காதலி 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 16

 

 

அந்த தோட்டத்தில் இருக்கும் க்ரீன் ஹவுஸில் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான் ஜித்தேந்தர்.

 

தன் மடியில் அவளை அமர வைத்து அவள் இடுப்போடு இணைந்திருந்த அவனது கைகளோ இறுக்கிக் கொண்டிருந்தன.. யாருக்கும் அவளை விட்டுத்தர மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு!!

 

அவன் இதழ்களோ அவளது காது மடல்களையும் கன்னங்களையும் அவ்வப்போது உரசி உரசி சென்றன.. அவளை நொடியும் பிரிய மனமில்லாமல்!!

 

 

"ஜித்து..!!" என்று அவள் மெல்ல அழைக்க..

 

"பாவா!!" என்றான் இவன் அழுத்தமாக..

 

"சரி.. சரி.. பாவா.. பாவா" என்று அவள் சிரிக்க..

 

"சிரிக்காதடி கடுப்பா இருக்கு!! நான் பாட்டுக்கு அவர்கிட்ட நாளைக்கு போலாம்ன்னு சொல்லிட்டேன். ஆனால் உன்னை அங்கு அனுப்பவே எனக்கு மனம் இல்லை. ஏதோ ஒரு பயம் எனக்குள்ளே.." என்றவனின் வார்த்தையில் அத்துணை பயமும் கலக்கமும் இருந்தது. இதுவரை இம்மாதிரியான கலக்கமும் பயமும் அவனது குரலில் வந்திருக்குமா என்பது சந்தேகமே!! ஆனால் வந்திருக்கிறதே!! அவனது ஹிமாவிற்காக.. அவனது பால் டப்பாவிற்காக…

 

அவளது இந்த கலக்கமான குரல் அவளையுமே கொஞ்சம் கவலைக்கொள்ள தான் செய்தது. ஆனால் அதன் பின்னே இருக்கும் அவள் மீதான அன்பும் நேசமும் காதலும் அவளுக்கு புரிய "பாவா.. பாவா.. பாவா!!" என்று அவனோடு ஒட்டி அமர்ந்தாள்.

அவளை இன்னும் நெருங்கி அவளது முதுகுடன் மெதுவாக இணைந்தான். அவளை வாகாக அணைக்க இன்னும் அவள் அவனோடு பொருந்தினாள்!!.

 

''ஹிமா....'' அவள் பிடறியில் சட்டென அவன் உதட்டைப் பதித்து முத்தங்கள் கொடுத்தான். காதல் பெருக்கெடுக்கும் நேரங்களில் அவன் வாயில் வருவது ஹிமா தான்..

 

''பாவா.. போதும். கர்னல் அங்கிள் தேடுவாங்க. நாம ரொம்ப நேரமா இங்கே இருக்கோம். போகலாம்.." என்றாள்.

 

அவள் வார்த்தைகள் அணைக்க வேண்டாமென இறைஞ்சினவே தவிர, அவளது தேகமோ அதற்கு எதிர்மறையாகவே செயல்பட விரும்பியது போல அவனை அணைத்தவாறே இருந்தது. அவளது கைகளை வளைத்து பிடித்து.. அந்தக் கைகளை அவளது வயிற்றோடு இணைத்தான். அவள் கைகளுக்கு மேல் அவன் கைகள் பதிந்திருந்தன.. அழுத்தமாக.. 

 

அவள் பிடறியில்.. முதுகில்.. பின் கழுத்தில்.. உதடுகளால் கோலமிட்டான் ஜித்து. ஆங்காங்கே.. அவனது பற்தடங்கள் பட மென்மையாகக் கடிக்கவும் செய்தான். அவள் இடுப்போடு இறுக்கம் அதிகரித்தது.

 

அவள் அன்னாந்து அவனை பார்க்க.. இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி கொள்ள.. இதழ்களோ நெருங்கும் தூரத்தில்.. மீண்டும் இதழ்களை சிறை செய்ய போனவனை இடையில் கை வைத்து தடுத்தாள்.

