கள்வன் 8
மழை.. இயற்கையின் கொடை!!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பொழியும்.
சில நாட்கள் மென்தூரலாக!!
சில நாட்கள் சாரல் மழையாக!!
சில நாட்கள் காற்றுடன் கலந்த அடர்மழையாக!!
சில நாட்கள் இடி மின்னலுடன் பெரு மழையாக!!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக ஜித்துவின் நினைவுகள் வாஹினியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அவனது சிறுசிறு செயல்களும்.. அவளிடம் காட்டும் உரிமையும்.. அன்பும்.. அக்கறையும்.. அவளுக்குள் மென்சாரலாக ஆரம்பித்த மழை என்னும் ஈர்ப்பு.. அடை மழையாக மாறி இப்பொழுது பெரும் மழையாக.. காதல் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது உள்ளத்தில்!!
ஆனால் அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்!!
அவனை திருமணம் செய்து கொள்ள முடியுமா? தன் வாழ்நாள் கூட அவனால் வர முடியுமா? இல்லை அத்தனையையும் விட்டுவிட்டு அவள் தான் இங்கே இவனோட வந்து குடும்பம் நடத்த முடியுமா? இது எந்த கேள்விகளுக்கும் அவளிடம் பதிலில்லை!! ஆனால் நெஞ்சு நிரம்ப அவன் நினைவே!! அதுவே தனி சுகமாய்.. சில சமயம் ரணமாய்!!
மழைநீரை கிரகிக்கும் நிலங்கள் பசுமை கொண்டு செழித்து வளர்ந்து ஊரைச் சுற்றிலும் குளுமையை ஏற்படுத்துவது போல.. ஜித்துவின் நினைவை.. அவன் மீதான காதலை தன் மனதில் மட்டுமே கொண்டு.. அவன் வாழும் இடத்தில் இன்பமாய் உரிமையாய் சுற்றிக் கொண்டிருந்தாள் வாஹினி!!
கூடவே ஹரிதாவின் அந்தச் சொற்கள்!! அவள் மனதினில் ஒரு வெறியையே கிளப்பி இருந்தது. ஜித்துவுக்கு தான் இணை இல்லையா?
எப்பாடு பட்டாலும் ஒரு ஹேண்ட் பேக்கை ஆட்டையை போட்டு என்னாலும் இதை செய்யமுடியும் ஜித்துவுக்கு நான் இணை!! நான் மட்டும் தான் இணை என்று காட்ட விரும்பினாள் வாஹினி!!
அடுத்து அவள் போய் நின்றது ஜிகா மெகா முன்னிலையில்!! அவர்களுக்கு ஹரிதா போட்ட சபதம் எல்லாம் தெரியாது. தன் முன்னே அடக்க ஒடுக்கமாக விழியை திருதிருவென்று முழித்துக் கொண்டு நிற்கும் வாஹினியை பார்த்த ஜிகா.. "டேய் இந்த தெலுங்குக்கார அம்மாயி.. ஏதோ தப்புப் பண்ணிட்டா போல.. இல்ல நம்ம கிட்ட எதோ கேட்டு வந்திருக்கா போல!!" என்று யோசனையோடு மெகா காதை கடிக்க..
"அண்ணையா…" என்று இவள் இழுக்க..
என்ன வரப்போகிறதோ என்று இருவரும் "சொல்லு வதின..?" என்று கோரஸ் பாட..
அதில் கண்கள் மின்ன அவர்கள் முன்னால் அமர்ந்தவள் "ஐ நீட் ட்ரெயினிங்!!" என்றாள்.
"ட்ரெய்னிங் ஆஆ?? எதுக்கு ட்ரெய்னிங்? ஏன் ட்ரெய்னிங்?" மீண்டும் இருவரும் கோரஸாய்!!
"எஸ்!!" என்றவள் சுற்றுப்புறமும் ஒருமுறை பார்த்துவிட்டு ஹஸ்கி வாய்ஸில் "டூ ஸ்டீல்!!" என்றாள்.
