அசுரன் 9
தாடை இறுக.. கழுத்து நரம்புகள் புடைக்க.. நறநறவென்று பல்லைக் கடித்தவன், அவள் வயிற்றில் கை வைத்து அவன் கேபினில் இருந்த சுவரோடு நெருங்கி நின்றான். மேல் மூச்சு அவன் வாங்க.. கீழ் மூச்சு இவள் வாங்க.. அங்கே மூச்சுகள் மட்டுமே சீற்றமாய்..!
ஆருஷியும் பேசவில்லை. ராவண்னும் பேசவில்லை.
இதழ்கள் பேசாததை.. இருவரின் கண்களும் பேசிக் கொண்டன..!
அவள் வயிற்றில் இருந்த கையை அவன் அகற்றவேயில்லை. அதனில் ஒரு மெல்லிய அழுத்தமில்லா அழுத்தம்..!
“இதுக்கு அப்புறமும் சுக்ரேஷ் கூட கல்யாணமா?” என்றான் அவளின் பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை அவள் முன்னே காட்டி.. அதில் இரு பிங்க் கோடுகள் அழகாய்.. அழுத்தமாய்..! அவர்களின் உறவுக்கு சாட்சியாய்..!!
உதட்டைக் கடித்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ஆருஷி. ராவண் கோபமாக அவளின் தாடையைப் பற்றி தன் புறம் திருப்பினான் ஆருஷியின் முகத்தை.
“சொல்லு டி.. கேட்கறேன் தானே? நீ ப்ரகெண்ட்டா இருக்கிறது உனக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா?” என்றவனின் வார்த்தைகள் யாவும் கனலிட்டது போல அனலாய் வெளி வந்தது.
அவன் கேள்விகள் எதற்குமே அவள் பதில் அளிக்கவில்லை. மௌனத்தையே பதிலாக சுமந்தபடி அவள் நின்றிருக்க..
“சொல்லுடி கேக்குறேன்ல?” என்று எரிந்து விழுந்தவனை வெறுமையான பார்வை பார்த்தவள் “நான் பிரக்னண்டா இருக்குறத உங்களுக்கு ஏன் நான் சொல்லணும்? உங்கள்ட்ட இருந்து அதை மறைச்சதுனால உங்களுக்கு என்ன சார் பாதிப்பு? ஜஸ்ட் யூ ஷேரிங் பெட் வித் மீ..!” என்றாள் குரலில் அத்தனை ஆத்திரத்தை தேக்கியபடி..!
அவள் கூறிய வெறும் ‘பெட் ஷேரிங்’ என்ற வார்த்தையில் உள்ளுக்குள் துடித்தது ராவண்னின் காதல் மனது.
“வாட்வெர்..!! அது.. அது.. என் குழந்தை..!” என்றான் மீட்டு எடுத்த விரைப்பான நிமிர்வோடு..!
“உன் குழந்தையா?” என்று வெறுப்பாக முகத்தை சுழித்தவள் “எது உன் குழந்தை? நான் சொன்னா தான் அது உன் குழந்தை..! குழந்தை பிறப்பிற்கு காரணம் எந்த ஆணாக வேணாலும் இருக்கலாம். ஆனால்.. அதை அந்த பெண் தான் சொல்லணும்..! அப்போதான் நீ ஆண்னு ஹீரோவா ஜொலிப்ப.. இல்லைன்னா நீ வெறும் ஜீரோ தான்..!” என்றாள். கையைக் கட்டிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான் ராவண்.
“ஓகே..! ஐ அக்செப்ட்..! இப்ப இருக்கிற டெக்னாலஜி வச்சி டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக அது உன் குழந்தைனு நீ நிரூபிக்கலாம். ஆனா.. ஒரு குழந்தையின் அம்மாவா அந்த குழந்தை உனக்கு தான் பிறந்தது.. உன்னோட அப்பா இவர் தான் நான் சொன்னா தான் உனக்கு அது பெருமை இல்லைனா…” வார்த்தைகள் அற்ற மௌனத்தால் அவனை அடித்து வீழ்த்தினாள் ஆருஷி.
