காதலி 9

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 9

 

 

மெல்ல இருள் கவ்வும் நேரம்..

 

அவளது இதழ்களை கவ்வி இருந்தான் ஜித்து. ஒற்றை முத்தத்தில்.. அவளின் ஊண் வரை உருக வைத்தான் அவன்!!

 

 

மெல்ல மெல்ல இதழ்களை மட்டுமல்ல அச்செதில்களையும் பிரித்து இருந்தான் அவளது புஜங்களில் இருந்து..

 

 

அவன் முத்தத்தில் முகிழ்த்த வெட்கத்தில் குனிந்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான். அவள் கண்கள் மூடியிருந்தன. அதில் துள்ளும் கயலென கருவிழிகள் நீந்திக் கொண்டிருந்தன.. அவை பயத்திலா? மோகத்திலா?

 

 

எதுவாகினும் நான் இருக்கிறேன் என்று அட்சாரமிட்டிருந்தான் அவன். அழகியின் சிப்பியென மூடியிருந்த நயனங்களில் முத்தமிட்டு!!

 

 

ஆனால் ஊட்டமான கன்னங்களும்… கூரிய மூக்கும்..

 

வியர்வை ஈரத்தில் மின்ன.. 

 

அவளின் உடல் வளைவுகள்.. 

 

அதன் ஏற்ற இறக்கங்கள்.. அபாரமான நெளிவுகள்..

 

இளமையின் உச்ச செழுமைகள்..

 

அவளை பேரழகி என கட்டியம் கூறியது!! அவனை உணர்ச்சிக் கடலில் தள்ளியது!!

 

 

 

அந்த முத்தம் மிகப் பெரும் போதையை அளித்தது ஜித்துவுக்கு. ஒரு பெண்ணை முதன்முறையாக முத்தமிட்டு இருக்கிறான். அந்தப் படபடப்பு கூட ஒருவித பரவசத்தை அளித்தது.

 

 

அவள் கை பற்றி எடுத்து தன் கையில் வைத்தான். அவள் கை அத்துணை மென்மையாயிருந்தது. ஆனால் குளிரில் நடுங்கி சில்லிட்டு இருந்தது. அவள் உள்ளங்கையில் மெல்லிய ஈரம் இருப்பதை உணர்ந்தவன், அவனது வெதுவெதுப்பாயிருந்த கைகளை அவளோடு பிணைத்தான்.

 

 

 

அவளின் பெண்மை வாசம் அவன்

 

நெஞ்சுக்குள் செல்லும் சுவாசத்தை நிறைத்து இனிமையாக்கியது. 

 

 

அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துப் பிணைத்தான். அவளின் சரிவான கழுத்து வளைவில் ஆழ்ந்து சுவாசித்து அழுத்தமாக அதில் முத்தமிட்டான். அவள் சட்டெனக் கூசி மெல்லச் சிணுங்கி தலையை விலக்க… "நோ.. நோ.. பால் டப்பா..!!" என்றவன் அவள் உடலை அவன் பக்கம் திருப்பி அவளை அணைத்தான். அவன் உதடுகள் அவளின் கன்னத்தை முத்தமிட்டு கொண்டே இருந்தன.

 

 

ஒவ்வொரு இமை சிமிட்டலுக்கும்.. ஒவ்வொரு இதய லப் டப்புக்கும்.. ஒவ்வொரு நாடி துடிப்புக்கும்..

 

 

இளமை செழுமையான மென்மையான சிவந்த கன்னங்கள். முத்தத்துக்குப்பின் அதைக் கவ்வியபடி அணைப்பை சற்று இறுக்கமாக்கினான். அவள் கண்ணிமைகள் கிறங்கி அவள் உதடுகள் அவனின் உதடுகளை நாடி வர.. 

 

 

உதடுகள் தயக்கத்துடன் தொட்டு தொட்டு.. விலகி.. மீண்டும் மீண்டும்.. தொட்டு.. விலகி.. பெரும் தவிப்புடன் இணைந்து பொருந்திக் கொண்டன..

 

 

இருவர் இதழ்களின் ஸ்பரிசத்தை கண் மூடி அனுபவித்து மெதுவாக ஆரம்பித்த முத்தம் பற்றிக்கொண்ட நெருப்பைப் போல ஆவேச முனகலைச் சென்றடைய.. அதன் தாக்கம் தாளாமல் அவள் அவன் மீது சரிய.. அவனும் சரிந்தான் அந்த சருகுகளின் மேலே..

