காதலி 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 5

 

 

எப்பொழுதும் ஜித்து ஜிகா மெகாவுக்கு காலை என்பதே பத்து மணிக்கு மேல தான்!! அதுவும் வேலை இருந்தால் மட்டும் தான் விடிய காலை முழிப்பது எல்லாம்.‌

 

 

ஜிகாவும் மெகாவும் தங்களை மறந்து பப்பரக்கா என்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

 

பல நாட்களாக ஹரிதா ஜித்துவை ஒருதலையாக காதலிக்கிறாள் தான்!! அந்த ஒருதலை காதல் ஊரே அறிந்த ரகசியம்!!

 

 

 

காலையில் வேலைக்கு (அவளது ஹாண்ட் பாக் பறிக்கும் வேலையைத்தான்!! செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா??) செல்ல கிளம்பியவள் ஜித்துவின் வீட்டை கடக்கும்போது.. காலையில் அவனைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று அவள் காதல் மனம் விருப்ப மனு போட.. அதை அவளது அறிவு நிராகரிக்காமல் ஆக்செப்ட் செய்துவிட.. அடுத்த கணம் அவனது வீட்டுக்குள் புகுந்து விட்டாள்.

 

 

 ஹாலில் ஆளுக்கு ஒரு மூலையில் கிடந்த இருவரையும் பார்த்து "கல்யாணம் பண்ணிட்டு வந்தவுடன் இவனுக ரெண்டு பேரையும் துரத்திவிடனும். இவனுங்கள வச்சிகிட்டு என் மாமா கூட ரொமான்ஸ் பண்ண முடியாது. எப்படி படுத்து தூங்குறானுங்க பாரு!! பக்கி பயலுக!!" என்று இருவரையும் திட்டிவிட்டு, ஜித்து மட்டும் தானே படுத்திருப்பான் என்ற நினைப்பில் அறை கதவை திறக்க..

 

 

 

அங்கே ஜித்துவின் உடையை ஒரு பெண் அணிந்து அவனது கட்டிலில் படுத்து இருக்க.. அந்தப் பெண்ணை அணைத்தாற் போன்று ஜித்துவும் படுத்திருக்க.. அந்த பெண்ணின் கைகள் உரிமையோடு ஜித்துவின் இடையை இறுக்கி வளைத்து இருக்க.. கட்டினவளை போல அவனது பரந்த உருண்டு திரண்டு புஜங்களில் அவளது தலையை வைத்து இருக்க..

 

பார்த்துக்கொண்டிருந்த ஹரிதாவுக்கு பத்தி கொண்டுவர..

 

 

 

"அடியே!!! சக்காளத்தி!! யாரடி நீ??" என்று அவள் கத்திய கத்தலில் உறங்கிக்கொண்டிருந்த ஜிகா.. மெகா மட்டுமல்ல.. அந்த வீட்டை சுற்றி இருந்த நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அனைவரும் குடுகுடுவென என்ன பிரச்சினையஃ என்று ஜித்துவின் வீட்டுக்குள் நுழைந்து இருந்தனர்.

 

 

 

ஆனால் கட்டிலில் கட்டுண்டு இருந்தவர்களோ நேற்று தந்த அயர்வினாலும் களைப்பினாலும் தூக்கம் கலையாமல் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

 

 

 

சத்தம் கேட்டு விழித்த ஜிகாவும் மெகாவும் அறைக்குள் ஓடிவந்து பார்க்க.. ஹரிதாவுக்கு குறையாத அதிர்ச்சி அவர்கள் முகத்திலும்!!

 

 

"டேய்.. இந்த பொண்ணை கொண்டு போய் விட்டுட்டு வரேன் தானடா அழைச்சிட்டுப் போனான். என்னடா திரும்பி வந்துட்டான்? என்னடா இப்படி படுத்திருக்கான் அந்த பொண்ணு கட்டிப்பிடிச்சுக்கிட்டு!!" என்று இவர்கள் இருவரும் தங்களுக்குள் குசுகுசுவென்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

 

 

அதற்குள் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பத்து பதினைந்து பேர் வந்து பார்க்க அவர்களுக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதுவும் அல்லாமல் யாருடைய பர்சனல் வாழ்க்கையிலும் யாரும் தலையிடுவதும் இல்லை.

