இப்படிப் பல தொந்தரவுகள் பல பேரிடமிருந்து வரலாம் என்ற முன் எச்சரிக்கையாக நாம் காவலை திரப்படுத்திக் கொள்வது நல்லது.. காப்பானா? கள்வனா? என்று பார்ப்போமே?" என்று அவர் கூறி முடிக்க அதுவரை மௌனமாக இருந்த மகளின் முகத்தில் குழப்ப ரேகைகள் பார்த்த அவந்திகா, "நாகப்ரசாத்தினால் என்ன ஆபத்து கர்னல்?" பயந்து கேட்க..

 

"வதின.. அவன் சரியான பணத்துக்கு ஆசை படும் பேய். நான் தான் சரியா விசாரிக்காம அவனை நம் வாஹினிக்கு பார்க்கலாம் என்று கூட்டி வந்து விட்டேன் மன்னிச்சுடுங்க வதின!!" என்று சோமையா கூறினார்.

 

"இதற்கு எதுக்கு தம்பி மன்னிப்பெல்லாம் விடுங்க!!" என்று அவர் சொன்னாலும் அவர் மனது சமாதானம் அடைய மறுத்தது.

 

 

"கண்டிப்பா இந்த பாதுகாப்பு அவசியமா கர்னல்?" என்று சோமையா கேட்க..

 

"கண்டிப்பா காவல் அவசியம் சோமையா!! அவள் மணிமுடி தறிக்கிற வரை!" என்றவர், "எக்ஸ்க்யூஸ் மீ.. நான் அவங்கள அழைச்சிட்டு வர்றேன்!" என்று வெளியே சென்றார்.

 

இந்த பட்டம் கட்டப் போவதை சிறிய நிகழ்வாக அவர்கள் உறவினர்களுக்கும் மட்டும் அழைத்து கொண்டாடுவது வழக்கம் தான். அதிலும் அந்த குடும்பத்தின் முதல் வாரிசு வாஹினி என்பதால் இந்த ஏற்பாட்டை செய்யும்போது கவனம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் கர்னல்.

 

 

"ஆனாலும்.. கர்னல் அண்ணா அவளுக்கு இன்னும் கல்யாணம்.." என்று அவந்திகா இழுக்க..

 

 

இதுவே ஆண் வாரிசு என்றால் இந்நேரம் அவனுக்கு முடி சூட்டப்பட்டு இருக்கும். இல்லை என்றால் திருமணத்தின் போதாவது முடி சூட்டப்பட்டு அவனது மனைவிக்கும் ராணி என்ற பட்டம் கிடைத்திருக்கும். இங்கே இருப்பதோ பெண் வாரிசு!! அதுவும் வெகு காலத்திற்குப் பிறகான வாரிசு… சோமையாவின் மகன் ஆண் வாரிசாக இருந்தாலுமே இவர்கள் வழக்கப்படி முதல் மகனின் வாரிசு தான் அவ்வரண்மனைக்கும் அங்குள்ளவர்களுக்கும் ராஜா.. ராணி!!

 

 

"அதுக்கு நீ கவலைப்பட வேண்டாம் அவந்திகா. அவளது கல்யாணம் என் பொறுப்பு!!" என்று வெளியே செல்ல முயன்றவர், வந்து அவந்திகாவுக்கு பதில் அளிக்க.. "யார் என்ன சொல்வார்களோ என்று பயமில்லாமல் இரு. நானிருக்கேன்!!" கூற சோமையாவும் நீலிமாவுமே அதை ஆமோதித்தார்கள்.

 

 

அதன்படி அவர்கள் வீட்டு குலகுரு அப்பொழுது அழைக்கப்பட்டு நல்ல நாளை பார்த்து சொல்ல சொல்ல.. வெகு நேரம் தியானத்தில் கண்மூடி இருந்தவரின் கண்கள் திறந்ததும் யோசனையாக வாஹினி மீது படிந்து.. பின் அனைவரையும் பார்த்தது. அடுத்த பத்தாவது நாள் மிகவும் அற்புதமான நாள் என்று குறிக்க.. அந்த நாளில் வைபவம் நடைபெற ஏற்பாடுகளை கவனிக்க ஏற்பாடனாது அரண்மனையில்.