 

 

அவளின் வெண்பஞ்சு அவன் நெஞ்சில் அழுத்தியது. அவன் மேல் சரிந்தவளின் உதடுகளும் மூக்கும் கன்னமும் கழுத்தும் அவன் உதடுகளுக்கு இலக்காகின. 

 

 

சற்று ஆவேசத்துக்குரிய இலக்கு!! கடித்தலும் சுவைத்தலுமான தாப இலக்கு!!

 

கவ்வலும் நக்கலுமான மோக இலக்கு!!

 

சிணுங்கலும் முணங்கலுக்குமான விரக தாப இலக்கு!!

 

 

இரு கைகள் உடல்களோடு தழுவி கால்கள் பிணைந்து.. சீறற்ற மூச்சுடன் அவள் மார்பின் மீது முகத்தை வைத்தவன் அந்த நிமிடங்களில் ஆழ்ந்து அனுபவித்தான்.

 

 

அவள் கண்களோ கிறக்கத்தில் இருக்க.. அரைவிழி காட்டி இமைகள் மூடி.. அவன் கேசத்தில் முகம் பதித்தாள்.

 

 

ஜித்துவின் இந்த ஆவேச தழுவல்களும் அனைத்தலும் முத்தாடல்களும் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டவன் போல் அவளுக்கு தெரியவில்லை. அவனும் உள்ளுக்குள் அவளை காதலித்து இருப்பானோ? என்ற தவிப்பு பின் காதலித்தது இருக்க வேண்டுமே!! என்ற‌ வேண்டுதலுடன் இருந்தது.

 

 

 

 எவ்வளவு நேரம் இருவரும் கட்டுண்டிருந்தார்களோ? சிறிது நேரத்தில் எங்கேயோ கேட்ட ஒரு ஜீப் சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவன், அவளை தன்னுடனே எழுப்பி அமர வைத்து "அவங்க போயிட்டாங்க போல பால் டப்பா!" என்று மெதுவாக ஊர்ந்து குனிந்து வெளியே வந்து பார்க்க எங்கும் ஒரே நிசப்தம் அமைதி..

 

 

 

"வீடியுற வரைக்கும் நாம இங்க இருக்க முடியாது. வெளியே போய் தான் ஆகணும். இப்போ மெதுவா என் கூட சத்தம் போடாமல் நட!!" என்று கூற அவளும் அப்படியே நிற்க "இந்த பாச தெரியாத பால் டப்பா வேற!!" என்று திட்டியவன்.. "நோ சவுண்ட்!! ஓகே??" என்று மெல்லிய குரலில் கூற.. இருவரும் மெதுவாக நடந்து சென்றனர்.

 

 

 

சிறிது நேரத்திலேயே அங்கே யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஜித்து இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்தான். மொபைல் அப்பொழுது அடித்தது வைப்ரேஷன் மோடில் உர்ர் உர்ர் என்று..

 

 

சுற்றுமுற்றும் கண்களால் துழாவிக் கொண்டே மெல்லமாக போனை எடுத்து காதில் வைக்க ஜிகாதான். "ஜித்து எங்கடா இருக்க? நாங்க உங்களை எங்கெங்கெல்லாமோ தேடிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்களோனு வந்தா.. இங்கேயும் காணோமே" என்றான் கவலையோடு..

 

 

 

"அதை ஏண்டா கேக்குற ஒரு பெரிய ஆபத்தில் மாட்டி அங்கிருந்து வெளியே வரலை.. பாண்டிச்சேரி பீச் பக்கத்தில் ஒரு சவுக்குத் தோப்புக்குள் இருக்கோம். எப்படி வருதுன்னு தெரியல டா!" என்றான்.

 

 

"என்னடா சொல்ற சவுக்கு தோப்பா??" என்று அதுவரை ஜிகாவின் காதோடு காது வைத்து கேட்டுக்கொண்டிருந்த மெகா ஒரு மாதிரியான குரலில் கேட்க..

