அத்தியாயம் 49
அவளின் அடிகளை மட்டுமல்ல சில பல செல்ல கடிகளையும் பெற்றுக் கொண்டு.. அதற்கு ஈடாக பொய்யாக வலித்த இடத்தில் எல்லாம், அவளின் ஈர இதழ்களால் ஒற்றி எடுக்கும் பழி வாங்கலையும் முடித்துக் கொண்டே அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் இந்த கள்வன் இராவண்..!
கலங்கிய கண்களோடு ஆருஷி செல்ல, “அப்படிப்பட்டவருக்கு பிறந்த மகனா டா நீ?” என்று விட்டார் மகனின் கன்னத்தில் ஒன்று குளோரியா..!
மகனை அடித்த கணம் அவரும் இல்லாமல் அவரது அறைக்கு சென்று விட, பிறகு வீடே அமைதியாக இருந்தது.
அம்மா அவனை அடித்தது அவனுக்கு வலிக்கவில்லை, ஆனால் வேறு அறையில் இவனிடம் பேசாமல் இருப்பது ஏதோ செய்தது..!
இவனோ தான் செய்தது தவறு இல்லை என்று தெனாவட்டாகத்தான் ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தான்.
குளோரியா மற்றொரு அறையில், அவர் எப்பொழுதும் வந்தால் தங்கும் அந்த அறையில் இருந்தார்..!
அவர் அறையில் இருந்த மெல்லிய தொலைக்காட்சியின் சத்தம் கேட்டது.
‘இவ்வளவு வேகமாக என்னை அடித்து விட்டு கோபமாக உள்ளே சென்றவர் டிவில ப்ரோக்ராம் பாக்குறாரா என்ன?’ என்று நம்ப முடியவில்லை ராவண்னுக்கு..!
மெல்ல கதவை திறந்தவன் அங்கே தொலைக்காட்சியில் கண்டது என்னவோ அவனது தந்தையை தான்..!
இந்த காணொளியை அவன் இதுவரை கண்டதும் இல்லை.. அன்னை வழி கேள்விப் பட்டதும் இல்லை..!
‘இது எப்போது தந்தை பேசினார்? ஒருவேளை அவர்களுக்கான அந்தரங்கமாக இருக்குமோ? அப்பாவின் ஞாபகம் அம்மாவிற்கு வந்திருக்குமோ?’ என்று தயங்கியவாறே எட்டிப் பார்த்தான்..
அவர் இறப்பதற்கு முன் எடுத்திருக்கிறார் என்று அவரின் உடையிலும் அவர் பின்பக்க அமைப்பிலும் இருந்து புரிந்து கொண்டவன், அதிர்ந்துப் போனான்..!
எப்பொழுது பார்த்தது தந்தையை?? மீண்டும் ஒருமுறை அவரை உயிரும் உணர்வுமாய் பார்க்க அவன் கண்கள் மெல்ல கலங்கின..! கால்கள் தளர்ந்தன..! கைகள் நடுங்கின..!
‘என்னின் இந்த பாசமிகு தந்தையைத் தான் அவரின் அப்பா வெறுத்தார். இவரை.. இவரைத்தான் காதல் திருமணம் செய்து கொண்டார் என்று முற்றும் முழுதாக ஒதுக்கினார். எப்படி முடிந்தது அவர்களால்? இவரின் முகத்தைப் பார்த்து யாராவது வெறுத்து ஒதுக்க முடியுமா?’ என்று நினைத்துக் கொண்டே மெல்ல அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தான் இராவண்..!
குளோரியாவோ அவன் வந்ததையும் அறியவில்லை.. தான் இருக்கும் நிலையையும் அறியவில்லை.. அவர் கண்களும் உணர்வுகளும் தன் காதல் கணவனோடு காதலால் பிணைந்து இருந்தது..!
கண்கள் கலங்க..
முகம் சிவக்க..
உடலெல்லாம் விகிசிக்க..
தன் கண்களால் கணவனை களவாண்டு கொண்டிருந்தார்..!
“என்ன ரியா.. என்ன இவன் இப்படி வச்ச கண்ணு வாங்காம உன்னையே பார்த்துட்டு இருக்கான்னு பாக்கறியா?” என்று திரையில் இருந்த சிவேந்திரன் கேட்டார். அவருக்கு முன்னே அந்த ஐசியூவில் பிரக்ஞை இன்றி பலத்த காயங்களோடு அனுமதிக்கப்பட்டிருந்தார் குளோரியா.
ஒரு பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு வரும்பொழுது இவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாய் இருந்தது. அதில் மனைவி அடிப்படக் கூடாது என்று கதவை திறந்து அவரை தள்ளிவிட்டு இருந்தார் சிவேந்திரன்..! ஆனாலும் குளோரியாவுக்கு நல்ல அடிதான்..!