 

 

இவர்கள் பேச்சுவார்த்தைகள் நடக்கும் வரை ஜித்தேந்தர் மற்றும் பபின் ரகு இன்னும் சில அங்கே சற்று தள்ளி அமர்ந்து இருந்தனர்.

 

 

தன் லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த ஜிகாவிடம் "எல்லாம் சரியாக தெரிகிறது தானே?" என்று வேறு எங்கோ பார்த்துக் கொண்டே கேட்டான் ஜித்து.

 

 

"எஸ் பாஸ்!! எல்லாம் பக்காவா இருக்கு. வச்சது நீங்களாச்சே தப்புமா என்ன?" என்று அவன் சிரிக்க அவனது லேப்டாப் திரையில் வாஹினியின் அறை கண்காணிக்கப்பட்டது அங்குள்ள ஸ்பை கேமரா உதவி கொண்டு..

 

 

"சூப்பர்!!!" என்றவன் இவனும் சென்று ஒருமுறை அதை பார்த்துவிட்டு "யாரும் வரதுக்கு முன்னாடி லாக் அவுட் பண்ணிடு பிபின்!!" என்று அவன் திரும்ப, கர்னல் அவனை அழைக்க.. தன் துவாரபாலகர்களோடு அங்கே தரிசனம் கொடுத்தான் ஜித்தேந்தர் தஸ்யூதன்.

 

 

இவனை ஜித்தேந்தர் என்று அறிமுகம் கூறி, அவனைப்பற்றி அவனது திறமைகளை அள்ளி விட்டு ராணியின் மெய்க்காப்பாளராக இருப்பார் மற்றும் இவளை சுற்றி இவர்கள் படை எப்பொழுதும் பாதுகாக்கும் என்றார் கர்னல்.

 

 

அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தவன் வாஹினியை பார்த்து "மார்னிங் மேடம்!!" என்று அந்த மேடமில் அழுத்தத்தை கூட்டி உரைக்க..

 

'அப்பாடி ஜித்து இனி என் கூடத்தான்!' என்று அகமகிழ்ந்தவள், அவனின் மேடம் தனலை கொட்டியது போல இருக்க.. ஆனாலும் அனைவர் முன்னிலையிலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள முடியாதல்லவா? அவளும் வெறுமனே தலையை அசைத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

 

 

ஆனாலும் 'என்னை மேடம் என்று அழைத்த தானே? உன்னை அலைக்கழிக்க வைக்குறேனா இல்லையா பார்?' என்று மனதில் சூளுரைத்துக் கொண்டவள், "சரி சித்தப்பா எனக்கு கொஞ்சம் வெளியில ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்கு. நான் போய்ட்டு வந்துடுறேன்!!" என்று எல்லாருக்கும் பொதுவாக தலையசைத்து வேகமாக வெளியில் நடக்க இருந்தவள், திரும்பி ஜித்தை பார்க்க.. அவள் விழி மொழி படித்தவன் பின்னோடு சென்றான்.

 

"அக்கா நானும் உன் கூட வரேன்!! எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்" என்று ரிதியும் அவளோடு சேர்ந்து கொள்ள அங்கே கள்ளியின் ஆட்டம் ஆரம்பமானது.

 

"அவன் மேடம் என்று என்னைக் கூப்பிட்டது இருக்கு" என்று முணுமுணுத்தவள், காரை அங்கே நிறுத்து.. இங்கே நிறுத்து.. அதை வாங்கி கொடு.. இதை வாங்கி கொடு.. என்று ஒரு பாடு படுத்தினாள். "ஆரம்பிச்சிட்டா பால் டப்பா!!" என்று சிரித்துக் கொண்டாலும் வெளியில் முகம் இறுக்கமாக வைத்து அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தான்.