 

 

 

"முதல்ல வா ஹரிதா.. இப்படித்தான் வந்து பாத்துக்கிட்டு நிப்பியா?" என்று அவள் கையை பிடித்து வெளியே அழைத்துவர.. அவளோ வர மாட்டேன் என்பதை அடம்பிடிக்க..

 

 

"அந்தரங்கத்துக்குள்ள அவசரப்பட்டு நுழையக்கூடாது!!" என்று அறிவிப்பாய் கூறி, ஜிகாவும் மெகாவும் வெளியே அழைத்து வந்தனர் அவளை.

 

 

அப்போதும் வீட்டை விட்டு நகர மாட்டேன் என்று நின்ளாள். அதற்குள் மெகா சென்று ஜித்துவை உலுக்கி எழுப்ப அதிர்ந்து விழித்தவன் அருகிலிருந்த பாவையை பார்த்து அவனும் இருந்த நிலையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான். வாஹினி உலுக்கினான்.

 

 

"ஏ பால் டப்பா!! எழுந்துறு டி!!" என்று!!

 

 

அதற்குள் நடு ஹாலில் குத்த வைத்து உட்கார்ந்து குமுறி குமுறி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் ஹரிதா.

 

 

 

ஜித்து சாதாரணமாக கண்ட பெண்களையெல்லாம் இவ்வாறு அழைத்து வருவான் கிடையாது. அப்படி இந்த பெண்ணோடு உரிமையோடு இருக்கிறான் என்றால்.. ஒன்று அந்த பெண் அவனின் காதலியாக இல்லை வருங்கால மனைவியாக மட்டுமே இருக்க முடியும் என்று நம்பிக்கை அங்கிருந்தவர்கள் முகத்தில் நன்றாக தெரிந்தது.

 

 

 

"நான் என்னன்னு சொல்லுவேன்? ஏதுன்னு சொல்லுவேன்? என் மாமாவ நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு அன்பாக பாசமாக.. பார்த்து பார்த்து சிக்கனும் மட்டனும் போட்டு வளர்த்தேனே!! அதுக்கு எத்தனை ஹேண்ட் பேக்கை ஆட்டைய போட்டு இருப்பேன்!! இப்படி எவளோ ஒருத்தி அர்த்தராத்திரியில் வந்து அத்தனையும் அடிச்சிட்டு போயிட்டாளே!!" என்று மூக்கை சிந்தி அருகிலிருந்து ஜிகாவின் சட்டையில் தடவினாள்.

 

 

"சீ பே!! எரும மாடு!!" என்று அவன் எழுந்து அந்தப் பக்கம் ஓடி விட்டான்.

 

 

அதற்குள் எழுந்து வந்த ஜித்து "சத்தம் போடாதடா டி வாயை மூடு!!" என்று அதட்ட..

 

 

"சொல்லுவீக.. சொல்லுவீக.. என் வாய மூடிட்டுனு.. ஆனா நீ ரூம் கூட மூடாம அவ கூட.. அய்யோ!! அய்யோ!!" என்று அவள் வாயில் அடித்துக் கொள்ள..

 

 

ஹரிதாவின் மீது அவ்வளவாக பிடித்தம் எல்லாம் ஜித்துக்கு இல்லை. சுற்றி சுற்றி வருபவளிடம் சலுகையாக எதுவும் எடுத்துக் கொண்டதும் இல்லை. அவளாக சமைத்து தருவதை சாப்பிட்டு மட்டும் கொள்வான். இன்று ஏனோ இதை வைத்து அவளை தள்ளி நிற்க வைக்க ஆசை கொண்டவன், "அதான் தெரியுது இல்ல.. அப்புறம் என்ன? அவ என்னோட லவ்வர்!! அதுவும் ஆந்திராகாரி நல்ல காரசாரமா இருப்பா!!" என்று அவன் கண்ணடித்து சொன்ன விதத்தில் அவன் அந்தரங்கத்தை கடை பரப்ப..

