காதலி 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 6

 

சுந்தர தெலுங்கு ஒருபுறம்..

 

செம்மொழியாம் தமிழ் மறுபுறம்..

 

நடுவில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்க அமர்ந்திருந்தான் நம் கள்வன் ஜித்து!!

 

 

"நன்னு எவரைனு தலத்திவி...மா ஊர்லோ ஒச்சி அடுகி சூடூ நே எந்தா பெத்த ரௌடி னு தெலுசுனு...ஏமோ மாமா மாமானிசி பைன ஒச்சி படுசா..மரியாதகா பரித்தி போயிரோ...."

 

("ஏய்.. என்னை யாருனு நினைச்சுக்கிட்ட.. எங்க ஊர்ல வந்து கேட்டு பாரு நான் எவ்வளவு பெரிய ரவுடினு தெரியும்!! என்னமோ மாமா மாமான்னு மேல வந்து விழுற.. ஒழுங்கா ஓடிப் போயிடு!!") என்று நேற்று பயந்து நடுங்கியவள், இன்று தொடையை தட்டி வந்து பாரு வட்டப் பாறைக்கு என்று ஹரிதாவை நோக்கி சவால் விடுவதை நம்ப முடியாமல் பார்த்தான் ஜித்து.

 

வாஹினி சொல்லியதில் ரவுடி மட்டும்தான் ஹரிதாவுக்கு புரிந்தது.

 

"ஏய்.. என்னை யாருன்னு நெனைச்சே.. இந்த சிங்கார சென்னைய கேட்டு பாரு டி என் சிலுக்கு சுந்தரி.. இந்த ஹரிதாவோட அருமை பெருமை எப்படின்னு?? எல்லாம் சும்மா வெட்டி வெட்டி சொல்லும்.." என்று கையை கத்திரி போல செய்து…

 

 

வாஹினிக்கும் அவள் கையை காட்டி காட்டி கட் பண்ணி விடுவேன் என்று சொல்வதை பார்த்தவளுக்கு சினமிக அவளை உருத்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

 

 

"மூஞ்ச பாரு!! நல்லா மைதா மாவுல செஞ்சு வச்ச பொம்மை மாதிரி இருந்துக்கிட்டு.. இது ரவுடியாம்??" என்று உதட்டை சுளித்துக் கூறினாள் ஹரிதா.

 

 

இவள் பேசியது அவளுக்கு புரியவில்லை!! அவள் பேசியது அவளுக்கு புரியவில்லை!! ஆக மொத்தம் இருவர் பேசியதும் நம்ம ஜித்துக்கு விளங்கவில்லை.

 

 

சட்டென்று கீழே அமர்ந்திருந்தவன் சட்டையைப் பிடித்துத் தூக்கிய ஹரிதா.. காலரை கொத்தாக பிடித்து "இங்கே பாரு ஜித்து.. ஒழுங்கா இந்த மைதா மாவு எங்க இருந்து கூட்டிட்டு வந்தியா.. அங்கே போய் விட்டுட்டு வந்திரு.. இல்ல.. சில பல தரமான சம்பவங்க எல்லாம் இங்க நடக்கும்!!" என்று காளியாத்தா போல் கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினாள். 

 

 

'நான் மட்டும் என்ன ஆசைப்பட்டா கூட்டிட்டு வந்து கூட வச்சிருக்கேன்! கொண்டு போய்விடலாம்னு பார்த்தேன்.. என்னை விட்டுப் போய் தொலைய மாட்டேங்குது.. ஏழரை சனி போல!' என்று மனதுக்குள் மட்டுமே நினைத்துக் கொண்டான். வெளியில் அப்படி எல்லாம் முடியாது. என்ன இருந்தாலும் வாஹினி அவன் லவ்வர் இல்லையா?? என்று ஹரிதா முன் விட்டுக்கொடுக்க முடியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

 

 

இவர்கள் இருவரும் பேசியதை புரியாமல் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த வாஹினி சட்டென்று இருவருக்குள்ளும் இருந்து சிறிய இடைவெளியில் நுழைந்தாள்.