 

 

 

"அட பக்கிகளா.. நான் என்ன அர்த்தத்தில் சொல்றேன்.. நீங்க என்ன அர்த்தத்தில் புரிஞ்சுக்கிறீங்க!! இந்த பால் டப்பாவை இழுத்துட்டு நான் வரும் போது ஏதோ ஒரு கும்பல் தொரத்தி வந்தது டா.. அங்கிருந்து தப்பித்து தோப்புக்குள்ள ஒளிஞ்சு இப்பதான் வெளியில் வரோம். இந்த பால் டப்பாவுக்கு எத்தினி எதிரியினு தெரியவே இல்லையே டா?? இன்னும் எத்தனை பேரு வருவானுங்களோ?? ஒவ்வொருத்தனுக்கும் ஹல்க் மாதிரி அத்தா தண்டி இருக்கானுங்க… கையில வேற இதுவரைக்கும் பேரே வச்சிராத.. நம்ம கண்ணாலே பார்த்திராத வெப்பன்ஸ் எல்லாம் கூட வச்சிருக்கானுங்க… உயிர் தப்பிச்சது ஏதோ போன பிறவியில் நான் செஞ்ச புண்ணியம்!!" என்று பேசிக்கொண்டே சவுக்குத் தோப்பில் இருந்து ரோட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

 

 

"டே நாங்க எப்படியோ அதிலிருந்து தப்பிச்சு வந்தாச்சு. நீங்க எங்கள பத்தி கவலைப்பட வேண்டாம்" என்றவனுக்கு அப்போதுதான் கையில் கட்டியிருந்த விலங்கு ஞாபகம் வந்தது. "இந்த கைல இருக்குற விலங்கை என்னா பண்ணுறதுடா?? நீங்க யார் கிட்டப் போய் கழட்ட கேட்கிறது?" என்றான்.

 

 

 

"அது ஒன்னு மேட்டர் இல்ல.. அந்த பிசி கிட்டு இருந்த நாங்க விலங்கோட சாவியை ஆட்டையை போட்டு வந்திட்டோம். நீ இங்கே வந்துடு ஜித்தா.. நாங்களே ஓபன் பண்ணி விடுவோம்!" என்று கூலாக சொன்னாள் ஜிகா..

 

 

 

"அடேய் அதுவரையில் யார் கண்ணுலயும் படாம நாங்க எப்படிடா வருவது?" என்று மீண்டும் இவன் புலம்ப..

 

 

"நீ எப்படி பாண்டிச்சேரிக்கு வந்தியோ?? அப்படியே வந்து சேரு!!" என்றான் மெகா..

 

 

"ஆமாம் இல்லடா.. நான் வரும்போது அந்த கிறுக்கு பயல் சுரேஷோட பைக் எடுத்துட்டு வந்தேன்டா.. அது எங்கையோ இங்கேதான் நிப்பாட்டி வச்சேனு நினைக்கிறேன். நான் போய் அதற்கு ஆதரவு கொடுத்து அதிலேயே வீட்டுக்கு வந்து சேறுரேன்" என்று பீச்சை நோக்கி மீண்டும் ஓடினார்கள் ஜித்துவும் வாஹினியும்.

 

 

 

சட்டென்று அவன் கையை பிடித்து நிறுத்திய வாஹினி.. தங்கள் இருவர் கையிலும் இணைத்திருந்த விலங்கை காட்டி "இப்படியே போனா எல்லாரும் நம்மளை ஒரு மாதிரியா பாப்பாங்க!!" என்றாள்.

 

 

"ஷாலால.. நம்ம கையை மறைச்சிக்கலாம்" என்று அவன் கூற 'ஷாலா?? அது எங்க இருக்கு? அது ஓடி வந்ததில் எங்க போச்சுன்னு யாருக்கு தெரியும்! இவ்வளவு நேரம் கட்டி புடிச்சிட்டு உட்கார்ந்திருக்கும்போது ஷாலு இருந்ததா இல்லையானு கூட தெரியலையாக்கும்!' என்று இவள் தனக்குள்ளேயே முணுமுணுத்தாள்.

 

 

 

அப்போதுதான் அவனுக்குமே அது புரிய தனது சட்டையை கழற்றி அவள் கையோடு சேர்த்து கட்டிக் கொண்டு அதாவது விலங்கு தெரியாதவாறு சென்றார்கள்.

