3
கீசா.. என்று அலறினாள் நீலாம்பரி..
அதுவோ இன்னும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு தான் இருந்தது. இது கோபப்பட்டால் கூட அவளால் பொறுத்துக்க கொள்ள முடியும் போல.. ஆனால் அதன் சிரிப்பை சகிக்க முடியவில்லை அவளால்..
அது அவளிடம் வந்து சேர்ந்ததே ஒரு விபத்து தனிக்கதை.. நீலாம்பரியின் சோகக்கதை...
வழக்கம்போல பேய் ஓட்டுபவர்கள் என்று இவளை எண்ணி வயது பெண் ஒன்றை கூட்டிவந்து பேயோட்ட சொல்ல... "எப்பா நம்மை நெஜமாலுமே பேயோட்டுறவனு நம்பிட்டாக" என்று எண்ணி அந்தப் பெண்ணை மட்டும் தனியே விட்டுச் செல்லுமாறு அவர்களிடம் கை ஜாடை காட்டி விட்டு, வெளியே ஏதோ மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டு ஆடிக் கொண்டே இருக்க.. பேய் பிடித்ததாக சொல்லப்பட்ட அந்த பெண்ணோ இவளுக்கு மேலே ஆட்டம் ஆடிக்கொண்டு அமர்ந்திருக்க.. இரண்டு ஆட்டத்தில் எந்த ஆட்டம் சூப்பர் என்று நடுவர் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் அளவுக்கு இருந்தது அவர்கள் இருவரது ஆட்டம்.
பெரும்பாலும் இப்படி பேய் பிடித்துவிட்டதாக சொல்பவர்கள் ஒன்று தங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தினால் இப்படி வருபவர்கள் மற்றொன்று ஏதோ ஒரு சூழலில் இருந்து தப்பிக் கொள்வதற்காக இந்த நாடகத்தை போடுபவர்கள். இதில் இந்தப் பெண் இரண்டாவது ரகம்..
நம்மாளுக்கு பேய் ஓட்ட தான் தெரியாதே தவிர இம்மாதிரி ஆளுங்களை பார்த்த உடனே கண்டுபிடித்து விடுவாள்.
சிறுது நேரம் ஆடிக்கொண்டு ஆ.. ஊ.. என்று சத்தம் போட்டு வேப்பிலையால் அந்த பெண்ணை விளாசி தள்ளி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று வழக்கமான கேள்வியை கேட்க..
"அதுவோ நீ என்ன கொடுத்தாலும் இந்த பொண்ணை விட்டு போகமாட்டேன்" என்று அதே அருந்த பழசான பதில் கூற..
சற்று நேரம் அந்த பெண்ணை கூர்ந்து பார்த்தவள் தன் கையில் இருந்த வேப்பிலையை ஓரமாக வைத்துவிட்டு "சரி சொல்லு எதிலிருந்து தப்பிக்க இந்த வேஷம் போடுற நீ?" என்று கேட்க..
அதுவரை மற்றவர்களைப் போல இவளை போலி சாமியார்.. பணம் பறிப்பதற்காக இம்மாதிரி பூஜைகளை செய்கிறாள் என்று நினைத்து அந்த பெண்ணும் இவளின் இந்த அதிரடியான கேள்வியில் பயந்துபோய் "இல்லல்ல நசமாலுமே எனக்குப் பேய் தான் புடிச்சிருக்கு" என்று உளற..
"எது உனக்கு பேய் புடிச்சிருக்குன்னு நீயே சொல்லுவியா? எத்தனை பேய்கள அடித்து விரட்டியருப்பேன் உண்மையான பேய்க்கும் வேஷம் போடுற பேய்க்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா?" என்று அவளை கூர்ந்து பார்க்க..
மஞ்சள் பூசிய முகம் நெற்றியில் பெரிய பொட்டும் அஞ்சனம் தீட்டிய கூர் விழிகளால் கூர்ந்து பார்த்தவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் "ஆத்தா என்னை காப்பாத்து" என்று அவள் காலிலேயே விழுந்து விட்டாள்.