 

"ஏன் டி?" என்றவனின் வார்த்தையில் சற்றே கோபம்.. மிகுந்த தாபம்…

 

"போதும் பாவா..!!" 

 

"போதும்!! அதெல்லாம் காதலிலும் மோகத்திலும் சாத்தியப்படாத ஒன்று

இன்னும் வேணும்!! என்பதே தாரக மந்திரமடி என் தாரகையே!!" என்றவன் கவி பாட..

 

"முடியல பாவா.. உன் கூட.." என்று அவள் சிரிக்க..

 

"அதுக்குள்ள வா.. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையடி..!!" என்றான் கள்ளப் புன்னகை சிந்தி..

 

"அதான்.. அன்னைக்கு.." என்று ஆரம்பித்தவள், வெட்க மிகுதியில் உதட்டை கடித்து வார்த்தையை விழுங்க.. அவனோ அவள் இதழ்களை விழுங்கி, பின் விடுவித்தான்.

 

"அன்னைக்கு.. ம்ம்ம்.. ஒரு நாள்.. ஒரு ஒரு தடவ.." என்றவன் அவள் சிவந்த கன்னங்களை வருடி.. அவளின் கழுத்துக்கு கீழே ரசித்தான்  

 

பருவத்திமிரின் அழகிய எழில் வடிவம் அவள்!! 

செதுக்கி வைத்த பொற்சிலை அவள்!!

சிற்றிடை அழகோ அவனை கிறக்கம் கொள்ள செய்தது!!

இளமை செழுமைகளோ பித்தம் கொள்ள செய்தது!!

உன்மத்தம் உன் மேல் ஆனேனடி என்றவன், அவன் பார்வையை

தாங்காது நாணங்கொண்டு

அவளது பற்களுக்குள் சிறை பட்டிருந்த அவள் சிவந்த உதடுகளை, விரல்கள் கொண்டு விடுவித்து, "வலிக்குமடி!" என்றவன் தன் பற்களில் கவ்விக் கொண்டு மெது மெதுவாக வேகம் கூட்டினான்.

 

"இப்போது வலிக்காதமாம்" என்றவளின் பார்வையையும் சேர்த்தே விழுங்கினான்.

 

அன்று முழுவதும் நெற்றி சுருக்கங்களோடு யோசனையில் சுற்றிக் கொண்டிருந்தான் ஜிதேந்தர். மெகாவும் ஜிகாவும் அவன் பின்னே இருந்தாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்கே புரிந்தது ஏதோ பெருத்த யோசனையில் இருக்கிறான் என்று..

 

"என்னங்கடா என் மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருக்கீங்க.. ஏதோ லவ் பண்றவன் போல?" என்று கடுப்போடு ஜித்து கேட்க..

 

 

இருவரும் வாய் மூடி சிரித்தனர். 

"ஏன் வதின இருக்கிறது பத்தாதா அவங்களுக்குப் போட்டியா நாங்க வேற வரட்டுமா?" என்று ஜிகா சற்று நக்கலாக கேட்க..

 

"வாய் கூடி போச்சுடா உங்களுக்கெல்லாம் அந்த பால் டப்பாவோட சேர்ந்து... முழுசா ஒரு ஒரு வாரம் பழகி இருப்பீங்களா? அதுக்குள்ள ஆளையே மாத்திட்டா?" என்று கூறியவன் வதனத்தில் இருந்தது என்ன பெருமையா? கோபமா?

 

"பாஸ்.. நீங்க வதினவ திட்டுறிங்களா இல்ல பாராட்டுறிங்களா?" என்று மெகா சிரிப்பை அடக்கிய வண்ணம் கேட்க..

 

"இதுல உனக்கு டவுட் வேற? பாஸோட கெத்து எல்லாம் பால் டப்பா முன்னால வெத்து!!" என்று ஜிகாவும் சேர்ந்து கொண்டு வார..

 

"டேய்.. அந்த பால் டப்பா ஃபார் ஒன்லி மீ.. உங்களுக்கு இல்ல!" என்றான் ஜித்து..

 

"பொறாமை.. பொறாமை.." என்று ஜிகா சிரிக்க..

