காதலி 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 12

 

 

பதினைந்து நிமிடத்திற்குள் தனது நண்பன் மற்றும் அசிஸ்டன்ட் வருவான் என்று கூறிய ஜித்து அங்கிருந்தவர்களை பார்த்து அவதானித்து கொண்டிருந்தான்.

 

வத்ஸவ் முகத்தில் தெரியும் பதட்டம்!!

நாக பிரசாத் முகத்தில் தெரியும் குழப்பம்!!

வாஹினி முகத்தில் தெரியும் பயம்!!

அங்கிருந்த அடியாட்கள் முகத்தில் தெரியும் 'யாரிவன் இவங்களேயே சுத்தல்லவிடுறான்?' என்ற ஆச்சரியம்!!

 

அனைத்தையும் சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருந்தவன் "ஏன்டா வத்ஸவ்.. இது வாஹினியோட சொத்துல உள்ள பங்களாவா? செம்மையா இருக்கு. ஆனா இதை ஏன்டா உங்க இல்லீகல் வேலைக்கு யூஸ் பண்றிங்க?" என்று அவனை பார்த்து கேட்க..

 

 

"அப்போதான் யாருக்கும் சந்தேகம் வராது!!" என்று எங்கோ பார்த்து முணுமுணுத்தான் வத்ஸவ்.

 

 

"வாட் அன் ஐடியா சர்ஜி!!" என்று ஆச்சரியம் போல புருவங்களை உயர்த்தி ஜித்து கேட்க.. இவன் பாராட்டுகிறானா? கிண்டல் பண்ணுகிறானா? என்று புரியாமல் குழம்பி போய் நாக பிரசாத்தை பார்த்தான் வத்ஸவ்.

 

 

'போயும்.. போயும்.. இவனைப் போய் கூட்டுச் சேர்த்தோமே?? இவனை அப்பவே இரண்டு மிரட்டி மிரட்டி விரட்டி விட்டிருக்கலாம்!!' என்று நொந்து கொள்ளாத குறையாக நின்று கொண்டிருந்தான் நாக பிரசாத்!!

 

 

நாக பிரசாத்தை பார்த்துக்கொண்டிருந்த ஜித்து முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு.. அவன் இவனை பார்த்து "என்ன??" என்பதாய் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கேட்க.. 'ஐ கேட்ச் யுவர் மைண்ட் வாய்ஸ்' என்று செய்கையால் செய்தவனை பார்த்தவனுக்கு அப்படியொரு கோபம்.

 

 

"15 நிமிஷம் ஆகப்போகுது இன்னும் நீ சொன்னா உன் ஆள் வரல" என்று நாக ப்ரசாத் கேட்க..

 

 

"வருவான்.. வருவான்.. அதெல்லாம் சரியா வருவான். என்னை மாதிரி ஆட்களுக்கு டைமிங் ரொம்ப முக்கியம் பாஸே!!" என்று கூறிச் சிரித்தான் ஜித்து.

 

 

ஏனோ ஜித்து சிரிப்பதைப் பார்க்க அவ்வளவு வெறுப்பாக இருந்தது வத்ஸவுக்கு. 'இவன் வந்து குட்டையை குழப்பாமல் இருந்திருந்தால் இந்நேரம் இவர்கள் நினைத்தது நடந்து இருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து விட்டு என்ன வேண்டி கிடக்கு இவனுக்கு?' என்று மனதினில் குமைந்து கொண்டிருந்தான். ஆனாலும் நேரம் ஆக ஆக.. ஒருவித கலக்கம் அவனுள். 

 

இவன் இம்மாதிரி நாக பிரசாத்தோடு கூட்டு சேர்ந்தது அவனது அன்னைக்கும் தந்தைக்கும் தெரியாது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால்.. இதுவரை இல்லாத ஒரு புது வித பயம் சூழ்ந்து கொண்டது அவனை. வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மாமன் மகள் மீது ஒரு கண்ணு இருந்தாலும் கூட அந்த சொத்து அதிகாரம் தான் அவனை கவர்ந்தது. ஒருவேளை அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் இப்பொழுது வருகிற பணமே போதும் என்று மனதில் ஒருவித நிம்மதி இருந்தவனுக்கு, இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆவது என்பது போல லேசான ஒரு பயம் பீடித்தது.

