6
இன்று…
அன்று அவனுக்கு அவள் ஊட்டிவிட்ட நினைவுகள் ரணங்களாய் கொல்ல.. உணவினை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ் நிரஞ்சன்.
“இப்ப முறைச்சு முறைச்சு பார்த்து என்ன பண்றது? எதுவும் சிறிசா இருக்கும் போதே பேசி தீர்த்துக்கணும்.. பெருசா வளர விட்டு.. இப்ப கை விட்டு போச்சுன்னு புலம்புனா ஆச்சா?” என்று ஃபோனில் பிரேமா யாரிடமோ சத்தமாக பேசுவது காதில் விழுந்தது.
அது யாருக்காகவோ அல்ல தனக்காக தான் என்பதை புரிந்து கொண்டு நிரஞ்சன் இடவலமாக தலையாட்டியவன் முகத்தில் விரக்தி புன்னகை.
கையில் இருந்த சாப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெறித்துப் பார்த்தான் நிரஞ்சன். அவளின்றி உணவு கூட வெறுத்துதான் போனது. ஆனால்.. அதை தூர போடவும் மனதில்லை.
பொதுவாக இரவில் கணவன் மாமியாருக்கு டிபன் செய்து கொடுப்பவள் தான் மதியம் மீதி இருக்கும் உணவை தான் உண்பாள்.
நிரஞ்சன் வேண்டாம் என்று தடுத்தாலும் “இந்த உணவு கூட கிடைக்காம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா? நீங்களும் கஷ்டப்பட்டு தான் சம்பாரிக்கிறிங்க.. எதுக்கு வேஸ்ட் பண்ணனும்? நீங்க என் சாப்பாட்டைகொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க நான் உங்க டிபனை ஷேர் பண்ணிக்கிறேன்..!” என்றதும் அவனும் தலையாட்டினான்.
இரவில் சாப்பாட்டை சாப்பிடாத மகனையும் சாப்பிட வைக்கிறாளே மருமகள் என்று ஒரு பொறுமலோடு “அதெல்லாம் அவனுக்கு ஒத்துக்காது” என்பார் பிரேமா.
“ஓகே..!” என்று ஒரு வாய் கூட சாப்பிட்டு முடித்திருக்க மாட்டாள் வதனி, அதற்குள் அவளது சாப்பாட்டில் இருந்து பாதி சாதத்தை தன் தட்டுக்கு மாற்றிவிட்டு தன் தட்டிலுள்ள டிஃபனை மனைவியின் தட்டுக்கு மாற்றுவான் நிரஞ்சன்.
“என் புள்ளய இப்படி மாத்திட்டாளே..!! என்ன அரும பெருமையா வளர்த்தேன்” என்று பொருமியப்படி செல்லும் பிரேமாவை கண்டு புன்னகைப்பாள் மேகவதனி.
ஆதவ் நிரஞ்சன் அன்னையின் புலம்பலை பெரும்பாலும் கண்டுக் கொள்ள மாட்டான். அதிலும் தனக்கே தனக்காக அனைத்து உறவுகளையும் விட்டு வந்த மனைவியை பெரும்பாலான நேரம் விட்டுக் கொடுக்கவும் மாட்டான்.
ஆனால்.. இப்போதோ முற்றிலுமாக விட்டு விட்டேனே..!!
என் செய்து என்னவளை என்னிடம் வரவழைப்பேன்? என் செய்து என்னவளுக்கு என் நேசத்தை புரிய வைப்பேன்? என் செய்து என் வாழ்க்கையை மீட்க போகிறேன்?
அன்று ஆராயாமல் செய்த தவறால் இன்று ஆறா வலியோடு வாழ்கிறான் ஆதவ் நிரஞ்சன்.
மறுநாள் காலை விழிக்கும் முன் மனைவியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
இது நிஜமா? இல்லை கனவா? என்று அவன் உணர்வுக்கு வரும் முன் நின்று விட்டது அழைப்பு..! அதற்கு பின் அவன் பல முறை அழைத்தும் அவள் எடுக்கவேயில்லை.
இது எதற்கான அழைப்பாக இருக்கும்? என் வாழ்க்கை மலரா போகிறதா இல்லை கருக போகிறதா? விடை தெரியா வினாவோடு வேலைக்கு கிளம்பினான் ஆதவ் நிரஞ்
சன்.
தொடரும்..
