11
அன்று..
“நமக்கு ஏன் இன்னும் செகண்ட் பேபி வரல ஆதவ்?” என்று கேட்ட மனைவியைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“இது என்ன கடைல ஆர்டர் கொடுத்து எனக்கு இப்படி இப்படி வேணும்னு கஸ்டமைஸ் பண்ணி வாங்குற பொருளா? கடவுளா பார்த்து நமக்கு கொடுக்கிற வரம் டி..! உன்னை போல.. நம்ம மிருக்குட்டி போல..” என்று அவளது குட்டி மூக்கை பிடித்து ஆட்டி அவன் கூற..
“போங்க.. போங்க..! இந்த கடவுள் ரொம்ப மோசம்..! ரொம்ப வஞ்சனை பண்றார் எனக்கு. எவ்ளோ நாளைக்கு தான் அப்பாவும் பொண்ணும் நீங்க ஒருத்தர் ஒருத்தரை கொஞ்சுகிறதை.. பாச மழை பொழியுறதை.. நான் தனியா நின்னு வேடிக்கை பார்க்கிறது. எனக்கும் ஜெலஸ் ஆகும்ல.. எனக்குன்னு ஒரு ஆள் வேணாமா..??” என்று அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு சோகம் போல நடித்தாள்.
“அடிப்பாவி..! உனக்கு கொஞ்ச ஹோல்சோல் ப்ராப்ரட்டி நான் மட்டும் தான்..! அதனால என்னை கொஞ்சு..” என்றான் அவள் மடியில் படுத்தவாறு.
“உங்களை யா? அதெல்லாம் சலிக்க சலிக்க கொஞ்சியாச்சு..!” என்றாள் அவன் சிகையை வருடியவாறு..!
“எதே சலிச்சிடுச்சா? அதுக்குள்ளே வா?” என்று அவன் அதிர..
“ஆமா ஆமா.. உங்களுக்கு மட்டும் காலையில பாசமா கொஞ்ச பொண்ணு.. நேசமா கொஞ்ச நானு.. அன்பா கொஞ்ச உங்க அம்மானு.. மூணு பேரு வேணும்..! எனக்கு மட்டும் நீங்க ஒருத்தரா அதெல்லாம் முடியாது. எனக்கு பையன் வேணும்…!” என்றாள், இப்போது அவனின் கூரிய மூக்கை பிடித்து ஆட்டியப்படி..!
“அது ஏன் டி பையன் வேணும் உனக்கு? இரண்டாவது பொண்ணா பொறந்தா தள்ளி வைச்சிடுவியா என்ன?” என்று சீண்டினான் மனைவியை.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று சிறிது நேரம் தடுமாறியவள் “இரண்டாவதாக பிறக்கும் குழந்தை அம்மாவோட பெஸ்டியாம்..! அது பொண்ணா இருந்தாலும் பையனா இருந்தாலும் சரி. ஆனா பையனா இருந்தா உங்கள மாதிரி ரொம்ப பாசமா இருப்பான் இல்ல..” என்றதும் விழிகள் அகல “அவ்ளோ பாசக்காரனா டி நானு!” என்று கேட்டான் ஆதவ்.
“இல்லையா பின்ன? அதுவும் அம்மா மேல கொள்ளை கொள்ளையா பாசம்..!” என்றதும் கண்கள் வெளியே தெறிக்க மனைவியை பார்த்து தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் நிரஞ்சன்.
“அதான் உங்க பொண்டாட்டிய அவங்க எப்படி நடத்தினாலும் என் அம்மானு விட்டுக் கொடுக்கவே மாட்டேங்கிறீங்களே.! நான் தானே பொறுத்து போக வேண்டியது இருக்கு. இதுல காதல் கல்யாணம் வேற.. ஆத்மார்த்த காதலி.. கட்டிய மனைவி எல்லாம் அம்மா முன்னாடி சும்மா ஆயிட்டோமில்ல..!” என்று இப்பொழுது அவனை வார அவள் மடியில் படுத்து இருந்தவனோ சட்டுன்னு எழுந்து அமர்ந்து அவளை முறைத்தான்.
