அத்தியாயம் 47
சில நாட்கள் காதல் உணர்வில் திளைத்தாலும் அதனை வெளிப்படையாக கூறவில்லை சிவேந்திரன்.
குளோரியாவுக்கோ மனதில் சின்ன ஐயம்.
சிவாவுக்கு என்னை பிடித்திருந்தாலும்.. எங்கே குடும்ப கௌரவம் வேற்று நாட்டு பெண் என்று அவனின் பெற்றோர்கள் மறுத்துவிட்டால் சிவாவும் தன்னை மறந்து விடுவானோ என்று..!
ஆனாலும் சிவாவின் அழுத்தமான முகத்திற்கு பின்னே அவன் மனதினை அறிய அவளால் முடியவில்லை.!
அப்படி அறிந்து கொள்ளும் காலம் வந்தது அவளுக்கு..!
ஒரு நாள் அவனைத் தேடி மருத்துவமனைக்கே வந்து நின்ற குளோரியாவை கண்டதும், அவன் கண்களில் மழைக்கால மின்னல்கள் சிதற.. அதனை அழகாக மனதில் படம்பிடித்துக்கொண்ட குளோரியாவோ அவன் முன் ஒரு படிவத்தை நீட்டினாள்.
“என்ன இது? ஆபீஸ்க்கு லீவு போட்டு ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்த போயிட்டியா? அதனால மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க என்கிட்ட வந்து இருக்கியா?” என்று அவளை சீண்டவென்று கேட்ட சிவேந்திரன் அறிவான், அவள் எவ்வளவு அவளது தொழிலை விரும்புகிறாள் என்று..!
“அதுக்கெல்லாம் அவசியமே இல்லை டாக்டர் சார்.. நீங்க ஒழுங்கா படிச்சு பாருங்க” என்று அவன் முன் ஆர்வமாக அவள் அமர்ந்து கொள்ள..
அவனும் அதனை மெல்ல எடுத்து படித்து பார்த்தவன் கண்ணிலோ திடீர் அதிர்ச்சி “இந்தியா போறியா?” என்று கேட்டான்.
“நோ நோ தமிழ் நாட்டுக்கு போறேன்..!” என்றாள் அவள் கண்களில் கனவுகள் மின்ன..!
“ஒரு பெருமூச்சியோடு எப்ப ரிட்டர்ன்?” என்று கேட்டான்.
“சிக்ஸ் மந்த்ஸ் ஆகும்”’என்றாள் ஒரு எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்து..!
தாயை பிரிந்து நிற்கும் சவலை பிள்ளை போல அவனின் கண்களில் தென்பட்ட பாவத்தைக் கண்டு ரசித்தவளோ..
“தேடட்டும்.. தேடட்டும்.. என்னை நன்றாக தேடட்டும்..! உன் மனதில் எனக்கான தேடல் எப்படி இருக்கும் டாக்டரே?” என்று மனதுக்குள் அவனின் அதிர்ச்சியை ரசித்தவள்,
“எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும் சிவா. நான் இந்தியா போயிட்டு வரேன் சிக்ஸ் மன்த்ஸ் ஆகும். அதனால வீட்டு காலி பண்ணலாம்னு நினைக்கிறேன். என் திங்க்ஸ் மட்டும் பேக் பண்ணி தரேன் உங்க வீட்ல ஒரு மூலையில வச்சுக்க முடியுமா? நான் ரிட்டன் வந்ததும் வேற வீடு பாத்துக்குவேன். அப்போ நான் அங்க என் திங்க்ஸ ஷிப்ட் பண்ணிக்கிறேன்” என்று கேட்டாள்.
“இதையெல்லாம் நீ கேட்கணுமா? உன் திங்க்ஸூக்கு மட்டும் இல்ல உனக்குமே என் வீட்டுல எப்பொழுது இடம் உண்டு” என்று மறைமுகமாக அவனின் மனதை உரைக்க..
அதை அறிந்த குளோரியாவும் “ஓஓ.. மறைமுகமாக சொல்வாராமா? நேரா சொல்ல மாட்டாராமா?” என்று மனதினில் நொடித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ்..!” என்றவள், சொன்னபடியே அவளின் பொருட்களை எல்லாம் அழகாக பேக் செய்து கொண்டு வந்து ஆட்கள் மூலம் அவனது வீட்டில் அடுக்கி வைத்தாள்.
சிறிது நேரம் அவன் வீட்டிலே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் பேச்சைக் காட்டிலும் அவனது பார்வை வீச்சு தான் அவளின் மீது அதிகமாக அழுத்தி படிந்தது.
“ஓகே.. இன்னிக்கு நைட் 9க்கு பிளைட்” என்று அவள் கிளம்ப..
