தேன்மழை💞 (15)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

"நீ எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறயா?" என ஹேர்க்கு ஜெல் தடவிக் கொண்டிருந்த பிரதீஷை பார்த்து யாதவ் விழிகள் சிவக்க கேட்க, அவனது கவனம் முழுவதும் ஹேரில் மட்டுமே இருந்தது.

 

ஃபார்மல் ட்ரெஸில் தயாராகிய நண்பனை கண்டு, ஹோட்டல் செல்ல ஏன் ஃபார்மல் என கேட்ட போது தான் உண்மையை கூறியிருந்தான். தான் ஒரு மனதாக எடுத்த முடிவிற்கு, முட்டுக்கட்டை போட்டு விடுவானோ என நினைத்து தான் அவனிடம் கிளம்பும் வரை கூறவில்லை.

 

"உனக்கு இது சரின்னு தோணுதா?"

 

அவன் அதை செவியில் வாங்கிடவே இல்லை. ஜம்பமாக ஃபார்மலில் கிளம்பி, ஆழ மூச்சொன்று விடுத்து மெத்தையில் அமர்ந்தான்.

 

"உன்கிட்ட தான் டா கேக்கிறேன்.."

 

மௌனமாக ஏறிட்டான் யாதவை. அவனது விழியில் அப்படியொரு வலியும் வேதனையும் கண்டவன், "டேய் உனக்கு விருப்பம் இல்லைனா வேணாம் சொல்லிடு.. இப்போ கூட ஒன்னும் பிராப்லேம் இல்லை.."

 

"ஐடியா இல்லை.." என்றான் தோளை குலுக்கி. ஆனாலும், யாதவ் அவனை விடுவதாக இல்லை. மீண்டும் அவளை பற்றியே பேச்செடுத்தான்.

 

"இப்போ கூட அவளை பிடிச்சுருக்குன்னு சொல்லு டா. நான் பேசுறேன் அவகிட்ட.."

 

அவனோ உடல் குலுங்க சிரித்தான். அதில் அவனை புரியாமல் பார்த்த யாதவ், "டேய் நிஜமா உன்னால எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு. என்ன தான் டா நினைச்சுட்டுருக்க?" என்றவன் தலையில் அடித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவனை பார்த்து நடந்தவன், ஏன் கிளம்பமால் அமர்ந்திருக்கிறான் என யோசித்தான்.

 

"டேய் கிளம்பாம ஏன் இப்படி ஒக்காந்துருக்க? ஏன் யாரும் வராங்களா என்ன?"

 

"ஒரு போன் வரும் வந்தா போவேன்.. இல்லை கேன்சல்.." என்றான் மீண்டும் அசட்டையாக தோளினை குலுக்கி. யாதவ் தான் அவன் மொபைலை எடுத்து பார்க்க அதில் 7 மிஸ்ட் கால் இருந்தது.

 

"போன் வந்துருக்கு.." என்றதுமே வெடுக்கென வாங்கியவன், அழைத்தான் பிருந்தாவிற்கு.

 

"ஹலோ.. நீங்க இன்னும் வரலைன்னு இங்க ஒரே பிரச்சனையா இருக்கு.."

 

"நான் நேத்து என்ன சொன்னேன்?"

 

அவளோ நெற்றியை நீவியப்படி யோசிக்க..

 

"என்ன சொன்னேன் சொல்லுங்க.." என்றான் அழுத்தமாய்.

 

"சார்.. நிஜமா நியாபகம்.." என்னும் போதே, அவள் கூற வருவதை புரிந்து கொண்டவன் சிடுசிடுத்தான்.

 

"போன் என்கிட்டே தானே பேசுனீங்க. அப்போ எப்படி மறந்து போகும்?" என கேள்வி கேக்க, 'யாருடா நீ? வாத்தியார் மாதிரி கேள்வி கேக்கிற. நேரங்காலம் புரியாம. இங்க வெட்டிக்கிட்டு சாவுவாங்க போல அப்படி இருக்கு நிலைமை' என தலையில் அடித்துக் கொள்ளும் போது தான் பெண்ணவளுக்கு அவன் கூறிய வார்த்தை நினைவு வந்தது.