 

 

 

இவன் பைக்கை ஒரு கடையின் பக்கமாக நிறுத்திவிட்டு வந்திருந்தால் அது அங்கேயே தான் இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் சாவி இருக்க.. ஆனால் எப்படி ஓட்ட முடியும்? இரண்டுபேர் கைகளும் தான் விலங்கால் பிணைந்திருக்கிறதே??

 

 

 

சட்டென்று முடிவெடுத்தவன், அவன் அமர்ந்து அவளை தன் முன்னே இருபக்கமும் கால்களை போட்டு அவனைப் பார்த்தவாறே அமர வைத்தவன், இருவர் கைகளையும் ஒன்றாகவே ஆக்சிலேட்டர் வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். மற்றொரு கை அவளது இடையை இறுக்கி அணைத்து இருந்தது.

 

 

 

பெரும்பாலும் பாண்டிச்சேரிக்கு இவர்கள் வருவதற்கு பல குறுக்கு வழிகளை வைத்திருப்பார்கள். காரை ஓட்டிக்கொண்டு போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வரவேண்டும் அல்லவா? போதாக்குறைக்கு அந்த காரின் சொந்தக்காரனால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கூட சில பல குறுக்கு பாதைகள் என்று வைத்திருக்கும் ஜெகஜாலக்கில்லாடி இவன். எப்பொழுது போலீஸ் கண்ணில் படாமல் செல்வது ஒன்னும் அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே!!

 

 

 

இவர்களுக்காக ஜிகா மெகா மட்டும் காத்திருக்கவில்லை ஹரிதாவும் தான் காத்திருந்தாள்.

 

 

 

ஜிகாவும் மெகாவும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகள் வந்து "ஜித்து வந்துட்டானா? அந்த தெலுங்கு அம்மாயி வந்துட்டாளா? நீங்க யாராவது பார்த்தீர்களா?" என்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க.. 

 

 

அதை பார்த்தும் பார்க்காததுமாய்.. கேட்டும் கேட்காத மாதிரியே இருந்தாள் ஹரிதா. உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் குமிழியிட ஆரம்பித்தது. ஏதோ அவள் திருடு போன இடத்தில் பிரச்சினை நடந்திருக்கலாம். காப்பாற்றப் போன ஜித்தும் அதில் மாட்டி இருக்கணும். தப்பித்தார்களா? மாட்டினார்களா? தெரிந்து கொள்ளும் பெரும் ஆவல் அவளிடம்..

 

 

ஆனால் அவளைப் பார்த்த மாத்திரத்தில் மெகாவும் ஜிகாவும் வாயை மூடிக் கொள்ள.. இப்போது கன்ஃபார்ம் ஆனது அவளுக்கு. இவர்கள் இருவரும் வசமாக சிக்கிக் கொண்டார்கள் என்று!!

 

 

 அவர்கள் உள்ளே வரும்போது.. இதை சொல்லி சொல்லி காட்ட வேண்டும். "ஒரு சாவலில் கூட ஜெயிக்க முடியவில்லை உன்னால்.. பெரிய சவால் விட்டு போன எப்ப தோத்து வந்து நிக்கிறியே??" என்று அவள் முகத்திற்கு நேராக கத்தவேண்டும் போல ஒரு பெரும் ஆக்ரோஷம்!! அதேநேரத்தில் ஜித்துவ இவளிடமிருந்து இதை சொல்லி சொல்லியே பிரித்து விடலாம் என்று பெரும் நம்பிக்கை. 

 

 

 

அதற்காகத்தான் மற்றவர்களை விட இவள் ஆவலே உருவாக அமர்ந்திருந்தாள். ஜித்துவின் வீட்டை பார்த்தவாறு யாருக்கும் தெரியாமல்..

 

 

 

ஆனால் வண்டி சத்தத்தில் மெகா ஜிகா மட்டுமல்ல இன்னும் சிலரும் திரும்பி பார்க்க.. அங்கே வெற்று உடம்போடு அனாயசமாக புல்லட்டில் கம்பீரமாக ஜித்து பவனிவர.. அவன் முன்னே அவனது தோளில் முகம் சாய்த்து இறுக்கி அணைத்தவாறு வாஹினி.. இருவரையும் இவ்வாறு யாருமே எதிர்பார்க்கவில்லை!!

 

 

 

அவர்களது நெருக்கம் ஹரிதாவுக்குள் பிரளயத்தை உண்டாக்கியது.