அன்று ஒரு நாள் அவன் கொடுத்தவற்றுக்கு இன்று பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
நெற்றியை இருவிரல்களால் அழுத்திப் பிடித்தான், பெரும் மூச்சுகளை விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “ப்ளீஸ் டி பாப்பா.. நான் சொல்றதை கேளுடி..! அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா.. ஏன் நான் அப்படி பேசினேன்னா..” என்று அவன் சொல்ல வர, தன் கையை அவன் முன்னால் நிப்பாட்டு என்பது போல காட்டியவள் “உன்னோட விளக்கங்களை கேட்க நான் இங்கே வரவில்லை..! ஆக்சுவலா வந்ததே ஏதோ எமர்ஜென்ஸி கூப்பிட்டதுனால தான்” என்றாள்.
“அப்போ இது எமர்ஜென்சி இல்லையா??” என்று தன் கையில் இருந்த பிரக்னென்ஸி கிட்டை காட்டி கேட்டான்.
“இல்லை..! எனக்கு 45வது நாளிலே தெரியும். நான் டாக்டர் இல்ல தான். ஆனா.. ஒரு டாக்டர் கூட குடித்தனம் நடத்தினேனே..!” என்றவள் மெல்ல தன் வயிற்றை தடவி கொடுத்தவள்,
“இது என் குழந்தை..! எனக்கே எனக்கான குழந்தை..! சிங்கிள் மதரான என் வாழ்க்கையிலும் என் குழந்தை வாழ்க்கையிலும் நீ எங்கேயும் கிடையாது..!” என்றாள் தீர்க்கமாக..!
“நான் எங்கேயும் கிடையாதா? கிடையாதா டி??” என்று அருகில் இருந்த சுவற்றில் முஷ்டியால் தன் பலம் கொண்டு மட்டும் குத்தினான். அது கண்ட ஆருஷி தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
“சொல்லு டி.. சொல்லு..” அவளின் தோளினை இரண்டையும் பிடித்து அவன் உலுக்க..
நெற்றி சுருக்கி பல்லை கடித்தவனின் செயல்கள் ஏதும் ஆருஷியை பயம் கொள்ள வைத்திடவில்லை. அவனைத் தள்ளி விட்டு அறை கதவைத் திறக்க அவள் முயல, ஆருஷியை கையை அழுத்தமாக பற்றிய ராவண் விருட்டென அவளை இழுத்து இதழ்களில் அழுத்தமாக தன் முத்திரையை வைத்தான்.
எதிர்பாராத முத்தம் முதலில் கசப்பாய் இருந்தாலும் பின் இனிக்கத்தான் செய்தது ஆருஷிக்கு. அவனை தள்ளி விட்ட கைகள் அமைதிமாக இறுக்கிக் கொண்டது அவனது பின்னந்தலை கேசத்தை.. உள்ளே அவள் கொண்ட நேசத்தை மறைக்க முடியாமல்.. இயலாமல்..!
என்றோ அவ்வதரங்களின் வன்மையில் சிதைந்த தன் அதரங்களை நினைவில் வந்து போக.. இன்று அதற்கு பதிலடி தருவதாய் நினைத்து அவனின் அதரங்களை தேனீயாய் கொட்டினாள்..
அவள் தேளாய் கொட்டுனாலே அவனுக்கு அது தேனீ கொட்டியது போலத்தான் இருக்கும்..!
அவளோ இன்று தேனீயை போல் கொட்ட அதுவோ அத்தேனீக்கள் சேர்க்கும் மதுரமாய் இனித்தது அவனுக்கு.
“இது தான் ரிவெஞ்சா டார்லிங்.. ஐ லவ் இட்..! இட் மெஸ்மெரஸிங் மீ..! அடுத்த தப்பு செய்ய ஆவலாய் இருக்கேன் கண்மணி” என்ற ராவண்னின் இதழ்கள் வண்டாய் அவளின் காது மடல்களை மொய்த்தது.
மிதமான முத்தத்தில் அவள் அதரங்கள் தந்தச் சூட்டில் ராவண்ணின் தேகம் விரைப்புற. மீண்டும் அந்தி ராட்சஸியோடு வன்மையாய் ஒரு கட்டில் யுத்தம் நடத்த அவன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களும் ஏங்கி நின்றன..!
அவளோ அவன் அதரங்களை பற்களால் கடித்து இழுத்தாள். தன் மன சஞ்சலத்திற்கும் தன் மனதில் பொங்கி எழும் கோபத்திற்கும் வடிகாலாய் அவனது அதிரங்களை மென்று தின்று கொண்டிருந்தாள் ராவணின் பொல்லா ராட்சஸி..!
பெண்மைக்குள் இருக்கும் ஒவ்வொரு வன்மையையும்.. அடங்கா ஆண்மை ரசித்தது..!