“உண்மைதானே சொன்னேன் ஆஃபிஸர்?” என்று அவள் முட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக அவனைப் பார்த்தாள்.
“ஏன் டி உனக்கு நான் சப்போட்டே பண்ணதில்லையாடி? எப்படி வஞ்சகமே இல்லாம இந்த வாய் பொய் சொல்லுது?” என்று அவளது கீழ் உதட்டை பிடித்து வலிக்க இழுத்தான்.
“என்னதான் நீங்கள் சமாளிச்சாலும் அது தானே எசமான் நிஜம்” என்று அவளும் விடாமல் அவனை வாரிக் கொண்டே இருந்தாள் சிரிப்போடு..
“நீயும் வேணும்னா பாசமா அன்பா மிஸ்டர் தங்கபாஸ்கரனை கொஞ்சேன். யாரு வேண்டாம்னு சொன்னா..?” என்றான் சற்றே கடுப்பாக..!
தங்கபாஸ்கரன் மேகவதனியின் தந்தை. நிரஞ்சன் அப்படி சொன்னவுடன் சற்று என்று அவளுக்கு கண்ணீர் முட்ட.. அவ்விடத்தில் இருந்து எழுந்து பால்கனிக்குச் சென்று நின்றுக் கொண்டு வெளியே தெரிந்த இருளை தான் வெறித்துக் கொண்டிருந்தாள்.
விளையாட்டாக பேசிய பேச்சு இப்படி மனைவி வருத்தும் படி ஆகிவிட்டதே என்று தன்னை தானே நொந்தவன் அவளுக்கு பின்னால் சென்று “மேகா சாரிடா.. வெரி சாரி.. உன்னை வருத்தணும்னு நான் சொல்லல” என்றதும் சற்றென்று திரும்பி அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.
“நிஜமா எங்க அப்பானா எனக்கு அவ்ளோ பிடிக்கும் அவருக்கும் நானா உயிர்..! ஆனா.. ஆனா.. எல்லாமே இப்ப இல்லைல.. எனக்கு ஒரு தடவையாது எங்க அப்பா கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு ஆதவ்.. என்னை மன்னிக்கவே மாட்டாங்களா?” என்று கண்ணீர் மல்க கணவனிடம் கெஞ்சினாள் மேகவதனி.
அன்று பெற்றவர்களை விட புதிதாய் முளைத்த காதல் நேசம் பெரியதாய் தெரிந்தது. எப்படியும் ஒரு குழந்தை பிறந்தவுடன் சமாதானம் ஆகிவிடலாம் என்று நினைப்பு வேறு..! ஆனால் இன்று மொத்தமாய் எல்லாம் தலைகீழாய் மாற உயிராய் வளர்த்தவர்கள் அவளை உதறி தள்ளிவிட.. நித்தம் நித்தம் அவர்களை நினைத்து மனதுக்குள் ஓரம் அழுதுக் கொண்டிருந்தவள் இன்று வெடித்து கதறினாள் கணவனின் மார்பில்..!
அதற்கு ஒரு விதத்தில் இவனும் தான் காரணம். அது என்னவோ மகன்கள் காதல் திருமணம் என்றால் உடனே ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்களில் சிலர்.. மகளை மட்டும் ஏற்பதில்லை. காலம் மாறினாலும் சில கோலங்கள் மாறுவதாய் இல்லை இந்த சமூகத்தில்..!
“கண்டிப்பா உங்க அப்பா மாறிடுவாங்க.. மாறலைனாலும் நம்ம சீக்கிரமா செகண்ட் பேபி ரெடி பண்ணி அதுக்கு உங்க அப்பா பேரையே வச்சு அவருக்கு நேராவே கொஞ்சி கொஞ்சி வெறுப்பேத்துவோம். சரியா?” என்றான் சிரிக்காமல்.
அவளும் முகிழ்த்த சிரிப்பை அவன் மார்பிலேயே புதைத்துக் கொண்டு முகம் நிமிர்த்தி அவனை முறைத்தாள் மாது.
“எதுக்கு எங்க அப்பா பேரு வச்சு அவனை வாடா தங்க பாஸ்கரா.. போடா தங்க பாஸ்கரானு திட்டி உங்க இத்தனை நாள் பகையை தீர்த்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா? இந்த மாதிரி எல்லாம் பண்ணுனீங்க..” என்று ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள் மனைவி.