 

 

 

சட்டென்று அந்த வீதியில் ஒரு ரவுண்டு அடித்து நிறுத்தியவன் அவளோடு சேர்ந்து இறங்கி.. "ஏ பால் டப்பா வீடு வந்துருச்சுடி! எழுந்திருடி சரியான தூங்குமூஞ்சி!!" என்று கன்னத்தில் தட்ட.. அவன் தோள் வளையிலேயே மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் "வீடு வந்துருச்சா அப்படின்னா தூக்கிட்டு போய் பெட்டில் படுக்க வை ஜித்து" என்று மீண்டும் அவனது கழுத்தை கட்டிக் கொண்டு உறங்க ஆரம்பிக்க..

 

 

 

"இது சவால் போட்டுதுனு இதை நம்பி நம்ம போனோமே? நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது கேட்டுச்சா? பத்தாக்குறைக்கு வீர வசனம் பேசிட்டு.. தூங்கு மூஞ்சி மாதிரி திரும்பி வந்து இருக்கு" என்று ஜிகாவும் மெகாவும் தலையில் அடித்துக் கொண்டது தான் பாக்கி.

 

 

 

"ஹீமா.. நீ போன பிளான் என்ன ஆச்சு? நாங்க கொடுத்த ஒன் டே ட்ரைனிங் புரோகிரம் வேஸ்டா!!" என்று அவர்கள் கேட்க..

 

 

 

தூக்கத்தில் இருந்தவள் ஒரு ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து "வதின.." என்றவாறு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

 

 

"பாரேன் அவ விஷயத்தில் மட்டும் கரெக்டா இருக்கா!!" என்று முணுமுணுத்துக் கொண்டவர்கள் "நாளைக்கு இந்த ஹரிதா நம்மள பார்த்து கேள்வி கேட்டா? நாம என்ன பதில் சொல்வது!!" என்று இவர்கள் பேசியது ஜித்து காதில் விழ..

 

 

"நாளைக்கு இல்ல.. இன்னிக்கே!! அதோ அங்க நின்னு இங்க தான் பார்த்துட்டு இருக்கா பாரு ஹரிதா!!" என்று மறைவான இடத்தில் இருந்த ஹரிதாவை கண்டுபிடித்து ஹிந்து கூற…

 

 

 

"அதானே.. நானே மறைந்திருக்கனும். பெருசா சவால் விட்டுப் போனவ வெறும் பிசி கிட்ட மாட்டி.. கை விலங்கோட வந்து நிற்கிறா.. நான் தான் அப்பவே சொன்னேன்ல?? உனக்கு ஜித்து இணையே கிடையாதுனு. ஒழுங்கு மாரியாதையா எங்கிருந்து வந்தியோ.. அங்கேயே ஓடிப் போயிடு!!" என்றவள் எள்ளலாக கூறி வாஹினியை பார்க்க..

 

 

 

ஹரிதாவின் குரலிலேயே தூக்கத்தை துரத்தியடித்து விழித்து பார்த்தவள், பெரிதாக கொட்டாவி ஒன்றை விட்டு "நேனு சவாலு ஓடி போயினானு நீக்கு யவரு அன்னாரு? ஹூ செட்??" (நான் சவால் தோத்துட்டேன் உனக்கு யார் சொன்னது?) என்று கேட்டாள்.

 

 

"யார் சொல்லணும்? உன்ன பார்த்தாலே தெரியுது!! சும்மா தான் வந்து இருக்கிறேனு" என்று அவள் கூற.. 

 

 

மெகாவும் ஜிகாவும் கூட தேவையா இந்த அவமானம் நமக்கு என்று தங்கள் தலை குனிந்து நிற்க..

 

 

"பால் டப்பா!! உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத விஷயம் எல்லாம்?" என்று ஜித்து அதட்டினான்.

 

 

 

"நே ஓட்டி பந்தயம் ல ஓடி போலேது!"(நான் ஒன்னும் பெட்டுல தோத்து போகல? என்றவள் சட்டென்று ஜித்துவின் பின் பாக்கெட்டில் இருந்து ஒரு பர்ஸை எடுத்து ஹரிதாவின் முன்னே வீசினாள்.