 

"இல்ல மேன்.. உரிமை!! உரிமை!!" என்று மெகா சிரிக்க..

 

"இரண்டுமே தான் டா! தடி தாண்டவராயனுங்களா!!" என்றான் அவர்கள் வயிற்றில் விளையாட்டாய் குத்திப்படி..

 

இருவரும் சிரித்துக் கொள்ள ஜித்து முகத்திலும் இப்பொழுது சிரிப்பு. பின்பு இருவரையும் இருகைகளால் தோளோடு அணைத்தவன் "தேங்க்ஸ் பட்டீஸ்!!" என்றான்.

 

எதற்கு ஜித்து சொல்கிறான் என்று புரிந்ததும் "எதா இருந்தாலும் இப்படி இருந்து முடிவெடுங்க பாஸ்!! நீங்க முகத்தை தூக்கி வச்சு கிட்டா பாக்க சகிக்கல.. நாங்க என்ன வதினவா? நீங்க எப்படி இருந்தாலும் பார்த்து ரசிக்க" என்று ஜிகா மீண்டும் அவனை வார..

 

"இந்த வதின தான் பிரச்சனையே!!" என்றான் ஜித்து.

 

"வதின பிரச்சினை பண்ணுவதும் அதை சமாளிப்பதும் உங்களுக்கு கைவந்த கலை தானே பாஸ். இப்போ என்ன புதுசா?" என்றான் மெகா புன்னகை மாறாமல்..

 

"அதில்லடா.. அவ பிரச்சனை பண்றதும் அதை சமாளிக்கிறதும் இதெல்லாம் எனக்கு தூசு மாதிரி.. நான் சொல்றது நீங்க ரெண்டு பேரும் அவளை வதின என எல்லோர் முன்னேயும் கூப்பிடுறது. எல்லாருக்கும் முன்னையும் கூப்பிடாதிங்க.. ஏன்னா நாளைக்கு நாம அரண்மனைக்கு போக போறோம்!!" என்றான் எங்கோ வெறித்தபடி..

 

 

"நாளைக்கே வா??" என்று இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வெறும் தலையை மட்டும் அசைத்தான் ஜித்தேந்தர்.

 

 

"ஓகே பட்டீஸ்.. போய் தூங்குங்க இன்னிக்கு யார் நைட் ரவுண்ட்ஸ் பார்க்கணும். அவங்க பாருங்க" என்றவன் மாடிப்படிகளில் ஏற அவனைக் கூப்பிட வந்த கீழ் அறையில் தங்கியிருந்த கர்னல் அவன் வாஹினியின் அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்வதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றார்.

 

 

திரும்பி அங்கிருந்து ஜிகா மெகாவை பார்க்க.. அவர்கள் 'எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்க எதுவும் பார்க்கல!!' என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

 

"அந்த கேடி பையலுக்கு தகுந்த மாதிரியே ரெண்டு பேரையும் சேத்திருக்கான்!! திருட்டு பயலுக.." என்று அங்கேயே சிறிது நேரம் குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டிருந்தார். அவன் வெளிய வருவான் என்ற நம்பிக்கையில்..

 

மெகா முதலில் உறங்க சென்றுவிட ஜிகாவின் மேற்பார்வையில்தான் அன்றிரவு பாதுகாப்பு. ஒரு மணி நேரம் கழித்து டீ குடிக்க டைனிங் ஹாலுக்கு சென்றவன், அங்கே சோபாவில் அமர்ந்திருந்த கர்னலை பார்த்து "கர்னல் சார் உங்களுக்கும் ஒரு டீ??" என்று கேட்டுக்கொண்டே தனக்கு எடுக்க, வேண்டாம் என்று மறுத்தவர் பார்வை மாடிக்கு சென்று சென்று திரும்ப..