கற்பு மட்டுமல்ல ஆசை.. தாபம்.. மோகம்.. ஏன் காமம் கூட இரு பாலருக்கும் பொது தான்..!
தன் இணையிடம் தேடும் தேடல் என்றுமே தவறில்லை..!
வலியில் கத்திட தோன்றியது அவனுக்கு. ஆனால்.. அவளின் தண்டனையை முழு மனதாக ஏற்றுக்கொண்டு அமைதியாக தன்னை அவளிடம் ஒப்புக்கொடுத்து நின்றான் ராவண். அவளின் ஒவ்வொரு செயலும்.. ஸ்பரிசமும் அவனுள் உயிர் கொண்டது.
“டாக்டர்.. ஒரு எமர்ஜென்சி கேஸ்..” என்றபடி வேகமாக மீரா உள்ளே நுழைய சட்டென்று இருவரும் பிரிந்து விலகி நின்றனர்.
ஆனாலும் மீராவின் ஸ்கேன் கண்களுக்கு அவர்களின் இணைப்பும் நெருக்கமும் தப்பவில்லை. ஆனால் அதை கேட்கவும் அவளுக்கு உரிமை இல்லாது, கேட்கும் நேரமும் இப்போது இல்லை.
“சார்.. ஒரு ஆக்சிடென்ட் கேஸ். பொண்ணு நிறைமாசம் எமர்ஜென்சில் இருக்காங்க.. உங்கள உடனே சாருலதா மேம் வர சொன்னாங்க..!” என்று அவள் சற்று பதட்டத்தோடு பேச.. திரும்பி அருகே நின்றிருந்த ஆருஷியை ஒரு பார்வை பார்த்தவள், “வாங்க.. சிஸ்டர் போகலாம்..!” என்று வேகமாக வெளியேறினான்.
செல்லும்போது அனிச்சை செயலாக அவனது இடது கை அவளது வயிற்றை மென்மையாக வருடி சென்றது.
ஆருஷி அந்த தொடுகையில் சிலிர்த்து சிலையென கண்களை மூடி சுவற்றிலே சாய்ந்து நின்றிருந்தாள் இடது கண்ணோரம் கண்ணீர் வழிய..!
ஆனால்.. அவன் திரும்பி வந்து பார்த்தபோது அவள் இல்லை..! அம்மருத்தவமனையில் மட்டுமல்ல
அவ்வூரிலேயே இல்லை…!
“என்னாச்சு டாக்டர்?” என்றபடி வேகமாக எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் நுழைந்தான். சாருபாலா அந்த பெண்ணின் வைட்டல்ஸை செக் செய்து கொண்டிருந்தவர், “அர்ஜெண்டா சி செக்சன் போகணும் இல்லேன்னா ரொம்ப கஷ்டம்” என்றபடி அவனை பார்த்தார்.
அவசரமாக அவனும் அந்த பெண்ணின் பிபி யை பார்த்தான். அதுவோ ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. “பிபி ஒரு ஸ்டேபிளாக இல்லையே.. எந்த வைட்டல்ஸூம்.. ம்ஹும்..” என்றவனின் அதி வேகத்துடன் அடுத்தடுத்து தேவையான டிரீட்மென்ட் பார்த்தான்.
அருகில் காயத்ரி இருக்க ராவண் இருப்பதால் மீராவும் அங்கேதான் இருந்தாள்.
“ராவண்.. லேபர் இன்டூசிங் இன்ஜெக்ஷன் கொடுத்து பார்க்கலாமா?” என்று சாருபாலா கேட்க..
“நோ வேலைக்காகாது மேம். இந்த பெண்ணாலே இப்போது புஷ் பண்ணி நார்மல் டெலிவரி பண்ணவே முடியாது. வீ கோ ஃபார் சி செக்க்ஷன் அதுதான் பெட்டர் ஆப்ஷன்.. அனஸ்தீசியா டாக்டர் செல்வத்துக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க மீரா.. கம் க்விக்..” என்றவன், “காயத்ரி சிஸ்டர் சி செக்ஷனுக்கு நீங்க தியேட்டர் ரெடி பண்ணுங்க..” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே அப்பெண்ணை பார்த்தான் ராவண்.
இவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து மருத்துவமனை ஊழியர்களும் ஓட அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பெண் மயக்க மருந்துக்கு கொடுக்கப்பட்டு தயாராக இருந்தாள் அறுவை சிகிச்சைக்கு.
