அசுரன் 8
ஒரு பெண்ணாய் தனக்கு அவன் இழைத்த அநீதியை மறந்து மீண்டும் அவனால் எப்படி என்னோடு இப்படி இழைய முடிகிறது?
அது சரி.. அவனின் தேவை இந்த உடல் தானே..!
‘ருசி கொண்ட பூனை திரும்பத் திரும்ப வருகிறது..’என்று அவனைப் பார்த்து இளக்காரமாக சிரித்தாள் ஆருஷி.
அவளின் சுழித்து உதடுகளைக் கொண்டே அவன் கணித்திருப்பான் அவளை.
ஆனால்.. இன்றோ அவளை மாற்றிவிடும் நோக்கில்.. தன் நெஞ்சத்தை பறைசாற்றி விடும் எண்ணத்தில் இருந்தவன் அவளது எண்ணத்தை படிக்க தவறினான்.
“பாப்பா.. உன் கிட்ட ஒன்னு சொல்லணும் டி..! ஆனா அதை இங்கே சொல்ல என்னால முடியாது. வெளியில உன்கிட்ட எனக்கு பேச வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது..” என்று அவன் மென்மையாக அவளது கையை பற்றி தன் நெஞ்சத்தில் வைத்தவன், அவளது இதழ்களை நோக்கி குனிந்தான். மறுக்க மாட்டாள் என்று தைரியத்தில்..
ஷண நேரத்தில் அவனை தன்னிடமிருந்து தள்ளி விட்டவள்.
“ராவண் ஆர் யூ மேட்? ஏன் பொது இடத்தில இப்படி பிகேஹ் பண்ற? எவனாவது நம்மள இப்படி பார்த்து ஃபோட்டோ எடுத்து நெட்ல விட்டு நெட்டிசன்கள் ரெண்டு பேரையும் கிழி கிழினு கிழிக்காவா? நம்ம மட்டுமா பாதிக்கப்படுவோம்? இதுனால என்குடும்பத்து ஆட்கள் எல்லாரும் பாதிக்கப்படுவாங்க.. என் குடும்பம் எவ்வளவு பெரிய பாரம்பரியமான குடும்பம் தெரியுமா?
என் தாத்தா எவ்வளவு செல்வாக்கானவர் தெரியுமா?
இதுல நீ ஒரு டாக்டர் வேற.. கைய விடு ராவண்” என்று அவனது முரட்டு பிடியிலிருந்து தன் கையை பிடுங்கிக் கொள்ள எவ்வளவோ போராடி பார்த்தாள் ஆரூஷி.
கொஞ்சம் கூட அவனின் முரட்டு பிடியில் இருந்து ஆருஷி தன் கையை அவளால் விடுவிக்கவே முடியவில்லை. அந்த அளவு அழுத்தமாக பற்றி இருந்தான். முதலில் மென்மையாகத்தான் பற்றி இருந்தான். ஆனால் அவள் பேசப்பேச அந்த மென்மை வன்மையாக மாறி இருந்தது.
அவள் கரத்தை மட்டுமல்ல, அவளையும் சேர்த்து தான்..!
“ம்ம்.. வர்ரே வாவ்.. பாரம்பரிய குடும்பமா? ஹே..” என்று சிரித்தவன்,
“குடும்பம் பாரம்பரியம் பற்றிய பயம் எல்லாம் அப்ப இருந்திருக்கணும்… ஐ மீன்.. என் கூட இன்டிமேட்டா இருக்கும் போது..! எவன் என்ன பண்ணா எனக்கென்ன்னு இருந்திட்டு.. இப்ப கத்துறியே ஆரு டார்லிங்? ஓ அது ஃபாரின்.. எவனும் கேள்வி கேட்க மாட்டான் அப்படிங்கிற தைரியமா?” என்றவனின் கோணலான வார்த்தையில் உடம்பே கோபத்தில் கொதிக்க செந்தனலாய் நின்றாள் மங்கை.