 

 

 

ஹரிதாவுக்கும் ஜித்துவுக்கும் இடையில் பெரிய இடைவெளி எல்லாம் இல்லை. கையால் தொட்டுக்கொள்ளும் தூரம் தான். அந்த சிறிய இடைவெளியில் உள்ளே நுழைந்து நிற்பவளை நம்ப முடியாமல் ஹரிதா விழி விரித்தாள் என்றால்.. ஜித்துவின் நிலையோ கவலைக்கிடம் தான்!!

 

 

 

சட்டென்று சிறு புயலாய் தன் நெஞ்சில் வந்து தாக்கிய அந்த பூபந்துகளின் மென்மையில் ஆஞ்சநேயருக்கே டஃப் கொடுக்கும் நம் ஜித்துவுக்கு மெல்லிய சலனம் மனதில்..

 

 

 

ஹரிதா.. "அடியே விடுடி என் மாமாவ!! சக்காளத்தி என்கிறது சரியாத்தான் இருக்கு! விலகுடி விளங்காதவளே!!" என்று ஜித்துவின் சட்டைக் காலரிலிருந்து கையை எடுக்காமல் அவள் கத்திக் கொண்டிருக்க..

 

 

"இதி நாதோட பாவா..நாகு மாத்துருமே முட்டிந்துங்கு ஹக்கு உந்தி..நூ வெள்ளுவே......

 

ஆயினுன முட்டின செய்ன நறிகேஸ்டானு!!" (இது என்னோட பாவா.. எனக்கு தான் மட்டும் தான் உரிமை தொட!! நீ போடி!! அவரைத் தொட்ட கையை வெட்டிடுவேன்!!) என்று முகத்தை மட்டும் திருப்பி ஹிரிதாவுக்கு பதில் கொடுத்தவள் ஜித்துவின் தாடையை தன் பக்கம் இழுத்து நன்னு எவரைனு தலத்திவி...மா ஊர்லோ ஒச்சி அடுகி சூடூ நே எந்தா பெத்த ரௌடி னு தெலுசுனு...ஏமோ மாமா மாமானிசி பைன ஒச்சி படுசா..மரியாதகா பரித்தி போயிரோ.... "அவுனு காதா பாவா?" (ஆமா இல்ல.. பாவா?") என்று கொஞ்சும் குமரி குழந்தையையாய் கொஞ்சிக் கேட்டாள்.

 

 

ஜித்துவோ.. பேச்சின்றி நம்மூர் அரசியல்வாதி சிலைகள் போல் நின்றிருக்க.. ஒரு பக்கம் ஹரிதா அவன் சட்டை காலரை பிடித்து.. தன் பக்கம் இழுத்து.. தன் வலிமையை காட்ட..

 

 

ஜித்துக்கும் ஹரிதாவுக்கும் இடையில் சான்ட்விச்சில் மாட்டிக்கொண்ட சீஸ் பீஸாய் நசுங்கிக் கொண்டிருந்தாள் வாஹினி.

 

 

இப்படி நெருக்க நெருக்க.. மூச்சுவிட திக்கி திணறி.. இடையில் வந்தவள், இடையிலிருந்து ஓடி விடுவாள் என்று ஹரிதா தன் பராக்கிரமத்தை காட்ட..

 

 

ஆனால் தன் முன்னால் நெருங்கி நின்று.. ஹரிதாவின் இழுப்பினால் இன்னும் இன்னும் தன் மார்போடு அணைத்து இருக்கும் வாஹினியை கண்டவனுக்கு மூச்சே நின்றது. அதுவும் இரு விழிகளும் ஒன்றையொன்று கவ்வி கொண்டு.. கட்டுண்டு நிற்க.. இதயங்களோ 

 

வெகு வேகமாக தன் துடிப்பை காட்ட.. ஹரிதா இவர்கள் நிலையறியாமல் இன்னும் வலுக் கொண்டு இழுக்க..