சாருபாலா ராவண்னிடமே அறுவை சிகிச்சை பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்.
ராவண் வேகமாக ஸ்டெர்லைசிங் ரூமில் உடைமாற்றி அங்கு செல்லும்போது குறுக்கே முகம் கை, கால்களில் காயங்களோடு வந்து நின்றான் ஒருவன்.
“சார் எப்படியாவது என் வைஃப் குழந்தையும் காப்பாத்துங்க சார்.. எல்லாம் என் தப்பு.. என் தப்புதான்..! அவளுக்கு ஏற்கனவே பிபி இருக்கு. நாங்க வெளியில் போகும் போது ஆபீஸில் கால் ஒன்னு வந்துச்சு. அதுல கான்சன்ட்ரேட் பண்ணிட்டு டிராபிக்ல கான்சன்ட்ரேஷன் வைக்க மறந்துட்டேன்..” என்று அவன் அழுக..
கண்களாலையே அவனை எரித்தான் ராவண். “அவங்களுக்கு ஏற்கனவே பிபி இருந்திருக்கு.. எப்ப வேணாலும் குழந்தை பிறக்கலாம் என்கிற நிலைமையில் எப்படி கேர்லஸா இருந்தீங்க? இப்போ பிபி தாறுமாறு எகிறிக் கிடக்கிறது. எல்லா வைட்டல்ஸூமே குறைவாக இருக்கு. ஆபரேஷன் தான் பண்ணனும். அவங்களுக்கு நார்மல் டெலிவரி சான்ஸே இல்ல .. பனிக்குடம் வேற ஏற்கனவே உடைஞ்சிடுச்சு.. உள்ள பேபி இந்நேரத்துக்கு மூச்சு திணறும்.. மேக்ஸிமம் ரெண்டு பேரையும் காப்பாற்ற ட்ரை பண்ணுறேன். ஆனாலும் குழந்தையைக் காப்பாற்றுவது கஷ்டம் தான்!" என்று அவன் தலையில் பெரிய கொண்டு தூக்கிப்போட...
மற்றதெல்லாம் மறந்து போக 'குழந்தையை காப்பாற்ற முடியாதா? நான் இருக்கும் போதே குழந்தையைக் காப்பாற்ற முடியாதா? அவ என்கிட்ட குழந்தையை காப்பாற்ற சொன்னாளே!' என்று அதே நினைப்போடு நின்ற இடத்திலேயே சிலையாக நின்று கொண்டிருந்தவன், அடுத்த நொடி தடால் என்று ராவண் காலிலே விழுந்துவிட, ராவண் அதிர்ச்சியாய் நின்று விட்டான்.
“டாக்டர்.. டாக்டர்.. எப்படியாவது என் குழந்தையை காப்பாத்தி கொடுங்க டாக்டர்.. என் வாழ்க்கையை காப்பாற்றி கொடுங்க டாக்டர்.. என்னோட கேர்லெஸ் தான். இனிமே இந்த மாதிரி கேர்லஸா இருக்க மாட்டேன் டாக்டர்.. வேல வேலைன்னு பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டேன். இன்னும் ஒரு சான்ஸ் குடுங்க டாக்டர். ப்ளீஸ் ப்ளீஸ் எப்படியாவது ரெண்டு பேரையும் மீட்டு கொடுங்க டாக்டர். இனி ஒரு தடவை அவங்கள தொலைக்க மாட்டேன் டாக்டர்” என்று கதறும் அந்த இளம் வயது கணவனை கண்டவனுக்கு அவனை அறியாமல் இடது கண்ணோரம் நீர் துளித்தது.
அதற்குள் அங்கு வந்து சாருபாலா “உங்களை மாதிரி இந்த ஜென்ரேஷன் ஆட்களுக்கு வேலை.. ஆபீஸு.. உங்களோட கெஜட் இதிலேயே சுத்தி சுத்தி.. உங்க சுத்தி ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறதோ மனைவி குழந்தை அம்மா அப்பா இருக்கிறதோ எல்லாம் மறந்தறீங்க.. இருக்கும்போது எதுவும் தெரியாது தொலைச்சதும் தான் உங்களுக்கு அது எத்தனை அருமைனு தெரியும்..!!” என்று அவனை சற்று கடுமையாகவே திட்டியவர்,
“ராவண் சார் நீங்க போங்க.. டைம் ஆயிடுச்சு” என்க,
“எஸ் மேம்..” என்று ராவண் உள்ளே நுழைய, மீண்டும் அந்த இளம் கணவனின் குரல் அவனை துரத்தி வந்தது.