 

"ஆங்.. போன் பண்ண சொல்லிருந்தீங்க.. நான் கொஞ்சம் வேலையா இருந்தேன்.." என  கூறியப்படி  நாக்கை கடிக்க, "வார்த்தை எனக்கு ரொம்ப முக்கியம் பிருந்தா.. சோ, என்ன டிசைட் பண்ணிருக்கீங்க?" என்றான் கறாராக.

 

"எனக்கு எல்லாமே ஓகே தான்.. எந்த இஸ்ஸு இல்லை சார்.." என்றவள் பதட்டமாக பேசிட, "எப்படி அஸ்ஸுரன்ஸ் தருவீங்க? அதை சொல்லுங்க.." என பீடிகையாக கேட்டான்.

 

வெளியே நடக்கும் பேச்சு வார்த்தை அவன் செவியில் நன்கு விழுந்து கொண்டு தான் இருந்தது.

 

"நான் நிச்சயம் முடியவும் எல்லார் முன்னாடி சொல்லிறேன்.."

 

"என்னனு?"

 

"எந்த ஃபார்மாலிட்டீஸ் வேணாம்ன்னு.."

 

"நான் வரேன் வைங்க.." என்றவன் போனை வைத்து கிளம்பிட எத்தனிக்க, "இது என்ன டா கூத்து? என்ன நடக்குது ஒன்னும் புரியல.." என்றபடி யாதவ் தலையை பிடித்தான்.

 

"மச்சான் அந்த பொண்ணுக்கு குடுத்த வார்த்தையை காப்பாத்துறேன். தேட்ஸ் ஆல்.."

 

"அப்போ.. அவ?"

 

"எவ?" என்றவன் கார் சாவியை எடுக்க போக, "பைக்ல போலாம் டா.." என்றான் யாதவ்.

 

பிரதீஷ் பைக்கை ஓட்ட பின்னாடி அமர்ந்த யாதவ் அப்போதும் துருவி துருவி அவளை பற்றியே பேசினான்.

 

"அவ மறுபடி வந்தா.. பேசுனா.. என்ன பண்ணுவ?"

 

"அவ யாருடா எனக்கு? அவளையே ஏன் பேசுற.. அடுத்ததை பாரு.." என்றான்.

 

"மச்சான் அகைன் சொல்லுறேன்.. அவ நிச்சயம் உன் முன்னாடி வர தான் போறா.." என அடித்துக் கூறியதில், பிரதீஷின் எண்ணங்கள் அவள் நினைவில் சாய, எதிரே வந்த லாரியை அவன் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தான்.

 

"டேய் டேய்.. லாரி டா.. மச்சான்.. டேய்.." என அலறிய பின் தான் சுதாகரித்து வண்டியை வளைத்தான்.

 

ஒரு ஓரம் நிறுத்தியவன், "போற வரை எதுவும் பேசாம வா. சொன்ன வார்த்தையை காப்பாத்தனும். அந்த பொண்ணு யாரு என்னனு தெரியாது டா. யாரை பத்தி நமக்கு என்ன பேச்சு. இப்போ இதான் முக்கியம்.." என்றான் கண்டிப்பான குரலில்.

 

யாதவோ தான் வண்டி ஓட்டுகிறேன் என முறுக்கிக் கொண்டு கூறி, அதன் பின் இருவரும் வந்து சேர்ந்த இடமோ மருத்துவமனையே. பைக் ஆக்சிடென்ட்டாக, ரத்தம் வழியும் நண்பனை கண்டு அரக்க பறக்க மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

 

அடி என்னவோ பிரதீஷிற்கு தான் அதிகம். நெற்றி, கை முட்டி, கால் என சிராய்ப்பு ஏராளமே. அவனோ வலி தாங்க முடியாமல் துடிக்க, நண்பனின் அலறல் அவனையே உலுக்கி எடுத்ததில் வெளியே வந்து விட்டான். வண்டியை ஓட்டியவனுக்கு கை காலில் மட்டும் லேசான அடியே.

