காதலி 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 1

 

ரெட்டிப் பேரரசு!!

 

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கடலோர ஆந்திரப் பகுதிகளை ஆட்சி செய்தது. புரோலய வேமா ரெட்டி, ரெட்டி மரபின் முதல் அரசர்!!

 

 

நாட்டின் தலைநகரமாக முதலில் அடான்கி இருந்தது. இது பின்னர் கொண்டவீடுக்கு மாற்றப்பட்டு பிற்காலத்தில் ராஜமுந்திரி தலைநகரமாக மாற்றப்பட்டது.

 

இராசமகேந்திரி என்றும் இராசமகேந்திரவரம் என்றும் சரித்திரத்தில் நிலைபெற்றுள்ள இந்த நகரின் பெயர் நாளடைவில் மருவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராஜமன்றி என்றாகி இப்போது இராஜமுந்திரி!!

 

எதுக்கு இந்த முந்திரி கதையெல்லாம்?

 

ஏன்னா நம்ம ஹீரோயின் இந்த ரெட்டி வம்ச டெட்டி!!

 

வாட்?? ஹீரோயின் தெலுங்கா??

 

அவுனு!!

 

அப்போ ஹீரோ??

 

தெல்லேது ரா!!

 

தமிழா??

 

அவுனு.. அவுனு!!

 

அப்போ தெலுங்கு ஹீரோ லேதா??

 

ஏமி ரா இதி??! சுந்தர தெலுங்கு அம்மாயி வத்தூ??

 

தெலுங்கு அம்மாயிஆஆ.. நாக்கு காவாலி!!

 

அப்போ உன் வண்டியோட..

 

கதைக்குள்ள ரண்டி!!

 

அதுக்கப்புறம் அப்படியப்படியே ஆட்சிகள் மாறினாலும் அவங்கள் கொண்ட அதிகாரம் மட்டும் இன்று வரை மாறவே இல்லை!!

 

ரெட்டி.. நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும்.. கெட்டவர்களுக்கு மகா கெட்டவர்களாகவும் விளங்கும் அந்த வம்சத்தின் இப்போதைய வாரிசு ஹிரண்மயா வாஹினி ரெட்டி!!

 

 

அவளின் தந்தை ஸ்ரீநிவாச வேமா ரெட்டி.. இப்பூவுலகை நீத்து வைகுண்ட பதவியை அடைந்து வருடங்கள் ஆகிறது. அரசன் இல்லா மாளிகையில் ஒப்புக்கு உப்பில்லா ராணியாக வலம் வருகிறார் வாஹினியின் அம்மா அவந்திகா ரெட்டி!!

 

 

அண்ணனின் சொத்திலிருந்து அண்ணனின் மகள் வரை கண்ணுக்கு கண்ணாக வைத்து பாதுகாத்து வருகிறார் ஸ்ரீசோமையா ரெட்டியும் அவரது மனைவி அனுமாலியும். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.

 

அண்ணனின் சொத்தை மட்டுமல்ல அண்ணன் மகளையும் தம்பியிடம் இருந்து பாதுகாத்து தன்னோடு வைத்துக் கொள்ள பெரும் ஆசை.. பேராசை நீலிமா ராஜுவுக்கு. அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே!!

 

 

அன்று அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று வாஹினிக்கு இருபத்தி ஒன்றாவது பிறந்தநாள்!!

 

வழக்கம்போல நகைக்கடை அலங்கார பொம்மையாக அலங்கரித்து தான் கீழே விருந்து நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என்பது சாசனத்தில்லா கட்டளை அங்கே!!

 

அவளின் சித்தி அனுமாலி அன்றைக்கு அவள் அணியவேண்டிய நகைகளை எல்லாம் முன்னமே லாக்கரில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்க.. அதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வாஹினி. அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேறி அந்த ஏசி அறையையும் தகிக்க வைத்தது!!

 

தங்கக் கூண்டு என்றாலும் அது கூண்டு தானே!!