கண்ணீரில் கலங்கி சிவந்திருந்த அழகிய முகம். அவள் முகத்தை நெருங்கி.. அவள் உதடுகளை தன் உதடுகளுக்கு பக்கத்தில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு கேட்டான்.
“மாமனாரை பேச இந்த மருமகனுக்கு உரிமை இல்லையா? சொல்லு டி மேகா?”
“இதையே நானும் சொல்லவா? மாமியாரை பேச மருமகளுக்கு உரிமை இல்லையான்னு?” என்று அவளும் கண் சிமிட்டி கேட்க “உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா அதுவும் இந்த வாய் இருக்கே வாய்..” என்று அவளின் இதழ்களை அவன் குறிப்பாய் பார்க்க..
“கள்ளா.. நீ எதுக்கு இப்படி உத்து உத்து பார்க்குறனு எனக்கு தெரியாதா..” என்று தன் இதழ்களை அவளது இடது கையால் மறைத்துக் கொண்டாள்.
”ஆமா.. இத்துனூண்ட குடுத்து போட்டு.. என்னை போட்டு வாட்டுவ.?? போடி போ.. உதடு உனக்கு மட்டும்தான் இருக்கா என்ன.. ??”
அவனின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள்.
”ஆஆ.. !! ஏன்டி கிள்ற??”
”போனா போகுது.. பையன் ஆசைப் பட்டு கெஞ்சறானே.. ஆசைய நிறைவேத்திக்கட்டும்னு நினைச்சேன்.. இப்ப எல்லாம் கேன்ஸல்!!”
”ஹே.. என்ன சொன்ன.. என்ன சொன்ன?? திரும்ப சொல்லு? ஆசை நிறைவேத்திக்கட்டுமா.??” என்று கேட்டான் ஹஸ்கி வாய்ஸில்..
”ம்ம்ம்ம்…!!” பளீரெனச் சிரித்தாள். அவள் கண்கள் சுருங்கி கன்னங்கள் மினுக்கின. அவ்விரவிலும் நிலவாய் மின்னிய மனைவியின் முகத்தை காதலாக பார்த்தான் நிரஞ்சன்.
அவளை அக்கதவிலேயே சாய்த்து நெருக்கினான் தன் உடல் கொண்டு, உச்சாதிபாதம் வரை அவளை அணுஅணுவாய் பார்த்தான். அதில் அவளுக்கு குறுகுறுப்பு தோன்ற.. தலையை கவிழ்த்துக் கொண்டாள். ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தியவன், தன் கட்டை விரல் கொண்டு அவளின் ஆரஞ்சு சுளை அதரங்களை வருடியவன், அடுத்த நிமிடமே அதை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். யார் அதரங்கள் யாரோடது என்று அறியாமல் ஒன்றோடொன்று லயித்து பிண்ணி பிணைந்தது. அந்தரங்கங்களை தாண்டியும் அவனின் நா பெண்ணவளின் இதழ்கள் நா.. பற்கள் என்று துழாவி துழாவி தனது களியாட்டத்தை தொடர.. உணர்வு பிடியில் அவன் ஷேர்ட்டை இறுக்கி பிடித்தாள் மேகா. வஞ்சகமின்றி வஞ்சியவளின் முழுதாக ஆட்கொண்டான். அவனின் வெப்ப மூச்சு காற்று.. இடை அழுத்தம் கரங்கள்.. இறுக்கமான இதழணைப்பு என்று அவனுள் தொலைந்து கொண்டிருந்தாள் அவள்.
அவனின் அணைப்பு கூடிக் கொண்டே போக அதில் அவர்கள் உடம்பில் இருந்த மொத்த ஹார்மோன்களும் விழித்துக்கொண்டு பேயாட்டம் ஆடியது. மேகா உடல் சிலிர்த்து எழுந்தது.. நாணத்தில் அவள் முகம் செம்மையுற.. அதை ரசித்தவன் தன் நாவினை கொண்டு ருசித்தான்.