“எப்படியாச்சும் என் பிள்ளையும் பொண்டாட்டியையும் காப்பாற்றிக் கொடுங்கள் டாக்டர் சார்.. என் வாழ்க்கையை காப்பாத்தி கொடுங்க டாக்டர் சார்” என்று கதறும் அக்குரல் அவனுள் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியது.
எப்பொழுதையும் விட தன் அதீத முயற்சியை கொடுத்து அவ்விரு உயிர்களையும் இழுத்துப் பிடித்து ஒருவழியாக காப்பாற்றி விட்டான் ராவண். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆனது, குழந்தையும் தாயையும் சிக்கல் இன்றி பிரித்து எடுக்கவே.. அதன் பின் 12 மணி நேரம் கடந்து தான் சொல்ல முடியும் குழந்தை உயிர்பிழைக்குமா என்ற நிலை..!
வெளியில் அக்குழந்தையின் தந்தை தவித்தான் என்றால்.. அவனுக்கு மேலே அங்கிருந்த குழந்தை நல மருத்துவரோடு ராவண்னும் சேர்ந்து போராடினான் அந்த குழந்தையை மீட்க.. அத்தனை கவனித்தான், ஏனோ தன் குழந்தை தெரிய வந்த இந்த நேரத்திலே பிறந்த குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்ற ஒரு வேகம்..!
ஒரு வழியாக எல்லாம் முடிந்து தாய் சேய் இருவரும் நலம் என்று செய்து வரவே ஒரு நாள் ஓடி இருந்தது.
இருந்தும் இருவரும் ஐசியூவில் இருக்க.. அந்த இளம் கணவனும் ராவண்னின் காலை பிடித்து கதறி அழுதான் தன் நன்றி தெரிவித்து..!
இது மாதிரி எமோஷனலான மனிதர்களையும் அவர்களின் நன்றிகளையும் கண்டதில்லை ராவண் தன் வாழ்நாளில்..
வெளிநாட்டில் எல்லாம் இம்மாதிரி யாரும் காலில் விழுந்து நன்றி எல்லாம் கூற மாட்டார்கள். அழுத விழிகளோடு கைகூப்புவார்கள். இவனும் சாதரணமாக கடந்து விடுவான்.
இன்று ஏனோ இந்த இளம் கணவனும் அவனது வார்த்தைகளும் அதிக தாக்கத்தை ராவண் உள்ளே ஏற்படுத்த. ஏற்கனவே தன் வார்த்தைகளால் தன்னவளுக்கு தப்பு செய்ததே நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் இன்னும் குத்திக் கொண்டிருக்க.. அந்த இளம் கணவனின் கண்ணீர் இன்னும் அதற்கு வலு சேர்க்க இதயத்தை லேசாக வருடிவிட்டான்.
அதேநேரம் எதையோ சாதித்த உணர்வு அவனுக்கு!! அமர்ந்த வாக்கிலேயே அண்ணாந்து மேலே பார்த்தவன், வானத்தைப் பார்த்து இரு கைகளாலும் பறக்கும் முத்தமிட்டு "தேங்க் காட்!!" என்றான் கடவுளிடம்!! தன் பாக்கெட்டில் வைத்திருந்து அந்த பிரக்னன்சி கிட்டை எடுத்து பார்த்தவன் “தேங்க்யூ மை ஏஞ்சல்..!” என்று ஆத்மார்த்தமாக கூறியவன் அன்று இரவை மருத்துவமனையில் கழித்து மறுநாள் ஆருஷி வரவுக்காக காத்திருக்க…
அந்நாள் மட்டுமல்ல அதற்கு வந்து அடுத்தடுத்த நாட்களிலும் ஆருஷி வரவே இல்லை.
என்னவென்று ராவண் விசாரிக்க பொழுதுதான் அவள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது..!
“என்னது படிக்க வா?” அவளின் படிப்பு லட்சணத்தை தான் அவன் ஏற்கனவே பார்த்து இருக்கிறானே.. பின் ஏன் எதற்காக என்ற கேள்விகள்
மண்டையை குழப்பியது..
எதற்காக யாருக்காக புலம்பெயர்ந்து வந்தானோ அவளையே இன்று தொலைத்து நின்றான் மருத்துவன்.
தொடரும்..