"என்ற அப்பாரு எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்றாரு.. நான் என்ற மாமன தான் கட்டுவேன்.. அதுக்கு பேய் வேஷம் போட்டா யாரும் கட்டிக்க வர மாட்டாங்கன்னு நினைச்சுதான் இந்த மாதிரி போட்டேன். தயவுசெய்து என்ற அப்பாருகிடட என்னைய காட்டிக் கொடுத்துறாதா ஆத்தா நீதான் என் காதலுக்கு உதவி செய்யணோம்" என்று உதவி கோர..
'அப்பாடி போட்டு வாங்கியாச்சு' என்று பெருத்த நிம்மதி நம் நீலாம்பரியிடம்..
"விடுவிடு இதெல்லாம் சர்வ சாதாரண விஷயம்.. இதனை எப்படி சமாளிக்கிறேன் மட்டும் நீ பாரு" என்று கூறியவள், "நான் சொல்ற வரைக்கும் நீ பேய் புடிச்சி மாதிரியே கன்டினியூ பண்ணு" என்று விட்டு மீண்டும் அவளை வேப்பிலையால அடித்து அவளை மயக்கமுறச் செய்தாள்.
அடுத்த சில நேரத்தில் அவளது பெற்றோரை அழைத்து "இவள பிடித்திருக்கிறது ஒரு குட்டிச்சாத்தான்.. அது பொண்ணுங்கள தான் முக்கியமா கன்னி பொண்ணுங்களதான் புடிக்கும். நீங்க போன ஜென்மத்தில் ஏதோ பெரிய பாவம் பண்ணி இருக்கீங்க அதனாலதான் இந்த குட்டி சாத்தான் வந்து உங்க பொண்ணு மேல ஏறிக்கிச்சு.. இந்த பொண்ண நீங்க வெளியில் கட்டிக் கொடுத்தாலும் இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா அந்த பொண்ணோட வாழ்க்கையே போய்டும்.. முடிஞ்சா சொந்தத்தைகுள்ளேயே கல்யாணம் கட்டி வைச்சிடுங்க" என்று கண்ணை மூடிக்கொண்டு அருள் வந்தவள் மாதிரி தலை ஆட்டிக் கொண்டே நீலாம்பரி கூற..
அந்த பெற்றவர்களும் இவள் பேச்சுக்கு மகுடி முன் ஆடும் பாம்புகளாக தலை ஆட்டி ஆட்டி அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்று கூறிக் கொண்டிருந்தனர்.
மெதுவாக அந்தப் பெண்ணின் தாய் அந்த "குட்டி சாத்தான்..." என்று கேட்க..
கடகடவென சிரித்தவள், "அதெல்லாம் எனக்கு வாலாட்டும் நாய்க்குட்டி மாதிரி.. நான் சொல்ற வேலையை செய்யும் ஒரு ஏவல். நீ அதை பற்றி எல்லாம் பயப்படாத... என்ன ஒரு ரெண்டு வெள்ளிக்கிழமை இவளை இங்கன கூட்டிட்டு வா ஒரு கன்னி பூசை போட்டா எல்லாம் சரியாயிடும்" என்று அவள் கூற..
(அப்ப.. ஆத்தா நீ இதே சோலியாதான் சுத்துற.. நடத்து நடத்து..)
அவர்களும் தங்கள் பெண்ணுக்கு நல்லது நடந்தால் சரி என்று கூறி அழைத்து சென்று விட..
அவளும் அடுத்த வெள்ளிக்கிழமை அவர்களை அழைத்து கன்னி பூஜை போட வேண்டும் என்று அந்த பெண்ணை உட்கார வைத்து சுற்றிலும் தீபங்களை ஏற்றி அவள் தலையில் தண்ணீரை ஊற்றி ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்து பூஜை என்ற பெயரில் ஏதோ செய்து அவளை அனுப்பி வைத்தாள். கன்னி பூஜை செய்ய வேண்டும் என புது புடவை லம்பாக ஒரு அமொன்ட்டை அதுக்கு கறந்து விட்டாள்.