அந்நேரம் என்ன நினைத்தானோ சிவேந்திரன் அவள் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்து இருக்க, மெத்தன்று அவன் மீது வந்து மோதிய பெண்ணவளை அணைத்துக் கொண்டவன் “ஐ அம் வெயிட்டிங் பேபி..!” என்றான் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து..!
இப்படி சட்டென்று தனது காதலை.. மனதை.. சிவேந்திரன் தெரியப்படுத்துவான் என்று எண்ணவே இல்லை குளோரியா.
இருவருக்குமே இருவரின் மனது தெரிந்துதான் இருந்தது. அதை புரிந்து தான் இருந்தது. ஆனாலும் வெளியிட்டுக் கொள்ள ஏதோ ஒரு தயக்கம்..!
ஆனால் இன்று அவள் தன்னை விடுத்துப் போகிறாள் என்று எண்ணமே அவனை நிலைகுலையச் செய்ய.. தன்னையும் மீறி தன் மனதை உரைத்து விட்டான்…!
“ஆறு மாசம்.. உன்னை பார்க்காம.. உன்கிட்ட பேசாம.. ரொம்ப கஷ்டம் பேபி” என்று அவன் அவளை அணைத்து இறுக்கிக் கொள்ள..
அழகாக சிரித்தவளோ “ஆறு மாசம்னு சும்மா சொன்னேன் உங்க மனசை அறிய..! ஜஸ்ட் ஒன் மன்த் டூர் தான்” என்றவள் அவனிடம் பிரியா விடை பெற்று தமிழ்நாடுக்கு வந்தாள் அவர்கள் குழுவோடு..!
சென்னை மண்ணை மிதித்ததுமே அவள் மனதில் அத்தனை பரவசம்.. இது என் சிவாவின் ஊரு.. அவன் உறவுகள் இருக்கும் ஊர்.. இனி என் புகுந்த ஊரும் என்று..!
அவர் ஆராய்ச்சி செய்த கலாச்சாரத்தை விட இங்கே கலாச்சார சீர்கேடு தான் அதிகம் இருந்தது. கண்களால் பார்த்து அதிர்ந்தாலும்..
அதனை விடுத்து.. கிராமப்புறம் சில தொல்பொருள் அகழ்வாராய்ச்சி இடங்கள் போன்ற அக்கால கலாச்சார நிறைந்த ஊர்கள் மற்றும் சில கோவில் சுற்றுலா தளங்கள் என்று தன் குழுக்களோடு சுற்றித்திரிந்து அவள் ஆராயச்சிக்காக நிறைய தகவல்களை திரட்டிக் கொண்டே மீண்டும் அமெரிக்க வந்தாள்.
அந்த ஒரு மாத காலத்தில் குளோரியா தனக்கு எவ்வளவு முக்கியம் என்று சிவேந்திரன் புரிந்து கொண்டான்.
குளோரியா இந்தியாவிலிருந்து வந்தவுடன் அவளை ஏர்போர்ட்டில் பிக்கப் செய்து சிவேந்திரன் கண்களிலோ அத்தனை ஆனந்தம்..!
அன்று இரவு அவளை தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ள, சிவாவின் இந்த மாற்றம் அவளுக்குமே ஆனந்த அதிர்ச்சியை கொடுத்தது..!
மறுநாள் அவளை அவன் அழைத்து சென்று இடமோ ஒரு சிறு கோவில்..!
மெலிதான வெயில்.. அப்போது..! சூரியனும் இவர்களை பார்க்க ஆசைப்பட்டு வந்தான் போலும்..!
தமிழ்நாட்டைப் போல
பெரிய பந்தல் இல்லை.
ஆடம்பரம் இல்லை.. அலங்காரங்கள் இல்லை கூட்டம் கூட்டமாக மக்கள் இல்லை உறவுகள் இல்லை..!
நண்பர்களாக சில பேர் மட்டும்.
பட்டு வேட்டி, சட்டையில் சிவேந்திரன்..
குளோராயாவோ எளிய பட்டு சேலையில்..
நகை குறைவு தான்..! ஆனால் அழகுக்கும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை..!
அவள் கண்களில் பயமும் தெளிவும் மாறி மாறி வந்தது
அவளின் கையை இறுக பற்றி கொண்ட சிவேந்திரன் தங்கள் முன் இருந்த பூசாரியை காட்ட..
“பூசாரி மந்திரம் சொல்லுகிறார்.. கவனி..!” என்றான்.
ஆனால் அது எதுவுமே குளோரியா இருந்த மனநிலைக்கு புரியவே இல்லை..! புத்தியில் ஏறவில்லை..!
