அசுரன் 52

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 52

 

வளைகாப்பு முடிந்தவுடன் சம்பிரதாயத்துக்காக ஒரு நாள் மட்டும் அவ்வீட்டில் இருந்துவிட்டு  மீண்டும் கணவனுடனே செல்ல பிரியப்பட்டாள் ஆருஷி..!

 

அதனை சொல்லவும் செய்தாள் அவள் ஆச்சியிடம்..!

 

“என்னது? என்னடி சொல்ற? அதெல்லாம் முடியவே முடியாது..! ஏற்கனவே கர்ப்ப காலத்துல உன்ன பக்கத்துல வச்சி பாத்துக்க முடியலேனு நான் எவ்வளவு கவலைப்படுறேனு எனக்கு மட்டும் தான் தெரியும். இதுல வளைகாப்பு போட்டவுடனே அங்க போறேன்னு குதிக்கற நீ..” என்று‌ கோபமாக ஆரம்பித்த வள்ளியம்மை,

 

“இந்த ஆச்சிய வெறுத்திட்டியா ஆரு மா.. உனக்கு இந்த நேரத்துல பக்கத்துல இருந்து பாங்கு செய்ய கூட எனக்கு தகுதி இல்லையா? என் பொண்ணு இருந்திருந்தா உன்ன இப்படி விட்டுருப்பாளா? இல்ல நீ தான் அவ கிட்ட இப்படி சொல்லு இருப்பியா?” என்று அவர் கலங்க, ரூபிணி ஆருஷியை  முறைத்தார்.

 

கிரிதரனும் சுக்ரேஷூம் கூட அவளின் இந்த பிடிவாதத்தை கண்டு இராவண்னை பார்த்து “நீங்க சொன்னாதான் கேட்பா.. நீங்க சொல்லுங்களேன்” என்றனர்.

 

அவனோ இதற்கு என்ன பதில் சொல்ல என்று விழித்தான்..!

 

குளோரியா அமைதியாக இவர்களை பார்த்திருந்தார். அவரின் மனது நிறைந்திருந்தது.

 

அன்றோ, தன் மகனை பிரிந்து அவனின் தப்புக்காக ஊரைவிட்டு வந்தவள், பின்பும் கூட அவன் கண்ணில் படாமல் மும்பையில் சென்று பதுங்கிக் கொண்டவளா இவள்??

 

இன்றோ இத்தனை சொந்தங்கள் இருந்தும், கர்ப்ப காலத்தில் அவன் தான் வேண்டும்.. 

அவன் அருகாமை தான் வேண்டும்.. அவன் அரவணைப்பு தான் வேண்டும்.. என்று நிற்கும் மருமகளின் இந்த அன்பில் மனம் குளிர்ந்து போனது அவருக்கு..!

 

‘என் மகன் காதல ஜெயிச்சுட்டான்..! அவன் வாழ்க்கையில் ஜெயிச்சுட்டான்.. யாரு மகன் அவன்? என் சிவா மகன் இல்லையா?’ என்று மனம் விம்ம, கண்கள் பணிக்க இருவரையும் பார்த்து இருந்தார் குளோரியா…!

 

குளோரியாவின் மென் புன்னகையை பார்த்து அவரிடம் வந்து “நீயாவது சொல்லக்கூடாத மருமவளே..?” என்று உரிமையாக கேட்டார் வள்ளியம்மை. 

 

ஆம்.. அவரைப் பேரை சொல்லி எல்லாம் அழைப்பதில்லை வள்ளியம்மை..! 

 

மருமகளே என்று வாய் நிறைய தான் கூப்பிடுகிறார். என்றோ தவற விட்டதை இன்று அழைத்து மனதை சமன்படுத்திக் கொள்ளும் முயற்சி அது..!

 

“நான் என்ன சொல்ல? உங்க பழக்க வழக்கம் சம்பிரதாயம் சடங்குகள் இதெல்லாம் எனக்கு தெரியும்.. புரியும்..! ஆனா அதை எல்லாம் விட..” என்று ஆருஷியின் அருகே வந்து அவளின் வளையல்கள் நிறைந்த கையை பிடித்துக் கொண்டவர்,

 

“என் மருமகளின் மனசு ரொம்ப முக்கியம்.. அவ சந்தோஷம் ரொம்ப முக்கியம்.. இந்த நேரத்துல அவ மனசு சஞ்சலப்படாம இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம்” என்றார்.