 

 

வாஹினி உடலின் முன் பாகம் வேக வேகமாக வந்து ஜித்துவின் நெஞ்சின் மீது மோத.. உள்ளாடைகள் எதுவுமின்றி அவனுடைய டீசர்ட்டை மட்டுமே அணிந்திருந்த அவளின் மென்பந்துகள்.. மெத் மெத்தென்று அவன் நெஞ்சில் பதிய.. ஜித்துவின் இளமை நரம்புகள் முறுக்கி.. புது இரத்தம் ஜிவ்வென்று பாய்ந்து.. உடல் முழுவதும் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தது.

 

 

''ஏய் பால் டப்பா.. விலகுடி.. முடியல!!" என்றான்‌ உணர்ச்சி மிகு குரலில் கரகரப்பாக..

 

 

அவனுக்கும் தடுமாற்றமாக இருந்தது. அவனும் உணர்வு உணர்ச்சிகள் கொண்ட சாதாரண ஆண்மகன் தான்!! பெரிய புத்தனோ.. சித்தனோ கிடையாது!! அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ.. 

 

 

அவன் மனதை விட உடல் வாஹினியின் இளமையினால் தூண்டப்பட்டு கொண்டே இருந்தது. தன் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்தினால்.. விளைவு விபரீதமாக இருக்குமே என்று தவிப்பாக இருந்தது ஜித்துவுக்கு!!

 

 

அவன் அணைப்பினால் படர்ந்த சூடு உடல் முழுவதும் ஊடுருவி கன்னங்களில் பரவி கண்கள் வழியாக வெளியேறியது வாஹினிக்கு. நேற்று இருந்த கலக்கம்.. பயம்.. இவன் எனக்கு இணையாகுமா? என்று கேள்வி எல்லாம் எங்கோ மனதில் மூலைக்கு ஓடி சென்று ஒளிந்து கொள்ள.. இன்று நிதர்சனமாய் தன் கண்முன்னே இருக்கும் இந்த ஜித்து மட்டுமே கண்கள் மட்டுமல்ல மனது முழுவதும் நிறைந்திருக்க..

 

 

பயம் கலந்த அதிர்வுடன் நீள்மூச்சு விட்டபடி அவன் கழுத்தை முன்பக்கமாக இறுக்கிக் கொண்டாள் வாஹினி. இருவரிலும் மோகத்துக்கான ஆவேசம் எழ.. உணர்ச்சிகளின் உச்சத் தூண்டலில் உடலின் மொத்த பாகங்களும் சிலிர்க்க.. அவளது காது மடலில் வந்து உரசிய அவனது மீசை அவளுள் அநேக தாபங்களை தோற்றுவித்தது.

 

 

"வேண்டான்டி பால் டப்பா.. இன்ப அவஸ்தையா இருக்கு. சுகவேதனையா இருக்கு. அப்புறம் என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது" என்றவன், அவளது முதுகில் தன் கைகளைப் படர விட்டு தன் நெஞ்சில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, அவளது காதில் கிசுகிசுத்தான் ரகசியமாய்.. 

 

 

ஜித்துவிடமிருந்து இந்த தெலுங்குக்காரியை பிரித்துவிட வேண்டும்!! இவள் என் சக்காளத்தி ஆகிவிட விடக்கூடாது!! என்று நினைத்த ஹரிதா.. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு வாஹினியை அவனிடம் இருந்து பிரிப்பதற்கு பதில் இன்னும் அவனிடம் நெருங்க வைத்து சேர்க்கும் வேலையை செவ்வனே செய்தாள்!!

 

 

அவள் இழுக்க.. இழுக்க.. அவர்களை அறியாமலேயே அவர்கள் இருவரும் தங்களுக்குள் தங்கள் உணர்ச்சிகளால் நெருங்கி நெருங்கி சென்று கொண்டிருந்தனர்.

 

 

சாப்பிட்டு விட்டு வந்த ஜிகாவும் மெகாவும் இந்த காட்சியை பார்த்து சட்டென்று தன் கண்களை மூடிக் கொண்டனர்.