 

 

 

"நூ ஹேண்ட் பேக் ந எத்துன்சி ரம்மன்னாவு...தல்ல பெத்தகா ஓட்டி டப்பு உண்டது. கானி இதி ஒக்க மொகவாடு பர்ஸ்..தில்லோ டப்புலு எக்குவ உண்டாயி..லோப்புல சரிகா உன்னானி சூசுகோ??"

 

(நீ ஹேண்ட்பேக் தான் எடுத்துட்டு வர சொன்ன.. அதுல பெருசா ஒன்னும் பணம் எல்லாம் இருக்காது. ஆனால் இது ஜென்ட்ஸ் பர்ஸ். அதை விட எப்பவும் இதுல தான் காசு நிறைய இருக்கும். உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ?)" என்றவள் கூறி சிரிக்க..

 

 

 

ஜிகா மெகா ஆனந்த் அதிர்ச்சியோடு தங்களின் ஒரு நாள் ட்ரெயின் வீண் போகவில்லை என்று மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீரை இருவரும் மாற்றி மாற்றி துடைத்துக் கொள்ள..

 

 

"அடியே!! பால் டப்பா.. இது யாரோட பர்ஸ் டி? எங்க இருந்தது அடிச்ச?" என்று கேட்டான் ஜித்து விழி விரிய.. அதுவும் பர்ஸை அடித்ததோடு மட்டுமல்லாமல் எனக்கே தெரியாமல் என் பாக்கெட்டில் வைத்திருக்கிறாளே என்று ஆச்சரியமும் கூட..

 

 

 

"இட்ஸ் தட் ஒல்லி பெல்லி பிசிகாரு பர்ஸண்டி பாவா"(இது அந்த ஒல்லி பெல்லி பிசி பர்ஸ் பாவா" என்று சிரித்தவளை.. 

 

 

"ஜித்தனுக்கு மேல ஜித்திடி நீ!!" என்றவாறு இரு கைகளாலும் அள்ளி கொண்டு அவன் தங்கள் வீட்டுக்குள் நுழைய.. ஹரிதாவோ அந்தப் பர்ஸை அதிர்ச்சியுடன் பார்த்து "போலீஸ் கிட்ட ஆட்டைய போட்டுட்டாலா?" என்று பொம்மை போலவே நடந்து தன் வீட்டிற்கு சென்றாள்.

 

 

 

ஜிகாவும் மெகாவும் அவன் பின்னாலேயே போய் "டேய் அந்த விலங்கையாவது கழட்டி டா.." என்று கூவினார்கள்.

 

 

"இப்படியே கூட இருக்கிறது நல்லாதான் இருக்கு மச்சி!!" என்று சிரித்த ஜித்துவை பார்த்தவர்களுக்கு "இவனும் விழுந்துட்டான் போல" என நினைத்து தங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த சாவியை தர.. கை விலங்கை விடுவித்தான்.

 

 

அவனுடன் அவள் கை பிணைத்ததால் விலங்கினால் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளும் அழுத்தத்தினால் ஆங்காங்கே கன்னிப் போய் இருந்தது. ஜித்துவின் கைகள் மென்மையாக அதனை வருடி விட.. கண்களோ அவளது கண்களை வருடிக் கொண்டிருந்தன…

 

 

 

அதில் இருந்தது என்ன தேடலா?

 

காதலா?? என்னவென்று புரியவில்லை என்றாலும் அது மனதுக்கு இதமாக இருக்க.. மெல்ல அவனிடம் இருந்து நழுவி அந்த மகிழ்ச்சியான மனநிலையிலேயே உறங்கினாள் வாஹினி. நாளைக்கு நடக்கவிருக்கும் விபரீதம் புரியாமல் இல்லை இல்லை தெரியாமல்!!

 

 

 

 

அடுத்த நாள் மதியத்துக்கு மேல் தான் விழித்தாள் வாஹினி. நேற்றைய ஓடி வந்ததால் களைப்பு அதற்கு மேல் கையில் பட்ட காயம் பல நாள் வேலையை ஒரே நாள் பார்த்தது போல உடம்பு அடித்துப்போட்டது போல் அவ்வளவு அசதி.. மெல்ல கைகளை மேலே தூக்கி அவள் நெட்டி முறிக்க கையில் இருந்த கட்டே சொல்லியது அது யார் போட்டிருப்பார்கள் என்று..