 

 

 

"அடியே.. என் சக்காளத்தி.. தெலுங்கு காரியா? இரு பெரிய அருவாள எடுத்து அவ சிண்டை அறுத்து இந்த ஊரை விட்டே துரத்துறேனா இல்லையா பாரு! இந்த சென்னைகாரியா? அந்த தெலுங்கு காரியானு நான் பாக்குறேன்!!"

 

என்றவள் தன் தோளில் கிடந்த ஷாலை இடுப்பில் கட்டிக் கொண்டு சண்டைக்கு வலுவாக நிற்க.. தூங்கி எழுந்து வந்த வாஹினி அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தையும் ஹரிதாவையும் பார்த்து என்ன என்று புரியாமல் அருகில் நின்ற மெகாவை விரலால் சுரண்டி கண்களாலேயே என்ன என்று கேட்டாள்.

 

 

அவள் முகத்தில் இருந்த காயங்களை கண்டு ஏதோ நேத்து நடந்து இருக்கு. அதுதான் ஜித்துக் கூட்டிட்டு வந்துட்டான் போல.. என்று நினைத்த மெகா, ஹரிதா கைகாட்டி "ஜித்து.. ஒன்சைடு லவ்வர்!! டிஷ்யூம் டிஷ்யூம்.. ஃபைட்டிங்!!"என்றான்.

 

 

 

அப்போது தான் அவளுக்கும் புரிந்தது தாங்கள் படுத்து இருந்த நிலையை பார்த்து விட்டு இந்த பெண் இப்படி கத்துகிறாள் என்று!! எங்கிருந்து தான் அவளுக்குள்ளும் ஒரு உரிமை உணர்வு வந்ததோ?? ஜித்து அருகில் நின்று "(பாவா.. யார் இவ எதுக்கு இப்படி பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு நிற்கிறா?)" 

 

பாவா ..யவரு இதி தேனிகு இட்ட பிச்சி லாக அருஸ்டுந்தி?

 

என்று கண்களை சிமிட்டி பாவம் போல தெலுங்கில் கேட்க..

 

 

 

"வாடி வா.. அவன் என் மாமா டி!!" என்று தன் முன்னால் சிலிர்த்துக் கொண்டு நிற்கும் ஹரிதாகவை பார்த்தவள் இன்னும் ஜித்தோடு இணைந்து..

 

 

"ஈ நா பாவா!! நாகு மாத்துருமே பாவா!! மத்தல ஒத்தே ஒக்கே தொவ்வு!!" (இவரு என்‌ பாவா!! எனக்கு மட்டும்தான் பாவா!! நடுவுல வந்த ஒரே வெட்டு!!) என்று இவள் தெலுங்கில் கத்த..

 

 

 

தெலுங்கு தெரியாத ஹரிதா வாயில் குப்பத்து பாச கெட்ட கெட்ட வார்த்தைகளாய் வண்டி வண்டியாக வந்து விழ..

 

 

தமிழ் புரியாத வாஹினி வாயில் தெலுங்கு சீனி பட்டாசாக தெலுங்கு வெடித்து சிதற..

 

 

மெல்ல ஜிகாவும் மெகாவும் "ஒன்ன வச்சே சமாளிக்க முடியாது.. இதில இரண்டு?? சமாளி மாப்பிள்ளை!!" என்று அவர்கள் சவுண்டு சரோ கடையை நோக்கி நாஸ்தா துண்ண கிளம்பிவிட்டார்கள். கூட்டமும் மெல்ல மெல்லக் கலைந்து விட்டது.

 

 

 

சீனி பட்டாசாய் சென்னைக்காரி ஒருபுறம்..

 

 

சற்றும் சளைக்காத தெலுங்கு பஜாரி மறுபுறம்..

 

 

நடுவில் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான் ஜித்து!!

 

 

அப்படி என்ன தான் நடந்தது??

 

வாஹினியின் இந்த திடீர் உரிமையுணர்வுக்கு காரணம் என்ன??