 

இருவரின் நிலைமை இப்படியிருக்க, அங்கு நடவாத நிச்சயத்தில் கொதித்து போயிருந்தனர் இரு வீட்டாரும். போதாக்குறைக்கு, பிரதீஷ் வழக்க போல் அவனது திமிரை காட்டி விட்டான் என பெற்றவரே பொரிந்து தள்ள எல்லோருக்கும் அவனை பேசிட நல்ல சந்தர்ப்பம் அமைந்தது.

 

உடன் பிறந்த அறிவிலியோ, "அவனை நம்பி நீ ஏன் மா இவ்வளவு பெரிய விஷயத்துல இறங்குற? என்னை கேட்டா வேற மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்கன்னு தான் சொல்லுவேன்." என ரெண்டே வார்த்தையில் பேசி தகித்திடும் மனதிற்கு மேலும் நெருப்பு வைத்தாள்.

 

பிருந்தாவின் மீது தான் எல்லோரின் கோவமும் திரும்பியது. அவள் அப்போது கூட அவனுக்கு சாதகமாக பேசிட, "மா.. நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் மானஸ்தன் கிடையாது. அவன் எப்பவும் இப்படி தான் சுயநலமா இருப்பான்.

 

பாரு இப்போ கூட என்ன பண்ணி வச்சிருக்கானு. இவனை நம்பினா நாம தான் கேவலப்பட்டு நிக்கணும். இனி இவனை நம்பி எந்த விஷயமும் செய்யாத." என்றார் சதாசிவம்.

 

பாவம் சாவித்திரி அவர்களும், கல்யாணியும் தான் அடக்கப்பட்ட கண்ணீர் தன்னை மீறி உருண்டோடியதில், கண்ணீரை துடைத்துக் கொண்டு பிருந்தாவை பாவமாக பார்த்து விட்டு வெளியேறினர்.

 

எல்லோரும் அவமானப்பட்டு கிளம்பிடும் நேரம் பிருந்தா போன் அலறியது. விஷயத்தை யாதவ் கூறிட, பிருந்தாவோ தழுதழுக்க கூறியதில் எல்லோரும் விதிர்விதிர்த்து போயினர்.

 

"நான் தான் அப்போவே சொன்னேன்ல. நீங்க தான் யாரும் நம்பாம பேசுறீங்க.." என நீர் கசிய பேசியவள், அவனை காண மருத்துவமனை கிளம்பி விட்டாள்.

 

கல்யாணியோ அவனுக்கு என்ன ஆனதோ என நெஞ்சில் அடித்து பதற, அதை விட ஒப்பாரி வைத்து அழுதார் சாவித்திரி பாட்டி.

 

சிறிது நேரத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தனர் எல்லோரும். அவனை காணும் வரை பெண் வீட்டினர் நம்பவில்லை. அவன் அணிந்திருந்த புதிய சட்டை, பேண்ட்டை கண்ட பின்பு கிளம்பி தான் வந்திருக்கிறான் என நம்பி விட்டனர்.

 

எல்லோரும் குசலம் விசாரிக்க, சதாசிவம் மற்றும் முருகன் தான் அவனை ஒருவாறு பார்த்து ஒதுங்கி நின்றிருந்தனர்.

 

"அண்ணே.. போய் என்னனு கேளுங்க.. அதுக்கும் நம்மள தப்பா நினைப்பாங்க.." என அவர் சதாசிவம் காதில் கீ குடுக்க, குரலை செருமி மகன் அருகே செல்ல, அவனோ முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

"மாப்பிளை நீங்க வரலைன்னு தப்பா நினைச்சுட்டோம். மன்னிச்சுடுங்க.." என கௌதமன் பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.

 

"மாப்பிளை உடம்பு சரியாகட்டும். அதுவரை நம்ம அவரை எந்த தொந்தரவு பண்ண வேணாம். ஒரு மாசம் போகவும் கல்யாணத்தை வச்சுக்கலாம்.." என்றார் ஜெயமோகன்.