 

நேரா நேரத்திற்கு விதவிதமான உணவு வகைகள்.. பழங்கள் பட்சணங்கள்.. கூடவே விதவிதமான விலையுயர்ந்த உடைகள் அலங்கார நகைகள்.. வெளியே சென்றுவர கோடிகளை அனாசயமாக முழுங்கிய அலங்கார ஆடம்பர கார்கள்.. இப்படி எல்லாமும் அதீதமாகவே இருக்க.. அந்த அதீதமே அவளுக்கு ஒருவித அசூசையானது!!

 

இன்றைக்கு விழாவிற்கு நாவல் பழ வர்ண ஃபுல் பார்டி கவுனக்கு மேட்சாக.. கற்றை ஒளியை வாரி இறைக்கும் வைரத்திலான கழுத்தை ஒட்டிய நெக்லஸ்.. அதற்கு மேட்சான நீண்ட காதணியும்.. மோதிரம் பிரேஸ்லெட் வங்கி என்றிருந்த நகையை ஒருவித வெறுப்புடன் பார்த்தாள் அவள்.

 

பணம் மனித வாழ்விற்கு தேவைதான்!! ஆனால் அதற்கு நாம் எஜமானாக இருக்கும் வரையே நம்மிடம் நிம்மதியும் சந்தோசமும் குடியிருக்கும்!!

 

என்று அது நமக்கு எஜமான் ஆகிறதோ அப்போது நம்மை விட்டு அனைத்தும் பிரிந்து சென்றுவிடும்!! அதில் மனநிம்மதி மிக முக்கிய ஒன்று!!

 

அந்த மனநிம்மதி தான் இப்பொழுது வாஹினியிடம் சுத்தமாக இல்லை. முதலில் இதையெல்லாம் கண்டும் காணாமல் சந்தோசமாகவே தனது வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தவளை.. நாளாக நாளாக "அப்பாவிற்கு பின் நீ தான் பார்க்க வேண்டும்!! அனைத்தையும் கற்றுக்கொள்!! விளையாட்டுத்தனமாக இருக்காதே!!" என்று அடிக்கடி ஓதும் அன்னை ஒரு பக்கம்!!

 

"இப்படி விளையாட்டுத்தனமாய் இருந்தா எப்படி பாப்பா?? அப்பாவுக்கு அப்பாவா நான் தானே உன்னை வளர்க்கிறேன்!! உன் வளர்ப்பு சரி இல்லைன்னா பின்னாடி எல்லாரும் என்னை தானே சொல்வாங்க?? கொஞ்சம் இந்த ஆபீஸ் கணக்கெல்லாம் பாரு பாப்பா!!" என்று ஒரு கட்டு ஃபைலை எடுத்து வைத்து அவளிடம் கணக்குக் காட்ட.. இரண்டு பக்கத்திற்கு மேல் அவளுக்கும் போரடித்து தூக்கம் வந்துவிடும்!!

 

போதாக்குறைக்கு நீலிமா வாரவாரம் ஞாயிற்றுக்கிழமையானால் டான்னென்று ஆஜராகி விடுவார் தனது மகன் வத்ஸவ் ராஜூவோடு!! முதலில் அத்தை மகன் தானே சிறுவயதிலிருந்து நமக்குத் தெரிந்தவர் தானே என்று இவள் சிரித்து பேசி.. ஆனால் அதை அவருக்கு பயன்படுத்திக்கொண்டார் நீலிமா.

 

முன்னவெல்லாம் வாஹினி செல்லம்.. பங்காரு..‌ என்று விதவிதமாக அழைத்தவர் இப்பொழுது கோடலு(மருமகளே!!) என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறு வார்த்தை அவர் வாயிலிருந்து வரக்காணோம்!!

 

அதன்பிறகுதான் அலங்கரித்து தனது மகனை அவர் அழைத்து வருவது எதற்கு என்று வாஹினிக்கு புரிய.. இவள் ஒதுங்க ஆரம்பித்தாள். 

 

இவளுக்கு அங்கே சற்றே மன நிம்மதி அளிக்கக் கூடியது என்றால் அது ரிதிஷா மட்டுமே.. சித்தப்பாவின் மகள். சித்தப்பாவின் மகன் தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறான்.