 

 

கதவைத் திறந்த சத்தத்தில் நூலிலையாய் இருந்த மோக வலை எல்லாம் அறுபட.. நிதர்சனத்திற்கு வந்த ஜித்து "ஏய் ஹரிதா அவளை விடுடி!!" என்று அவளைத் திட்ட..

 

அவளோ "முடியாது.. முதலில் அவள இங்கிருந்து போய் சொல்லு.. இப்பவும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவியா மாமா நீ!!" என்று அவள் கத்த..

 

 

வாஹினி "நானும் போக முடியாது" என்று கூற.. மீண்டும் ஹரிதா விடம் ஜித்து கெஞ்ச.. "அதெல்லாம் என் மாமா சட்டையில் இருந்து கை எடுக்க மாட்டேன்!!" என்று அவளும் நிற்க..

 

 

 

ஜிகாவும் மெகாவுவும் வெட்கத்தில் நெளிந்து குழைந்து "டேய்.. ஜித்து அனுபவி டா அனுபவி!!" என்று கீழே பார்த்துக்கொண்டே சொன்னார்வர்களை பார்த்தவனும் "டேய்.. எருமைகளா வந்து பிரிச்சி விடுங்கடா!!" என்று கத்தினான்.

 

 

 

"ஒரு லவ்வர்ஸ் பிரிச்சாலே பாவம்!!

 

அதுவும் லவ்வர்ஸை பிரித்தால் மகா பாவம்!! எங்களுக்கு வேண்டாம் இந்த பாவம் எல்லாம்!! ஏற்கனவே நாங்களே ஜோடி இல்லாமல் சிங்களா சுத்துறோம். ஆனா.. உனக்கு ஒன்னுக்கு ரெண்டா கிடைச்சிருக்கு.. நல்ல ஜல்சா பண்ணு மகனே!! ஜல்சா பண்ணு ஜித்தா!!" என்று மெகா கூற..

 

 

"வந்தேன்!! ரெண்டு பேரையும்.." என்று அவன் உறும..

 

 

"அதான் ஏற்கனவே இரண்டு பேரையும்.. ம்ம்..ம்ம்..‌ம்ம்ம்ம்ம்.." என்று‌ ஜிகா ராகம் இழுக்க..

 

 

 

'இந்த சிறுக்கி என் சட்டை காலரை விடுவதாயில்ல. இந்த பால் டப்பாவும் என்னிடம் இருந்து பிரிவதாயில்லை!! இந்த இரண்டு பக்கிகளும்.. இந்த இரண்டு பொண்ணுங்க கிட்ட இருந்து என்னை காப்பத்த போவதாக இல்லை. என்ன செய்றது??' என்று யோசித்தவன், வாஹினியின் இடையைப் பற்றியிருந்த அவளது கையை சற்று மேலே உயர்த்தி அவளது கற்றை முடிகளுக்குள் கரங்களை நுழைத்து லேசாக சாய்த்து தன் அருகே கொண்டு வந்தவன், நிமிட நேரத்தில் கொய்திருந்தான் அவளது கோவைக்கனி இதழ்களை..

 

 

ஜிகாவும் மெகாவும் அரண்டு போய் "என்னடா செய்யுற..??" என்று கூவியவர்கள் அடுத்த நிமிடம் வெளியே ஓடிய விட்டார்கள்.

 

 

ஹரிதாவோ ஜித்துவின் செயலை ஜீரணிக்க முடியாமல்.. அவன் சட்டை காலரை பற்றியிருந்த அவளது கைகள் மெல்ல மெல்ல சரிந்து கீழே விழுந்தது. இருவரையும் வலி நிறைந்த கண்களோடு ஒருநிமிடம் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது. சட்டென அணை திறந்த வெள்ளம் போல அவை வெளிவர.. கண்ணீர் நிறைந்த கண்களோடு அவர்களைப் பார்த்துக்கொண்டே வெளியேறினாள் ஹரிதா.

