அத்தியாயம் 51
ராத்திரி கதை கேட்கிறேன்னு ரெண்டு மணி வரைக்கும் தூங்காம ஓட்டிட்டு.. இப்ப தூங்குறத பாரு.. சரியான இம்சை அரசி டி நீ” என்று செல்லமாக அவளை கடிந்து கொண்டவன், அவள் நெற்றியில் விழுந்து முடிகளை ஒதுக்கியவன், அழுத்தமாக முத்திட்டான்..
திரும்பவும் விடாமல் அழைப்பு மணி அழைக்க.. அவசரமாக ஓடி வந்து கதவை திறந்தவன் ஆச்சரியத்தில் கண்களை விரித்தான்.
“குட் மார்னிங் கண்ணா..!” என்று அழகிய முறுவலோடு நின்று இருந்தார் குளோரியா..!
மாம்.. என்றவனுக்கு வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவரவில்லை..!
எத்தனை மாதங்கள் சென்று அன்னையின் அன்பு முகம் காண்கிறான்.
அத்தனை அழுத்தமாய் இருந்தார் அல்லவா?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல…
மகனேயாயினும் குற்றம் குற்றமே என்று..!
இன்று அனைத்தையும் மறந்து தான் அழைக்கலேயே தன்னை தேடி வந்திருக்கும் அன்னையை கண்டவன் வார்த்தைகள் அற்ற மௌனங்களாய் தன் அன்பை பறைசாற்றி நின்றான்.
என்ன உள்ள கூப்பிட மாட்டியா கண்ணா என்று கணவனை போல அவர் இராவண்னை கணண்ஆ என்று அழைக்க.. அதில் நெக்குறுகி போனவன், மாம் என்ற கதறலோடு குளோரியாவைக் கட்டிக் கொண்டான்.
என்ன தான் மெத்த படித்த டாக்டராக இருந்தாலும்.. அவரை தாண்டி வளர்ந்து இருந்தாலும்… இன்று பேர் புகழின் உச்சியில் இருந்தாலும்.. ஏனீ அவனுக்கே குழந்தைகள் பிறந்தாலும்.. தள்ளிக்கு பிள்ளை தானே?
ஆம்..!
அசராமல் அத்தனை அறுவைசிகிச்சைகள் செய்யும் கையது…
ஆனால்
தாய் மடியில்
அதே கை
இன்னும் நடுங்கும்.
மருத்துவன் என்ற புகழும் பாரமும்
உலகம் அளித்த பட்டங்களும்
ஒரு பார்வையில் கரையும்
அம்மாவின் கண்களில்.
“சாப்பிட்டாயா கண்ணா?” என்ற
ஒரே கேள்வி
அனைத்து அதிகாரங்களையும்
அர்த்தமற்றதாக்கும்.
அவனின் சிம்மாசனம் உயர்ந்தாலும்
தாய் மடி அதற்கு மேலே…
டெல்லிக்கே ராசானாலும்
தள்ளிக்கு பிள்ளைதானே..!
“உள்ள வாங்க மாம்?” என்று அவரை உள்ள அழைத்து வந்தவன், அவரது டிராலியை தானே தள்ளிக் கொண்டு வந்தான்.
குளோரியாவின் கண்களோ அந்த வீட்டை அளந்து பின் ஆருஷியைத் தேடின..!
அம்மாவின் கண்களின் தேடலை கண்டவனோ, “ஆக பிள்ளைய பார்க்க வரல.. உங்க மருமகள தான் பார்க்க வந்திருக்கீங்க?” என்று செல்லமாய் கோபிக்க..
“என் பிள்ளைக்கே பிள்ளைக வரப் போறாங்களே.. இன்னுமா அவன நான் கொஞ்சிட்டு இருக்க முடியும்.. பெற்றோரட பாசம் பிள்ளைக கிட்டயிருந்து ஆட்டோமேட்டிக்கா அவங்க தாத்தா பாட்டி ஆனதும் பேர பிள்ளைட்ட மாறிடுது கண்ணா” என்று மகனின் கன்னம் வருடியப்படி அவர் சொல்ல..
“நல்லா பேச கத்துக்கிட்டீங்க மாம்” என்றவன் அவரை உர்ரென்று பார்க்க..
அதற்குள் “மாறா… மாறா.. எங்க இருக்கீங்க.. எனக்கு பசிக்குது.. உங்க பையன்ல எவனோ ஒருத்தன் முட்டி முட்டி சாப்பாடு கேட்குறான்.. பாருங்க இந்த வயித்த.. எப்படி ஜம்ப் ஆகுது?” என்று தூக்கக் கலக்கத்தோடு இரவு டாப்ஸை மெல்ல உயர்த்தி அதில் முட்டி மோதும் பிள்ளைகளின் அசைவை பார்க்கப்படி வந்த அருவியை கண்டு இருவரும் முறுவலித்தனர்.
அங்கே குளோரியாவை கண்டவள், “அய் அத்த..” என்று துள்ளி குதித்து வர, இருவரும் பதறி அவள் அருகே வந்தனர் அவளுக்கு முன்..!
அறிவுக்காடி பாப்பா என்று இராவண் கடிய..
அவளோ பாவமாய் குளோயியாவை பார்க்க..
அவரோ அவனை முறைக்க..
“போச்சு.. இனி இவ ஆட்டம் தாங்க முடியாது..! ஏற்கனவே சலங்கை இல்லாம ஆடுவ.. இனி நீங்க வேற தாங்குங்க..” என்று முறைத்தவனை கண்டுக் கொள்ளாமல், இருவரும் தங்கள்களுக்குள் சேம நலன்களை விசாரித்துக் கொண்டிருக்க..