 

இப்படி எங்கு சென்றாலும் அவளுக்கு பிடித்தமின்மையே!! அவளின் பிடித்ததை கேட்கும் நபர்தான் இப்போது அவள் அருகிலேயே இல்லையே.. ஒருவேளை அலள் அப்பா உயிரோடு இருந்திருந்தால்.. எப்படி தாங்குவார்?? இப்போதோ தனது மகளை நினைத்து கலங்குகிறாராக்கும்!! என்று அவ்வப்போது தன் தந்தையின் ஆளுயர படத்தை பார்த்து கண்ணீர் சிந்துவாள் வாஹினி.

 

படிப்பை காரணம் காட்டி அவள் வெளிநாடு தப்பி விடலாம் சித்தப்பா மகனைப் போல என்று இவள் நினைத்திருக்க.. 

 

நல்ல நாளிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதுவும் இவ்வளவு சொத்துடைய பெண் என்றால் கேட்கவே வேண்டாம்?? என்று சோமையா தடுக்க.. அவந்திகாவும் "நீ என்னை விட்டு போய் விட்டால் நான் என்ன செய்வது?" என்று அவரும் ஒரு புறம் கண்ணீரை மழை கொட்ட அதில் அவள் நீந்தி கரையேறவே பிரம்ம பிரயத்தனம் பட்டுவிட்டாள்.

 

அதுவும் கல்லூரி விட்டால் வீடு.. வீடு விட்டால் கல்லூரி அதன் பிறகு அவளுக்கு அக்கவுண்ட்ஸ் எப்படி பார்ப்பது என்று ஒரு மணி நேர கிளாஸ்.. அதன் பிறகு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் அது இது என்று அதற்கு ஒரு மணி நேரம் ஓடி விடும் பிறகு சாப்பிட்டு அவள் படிப்பு படிக்கவே நேரம் சரியாக இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவுமே இன்றி தங்க கூண்டில் வாடும் பஞ்சவர்ணக்கிளி ஆகவே வளர்ந்தாள் வாஹினி!!

 

எப்பொழுதும் போல இந்த பிறந்தநாள் இருபதாவதோடு இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளாக சென்றிருந்தால் கூட இவளுக்கு இத்தனை வருத்தம் இருந்திருக்காது! கீழே போக்குவதற்கு தயக்கமும் இருந்திருக்காது!!

 

 

ஆனா இது அப்படி அல்லவே??

 

இந்த இருபத்தி ஒன்றாவது வயதில் அவளை மகாகணம் பொருந்திய.. அந்த மகாகணம் என்கிறது டப்புலையும்.. மண்டை வெயிட்டுலையும் மகா கணத்தை கொண்ட ஒருவனுக்கு பேசி முடித்து இருக்கிறார் அவரது சித்தப்பா!!

 

 

 எவ்வளவு சொல்லியும் அவரும் கேட்கவில்லை. அதே நேரம் தன் மகனுக்கு தான் தன் அண்ணன் பெண்ணை கட்ட வேண்டும் என்று நீலிமாவும் தன் பெருத்த உடலை தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறார்.

 

ஒருபக்கம் சித்தப்பா காட்டிய மணமகன்!!

 

மற்றொரு பக்கம் அத்தை மகன்!! அவளுக்கு இந்த இரண்டில் ஒன்று சாய்ஸாக எடுக்க சான்ஸ்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுதான் அபத்தத்தின் உச்சம்!! 

 

கல்யாணமே வேண்டாம்! அதுவும் இப்பொழுது வேண்டவே வேண்டாம்!! குறிப்பாக இந்த இரண்டு தடி மாடுகளும் வேண்டவே வேண்டாம்!! என்று அவளுக்கு தெரிந்த இங்கிலீஷ் தெலுங்கு ஹிந்தி என்று மூன்று மொழிகளும் கூறிவிட்டாள். ஆனால் கேட்பதற்கு தான் ஆள் இல்லை.