ஆனால்.. சிவேந்திரனுக்கு அந்த விபத்தில் தலையில் அடிபட்டு, தனது முடிவை இதோ மணிக் கணக்கில் எண்ணிக் கொண்டிருக்கிறார்..!
நரம்பியலில் சிறப்பு மருத்துவரான அவருக்கு தன் நிலைமையை நன்றாக தெரிந்திருந்தது. இன்னும் சில மணி நேரங்களே தனது மூச்சு.. வாழ்க்கை.. என்று தெரிந்தவருக்கு மனைவியை விட்டு விலக முடியவில்லை.
மகனுக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டிருக்க அவனோ வந்து கொண்டிருந்தான்..!
தன்னோட அந்தம காலம் முடியும் நேரத்தில்.. தன்னவளோடு நான் இருக்க வேண்டும் என்று மனைவிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தவர், தான் மனைவிக்கு கடைசியாக பேச வேண்டியவற்றையெல்லாம் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தார் தன் ஃபோனில்.
கண்கள் கலங்க கணவன் கேட்ட கேள்விக்கு இங்கே தலையசைத்தார் ஆமென்று குளோரியா.
“என்ன பண்றது ரியா? இன்னும் சில மணி நேரங்கள் மட்டும் தான் என்னோட மூச்சு.. அதுவரைக்கும் முடிஞ்ச அளவு உன்னை கண்ணுல நொப்பிக்கணும்னு எனக்கு ஆசை..! கல்யாணத்தின் போது நாம் எடுத்துக் கொண்டு உறுதி ஞாபகம் இருக்கா ரியா? நம் காலமுள்ளவரை இப்படியே ரெண்டு பேரும் கொண்ட காதல் மாறாமல். அன்பு குறையாமல்.. வாழனும்..! ஆனா.. ஆனா…” என்று கலங்கியவர்,
“வெரி சாரி ரியா பேபி..! என்னால.. என்னால.. அந்த உறுதியை காப்பாத்த முடியல..! இப்படி உன்ன பாதிலேயே விட்டுட்டு போக போறேன்..! ஆமா.. நான் போக போறேன்…” என்று கலங்கிய குரலில் கூறியவர், கண்களில் வழிந்த கண்ணீரை தன் சட்டையிலேயே துடைத்துக் கொள்ள பார்த்திருந்த ராவண்னுக்கு மூச்சு அடைத்தது..!
கடைசியாக அவனின் தந்தை கண்டது உயிரற்ற உடலாக தான்..!
அவன் கிளம்பும்போது தந்தையிடம் பேசும் போது அவர் நன்றாகத்தான் இருந்தார்.
“ஐ அம் ஃபைன் கண்ணா.. அம்மாவுக்கு தான் ரொம்ப அடிடா கண்ணா..! நீ சீக்கிரம் வா, அப்பா உன்ன மிஸ் பண்றேன்” என்றார் மகனிடம்.
அப்போது அவனை அறியவில்லை..!
அவரும் தன் நிலைமையை மகனிடம் உரைக்கவில்லை..!
இப்போதோ அந்த கடைசி கணங்களை பார்க்கும் போது மகனது மனம் கனத்து கிடந்தது..!
“அய்யோ.. அய்யோ… அப்பா.. அப்பா..! விட்டுடேனே… விட்டுடேனே..” என்று மனம் அடித்துக் கொண்டது..!
அன்றைய உடலற்ற உடல் எழுந்து கதறும் தனக்கு ஆறுதல் அளிக்காதா? அழாதே கண்ணா.. என்று கண்களை துடைக்காத..
‘சும்மா ஃப்ராங்க் டா கண்ணா…’ என்று விளையாடாத.. என்று அவன் எண்ணாத நாளில் இல்லை..!
“ப்பா..!” என்று மெல்ல குரலில் முணுகியவாறே நடக்க முடியாமல் நடந்து அப்பெரிய திரையின் முன்னே பலமற்ற விழுந்தான் இராவண்..!
“நான்.. உனக்கு.. உன்ன.. கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா.. நீ வேற யாரையாவது உனக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணி.. ரொம்ப நாள்.. உன் கடைசி காலம் வரைக்கும் ஜோடி வாழ்ந்து இருப்ப இல்ல ரியா பேபி?” என்று அவர் அங்கே கேட்க…
இங்கே கோபம் கனன்றது குளோரியாவுக்கு.. முகம் கோபத்தில் சிவந்தது..!
ஆனால்.. அடுத்த நிமிடமே “இல்ல.. இல்ல.. என்னைத் தவிர வேறு யாராலும் உன்னை இவ்வளவு நல்லா காதிலிச்சு இருக்க முடியாது. அதேபோல உன்னை தவிர யாராலும் என்னை இந்த அளவு பேசியிருக்க முடியாது ரியா” என்று கண்களில் காதல் மின்ன கூறியவரை கண்ட குளோரியா…
“லவ் யூ சிவா.. லவ் யூ மோஸ்ட்..!” என்று அழுகையும் காதலுமாக சொல்ல…
“ஐ லவ் யூ ரியா பேபி.. மிஸ் யூ பேபி.. மிஸ் யூ எவர்..” என்று அதுவரை செல்போன் திரையை பார்த்து பேசியவர், தன் கண்களை துடைத்துக் கொண்டு, செல்போனை தாங்கள் இருவரும் தெரிவது போல வைத்தவர்,
மனைவியின் கை வளைவில் தலை வைத்து படுத்துக் கொண்டார்.