 

 

புரிந்த ஜிகா "இனிமேல் பாஸ் காலையில் தான் வருவார். எதா இருந்தாலும் காலையில் அவருடன் பேசிக்கோங்க.. நைட்ல ரொம்ப நேரம் கண்ணு முழிச்சா உடம்புக்கு ஆகாது. என்னதான் கர்னலாக இருந்தாலும் வயசு 60க்கு மேல் ஆச்சு இல்லையா?" என்று அவன் ஒற்றைக் கண்ணடித்து விட்டு சிரித்துக் கொண்டே செல்ல..

 

"தஸ்யூதா!!!" என்று பற்களை மட்டுமே அவரால் கடிக்க முடிந்தது.

 

எப்பொழுதும் அவளை அணைத்து கொண்டு உறங்குபவன், இன்று உறங்குபவளை அள்ளி தன் மீது போட்டுக் கொண்டான். அவள் தூக்கத்தில் திமிற.. "நான் தான்டி ஹிமா!!" என்று அவளது காதில் கிசுகிசுக்க.. சமாதானமடைந்தவள், அவனது கழுத்தை கட்டிக் கொண்டே அவள் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவனது விரல்கள் மெல்லிடையாளின் சிற்றிடையை சிறைப்பிடித்தாலும்.. மெல்ல வருடியவாறே இருந்தன. இதழ்கள் அவளது நெற்றியிலும் காது மடலிலும் கன்னத்திலும் விடியும் வரை தன் தடத்தை பதித்துக் கொண்டே இருந்தது. அவன் கண்களோ விடியலில் தான் அவனை மீறி உறக்கத்தை தழுவியது.

 

 

எங்கோ மொபைல் அடிக்கும் சத்தத்தில் மெல்ல அவன் கண்களை விழித்து பார்க்க.. வாஹினி இன்னும் வாகாக அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தாள். எக்கி மொபைல் எடுத்தவன் அதில் ஏகப்பட்ட மிஸ்ட் கால்களைப் பார்த்து

"இவனுங்களுக்கு இதே வேலை!!" என்று போனை சைலண்ட் மோடில் போட்டவன், மீண்டும் தன்னவளை இழுத்து அணைத்தவாறே அந்த நிமிடத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

 

 

அவளின் ஸ்பரிசம்..

அவளின் வாசம்..

அவளின் அணைப்பு‌‌..

அவளின் மென்மை..

இன்னும் இன்னும் வேண்டும் என்பதாய்!!

 

 

"ஹிமா..!!" என்றான் மென்மையான குரலில்.. அவளோ தூக்கத்தில் இருக்க.. அவள் முகத்தில் படர்ந்திருந்த முடிகளை மென்மையாக காதுக்கு பின்னால் சுருட்டி விட்டு அவள் காது மடலில் தன் இதழ்களை பதித்து "ஹிமா.." என்று அழைத்தான் சற்றே குழைவான குரலில்.

 

 

"ம்ம்ம்!!" என்றாள் உறக்கத்திலே..

 

"ஒவ்வொரு இரவும் இது போல் என் அருகில் நீ இருக்கவேண்டும்!! இருப்பாயா ஹிமா?" என்றான் அவளோ தூக்கக் கலக்கத்தில் மறுபடியும் "ம்ம்" என்றாள். அது ஒன்றே போதும் என்று நினைத்தவன் சிறிது நேரம் அவளை அணைத்தவாறு படுத்து இருந்து விட்டு அதன் பின்னே குளித்து ரெடியாகி கீழே சென்றான்.

 

 

அவன் சென்று சிறிது நேரத்தில் ஹரிதா வந்து அவளை எழுப்ப.. தன் அருகில் இருந்தவனை தேடினாள். அவனது வாசம் மட்டுமே படுக்கையில் இருக்க.. "திருடன் கண்ணுல படாம கிளம்பி போய் விட்டான்!" என்று புலம்பியவாறு அவளும் தயாராகி கீழே சென்றாள்.

 

 

சோபாவில் ஜித்தும் கர்னலும் எதிரெதிரே அமர்ந்து இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. ஜிதேந்தர் மிக மும்முரமாக தனது மொபைலை நோண்டி கொண்டிருந்தான். அவனைப் பார்த்த வண்ணமே கடுப்போடு அமர்ந்திருந்தார் கர்னல்.