 

 

வாங்க.. வாங்க.. அல்லாரும் ஒரு ஃப்ளாஷ்பேக் போய்டு வரலாம்..

 

ரெடி ஜூட்…

 

 

நேற்று இரவு.. 

 

 

ஜித்துவின் டி-ஷர்ட் கொஞ்சமல்ல ரொம்பவே லூசாக இருந்தது இந்த ஜீரோ இடுப்புக்காரி பணக்காரிக்கு!!

 

 

டி-ஷர்ட்டே இந்த நிலைமை என்றால் அவனின் பேண்ட் பற்றி கேட்கவும் வேண்டுமா?

 

 

ஒரு கையால் பேண்ட் விழுந்துவிடாமல் இருக்க பிடித்துக்கொண்டு.. மறு கையால் டி-ஷர்ட்டை கழுத்து பகுதியோடு சேர்த்து பிடித்து அப்பாவியை நின்றுகொண்டிருந்த வாஹினியை பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு..

 

 

 

அவனின் சிரிப்பு அவளுக்கு கோபத்தை மூட்ட.. "ரே.. ஏண்டா சிரிக்கிற?" என்று ஆத்திரத்தல் உணர்ச்சிவசப்பட்டு பேண்ட்டில் இருந்து அவள் கையை எடுக்க.. அதுவோ "ஸ்ஸ்வைங்ங்…" என்று வழுக்கி கீழே விழுந்தது அவள் பாதங்கள் அருகே..

 

 

டி-ஷர்ட் அவளது முட்டி வரை இருக்க.. அதன் கீழே தெரிந்த வாழைத்தண்டு வெண்ணிற கால்களை பார்ப்பவர்களுக்கு பித்துப் பிடிக்கும். ஆனால் ஜித்தோ அனுமானுக்கு தம்பியாய் அதை கண்டுகொள்ளாமல், அவள் அருகே வந்து "அறிவு இருக்கா.. பால் டப்பா உனக்கு? இப்படி தான் ஷோ காமிச்சிட்டு இருப்பியா? இரு வரேன்!" என்று தனது பெல்ட்டை எடுத்து வந்து கொடுத்தான்.

 

 

 

அவளுக்கும் அந்த பெல்ட்டை கொண்டு எப்படி மாட்டுவது என்று புரியாமல் அவனை பார்த்து இன்னும் விழிக்க…

 

 

"கொஞ்சம் இரு!!" என்றவன்.. "பேண்ட்டை இடுப்பு வரை தூக்கு!!" என்க..

 

 

"என்ன?" என்று புரியாமல் கேட்டவளை..

 

 

"இந்த பாசை தெரியாத பால் டப்பா வைத்து சமாளிக்கிறத்துக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிவிடும் போல!!" என்றான் சட்டென்று குனிந்து அவள் பாதங்கள் அருகே கிடந்த பேண்டை சர்ரென்று மேலே தூக்கினான்.

 

 

அவள் விழிகளோ அதிர்ச்சியில் வெளியே வந்து குதித்து விடும் அளவுக்கு விழிகளை விரிக்க..

 

 

விரிந்த அவளது நீல நயனங்களில் தெரிந்த அவனது பிம்பமே அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தை அப்பட்டமாக பறைசாற்றியது.

 

 

அவள் கண்ணுக்குள் தெரிந்த அவனின் பிம்பத்தை இவனும் உற்றுநோக்க.. அவளோ அவனின் நெருக்கத்தை.. ஸ்பரிசத்தை கூடவே அவனின் வாசத்தை உணர்ந்து முயங்கி சிலையென சமைந்து நின்றாள்.

 

 

ஒரு சில நொடிகள் மட்டுமே அந்த உற்றுநோக்கல் ஜித்துக்கு!! சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவன், "பால் டப்பா…" என்க..