அவர் காதில் மெல்ல இரத்தம் வடிய.. அதனை துடைத்து விரக்தியாக சிரித்தவர்,
“எனக்கு நல்ல அப்பா.. அம்மா.. தங்கைனு அழகிய குடும்பம் இருந்துச்சு.. அவங்களுக்கு தான் நான் நல்ல பையனா, நல்ல அண்ணனா இல்ல…! அவங்கள ரொம்ப வருந்திட்டேன். என் அம்மாவ கடைசி வரை என்னால பார்க்க முடியாம, பேச முடியாம போச்சு…! பாவம் அவங்க..! அதே போல் எனக்கு அருமையான வொய்ஃப் நல்ல பொறுப்புள்ள புள்ள தான் அந்த ஆண்டவன் கொடுத்தாரு.. என்ன ஆயுசு தான் நீடிச்சு கொடுக்க மறந்திட்டாரு போல..!” என்று அவர் சிரிக்க.. இப்போது மூக்கின் வழிய இரத்தம் வழிந்தது..!
அதனை கண்டு குளோரியா வாயை பொத்தி அழுக… ராவண்னோ கலங்கிய கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தான்.
மூக்கில் வழிந்த இரத்தத்தை துடைத்தவர், “இன்னும் கொஞ்ச நேரம் தான் போல.. மணிகள் விநாடிகளா குறைஞ்சிட்டு இருக்கு.. கண்ணா எங்க டா இருக்க? சீக்கிரம் வா டா.. அப்பா.. உன்ன பார்க்காமலே போய்டுவேன் போல..” என்று சிவேந்திரன் கலங்கிய கண்களோடு அங்கே பேச, வெடித்து அழுதான் இராவண் இங்கே..!
“கண்ணா.. ராவண் கண்ணா.. அப்பாவுக்காக நீ ஒன்னு பண்ணுவியா? நீ எப்பவாவது எங்க அம்மாவ பார்த்தா.. சந்தர்ப்பம் அமைஞ்சா.. என்ன மன்னிச்சிட சொல்றியா?” என்று மகனிடம் கெஞ்ச… அவனோ கண்கள் கலங்க தலையாட்டி மறுத்தான்.
“ஆஃப் கோர்ஸ்.. நான் உனக்கு நல்ல அப்பாவா, நல்ல ப்ரண்டா இருந்தேன் நினைக்கிறேன், ஏன்னா அது போல எங்க அப்பா எனக்கு இல்ல..! என்னை உன்னால புரிஞ்சிக்க முடியது தானே?” என்றவருக்கு கண்கள் மங்க.. தலை சுழல்வது போல் இருக்க..
“என் ஆயுசு விநாடிகளில் இருந்து நொடிகளா சுருங்கிட்டு இருக்கு போல…” என்று சிரித்தவர்,
“கண்ணா.. அம்மாவ பார்த்துக்கோ.. ஆஃப் கோர்ஸ் நான் இத சொல்ல வேண்டியது இல்ல..! ஆனாலும் நான் சொல்லுவேன்..! முடிஞ்சா என் தங்கை மீனாட்சி ஃபேமிலிய மீட் பண்ணி ஒரு குட் ரிலேஸன்ஷிப் வைச்சுக்கோ.. உங்க ஜென்ரேஷனலயாவது ஒரு பாண்டோட இருங்க..!”
“நீயும் என்னை மாதிரி உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு விரட்டி விரட்டி காதலிச்சு தெகட்ட தெகட்ட காதலிச்சு வாழ்ந்து பாரு.. அந்த ஃபீலே வேற தான்”
“பை டா கண்ணா.. டேக் கேர்..!” என்றவர்,
இப்போது மனைவியின் இதழ்களில் அழுத்தமாக தன் இறுதி முத்தத்தை பதித்து, “லவ் யூ ரியா பேபி” என்றவர்,
கொஞ்சம் கொஞ்சமாக தன் இறுதி மூச்சினை நிறுத்தினார் சிவேந்திரன் மாறவேல்..!
“அப்பா…!” என்று வெடித்து கதறியவன், தன் கைகளை தரையில் வேகமாக தட்டி தட்டி அழுதான்.. ஆற்றுவோர் தேற்றுவோர் இல்லாமல்..!
ஏன்னென்றால் குளோரியா அவர் கடைசி முத்தம் வைத்து கணத்திலேயே மயங்கி சரிந்திருந்தார் குளோரியா..!
வருவான் அசுரன்..