 

 

 

மெல்ல அது தடவி விட்டு "இவனை பார்த்ததிலிருந்து ஒரு சேசிங்கா இருக்கு நம்ம லைஃப்" என்று சிரித்தவாறு அந்த காயத்தில் நீர் படாமல் குளித்து மீண்டும் ஜித்துவின் ஆடையை அணிந்து வந்தாள்.

 

 

 

அவனும் மூன்று சுடிதார் செட் வாங்கிக் கொடுத்திருந்தான். அதை எல்லாம் திரும்பிப் பார்ப்பது இல்லை அவள். நேற்று பீச்சுக்கு செல்லும்போதுதான் வித்தியாசமாக தெரிய கூடாது என்று ஒன்றை அணிந்து சென்றிருந்தாள். இன்று மீண்டும் அவனது உடையிலேயே இவள் தயாராகி வெளியே வர..

 

 

 

அங்கு வந்தவர் போனவர்கள் அனைவரும் அவள் உடல் நிலையை விசாரித்து விட்டு செல்ல.. அப்போதுதான் புரிந்தது ஜிகா லவுட் ஸ்பீக்கர் எல்லா இடத்திலும் நேற்று நடந்த செய்தி சொல்லியிருக்கிறான் என்று!!

 

 

 

வேகவேகமாக அவர்களை தேடி செல்ல போனவளைத் தடுத்து "ரெடி ஆகி சீக்கிரம் வா!!" என்றான். அவனது ரெடியாகியில் புரிந்து கொண்டு தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து "ஐ அம் ரெடி!!" என்று தோளை குலுக்கினாள்.

 

 

 

"நோ மை ட்ரஸ்.. யுவர் சுடிதார் புட்.. கோ" என்றான்.

 

 

 

"இதுவே நல்லாத்தானே இருக்கு!!" என்று முனகலோடு சுடிதார் மாற்றி வந்தவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

 

 

 

"எங்க அழைச்சுக்கிட்டு போற?" என்று நூறு முறை இதுவரை கேட்டுவிட்டாள். அவனும் "போனதுக்கப்புறம் தெரியும் அமைதியா வாயேன்!!" என்று பதவிசாக சொல்லி இப்பொழுது அதட்டலில் முடித்திருக்க அது கொஞ்சம் வேலை செய்ய வாய்மூடி அமைதியாக வந்தாள்.

 

 

 

சோ சாரி அந்த வாயை மூடி என்பது பேசாமல் மட்டுமே.. நொறுக்குத்தீனி அது பாட்டுக்கு உள்ளே சென்று கொண்டுதான் இருந்தது.

 

 

 

அதுபோல மற்றொரு இடத்தில் விற்றுக்கொண்டிருந்த இளநீரை பார்த்தவளுக்கு தாகம் எடுக்க.. அவன் தோளில் ஒற்றை விரலால் சுரண்டி இளநீரை காண்பிக்க..

 

 

 

"உன்னை சீக்கிரமே பேக் பண்ணனும் டி.. முடியலடி ஒன்னு வச்சு என்னால சமாளிக்க* என்றவாறு இளநீர் வாங்கி கொடுத்தான்.

 

 

 

இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு கும்பல் இவர்களை பார்த்து வழிமறைக்க..

 

 

ஜித்து அவளை தன் முதுகுக்குப் பின்னால் வைத்து அவர்களிடமிருந்து காப்பாற்ற அவர்களோ அவளது கையைப் பிடித்து "வா.." என்று தெலுங்கில் அழைக்க..

 

 

 

அவ்வளவுதான் இதுவரையும் ஜித்துக்குள் இருந்த அந்த மிருகம் வெளியாகி துவம்சம் பண்ண ஆரம்பித்தது அவர்களை..

 

 

 

"இவளோ இளநீர் போச்சே!!" என்ற நினைப்போடு மீண்டும் ஒன்றை வாங்கி குடித்தவாறு அவர்களது சண்டையை ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

 

 

முன்னைப் போல இவளை துரத்தி வந்தவர்களைக் கண்டு இவளுக்கு பயமே இல்லை.. "என்‌ ஜித்து இருக்கிறான் என்னைக் காக்க!!" என்ற பெரும் நம்பிக்கை!!

 

 

 

இதோ நான்காவது முறையாக அவளை இன்னலில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறானே..

 

"சோ ஸ்வீட் பாவா நீரு…!!" என்று பறக்கும் முத்தத்தை விட்டு கொஞ்சிக்கொண்டாள்.