 

 

 

வாஹினி ஏதோ ஒரு உரிமை உணர்வில் ஹரிதாவுடன் வாய் சண்டை இட்டுக் கொண்டிருந்தவள், இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை!! அதுவும் அவனது இந்த இதழ் இணைப்பில் சுற்றும் எல்லாம் மறந்தே போனது. அந்த சுற்றும் என்பது அவளது அன்னை தந்தை அரண்மனை சொந்த-பந்தங்கள் அனைத்தும் மறைந்து போக.. இந்த பிரபஞ்சத்தில் இவர்கள் இருவரும் மட்டுமே ஜீவித்து இருப்பதாய் ஒரு மாய உலகில் சஞ்சரித்தாள்.

 

 

அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காகவா?? தன்னை இறுக்கி அணைத்து மோகனமாய் நிற்கும் பெண்ணின் இனிய இம்சை இலிருந்து வெளிவருவதற்ககாவா??

 

இல்லை அவளது இளமை செழுமையினால் உண்டான உணர்ச்சிப் பிழம்பில்.. அதில் உண்டான பிரதிபலிப்பா?

 

 

எந்த ஒன்றோ அவனை, அவளது தேன் சிந்தும் இதழ்களை இணை தேட சொன்னது. இணையாய் இணைந்த இருவர் இதழ்களும்.. முதலில் அவற்றின் இணைவால் அதிர்ந்து.. பின் அவற்றின் இனிய மகரந்த ருசியில் சுகமாய் மிதந்து.. பிறகு இதழணைப்பில் இறுகி நிற்க..

 

 

 

ஜித்துவை எது தூண்டியதோ.. அவளின் இரு இதழ்களையும் தனித்தனியே கவ்விச் சுவைத்துக் கிறங்கி ஆழமாய் முத்தமிட்டு வேக மூச்சுடன் விடுவித்தான். அவளுக்கும் மூச்சிறைத்தது. கண் மூடி குனிந்து நின்றாள். கண்கள் கிறுகிறுத்துப் போனதைப் போலானது. பெரும் அதிர்வுடன் மூச்செறிந்தாள் மாது!!

 

 

இன்னும் அவன் முகம் அவள் முகத்துக்கு அருகில்..

 

அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன், அவளின் மணத்தை நுகர்ந்து உதடுகள் உரச முத்தமிட்டான். அதில் அவள் கழுத்து நரம்புகளின் அதிர.. நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் பார்வையில் கண் மூடி கிறங்கி நின்றிருந்த வாஹினியின் அழகிய வதனம் பட.. அவளின் முகம் ரசித்து கழுத்து குழியில் முத்தமிட்டான். அவள் உடல் விரைத்து நிற்க... சிறிது நேரம் அப்படியே கட்டுண்டு இருந்தனர் இருவரும். 

 

 

என்ன நினைத்தானோ அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் "சாரி..!!" என்று கிளம்பாத குரலில் உரைத்துவிட்டு விடுவிடுவென்று வெளியே சென்று விட்டான்.

 

 

 

ஹிரண்மையா அரண்மனை..

 

 

அன்று அரண்மனை வாசிகள் மட்டுமல்ல அந்த அரண்மனையில் செக்யூரிட்டி வேலை பார்ப்பவர்கள் அனைவரும் ஒருவித திக் திக் என்று அதி வேகமாக துடிக்கும் இதயத்தோடு பயத்தோடுதான் நின்றிருந்தனர்.

 

 

யாருக்காக இந்த பயமாம் இவர்களிடத்தில்?

 

 

அதற்குக் காரணம் கர்னல் நாகார்ஜுனா!!

 

 

சேவையாற்ற ராணுவத்தில் சேர்ந்தவர், கர்னல் ஆன பிறகு விருப்ப ஓய்வு பெற்று தனது சொந்த ஊருக்கே வந்து விட்டார். முற்காலத்தில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் இவரது மூதாதையரும் ஒன்று. இப்பொழுது இங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.