“அப்புறம் ஒரு விஷயம்.. உன் கைய மட்டுமல்ல..” என்று அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன், “ஆல்ரெடி நான் யூஸ் பண்ணின பார்ட்ஸ் தான். சோ.. புதுசா தொட்ட மாதிரி பிஹேவ் பண்ணாத டி பாப்பா..!” என்று அவளது சீற்றத்தை இன்னும் சீண்டி விட்டான் இந்த மருத்துவன்.
அப்படி சீண்டிவிட்டால் அடங்கி போகிறவளும் அவள் அல்லவே..! பதிலுக்கு அவனை இன்னும் வெறி ஏற்றி விட்டாள்.
“அன்னைக்கு நீ சொன்னது ஞாபகம் இருக்கா.. மிஸ்டர் ராவண்? குளிச்சா எல்லாம்.. எல்லாமே போயிடுமென்னு..! தண்ணியோட அந்த ஞாபகங்களும் எல்லாம் எனக்கு போயே போச்சு..! கூடிய சீக்கிரம் நான் என் அத்தை பையன் சுக்ரேஷை கல்யாணம் பண்ணிக்க போறேன்..” என்றாள் அவன் முகம் மாற்றத்தை பார்த்துக் கொண்டே.. நொடி நிமிடமானாலும் அந்த அழுத்தமான முகத்தில் தெரிந்த சிறிய அதிர்ச்சி அவளுக்கு மிக மிக உவப்பாக இருந்தது.
அவளின் அந்த பேச்சு அவனுக்கு இன்னும் கோபத்தை மட்டுமல்ல அவனுள் இருந்த அசுரத்தனத்தையும் சேர்ந்து சீண்டி விட்டது என்பதை அவள் அறியவில்லை.
அவனின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்தவள் அல்லவா? அவனின் மறுபக்கத்தை இனிதான் அறியப் போகிறாள்?
அடுத்த கணம் அவள் கழுத்தை வெறிக் கொண்டு பிடித்தவன், “இன்னொரு முறை சுக்ரேஷ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உன் வாயிலிருந்து வந்ததுனு வச்சுக்கோயேன்..!” என்றவன் அவளது கழுத்தை வலுக்க நெறித்தான் தன் ஒற்றை கையாலேயே.. அவனின் ஆக்ரோஷம் கொண்டு அவளுக்கு பயம் எல்லாம் இல்லை. வலி இல்லை.! இதைவிட பெரிய வலியை எல்லாம் தந்து விட்டானே..!
மாறாக அவள் கண்கள் சிரிக்க.. இடது கண்ணின் ஓரம் மட்டும் கண்ணீர் கோடாய் இறங்க..
“ச்சே.. என்று கையை எடுத்தான் அவள் கழுத்தில் இருந்து.. ‘இவளை கஷ்டப்படுத்தவும் மனம் வர மாட்டேங்குது.. இவ பேச்ச சகிக்கவும் முடியல.. டாமிட்..!’ என்று வேகமாக தன் தொடையில் உள்ளங்கையை மூடி குத்திக் கொண்டான்.
அவளோ கழுத்தை நீவிக் கொண்டு அவனை இன்னும் வஞ்சமாக பார்த்தாள் வஞ்சி.
இதே கண்களில் கொஞ்சலாக பார்த்த காலமும் உண்டு..!
கொஞ்சித் தீர்த்த காலமும் உண்டு..! ஆனால் என்று அனைத்தும் மறந்து இருவருக்கு இடையே இல்லை அவளுக்கு மட்டும் அவன் மீது ஏக வஞ்சம் நெஞ்சம் முழுவதும்..!
“ஒரு தடவை இல்ல ஓராயிரம் தடவை சொல்வேன். நான் என் அத்த பையன் சுக்ரேஷை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. போறேன்.. போறேன்..! முடிஞ்சா தடுத்துக்கோ..” என்று அங்கே ஒலித்த இரைச்சலான இசைக்கு மேலே இவள் கத்தினாள்.