 

எல்லோரை பார்ப்பது போல் தான் பிருந்தாவையும் பார்த்தான். அவன் கூற வேண்டிய மன்னிப்பை கேட்டது என்னவோ யாதவ் தான்.

 

அவளும் தலையசைப்பை தந்து விட்டு, அவனை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி வெளியே வந்து விட்டாள். வெளியே பெண் வீட்டார் மாப்பிள்ளையை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

கல்யாணி அவர்கள் கணவர் கையை பற்றிக் கொண்டு ஒப்பாரி வைக்க, "என்ன செத்தா போய்ட்டேன். இப்போ ஏன் அழுறீங்க? வெளியே போங்க முதல. Bp ரைஸ் ஆக கூடாதுன்னு சொல்லிருக்காங்க. உங்களை பாத்தாளே டென்ஷன் ஏறுது.." என அவன் ஆத்திரமாக பேசியதில், சதாசிவம் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

 

ஆசையோடு இருந்தவள் கனவு அத்தனையும் விபத்தால் சிதறி போனது. மாப்பிளை வீட்டினரும் அவள் மனதை புரிந்து கொண்டு, திருமண தேதியை விரைவில் ஜோசியரிடம் கேட்டு கூறுகிறோம் என வாக்குறுதி அளித்து விட்டு கிளம்பி விட்டனர்.

 

எதிர்பாராது நடந்த விபத்திற்கு, மாப்பிளையை தவறாக நினைத்து விட்டோமே என எண்ணி, கௌதமன் நொந்து கொண்டிருந்தார்.

 

ஆனால், ராணிக்கு தான் இத்திருமணத்தில் இருந்த விருப்பம் குறையத் துவங்கியது. பெற்றவர்களே அவனை அவதூறாக பேசும் போது, எப்படி அவருக்கு அவன் மீது நம்பிக்கை வரும்?

 

நண்பன் ஒருவனே உடனிருந்து அனைத்தையும் பார்த்து முடித்து விட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

இரவு 8.04மணி..

வீட்டிற்கு வந்தவன் முகமோ வாட்டம் கொண்டிருப்பதை கண்டவன், வெளியே செல்வோமோ என கேட்டான். அவனும் சரி என்க, காரில் இருவரும் ஹோட்டல் வந்தடைந்தனர்.

 

மிகப்பெரிய ஹோட்டல் என சொல்வதை விட, உணவுக்கு பெயர் போன ஹோட்டல் அது. உள்ளேயே ஃபாஸ்ட் புட், டிசர்ட், சைனீஸ், தந்தூரி என அனைத்து உணவு பதார்த்தங்களும் உண்டு.

 

சோபாவில் நண்பனுக்கு எதிரே அமர்ந்த யாதவ், "மச்சான் ரொம்ப பெயின்னா இருக்கா?" என வினவ..

 

பதிலே கூறாது நண்பனை புருவம் உயர்த்தி பார்த்தான் பிரதீஷ்.

 

"ஸாரி மச்சான் தெரியாம நடந்துடுச்சு. சாப்பிட்டு டேப்லெட் போடு. பெயின்கில்லர் நானே நைட் போட்டு விடுறேன்."

 

"ம்ம்.." என அவன் தலையசைக்கும் நேரம் சர்வர் வந்து நின்று என்ன வேணும் என வினவ, "ம்ம்ம் மூணு முட்டை தோசை" என குரல் குடுத்தப்படி ராஜீவ் அங்கு வந்தான். பிரதீஷின் சித்தி மகன்.

 

அவன் வரவு பற்றி பிரதீஷிற்கு தெரியாத ஒன்று. ஆனால், அவனை வரவழைத்தது என்னவோ யாதவ் தான். வந்தவன் அவனிடம் குசலம் விசாரித்து விட்டு, யாதவோடு அரட்டையில் மூழ்கினான்.

 

பாவம் பிரதீஷிற்கு தான் வலி வின்னு வின்னு என இருந்தது. அதிலே முகம் வாடி போய் அமர்ந்திருக்க, "டேக் கேர் பிரதீஷ்.." என ஒரு வாட்சப் மெசேஜ் வந்திருந்ததை படித்துக் காண்பித்தான் யாதவ்.