அவளின் சூடான மூச்சுக்காற்று எக்குத்தப்பாய் வெளியேற.. விழிகள் மூடி அதை ரசித்தாள் பெண்ணவள்..
மெல்ல அவன் முகத்தை தன் கைகளால் பிரித்தெடுத்து "ஆதவ்..வேண்டாம்" என்றாள் வெளியே வராத மெதுவான குரலில்..
அவனோ "வேண்டாமா...?" என்றான் கிறக்கமாக..
“இங்க வேணாம்..!” என்றாள் அவளும் மெல்லிய குரலில்.
அவனின் சூடான மூச்சுக் காற்றும்.. குளிர்ந்த உதடுகளும் மங்கைக்குள் மாயம் செய்திட.. அவளே அறிந்திடாமல் கண்கள் சொருகியது அவளுக்கு. அவள் தள்ளாடிட அவளின் உதடுகள் தானாய் பிரிந்துக் கொண்டன. சுக வேதனையில் அவள் சுகிக்க.. அவனின் சூடான முத்தங்கள பெருக.. மோகத்தீ பற்றிக்கொண்டது இருவருக்குள்ளும்.. மெல்ல அவளை தன் புறம் திருப்பியவன் அவளின் உதட்டில் திகட்ட திகட்ட தேன் உறிஞ்சினான். அவளின் உதட்டை உறிஞ்ச, உறிஞ்ச அவளுக்கு தேகமெல்லாம் அனலடித்தது.
அவனின் முத்தம் நின்றிடாமல் தொடர.. நங்கையவளோ மூச்சு வாங்க.. சற்று அவளுக்கு இளைப்பாற நினைத்த அவனது அதரங்களோ உதட்டை விட்டு அவளின் நெற்றி, மூக்கு, கன்னங்கள் என்று ஒரு சுற்றடித்து முத்தங்களால் சுழற்றி அடித்தது. அவன் முத்தத்தில் அவள் கிறங்கி இருக்க எப்பொழுது அவளை தூக்கினான்? எப்பொழுது மஞ்சத்தில் கிடத்தினான்? என்று அவள் அறியவே இல்லை..
அவனின் ஒற்றை விரலை நீட்டி அவளின் நெற்றியில் தொடங்கிய ஊர்வலம் மேலிருந்து கீழே மெல்லமாய் உரசியப்படி அவளின் மென்மைகளை தாண்டி நாபியில் வந்து நின்றது. அவளோ அந்த உணர்வுகளை தாங்க இயலாமல் அவன் சிகைக்குள் தனது விரலை விட்டு அழுந்தப் பற்றிக் கொண்டாள்.
அவளின் இடையில் இருந்த அந்த சிறிய மின்னிய ஒற்றை வைரக்கல்லில் அவனை வெறியேற்ற.. அதை வாயால் கவ்வியவன் இதழ்களால் உரசிட மேனி தகித்தது பெண்ணவளுக்கு..!!
மெல்ல மெல்ல அவளது உடைகளுக்கு விடை கொடுத்தான்.. அதில் அவளின் மென்மைகள் மெல்ல எட்டிப் பார்க்க.. அவள் நாணம் கொண்டு அதை மறைக்க முயல.. அவள் கைகளைப் பிடித்து சிறை செய்தவன்.. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் பல்லவன் சிலையாய் விழுந்தவளை கண்களாலேயே அள்ளி அள்ளி பருகிய அவன்.. அடுத்து அதரங்களாலும் விரல்களாலும் அவளை மீட்டி எடுத்தான் விடியும் வரை... அவளை சுவைக்க சுவைக்க அவளும் சுகத்தில் சுகித்தாள்..
விடிந்த பின்பு தன் நெஞ்சில் தலை வைத்து தூங்கும் தன்னவனை பார்த்த பிறகே நேற்றைய இரவின் களியாட்டம் புரிய.. முதலில் கோபம் கொண்டாலும் தன் மனதில் இருந்த அந்த எண்ணத்தை போக்கவே இவன் எப்படி செய்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள் மங்கையவள்..!
எப்பொழுதும் போல கணவன் மீது ஆர்ப்பரிப்போடு பொங்கி காதலில் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் மேகா.
