அஸ்வத்திடம் போனை பேசி விட்டு வைத்தவள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜனனியிடம் பேசி அவளோடு தங்கிட அனுமதி பெற்றுக்கொண்டாள். அவளின் அப்பா ஊருக்கு திரும்பும் வரை தற்காலிமாக தங்கிட நினைத்தாள். மிகப்பெரிய கலவரமே நடந்து முடிந்தது அவள் வெளியே தங்கிக்கொள்கிறேன் என்றதும்.
அதையெல்லாம் யோசித்தால் இனி தன் விருப்பம் போல் இருக்க முடியாது என நினைத்தவள் எதையும் சட்டை செய்யாது, ஜனனி வீட்டிற்கு வந்து விட்டாள்.
இதுநாள் வரை அவள் சுமந்திருந்த மன பாரம், கவலை, விரக்தி அனைத்தும் அவளின் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தை கண்டவளுக்கு அனைத்தும் காணாமல் போனது.
"நாளைக்கி ஒரு பிளான் இருக்கு ராசி. நீயும் வரயா?"
"என்ன பிளான்?"
"இந்த செடி ஒவ்வொண்ணும் ரொம்ப ரம்மியமா இருக்கு. இங்க வரும் போது மனசு அவ்வளவு பாரமா இருந்துச்சு. இப்போ அது இல்லை.." என்றவள் விரல்கள் செடியில் பூத்திருந்த வெண்ணிற ரோஜாவை மெல்ல தொட்டு பார்க்கும் போது, முள் குத்தி விட ஆஆ என அணிச்சையாக கையை உதறினாள்.
"பாத்து ராசிகா.." என பதறியவள், அவள் கரம் பற்ற முன் வர "ஒண்ணுமில்ல ஜனனி" என்றாள் முன்னே நடந்தப்படி.
"அழகா இருக்குற பூ கூட, என்னால உனக்கு காயம் தர முடியதுன்னு சொல்லுது பாரு!" என்றாள் வெற்று புன்னகையோடு.
"அது என்னவோ சொல்லட்டும். நீ நடிக்கிறயா இல்லையா? ப்ரோட்டியூசர் போன் பண்ணி கேட்டாரு. அந்த கம்பெனில வலிய கூப்பிடுறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?" என அவள் முன் வந்து கைகளை கட்டிக்கொண்டு கேட்ட ஜனனியை பார்த்து, "வேற வேலை ட்ரை பன்னலாம்ன்னு இருக்கேன்" என்றாள் தோளை குலுக்கி.
"லூசு போல பேசாதே ராசிகா. இப்போதைக்கு உனக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லிருக்கேன். காயம் சரி ஆனதும் ஃபார்ம்க்கு வந்திடு." என சொல்லி சென்றவளை தான் குழப்பமாக பார்த்திருந்தாள்.
மறுதினம் காலை 11.00 மணி
பாலக்காடில் உள்ள மழம்புழா டேம். பூங்காவோடு சேர்த்து, ஒருப்பக்கம் அணை என அவ்விடமே பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. கேரளாவில் இதுவே மிகப்பெரிய அணை.
ராசிகா, ஜனனி, ஆர்த்தி மற்றும் அவளின் தோழிகள் என அங்கு வார விடுமுறையை கழிக்க வந்திருந்தனர். சுற்றுலா பயணிகளையும், அந்த அணையை சுற்றியுள்ள மரங்களை எல்லாம் புதிதாக பார்த்துக் கொண்டு வந்தாள் ராசிகா.
ஜனனியின் தோழிகள் அந்த டேம் பற்றி ஆங்கிலம் கலந்த மலையாளத்தில் விளக்கிக் கொண்டு இருந்தனர். சுவாரஸ்யமாக கேட்டு கொண்டே வந்த ஆர்த்தியும், ராசிகாவும் புதரில் மறைந்திருக்கும் சில ஜோடிகளையும் பார்த்து கடந்திருந்தாள்.
"மரத்துக்கு நடுவுல மஜாவா இருக்காங்க.." என ஜனனி சொல்ல, ராசியின் கலகல சிரிப்பு ஒருவன் செவியை தீண்டியது.
"செம ஃபிகர்.. செம ஸ்டரச்சர்ல.." என்றவன் வார்த்தையை கேட்டு சட்டென திரும்பினான் பிரதீஷ்.