“ஏய்..!” என்று ஆத்திரமிகு அவளை நெருங்கியவன், அவளை அந்த கட்டிடத்தின் வெளியே தள்ளிக் கொண்டு சென்றான். அந்த இருட்டிய நிலவொளியில் பதுமையாய் காட்சியளித்தவளை அவன் இருந்த கோபத்திற்கும் அவள் மேல் கொண்ட தாபத்திற்கும் வேறென்னே செய்திருப்பானோ? இருந்தும் அப்படி ஏதும் நடக்கவில்லை..!
தன்னை அடக்கிக் கொண்டவன்,
“சீம்ஸ் குட்…! உங்க கல்யாணத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!! அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு வரும் டவுட் கிளியர் பண்ண கல்யாணத்துக்கு முன்ன உன் வருங்கால ஃபியான்சியை என்னை வந்து பார்க்க சொல்லு..! உன்னுடைய இன் அண்ட் அவுட் மட்டுமல்ல அப் அண்ட் டவுன்.. ஆல்.. டீடெயில்ஸ் ஐ க்நோ.. வரட்டா ஆரு டார்லிங்..” என்று அவள் கன்னம் தட்டி சென்றவனை கோப விழிகளோடு பார்த்து நின்றாள் ஆருஷி.
கண்களில் கண்ணீர் வெந்நீராய் இறங்க, செல்லும் அவனை பயம் கலந்த கோபத்தோடு பார்த்தாள் ஆருஷி.. காதல் அசுரனிலிருந்து கொடூர அசுரனாய் மாறி செல்லும் தன்னவனை வெல்லும் ஆயுதம் அன்பு மட்டுமே என்பதை அறியவில்லை பேதை பாவம்..!!
சுக்ரேஷை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் ஆருஷிக்கு இல்லவே இல்லை. ராவண்னை கோபமுறச் செய்யவே அவ்வார்த்தையை அவள் கையாண்டாள்.
ஆனால் விதி அவளை சுக்ரேஷிடமே அவர்கள் கல்யாணத்தைப் பற்றி பேச வைக்கும் என்று அவள் கனவிலும் கருதவில்லை.
தனியாக காரை ஓட்டிக்கொண்டு வந்தவள் கண்கள் கண்ணீரை வாரி இறைத்து கொண்டே வந்தது புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தவள் நெஞ்சமோ பின்னோக்கி பயணித்தது. அவளின் காதல் அசுரனின் காதல் லீலைகளை எண்ணியப்படி..
பான் அண்ட் ப்ராட் பை ஃபாரின் என்பதாலா என்னவோ இவர்கள் லிவிங்கில் இருந்த காலத்தில் பெரும்பாலும் அவள் வேலை மட்டுமல்ல வீட்டு வேலைகளிலுமே சமமாக பங்கு எடுத்துக் கொள்வான் ராவண்.. இல்லை இல்லை அவளின் மாறா..!
வெளிநாட்டுக்கு பாடத்தை படிக்கிறேன் என்று சென்றவளோ.. பாதி நேரம் கதை புக்கை தான் கையில் வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பாள்.அவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாள்.
அவளுக்கு என்னவோ அந்த கதை.. அதில் வாழும் மனிதர்கள்.. அந்த உலகம்.. அதில் நுழைந்து விட்டால் வெளியே இருப்பது எதுவுமே அவளுக்கு தெரியாது..! முற்று முழுதாக அதில் லயித்து விடுவாள்.
ஏனென்றால் அவளின் சிண்ட்ரெல்லா கனவுகளுக்கு வண்ணம் கொடுத்தவன் அவளின் மாறா அல்லவா?
கூடவே அதில் வரும் காதல் காட்சிகளை சிலாகித்துக் கூறுபவள் “எப்ப பாரு பேஷண்ட்ஸ்.. மெடிசன்.. சர்ஜரி இது மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா? இவன பாரு?”
“எவன டி?” என்று கேட்பவனிடம்..
தான் படித்த கதைகளின் ஹீரோ க்களில் அவளுக்கு மிகவும் பிடித்தவனை காட்டி “இதோ இந்த ஹீரோ பாரு.. எப்படி ரொமான்ஸ் பண்றான் பாரு.. இதெல்லாம் படிச்சு கத்துக்கோடா மாறா என் செல்லம் இல்ல.. என் புஜ்ஜி இல்ல..” என்று அவன் மேல் ஏறிப் படுத்து இரு பக்கமும் அவனது இரு கன்னங்களை பிடித்து கொஞ்சியப்படியே சொல்லுவாள் ஆருஷி.