"ஸ்டீலா??" இருவரும் முழிக்க.. அவள் சைகை செய்து காட்ட..
"என்னது திருடா வா??" என்று ஒரு சேர இருவரும் அதிர்ந்து எழும்ப..
"அவுனு!!" என்றாள் பால்வடியும் முகத்தோடு!!
"ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணையா.. ஹெல்ப் செய்யண்டி!!" என்றாள் இரு கைகளையும் கோர்த்து.. கூடவே ஹரிதாவுடனான சவாலையும் கூறினாள்.
மெகாவுக்கு மனது தாங்கவில்லை "சரி!!" என்று சொல்ல போனவனின் கையை பிடித்து அழுத்திய ஜிகா "இங்க பாரு!! உன்னை தெரியாம இங்கே ஜித்து கூட்டிட்டு வந்துட்டான். அதற்காகத்தான் நாங்களும் இவ்வளவு நாள் பொறுமையாக நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டு இருந்தோம். ஆனா இதெல்லாம் உனக்கு சரிவராது!! உன்னோட நடை உடை பாவனை இதெல்லாம் பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு பெரிய இடத்து பொண்ணு தானு தெரியுது!! ஏதோ ஹரிதா விளையாட்டுக்கு சொன்னதை நீ சீரியஸா எடுத்துக்காதே.. எதாவது கோல்மால் பண்ணி உன் வாழ்க்கையில நீயே பிரச்சனையை உண்டு பண்ணிக்காத!!" என்று ஜிகா சீரியஸாக அறிவுரையை பக்கம் பக்கமாக கூற... அதில் ஒற்றை வார்த்தை கூட புரியாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தாள் வாஹினி!!
"நோ ஸ்டீல்.. யூ ஃப்ரம் குட் அண்ட் வெல்தி ஃபேமிலி.. நோ ஹெல்ப் மீ அண்ட் ஹீ.." என்று ஜிகா அவளுக்குப் புரியும் விதத்தில் பேச.. அதைக்கேட்ட அவள் உதட்டைப் பிதுக்கி அழுக தயாராக..
"யாராரோ எதற்கெல்லாம் பீல் பண்ணி அழுவுறாங்க.. இவள பாருடா திருடுவதற்கு டிரெய்னிங் கொடுக்க மாட்டேன்னு சொன்னதற்கு அழுது ஒப்பாரி வைக்கிறா!!" என்று மெகாவிடம் கடிந்து கொண்டான் ஜிகா.
சட்டென்று மெகா ஜிகாவை சற்றுத்தள்ளி அழைத்துக்கொண்டு ஏதோ குசுகுசுவென்று பேச.. அதற்கு வேண்டாம் வேண்டாம் என்பது போல் ஜிகா தலையை ஆட்ட.. இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரியாமல் இவள் இங்கு தவியாய் தவித்தாள்.
ஒருவழியாக ஜிகாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்த மெகா, "ஹிமா.." என்று கூப்பிட.. அவளோ "வதின!!" என்றாள் அழுத்தமாக..
"இவளெல்லாம் திருந்தாத கேஸூ!!" என்று மெகாவை பார்த்து முறைத்தான் ஜிகா..
ஒரு வழியாக இருவரும் ஒரு நாள் முழுக்க எப்படி ஆட்களை கண்டுகொள்ள வேண்டும்? எப்படி அவர்களுக்கு தெரியாமலேயே ஃபாலோ செய்ய வேண்டும்? எவ்வாறு யாரும் கவனிக்காதவாறு ஹேண்ட் பேக்கை ஆட்டைய போட வேண்டும்? என்று அவளுக்கு ட்ரெய்னிங் மட்டுமல்ல பிரக்டிகல் கிளாஸ் எடுத்தனர்..