 

அவரது அன்னை அவந்திகாவுக்கு மகளை சேப்பாக புகுந்த வீட்டில் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் இப்போதைய டார்கெட்!!

 

அவரின் டார்கெட்டை இரு அணிகளாகப் பிரிந்து வாஹினியை தங்களுக்குள் ஃபுட்பாலாக உதைக்க களம் இறங்கி விட்டனர். ஒருபக்கம் சோமையா மறுபக்கம் நீலிமா.

 

 

இதில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ற பெரும் யோசனையோடு தன் சித்தி அனுமாலி கொடுத்த நகைகளை சுரத்தையே இல்லாமல் போட்டுக் கொண்டிருக்கும் போது அவளது அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் ரிதிஷா..

 

 

(சத்தியமா இவங்க தெலுங்கில் தான் பேசிக்கிறாங்க.. அத நீங்க நம்பணும்!! அவ்வளவு பெரிய பெரிய டயலாக்ஸ் எல்லாம் எனக்கு தெலுங்கில் தெரியாத காரணத்தினால் தமிழில் இங்கே கூறுகிறேன்)

 

 

"ஹாய்‌ கா..!!" என்று உள்ளே வந்த ரிதிஷா அக்காவின் அழகை பார்த்து "அப்படியே சிண்ட்ரெல்லா கதைகள வர பிரின்சஸ் மாறியே இருக்க அக்கா நீ!!" என்று அவளது பட்டு போன்ற மென்மையான கன்னங்களை வருடினாள்.

 

 

உண்மையில் டிஸ்னி வோர்ல்டு கதாபாத்திரங்களில் வரும் பிரின்சஸ் போலவே பால் நிற வண்ணத்தில்.. நாவல் பழம் கவுனில்.. வைரங்கள் மின்ன முடியை அழகாக கொண்டையாக்கி அங்காங்கே மிக கவனமாக பிசிறு வைத்து.. உடைக்கேற்ற ஒப்பனை செய்து.. எழில் ஓவியமாக நின்றாள் வாஹினி.

 

 

 

"சும்மா இருடி!! நீ வேறே எதையாவது பேசிகிட்டு" என்று மீண்டும் ஒருமுறை தனது அலங்காரத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு திருப்தி. இல்லையென்றால் அம்மா ணொனணொனனு ஒரு பக்கம் புலம்பிக்கொண்டே இருப்பார். அதற்காக இப்படிப்பட்ட விழாக்களில் விருந்துகளில் தன்னை நேர்த்தியாக அலங்கரித்து அனைவரும் முன்னும் உலா வருவாள் நிலாவாக இவள்!!

 

"நிஜமாவே நீ அவ்வளவு அழகு!!" என்று அக்காவின் கன்னம் தொட்டு திருஷ்டி எடுத்தவள் "முக்கியமான விஷயம் சொல்ல சொன்னாங்க அப்பா.. அந்த நாக பிரசாத் சவுத்ரி வந்துட்டானாம்"

 

"அவன் பெரிய விவிஐபி என்கிறதுனால தனியா மேல ஒரு ஹால்ல உன் கூட பேசறதுக்கு வெயிட் பண்றாராம். உன்னை அங்கு அழைச்சிட்டு போக சொன்னார் அப்பா" என்று கூறிய ரிதியின் விழிகளோ நமட்டுச் சிரிப்பில்..

 

"தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்‌டி.. கழுத்தை ஒரே கவ்வா கவ்வி ரத்தத்தை உறிஞ்சி விடுவேன் வேம்பயர் ஆக.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்னை!! அந்த ஹல்குக்கு போய் ஹலோ சொல்லனுமா? அதெல்லாம் என்னால முடியாது" என்று முறுக்கிக்கொண்டு நின்றாள் வாஹினி..

 

"ஹல்குக்கு ஹாய் சொல்லவில்லை என்றால் நம்ம அத்தை பெத்த ரத்தினத்திற்கு ஓகே சொல்ல நேரிடும் பரவாயில்லையா?" என்று வாஹினியின் மனதை அறிந்தவாறே ரிதி கேட்க..