 

பரம்பரை பணக்காரர் தான். ஆனால் நாட்டுப்பற்று மீது கொண்ட தீராத காதலினால் ராணுவத்தில் சேர்ந்து.. வீரதீர சாகசங்கள் புரிந்து.. கர்னலாக பதவி ரொம்ப நாள் வகித்து இப்பொழுது விருப்ப ஓய்வு பெற்று.. என்.டி. செக்யூரிட்டி போர்ஸ் (என்.டி.எஸ்.எஃப்) என்ற செக்யூரிட்டி அமைப்பை நடத்தி வருகிறார்.

 

 

ஏடிஎம்.. பேங்க்.. ஜவுளி கடை.. நகை கடை இவற்றில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் சாதாரண செக்யூரிட்டி சர்வீஸை இவர் நடத்தவில்லை.

 

 

வி வி ஐ பி கள்.. அரசியல் பிரமுகர்கள்.. பெரும் பதவியில் இருப்பவர்கள்.. என்று இவருடைய செக்யூரிட்டி எல்லாம் ஹை லெவலில் தான். அதேபோல்தான் இவர்கள் அரண்மனைக்கும் இவருடைய என் டி செக்யூரிட்டி ஃபோர்ஸிலிருந்துதான் ஆட்கள் வேலைக்கு வருகின்றனர்.

 

 

இவரை கண்டு செக்யூரிட்டி ஆட்கள் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் அவ்வீட்டில் உள்ளவர்களும் பயப்படுவதற்கு என்ன காரணம்??

 

நட்பு தான்!!

 

 

அந்த நட்பு ஹிரண்மையா அப்பா ஸ்ரீனிவாஸ் அண்ட் நாகார்ஜுனுக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே மிக ஆழ்ந்த நட்பு இருவருக்குள்ளும்.

 

 

உடல்நலக் குறைவால் ஸ்ரீனிவாஸ் படுக்கையில் விழுந்த போதே.. தன் குடும்பத்தையும் தன் உயிருக்கு மேலான தன் மகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டார். அதற்கு ஒரு களங்கம் இதுநாள் வரை வராமல் பாதுகாத்து வந்தது நாகார்ஜுனா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

 

 

வாஹினி பிறந்தநாளின்போது தெலுங்கானா ஆந்திரா இரண்டு முதலமைச்சர்களும் சந்தித்துப் பேசும் ஒரு பெரிய மீட்டிங் சீக்ரெட்டாக நடைபெற்றது. அதற்கு என்னதான் வெளியில் இருந்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு அவர்கள் நடத்தும் அரசாங்கத்தின் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் அவ்வளவு நம்பிக்கை கிடையாது!! எனவே நாகார்ஜுனாவிடம் சொல்லி அவருடைய மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த வீரர்களை தங்களுக்கு பாதுகாப்பு கேட்டனர். அதற்கு தலைமை தாங்கி இவரும் சென்றுவிட..

 

 

 

அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வாஹினி மாயமானது!!

 

 

விஷயம் கேள்விப்பட்ட உடனேயே அவரால் அந்த மீட்டிங்கில் இருந்து வர முடியவில்லை. இன்று அவர் வருகிறார் என்ற செய்தியில் தான் ஒட்டுமொத்த அரண்மனையும் ஒரு பீதியுடன் இருந்தது.

 

 

முன்னால் சைலன்சர் பொருத்திய வண்டியில் சத்தமே இல்லாமல் வந்து இறங்கினார் கர்னல்.

 

 

வரிசையாக நின்று இருந்த அவரது கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லாம் அவரை பார்த்து சல்யூட் அடிக்க.. அனைவரையும் ஒரு முறைப்போடு வேக எட்டில் கடந்தவர் விடுவிடுவென்று படிகளில் ஏறினார். அறுபது வயது என்பதை கண்களால் படிக்க முடியாதப்படி நம் கண்களை கட்டிப் போடும் அவரது கட்டுமஸ்தான தேகம்!! கூர் லேசர் பார்வை எதிரில் உள்ளவரின் முகத்தை மட்டுமல்ல அகத்தையும் எளிதில் படித்து விடும் வல்லமை கொண்டது.