அதற்குப் பின் குட்டி சாத்தானை விரட்டுவதற்காக கூறி அதற்கு மற்றொரு பூஜை செய்யச் வேண்டும் என்று சொல்லி.. அதையும் ராத்திரி செய்யவேண்டும் என்று கூறி அவளுக்கு தெரிந்த "கலீம்.. க்ரீம்.. க்ளீம்" என்ற மூன்று வார்த்தைகளை 300 மாடுலேஷனில் கூறி.. "இதோ வந்துட்டான்.. அதான் வந்துட்டான்.. இதோ புடிச்சிட்ட போறேன்.. புடிக்க போறேன்.. புடிச்சிட்டேன்" என்று கூறி அருகில் இருந்த ஒரு மண் பானையில் புகையை விட்டு துணியால் கட்டிவிட்டாள்.
அந்த பானையை அவர்களிடம் காட்டி "அந்த குட்டி சாத்தான புடிச்சிட்டேன்.. இனி உன்ற பொண்ணுக்கு எந்த பாதிப்புமில்லை கூட்டிப் போங்க" என்று அருள்வாக்கு கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.
அதுக்கே அவளுக்கு நடு சமமாகிவிட.. "அப்பாடா ஒருவழியா பேசி அனுப்பியாச்சு.. இவங்க நம்ப மந்திரம் சொல்லி மந்திரம் சொல்லி என் வாயெல்லாம் வலிக்குது" என்று அந்த அறையில் ஆசுவாசமாக அமர்ந்து விசிறி விட்டு கொண்டாள் தன் வாயை..
"பேசி பேசி அவங்க கிட்ட காசு புடுங்குறதுகுள்ள நான் படுறப்பாடு.. முடியலடா சாமி" என்று கூறிக்கொண்டு அந்த மண் பானையை எடுத்து கொண்டு இவர்கள் ஊர் எல்லைக்கு அருகில் உள்ள இடிந்த மண்டபத்தில் அருகில் கொண்டு புதைத்துவிட்டு அவள் திரும்ப..
"நீலுக்குட்டி.." என்ற வார்த்தை அவளை தேக்கி நிறுத்தியது.
"நீலு?? குட்டியா?? எவன்டா அவன்?? என் பெயரை சுருக்கி கூப்பிடுறது" என்று அவள் ருத்ர காளியாக உருமாறிய தருணம்...
திரும்பவும் நீலுக்குட்டி என்ற வார்த்தை கரகரத்த குரலில் கேட்க..
நடு சாமம்.. எங்கும் காரிருள் யாருமில்லா தனிமை அவளுக்கு சற்றே குலை நடுங்க செய்தது. இந்தமாதிரி ஒரு அனுபவத்தை இவள் இதுநாள்வரை அடைந்ததே இல்லை. அதுவும் இவளை இந்த கெட்டப்பில் பார்த்த யாருக்கும் அவரை நெருங்க தைரியம் கூட வராது. மேலும் தான் கையில் பேய் ஓட்டிய ஆணி வைத்திருக்கிறேன், கிட்டே வந்தால் உன் மேல ஏற்றிடுவேன் என்று தன்னை நெருங்க முயன்ற ஆண்களை தள்ளியே நிறுத்தி வைத்திருக்க.. இப்படி தன்னை பெயரை சுருக்கமாக சொல்லி அதுவும் செல்ல பெயரோடு கூப்பிடும் அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கும் என்று முதலில் நினைத்தவள் பின்பு யாருமில்லாமல் குரல் மட்டும் கேட்க அவளுக்கு சற்றே உள்ளே நடுங்கத்தான் செய்தது. அடுத்தகணம் எடுத்தாள் ஓட்டத்தை..
திரும்பவும் "நீலுக்குட்டி நில்லு.. ஓடாதே!! ஓடாதே!!" என்று குரல் கேட்க..