 

அவளோ மொழி அறியாத குழந்தை போல திருதிருவென்று அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

 

 

"மட்டி!! மட்டி!!" என்று அவன் தலையில் இரண்டு தட்டு தட்டியவன் ஒரு கையால் அவளது பேண்டை இடுப்பு வரை பிடித்துக் கொண்டு மறுகையால் அவள் அணிந்திருந்த டி-ஷர்ட்டை மேலே உயர்த்த சட்டென சிலைக்கு உயிர் வந்தது போல அவள் டீ-ஷர்ட்டை இறுகப்பற்றி அவனை தவிப்புடன் பார்த்தாள்.

 

 

 

"லூசு.. லூசு!! இதை இந்த இடத்துல டைட்டா பிடிச்சுக்கோ!" என்று இடுப்பிலிருந்து சில இன்ஞ்கள் உயரே டி-ஷர்ட்டை தூக்கி பிடித்தவன், அவள் அப்பவும் விழிப்பதை பார்த்து.. அவன் அந்த டிஷர்ட்டைப் சுருட்டி இறுக்கி முடித்துவிட்ட மாதிரி நாபி குழியின் சில இன்ச் தூரத்தில் செய்துவிட்டு கீழே குனிந்தவனுக்கு சற்று மூச்சுமுட்ட தான் செய்தது.

 

 

 

ஒரு பெண்ணின் அருகாமை அதுவும் அவளது வளவளப்பான இடைப்பகுதி.. சிற்றிடையின் சிங்காரத்தை இன்னும் மெருகேற்றுவது போல மாணிக்கக் கல்லென நபி குழி.. சுழித்து வளைந்து அந்த குட்டி தடாகத்தில் அவனை மூழ்க அடித்தது.

 

 

வேகவேகமாக பெரு மூச்சை விட்டவன்.. "பால் டப்பா.. ஒருவேளை உருப்படியா பண்ண தெரிதா பாரு!! இதைல்லாம் எப்படி வளரந்தாங்கலோ அவங்க வீட்டுல!!" என்று தனது தவிப்பை மறைக்க அவளை சாடினான்.

 

 

 

அவளது இடை பற்றி தன் கையிலிருந்த டெல்டை அந்தப் பேண்ட்டின் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைத்து நுழைத்து அவன் வெளி வர… அதில் அவன் கையின் வெப்பம் மங்கையவள் உடலை தகிக்க செய்தது. ஏற்கனவே அவன் மீது கொண்ட ஏதோவொரு இனம் தெரியாத ஈர்ப்பு விசை அவனிடம் இன்னும் இன்னும் ஈர்க்க தான் செய்தது. உரிமையோடு அவள் இடை பற்றிய அவனது முரட்டு கைகளின் அடர் ரோமங்கள் அவளது மெல்லிடையில் உரச.. உரச.. தவித்து தகித்து கொதித்து நின்றாள் மாது.. இதழ்களை அழுந்த மேற்பற்களால் கடித்தப்படி!!

 

 

 

அவளை அணைத்தாற் போல நின்று இரு கைகளும் அவளது இருபுறமும் இடையை வளைத்து நிற்க.. அவளது மென்மைகள் மென்மையாக அவனது விரிந்து பரந்த மார்பில் தொட்டு தொட்டு நலம் விசாரிக்க.. விசித்திரமான வகையில் அது கோபத்தை அருவுறுப்பை ஊட்டாமல்.. அவளுக்கு ஒரு வித கிளர்ச்சியை கிளப்பியது.

 

 

மயக்கும் மாய கண்ணனாய் அவன்!!

 

மயங்கும் கோகுல ராதையாய் அவள்!!

 

 

இருவரும் முகம் நெருங்கியிருக்க மூச்சு காற்று முகத்தில் படக் கேட்டான் "டைட்டா இருக்கா?" என்று!! 

 

 

விளங்க இயலா கேள்வியாய் அவள் மனதில் அவர்களது நெருக்கம்.. அவனது தீண்டல்.. அவளது மயக்கம்!!

 

 

ஜித்து என்ன கேட்கிறான் என்று புரியாமல்.. ஏதோ மயக்கத்தில் சஞ்சரித்தவள், தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைத்தாள்.