அதிலும் அவள் விவரிக்க விவரிக்க இவனுக்கு சிரிப்பு தான் வரும்.
அவனோ தன்மேல் படர்ந்தவளை இழுத்து அவள் மேல் படர்பவன் அவளது நீள நயனங்களில் அழகாக முத்தமிட்டு “எவனோ செய்ததை எல்லாம் நான் செய்ய மாட்டேன். எனக்கான காதலை எனக்கு இப்படித்தான் காட்டத் தெரியும்” என்று அவள் மூழ்கி விடுவான்.
கற்பனை உலகின் காதலின் உலவுபவள் அவள்..!
நிதர்சன உலகின் காதல் இதுதான் என்று காட்டுபவன் அவன்..!
கொஞ்சம் தான் ஒரு மருத்துவன் ஆண் என்று ஈகோ என்று அவளிடம் டவுன்ட்டு எர்த்தாகத்தான் இருப்பான். காதலில் ராவண்.
ஆம் நான் மருத்துவன் என்றால் அது நான் பணிபுரியும் மருத்துவமனையில். இல்லத்தில் நான் ஆண்.. அவள் பெண்.. இருவரும் காதலர்கள்..! என்று தன் காதலுக்கு அத்தனை நியாயம் செய்தவன் தான் அவன்.
அன்றும் அவள் ஏதோ ஒரு நாவலில் மூழ்கி இருக்க.. அருகில் வந்தவன் ஆருஷியின் காலுக்கு அடியில் அமர்ந்தான். ஏன் என்று ஆருஷி யோசிக்க, அவளின் காலை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் வைத்தான்.
அவள் சிரித்தபடியே “என்ன செய்றீங்க அச்சோ விடுங்க.. காலையெல்லாம் நீங்க புடிச்சுகிட்டு..” என்று இயல்பான இந்திய இல்லத்தரசி போல அவள் கூற..
“உஷ்..! நீ பாட்டுக்கு உன் வேலை செய் நான் என் வேலை செய்கிறேன்” என்பவன் அவள் காலுக்கு பெடிக்யூர் செய்வான் அழகாக வெகு நேர்த்தியாக..!
முதலில் தன் உலகத்தில் சஞ்சரித்தவள் ராவண் செய்த மாயாஜாலத்தில் அவ்வுலகத்தை தவிர்த்து அவனோடு காதல் உலகத்திற்குள் கைகோர்த்தாள்.
ராவண் அவளின் உதட்டில் கோலம் போட பெண்ணவள் சொர்க்கமே சென்று வந்தாள்.
“சோ ஸ்வீட் டா புஜ்ஜூ..” என்று செல்லம் கொஞ்சினாள்.
“ரொம்ப எல்லாம் கொஞ்சாதடி பாப்பா.. இதுல பொதுநலத்தை தாண்டி ஒரு சுயநலமும் இருக்கு. உன் கால் வளவளப்பா இருந்தா தான்.. நம்ம லவ் மேக்கிங் போது..” என்று அதற்கு மேல் அவன் பேசாமல் இப்பொழுது இதழணைப்பை அவள் எடுத்துக் கொண்டாள்.
அன்று காதல் அசுரனாய் தன்னை அத்தனை ஆனந்தத்தில் திளைக்க வைத்தவன்.. அதன்பின் வலியை தருபவனும் அவன் தான் என்பதை நம்ப முடியவில்லை பேதையால்.
வீட்டுக்கு வந்தவள் யாரையும் பார்க்காமல் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குடித்து வேறு உடை மாற்றி ரூபிணிக்கு ஃபோன் செய்தவள் “அத்த நான் வந்துட்டேன். பார்ட்டிலேயே சாப்பிட்டேன். கொஞ்சம் டயர்டா இருக்கு நான் தூங்குறேன்” என்று படுத்து விட்டாள்.