 

 

 

இவரை பார்த்ததும் அனிச்சை செயலாகவே நீலிமாவும் சோமையாவும் அனுமாலியும் எழுந்து நின்றனர். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த நாக பிரசாத் கூட எழுந்து நின்றான்.

 

 

 

அனைவரையும் ஒரு பார்வையால் அமர சொன்னவர் தானும் எதிரில் அமர்ந்து தாடையை பற்றியபடி கூர் பார்வைகளால் அங்கு உள்ளவர்களை துளைத்துக் கொண்டு இருந்தார்.

 

 

 

வாஹினி கானா போனதைப் பற்றி என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று புரியாமல் இவர்கள் தவித்துக் கொண்டிருக்க.. 

 

 

அவரோ "நீங்க எப்பொழுதுமே ரெட்டி சமுதாயத்துக்ககுள்ள தானே பொண்ணு எடுப்பீங்க.. கொடுப்பீங்க??" என்று கேட்டார்.

 

 

தன் குடும்பத்தில் நடக்கும் ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் இவருக்கு தெரியும். தெரிந்தும் எப்படி கேட்கிறாரே என்று பெருமூச்சு விட்ட சோமையா தன் அக்கா நீலிமாவை பார்த்தார்.

 

 

"அண்ணா.." என்று ஆரம்பித்தவர் அவர் இப்போது இருக்கும் மிடுக்கான தோற்றத்தில் அதை உள்ளுக்குள் முழுங்கி "கர்னல்.. உங்களுக்கே தெரியும் நான் பிறந்து வளர்ந்தது ரெட்டி சமுதாயம். நான் கல்யாணம் பண்ணிக் கொண்டது ராஜு குடும்பத்தில்தான். அதும் இல்லாம என் கணவரை எனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தது என் அண்ணாதான். அப்படி இருக்கும்போது என் மருமகளையும்.. என் மகனின் மனைவியாய் எங்கள் வீட்டு குலவதுவாய் கொண்டு வர நான் ஆசைப்பட்டதில் என்ன தப்பு?" என்று கேட்டார்.

 

 

 

"ம்ம்!!" என்று ஒற்றை தலை அசைப்பு மட்டுமே கர்னலிடம்!! இது அவர் ஏற்கனவே கணித்து தெரிந்த விஷயம் தான். அடுத்த அவரது பார்வை சோமையாவை பார்த்து பின் நாக பிரசாத்திடம் நிலைத்தது.

 

 

"அவர் எனக்கு ரொம்ப வருஷமா தெரியும் கர்னல். சவுத் இந்தியா ஃபுல்லா அவரது கட்டுமானத் தொழில். கூடவே நிறைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கு. வெளிநாட்டிக்கு இங்கே உள்ள பொருட்களை எக்ஸ்போர்ட் பண்ணிட்டு இருக்காரு. கூடவே இரண்டு கப்பல் இருக்கு" என்று நாக பிரசாத்தின் சொத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார் சோமையா.

 

 

 

"சொத்து மட்டும் இருந்தால் போதுமா சோமையா??" என்று கேட்டவரின் கேள்வியில் கோபத்தோடு நிமிர்ந்து பார்த்து முறைத்தான் நாக பிரசாத்.

 

 

"சார்!! சொத்து மட்டும் கிடையாது. நாங்களும் பாரம்பரியமா பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்.அதே மாதிரி இந்த சொத்துக்காகவும் நான் வாஹினியை கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைக்கல.. உண்மையிலேயே அவள் அழகுக்காகவும் குணத்துக்காகவும் தான்!!" என்றான் இதுவரை அவளிடம் பழகி பார்க்காத இந்த தொழிலதிபர்.

 

 

 

"சரி!!" என்று அன்று நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்ல சொன்னார். ஒவ்வொருவரையும் அவரவர் வாயிலிருந்து வந்தவற்றை இவர் கிரஹித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது ரிதிஷா எங்கே என்று கேட்க..