 

 

அவன் சொல்வது அவளுக்கு புரியவில்லை என்று தெரிந்தவன்,

 

இன்னும் நெருக்கமாக நெருங்கி நின்று.. இடையை பற்றி பேண்டை இறுக்க.. அவள் இதழ்கள் பிரிந்து தவித்தடங்கின. நீள் மூச்சு விட்டாள் பெரும் தவிப்பில்…

 

 

 

தயங்கி முயங்கி கிறங்கி பின் அவளே சட்டென அவனைக் கட்டிப்பிடிக்க.. 

 

அவளின் பருவ இளமை செழுமைகள் அவன் நெஞ்சில் அணைய... 

 

அவன் ஆண் மணம் அவள் நாசியில் கிறக்கமாய் பரவ..

 

சொக்கி நிற்கும் சுந்தரியை கண்டவன் வேக பெருமூச்சுடன் அவளைத் தழுவி அணைக்க... 

 

அவள் முதுகை இருகைகளாலும் அணைத்தவன் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட…

 

இருவர் இடுப்புகளும் இணைந்து வயிறு ஒன்றோடொன்று முட்டி நிற்க..

 

அவன் வலது கை மெல்ல அவள் வெண்ணிற முதுகில் உலா போக..

 

அவனின் ஸ்பரிசத்தில் மீண்டும் பெண் கிறங்கி உதடு கடிக்க.. அவன் முரட்டு விரல்கள் கூந்தலுக்குள் நெளிந்து பிடறியை வருட.. 

 

பின் அது தயங்கி தயங்கி மெல்லிடையாளின் சிற்றிடையின் வளவளப்பை சோதனை இட... 

 

அவள் இடுப்பில் ஒரு சிலிர்ப்பெழுந்து உடல் முழுவதும் பரவி விரவி மின்வெட்டாய் துடித்தோட…

 

அவள் நெற்றியிலும் கண்களிலிலும் முத்தமிட்டபடி மடிப்பில்லா இடுப்பை மெல்ல விரல்களால் அவன் வருட.. அதன் மென்மையை தடவி, பின் மெல்ல அழுத்தி இருபுறமும் இறுக்கிப் பிடிக்க…

 

அவன்‌ அழுத்தம் தந்த அதிர்வுடன் அவள் மெல்ல கைகளால் அவன் தோள்களை பற்றி முகம் நிமிர..

 

 அவள் கண்கள் அவன் கண்களை உள்ளெழுந்தத் தவிப்புடன் நோக்க.. 

 

 

 

கள்ளப் புன்னகை சிந்திய மாதவனோ.. உதட்டை கடித்து சிரிக்க..

 

மெல்ல குனிந்தவனின் மூக்கு வந்து அவள் மூக்கை முட்டி உரச..

 

மூக்குகள் இரண்டும் காதல் கிளிகளெனக் கொஞ்சிக் குலால… இடுப்பில் அணைந்திருந்த அவன் விரல்களோ மாணிக்க கல்லை கண்டிபிடித்து அந்த தடாகத்தின் நீள அகலங்களை ஆராய..

 

 

பெண்ணவளோ கிளக்கத்துடன் இமைகளை மூட..

 

அடுத்த நொடி அவன் இதழ்கள் அவளின் இதழ்களை கொய்தன..

 

அவளுள் ஒரு விம்மல் எழுந்து, உடல் விதிர்விதிர்த்து.. கை விரல்கள் நடுங்க...கால்கள் படபடக்க.. தேகம் தளர.. அவனையே பற்றென பற்றியபடி அசையாது நின்றாள் பாவை!!

 

 

அவள் பெண்மையின் பெருந்தவிப்பை உணர்ந்தவனின் முத்த யுத்தம் இன்னும் இன்னும் நீளுவதாய்!!

 

 

பெண்ணவள் உள்ளமோ முடிவிலா முடிவிலியாய் இந்நிலை இன்னும் இன்னும் வேண்டுவதாய்!