திரும்பி பார்க்க கூட தைரியம் இல்லாமல் அவள் ஓட்டத்தை அதிகரிக்க.. அந்தக் குரலும் அவளருகில் கேட்டுக் கொண்டே வந்தது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஓட்டத்தை அவள் நிறுத்தி மூச்சி வாங்கி சுற்றுமுற்றும் பார்க்க யாரும் இல்லை அப்பாடி என்று அருகில் தெரிந்த கல்லில் அவள் அமர..
"நீலுக்குட்டி.. நீலுக்குட்டி.. எனக்கு மூச்சு விட முடியல்லே.. எழுந்திரு.. எழுந்திரு" என்று தீனக்குரலில் அதே குரல் கேட்க..
அவசரமாக எழுந்து அவள் சுற்றும் முற்றும் பார்க்கும் பொழுது அந்த கரிய குட்டிகல் சிறிய உருவமாக மாறியது.
"இது என்னடா மாயாஜாலம்!!" என்று அவள் கண்களை விரித்துப் பார்க்க..
3 அடி உயரத்தில் கரிய நிறத்தில் சின்ன கண்களோடு அகன்ற வாய் பெரிய பெரிய உதடுகளோடு அவளைப் பார்த்து சிரித்தது அந்த உருவம்..
"யார் நீ?" என்று திக்கித் திணறி அவள் கேட்க..
"உன் நாய்க்குட்டி!!" என்றது பதிலளிக்க..
"என்னது நாய்க்குட்டியா?" என்று இவள் அலற..
"ஆமா நீதான சொன்ன குட்டிசாத்தான் எல்லாம் வாலாட்டுற நாய்க்குட்டி மாதிரி உனக்குனு" என்று கடகடவென தனது கரகரத்த குரலில் அது சிரிக்க..
"அம்மாடி யோவ்வ்வ் குட்டி சாத்தானா??" என்று புறங்கையை வாயில் வைத்து பழைய கதாநாயகிகள் மாதிரி இவள் கத்த..
"சத்தத்த குற.. சத்தத்த குற.. ஆமாம் குட்டிச்சாத்தான்.. கீசன் என் நாமம்" என்றது..
"நீ தான் நாமம் போடலையே" என்று அவள் யோசிக்க..
"நாமம்னா பெயர்னு அர்த்தம்"
"அதெல்லாம் சரி இப்ப எதுக்கு என் கண்ணுல மாட்டுன.. என் பின்னாலேயே தொடுத்துக் கிட்டு வர?" என்று அவள் பயத்துடனே கேட்க..
"உன்னுடைய மூதாதையர்களை ஒருத்தர் என்னை ஒரு மாந்திரிகனிடம் இருந்து காப்பாற்றினார். அவருக்கு நான் கொஞ்ச நாள் நன்றிக்கடனா பணிவிடை செய்தேன்.
அப்புறம் எனக்கு விடுதலை கொடுத்து அனுப்பி விட்டார். நான் போகும்போது என்கிட்ட ஒரு வரம் கேட்டார். பின்னாளில் அவர் சந்ததி யாராவது இந்த தொழிலை செய்யும் போது அவங்களுக்கு நீ வந்து உதவனும்னு.. அதனால்தான் நான் இப்ப வந்தேன்" என்று அது லாங் லாங் எகோ.. சோ லாங் எகோ என்று கதை கூற..
"அந்த கதையெல்லாம் எனக்கு எதுக்கு.. நீ எனக்கு எந்த உதவியும் செய்ய வேணாம் சாமி.. ஆள விடு போதும்" என்று அவள் ஓட..
"அவ்வளவு சீக்கிரம் நீ என்ன விட்டு போக முடியாது" என்று அது அவளை கட்டிப் போட..
"எனக்கு முன்னாடி இதே தொழிலை என்ற குடும்பத்துல செஞ்சவங்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டியதுதானே.. ஏன் வந்து என்னை தொல்ல பண்ற? எனக்கு உன்ன பார்த்தாலே பயந்து பயந்து வருது" என்று கூறி போவதில் குறியாக இருக்க..