 

 

சிறுது நேரத்தில் வாஹினி வந்தவுடன் எழுந்தவன், "கர்னல் சாப்பிட வாங்க" என்று டைனிங் டேபிளை நோக்கி சென்றான்.

 

இதற்கு இவனுக்கு கூப்பிடாமலேயே இருக்கலாம் என்று கோபமாக உரைத்தாலும் அவன் பின்னே சென்று, அவன் அருகிலேயே அமர்ந்து கொள்ள.. தன் அருகில் அமர்ந்தவரை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு தலையசைத்து சிரித்துவிட்டு தனது உணவை தொடர்ந்தான்.

 

 

இவர்கள் பின்னே வந்த வாஹினி இவர்களுக்கு எதிரே அமர்ந்து கொள்ள.. கர்னல் அவளிடம் சிறிது நேரம் பேசினர். பின்பு அனைவரும் புறப்பட ஆயத்தமாக..

 

"ஹிமா உங்க சித்தப்பா கிட்ட நான் என்ன சொல்றேனோ அதற்கு தகுந்த மாதிரி நீ தலையாட்டு!" என்றார். அதற்கு ஜிதேந்தர் அவரை முறைக்க..

 

"டேய்.. முடியல உன் அலும்பு.. அவள விட்டுட்டு நீ கெளம்பு!!" என்றார்.

 

"அப்படியெல்லாம் விட முடியாது கர்னல்!" என்று குரல் வந்தது ஜித்துவிடமிருந்து அல்ல மெகாவிடமிருந்து..

 

"அதேத்தான்.. நாங்களும் உங்களோடு தான் வரப் போகிறோம்" என்று அட்டென்சன் பொசிசனில் இருந்தாலும் பிடிவாதமாய் நின்றிருந்தான் ஜிகாவும்.

 

 

"தஸ்யூதா.. உன்கிட்ட நான் என்ன சொன்னேன்??" என்று கர்னல் மீண்டும் கள்வனை பார்க்க அவனோ கள்ளியைத்தான் கபளீகரம் செய்து கொண்டிருந்தான் கண்களால் காதல் கணைகளை வீசிக் கொண்டு…

 

 

"இது சரி வராது!!" என்று கர்னல் வாஹினி பக்கம் திரும்பி "வா நாம போகலாம்" என்க.. அவர்கள் இருவரையும் தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

"கர்னல் நீங்க முன்னால இருங்க* என்று அவர் வந்து வண்டியிலேயே இவர்களுக்கு அவரை செக்யூரிட்டியாக உட்கார வைத்துவிட்டு தன் காதலியோடு பின் சீட்டில் அமர்ந்து விட்டான் காதலனாக ஜித்து.

 

தயங்கி தயங்கி கர்னலை பார்த்தவளை பார்த்து இவன் கண்களை உருட்டி "உட்காரு" என்றான்.

 

அவள் மனசு படபடத்தது, அவனை விட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள் ஜன்னலோரமாய்... இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவள் துப்பட்டாவின் முனை தவழ்ந்து.. பறந்தது.. அவனிடம் ரகசியம் பேசியது.

 

அவனை ஏறிட்டு பார்த்தவள்,

"ஜித்து என்னை விட்டுட்டு போயிட்டு.. திரும்ப எப்போ வருவீங்க?" மெல்ல கேட்டாள், சோகம் இழைந்தோடியது அவள் வார்த்தையிலும்.. வதனத்திலும்..

 

"இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது பால் டப்பா.."

 

அவன் கண்கள் அவள் முகத்தை ஆசையாகப் பார்க்க.. அவன் பார்வை பொருளுணர்ந்தவளின் மெல்லிய உணர்ச்சிகளை தட்டி எழுப்பப்பட.. சூடாகி முகத்திலும் தேகத்திலும் அதிக ரத்த ஓட்டம் பாய்வதை உணர்ந்தாள் பெண்!! உதடுகள் லேசாக உலர.. நாக்கை நீட்டி உதடுகளை தடவிக் கொண்டாள். பேச முயற்சித்தாள் .. ஆனால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்தது எதுவோ.. அவளின் முகபாவங்களை பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்தபடி அவள் பக்கம் சரிந்தான். எட்டி அவள் கன்னத்தில் கிள்ளி,

 

"பீ ஸ்ட்ராங்க் ஹிமா" என்றான்.