நீலிமா ஒரு ஆட்டம் ஆடி விடுவார். எல்லாம் சமாளித்து கொள்ளலாம் என்று ஒரு அசட்டு தைரியமும் இருந்தது அவனுக்கு.

 

 

"இன்னும் கொஞ்ச நேரத்தில என் ஆளு வந்திடுவான். அவன் வந்த உடனே.. அவன் கிட்ட இருக்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் ஒரு காப்பி உன்கிட்ட தந்திடுவேன். ஒரிஜினல் நானும் அவனும் முழுசா வெளி போய்.. சொளையா அந்த இரண்டு கோடி டாலர் என் கைக்கு வந்ததும் உன் ஆளு கிட்ட கொடுத்திடுவேன். என்னையோ என் ஃப்ரெண்ட்டையோ நீ பிடிச்சு வைச்சு ஏதாவது செய்ய பிளான் பண்ணியிருந்தால் மறந்திடு. இப்போ உங்களுக்கும் எனக்கும் தெரிந்த இந்த விஷயம்.. அப்புறம், சேட்டிலைட் உதவியோடு உலகம் ஃபுல்லா பரவும். ஏற்கனவே பாண்டிச்சேரியில் கழட்டிவிட வேண்டிய என்னை இவ்வளவு தூரம் இழுத்து வந்ததே நீங்க தான்.. இதுக்கு மேலும் என்னை இதுக்குள்ள இழுக்காதீங்க. எனக்கும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குப்பா!!" என்றான் ஜித்து தோளை குலுக்கி கொண்டு!!

 

 

"அவன் பேசுவதும் சரிதானே! அப்பவே அவன் முகத்துல காசு விட்டெறிந்தால் நமக்கு இப்படி ஒரு புள்ள பூச்சி கட்டிக்கிட்டு இருக்கணும்னு தொல்லை இருக்காது தானே! எப்போ எவன் எதை வெளியிடுவேன் என்று நாமும் பயந்து இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு வத்ஸவிடம் பொங்கினான் நாக பிரசாத்.

 

 

"ரொம்ப எல்லாத்துக்கும் என்னையே பேசாதீங்க!! அவன் வச்சிருக்குற டீடெயில்ஸ முதல்ல பாருங்க? அவன் கூட டீலிங் பேசினது நீங்கதானே? அப்ப கண்டிப்பா உங்க வாய்ஸ ரெக்கார்ட் பண்ணி வைத்து இருப்பான்" என்று வத்ஸவ் கரெக்டாக கூற.. அவன் சொல்வதற்கும் சான்ஸ் இருக்கு என்று அமைதியாக நின்றிருந்தான் நாக பிரசாத். 

 

 

வாஹினியோ.. ஆடுங்கடா ஆடுங்க எவ்வளவு தூரம் நீங்க ஆடுறீங்கனு நானும் பார்க்கிறேன் என்று அமைதியாக பார்த்திருந்தவள், காலை மாற்றி காலை வைத்து.. "எனக்கு கால் வலிக்குது. உட்கார ஒரு சேர் எடுத்துட்டு வாடா!" தெலுங்கில் அங்கிருந்த அடியாளிடம் இவள் கட்டளையிட..

 

 

அவனும் அந்த அவளின் கட்டளையில் ஜெர்க்காகி தனது முதலாளிகளை பார்க்க.. எடுத்துட்டு வந்து போடு என்று கண்களாலேயே கூறினான். கொண்டுவந்த போட்டோவுடன் சேரில் அமர்ந்து "மேடா யாரு உங்க அப்பன எடுத்துட்டு வருவானா? போய் அதையும் எடுத்துட்டு வா.. இவ்வளவு நேரம் நின்னது பிடிச்சி இழுத்துக்குச்சு கால் எல்லாம்.. ரொம்ப வலிக்குது" என்று புலம்பினாள். அதையும் அவர் எடுத்துட்டு வந்து போட மேடாவில் கால் நீட்டிக் கொண்டு ஜம்பமாக அமர்ந்து இருந்தாள்.