 

குளோரியாவின் குணம் ஏற்கனவே வள்ளியமைக்கு தெரியும் தான். அதை காட்டிலும் இப்பொழுது தன் பேத்தியை தாங்கும் அவரின் குணத்தில்.. மனத்தில்.. அவர் மேல் இன்னும் மதிப்பு மரியாதை கூடினாலும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட நின்று இருந்தார் அந்த முதிய பெண்மணி.

 

இந்த பக்கம் சூல் தாங்கியிருக்கும் மருமகளின் மனது.. அந்த பக்கம் இத்தனை வருடங்களாக மகனைப் பிரிந்து மகளையும் பறிக் கொடுத்து வாழும் மாமியாரின் மனம்.. என்று இருக்கொல்லி எறும்பாகத் தவித்தவர்,

 

“நான் யாருக்கு என்ன சொல்ல?” என்று மகனைப் பார்த்ததும் ஒரு எண்ணம் தோன்ற..

 

“ஆமா கண்ணா.. நீயே வந்து இங்க இருக்க கூடாது? அத்தைக்கும் ஆருஷிக் கூட இருந்த மாதிரி இருக்கும்.. ஆருஷிக்கும் உன் கூட இருந்த மாதிரி இருக்கும்..” என்று இருவருக்கும் தகுந்த தீர்ப்பை அவர் சொல்ல..

 

“இந்த ஐடியா நல்லா இருக்கே..!” என்று பேத்தியும் ஆச்சியும் குதூக்கலித்தனர்..!

 

“ம்மாம்…” என்று கண்டன குரலில் அன்னையைப் பார்த்தான் இராவண்.

 

“ப்ளீஸ் டா கண்ணா..!” என்று அவரும் உதடு அசைத்தார். 

 

க்ளோரியாவுக்கு நன்றாக தெரியும் அவனுக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆர்சிக்காக மட்டும் தான் இங்கே வந்து இருந்தான் என்று அதை மகனின் வாயிலாகவும் அவர் கேட்டிருந்தார் இப்பொழுது தான் இருவரும் அனைத்தையும் மறைந்து ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறது மீண்டும் மகனின் மனதை கஷ்டப்படுத்த வேண்டுமா என்று நினைக்கையில் பேத்தியின் நலனும் அவருக்கு முக்கியம் ஏற்றப்பட்டது தன்னைவிட வள்ளியம்மையின் கவனிப்போம் சமையலும் தேவை என்று புரிந்ததா இந்த முடிவை எடுத்தார் குளோரியா. 

 

‘அப்போ பாப்பா டெலிவரி வரைக்கும் நீங்க என் கூட இருக்குறேன்னு சொன்னீங்க?’ என்ற மகனை அவர் தர்ம சங்கடத்தோடு பார்க்க..

 

உடனே வள்ளியம்மை சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டு “இது அவ வீடு.. அவ புருஷனோட வீடு.. இங்க விட்டுட்டு எங்க போய் தங்குவா? ஏதோ வந்த உடனே கொஞ்ச நாள் உங்க கூட இருக்கட்டுமேனு தான் விட்டு வெச்சேன்.. இனிமே எப்போ என் மருமக இந்தியா வந்தாலும் என் கூட தான் தங்கனும்..! தங்குவா..!” என்று வள்ளியம்மை  குளோரியாவின் அருகே வந்து அவர் கையை இறுக்கமாக பற்றி கொண்டார்.

 

இறுகப்பற்று..! உறவுகளையும் உணர்வுகளையும்..!!

 

வள்ளியம்மையின் பேச்சில் குளிர்ந்து போன குளோரியா சரி என்று தலை அசைத்தார்.

 

“ரூபி.. முதல்ல சிவா ரூம நல்லா க்ளீன் பண்ணி அவளுக்கு கொடுங்க..” என்று அடுத்தடுத்த கட்டளைகள் இட.. ரூபிணியும் அவரின் கட்டளை ஏற்ப வேலை ஆட்களை வைத்து துரிதமாக வேலைகளை முடித்தார்.

 

அன்றிரவு.. சிவேந்திரன் அறையில் அவரது பொருட்களை எல்லாம் நடுங்கும் விரல்களால் தொட்டுப் பார்த்துக் கொண்டு.. அவரின் சுவாசம் நிறைந்த அறையில் வாசம் கொண்டார் குளோரியா..!

 

அங்கே மற்றொரு ஜோடியோ.. பால்கனியில் அமர்ந்து வெள்ளிநிலவினை பார்த்துக் கொண்டே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தினர்..!

 

புது மஞ்சள் வாசம் மணக்க, சந்தனமும் குங்குமும் மின்ன..