“நடத்துங்க.. நடத்துங்க..” என்று அவன் கோபமாய் பார்க்க..
“இங்க என்ன மேன் லுக்கு.. போங்க போங்க.. அத்தைக்கும் எனக்கும் பசிக்குது.. ப்ரேக் ஃபாஸ்ட் ரெஞி பண்ணுங்க.. ஓடுங்க ஓடுங்க..” என்று விரட்டியவளை பார்த்தவன் இடவலமாக தலையாட்டி அவள் சொன்னது போல இருவருக்கும் காலை உணவை எடுத்து வந்து கொடுத்தான்.
“இன்னைக்கு நான் ஹாஸ்பிடல் வரல” என்றவள் அன்று முழுவதும் குளோரியாவுடனே பொழுதைக் கழித்தாள்.
மாலை போல இருவரையும் வள்ளியம்மையை பார்க்க அழைத்து சென்றான் இராவண்..!
குளோரியாவை கண்ட நொடி “என் மகனின் காதல் இந்த பெண்..! இவளுள்ள தான் என் சிவா இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறான்” என்ற நினைத்தவரோ உணர்வின் பிடியில் தத்தளித்து அவர் தள்ளாட, குளோரியா லோ அவரைத் தாங்கிக் கொண்டார்.
வள்ளியம்மை மன்னிப்பு வேண்ட, அவரோ அழகான தமிழில் அதனை மறுக்க.. மீண்டும் ஒரு நெகிழ்வாய் உணர்வுமிக்கதாய் இருந்தது அம்மாலை வேளை..!
ஆருவுக்கு வளைகாப்பு செய்யணும் என்று ரூபிணி ஆரம்பிக்க..
அதுக்கென்ன நல்லா செய்யலாம் என்று குளோரியா கூற..
அதற்கு முன்ன.. இவங்களுக்கு சிம்பிளா கோவில்ல கல்யாணம் செய்யணும் என்றார் வள்ளியம்மை..!
அதில் திடுக்கிட்டு இராவண்னை நிமிர்ந்து பார்த்தாள் ஆருஷி..!
இதனை பற்றி இருவரும் பெப்சி இருக்கவில்லை இதுவரை..!
அவளை பொறுத்தவரை அவன் கணவனே.!
அவனை பொறுத்தவரை அவள் மனைவியே..!
ஆனால் சமூகத்திற்கு? சட்டத்திற்கு??
நடைமுறை சிக்கலை எடுத்து உரைத்தார் ரூபிணி.
உலகின் எந்த முலையானாலும் காதல் அடுத்த நிலை திருமணம் தானே?
ஏன் காதலின் அங்கீகாரமே கல்யாணம் தானே??
என்று புரிந்த இராவண்னும் ஆருஷியும் அமைதியாக தலையாட்டினர் திருமணத்திற்கு..!
அழகப்பனுக்கோ இங்க நடப்பவற்றை கண்டு வயிறு எரியத்தான் முடிந்தது..! அவர்களை எதிர்த்து சுண்டு விரலை கூட அசைக்க முடியவில்லை..!
அவர் செய்த பாவம் அவரை சிறுக சிறுக வதைத்தது..!
யாரு இந்த வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று அன்று பேசினாரோ.. இன்று அவரே உரிமையாய் வந்ததை தடுக்க முடியாமல் தவித்தார்.
கூட அவரின் மகன் மூலம் வரும் வாரிசையும் ஏற்க முடியாமல் தன் நிலையிலிருந்து பிறழ முடியாமல் இன்னும் கோபம் கண்டு தன் உடல்நிலை சீர்கெடுத்துக் கொண்டார் அழகப்பன் மாறவேல்..!
இப்படித்தான் சில ஜென்மங்களை எப்பொழுதுமே திருத்த முடியாது..!
அவை திருந்தவும் திருந்தாது..!
ஆனால் அவரின் மறுப்பை எல்லாம் யார் இங்கு கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்? அவரைப்பற்றி எந்த கவலையும் இன்றி.. அடுத்து வந்து ஒரு வளர்ப்பிறை சுப முகூர்த்த தினத்தில் வடபழனி முருகன் கோவிலில் ராவண் திரேந்திரன் ஞானவேல் மற்றும் ஆருஷி. வள்ளியம்மையின் திருமணம் நன்முறையில் நடந்தேறியது..!
சுற்றமும் சொந்தமும் உறவுகளும் வந்து வாழ்த்துக் கூற..
குளோரியா இதனால் வரை பத்திரப்படுத்தி வந்த தன் தாலியை எடுத்து மகனிடம் கொடுக்க, அதையே மஞ்சள் கயிற்றில் ரூபிணி கோர்த்து முருகன் பாதம் வைத்து ஆசிர்வாதம் வாங்க.. அப்பொன் மஞ்சள் கயிற்றை ஆருஷி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிகளை இட்டு தன்னவளை சம்பிரதாயங்கள் படியும் சட்டப்படியும் தன் சகதர்மினியாக ஏற்றுக் கொண்டான் இராவண்..!
அடுத்த வந்த நன்நாளில் விமர்சைமாக ஆ
ருஷியின் வளைகாப்பு நடந்தேறியது, அன்று மாலையே சுக்ரேஷ் வர்ஷினியின் நிச்சியதார்த்தமும் கோலாகலமாக நடந்தது.!
வருவான் அசுரன்..