கதை பேசி கடந்தவர்கள், ஒரு பெஞ்ச் நிழலில் அமர்ந்து கொண்டனர். கொறித்திட வாங்கி வந்ததை அசைப்போட்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
பிரதீஷிற்கு இன்ப அதிர்ச்சி. மறுமுறை அவள் வருவாளா? என நினைத்தவனுக்கு, கண் முன் வந்து தரிசனம் தந்திட என்ன செய்வதென புரியவில்லை. அப்படியே மலைத்து போய் அவளையே பார்த்திருந்தான்.
ஷாமிலி, "மச்சி செல்ஃபி எடுத்துப்போம் டா.." என்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து எழுந்து கொள்ள, அவனுக்கு எதுவும் செவியில் விழவில்லை. அவள்.. அவள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாள்.
"டேய் மச்சி.. பிரதீஷ்.." என உரக்க அழைக்கவும் தலையை சிலுப்பி எழுந்து கொண்டவன், போட்டோக்கு போஸ் குடுத்து விட்டு அவளையே பார்த்திருந்தான்.
"மச்சி, செம ஃபிகர் டா.. அந்த க்ரீன் சுடி.." அவர்களின் கல்லூரி நண்பன் ரஞ்சித் கூற, பிரதீஷ் முகத்தை திருப்பிக் கொண்டான்.
"அவன் கிட்ட போய் எதை பேசுற பாரு.." என ஷியாம் நக்கலடிக்க, நண்பர்கள் கரவோஷம் எழுப்பி சிரித்தனர்.
பெண்களும் போட்டோ எடுத்து விட்டு இடம் மாறி அமரும் போது தான், அவனை தற்செயலாக பார்த்தாள் ராசிகா. அவளோ, யோசிக்காமல் அவனிடம் பேச சென்றாள்.
அவனுக்கோ, அவள் தன்னை நோக்கி வருகிறாள் என புரிந்து கொண்டவன் எப்படி நகர என யோசிப்பதற்குள் வந்து விட்டாள். ரஞ்சித் விழிகளோ அவளை அளவெடுக்க, "ஹாய் சார் எப்படிருக்கீங்க?" என்று விட்டாள்.
அவ்வளவு தான் பிரதீஷ் வழக்கம் போல் நாடகத்தை துவங்கி விட்டான்.
"ஹேய் யாரு நீ? எப்போ பாரு ஹாய்ன்னு வந்து நிக்கிற? லூசா டி நீ? ஓங்கி வச்சேனா.." என அவன் அடிக்க பாய, அப்போது தான் ராசிகாவிற்கு அவன் நண்பர்களோடு இருப்பது உரைத்தது.
"ஸாரி சார்.. நிஜமா நீங்க எனக்கு உதவி செய்ஞ்ச ஆள் மாதிரி இருக்கீங்க.. இப்போ அது நீங்க இல்லைன்னு புரிஞ்சது.." என குரல் தழுதழுக்க பேசியவளை கண்டு, உருகி போனது என்னவோ ரஞ்சித் தான்.
பேசியவள் சட்டென அங்கிருந்து நகன்றிட, எல்லோரும் இவன் திருந்த மாட்டான் என்று தலையில் அடித்துக் கொண்டனர். ரஞ்சித்தோ அவளை பட்சி, ஃபிகர் என்றதில் அவனுக்கு ஏனோ அப்படியொரு கோவம் உள்ளுக்குள்.
'அவளை சொன்னா உனக்கென்ன டா?' மனமோ கேள்வி கேட்க, பதிலில்லை அனிடம். சிறிது நேரத்தில் மனைவியோடு சுற்றி பார்த்து விட்டு வந்த யாதவ் வர எல்லோரும் டேம்மை பார்க்க கிளம்பினர்.
ராசிகாவை என்னவென எல்லோரும் உலுக்கி எடுக்க, அவளோ ஒன்றும் நிகழாதது போல் சமாளித்தாள் தோழிகளிடம். ஆர்த்தி தான் அவளை நன்கு படித்து கரைத்தவளாகிற்றே, "யாரு டி அவன்? என்ன அவனை பாக்கவும் வடியாத ஜொள்ளு தானா வடியுது!" என்றாள் நக்கலாக.
"அய்யோ.. ஒன்னும் இல்லை.. சும்மா வாடி.."
"ஆர் யூ ஸியூர்?"