இப்படி அதிரடியாக திருமணத்திற்கு சிவேந்திரன் ஏற்பாடு செய்திருப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“உங்க வீட்ல சொல்லிட்டீங்களா? என்ற கேள்விக்கு இதுவரை அவனிடம் அழகிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. அதிலேயே சில விஷயங்கள் புரிந்து கொண்டவள், மேற்கொண்டு அவனை எதுவுமே கேட்கவில்லை. தன் பெற்றோருக்கு மட்டும் தகவல் அனுப்பினாள்.
அவள் புரியாமல் திணறுகிறாள் என்று புரிந்த சிவேந்திரன், “இத புரிஞ்சுக்கணும் அவசியம் இல்ல.. கவனிச்சா போதும்” என்றான்.
“ஆமா.. ஏன் இந்த பூசாரி கடவுளுக்கு சொல்ற மந்திரத்தை எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு சொல்றார்” என்று குளோரியா கேட்க..
அவன் மெதுவாக குனிந்து
“இப்போ சொல்றது எல்லாம்
கடவுளுக்காக இல்லை…
நம்ம வாழ்க்கைக்காக..!” என்றான்.
பொன் தாலியை கையில் ஏந்தி அதனை அவள் கழுத்தில் கட்டும் தருணம் அவனின் கைகள் நடுங்கியது.
காதல் மிகுதியில் திருமணம் செய்து கொள்ள வந்து விட்டான் தான். ஆனால் வீட்டில் தெரிந்தால் அப்பா எப்பொழுதுமே கத்துவார்.. அவருக்கு பிடிக்காது தான்..!
ஆனால் அம்மா.. இப்பொழுது தான் திருமணமான தங்கை ஒரு பெருமூச்சோடு அனைவரிடம் மன மானசீகமாக மன்னிப்பு கேட்டுவிட்டு எங்களை வாழ்த்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டு இருக்க.. குளோரியா மெல்ல அவன் கையைப் பற்றினாள்.
“ஹாலோ.. நீங்க டாக்டர்…
கை நடுங்கக் கூடாது?” என்று அவன் மனதை மாற்றும் பொறுட்டு..
“மதத்துக்கெல்லாம் நடுங்காது ஆனா இதுக்கு மட்டும்.. விதிவிலக்கு” என்று கண்ணடித்தவன் இப்பொழுது சந்தோஷமாகவே அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான்.
அவர்களை ஆசிர்வதிப்பதை போல அந்நேரத்தில்
கோவில் மணியின் ஓசை..!
காற்றில் மெல்லிய மலர்களின் வாசனை..!
அது மட்டுமல்லாமல் முறையாக சர்ச்சிலும் அவர்களது கல்யாணத்தை முடித்து பதிவும் செய்து கொண்டனர்.
“இப்போ நான்
உங்க நாட்டுக்காரியா?” என்று வெண்ணிற கவுனில் மஞ்சள் தாலி கழுத்தில் மின்ன ஹாசில் விழிகளோடு தன்னை பார்த்து கேட்கும் அந்த கந்தர்வ பெண்ணை அத்தனை பிடித்தது சிவேந்திரனுக்கு..!
“இல்லையா பின்ன?” என்று அவனோ அவளை கைகளில் ஏந்தி கேட்க..
“அப்ப நீங்க?” என்று ஒற்றை விரலை அவன் நெஞ்சில் அழுத்தமாக வைத்து கேட்டவளின் கண்களில் கண்ட காதலில்..
“நான் இந்த நாட்டு மருமகன்” என்றவன், அவளை பேச விடாமல் இதழ்களை கொய்தான்..!
“நாம ரெண்டு பேரும்
புதுசா ஒரு நாடு.. உலகத்துக்கு.. போகலாமா?” சொல்லியது போல வேறொரு உலகத்திற்கு இட்டு சென்றான்.
“என் காதல் இப்போது என் கைகளில்..” என்றவன் அவளது கண்களில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டுக் கொண்ட குளோரியாவின் முகமோ அவன் கழுத்துக்கு அடியில் இருக்க… அவனின் முத்தத்தில் அவளது மூச்சு சூடேற.. இப்பொழுது அவனது கழுத்தும் சூடேறியது..!
காலையில் அவன் கையோடு கை கோர்த்தவள்.. இப்பொழுது அவன் உயிரோடு கோர்க்கப் போகிறாள் என்ற நினைப்பே.. அவனுக்குள் நரம்புகளை முறுக்கி விரவி பரவி ஒரு ஏகாந்தத்தை கொடுக்க.. அவளை இறுக்கி அணைத்தவன் படுக்கையில் விட்டான்.
மெல்லிய முத்தமாக நெற்றியில் ஆரம்பித்த அவனது அதிரங்கள் மூக்கு கன்னம் என்று இதழ்களில் இளைப்பாரி அதை கொஞ்சம் வன்மையாகவே கொய்த்துக் கொண்டிருந்தன..!