இவளுக்கு ப்ராக்டிகல் கொடுக்க என்று முதலில் இவர்கள் ஆளை வைத்து டம்மியாக நடிக்க செய்து.. அதன் பிறகு இவளுக்குத் தனியாக லைவ்வாக ஒரு ஹேண்ட் பேக்கை ஆட்டைய போட்டு காமிக்க.. வாஹினியோ பெரிய நீள விழிகள் விரித்துப் பார்த்தாள். அவர்கள் கனகச்சிதமாக செய்ய.. அவளால் நம்பவே முடியவில்லை.
"ஒன் டே ஹௌவ் டூ ஸ்டீல் ட்ரெய்னிங் ப்ரோக்ராம்!!" வெற்றிகரமாக முடிய.. மறுநாள் பாண்டிச்சேரி செல்வதாக மூவர் குழு உடன்படிக்கை எடுத்து உறங்க சென்றது. இரண்டு நாட்களாக ஜீத்து இரவில் மட்டுமே வருவதால் அவனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை.
மறுநாள் காலை ஜித்து எழுவதற்கு முன் கிளம்பி இருந்தவர்களும் பயபக்தியோடு சாமி எல்லாம் கும்பிட்டு வேட்டைக்கு கிளம்பினர்.. ஒற்றே ஒரு ஹேண்ட் பேக்கை வேட்டையாட..
போகிற வழியில் எதிர்ப்பட்ட ஹரிதாவிடம் "இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ!! இந்த ஹீமா.. இவங்களோட வதின.. பாண்டிச்சேரி பீச்ல ஒரு ஹேண்ட் பேக் ஆட்டையை போட்டு உன் ஆட்டத்தை கலைக்கல.. நான் ஜித்துவின் ராணி இல்ல!!" என்று அவள் சவால்விட.. மற்றது புரிந்ததோ இல்லையோ ஜித்துவின் ராணி என்பது மட்டும் ஹிரிதாவுக்கு புரிய.. காது மூக்கு வழியாக புகை வர நின்றிருந்தாள்.
போதாத குறைக்கு மெகாவும் ஜிகாவும் அவளிடம் "உன் சவாலில் ஜெயிக்க தான் பாண்டிச்சேரி பீச்சுக்கு போகிறோம்!" என்று கூறிவிட்டு சென்றனர்.
காலையில் நேரம் கழித்து எழுந்து ஜித்து மூவரையும் தேடினான்.
"வர வர அந்த பால் டப்பா தான் சின்ன பிள்ளைகளோடு மணலில் புரண்டு விளையாடடுறானா இந்த ரெண்டு எருமை மாடுகளும் அவ பின்னேதான் சுத்துறானுங்க.. எனக்குன்னு வந்து சேருது பாரு எல்லாம்!! இவனுங்க எல்லாம் வேலைக்கு போய் எத்தனை நாளாச்சு?? இவ வந்ததிலிருந்து அந்த பக்கமே எட்டிப் பார்க்கலை.. வரட்டும் இன்னைக்கு ஒரு நாள் சோத்தை போட விட்டால் தான் வயிறு சுருண்டு வேலைக்கு போகும் நாயுங்க!!" என்று திட்டியவாறு சரோ இட்லி கடையில் இவன் இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க..
"ஜித்து.. எங்கடா அந்த ஹிமா பாப்பாவை ஆள காணோம்?" என்றவாறு சமைத்துக் கொண்டிருந்தாள் சரோ.
"ஏன் காலைல அவ கொட்டி வரலையா?" என்றான் உணவில் கவனத்தோடு..