ஆனால் தூக்கம் என்னவோ தூரம் போனது.
மறுநாள் எழுந்தவுடன் முதல் நாள் அழுத தாக்கம் அவளது கண்களும் குரலும் எட்டப்பனாய் காட்டி கொடுத்தது.
வீட்டில் கண்டு கொண்டால் என்ன ஆயிற்று? எதாயிற்று? என்று குடைந்து எடுத்து விடுவார்கள். அத்தை ஒருத்தரே போதும் ஆச்சியை மிஞ்சி விடுவார்.. இந்த ராட்சசனால் அடிக்கடி எல்லோரிடமும் பொய் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்ன வாழ்க்கை டா சாமி இது என்று தலையை பிடித்து அமர்ந்திருந்தவள் சுக்ரேஷை உதவிக்கு அழைத்தாள்.
என்னாச்சு அரிசி என்று அவள் அறைக்கு வந்தவன் அவள் தடுக்க இமைகளை பார்த்து என்ன ஆச்சு ஏன் அழுதியா என்ன என்று அவளும் கேள்வியை கேட்டு தள்ள ஐயோ கொஞ்ச நேரம் கேள்வி கேட்காதே என்று கத்தி இருந்தாள்.
இங்க பாரு சுக்ரேஷ்.. எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல. ஆச்சி கேட்டாங்களா ஒரு பாட்டே படிப்பாங்க கூட அத்தை வேற.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி உடனடியாக ஹாஸ்பிடலுக்கு போகணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு என்றாள்.
அவளை சற்று தீர்க்கமாகப் பார்த்தவன் “சரி கிளம்பு” என்று கீழே வந்தவன், ஏதோ போன் வந்த மாதிரி “அப்படியா ஏதோ உடனே வந்திடுறோம்..” என்றவன் “அம்மா ஒரு எமர்ஜென்சி ஆருஷிய கூட்டிட்டு போகணும்” என்று வேகவேகமாக மாடு ஏறி அதைவிட வேகமாக அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் அவளும் கையாட்டியப்படியே செல்ல..
“சாப்பிடாம ஓடுதுங்க.. அப்படி என்னதான் முக்கியமான வேலையோ?” என்று அலுத்து கொண்டார் ரூபிணி.
மருத்துவமனை செல்லும் முன்பே அவள் உடல் லேசாக கனன்றது காய்ச்சல் வருவதற்கான அறிகுறி..
“உன்ன பாக்கவே பிவேரிஷ் மாதிரி இருக்கு ஆருஷி.. எதுக்கும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுகிறது பெஸ்ட்” என்றவன் அப்போது எமர்ஜென்சி பிரிவுக்கு அழைத்து சென்றான்.
அந்நேரம் எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் இருந்தது என்னவோ ராவண் தான்.
அவளை அமர சொல்லி வைட்டல்ஸ் எல்லாம் செக் செய்தவன் கண்களோ கேள்வியாய் சற்றே குழப்பமாய் அவளையே பார்த்திருந்தது.
இன்ஜெக்ஷன் தானே எடுத்து அவளுக்கு திரை மறைவில் இடுப்பில் போட்டு விட்டவன்,
பின் தலையை அழுந்தக் கோதி கேட்டான் தயங்கி தயங்கி.
“சுக்ரேஷ் கூட ஸ்டில் மேரேஜ் ப்ரோபஸல் உண்டா?” என்று..!
ராவண்னின் ஆரம்பம் என்னவோ நல்ல விதமாகத்தான் இருந்தது. ஆனால், கேள்விதான் முரணாக ஆகிப் போனது. ஆருஷியின் பக்கம் சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டவன் கை விரல்கள் ஆருஷியின் விரல்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொட்டு உரசியது.