 

"ஆமா வத்ஸவ்.. சொத்து அப்புறம் நானு எல்லாம் வேணும் தானே உங்களுக்கு?" என்று கேட்க, ஆமாம் என்று அவன் தலையசைக்க.. "அப்ப போய்ட்டு நம்மூர் பிரியாணி வாங்கிட்டு வர சொல்லு.. என்ன தான் இருந்தாலும் நம்மூர் ஹைதராபாத் பிரியாணி டேஸ்டே டெஸ்ட் தான்!! ஏங்கி போய் இருக்கேன். சீக்கிரம் வாங்கிட்டு வா பாக்கலாம்!! ஓடு.. ஓடு" என்று விரட்டினாள். 

 

"என்னடா சோத்தை மட்டுமே தின்ன பிறந்தவள் போல இப்படி பறக்குறா?" என்று நாக பிரசாத் வத்ஸவை பார்க்க.. "அவ அப்படி தான்!! ஆனா வெளியில் பாக்குறவங்களுக்கு அவளை தெரியாது!!" என்று கிசுகிசுத்தான்.

 

"இந்தா ஆரம்பிச்சிட்டாள்ள.. இந்த பால் டப்பா!! செத்திங்கடா இனி சோறு போட்டே!!" தலையை சாய்த்து நெட்டி எடுப்பது போல சிரித்துக்கொண்டான் ஜித்து.

 

"சீக்கிரம் வத்ஸவ்!! அப்புறம் எனக்கு ரொம்ப பசிக்கும். இன்னும் நிறைய அயிட்டம்ஸ் கேட்பேன். என் வயிறு வாடாம இருந்தா தான்.. நான் உங்களுக்கு கோவாப்ரேட் பண்ணுவேன். இல்லைனா.. என்‌ வயிறு உங்க பேச்சு என்ன.. என்‌ பேச்சை கூட கேட்காது. அதி பயங்கர கோபக்காரி அது!!" என்று கண்களை உருட்டி மிரட்டி பேசிக்கொண்டிருந்த வாஹினியின் அழகு முதன்முதலில் ஈர்த்தது நாக பிரசாத்தை. 

 

"இன்டரஸ்டிங்!!" என்றான் வளைந்து நெளிந்து பேசும் அவள் இதழ்களை தின்று விடும் வெறியோடு!! அதைப் பார்த்த ஜித்துவின் கண்கள் இடுங்கின..

 

"இன்னும் 30 செகண்ட் தான் இருக்கு என் ஆள் வந்து விடுவான். அதுக்கு அப்புறம் உங்க விருந்து உபசரிப்பு எல்லாம் வச்சிக்கோங்க" என்று நாக பிரசாத்தின் கவனத்தை தன் மீது திருப்பினான் ஜித்து.

 

முப்பது இருபதாக குறைந்து பத்தாக வந்து.. இதோ.. ஐந்து.. நான்கு.. மூன்று.. இரண்டு.. ஒன்னு.. என்று சொல்லிக் கொண்டே இருந்த ஜித்துவின் காதில்.. அந்த சத்தங்கள் விழ.. ஒருமுறை கூர்ந்து கேட்டவனின் இதழ்கள் விரிந்தது புன்னகையில்..

 

 

ஸ்விங்.. ஸ்விங்.. என்ற சத்தம் மெலிதாக கேட்டது சட்டென்று வேகமாக கேட்க.. அந்த வீட்டில் உள்ள சந்து பொந்து மூளை முடுக்குகளில் இருந்து எல்லாம் கருப்பு உடை கையில் துப்பாக்கி ஏந்திய பிளாக் கேட் எனப்படும் விஐபி களுக்கான செக்யூரிட்டி வந்தனர் சடசடவென்று..

 

 

என்ன என்ன என்று உணரும் முன்னரே அனைவரும் அவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தனர்.

 

உடனே நாக பிரசாத்தின் கோபமும் சந்தேகமும் ஜித்து மீது திரும்ப.. ஆனால் அவனே அங்கே கைதூக்கி சரண்டர் போஸில் நிற்பதை பார்த்து குழம்பி இவனும் அதே போல நின்றான்.

