Share:
Notifications
Clear all

தேமன்மழை💞 (16)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

மானினி வருகை

இதம் தரும்

ஆலியாக மாறுமோ?

 

அம்மெசேஜ்ஜை கண்டவன் விழிகள் சில நாழிகை அவளையே பார்த்திருக்க, அவளும் வழியும் நீரினை துடைத்தபடி திரும்பி பார்த்தாள். பிரதீஷ் சட்டென திரும்பிக் கொள்ள, மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அவளிடம் இருந்து வந்தது.

 

அதனை காணும் முன்பே பிரதீஷ் அங்கிருந்து கிளம்பி விட்டான். தேடி வந்தவள் காதலை ஏற்காமல் தவறு செய்து விட்டோமோ என்னும் நினைவே, அவனை ஆட்கொண்டிருந்தது. காரை ஓட்டியப்படி யாதவ் நண்பன் முகத்தை தீவிரமாக பார்த்தான்.

 

வரும்போது இருந்த கலகலப்பும் பேச்சும் காற்றாக போயிருந்ததில், "என்ன டா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என வினவ..

 

"நத்திங் டா.. பெயின்னா இருக்கு.. நெக்ஸ்ட் எப்போ ஹாஸ்பிட்டல் போலாம்ன்னு யோசிக்கிறேன்."

 

"ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு.."

 

"ம்ம்.." என்றவன் முகமே சரியில்லாததை கவனித்தவன், "நிஜமா பெயின்னால தான் இப்படிருக்கயா? இல்லை.. வேற எதுவுமா?" என மீண்டும் ஐயத்தோடு கேட்டதில், பிரதீஷ் பல்லை இளித்து இல்லை என சமாளித்தான்.

 

ஒரே ஒரு காரணம் மட்டுமே அவளிடம் பேசாமல் இருக்க இது வரை தடையாக இருந்தது. பிருந்தாவிற்கு அவன் அளித்த நம்பிக்கையான வார்த்தை ஒன்றால் தான். அதனால் தான் ஆசை கொண்டவளை கூட நிராகரித்தான்.

 

தோழிகளும் அவளை காணவில்லை என தேட, அவளோ பிரதீஷ் சென்றதும் ஏமாற்றத்தின் வலி தாளாதவள் ஆர்த்தி வீட்டிற்கு கிளம்பி விட்டாள். ஆர்த்தியே ஹோட்டலினுள் இருக்க, அவளிடம் போன் செய்து வீட்டுக்கு செல்கிறேன் என்றவள் வேறேதும் கேட்காதே என அழுத்தமாய் கூறி விட்டாள்.

 

தோழிகள் தான் அவளை ஒருவாறு கடிந்தனர். விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவளின் குண நலனே மாறி விட்டது என்று கூட திட்டி தீர்த்தனர். நெருங்கிய தோழி ஆர்த்தி தான் அவளுக்கு பரிவாக பேசி, பேச்சை திசை திருப்பினாள்.

 

சில நிமிடங்கள் கழித்து தான் அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டான் பிரதீஷ்.

 

"Please don't leave me alone. The loneliness that i have went through is worst than hell. I don't know whether i will get a chance to meet you again or you will avoid me. I need to talk to you in personal."

 

(என்னை விட்டு போகதீங்க.

இது வரை இருந்த தனிமையே நரகத்தை விட மோசமா உணருறேன். மறுபடி உங்களை பாக்குற வாய்ப்பு கிடைக்குமா? இல்லை நீங்களே என்னை அவாய்ட் பண்ணிடுவீங்களான்னு தெரியல. உங்க கிட்ட தனியா பேசணும்.)

 

அவளும் தனது அக்காவிற்கு பார்த்த மாப்பிளை என தெரியாமல் தான் இப்படியொரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாள். தெரிந்திருந்தால் அவளின் மனநிலை மாறுமா என்பது அவன் மீதுள்ள காதலை பொறுத்தே.

 

இக்குறுஞ்செய்தி மேலும் அவன் நெஞ்சை கொய்ய, போன் செய்து விடலாம் கூட என நினைத்தான். பின்பு, வேண்டாம் என ஒரு யோசனை வேறு அவனை அழைக்கழிக்க, மனமோ அவளிடம் பேச சொல்லி ஆயிரம் முறை கூறியது.