 

"அட ஆமாம் இல்ல!! இந்த லூச வேற மறந்துட்டேனே!! இப்ப என்னடி செய்யலாம்?" என்று அவள் கையை உதற..

 

"இங்க பாருக்கா நீ போய் அந்த நாக பிரசாத்தை பார்த்தினா ஒன்னும் பிரச்சனை கிடையாது. இப்போதைக்கு அவன் கிட்ட நீ ஓகே சொல்லணும்னு அவசியமும் கிடையாது. ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லிவிட்டு வந்துடலாம்!! இல்லேன்னா என் மருமகளுக்கு என் பையன தான் பிடிச்சிருக்கு.. அதனால தான் நீங்க செஞ்ச ஏற்பாட்டை அவள் தவிர்த்திட்டாள்னு" அத்தை அவங்களா ஒரு காரணத்தை கொம்பு பிடிச்சிக்கிட்டு நிற்பாங்க.. அப்புறம் அவ்வளவுதான்!!" என்று ரிதி சொல்ல.. 

 

 

"சரி பார்க்கிறேன்.. நீயும் என்கூட வா" என்று வர மறுத்தவளைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் வாஹினி.

 

மூன்றடுக்கு அரண்மனை போன்ற பெரிய மாளிகை அது!! அதில் இரண்டாம் தளத்தில் தான் வாஹினி ஜாகை!

 

முதல் தளத்தில் அவர்களுடைய சித்தப்பா மற்றும் அவரது பசங்கள் இருக்க.. அடிக்கடி வந்து போகும் நீலிமாவோ இரண்டாம் தளத்தில் இருக்கும் ஒரு அறையிலேயே தங்கிக் கொள்வார். கேட்டால் மருமகளை பிரிந்திருக்க முடியவில்லை என்று கூறி அனைவரையும் வாயடைக்க வைப்பார்.

 

மூன்றாவது தளத்தில் இருப்பதுதான் விருதுனர்களுக்கான இடம். லிஃப்டில் மூலம் இவர்கள் மூன்றாவது தளத்தை அடைய.. சற்று தூரத்தில் இவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான் ஒருவன்.

 

 

ரிதிதான் கண்களை சுழற்றி நாக பிரசாத்தை தேடிக் கொண்டே இருந்தாள். ஆனால் வாஹினி அவனைப் பார்க்கவே விருப்பம் இல்லாதபோது எதற்கு கண்களை அலைபாய விட போகிறாள்?

 

 

"அங்க பாரு!!" என்று சட்டென்று உணர்ச்சிப்பெருக்கில் தன் கையை பிராண்டிய தங்கையை பார்த்து "எதுக்கு இப்ப பூனைக்குட்டி மாதிரி பிராண்டுற டி!!" என்று கேட்க..

 

 

"அப்பா பார்த்த மாப்பிள்ளையை அங்கதான் நிற்கிறான்!" என்று இவள் காதில் கிசுகிசுத்தாள்.

 

ஒரு ஆறு அடிக்கு மேல இரண்டு இன்ச் இருப்பானே??

 

அட!! ஆமா கா!!

 

இந்த ஆம்ர்ஸ் எல்லாம் உருண்டு திரண்டு இருக்குமே!! இருக்கா?

 

 

இருக்கு!! இருக்கு!!

 

அவன் மார்பு பத்து ஆளு வந்து பந்து விளையாடுவது போல விரிந்து பரந்து ப்ளே கிரவுண்ட் மாதிரி இருக்குமே??

 

ஆமா கா!! வாயை பிளந்தாள் ரிதி.

 

அப்புறம் அந்த அலையலை கேசம்.. கூரான மூக்கு.. அழுத்தமான தாடை இறுக்க மூடிய உதடுகள் இதெல்லாம் இருக்கா பாரு?

 

மீண்டும் வாயை பிளந்து நின்றாள் ரிதி!! தலையை மட்டும் ஆட்டினாள்.