"ம்ம்ம்.." என்றாள் சுருதி தோய்ந்த குரலில். அவளுக்கு அவள் கூறியது பொய்யென நன்கு தெரியும். வேறு எதுவும் வினவாமல் அவள் கரம் பற்றி நடந்தாள்.
பாவம் நாயகனுக்கு தான் வலிய வந்தவளை ஏசியது நெருஞ்சி முள்ளாக குத்தியது. அவனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அவளின் அடிபட்ட முகமே கண் முன் வந்து போக, இப்போது டேம் பிரிட்ஜ் மீது நின்றபடி சற்று தொலைவில் நின்றிருப்பவளை பார்க்காமல் அவனால் நகர முடியவில்லை.
எல்லோரும் ஏதேதோ பேசி வர, பாக்கெட்டில் இருந்த சன் கிளாஸ் நினைவுக்கு வர அதை மாட்டிக்கொண்டவன் அவளை மட்டுமே பார்த்து கடந்திருந்தான்.
அவள் கலக்கமாக பார்த்தது அவனை தைக்க, 'என்ன டா பண்ணி வச்சுருக்க பிரதீஷ். இவ ஏன் அடிக்கடி கண்ணுல படுறான்னு தெரியல. இப்படி அடிக்க போயிருக்க.' என நொந்தவன் பின்னாடி வந்த ஷாமிலியை திரும்பி பார்ப்பது போல் அவளை பார்த்தான். இது ஒன்று போதாதா அவளுக்கு, அவன் திட்டியது காணாமல் போய் அவன் கிளாசை கழட்டி பார்த்தது மட்டும் அவளை திக்கு முக்காட செய்தது.
தானாக உதடு மடக்கி புன்னகைத்தாள். ஏனோ, அவனை காணும் போது மட்டும் ஒரு இதமான உணர்வு அவளை வெகுவாக மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
சில மணி நேரங்கள் சுற்றி திரிந்தவர்கள் கதை பேசியபடி ஓரிடத்தில் அமர்ந்தனர். அப்போது அவனுக்கு போன் வர பேசிக்கொண்டே சற்று தூரம் தள்ளி வந்து விட்டான்.
சில நிமிடங்கள் வரை போனில் பேசிக்கொண்டிருந்தவன் போனை வைத்து விட்டு திரும்ப, கண் முன் அவள் நின்றருப்பதை கண்டு தூக்கி வாரிப்போட்டது.
"ஸாரி சார்.. என்னால நீங்க கோவப்பட வேண்டியதாயிடுச்சு.. இனி நான் உங்களை தொல்லை பண்ண மாட்டேன்.." என்றவள் பட்டென திரும்பி நடக்க அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
மனமோ போறவளை கூப்பிடு என குரல் கொடுக்க, "ஒன் செகண்ட்" என்றழைத்தான்.
அவள் மனதுக்குள் அந்நொடி ஆயிரம் பட்டாம்பூச்சி சுதந்திரமாக பறந்த நெகிழ்ச்சி. மீண்டும் திரும்பி பார்க்க அவன் அங்கில்லை. ஏமாந்து போனவள் நின்று விட்டாள் அவ்விடத்திலே.
சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு, அவனில்லாத வெறுமையை கண்டு பட்டாம்பூச்சியின் சிறகினை பிய்த்து எறிந்தது போல் உணர்ந்தாள். தோழியின் குரல் கேட்க, அதன் பின் அங்கு வந்து சேர்ந்தாள்.
அவளால் அந்நிகழ்வில் இருந்து எளிதாக மீள முடியவில்லை. பல கதைகள் பேசுபவனை விட, அமைதியாக இருந்தவன் முகமும், அதில் நிறைந்த உணர்ச்சியும் பித்தம் கொள்ள வைத்தது.
அவனோ காரில் பயணித்தபடி நண்பர்கள் அரட்டைக்கு மத்தியில். 'என்னமோ சொன்னாளே? என்ன சொல்லியிருப்பா? ஐயோ இது என்ன ஃபீலிங்ஸ்ன்னு புரியல. எப்படி இருந்தவன் ஒரு சின்ன பொண்ணை பாத்து ஜொள்ளு விடுறதா?' என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.
நண்பர்களுக்கு தான் அவன் மனம் புலம்பி தவிக்கும் பாடு தெரியாமல், தலையில் அடித்துக் கொண்டதில் அவனை விசித்திரமாக பார்த்தனர்.