"இல்லடா.. எப்பொழுதும் இந்நேரத்துக்குள்ள அந்த புள்ள நாலு என்ன.. நானூறு தடவ வந்திட்டுப் போயிருக்கும். இன்னும் காணலையே இன்னைக்கு!! அந்த புள்ள வந்தால் அந்த இடமே அப்படியே கலகலப்பாக இருக்கும். ஒருத்தரை விடாது.. போற வரவங்களை எல்லாம் கூப்பிட்டு அவர் யாரு? இது ஏன்? ஏதுன்னு கேள்வி கேட்டு கொடையும்!! ஆனாலும் இப்படி துருதுருன்னு ஒரு பொம்பள புள்ள பக்கத்துல இருக்கறது நல்லாத்தான் இருக்கு!! அவ பேச்சு புரியலன்னாலும் சைகை மூலமே பேசறது எனக்கு ரொம்ப புடிக்கும்!!" என்று இதுநாள் வரை அந்தப் பகுதியில் இருக்கும் ஒருத்தரை கூட நல்ல வார்த்தை பேசாதே சரோ அவளை பற்றி பேச.. ஜித்து என்று ஆச்சரியமாக பார்க்க..
"ஆமா நீங்களும் தான் துண்ணுறீங்க துட்டு கொடுக்காம சில தபா.. அந்த பொண்ணு என் கூட இருந்து எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணும் தெரியுமா?? நாஸ்தா துண்ண வருவங்களுக்கு பரிமாறும்!! சின்ன சின்ன வேலை எல்லாம் எனக்கு செஞ்சு கொடுக்கும்!!" என்றாள் சரோ உள்ளார்ந்த நன்றி உணர்வோடு!!
"என்னது வேலையெல்லாம் செஞ்சாளா??" அவன் பார்த்தது அவளை அந்த அரண்மனையில் தான். கண்டிப்பாக அந்த அரண்மனையில் இருப்பவள் அல்லது அன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருப்பவள் என்று நினைத்து இருந்தவன், இதே கேட்டதும் திகைத்து விட்டான். மேலும் அவள் 'அவ வீட்டுக்கு போன் பண்ணி இங்க தான் இருக்கிறேன் என்று ஏன் சொல்லவில்லை?? என்கிட்டயும் மொபைல் இருக்கு. அந்த பையல்களிடமும் மொபைல் இருக்கு. வாங்கி பேசி இருக்கலாம் தானே?' என்று இவன் யோசனையோடு தன் வீட்டுக்கு நடந்து வர.. எதிர்ப்பட்ட ஹரிதாவோ ஜித்துவை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
இவன் தன் நினைவுகளையே உழன்று கொண்டு சென்று கொண்டிருந்ததால் ஹரிதாவை சிறிதும் கண்டு கொள்ளாமல் கடந்துவிட.. அது அவளுக்கு இன்னும் கோபத்தை தான் ஏற்படுத்தியது.
'எதிரில் நான் வருவது கூட பார்க்க முடியாத அளவுக்கு உன் ஞாபகத்தை அவள் ஆட்கொண்டு இருக்கிறாளா? இருடா!! அவளுக்கு இன்னிக்கி இருக்கு!!' என்று மனதில் வன்மத்தோடு நினைத்த ஹரிதா "ஜித்து.." என்று நக்கலாக அழைத்தாள் சென்றவனை..
முதல் அழைப்பில் எல்லாம் அவன் திரும்பவே இல்லை. இரண்டு மூன்று அழைப்புக்கு பிறகு திரும்பியவனை பார்த்து "என்ன உன் ராணி கூட கனவுலகத்தில் சஞ்சரிக்கிறியா? எல்லாம் கனவுல மட்டும் தான்!! நிஜத்துல ஒன்னும் நடக்காது" என்றாள்.
'இவ வேற?? நானே அவ கிட்ட மாட்டி முழிச்சிக்கிட்டு இருக்கேன். அவளை எப்படி பேக் பண்றது தான் நினைச்சு குழம்புறேன்' என்று இவன் யோசனையோடு அவளை பார்க்க..