அதன்பின் அதிரங்கள் அவளின் வெண்ணிற தேகத்தில் எங்கெங்கோ பயணித்து.. எங்கெங்கோ ரசித்து ருசித்து.. தன் பசியை தீர்த்துக் கொள்ள முடியாமல் தவித்து தகித்தது..!
அவளைத் தன்னுள் தொலைக்க வைத்து.. அவளுள் தன்னை தொலைத்தான்..!
தன் இதயம் முழுவதும் காதலால் நிறைந்தவளை தன்னுள் நிரப்பி அவளுள் தன்னை நிரப்பி.. இருவருமே நிறைவை கண்டனர்..!
இப்படியாக அடுத்த சில மாதங்கள் இருவரது காதலிலும் மோகத்திலும் காமத்திலும் விரைவாகவே கழிந்தன..!
புதிதாக அணிந்திருந்த தாலியும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் ஏனோ ஒரு அசௌகரியம் அவளிடம். அதை புரிந்து கொண்ட சிவேந்திரன் மெல்லிய செயினில் தாலியை மாட்டி போட்டுவிட்டான்.
தன் கையில் இருந்த மோதிரத்தை காட்டி “இது எப்படி எனக்கோ அதுபோல உனக்கு அது..!” என்றதும் அவளும் விளங்கிக் கொண்டாள்.
அப்பொழுது அழகப்பனின் உறவினன் ஒருவன் அமெரிக்காவுக்கு வியாபார விஷயமாக வந்திருக்க.. அவனிடம் மகனின் முகவரியை கொடுத்து சில பொருட்களின் கொடுத்து வர சொல்லி இருந்தார் அழகப்பன்.
அவனும் சிவேந்திரன் தனித்து தானே இருக்க போகிறான் என்று அவனின் விடுமுறை நாளை கணக்கிட்டு வந்தவருக்கு.. இவன் இங்கே ஒரு பெண்ணுடன் அதுவும் அந்நாட்டு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதை கண்டவுடன் ஒன்றும் சொல்ல முடியாமல் அழகப்பன் கொடுத்ததை கொடுத்துவிட்டு மறக்காமல் அழகனிடம் கொடுத்துவிட்டு போய்விட்டார். சில பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு..!
சிவேந்திரனிடம் விளக்கம் கேட்டிருந்தாலே அவன் தன் திருமணத்தைப் பற்றி உறுதியாக கூறியிருப்பான்.
ஆனால் வந்தவனோ சிவேந்திரனைப் பற்றி தானே ஒரு முடிவு எடுத்து, பின் அழகப்பனிடம் “என்ன அழகப்பா உன் பையன் தனியா இருப்பானு சொன்ன? இங்க என்னன்னா இந்த நாட்டு பொண்ணோட கூத்தடிச்சிட்டு இருக்கான்.. அது கல்யாணம் ஆகாம என்ன பழக்கமும் இதெல்லாம்” என்றதும் அழகப்பனோ அவனை திட்டிவிட..
“இங்க பாரு அழகப்பா..! நா ஒன்னும் பொய் சொல்லல.. என் கண்ணால பார்த்தது தான் சொல்றேன். இங்க வந்ததும் அந்த பொண்ணு குட்டி கவுன போட்டுக்கிட்டு டார்லிங் பேபின்னு அவனை கொஞ்சி பேசுறதும்.. இவனும் பேபி பேபின்னு கொஞ்சறதும்.. கண்ணு கொண்டு பார்க்க முடியல.. எவ்வளவு பாரம்பரியமான குடும்பம் உன்னது? உன் குடும்பத்தில் இப்படி ஒருத்தன நினைக்கவே முடியல..! எனக்கு மட்டும் இப்படி ஒரு புள்ள இருந்தான்னா அவனை நான் எப்பவோ தலைமுடிக்கிடுவேன்” என்று சொல்லிவிட்டு செல்ல, அதற்கு பின் அழகப்பனின் ஆட்டத்தை கேட்கவா வேண்டும்..!
“உன்னோட படுத்ததுக்கு அந்த பொண்ணு கிட்ட பணத்தை தூக்கி போட்டுட்டு நீ இப்பவே ஊருக்கு வந்து ஆகணும்” என்று அவனின் பேச்சை குளோரியாவும் கேட்டே இருந்தாள்
அதன்பின் அப்பாவிடம் வார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை சிவேந்திரன். அம்மாவை தங்கை
யை பற்றிய வருத்தங்கள் இருந்தாலும்,
அவர்கள் தங்கள் கூட்டுக்குள்ளேயே ஒரு உலகை உருவாக்கி மகிழ்ந்திருந்தனர். அந்த மகிழ்வின் பரிசாய் இராவண்னும் பிறந்தான்.
தொடரும்..