"ஏன்னா.. உன்ன தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்று கைகளை வளைத்து நெளித்து முகத்தில் வெட்கத்துடன் அவளை நெருங்கி அது கூற..
"அடக்கொடுமையே இது வேறயா!! இந்த பசங்க தான் பொண்ணுங்களா பார்த்தா இப்படி வலியுறானுங்கனு நினைச்சா நீங்களுமாடா!! அடேய் கீசா!! கீப் டிஸ்டன்ஸ்!!" அது வரை இருந்த பயம் போய் கோபத்தில் அவள் சத்தமிட..
"நான் உனக்கு உதவி செய்ய தான் வந்து இருக்கேன்" ஏனாறு அது கூற..
"நீ இங்கன இருந்து போறதே எனக்கு செய்ற பெரிய உதவி" என்று அவள் கையெடுத்து கும்பிட..
"அதெல்லாம் முடியாது நான் உனக்கு உதவி செஞ்சே ஆகுவேன்" என்று சிறுபிள்ளை போல கை கால்களை உதைத்து அது அடம்பிடிக்க..
"எதுவோ செஞ்சு தொலை" என்று கூறியவள் முன்னே நடக்க அதுவும் தொடர்ந்தது..
"எங்க வர?" என்று அவள் கேட்க.
"நம்ம வீட்டுக்கு தான்" என்றது அது உரிமையாக..
"என்னது நம்ம வீடா?" என்று இவள் அதிர..
"இனிமேல் நான் உனக்கு உதவி செய்கிறதுனு பெரிய மனசு பண்ணிட்டேன். அதனால உன் கூடத்தான் இருப்பேன். ஆனால் கவலை படாதே உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன். வேற யாரு கண்ணுக்கும் தெரியும் மாட்டேன்" என்று அது அவளுக்கு வாக்கு கொடுத்து அவள் பின்னே வந்தது அவள் மறுக்க.. மறுக்க.. அழுக.. அழுக.. விடாமல்...
அதேபோல் கண்ட நேரத்திலெல்லாம் தோன்றி அவளை பாடாய் படுத்தாது.. அவள் பூஜை செய்யும் அந்த அறையில் ஒரு மேசை மேல் ஏறி உட்கார்ந்து அவள் செய்யும் அட்டூழியங்களை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும்.
அது சிரிப்பதைப் பார்க்க இவளுக்குக் கோபம் வந்து அதை திட்டினாலும் இதுவரை அது கோபம் பட்டதே கிடையாது அவளிடம்..
"படத்தில் வரும் சாத்தான் போல ஜீபூம்பா போட்டெல்லாம் பணத்தையெல்லாம் வரவைக்க முடியுமா?" அவள் கேட்க..
"அதெல்லாம் செய்வேன்.. ஆனா எனக்கு நீ ஒரு பிளையிங் கிஸ் தரியா?" என்று கேட்கும்..
அவளோ அருகிலிருக்கும் தொடப்பகட்டைய எடுக்க, அது அந்த இடத்திலிருந்து பயந்து ஓடிவிடும்..
உதவி செய்கிறேன் என்ற அந்த உருவமோ இதுவரை அவளை சைட் மட்டுமே அடித்துக் கொண்டிருந்தது. அவளும் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் தன் கையே தனக்கு உதவி இல்லை இல்லை தன் வாயை தனக்குதவி என்பது போல.. குறி சொல்லியே இதுவரை தன் குடும்பத்தை குறைவில்லாமல் நடத்திக் கொண்டு வருகிறாள்.
அப்பாடி ஃப்ளாஷ் பேக் முடிஞ்சுது...
வாங்க நாம போய் அந்த காளை பூசைன்னா என்னன்னு பார்க்க போகலாம்..
சொர்ணமும் நாச்சியும் பார்த்து பார்த்து பூஜைகளுக்கு அனைத்தும் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். பழங்கள் பூக்கள் என்று கூடை கூடையாக வைத்திருந்தனர்.