 

 

 

"அவந்திகா அக்காவுக்கு கொஞ்சம் மனநிலை நார்மலுக்கு வரல.. அதனால அவங்க ரெண்டு பேரையும் ஊட்டில இருக்கிற எங்க கெஸ்ட் ஹவுசுக்கு அனுப்பி வைத்திருக்கோம். இன்னும் அக்காவுக்கு வாஹினி காணா போனது தெரியாது. அவள் வெளிநாட்டில் அவசரமாக ஒரு ப்ராப்ளமா இருக்கிற கம்பெனியை பார்க்க போயிருக்கானு சொல்லி சமாளிச்சுக்கிட்டு இருக்கோம்!!" என்றார் அனுமாலி சோமையாவின் மனைவி.

 

 

 

"சரி!!" என்று தலையசைத்தவர் "இந்த வீட்டுக்கு இன்னும் செக்யூரிட்டி கார்டு டைட் பண்ண போறேன். அதேசமயம் பழைய ஆளுங்க எல்லாம் எடுத்துட்டு புது ஆளுங்க தான் வருவாங்க. இந்த வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்க கிட்ட முதல்ல பர்மிஷன் கேட்டுத்தான் உள்ள வரணும்…" சில கெடுபிடிகளை விதித்தபடி அவர் வெளியேறி சென்றவரின் முகம் முழுவதும் யோசனைதான்..

 

 

 

சிறிது நேரத்தில் அந்த அரண்மனையின் ரகசிய அறையில் இருந்து ரகசிய போன் வழியாக மற்றொருவருக்கு அழைக்கப்பட்டது.

 

 

 

"அவ எங்க இருக்கான்னு என்ன ஏதாவது தெரிந்ததா?" என்று கோபத்தோடு இந்த குரல் கேட்க..

 

 

"எல்லாம் தெரிஞ்சு தெரிஞ்சது!! சொன்னா நீ துள்ளி குதிப்ப சந்தோஷத்தில்!!" என்றது அந்தக் குரல்..

 

 

" அவ செத்துட்டானு செய்தி கிடைத்தால் தான் எனக்கு சந்தோசம்!!" என்றது இந்தக் குரல்..

 

 

"உயிர் மட்டும் போன ஆச்சா? அதைவிட பெரிதான மானம்?

 

போக வேணாமா??" என்று வன்மமாக கேட்டது அந்தக் குரல்..

 

 

"ஆனால் மானத்தை இழக்கும் அளவுக்கு.. இல்லை குறையும் அளவுக்கு எந்த செயலையும் செய்யமாட்டா வாஹினி!!" என்று ஸ்திரமாக கூறியது இந்த குரல்..

 

 

 

"அதெல்லாம் அப்போ!! இப்போ.. நிலைமையே வேறாக இருக்கிறதே!! ஒரு திருட்டு கூட்டத்துக்கு உள்ள இருக்கா!! இந்த அரண்மனையின் எதிர்கால ராணி!!" சிரித்தது அந்த குரல்..

 

 

 

"என்னது திருட்டு கூட்டத்துக்கூ கிட்டையா? அவங்க கிட்ட அவளை ஏன் விட்டு வச்சிருக்க.. எதாவது அவ உளறிட்டா எல்லாம் என்ன ஆகிறது? உனக்கு பொறுப்பை இல்லையா? என்று மீண்டும் சண்டையிட்டது இந்த குரல்..

 

 

"எல்லாம் எனக்கு தெரியும்!! அவளை எப்படி அமுக்குவது என்று.. எல்லார் முன்னாடியும் தலை குனிய வைத்து.. அ

வளே இந்த அரண்மனையும் வேண்டாம்.. சொத்தும் வேண்டாம்னு ஓடுற அளவுக்கு மாத்துற சூட்சுமம் எனக்கு தெரியும்!!" என்று கூறிய அந்த குரல் டக்கென்று போனை வைத்தது.

 

 

 

அந்தக் குரல்.. இந்தக் குரல்.. எந்தக் குரல்கள்?? 

 

 

தன்னை சுற்றி பிணைந்திருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்து மீள்வாளா வாஹினி???


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top