 

அவனுக்கு யாரென புரிந்து போனது. அதை பெரிதாக பொருட்படுத்தாதவன், சுற்றி முற்றி பார்த்தபடி இருந்தான்.

 

"டேய் அண்ணா.. என்ன அண்ணி மெசேஜ் பண்ணிருக்காங்க.. இப்படி பொறுப்பே இல்லாம இருக்க?" என ராஜீவ் வம்பிழுக்க, அவனை வரவைத்த யாதவை தான் ஒருவாறு பார்த்தான்.

 

"அண்ணி எவ்வளவு அக்கறையா டேக் கேர்ன்னு மெசேஜ் பண்ணிருக்காங்க.. நீங்க பதிலுக்கு ஒரு ஹார்ட் எமோஜி அனுப்புனா தானே, அவங்க ஃபீல் பண்ணாம இருப்பாங்க.."

 

"மச்சான் அவனை சும்மா இருக்க சொல்லு.. ஏற்கனவே வலி தாங்க முடியல.. கை அசைச்சாலே வலிக்குது.." என கடுகடுக்க, "ஓகே ஓகே.. கூல் கூல்.." என்று விட்டு மீண்டும் யாதவிடம் கிசுகிசுத்தான்.

 

"அவனுக்கு இந்த மேரேஜ்ல இஷ்ட்டம் தானே?" 

 

"சும்மா இரு டா.. ஏதாவது அவன் காதுல விழுந்து, எந்திரிச்சு போயிடுவான்.."

 

"இல்ல யாதவ்.. எனக்கு என்னமோ இவன் ஏதோ ஒருமாதிரி இருக்கான்னு தோணுது.." என அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூற, "மூடிட்டிரு அப்பறம் பேசிப்போம். இல்லை என்கிட்டயும் பேசாம போயிடுவான்.." என யாதவ் அவன் வாயடைப்பதில் தான் முழுக்கவனமாக இருந்தான்.

 

அவர்களின் விருப்ப உணவை கொண்டு வந்து வைக்க, மூவரும் உண்ணுவதில் தான் கவனமாக இருந்தனர்.

 

"எந்த சாமி புண்ணியமோ, அடி பலமா படல.." என யாதவ் கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே, பன்னீர் டிக்காவை ருசித்தான்.

 

"உனக்கு கம்மி.. எனக்கு.." என்றவன், நீயெல்லாம் நல்லாருப்பாயா என்பது போல் நண்பனை ஏறிட்டான் பிரதீஷ்.

 

"ஹாப்பி பர்த் டே டூ யூ.. ஹாப்பி பர்த் டே டூ யூ.." என பெண்களின் கரவோசம் நிறைந்த குரல், எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. மூன்று பெண்கள், ஒரு பெண்ணின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

 

"வாவ்.. வண்ண மலரில் ஒன்று, பூமிக்கு வந்த நாளோ.." என ராஜீவ் கூறிட, யாதவ் லேசாக எழுந்து அப்பெண்களை ஏறிட்டு அமர்ந்து விட்டான்.

 

"நைஸ் கேர்ள்ஸ்.." என்றான் யாதவ் தன்னை மறந்து..

 

ராஜீவோ "யா.. பீயூடிஃபுல் கேர்ள்ஸ்.." என்றதில், "போ போய்.. அப்படியே விஷ் பண்ணிட்டு வா.." என பிரதீஷ் சிடுசிடுத்தான்.

 

'உன்கூட இருந்துட்டு எவளையும் உஷார் பண்ண முடியுமா?' என ராஜீவ் அந்த பெண்களை ஏக்கமாக பார்த்தபடி உண்டு கொண்டிருந்தான்.

 

உண்டு முடித்து எழுந்தவன் கை கழுவ எந்திரிக்க, "இஸ் திஸ் எனஃப்?" என நண்பன் பிரதீஷிடம் வினவ, அவன் சிறு தலையசைப்பை மட்டும் தந்து விட்டு கை கழுவ சென்றான்.