 

"அந்த பக்கம் பார்க்காம எப்படிக்கா இவ்வளவு கரெக்டா எல்லாத்தையும் சொல்ற?" என்று அவள் கேட்க அதிசயிக்க..

 

 

"வேற?? ஹீரோனாலே இதுதானே அடையாளம்!! சோ போரிங்!! யூ க்நோ!!" என்றாள்‌ வாஹினி அலுப்புடன்.

 

"ஆனாலும் உன் வாய் கொஞ்சம் கூட அடங்கு தான் பாரேன்!! அவர் தூரமா திரும்பி நிற்கிறதுனால அவர் ஹைட் ஓகே!! பின்பக்கமா அவருடைய அந்த ஆம்ர்ஸ் மட்டும் தான் தெரியுது. மத்ததெல்லாம் நீயே சரியா இருக்கான்னு போய் பார்த்து செக் பண்ணிக்கோ.. போ.. நான் வரேன் கா.. பை! பை! பை!!" என்று அவள் கீழே ஓடி விட்டாள்.

 

இதுவரை இல்லாத தயக்கம் இப்பொழுது வந்து ஒட்டிக்கொண்டது வாஹினினுக்கு. என்ன பேசுவது என்று ஒன்றும் தெரியவில்லை. மெதுவாக தயங்கி தயங்கி அவன் அருகே சென்று அவள் "ஹாய்!!" என்று அழைக்க அந்த பக்கம் எதிர்வினை ஒன்றுமே இல்லை.

 

"ஆக்ட்சுவலா.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை" என்று மெதுவாக கூறியவள் அவனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று சற்று நேரம் பொறுத்து இருந்து பார்க்க.. அசையாத சிலையாய் அவன்.

 

"அப்பாடி!! நாம பேசுறத காது கொடுத்துக் கேட்கிறான்!!" என்று கேட்டதற்கு இரண்டு காதுகள் கிடைத்தது என்று இதுவரை தான் வாழ்ந்தது வாழ்ந்து கொண்டிருப்பது இனி எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தது என்று அனைத்தையும் பக்கம் பக்கமாக கூறி முடித்து "நீங்களே எங்க சித்தப்பா கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுகிறீர்களா?" என்று கேட்க..

 

அப்பவும் அசையாமல் நின்றவனை பார்த்து "ஏன் இப்படி நின்றிருக்கிறான்?" என்று மெதுவாக அவன் தோளை சுரண்டினாள் வாஹினி.

 

மெதுவாக அவன் திரும்பி இவளை பார்க்கும் முன் யாரோ "வாஹி.. வாஹி!! என்று கூப்பிடும் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க அங்கே ஆஜானுபாகுவாக புல் சூட்டை இறுக்கமாக தனது உடலில் நுழைத்துக்கொண்டு வேக நடையுடன் அவளை நெருங்கினான் ஒருவன், தன்னை நாகப்பிரசாத் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள.. திக்கென்று அதிர்ச்சியில் அவள் பின்னாடி பார்க்க.. அங்கே இவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனை காணவில்லை.

 

"அப்போ இவ்வளவு நேரம் இங்க நின்னது யாரு?? ஐயையோ நான் வேற கதை கதையா அவன் கிட்ட பேசிட்டு இருந்தேனே!! இப்ப என்ன பண்றது?" என்று இவள் தவிப்புடன் நிற்க. 

 

இவளை கண்களால் முழுங்கிக் கொண்டே அவளை தனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. கல்யாணத்துக்கு சித்தப்பாவிடம் சம்மதம் சொல்லி விடுகிறேன் என்று கூறியவன் அடுத்த நொடி விரைந்து செல்ல..

 

"ஐயையோ!!! நான் இவன்கிட்ட பேசறதை எல்லாம் அவன் கிட்ட பேசிவிட்டேனே.. இனி எப்படி கல்யாணத்தை நிறுத்துவது??" என்ற தவிப்புடன் இவளும் கீழே ஓடி செல்ல..