இரு மனங்களும் பேச சூழ்நிலை இருந்து பேசாமல் போராடியது தான் மிச்சம். அவளும் வந்த பின் புலம்பாமல் இல்லை. தலையில் அடித்துக் கொண்டாள்.
'உதவி செய்ஞ்ச அவர்கிட்ட போய் இப்படி பேசியிருக்க. அதான் கோவிச்சுட்டு போய்ட்டாங்க. அறிவிருக்கா ராசி? என்ன ஜென்மம் நீ? அவரு தான் ஆல்ரெடி சொன்னாரே, ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்கன்னு. உன்னை அடிக்காம விட்டாருன்னு சந்தோஷப்படு.' என்றவள் அவளின் அறையில் இருந்த கண்ணாடி முன்பு நின்று கொண்டு புலம்பி தவித்தாள்.
அவனது பாடோ அதை விட மோசமாக இருந்தது.
உண்ணவில்லை.. உறங்கவில்லை.. பேச்சும் அரட்டையுமாக இருந்த நண்பர்கள் அவன் ஏன் ஏதோ யோசனையில் இருக்கான் என்பதை போல் குறுகுறுவென வேறு பார்த்தனர்.
'என்ன கருமம்ன்னு தெரியல இது. ஐயோ.. என்னமோ சொல்லிட்டு போனாளே, என்னவா இருக்கும்?' என தீவிர யோசனையில் இருந்தவனை யாதவ் குடிக்க அழைக்க வரல என்றான்.
"மச்சி அவ தூங்கவும் வரேன் டா.." என கெஞ்ச, "டேய் அவ தூங்கவும் இங்க ஏன் டா வர?" என்றான் கடுப்பாக.
"டேய் உனக்கு கூட டபுள் மீனிங் காமெடி வருது பாரேன். சரக்கு இங்க தான் ஒளிச்சு வச்சுருக்கேன்."
"என்னமோ பண்ணு டா." என்றவன் மீண்டும் அவள் நினைவிலே மூழ்கி போய் இருந்தான்.
ஷாமிலி அறைக்கு சென்று விட்டதால், யாதவ் மற்றும் ஷியாம் தான் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
"இவன் ஏன் டா மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்?"
"தெரியல டா.." என்ற புது மாப்பிளை போனில் ஒரு வீடியோவை பார்க்க, "மச்சான் என்ன ட்ரைனிங் எடுக்குறயா?" என நக்கலடித்தான் ஷியாம்.
"முண்டம் இதுல என்ன ட்ரைனிங் எடுக்க? இது லிப்லாக் டா.." என்றான் யாதவ்.
"அது லிப்லாக் இல்ல. ம்வாஹ் டா மென்டலுங்களா." என்றான் பிரதீஷ்.
'இவன் எப்போ இதை பாத்தான்? இவனுக்கு இந்த ஃபீலிங் வருமா?' என ஷியாம் அவனை ஒருவாறு பார்க்க, அதற்குள் அவனை ஓட்டமாக ஓடி கட்டிக்கொண்ட யாதவ், "சொல்லிக் குடு மச்சி" என நச்சரித்து விட்டான்.
"அவன் கிட்ட கேளு. எனக்கு தூக்கம் வருது" என்று மெத்தையில் அமர போனவனை பார்த்த யாதவ், "எல்லாம் பேசுறவனை கூட நம்பலாம். எதுவும் பேசாதவன் விஷ பிள்ளைங்க டா" என கூற ஷியாம் அதை வழி மொழிந்தான்.
பிரதீஷ், "#@@@@@@#" அசிங்கமாக திட்ட இரண்டு காதையும் பொத்திக் கொண்டே கிளம்பியவன், "மச்சி இவன்கிட்டயா? அவன் சொன்ன அந்த வாஹ் காத்துக்க போற?" என கையை தட்டி சிரித்துக் கொண்டே வெளியே கிளம்பியது தான் நொடி யாதவ் கதவை சாற்றி விட்டு அவனருகே வந்து தோளில் கை போட்டு அமர்ந்து கொண்டான்.
"அப்பறம் மச்சான்.. யாரு அந்த பொண்ணு?" என பட்டென கேட்க, பிரதீஷ் முகமோ வெளிறியது.