 

"எனக்கு.. எங்கயுமே போக பிடிக்கல.. யாரையும் பார்க்க பிடிக்கல.."

 

"ஏனாம்.. என் ஹிமா குட்டிக்கு என்னவாம்?"

 

"அதான் தெரியல.. ஒரே எரிச்சலாக.. ஒரு பக்கம் பயமா இருக்கு.." என்று கண்களில் கலவரத்தோடு அவனை தான் பார்த்தாள். அவள் மனது இப்பொழுது எப்படி தவித்துக்கொண்டிருக்கும் என்று நன்றாகப் புரிந்தது ஜித்தேந்தருக்கு.

 

"இது தப்பாச்சே.. என் ஹிமா.. தைரியமானவ.. எதையும் துணிந்து எதிர்நோக்கும் மன வலிமையுடையவ.. இப்படி சோர்ந்து போனால், ராணி ஆவது எப்படி?" என்றான் அவளுக்கு தைரியமூட்டி..

 

அவன் பேச்சில் ஓரளவு அவளுக்கு தைரியம் மீண்டு இருந்தாலும், மனதை ஏதோ செய்தது.

மெல்ல அவள் கையை தன் கையில் பொதித்தான். அவள் கை விரல்களை நீவினான். பின் குனிந்து ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்த்தது.

 

"லவ் யூ ஹிமா" அவள் கையை இழுத்து.. மெல்ல அவன் பக்கம் சாய்த்து.. அவள் கண்களை பார்த்து கூறினான்.

 

இருவர் கண்களும் மௌன பாஷையில் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள வார்த்தைகள் அங்கே பஞ்சம் ஆகிப்போனது!!

 

அதற்குள் அவர்கள் வாஹினியின் அரண்மனையை அடைந்து இருக்க.. தவிப்புடன் அவனை பார்த்தாள் மாது!!

 

"போறிங்களா இப்போவே?" என்றாள் அழுகை துடிக்கும் உதட்டை அடக்கி..

 

"ம்ம்.. போகனும் டா!!" என்றான் அவனும் மனதை மறைத்து..

 

அவளை நெருக்கமாக இழுத்தவன். இறுக்கமாக அணைத்தான். மிருதுவான கன்னத்தில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான். அவள் நெஞ்சு விம்மியது பிரிவின் தாக்கத்தில்..

 

"பயந்தா லவ் பண்ணவே கூடாது பால் டப்பா. நீ எங்க இருந்தாலும் உன் மீது தான் என் கண்கள் எப்பொழுதும்!! சோ ப்ரேவ் கேர்ள்ளா போயிட்டு வா!" என்றான்.

 

"ம்ம்" சிணுங்கி விடை பெற மறுத்தாள் தத்தை!!

 

ஒரு கை அவளை பின்னாலிருந்து இடையை வளைத்து அணைத்திருக்க.. இன்னொரு கை அவளின் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தது. அக்கண்களில் தான் எத்தனை எத்தனை காதல்!!

 

 

காதல் ஒரு சிலரை பலவீனமாக்கும் ஒருசிலரை தைரியமாக்கும்!!

இங்கே பயந்தவளை ஆண் அவனின் காதல் தைரியமாக்க..

வீரமிக்க ஆணோ பெண் அவளின் காதலில் பலவீனமானான்!!

 

காரணம் காட்டு விலங்குகளிடம் கூட இருந்து விடலாம். ஆனால் முதுகுக்குப்பின் இருக்கும் துரோகிகளிடம் தன் உயிருக்கும் மேலானவளை விட பயந்தான்!!

 

 

அதற்குள் வண்டி வந்து நின்று 10 நிமிடம் ஆகியிருக்க.. வெளியில் நின்ற கர்னல்,' இவன் விடுவது போல தெரியவில்லை' என்று அழுத்தமான குரலில் யாருக்கும் கேட்கா வண்ணம் "தஸ்யூதா!! அழுத்தமாக கூப்பிட..