கண்ணாடி வளையல்கள் கையில் குலுங்க…

 

தன் தோளில் நன்றாக சாய்த்திருந்தவளின் வாசத்தை இழுத்து சுவாசத்தை நிரப்பினான் இந்த காதல் அரக்கன் இராவண்..!

 

 

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், "பாப்பா.. நான் மட்டும் அன்னைக்கு என்னை பத்தி சொன்னேன்ல.. நீ இன்னும் உன் பக்கத்தை சொல்லவே இல்லையே.. கூடவே அந்த வார்த்தையை இன்னும் சொல்லவே இல்ல டி பாப்பா" என்று கெஞ்சுதலாக வந்தது அவனது வார்த்தைகள்.

 

அவன் எதை சொல்லுகிறான் என்று புரிந்தது அவளுக்கு. அன்று அமிலம் நிறைந்த வார்த்தைகளை அவளின் மீது அவன் தூற்ற அந்த நொடியில் அவள் அனுபவித்த வலி எல்லாம் சொல்லில் மாளாது..! 

 

“நான் அத பத்தி எல்லாம் நினைக்க விரும்பல.. அதையெல்லாம் மறந்திடணும்னு நினைக்கிறேன் இந்த நல்ல நேரத்தில அதை எல்லாம் யோசிக்காதீங்க..! பேசாதீங்க..!” என்றாள் தீர்க்கமாக..!

 

*சாரி டி பாப்பா.. சாரி..! உன்னை நான் அப்படி பேசி இருக்க கூடாது எல்லாம் நான் செய்த தப்புதான்” என்று அவன் கலங்க உஷ் என்று அவன் உதட்டில் தன் விரலை வைத்து ‘பேசாதே..!’ என்று கண்டித்தால் கண்களால் காரிகை..!

 

“ஆனாலும்.. அந்த நாளை விட, நீ எப்படி தனியா மும்பையில சமாளிச்ச? ஃபர்ஸ்ட் ட்ரைமஸ்டர் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல..!” என்றதும், அவனை பார்த்து சிரித்தாள் மென்மையாக..! 

 

“அப்போ.. உன்னை என் தோளில் தாங்கி இருக்கனும்.. உனக்கு எல்லாவாகவும் நான் இருக்கேனு என் செயலில் காட்டி இருக்கனும்.. உன் உபாதைகளுக்கு நான் மருந்தாய் இருந்திருக்கணும்.. பட்.. பச்..” என்று கூறி அவன் வருந்த.. 

 

சட்டேன்று அவனது தாடையை பற்றி முகம் முழுவதும் தன் முத்தங்களால் நிறைத்து அன்றைய அவனின் ஆதங்கத்தை இன்று தீர்த்தாள் ஆருஷி..!

 

அவளை தோளோடு கட்டிக்கொண்டான் கணவன்..?

அவனின் அணைப்பில் கட்டுண்டு அமைதியாக இருந்தாள் ஆருஷி. 

 

“என்னதான் அவன் இல்லாமல் தான் தனியாக சமாளித்தாலும்.. அந்த கணத்தில் ஒவ்வொரு நிமிடமும் அவன் பக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று நினைவை இதுவரை அவளால் மறக்க முடியவில்லை..!

 

இராவண்னின் சட்டை ஈரத்தில் 

நனைய, அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவன், அவளின் கண்ணீரைக் கண்டு தன் உதடுகளால் துடைத்தவன் "நான் இருக்கும்போது இனி நீ அழவே கூடாது டி பாப்பா.. ஈவன் நான் இல்லைனாலுமே.." என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

 

அவனின் அணைப்பில் இருந்து மெல்ல வெளி வந்து, தோளில் சாய்ந்து கொண்டு தொடர்ந்தாள். "அப்போ உங்களோட அருகாமையை ரொம்ப தேடினேன் நானு..  ரொம்ப.. ரொம்ப…” என்று இரு கைகளையும் விரித்து காட்டினாள்.

 

"என்ன ரொம்ப தேடினியா டி பாப்பா?" என்று ஆசை பொங்க அவளை பார்த்து கேட்டான் இராவண்.

 

ஆமாம் இல்லை என்று எல்லா பக்கமும் அவள் தலையை ஆட்ட, அவளை முறைத்தான் இராவண் செல்லமாய்...!

 

அவனை முறைத்த

லை கண்டு கிளுக்கி சிரித்தவள்,  இல்லையே என்றாள் அவனின் மனையாட்டி சந்தோஷமாக..!!

 

வருவான் அசுரன்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top