 

அதற்குள் மீண்டுமொரு மெசேஜ் அவளிடம் இருந்து வந்தது. தான் இருக்கும் இடத்தை அனுப்பியவள், அவனை காண வேண்டும் என அனுப்பியதில் அவனுக்கு தான் அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை.

 

 

இரவு 10.07மணி

பிருந்தா மற்றும் பிரதீஷ் பற்றிய திருமண பேச்சு தான் எல்லோரின் உறக்கத்தை தொலைத்திருந்தது. பிருந்தாவை தவிர.

 

ராணி அவர்களோ, "இந்த மாப்பிளை வந்ததுல இருந்தே ஏதோ தட்டிக்கிட்டே போற மாதிரி இருக்கு. எதுக்கும் நம்ம ஜோசியர் கிட்ட பூ போட்டு பாக்க சொல்லவா?" என கணவரிடம் வினவ, பதில் கூறியது என்னவோ ஜெயமோகன் தான்.

 

"ஏன் ராணி நீ சங்கடப்படுற? எல்லாம் நல்லதா நடக்கும். நம்ம ஜோசியர் கிட்ட பாத்துட்டா நீ குழம்பாம இருப்ப தானே?" என அவருக்கு நம்பிக்கை அளிக்க..

 

அதற்குள் கெளதமன் முந்திக் கொண்டு, "மச்சான்.. இந்த பொம்பளைங்க எல்லாம் இப்படி தான்.. ரெண்டு கெட்ட மனசோட இருந்துட்டு, நம்மள நல்ல முடிவு எடுக்க விட மாட்டாங்க.." என்றவர் மனைவியை முறைத்து வைக்க, ராணி அவர்களோ கணவனை மனதுக்குள்ளே கடிந்து கொண்டார்.

 

"ஜோசியம் பஞ்சாங்கம் ஒருபக்கம் இருக்கட்டும். பொண்ணுக்கு வயசாகுது அது மறந்திடாதே. பிருந்தாவை கரையேத்துனா தான், நீ பெத்த இன்னொரு மாடை கரை சேக்க முடியும்."

 

"என்ன பேச்சுங்க இது பெத்த பிள்ளையை மாடுன்னு சொல்லிட்டு.."

 

"பின்னே.. அது மாடு மாதிரி வளந்துருக்கு தவிர என்ன அறிவு இருக்கு? விளம்பரத்துல நடிச்சு என்னை கேவலப்படுத்தி பாக்குற ஒரு பொண்ணை மாடுன்னு சொல்லாம, தங்கமயில்ன்னா சொல்ல முடியும்?" என்றதில் ராணி தான் மேலும் ஆரம்பித்து விடுவாரோ, என பயந்து "நாளைக்கி காலையில 8மணிக்கு போவோம்" என கூறி நழுவிக் கொண்டார்.

 

"கௌதமா நீயே இப்படி பேசாதே விட்டு தள்ளு. இந்த காலத்துல சில விஷயங்களை பிள்ளைகளுக்காக நாம மாத்திட்டு தான் வாழனும்." என அவர் நல்ல அறிவுரை கூற, ஜெயமோகனையே ஏற இறங்க பார்த்தார்.

 

"சரி சரி போய் தூங்குங்க. விடியவும் நல்ல முடிவு எடுப்போம்.." என்றவர் எண்ணங்கள் இரண்டாவது மகளை பற்றியே நிறைந்திருக்க, 'முதல இவளுக்கு தான் ஒரு மாப்பிளையை பாக்கணும்..' என புலம்பி சென்றவர் மனம் தான், அவள் பார்க்கவுள்ள மனம் கவர்ந்தவனை பற்றி அறியவில்லை.

 

ஆர்த்தி வீட்டின் அருகேயுள்ள கோவில் ஒன்றில் காப்பு கட்டியுள்ளாதல் தினமும் இரவு 11மணி வரை கும்மியடிப்பார்கள். அதை பார்த்து விட்டு வருகிறேன் என்றவள், அவனுக்கு லொகேஷன் அனுப்பியதில் வந்து கொண்டிருந்தான்.