"என்ன புரியலையா? உன் ஆளு இன்னைக்கு என்கிட்ட போட்ட சபதத்துக்காக ஒரே ஒரு ஹாண்ட் பேக்கை திருடுவதற்காக பாண்டிச்சேரி பீச் வரைக்கும் போய் இருக்கா.. கண்டிப்பா அவளால முடியாது! கூட்டத்தில் மாட்டி தர்ம அடி வாங்க போறா.. புடிச்சு போலீஸ்ல கொடுக்க போறாங்க. அதுக்கப்புறம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ ஜெயிலுக்குள்ள களி திங்க வேண்டியதுதான்" என்று எக்ததாளமாக கூறி விட்டு சென்றவளை, பார்த்தவனுக்கு வாஹினி செய்யப் போகும் விபரீதம் புரிய.. அடுத்த நிமிடம் அங்கு வந்து கொண்டிருந்தத ஒரு இளைஞனின் பைக்கை பிடுங்கி வேகமாக பாண்டிச்சேரியை நோக்கி சென்றான்.
அன்று வார நாட்கள் என்பதால் பாண்டிச்சேரி பீச்சில் பெரிதாக கூட்டம் எல்லாம் இல்லை. "கூட்டம் நிறைய இருந்தால் தான் கட் பண்ணி பேக்கை எடுத்து ஓட வசதியாக இருக்கும்" என்று கிளாஸ் எடுத்துக்கொண்டே மெகாவும் ஜிகாவும் செல்ல.. இவளுக்கோ உள்ளுக்குள் நடுங்கிப் போனது. ஏதோ ஒரு ஆர்வத்தில்.. வேகத்தில்.. வெறியில்.. சவால் விட்டு வந்து விட்டாலும், அடுத்தவர்களின் உரிமை பொருட்கள் மீது எப்படி கை வைப்பது என்று யோசனையோடு நின்றிருக்க..
எதிரில் தெரிந்த ஒரு பெண்ணை ஜிகா காட்டி "அத எடுத்துட்டு வா" என்று கூற.. இவளோ உற்றுப்பார்த்தாள். அருகில் இரு சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அன்புக் கணவரோடு நடந்து கொண்டிருந்தாள் அந்தப் பெண். "பாவம் ஏற்கனவே ரெண்டு சின்ன பிள்ளைங்க.. அந்த பிள்ளைகளுக்கு தேவையான எதாவது அதுக்குள்ள இருக்கும். வேண்டாம்!!" என்று அவள் மறுக்க..
அடுத்து வேற ஒரு இளம் பெண்ணை காட்ட "அந்த பெண்ணும் மேக் அப் தீங்க்ஸ் எல்லாம் வச்சு இருக்கும். இளம் பெண்ணுக்கு அது ரொம்ப முக்கியம்!!" என்று இவள் அதற்கும் தடைவிதிக்க..
இப்படியாக நாலஞ்சு பேர் ஏழெட்டு பேராக மாற மதியமே வந்துவிட்டது. "இவ வேலைக்கு ஆகமாட்டா!! நான் அப்பவே சொன்னேன்ல.. கிளம்பலாம்" என்று கோபத்தில் கத்தினான் ஜிகா. ஒற்றை பேக்கை களவாட ஐஸ்கிரீம் சுண்டல் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் இதற்குள் பல உள்ளே போய் இருந்த கடுகடுப்பு வேற அவனுக்கு..
ஒருவழியாக ஒரு இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க பெண்ணின் ஹேண்ட் பேக்கை காட்டி "எந்த காரணமும் சொல்லாமல் போய் கட் பண்ணிட்டு வர.. இல்ல உன்னை இங்கேயே விட்டுட்டு போயிடுவோம்!!" என்று சற்று தள்ளி நின்று கொண்டனர் இருவரும்.
இவளும் அவர்கள் கொடுத்த சின்ன கையடக்க கட்டரை எடுத்துக் கொண்டு.. தயங்கி தயங்கி பயந்து பயந்து சென்றாள். நெற்றியில் வியர்வை ஆறாக வழிந்தது. கைகள் எல்லாம் பயத்தில் குச்சிப்புடி கதகளி என்று நடனமாட.. மெதுவாக அந்த பெண் பின்னால் போக..