 

 

அதுவுமில்லாமல் அவள் ஷாப்பிங் செல்ல, பின்னோடு வந்தவனிடம் இவள் ஹாண்ட் பாக் மற்றும் அவள் வாங்கிய பொருட்களை அடங்கிய பையை ஒவ்வொன்றாக திணிக்க.‌ அவன் தன்னை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான். அவன் போட்டிருந்த ஃபுல் சூட்டுக்கும் இந்த ஹேண்ட் பேக்குக்கும்… 'வ்வெ.. நினைக்கவே கண்றாவியாக இருக்கே!' என்று மனதுக்குள் நினைத்தாலும் அதை சுமந்து கொண்டுதான் சென்றான் பின்னால்.‌

 

 

அப்பொழுது மட்டுமில்ல அடுத்தடுத்து அவள் எங்கு சென்றாலும் அவன் மட்டுமே அவளுக்கு துணையாய் போனான்.

ஒரு கட்டத்தில் ரிதி கூட போதும் எனக்கு முடியல என்று ஓரிடத்தில் அமர, அவளுக்கு துணையாக மெகாவை அமர வைத்துவிட்டு இவள் பின்னோடு சுற்றிக் கொண்டிருந்தான். இவர்கள் இருக்கும் அந்த கடையின் பாதுகாப்பை மற்றவர்களோடு உறுதி செய்து கொண்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான் ஜிகா.

 

ஒருவழியாக காலையில் சென்றவர்கள் மதிய உணவை ஒரு ஹோட்டலில் முடித்து திரும்பவும் ஒரு ஷாப்பிங் செய்து இருள் சேரும் அந்தி வேளையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

 

"பாஸ்!! ம்ம்ம் சான்சே இல்ல வதின.. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க நிலைமை நினைச்சா தான்.. எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு!!" என்று நக்கலடித்து வேறு சென்றான்

ஜிகா...

 

பின்னிருக்கையில் ரிதி அரைத்தூக்கத்தில் இருக்க.. இம்முறை காரை ஓட்டியக் கொண்டிருந்த ஜித்தேந்தர் அருகில் அமர்ந்திருக்கும் தன்னவளை திரும்பிப் பார்க்க.. அவளோ அவன் வாங்கி கொடுத்த பப்ளி பப்ளி கேட்பரீயை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

அதே மாலை பொழுது, அந்த அரண்மனையில் பின்னால் இருக்கும் கோயிலை ஒட்டியபடி இருக்கும் தன் ஆசிரமத்தில் கண்மூடி அமர்ந்து இருந்தார் அவர்களது குலகுரு.. அவர் முன்னால் சோமையா கர்னல் மற்றும் நீலிமாவின் கணவர் பயபக்தியோடு அமர்ந்திருந்தனர்.

 

 

மெல்ல கண்களை திறந்த அவர்களது குலகுரு ஸ்ரீ ஸ்ரீ வேங்கடாசல வரதையா.. எழுபதில் இருக்கும் பக்தி பழம். 

 

என்ன விஷயம் என்று பார்வையால் மூவரையும் பார்க்க கர்னல் மெதுவாக "குருவே வாஹினி.. பட்டம் கட்டும் விழாவோடு அவளது திருமணத்தையும் சேர்த்து நடத்தலாம் என்று ஒரு யோசனை!! அதுக்குத்தான் உங்களிடம்…" என்று அவர்

கூறும் முன் கலகலத்து சிரித்தார் குரு.

 

"கல்யாணமா???!! பல பிரச்சனைகள் இருக்க.. இன்னுமொரு புது பிரச்சனையா?? அதுவும் பல ஜென்மம் கடந்தும்.. தொடருது!!" என்றார்.

 

என்ன பிரச்சினையாக இருக்கும்??

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top