 

யாரென அறியாதவளுக்கு உறுதி கூறியிருந்தாலும், மனதில் இருப்பவள் தனியே எங்கிருக்கிறாள்? அதுவும் அந்த ஊரில் தானே அவளுக்கு ஏற்கனவே பிரச்சனை என பதறியவன், பைக்கில் சீறி வந்து கொண்டிருந்தான்.

 

அவளுக்கு உண்மையில் அவள் வருவான் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. ஆனால், அவனை காண வேண்டும் என மனமோ தவித்தது.

 

பெண்கள் ஒருப்பக்கம் குலவையிட்டு, அம்மன் பாட்டு பாடி கும்மியடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தவள் இனி அவன் வரப்போவதில்லை என நினைத்து கிளம்பி விட்டாள். ராசிகா அவனது சித்தி வீட்டை தான் பிரதீஷ் வீடு என நினைத்து, அவனுக்கு லொகேஷன் அனுப்பியிருந்தாள்.

 

அடிப்பட்ட மகனை கண்டதில் இருந்து கல்யாணி தான் கண்ணை கசக்கி கொண்டிருந்தார். பாட்டியிடம் மட்டும் பேசியவன், அன்னை பெயரை சாவித்திரி அவர்கள் கூறியதற்கே பட்டென வைத்து விட்டான்.

 

"நான் என்ன அத்தை அப்படி இவனை பேசிட்டேன். இப்படியா.. என்னை வெறுத்து ஒதுக்குவான்.." என கல்யாணியோ ஆற்றாமை தாளாது பேசிட, சாவித்திரி பாட்டிக்கு புசுபுசுவேனா கோவம் வந்தது.

 

"நீயும், தெய்வானையும் சேர்ந்துட்டு அவனை கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க? மாலதி அம்மா இல்லாத பொண்ணு. சரி கல்யாணம் ஆகி புருஷனும் வேற வழியில போய்ட்டான்னு டைவர்ஸ் பண்ணிட்டு இருந்தவளை பெத்த புள்ளை கூட சேத்து வச்சு பேசியிருக்க. 

 

ஏன் எல்லாம் உனக்கு மறந்து போய்டுச்சா? இல்லை சுயநினைவு இல்லாம போய்டுச்சா? அடிப்பட்டதுக்கு அவன் ஒரு டாக்டர்ரா இருந்து அவளுக்கு மருந்து போட்டுருக்கான். அதை பாக்குறவங்க தப்பா பேசலாம். பெத்த தாய் நீயே.." என்றவர் தனக்குள் எழுந்த கோவத்தை அடக்கிக் கொள்ள, அவரை பாராது முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

மாலதி அவர்கள் வீட்டின் அருகே உள்ள பெண். அவனை விட மூன்று வயது கூடவே. கணவனோடு விவாகரத்து ஆகி விட்டதால், அப்பாவின் வீட்டிற்கு வந்து விட்டாள். படித்த படிப்பு தான் அவளுக்கு அதன் பின் துணையாக இருந்தது. 4வயது ஆண் குழந்தையை, அவள் அப்பாவிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்ல கிளம்பினாள்.

 

மாலதி விவாகரத்து ஆனது கேள்வியுற்று வெகுவாக நொந்தது பிரதீஷ் அன்னை தான். தாய் இல்லாதவளுக்கு அவ்வப்போது உணவு அளித்து, ஆறுதலாக பேசி வாழ்க்கைத்துணை இல்லாது வாழ முடியாது என அறிவுரை கூறுவார்.

 

அவளும் ஆண் துணை வேண்டாம் என இருந்தவள், அதன் பின் அவர் கூறும் அறிவுரையை நிதானித்து புரிந்து கொண்டாள். விசேஷம், கடை வீதி செல்வதற்கு கூட அவளை அழைத்துக் கொண்டு தான் செல்வார்கள்.

 

பிரதீஷ் படிப்பு முடிந்து, கோயம்புத்தூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு வேலைக்கு செல்ல தீர்மானிந்திருந்த நேரம் அவனது போதாத நேரமாகி போனது.