 

 

உதடுகள் கவ்வி கவ்வி காந்தல் எடுக்க... அவன் விரல்கள் அவளின் இடுப்பில்.. சின்ன தடாகத்தில் ஊர்ந்து தவழ.. மீண்டும் அவன் உதடுகள் அவள் உதடுகளை முத்தமிட்டு முத்தமிட்டு பிரிய மனமில்லாமல் இணைந்து இருக்க…

 

 

 

சட்டென்று அவளது தலையில் ஒரு கொட்டு!! அதிர்ந்த நிமிர்ந்து பார்த்தாள் வாஹினி.

 

 

"ஏய்.. பால் டப்பா நானே பெல்ட் கஷ்டப்பட்டு போட முடியாமல் போட்டு கிட்டு இருக்கேன். நீ எங்க கனவு கண்டு கொண்டு நிற்கிற.. ஒழுங்கா இந்த டீசர்ட்டை புடி.. நான் கீழ பக்கிள்ஸ் மாட்டி விடணும்" என்றவன், அவள் அருகே நின்றுக்கொண்டு பக்கிள்ஸை மாட்டிக் கொண்டிருந்தான் அவளது இடுப்பில்.

 

 

அவன் சரியாத்தான் இருக்கான்!! ஆனா நமக்கு தான் கண்ட கண்ட கனவு எல்லாம் வருதா??

 

 

இது பகல் கனவா?? அல்லது மனதின் தாக்கமா?? இல்லையில்லை மனதின் தாக்கம்தான் கனவாய் கண்முன்னே விரிந்து இருக்கிறது. அப்படி என்றால்.. அப்படி என்றால்..

 

 

இவன் மீது எனக்கு ஈர்ப்பையும் தாண்டி ஏதோ இருக்கிறதா??

 

 

இவன் ஸ்பரிசத்தையும் முத்தத்தையும் நான்.. என் மனம் விரும்புகிறது என்றால்.. இதற்கு என்ன அர்த்தம்??

 

 

நல்ல மனிதன் தான்!! இவனை நம்பிய பெண்ணுக்கு.. இவனுடன் வந்த பெண்ணுக்கு நல்ல பாதுகாவலனாக இருப்பவன் தான்!! ஆனால் அது மட்டும் போதுமா என்ன??

 

 

வாழ்க்கை துணையாக இவனை நான் அடைய..

 

 

இல்லையில்லை இது இன்ஃபாக்வேஷன்!! யாருமற்ற நிலையில் இருக்கும் எனக்கு இவனின் அருகாமையும் பரிவும் அன்பும் எனக்கு ஒரு பாதுகாப்பு தன்மை தருவதால் இது போல தோன்றுகிறது. எதிர்காலமே இல்லாத ஒன்று இது!!

 

 

என்னால் இவனை எப்படி மருமகன் என்று என் அம்மாவின் முன்னால் நிறுத்த முடியும்?? என் தந்தைக்கு இவன் ஏற்ற மருமகனாக எப்படி இவன் இருக்க முடியும்?? இல்லை.. இல்லை.. இதை வளர விட கூடாது என்று நினைத்தவளுக்கு அவளையும் மீறி குபீரென்று கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல வெளிவந்து சடசட என்று மழையாகப் பொழிந்தது.

 

 

 

"அவ்வளவுதான் அப்பா முடிஞ்சிடுச்சு!!" என்று அவளுக்கு பெல்ட்டை போட்டுவிட்டு அவன் டீ-ஷர்டை பின்பக்கம் இழுத்து பின் போட்டுவிட்டு, முன்னால் வந்து பார்க்க அவள் கண்களோ கண்ணீர் உகுத்து கொண்டிருந்தது.

 

 

 

மீண்டும் அந்த பழைய நினைவை நினைத்தே அழுகிறாள் போல என்று அவள் தோளை அணைத்தான் ஆறுதலாக!! அவனிடமிருந்து நெளிந்து விலகி கட்டிலில் சென்று அமர்ந்தவள் மீண்டும் அழுது கொண்டே இருக்க..