ஏதோ காளை பூஜைக்காக தயாராகி வந்துவிட்டாள் நம் நீலாம்பரி.. அடிக்கும் சிவப்பு கலரில் புடவை கட்டி.. அதே சிவப்பில் பெரிய பொட்டாக வைத்து தலையை தூக்கி ஒருபக்கமாக கொண்டையிட்டு.. சற்று தூக்கலாக கண்களுக்கு மையிட்டு வந்திருந்தாள் என்று குறிக்காரி..
"இது காள பூச அதனால இங் பொம்பளைங்க எல்லாம் இருக்கக் கூடாது நீங்க எல்லாம் வெளில போங்க" என்று சொர்ணத்தையும் நாச்சியையும் அனுப்பி வைத்துவிட்டு பூஜைக்கு என்று ஏற்பாடு செய்த ரூமில் அமர்ந்தாள்.
அப்போது அவர்கள் வீட்டு வேலையாள் முருகன் வம்படியாக நம் நாயகன் ஸ்ரீராமனை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.
"என்னங்கடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? நானும் பொறுமையா பெயருக்கு ஏத்தாப்போல இருக்கலாம்னு பார்த்தா இருக்க விடமாட்டீங்க போலிருக்கே?" என்று அவன் கத்த..
இதுவரை பூஜை என்ற பெயரில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவள் அவனைப் பார்த்து வாயை குவித்து விரலை வைத்து "உஷ்ஷ்ஷ்" என்று சொல்லி தனக்கு எதிராக இருக்கும் தாம்பாளத்தில் உள்ள உடையை தரித்து வருமாறு அவள் கூற..
அவனோ முடியாது என்று வீம்பாக நிற்க..
"நீயா மாத்துன உனக்கு நல்லது!! இல்ல நானே வந்து மாத்திவிடுவேன்? வசதி எப்படி?" என்று அவள் எழ முயற்சிக்க.. "சீச்சி ஒரு பொண்ணோட கை என்மேல படுறதா? நெவர்" என்றவாறு அதை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள குளியலறை சென்று, அதைத் திறந்து பார்த்தவன் அலறினான் அந்த உடையை பார்த்து...
அதே நேரம் அவன் பின்னால் நின்றுகொண்டு "அப்படியென்ன உடை" என்று அந்த உடையை எட்டிப்பார்த்த கீசனோ தன் பானை வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தது.
ஆறரைடி ஆண்மகனுக்கு அரை இஞ்சு மஞ்சள் துணி கொடுத்து கட்டி வர சொன்னால், எப்படி சம்மதிப்பான் இந்த ஆஞ்சநேயரு பக்தன்? அதுக்கு அவன் அலற!! கீசன் சிரிக்க!!
சட்டென்று கீசனுக்கு ஓர் எண்ணம் பிறக்க.. அந்த மூன்றடி உயர சாத்தான், ஆறடி ஆண்மகனை ஆட்டிவிக்க முடிவு செய்தது.
அவன் பூண்டுள்ள அனுமான் துளசி மாலை அவனுள் சாத்தானை உள்நுழைக்க அனுமதிக்கவில்லை. ஆனால் அவனை ஆட்டுவிக்க அதுவால் முடியும்..
கீசனோ வேலையை ஆரம்பித்து வைக்க.. அதன் விளைவோ வேப்பிலையை கையில் வைத்து ஆடிக்கொண்டிருந்த நம் ஆத்தாவை ஆஞ்சநேயர் பக்தன் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.. அது வேப்பிலை கிஸ்ஸாம்!! இன்னும் என்னென்ன வைச்சிருக்கோ தெரியலையே இந்த கீசா!!
ஆத்தாவோ பயங்கர அதிர்ச்சியில்!!
கீசாவோ இனி தான் ஆரம்பம் என்று சிரிப்பில்!!
பாவம் நம்ம அனுமன் பக்தன்!!
சொக்க ரெடியா??