 

அந்த நால்வரில் ஒருவள், "செம ஃபிகர்ல" என்றாள்.

 

"ஹேய் ஆர்டர் பண்ணி சாப்புடுற வேலையை பாருங்க.." என்றாள் ஒருத்தி..

 

மற்றொருவளோ, "மேன்லி லுக் டி சைட்ல பாக்கும் போது.." என்றாள் அவனை பார்வையால் அளந்தப்படி..

 

"பாக்க அப்படி தான் இருப்பாங்க. பட் அப்படி இருக்கிறவன் தான் சாவனிஸ்ட்டா இருக்கான்.." என்றது ஒரு குரல்.

 

"ஓகே வேற டேபிள் போலாம்.." என்றவர்கள், அங்கிருந்து யாதவிற்கு நேர் எதிரே இருந்த டேபிளில் அமர்ந்து கொண்டனர்.

 

"பர்த்டே பேபிக்கு விஷ் பண்ணிட்டு வரவா?" என யாதவ் காதில் ராஜீவ் கிசுகிசுக்க, "செருப்புல அடி வாங்காம இருந்தா சரி.." என்றான் அவனை வெறுப்பேற்ற வேண்டுமென்றே.

 

அடிப்பட்டதின் வலியில் அவனே பல உச்சு கொட்டி, கைகுட்டையில் கையை துடைத்துக் கொண்டு நிற்க..

 

"எக்ஸ்கியூஸ் மீ" என யாரோ அழைத்ததில், சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

 

எதிரே அவள்! எவளுக்கும் தனக்கும் ஒன்றுமில்லை என சில மணி நேரங்களுக்கு முன்பு கூறினானோ, அவளே எதிரே வந்து நின்றிருந்தாள்.

 

ராசிகா வருகையை துளியும் எதிர்பாராதவன், திகைத்து நிற்க.. அவளோ, "என்ன ஆச்சு? எப்படி அடிப்பட்டுச்சு?" என மனம் தாளாது அவன் நெற்றியில் அடிப்படிருக்கும் காயத்தை பார்த்து கேட்டாள்.

 

'உன்னை பத்தி பேசி தான் டி வாரிட்டு வந்திருக்கேன். இப்போ மறுபடியும் வந்துட்டயா?' என அவன் மனம் நொந்ததை வெளியே கூறவா முடியும்?

 

"ஒரு ஆக்சிடென்ட்.." என்றான் சாதாரணமாக.

 

"என்ன ஆக்சிடென்ட்ன்னு சாதாரணமா சொல்லுறீங்க.. பாத்து கவனமா போக கூடாதா?" என்றவள் கண்ணில் ஒருவித கலக்கம் நிறைந்திருப்பதை கவனியாமல் இல்லை அவன்.

 

"ஸாரி அன்னேக்கி.. ஃபிரண்ட்ஸ்.." என பிரதீஷ் எடுத்துரைக்க முயல, "தெரியும் நான் தான் ஒரு ஆர்வக்கோளாறுல வந்துட்டேன்.." என்றாள் மன்னிப்பு கேட்கும் விதமாக.

 

"ஓகே டேக் கேர்.." என அவன் உதடுகள் கூறியிருந்தாலும், மனமோ அவ்விடம் விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தது.

 

செல்வது தான் நல்லது என தீர்மானித்தவன், ரெண்டு எட்டு தான் எடுத்து வைத்திருப்பான்.  மீண்டும் அவனை அழைத்ததில், பிரேக் அடித்து நின்றான்.

 

"அது வந்து.. அது.. உங்க கிட்ட நேர்ல பேசுனா திட்டுறீங்க.. உங்களை பாத்தாலும் பேச முடியாது.. அதுனால உங்க நம்பர்.." என தயங்கி தயங்கி பயந்து கேட்டவள் கேள்வியை ஒருவித அதிர்வோடு பார்த்தபடி நின்றிருந்தான்.

 

"மொபைல் இல்லைங்க.." என்றான் அவளை வேண்டுமென்று வெறுப்பேற்ற.