 

அதற்குள் அவன் லிப்ட் இறங்கி சென்று விட்டான். "இந்த காண்டாமிருகம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் போலயே.. இப்போ என்ன பண்ணுறது?" என்று யோசித்துக் கொண்டே கீழே விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தாள்.

 

ஒரு பக்கம் சோமையா இவளது கல்யாணத்தை காண்டாமிருகத்தோடு என்று கன்பார்ம் செய்து விட.. மறுபக்கம் அத்தையோ அந்த அண்டாசுரனுடன்.. தன் மகனுடன் கல்யாணம் நடக்க வேண்டும் என்று அடம் பிடித்து சண்டை பிடிக்க..

 

அவளால் அந்த நேரம் அந்த இடத்தில் மூச்சுவிட முடியவில்லை. 'என்ன சுத்தி இவ்வளவு சொத்து சொந்தம் பணம் இருந்து என்ன பிரயோஜனம்?? ஒரு பிறந்தநாளை கூட சந்தோஷமாக கொண்டாட முடியலை!' என்று வருத்தம் வலி என்று மிகுந்தது.

 

சட்டென்று இவர்கள் கண்ணில் படாமல் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி பின் சீட்டில் அமர்ந்து விட்டாள்.

 

அங்கே இருப்பவர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொள்ளட்டும். இல்லை எதுவாவது பண்ணி கொள்ளட்டும். ஆனால் அண்டாக இல்லை காண்டா இரண்டில் ஒன்றை கூட நான் கட்டிக் கொள்ளப் போவதில்லை!!" என்று கைகளை கட்டி இறுக்கமாக அமர்ந்து கொண்டு இருந்தவளுக்கு தன்னை நினைத்தே சுயபச்சாதாபம் எழ விழவா விழவா என்று கேட்டுக் கொண்டிருந்த ஒற்றை வைரத் துளி கண்ணீர் சற்று நேர்த்தில் பெரும் அருவியாக கொட்டி தீர்த்தது.

 

அழுது அழுது ஓய்ந்து அந்த காரிலேயே கண்களைமூடி உறங்கிவிட்டாள்.

 

திடீரென்று வானத்தில் பறப்பது போல.. மேகத்தில் தவழ்வது போல.. ஏதேதோ கற்பனை சிறகுகள் விரித்து பறப்பது போல.. கனவு அவளுக்கு வர.. அந்த சுகத்தில் கனவிலாவது இப்படி செல்கிறோம் எங்கே கண்ணைத் திறந்தால்.. இந்த கனவு கலைந்து விடுமோ என்று பயந்து தூங்கிக் கொண்டு இருந்தவள் அப்படியே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டாள்.

 

திடீரென்று கார் ஒரு இடத்தில் நடத்தப்பட்டிருக்க.. வெளியே ஏதோ காச்சு மூச்சு என்று சத்தம் கேட்க.. "என்ன ரூம்க்குள்ள இவ்ளோ சத்தம் போட்டு பேச தைரியம் யாருக்கு இருக்கு?" என்றவாறு நெட்டி முறிக்க கைகளை உயர்த்தியவள் கை.. அந்தரத்தில் நின்றது. கொட்டாவி விட திறந்த வாய் பிளந்தப்படி இருந்தது.

 

"என்னது நாம இன்னும் காரில் இருக்கிறோமா?? கார் இப்ப எங்க வந்து நிற்கிறது?" என்று பார்க்க ஏதோ ஒரு வெட்டவெளியில் நின்று கொண்டிருந்தது.

 

"ஹோய்!! நான் சொன்ன மாதிரியே உங்க ரெண்டு பேரையும் பெட்டில ஜெயிச்சு அந்த அரண்மனையில் இருந்து காரை தள்ளிகிட்டு வந்துட்டேன் பாத்திங்களா!!! எடுங்கடா துட்ட!!" என்று அந்தக் காரின் பேனரில் அமர்ந்து தனது அசிஸ்டன்ட்களான ஜிகாபைட் மற்றும் மெகாபைட்டிடம் தனது பெட் பணத்தை வசூலித்துக் கொண்டிருந்தான் கார் திருடனான ஜித்து!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top