 

 

 

 

அடுத்து பதினைந்து நிமிடத்தில் அனைவரையும் அடித்து வீழ்த்தியவன் அவளை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறி.. கிட்டத்தட்ட பறந்தான்.

 

 

 

 

அடிபட்டு விழுந்தவர்கள் கர்னலகன் ஆட்கள்!! ஒருத்தன் போன் செய்து கர்லனிடம் தகவல் தெரிவித்தான்.

 

 

 

"யூ யூஸ்லெஸ் இடியட்ஸ்!! நீங்க யாருன்னு சொல்லியிருந்தா அவளே வந்திருப்பா தானே!! அதை விட்டுட்டு எதுக்கு டா அங்க போய் வில்லன்கள் மாதிரி பிகு பண்ணி இருக்கீங்க. உங்க ஐந்து பேரையும் அடிச்சு போட்டது யாருடா?" என்று கேட்க..

 

 

 

"தெரியல பாஸ்!! அவனை இதுவரைக்கும் நான் பார்த்ததுகூட இல்லை. ஆனால் மேடம் அவனை ரொம்ப நம்புறாங்க போல.. இப்ப எங்கே அவன் கூட்டிட்டு போறான் தெரியல" என்றான்.

 

 

 

"அவன் போட்டாவது எடுத்துவச்சியா? என்று கேட்க

 

 

"எஸ் பாஸ்.. அவன் மேடமை கூட்டிட்டு போகும்போது எதுக்கும் இருக்கட்டும்னு அவர்களுக்கே தெரியாமலே ஒரு போட்டோ எடுத்தேன். அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.

 

 

 

வாட்ஸ் அப்பில் அந்த ஃபோட்டோ டவுன்லோடு ஆக எடுத்துக் கொண்ட முழுதாக ஒரு நிமிடம் கர்னலனின் பிபி எகிற செய்வதாக இருந்தது.

 

 

 

அடுத்து டவுன்லோட் ஆயிருந்தா அந்த முகத்தைப் பார்த்து அதிர்ந்தவர்... தன் படைக்கு திரும்ப அழைத்தவர்.. "இன்னும் எத்தனை ஆட்களை வேணாலும் அழைத்துக்கொண்டு போங்க.. ஆனா அவன்கிட்ட இருந்து நம்ம வாஹினியை பத்திரமாக மீட்டு வரணும்!!" என்று உத்தரவு குரலில் அவன் கத்த..

 

 

 

"அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா பாஸ்!!" என்று குழப்பத்துடன் கேட்டவனை..

 

 

"இவ்வளவு ட்ரெயின் பண்ண உங்களையே அடிச்சு போட்டதுலேயே தெரிய வேண்டாமா? அவன் ஜெகஜால ஜித்தன்னு.. கண்டிப்பா அவனால் மேடமுக்கு ஆபத்து வரலாம். சீக்கிரம் போங்க!!" என்று விரட்டினார் அவர்களை.. இவரும் ஒரு தனி ஹெலிகாப்டரில் கிளம்பினார் அவர்கள் சொன்ன இடத்திற்கு.

 

 

 

அதேசமயம் விரைந்து சென்று ஜித்து நின்றதோ இரு வண்டிகளுக்கு முன்னே..

 

 

 

இவனை பார்த்ததும் அந்த வண்டியில் இருந்தவர்களும் இறங்கி வர..

 

 

அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே வாஹினிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இவள் பயந்து ஜித்துவின் பின்னே ஒட்டிக்கொள்ள

..

 

 

 

"வாரே வாஹ் ஜித்து.. சொன்னபடி ஆளை கரெக்ட் தூக்கிட்டு வந்துட்டியே.. வெல்டன் பாய்!!" என்றவன் அவன் முன்னே ஒரு பெரிய பேக்கை தூக்கி போட அதை அனாயசமாக பிடித்த ஜித்துவோ.. 

 

 

"பொருள் எனக்கு!!

 

பொண்ணு உனக்கு!!"

 

என்றவன் வாஹினியை அவர்களிடம் தள்ளியவன் திரும்பி பாராமல் சென்றான்.

 

தன்னை நம்பியவளை.. காதலித்தவளை.. முழுதாக கொன்று விட்டோம் என்று புரிந்து கொள்ளாமல்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top