 

 

"ஓகே பால் டப்பா!! இப்போ என்னால உள்ள வர முடியாது. நீ கர்னல் அங்கிள் கூட இப்போ போ.. சரியா எதுக்கும் பயப்பட கூடாது!" என்று அவளுக்கு தைரியமூட்டி அனுப்பி வைத்தான்.

 

கண்களினால் தன்னவனிடம் விடைபெற்று மீண்டும் தன் அரண்மனைக்கு நுழைந்தவளை பலத்த வரவேற்புடன் வரவேற்றார்கள் அம்மா சித்தப்பா சித்தி அத்தை என்று ஒரு பெரிய கூட்டம்.

 

 

மறந்தும் அவந்திகாவிடம் மகள் காணாமல் போனதைப் பற்றி யாரும் வாயைத் திறக்கவில்லை. கேட்டதற்கு எப்போதும் போல வெளிநாட்டில் இருக்கிறாள் என்று கூறி வைத்திருந்தனர். இப்பொழுதும் கர்னல் பாதுகாப்போடு அவளை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதாகவே அவரிடம் கூறப்பட்டது.

 

 

அன்னையை பார்த்த சந்தோஷ மிகுதியில் அவள் செல்லும் போது சட்டென்று அவர் கையைப் பிடித்த கர்னல் இவ்விபரங்களையும் கூறி விட்டார்.

 

அதன்பின்.. மற்றவர்களிடம் சம்பிரதாயமாக பேசிய விட்டு அன்னையை அணைத்து அவரிடம் சேம நலனங்களை விசாரித்து அதன் பின்னே தன் அறைக்குள் நுழைந்தாள்.

 

ஜித்துவின் பிரிவு அவளுக்கு மனதில் வலியை கொடுத்தாலும் அவன் காதல் அவளுக்கு தைரியத்தை தர.. மதிய உணவின் போது அனைவரும் அமர்ந்து இருக்கும் போது நேரடியாக சித்தப்பாவை பார்த்து கூறினாள். "நீங்க பார்த்த மாப்பிள்ளையை நல்லா விசாரிச்சிங்களா சித்தப்பா?" என்று தன்னை பார்த்து அதுவும் ஒரு நிமிர்வுடம் கேட்கும் அண்ணன் மகளை பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இப்படி திடீர் என்று கேட்கிறாள் என்று.

 

 

பின் அன்னை இருப்பதை பார்த்தவள், சித்தப்பாவிற்கு கண் காட்டிவிட்டு "எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கல சித்தப்பா! அதேபோல அத்தை.." நீலிமா புறம் திரும்பியவள் "ஸ்ரீவத்ஸனையும் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை" என்று தெளிவாகவே உரைத்தாள்.

 

 

"இல்ல பங்காரம் நான் சொல்வதைக் கேளேன்…" என்று நீலிமா ஆரம்பிக்கையில் "அத்தை இதைப்பற்றி நான் மாலை போல பேசுவோம் கர்னல் அங்களும் வந்து விடட்டும்" என்றாள்.

 

 

"உன் கல்யாணம் பற்றி பேச உன் நல விரும்பிகள் குடும்ப உறுப்பினர்கள் நாங்கள் இருக்கும்போது.. கர்னல் எதற்காக இதில் மூக்கை நுழைக்க வேண்டும்?" என்று வெடுக்கென்று கேட்டார் நீலிமா.

 

"என் நல விரும்பி.." சிரித்துக் கொண்டவள், *அதைப் பற்றி பேசித்தான் கர்னல் அங்கிள் வருகிறார் அத்தை!" என்ற அன்னையை அழைத்து உறங்க வைத்துவிட்டு தன் அறைக்குள்ளேயே நுழைந்தவளுக்கு அப்போதுதான் தன் போன் பற்றிய ஞாபகம் வர.. 