 

 

ஆனால் வத்ஸவோ.‌. "பிரண்ட்டை வரச்சொல்றேனு சொல்லிட்டு இவளோட பாதுகாப்பு செக்யூரிட்டி ஆட்களுக்கு தகவல் சொல்லிட்டு வந்தியா?? யூ சீட்!!" என்று அவன் மீது பாய போக…

 

 

"ஸ்டே அவே!!" என்று கணீர் குரலில் அப்படியே தேங்கி நின்றான் வத்ஸவ்.

 

"அந்தக் குரல்.. அந்தக் குரல்..கர்னல் குரல்‌. போச்சு போச்சு.. எல்லாம் போச்சு!!" என்று ஜித்துவின் அருகில் நின்று கொண்டிருந்த வத்ஸவ் புலம்பினான்.

 

 

"இங்க பாரு சீட் பண்றதெல்லாம் உன்னோட வேலை.. நான் என் பிரண்ட்டை தான் வர சொன்னேன்.. இவங்கள யாரு வரச் சொன்னதுனு எனக்கு தெரியாது. கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு நான்‌ பாட்டுக்கு போயிருப்பேன்.. 2 கோடி டாலர்னா சும்மாவா?? நானே ஃபீலிங் இருக்கேன்.. இவன் என் மீது பாய வரான்!" என்று தனக்கு மேல் புலம்பிய ஜித்துவை யோசனையோடு பார்த்தான் வத்ஸவ்.

 

அந்த கணீர் குரலின் சொந்தக்காரர்

வேக நடையுடன் வர.. அவரது கண்கள் முதலில் வாஹினியின் நலத்தை சரிபார்த்து, ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துவிட்டு கடைசியாக ஜித்து மேல் நிலைத்தது.

 

அவனும் அவரை தான் விடாமல் பார்த்திருந்தான் இமைகளை சிமிட்டாமல்..

 

"கமெண்டர்ஸ்.. அந்த அடியாட்கள் எல்லாம் கட்டி வைங்க. மேடமை இங்க கூட்டிட்டு வாங்க. இவனுங்க ரெண்டு பேரையும் தனியா நிப்பாட்டுங்க. இவன்கிட்ட எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு!" என்று ஜித்தை நோக்கி சென்றார்.

 

கமெண்ட்ர்ஸ் உள்ள வந்த உடனேயே வாஹினி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நின்று விட்டாள். கர்னல் கூப்பிட்டதும் அதை மறுக்க முடியாமல், மெல்ல நடந்து அவரை நோக்கி செல்லும் பொழுது ஜித்துவை ஒரு பார்வை பார்த்தாள்.

 

 

அவனும் அவளைத்தான் உச்சி முதல் பாதம் வரை கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான்.. 'அப்பா.. இவன் என்ன இப்படி பார்க்கிறான். அதுவும் இவ்வளோ பேர் முன்னிலையில்.. இதுவரை கல்லோ மண்ணோ என்ற பார்ப்பான். இப்ப பார்வை என்ன புதுசா இருக்கு? நீ என்ன பார்த்தாலும் மாட்டுனது மாட்டு தாண்டி மகனே!!' என்று உதடுகள் நெளிய கர்னல் அருகில் போய் நின்று கொண்டாள்.

 

கர்னல் கண்ணை காட்ட அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த ஜிகாவை அழைத்து வந்து சேர்ந்தான் மற்றொரு கமாண்டர்.

 

ஜிகாவை இவன் குற்றம் சாட்டும் பார்வையோடு பார்க்க.. அவனோ தோளை குலுக்கினான்.

 

"திட்டம் போட்டு வாஹினியை கடத்திய குற்றத்திற்காக உன்னை கைது செய்கிறேன்!!" என்றார் தெலுங்கில் கர்னல் ஜித்து முன் ரிவால்வரை நீட்டியவாறு..

 

"அவுனா??" என்று சுந்தரத் தெலுங்கில் கேட்டவனை அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ந்து பார்க்க..

 

"வாட்? தெலுங்கு தெரியுமா இவனுக்கு?? திட்டம் போட்டு கடத்தினானா.. இவனா? ஏன்?" என அத்துணை அதிர்வுகளை முகத்தில் காட்டி.. அதிர்ந்து நின்ற சுந்தரியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான்..

 

ஜித்தேந்திர தஸ்யூதன்!!