 

அன்றைய தினம் மகனை அழைத்துக் கொண்டு பைக்கில் மாலதி கடைவீதிக்கு சென்றவள், வரும் வழியில் கீழே விழுந்து விட்டனர். இருவருக்கும் கை காலில் சிராய்ப்பு அதிகமே.

 

எண்ணெய் வைத்து காயத்திற்கு போடும் மருந்து போட்டால் ஆறி விடும் என நினைத்து வந்து விட்டாள். ஆனாலும், மகன் வலி தாங்காது அழுது கொண்டிருந்தான்.

 

அவனை மட்டும் அவள் அப்பாவோடு மருத்துவமனை அனுப்பி விட்டாள். எதார்த்தமாக அப்போது பிரதீஷ் அவளுக்கு போன் செய்தான்.

 

எம்.பி.பி.எஸ் படிக்கும் காலகட்டத்தில் அவளோடு அதிக பேச்சு வார்த்தை இல்லை.

 

அவளோ மூன்று வயது வித்தியாசம் தானே என்று பெயர் சொல்லி அழைக்க கூற அதுவும் அவனுக்கு சரியென படவில்லை. வாங்க, போங்க என்றே பேசிக்கொண்டிருந்தான்.

 

விவாகரத்து கேள்வியுற்ற பின்பு தான் அவளது கவலை புரிந்து கொண்டு அடிக்கடி போனில் ஆறுதலாக பேசிக்கொள்வான். அப்போது கூட பெயர் சொல்லி அழைக்க மாட்டான்.

 

நண்பர்களாக பேசிக் கொண்ட பின்பு தான் உரிமையோடு, மேடம் என நக்கலடிக்க ஆரம்பித்தான்.

 

அடிபட்டதின் வலியில் அவளே எழுந்திருக்க முடியாமல் சேரில் அமர்ந்திருக்க, போன் அலறியப்படி இருந்தது. அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் நேரே வீட்டிற்கு வந்து விட்டான் பிரதீஷ்.

 

மாலதி காலை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்க, வீட்டிற்குள் வந்தவன் என்ன ஆனது என வினவ அவளோ அனைத்தையும் கூறி தான் முடித்தாள்.

 

பிரதீஷ் வீட்டில் இருந்த மருந்தை எடுத்துக் கொண்டு வந்து தந்து விட்டு, அவளுக்கு அதை போட சொல்லி தந்ததோடு வலிக்கான ஊசியையும் போட்டு விட்டான்.

 

சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அதன் பின் அவள் திருமணம் செய்து கொள்ள மனம் மாறிய விடயத்தை அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

 

அதில் மிக ஆனந்தம் கொண்டவன், சூப்பர் சூப்பர் என கூறி ஹை-பை அடித்துக் கொண்டான். அப்போது தான் பக்கத்து வீட்டினர் அவளை காண வந்திருந்தனர்.

 

மாலதி மற்றும் அண்டை வீட்டார் சிலர் சேர்ந்து நடத்தும் குலுக்கல் சீட்டிற்கு தவணை ரூபாய் தந்து செல்ல வந்தவர்கள், தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களை ஒருவாறு பார்த்து விட்டு பணத்தை தந்து விட்டு கிளம்பினர்.

 

"என்ன கூத்து இது? மகன் டாக்டர்ன்னு பெருமை பீத்திட்டு இருந்தாங்க கல்யாணி அம்மா. இவன் அவளோட கை தட்டி விளையாடிட்டு இருக்கான்.

 

அதுவும் அவளே புருஷனை விட்டுட்டு, பிள்ளையோட வந்து அப்பன் வீட்டுல ஒக்காந்துட்டா.

 

இவன் படிச்சுட்டு வேலைக்கு போறதை விட்டுட்டு, இவ வீட்டுக்கு வரதையே வேலையா வச்சிருக்கான்." என ஒருப்பெண் கூற..

 

மற்றொரு பெண்ணோ, "அதான் டி இப்போலாம் எவனையும் நம்ப முடியல. அதுவும் இந்த மாதிரி பொண்ணை தான் ரொம்ப பிடிக்கும் போல.." என்றவர் ஒரு மார்க்கமாக புன்னகைத்து செல்ல.

 

எதிரே கல்யாணி மற்றும் தெய்வானை வீட்டு வாசலில் வந்து இறங்குவதை கண்டு, இருவரில் ஒரு பெண் அவர்களை நோக்கி விரைந்தார்.