 

அவளின் கெஞ்சல் முகம் அவனையும் மீறி ரசனையை உண்டாக்கிட, ஆழ்ந்து பார்த்தான் அவளின் முக பாவனையை.

 

"எது மொபைல் இல்லையாஆஆ?"

 

"ஜஸ்ட் ஃபன்.." என சமாளித்தவன், "ம்ம் நோட் பண்ணிக்கோங்க.." என்றான்.

 

களிப்பில் அவனது எண்ணை போனில் சேவ் செய்து கொள்ள, அந்த சந்தோசம் நீடிக்கும் முன் அவள் தலையில் இடியை இறக்கினான்.

 

"நீங்களும் ரொம்ப ஃபிரண்ட் ஆகிட்டீங்க. மேரேஜ்க்கு சொல்லணும்ல.. நானே, உங்களுக்கு சொல்லணும்ன்னு நினச்சேன், நீங்களே நம்பர் கேட்டுடீங்க.." என பொய்யை உண்மை போல் கூறியதில், அணங்கவள் தான் விக்கித்து நின்றிருந்தாள்.

 

"எது.. மேரேஜ்ஜாஆஆ? எப்போ?"

 

"நெக்ஸ்ட் மந்த்.. அவசியம் வந்துடுங்க.." என கூறி கடந்தவனை அடிப்பட்ட பார்வை பார்த்திருந்தாள்.

 

அவள் ஆசையை புரிந்து கொண்டவன், அதை நிராசை ஆக்கிடவே கூறி கடந்திருந்தான். அவனுக்கும் இது சரியென பட்டது.

 

'இவனுக்கு என்ன தான் பிரச்சனை? இவன் எல்லார்ட்டையும் இப்படி தானா? இல்லை என்னை பாத்தா மட்டும் தானா? மேரேஜ்ஜா நம்புற மாதிரியா இருக்கு?' என யோசித்தவள் கையை கழுவி விட்டு உண்ணச் சென்றாள்.

 

அதன் பின் ஒரு கவளம் உணவு கூட இறங்க மறுத்தது. அவனை காணும் போது உண்டாகும் உணர்வு காதல் என அவள் புரிந்திருந்தாலும், அதை புரியாமல் புறக்கணித்து பேசுபவனை எண்ணி மனம் கனத்தது.

 

சில நொடிகள் அமர்ந்திருந்தவள், விருட்டென எழுந்து வெளியேறியதில் தோழிகள் அவள் பெயர் கூறி அழைத்தனர். அவளோ, வரேன் என மட்டும் கூறி வெளியேறியிருந்தாள்.

 

அவள் செல்வதை அவன் பார்க்காமல் இருந்திருந்தாலும், தோழிகள் குழப்பமாக பேசிக்கொள்வது நன்றாக அவன் செவியில் விழுந்தது.

 

அவள் எங்கு சென்றாள் என்னவென ஆராயமால் அவனாலும் இருக்க முடியவில்லை. வெளியே வந்தவன், எதார்த்தமாக வலதுப்புறம் திரும்பி பார்த்தான். அங்கு குழந்தைகள் விளையாட அமைத்திருந்த ஊஞ்சல் அருகே போடப்பட்டு இருந்த சேரில் கண்ணீரை துடைத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அவள் கரைவது, அவன் மனதையும் கரைத்தது. இருந்தும் அவளிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது என நினைத்தவன், விடை பெறவிருந்த ராஜீவிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான்.

 

அலைபேசி தகவல் தாங்கி வந்துள்ளதை தெரியப்படுத்தி சிணுங்க, யாதவ் நண்பனிடம் போனை நீட்டினான். பிரதீஷ், நோட்டிபிகேஷனிலே புது எண்ணில் இருந்த வந்த மெசேஜ்ஜை பார்த்து ராசிகா என புரிந்து கொண்டான்.

 

"I don't have any issue.. You can marry her and divorce immediately. Then we can get together.."

 

மெசேஜ்ஜை படித்தவன் விழிகளோ உச்சபட்ச அதிர்ச்சியோடு அவளை திரும்பி பார்த்தது.

 

 

தேன்மழை💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top