சட்டென்று யாரோ அவள் கையை பிடித்து தள்ளி இழுத்தனர். வேற யாரு நம்ம கள்வன் ஜித்து தான்!!
"பால் டப்பா.. உன்னை!!" என்று இரண்டு கொட்டுக்களை அவள் தலைக்கு இவன் பார்சல் செய்ய.. அவளோ "ஈசாரி தறிகி உந்தனு.. மத்தல ஒச்சி செடுவிஞ்சி.. விடுஞ்சினானே!!"
(இந்நேரம் வெட்டி இருப்பேன். இடையில் வந்து கெடுத்து விட்டானே!!" என்று தெலுங்கில் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தாள்.
"நீ என்ன வேணாலும் பேசு ஜித்து.. ரிஸ்க் எடுத்து ஒரு நாள் ட்ரைனிங் எல்லாம் எடுத்து வந்து இருக்கேன். ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு ஹேண்ட் பேக்!!" என்று இவள் கெஞ்ச..
சிகையை கோதிக் கொண்டவனும் "வேண்டாம்னு சொன்னா கேட்குற ஆளா நீ!! ஆனா நான் கண் ஜாடை காட்டியதும் ஓடி வந்திடனும்!" அவளோ அவனை மதிக்காமல் வேற ஒரு பெண்ணின் பேக்கை ஆட்டையை போட அருகில் சென்று கட் செய்து விட..
அதற்குள் அருகில் இருப்பவர்கள் பார்த்து "ஐயோ ஹேண்ட்பேக்.. திருடன்!! திருடி!!" என்று கூவினார்கள். அவளோ அதிர்ந்து செய்வதறியாது நின்றாள்.
முன்ன பின்ன செத்து இருந்தால் தான் சுடுகாடு தெரியும்!! அதே போல முன்னபின்ன திருடி பழக்கம் இருந்தால் தானே சட்டென்று ஓட தெரிந்திருக்கும்.
கண்களை அடித்து அடித்து கண் ஜாடை காட்டி ஓய்ந்து போன..
ஜித்து அவள் கையை பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான். அதற்குள் ஒரு பிசி அவர்களைத் துரத்த..
பழக்கமில்லாத ஓட்டம்.. கூடவே திருட போனது அவளுக்கு உள்ளே ஒரு பயத்தை அளிக்க.. அந்த மணல் பரப்பில் ஓட முடியாமல் ஓடி தடுமாறி தடுமாறி விழ.. அவளை தூக்க வந்த ஜித்துவையும் சேர்த்து.. காற்றடித்தால் பறந்து விடும் அளவிலிருந்த பிசி பிடித்துவிட்டார்.
"திருடவா செய்றிங்க இருங்க" என்று இருவர் கையிலும் விலங்கை மாட்டி யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார் அவர்.
"முட்டாள்!! முட்டாள்!! அதி முட்டாள்!! எல்லாம் உன்னால தாண்டி. அப்பவே சொன்னேன் இல்லையா நான்! கண் ஜாடை காட்டினதும் ஓடி வந்திட வேண்டியது தானே.. இப்போ நல்ல வசமா மாட்டிக்கிட்டோம். இந்த பிசி கிட்ட!!" என்று தன் அருகில் இருந்த அவளின் தலையில் நங்கு நங்கு என்று நான்கு கொட்டு கொட்டினான் அவன்..
அதோடு விட்டானா "எப்படியும் கையிலிருக்கும் ஆயிரம் ரூபாயையும் இந்த பிசி பிடுங்கிடுவான். இனி என்ன செய்வது சாப்பாட்டுக்கு?" என்று நல்ல கூவ வாசிகள் கழுவி கழுவி அவளை ஊத்த.. அவளோ மெழுகு பொம்மை போல மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றாளே தவிர பதில் பேசவில்லை..