 

"என்ன கல்யாணி அம்மா கடைக்கா போயிட்டு வரீங்க?" என அவர் நக்கலாக கேட்க, "ம்ம்.. ஆமா நாளைக்கி சித்ரா பௌர்ணமி அதுக்கு பூஜை சாமான் வாங்கிட்டு வரோம்." என்றார் ஆட்டோவை கட் செய்து பணம் குடுத்தப்படி.

 

"மகன் பெரிய படிப்பு படிச்சுட்டு, பெரிய பெரிய வேலையெல்லாம் பாக்குறான் போல.." என அப்பெண் அழுத்தி கூறியது கல்யாணிக்கு புரியவில்லை. ஆனால், தெய்வானை என்னவென வினவ, அவரோ நடந்ததை கூறி நகர்ந்து விட்டார்.

 

கல்யாணி அவர்களை கடிந்து கொண்டு உள்ளே சென்றாலும், பெரிச்சாளி வேலை பார்க்க மனம் எத்தனித்தது. அதன்படி, மாலதி வீட்டிற்கு சென்றார் தெய்வானை.

 

"மேடம் இன்னேக்கி என்ன சமையல் பண்ணுனீங்க?"

 

"இன்னேக்கி ரொம்ப பெரிசா ஒண்ணுமில்ல. பாசிப்பயறு கடையல், சாதம், முட்டை பொரியல், வாழைக்காய் வறுவல், ரசம்" என்றவள் அவனுக்கு சாப்பாடை போட்டு எடுத்தே வந்து விட்டாள்.

 

அவனோ வேணாம் என மறுக்க, வம்படியாக உட்கார வைத்து சாப்பிட கூறினாள். சரி சாப்பிடாமல் சென்றால் தவறாக நினைப்பாள் என எண்ணியவன், சாப்பிட்டு விட்டு அதன் ருசி மெச்சி போய் அவளை பாராட்டிக் கொண்டிருந்தான்.

 

"உங்க சமையல் டேஸ்ட்டோ டேஸ்ட் தான் மேடம்.." என பாராட்டை பெற்றவள் பூரித்து போய், நிஜமாவாக எனக் கேட்க..

 

அவனும், "சமைச்ச கைக்கு காப்பு வாங்கி போடணும் சொல்லுவாங்கல. அப்படி இருக்கு உங்க சமையல்.." என்றான்.

 

"சும்மா சொல்லாதீங்க டாக்டர். ஏதோ வரதை செஞ்சேன்.."

 

"அடுத்த வாரம் மாப்பிளை வீடு வராங்க.." என்றவள் லேசான முறுவலோடு கூற, அவனுக்கு தான் மிக சந்தோஷமாக இருந்தது அதனை கேட்க..

 

"இதான் கல்யாண சாப்பாடா? இனி இப்படி ருசியான சாப்பாடு சப்பிட, உங்க வீட்டுக்கு தான் தேடி வரணும்.." என்றவன் பாதி சாப்பிட்ட தட்டோடு போதும் என எழுந்து கிளம்பினான்.

 

அவளும் அவனுக்கு போதும் என்பதால் மறுக்கவில்லை. அவள் அப்பாவும் வந்திட, அவரிடம் பேசிவிட்டு விடை பெற்றுக்கொண்டான்.

 

மாலதி மேலிருந்து, "அப்போ தங்க காப்பு..?" என நக்கலாக கேட்க, அவனும் இறங்கிக் கொண்டே "ஆர்டர் குடுத்துடலாம்.." என்றான் சிரிப்பாக.

 

இதை செவிட்டு பெரிச்சாளியான அவனது சித்தி, முன்பு அவர்கள் உரையாடலை ஜன்னல் வழி பார்த்ததோடு அனைத்தையும் மறைந்து நின்று ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அதுவும் அவள் வீட்டிற்கு கீழ் உள்ளவர் வீட்டில் ஒளிந்து நின்று இறுதி உரையாடலை அரைகுறையாக புரிந்து கொண்டு கட்டுக்கதை கட்டி விட்டார் கல்யாணியிடம்.

 

தேன்மழை💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top