 

 

 

"ஏ பால் டப்பா!! அப்பவே சொன்னேன் இல்லையா? சும்மா பால்ஸ் தொறந்து விட கூடாதுனு. ஏற்கனவே நடுராத்திரி 2 மணி தாண்டிட்டு.. இனிமேலாவது கொஞ்சம் தூக்கணும்!! தயவுசெய்து தூங்குற வழிய பாரு!!" என்று அவளை படுக்க வைக்க. அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. ஆனால் அவள் மன எண்ணங்களே அவளை வருந்த செய்ய.. விடாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் வாஹினி.

 

 

 

அவனும் அதட்டி உருட்டி மிரட்டி பார்க்க ஒன்றுக்கும் பணியாமல் அழுது கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு மனமும் வலிக்க தான் செய்தது. பெரும்பாலும் இப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்தவங்களுக்கு மனதளவில் பெரும் பயமும் பாதுகாப்பின்மையும் இருக்கும் என்று எங்கோ யாரோ சொல்லிக் கேட்டது அவன் நினைவில் வர..

 

 

 

கட்டிலில் அவளை படுக்க வைத்து அருகே அமர்ந்தவனை அவள் விசித்திரமாகப் பார்க்க..

 

 

நம்மையும் எங்கே தப்பாக நினைத்து விடுவாளோ என்று நினைத்தவன் "பால் டப்பா.. யூ.. ஸ்லீப்!! ஐ தட்டிக் கொடுத்திங்!!" என்று அவளுக்கு புரிய வேண்டும் என்பதாய் செய்கையிலும் செய்ய..

 

 

மீண்டும் மீண்டும் தன் மேல் அவன் காட்டும் இந்த அன்பு எனக்கு இன்னும் வேண்டுமென்பதாய் அவனையே விழி எடுக்காமல் இமை தட்டாமல் ஜித்துவையே பார்த்தாள் வாஹினி.

 

 

நாம் செல்வது அவளுக்கு புரிய வில்லையோ என்று யோசித்தவன்.. இவளுக்கு எப்படி புரிய வைக்க என்று தனக்குள் சிந்தித்தவன்..

 

 

"யூ நினைச்சிங் மீ.. யுவர் ஃபாதரு.. ஓகே.. மீ ஹியரு!! யூ சேப்.. ஓகே.. ஸ்லீப்.. ஸ்லீப்!!" என்று அவன் தன்னை அவளுடைய தந்தையாக நினைத்து கொள் என்று கூறியது அவளுக்கு புரிய.. இன்னும் அவளுக்கு அழுகை வெடித்து கொண்டு வர உதடு பிதுக்கினாள். அழுபவளை தன் இடையோடு அணைத்து மெல்ல அவளது தோள் பட்டையில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் ஜித்து.

 

 

 

அவனது அருகாமை தந்த பாதுகாப்பா?? இல்லை அவளை அரவணைத்து தந்த அன்பா?? 

 

அவனை தந்தை என்று சொன்னதால் வந்த தந்தையின் நினைவா?? ஏதோ ஒன்று மெல்ல மெல்ல அவள் இடுப்பில் கை போட்டபடி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள் வாஹினி.

 

 

 

அவளுக்கு மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்த ஜித்துவுக்கும் தூக்கம் சொக்க ஆரம்பித்தது. "அந்த மலை மாடுகளிடம் இருந்து தப்பித்து வரத்துக்குள்ள.. கை காலெல்லாம் வலிக்குது!! இதுல தொடர்ந்து வண்டி ஓட்டுனது. இவ பண்ணும் அலு

ம்பு வேற.." என்று கைகளை உதறிக் கொள்ள முயல.. அது முடியாமல் போனது. 

 

 

அவன் இடுப்பை சுற்றி கை போட்டுக்கொண்டவள், ஒரு காலை தூக்கி அவன் கால்கள் மீது போட்டு அவள் தூங்க.. அசையவும் முடியவில்லை அவனால்..

 

அப்படியே அவளை அணைத்து வாக்கிலேயே அவனும் தூங்கிவிட்டான். 

 

 

காலையில் வந்த ஹரிதா கண்ணில் இது பட.. அப்புறம் என்ன சக்காளத்தி சண்டை களை கட்டியது!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top