அதற்காக அவள் அடக்க ஒடுக்கமான நல்ல பெண் என்றெல்லாம் கூறி விட முடியாது. அவள் பதில் பேசாததற்கு காரணம் அவளுக்கு இவன் மொழி புரியவில்லை என்பதால் தான்.
"ஐயோ.. நான் இப்ப என்ன செய்வேன் ஆண்டவா? ஒரு பாஷ தெரியாத பால் டப்பாவ என் கூட கோர்த்து விட்டுடியே??" என்று இருவர் கைகளையும் மாற்றப்பட்டிருந்த விலங்கோடு தன் கைகளை உயர்த்தி மேலே வேண்டினான் அவன்..
"போலீஸ்ல மாட்டி இருந்தாலும்.. கெத்தா ஒரு ஏசிபி.. ஒரு டிஐஜி.. இந்த மாதிரி ரேஞ்சுல மாட்டி இருக்கலாம். அதுவும் பிசி கிட்ட.. இந்த மாதிரி ஒரு நோஞ்சான் பிசி கிட்ட!! என்னை மாட்டி விட்டுடியேடி எல்லாம் உன்னால தான்!!" என்று திரும்பவும் வசை பாடினான் அவன்..
அவனின் அழகு தமிழை தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள் இந்த சுந்தர தெலுங்குக்காரி..
அதற்குள் ஜிகாவும் மெகாவும் அவர்களே கடந்து போவது போல பேசிக்கொண்டு இருந்த பிசியின் போனை பறித்து விட்டு ஓட.. இவர்களை மறந்து அவர்கள் பின்னே ஓடினார் அந்த பிசி.
அந்த கேப்பில் இருவரும் பாண்டிச்சேரி கடற்கரையில் இருந்து தப்பி அருகிலிருந்த ஒரு சவுக்குத் தோப்பிற்கு வந்து சேர்ந்தனர்.
சற்று ஆசுவாசமாக நின்றபோது "டேய்!! அது அந்த பொண்ணு தாண்டா நம்ம தேடி வந்தது" என்று ஒரு குரல் கேட்க.. குரல் வந்த திசையை இருவரும் பார்த்தனர். அங்கே தோப்பின் ரோடு ஓரத்தில் ஒரு காரிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி ஒரு கூட்டம் ஓடி வர.. அடுத்து எடுத்தனர் ஓட்டம்.
பின்னாடி அவர்கள் துரத்தி வர..
அந்த சவுக்குத் தோப்பில் உள்ளேயே ஓட முடியாமல் ஓடி களைத்து விழப்போனவளை இருகையாலும் தாங்கிக் கொண்டவன்.. அவர்களிடம் வேறொரு பக்கம் ஓடுவதை போல போக்கு காட்டி விட்டு.. காய்ந்த சவுக்கு மரத்தை குவித்து வைத்திருந்த இடைவெளிக்குள் வாஹினியோடு நுழைந்துக் கொண்டான்.
மிகவும் குறுகலான இடம். ஒற்றை ஆளே நுழைய சிரமப்படகிற மாதிரி இருந்த இடத்தில் தான் அமர்ந்து தன் மடிமீது அவளை அமர்த்தி "உஷ்!!" என்று அவள் நடுங்கும் இதழ்களில் தன் வலிமையான ஆள்காட்டி விரலை வைத்தான் ஜித்து.
அவளும் சுற்றுப்புறம் பார்த்து இழுத்து விடும் மூச்சைக் கூட மிக மிக மெதுவாக விட்டுக்கொண்டிருந்தாள். இவர்களைத் தேடி வந்த கூட்டம் இரண்டாக பிரிந்து ஒன்று ஜித்து ஏமாற்றச் சென்ற வழியே பின் தொடர.. மற்றொரு கூட்டமும் இந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. அதுவும் சவுக்க மரங்கள் வைத்திருந்த அந்த இடத்திலேயே அவர்களது காலடி ஓசைகள் கேட்டன. அவர்கள் நடமாட்டத்தால் சருகுகள் மிதிபட்டு ஒருவித அமானுஷ்ய சத்தத்தை அந்தி சாயந்த இருளில் தோற்றுவித்தது.