 

 

அதை பிறந்தநாள் விழாவின்போது எங்கே விட்டாள் என்று அவளுக்கு ஞாபகமே இல்லை. வீட்டின் காரியதரிசி மூலம் வேறு ஒரு போன் மற்றும் சிம்மை வாங்கி வரச் செய்தாள்.

 

ஜித்துவின் நம்பர் இதுவரை அவளுக்கு தெரியாது‌ மெகா மற்றும் ஜிகா நம்பர் உள்ளது. தெரியும்! ஆனால் தற்போதும் அவர்கள் அதை தான் பயன்படுத்துகிறார்களா? போனோடு யோசனையுடன் இருந்தாள். அதற்குள் மாலை கர்னல் வந்துவிட்டதாக இவளுக்கு தகவல் வர.. அவந்திகாவை தங்கள் அரண்மனையில் இருக்கும் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்ய அனுப்பிவிட்டு மற்றவர்கள் அனைவரும் கூறினர் அந்த ரகசிய அறையில்..

 

 

"எவ்வளவு சீக்கிரம் நாம் ஹிமாவின் திருமணத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்தாக வேண்டும்" என்று கர்னல் ஆரம்பிக்க.. வாஹினியின் பார்வை அவரை கூர்ந்தது.

 

நீலிமா "அதை சொல்ல நீங்கள் என் குடும்பத்தினர் கிடையாது கர்னல். உங்கள் எல்லை பாதுகாப்பது மட்டுமே.. அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!!" என்று திட்டவட்டமாக கூற அதையெல்லாம் சீ போ என்று தூக்கி எறிந்தார்.

 

 

ஆனால் வாஹினியால் அப்படி விட முடியவில்லை. தன்னை பாதுகாக்க எந்தளவு அவர் போராடினார் ஜித்திடமிருந்தே என்னை என்னுடைய ஸ்தானத்தில் வைக்க எவ்வளவு தூரம் பாடுபட்டார் என்பது அவளுக்கு தெரியுமே!! 

 

 தன் அத்தையை நோக்கி "அதை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை அத்தை!!" என்று கோபத்தில் வெடித்தாள்.

 

எப்பொழுதும் பாசமாகப் பேசுபவள் இன்று கோபத்தில் வெடிக்க.. அவரும் அவரது அண்ணன் மகளை பார்க்க.. ஒன்றுவிடாமல் பிறந்த நாள் எப்போது நடந்தது அனைத்தையும் கூறினாள்.

 

 

ஆனால் ஜித்தனை பற்றி அவள் கூற வரும் முன் கர்னல் முந்திக்கொண்டு "என்னால் ஹிமாவுக்கு நியமிக்கப்பட்ட பாதுகாவலன்!!" என்று உரைத்தார்.

 

 

சோமையாவும் நீலிமாவும் வருந்தினார்கள். ஒருத்தரின் தேர்வு அதிபயங்கரமாக இருக்க.. மற்றவரின் வளர்ப்போ மகா கேவலமாக இருக்க.. இனி தாங்கள் எவ்வாறு நன்மை செய்ய முடியும் தன் அண்ணன் மகளுக்கு என்று வருந்தினர்.

 

ரிதிஷா வத்ஸவின் இந்த இன்னொரு முகத்தில் அதிர்ந்து அருகிலிருந்த அனுமாலியின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு "அம்மா என்னமா இப்படி எல்லாம்" என்று அவள் கலங்க அவளை தன் அருகில் அழைத்து "இதற்கெல்லாம் பயப்பட கூடாது ரிதி!! பெண்கள் நாம தைரியமா இருக்கணும்!!" என்று அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

 

 

 

அன்றிரவு உறங்குகையில் திடீரென்று அவளை யாரோ வளைத்துப் பிடித்து அணைத்து போலிருக்க.. அதிர்ந்து திமிறி விலக நினைத்தவள் அந்த கையின் ஸ்பரிசத்தை உணர்ந்து திரும்பி பார்க்க கள்வனாய் காதல் செய்ய வந்திருந்தான் ஜித்தேந்தர்!!

 

"நீயில்லாமல் தூக்கம் வரலடி பாஸ் டப்பா!!" என்றவாறு!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top