 

"அப்படியா? உங்க கிட்ட ஆதாரம் இருக்கா மிஸ்டர். கர்னல்?" என்று அவனின்‌ ஆளமையான குரலில் அனைவரும் வாயை பிளந்தாலும், கர்னல் "எஸ்.. மிஸ்டர் ஜித்தேந்திர தஸ்யூதன்!! உங்க ப்ரண்ட் ஜிகா சாரி.. சாரி.. துவாரபலாகன் நம்பர் ஒன் பபின் ராவ். எல்லாவற்றையும் ஒப்பிச்சிட்டான்!!" என்று ஜித்து.. இல்லையில்லை ஜித்தேந்திரனை பேச தூண்டி விட்டார்.

 

 

அவன் 'அப்படியா?' என்ற பார்வையை கூட ஜிகா மீது செலுத்தவில்லை. அவனுக்கு அவனை பற்றி தெரியும். ஆதலால் கட கடவென சிரித்தான் கடோத்கஜனாய்!!

 

"வாவ்.. கர்னலுக்குள் ஒரு கற்பனைவாதி!" என்றான் ஜித்து.

 

"என்ன கற்பனைவாதி?? எல்லாம் நடந்தது தானே!! அன்று பிறந்தநாள் வீட்டிலிருந்து காரில் அமர்ந்திருந்த வாஹினிக்கு ஏசி மூலம் மயக்க மருந்தை செலுத்தி அவள் மயங்கியதும் அந்த காரிலேயே கடத்தி சென்றது.. இல்லாத ஒரு ஊரையே உருவாக்கி அதில் திருடனாக மாறி அங்கே அவளை சிறை வைத்தது.. இதோ இந்த இரண்டு பேரையும் பிடிக்க அவர்களோடு டீல் பேசியவாறு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வாஹினியை பகடை காயா மாற்றியது.. இன்னும் இன்னும் நிறைய.." என்றார்.

 

 

"அப்படியென்றால் உங்களுக்கு நல்லது தானே செய்திருக்கிறேன் மிஸ்டர் கர்னல். யாரோ கடத்தி போக இருந்தவளை பத்திரமாக பாதுகாத்து யாரென்றே தெரியாமல் அரண்மனைக்கு உள்ளேயே இருந்த இரண்டு கல்ப்ரெட்டுகளை உங்க கண் முன்னே கொண்டு வந்திருக்கிறேன்.. அப்படியென்றால் இதற்கெல்லாம் சேர்த்து நீங்கள் எனக்கு பாராட்டு பத்திரம் அல்லவா வாசிக்க வேண்டும்?? இப்போது ரிவால்வரை நீட்டிக் கொண்டு இருக்கிறீர்களே.. ஒரு வேளை இது தான் உங்கள் பாராட்டோ??" என்று தாடையை தடவி யோசனையாக கேட்டான் தஸ்யூதன்.

 

இதற்கு என்ன பதில் சொல்வார். ஏற்கனவே இவன் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவன் இப்படி தான் செய்திருக்க வேண்டும் என்று இவரின் யூகம் மட்டுமே.. அதுவும் ஜிகாவை பின் தொடர்ந்து வரும் பொழுது. ஜிகா இந்த வீட்டில் நுழையும் முன் கையும் களவுமாக பிடித்தார்கள். ஆனால் அவன் வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வரவில்லை.

 

நாக பிரசாத்தும் வத்ஸவும் வாயடைத்து நின்றிருந்தார்கள். ஏகப்பட்ட குழப்பங்கள் அவர்கள் முகத்தில். இவன் யார்? எதற்காக வாஹினியை கடத்தினான்? எதற்கு எங்களோடு டீல் பேசினான்?? என்று எதுவும் புரியவில்லை. அதே குழப்ப மேகம் தான் வாஹினியையும் ஆக்கிரமித்திருந்தது.

 

 

"அண்ட் மோர் ஓவர்.. என்னை அரெஸ்ட் செய்யும் அதிகாரம்‌ உங்களுக்கு இல்ல மிஸ்டர் கர்னல். ஏன்னா…" என்று‌ இழுத்தவன் வாஹினியை ஆழமாக பார்க்க.. அதில் என்ன இருந்தது? என்ன சொல்ல விழைகிறான்? என்று பேதை நெஞ்சம் தடுமாற…

 

"ஐ அம் ஹர் பர்செனல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ஹெட்!! சோ.. யூ பெட்டர் ஸ்டே அவே ஃபர்ம் மை வே!!" என்று அதிகாரமாக உரைத்தவன், "பிபின்.. எவர்திங் இஸ் ரெடி?" என்று‌ கேட்க..