"எ.. எந்த பொண்ணு?" என அவன் வினவ, "அதான் புதருக்கு பின்னாடி போன் பேசும் போது, க்ரீன் சுடில ஒருத்தி வந்து உன் பின்னாடி நின்றுந்தாளே" என பார்த்த சீனை அவன் சரியாக கூறி விட்டான்.
"எனக்கென்ன தெரியும் பின்னாடி நின்றுந்தவளை?" என அவன் தோளை குலுக்க, "அப்போ தெரியாது.. சரி.." என்றவன் வேறேதும் பேசாமல் அவனருகே படுத்துக் கொண்டான்.
"டேய் ரூம்க்கு போடா. உன் ஒஃய்ப் வெயிட் பண்ணுவாங்க.."
"அவளை ஒன்னும் இராவணன் வந்து சிறை எடுத்துட்டு போய்ட மாட்டான். ஒன் டே நைட் தானே தூங்கிப்பா.." என்றான் அசட்டையாக.
"அதுக்குன்னு இப்படியா?"
"ஏன் நான் உன் ஃபீலிங்ஸ்க்கு இடைஞ்சலா இருக்கேனா?" என குப்புற படுத்து நிமிராமல் கேட்ட கேள்வியில் அதிர்ந்தவன், "என் நேரம் டா.." என்று கொண்டே தூங்க முயற்சித்தான். அது வந்தால் தானே வரவில்லை வெகுநேரமாக.
'எத்தனையோ பேரை பாத்துருக்கேன். சைட் அடிச்சுருக்கேன். இவ என்ன இப்படி டார்ச்சர் பண்ணுறா. ஆமா, இவளை இனி எங்க கண்டு பிடிப்பேன். என்னமோ சொல்லிட்டு போனாளே.. ' என அவன் விட்டத்தை பார்த்து யோசிக்க..
"ஸாரி சார்.. என்னால நீங்க கோவப்பட வேண்டியதாகிடுச்சு.. இனி தொல்லை பண்ண மாட்டேன்.." என யாதவ் பெண் குரலில் பேச, பிரதீஷ் விருட்டென எழுந்தமர்ந்தான்.
அவனை ஒன்றும் புரியாமல் அவன் திடுக்கிட்டு பார்க்க, மீண்டும் அதையே கூற அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
"என்ன மச்சான் புரியலையா? அதான் அந்த கிரீன் சுடி.. இதை சொல்லிட்டு தான் போனா.." என்றிட அவனுக்கோ தூக்கிவாரிப்போட்டது.
'இவளை எங்கன்னு தேடுவேன். யாருன்னு தெரியல. பேர் மட்டும் தான் தெரியும்.' என அவன் குழம்பியப்படி யோசிக்க, "பொண்ணு பேரென்ன? யாரு?" என யாதவ் கேட்க அவனோ இவன் இன்னும் தூங்கலையா என்பது போல் பார்த்தான்.
"ராசிகா.. அவ்வளவு தான் தெரியும். வேறேதும் தெரியாது.."
"ஏன் அவளை தெரியாதுன்னு சொன்ன? விஷயம் கேள்விப்பட்டேனே.."
"அது.. ஷாமிலிக்கு தெரிஞ்சா விஷயம் ருத்ரா காது வரை போகும் அதான்.."
"எப்படியும் உன்னை நல்லவன்னு சொல்ல போறது இல்லை. அப்போ ஏன் யாரை பத்தி யோசிக்கிற?"
அவனிடம் நிலவிய அமைதியையும், முக மாற்றத்தையும் கண்டவன் மீண்டும் அவளை தெரியுமா என வினாவினான்.
"தெரியாது டா மச்சான்.."
நண்பனை ஆழ்ந்து பார்த்து புன்னகைத்தவன், "ம்ம்ம்.. ம்வாஹ் தெரியுது. அவளை தெரியல. நான் கூட நல்ல சீன்னு நினைச்சா, நீயும் வந்துட்ட. அவளும் போய்ட்டா" என நக்கலடிக்க, பிரதீஷ் தான் அவன் முகத்தை பார்த்து ஒருவாறு புன்னகைத்தான்.
"அப்போ ஸ்நொக்?" என நண்பன் கண் சிமிட்ட, "டேய் அவ யாருன்னு தெரியாது. சந்தேகப்படுறாயா?" என புருவம் உயர்த்தினான் பிரதீஷ் நண்பன் கேட்ட கேள்வியில்.
தேன்மழை💖💖
அடுத்த பாகம் செவ்வாய் இரவு வரும்.