இவளோ பயத்தோடு அவனை நெஞ்சோடு அணைத்து இறுக கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
தடக் தடக் என ரயில் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்தது அவள் இதயம்!!
"டேய் இதுக்குள்ள இருக்காங்களா பாரு" என்று அந்த மரக்குவியலை காட்டி ஒருவன் ஆணையிட..
"இதுக்குள்ள ஒரு ஆளே நுழைய முடியாது டா.. எப்படி இரண்டு பேர் போக முடியும்?" என்று மற்றொருவன் கேட்க..
"செக் பண்ணி பாரு டா.. வென்று!!"
என்று முதலில் கேட்டவன் கடிந்து கொள்ள..
"இரு... இரு.. கத்தாதே!!" என்றவன், தன் கையில் வைத்திருந்த சுதிதயல் மாதிரி அமைப்பை அந்த மரக்குவியலுக்குள் விட..
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட ஜித்து சட்டென்று தன் மடியில் அமர்ந்தவளோடு தரையில் சரிந்து விட்டான்.
அந்த அமைப்பு உள்ளே சென்று சில மரங்களை தட்டிவிட்டு வர.. "டேய் இங்க யாரும் இல்லடா!" என்றான். "அப்படி எல்லாம் அவங்க சீக்கிரம் தப்பித்து இருக்க முடியாது. இங்கேயே தான் இருக்கணும் தேடுங்க.. தேடுங்க.." என்றான் மற்றொருவன்.
அவர்களது காலடிச்சத்தம் சற்று மெலிந்து வெகு தூரத்தில் கேட்கும் போது மெல்ல எழுந்தவன், தன்மீது பூக்குவியலென படுத்திருந்தவளை எழுப்பி பார்க்க அவளோ வலியில் முகத்தை சுளித்தாள்.
"என்னாச்சு!!" என்று பார்க்க..
அந்த சுத்தியலால் அடிபட்டு உடைந்த மரத்தின் செதில்கள் இரண்டு ஆழமாய் அவளது புஜத்தில் இறங்கி பதம் பார்த்திருந்தது.
"இரு இரு எடுத்து விடுறேன்.." என்றவன் மெல்ல அந்த செதிலில் கையை வைத்து இழுக்க.. இவள் ஆஆ என்று அலற ஆரம்பிக்க சட்டென்று அவள் வாயை பொத்தினான்.
"இவள் அலறினாள் நம் கதி அதோ கதிதான்!!" என்று உணர்ந்தவன் "கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ இது உள்ளே இருந்தா.. இன்னும் வலிதான்.. மெல்ல நான் வெளில எடுத்து விடுகிறேன்" என்று கிசுகிசுத்தவன் அதை உருவ முயல இப்பொழுது இன்னும் அதிகமாக அவளுக்கு வலித்தது.
அவளின் முகவாயை நிமிர்த்தினான். அவள் கண்களைப் பார்த்து.. "சீ மை ஐஸ்!!" என்றான் ஆழ்ந்த குரலில்..
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல மெல்ல அந்த கண்களை அவள் உற்றுப் பார்க்க..
காதல் நிறைந்த அவளது கண்கள் இரண்டும் அவனை நோக்கின அழகாய்.. ஆழமாய்!!
"ஷல் ஐ?" மெலிதான புன்னகையுடன் கேட்டான்.
அவனது கைகள் அவன் பட்டு கன்னங்களில் பதிந்து வருடியது..
மெல்ல மெல்ல அவனது கை அந்த செதிலை பிடுங்கும் நேரம்.. அவனது இதழ்களும் அவளது இதழ்களை கவ்வி இருந்நது அவள் ஒற்றை ஆ கூட வெளியே விடாமல்!!