 

அதுவரை சாதாரணமாக நின்றவன் விரைத்து நின்று ஒரு சல்யூட் அடித்து "எஸ் சார்!!" என்றான்.

 

"டூ இட் ஃபாஸ்ட்!!" ஜித்தேந்தர் சொன்னவுடன்.. பிபின் என்கிற ஜிகா தன் கையில் இருந்த வாட்ச் மூலம் ரகசிய தகவல் அளிக்க.. அடுத்த கணம் குபுகுபுவென்று குமிந்திருந்தது ஜித்தேந்தர் படை!! 

 

 

என் மேல் கை வைத்தால் ஒரு படையே வரும் என்று அவன் சொன்னது இப்போது அங்குள்ளவர்கள் காதில் ஒலிக்க.. விழ இமைத்து பார்க்கும் முன்.. நாக ப்ரசாத் அடியாட்கள் எல்லாம் சத்தமே இல்லாமல் வெளிவந்த அவர்களது துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் துறக்க.. மரண பயத்தை கண்ணில் தேக்கி நின்றான் வத்ஸவ்.

 

நாகக பிரசாத் இவன் யார்? இவனை எப்படி நாம் தவறிவிட்டோம்? இப்போது எப்படி வாஹினியை கைப்பற்றுவது? என்று புரியாமல் குழம்பி நிற்க, அவன் அருகில் வந்த ஜித்து.. "உன் உயிரே இப்போ என் கையில.. நீ இன்னும் ப்ளான் போடுற பார்த்தியா? உன் மன தைரியத்தை நான் பாராட்டுறேன்!" என்றவன், அவன் கால்களில் இரண்டு புல்லட்டுகளை சத்தமே இல்லாமல் இறக்கியிருந்தான் அருகில் இருந்தவனிடம் துப்பாக்கியை பறித்து நிமிட நேரத்தில்…

 

 

அவன் அலறலை தொடர்ந்து வத்ஸவ் சட்டென்று ஜித்து முன்னால் 

மண்டியிட்டவன், "சத்தியமா இனிமே என்னால் வாஹினிக்கு எந்த பிரச்சனையும் வராது. என்ன விட்டுடுங்க!!" என்று கதறவே ஆரம்பித்துவிட்டான்.

 

"கெட் அப்!!" என்று அவனை எழுப்பியவன், "கெய்ஸ்..!!" என்று கூற.. ஒரு‌வன் வந்து அவனை அள்ளிக் கொண்டு சென்றான்.

 

 

கர்னலும் அவரது கமாண்டர்ஸ்களும் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க.. சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டு இருந்தான் ஜித்தேந்தர். அதி விரைவாக செயல்பட்டு நாக பிரசாத்தையும் வத்ஸவையும் அவனுடைய வேனில் ஏற்றி விட்டு வாஹினி முன்னால் வந்து நின்றான்.

 

 

வாஹினி நடந்த எதையும் நம்ப முடியாதவாய்!! 'அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. ஆனால் நம்மை எப்படி ஏமாற்றி விட்டான்? இது தெரியாமல் அவனிடமே மனதை பறிக் கொடுத்து.. ச்ச்..' என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தவள் அவனை உருத்து விழிக்க.. அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனோ.. "ஷல் வீ?" என்று வாயிலை காட்ட.. அவளோ முறுக்கிக்கொண்டு திரும்பி கர்னலின் அருகே போய் நின்றாள்.

 

 

கர்னல் ஒரு மிதப்பு பார்வை ஜித்தேந்தரை பார்க்க.. அதற்கெல்லாம்

நான் அசர மாட்டேன் என்றவன் "எக்ஸ்க்யூஸ் மீ!!" என்று கர்னலை சற்று தள்ளி நிறுத்தியவன், அவளை அலேக்காக தூக்கியவன் அவள் திமிற… திமிற அள்ளிக் கொண்டு சென்றான்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top