ஆருஷி சிலிர்த்து நெளிந்தவள், ‘நேற்று கோபத்தில் கூறிய வார்த்தை அது. அதைக் கூட இவனால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இவனோடு எத்தனை இணக்கமாக இருந்தும் இவனால் எப்படி அந்த கேள்வியைக் கேட்க முடிகிறது?’ என்று அவனை உற்று நோக்கினாள். அவளின் கைவிரல்களில் இன்னமும் சொடுக்கெடுத்துக் கொண்டுதான் இருந்தான் ராவண்.
“என்னக் கேட்ட? திரும்ப கேளு?” என்று அவள் கேட்க..
“சுக்ரேஷ் கூட ஸ்டில் மேரேஜ் ப்ராஸஸ்ல இருக்கியானு கேட்டேன்?” என்றான்.
“ஆமா.. ஆமா..” என்ற ஆத்திரமாக உரைத்த ஆருஷி நடையைக் கட்டினாள் அவனை பிரிந்து. அவளின் செய்கையைப் பார்த்தவனுக்கு புரிந்தது. அவள் கோபமாகி விட்டாள் என்று..!
“ஷிட்..! உனக்கு பேசவே தெரியல டா. எதையாவது சொதப்பி வைக்கிற அவளும் கோபமா பறந்து போறா..!” ராவண் கோபத்தில் சுவற்றை ஓங்கி குத்த குத்த.. காயம் கொண்டது அவனது முஷ்டி மட்டுமல்ல மனமும் தான். அதனை பார்த்து விரக்தியாக சிரித்துக் கொண்டான்.
சுக்ரேஷை அழைத்தவன் “அவங்களுக்கு வைரல் இன்பெக்சன் இருக்கும் நினைக்கிறேன். யூரின் அண்ட் ப்ளட் சேம்பிள் கலெக்ட் பண்ண நான் சிஸ்டர அனுப்புறேன். கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண சொல்லுங்க.. உங்க மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க” என்று சிரித்தான் ராவண்.
அதன்படி மீராவை அனுப்பியவன் அவளிடமிருந்து யூரின் மற்றும் ப்ளட் சாம்பிளை எடுத்துக்கொண்டு தன்னை வந்து பார்க்குமாறு சொன்னான்.
ஏன் எதற்கு என்ற கேள்வி எல்லாம் மீராவுக்கு வரவே வராது ராவண் ஒரு வேலையை கூறினால்..
அதன்படியே ஆருஷியை சந்தித்து “மேம்.. பிளட் டெஸ்ட் எடுக்கணும்” என்று பொறுமையாக கூறி பிளட் மற்றும் யூரின் சாம்பலை எடுத்து கொண்டு வந்து ராவண் முன்னே அவனது லேபில் வைத்தாள்.
“நீங்க போலாம் சிஸ்டர்..” என்று அவளை அனுப்பி வைத்தவன், தன் முன்னே இருந்த இரண்டு சிறிய டப்பாக்களையும் கூர்ந்து பார்த்திருந்தான். அவன் மனம் அடித்து சொன்னது அதுதான் என்று..!
மீரா சென்றதை உறுதிப்படுத்தியவன் கையுரையை அணிந்து கொண்டு நடுங்கும் விரல்களால் ஆருஷியின் யூரின் சேம்பிலில் இருந்து இரண்டு துளிகளை எடுத்து அவன் வைத்திருந்த பிரக்னன்சி கிட்டில் விட்டான்.
“ஆண்டவா…! அப்படி இருக்க கூடாது..! அவ தாங்க மாட்டா..!” என்று அவன் மனம் அவளுக்காக வேண்டினாலும்.. அவனது கைக்காலஜிஸ்ட் அறிவோ அடித்து சொன்னது அவள் கர்ப்பம் தான் என்று..!
ஆம்.. அவனை ஏமாற்றாமல் அழகிய இரு பிங்க் நிற கோடுகள் அழுத்தமாக வந்து விழுந்தது அடுத்த இரண்டாவது நிமிடமே..
எப்பொழுதும் ஒரு பெண்தான் தான் தாயானதை தன் இணையிடம் வெட்கத்தோடு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளுவாள்.
ஆனால் இங்கு தன் இணை தாயானதை அவளிடம் எவ்வாறு கூறுவது என்று தவித்து நின்றான் ஆணவன்..!