அசுரன் 46

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 46

 

ராவண் சொன்ன அவன் பெற்றோரின் காதல் உலகத்திற்கு நாமும் போவோமா?

 

அன்று..!

 

அழகிய அமெரிக்க நகரம், குளிர்கால மாலை வேளை‌‌..  

மெல்ல விழும் பனி..

தெருவிளக்குகளின் ஒளி.. என்று சற்றே ரம்மியமான வேளை..!

 

ஆனால் அந்த ரம்மியமான வேளையை அனுபவிக்காமல்.. வேலையில் ஆழந்து இருந்தார் இள வயது சிவேந்திரன் மாறவேல், நம் இராவண் திரேந்திரனனின் தந்தை..!

 

சிவேந்திரன் இளவயது என்பதனால் நாமும் ‘அவரை’ விடுத்து ‘அவன்’ என்றே அழைப்போம்..!

 

அவனைப் போல அந்த மருத்துவமனையும் அமைதியும் அவசரமும் கலந்த இடமாய் இருந்தது.

 

ஆனால் இன்று எப்பொழுதும் விட அதிக அவசரமாய் செவிலியர்களும் மருத்துவர்களும் விரைவாய் நடந்து கொண்டிருந்தனர் சென்று கொண்டிருந்தனர்.

 

மருத்துவமனையில் எமெர்ஜென்சி வார்டில் இரவு

மானிட்டர்கள் ஒலிக்கின்றன.. இல்லையில்லை அலறுகின்றன.!

 

ஒரு மருத்துவர் வேகமாக ஓடி வந்து, “டாக்டர் சிவேந்திரன்.. இட்ஸ் எமர்ஜென்சி..!” என்று பதட்டத்தோடு கூற, நரம்பியல் மருத்துவர் மட்டுமல்ல சைக்காலஜிலும் பட்டம் பெற்ற சிவேந்திரன் அவனை கூர்மையாக பார்த்து பின் அவனோடு சென்றான்.

 

பொதுவாக அவனின் கண்களோ நோயாளியின் உடல்நிலை மட்டுமல்ல மனநிலையையும் தெளிவாக கணக்கெடுத்து அதனை துல்லியமாக தைக்கும்.

 

“நர்ஸ் வாட் ஹேப்பண்ட்..!” என்று சிவேந்திரன் அருகில் இருந்து செவிலியரிடம் கேட்க..

 

“டாக்டர் ரிசர்ச் பண்ற இடத்துல ஆக்சிடெண்ட்..! மத்தவங்களுக்கு ஓரளவுக்கு பரவாயில்ல இந்த பெண் தான் கொஞ்சம்..” என்று அவர் ஆங்கிலத்தில் உரைக்க..

 

மானிட்டரில் தெரியும் அளவீடுகளையும் அந்தப் பெண்ணையும் சோதித்துப் பார்த்த சிவேந்திரன் “பெண் நிலை.. ஸ்டேபிள்., ஆனா.. சிவியர் இன்சூரிஸ்” என்று தனக்குள் பேசி தலையசைத்துக் கொண்டான்.

 

அதன் பின் அப்பெண்ணுக்கான சிகிச்சைகள் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டன.! முதல் கட்ட சிகிச்சைக்கு பின் அப்பெண் எமர்ஜென்சி வார்டில் இருந்து ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார்.

 

அப்பெண் வேறு யாரும் இல்லை ராவண்னின் தாய் குளோரியா தான்..!

 

மேலும் ஒரு வாரம் ஐசியூவில் இருந்து தேறிய பின் அவளை நார்மல் வார்டிற்கு மாற்றினர்.

 

அம்மருத்துவமனைவின் நார்மல் வார்ட் பிரிவு, இரவு வேளையில் படுக்கையில் அமர்ந்திருந்தாள் இளவயது குளோரியா..!

 

அவளின் பக்கத்தில் 

ஒரு வாய்ஸ் ரெக்கார்டரும்

ஒரு குறிப்புப் புத்தகம் இருந்தன. 

 

மிகுந்த யோசனையோடு புத்தகத்தை புரட்டிக் கொண்டு ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்திந்திருந்தாள் பெண்..!

 

“ஹலோ குளோரியா..!” என்றப்படி அவளை பரிசோதிக்கு செவிலியர் ரோடு உள்ளே வந்தான் சிவேந்திரன்.

 

ஒரு நொடி இருவர் 

கண்களும் சந்தித்தன..! அவன் கண்களோ மௌனமாய்..!

அவள் கண்களோ மோகனமாய்..!

 

கடந்த மூன்று நாட்களாக ஐசியூ அறையில் பார்த்து தண்மையாக தன்னிடம் பேசி.. நிறைய நிறைய தன்னம்பிக்கை கொடுக்கும் இந்த இளம் மருத்தவரின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு குளோரியாவிடம்..!

 

அதனை அவளின் கண்கள் பிரதிபலித்தாலும் ஏனோ சிவேந்திரன் கண்கள் அவளை அப்படி பார்க்கவில்லை. எப்பொழுதும் போல சிநேக பாவம் மட்டுமே காட்டும் அதே கண்கள்..!

 

சிவேந்திரனை பார்த்ததும் குளோரியா தன் புத்தகத்தை மூடி அருகில் வைக்க “ஹவ் யூ ஆர் ஃபீலிங்?” என்றபடி தன் டெதஸ்கோபால் கன்னியின் இதயத்தை துடிப்பை கேட்டான். ஆனால் அதன் உணர்வுகளை கேட்க மறந்தான்..!

 

“பர்ஃபெக்ட்..!” என்றவனின் கண்களில் குளோரியாவின் அருகில் இருந்த அந்த குறிப்பு புத்தகம் பட்டது..!

 

அவன் கண்களில்

ஒரு சிறிய அதிர்வு..!

 

ஏனென்றால் அந்த குறிப்பு புத்தகத்தின் மீது “நோட்ஸ் ஆஃப் தமிழ் ட்ரடேஷன்ஸ்” என்று இருந்தது‌‌..!

 

ஆனால் அப்பெண் என்ன தொழில் செய்கிறாள் என்பதை பற்றி எல்லாம் இவன் ஆராயவில்லை. தமிழ் என்ற வார்த்தை கண்டவுடன் அவன் கண்களில் ஒரு சிறு ஆனந்த அதிர்ச்சி..! ஒரே ஒரு நொடிதான் அந்த உணர்ச்சி..!

 

ஆனால் அந்த ஆனந்த அதிர்ச்சியை கண்டு கொண்டாள் குளோரியா..!

 

“நீங்க தமிழரா?” என்று சிவேந்திரன் மாதிரி யோசிக்காமல் பட்டென கேட்டுவிட்டாள் குளோரியா.

 

அவனோ ஒரு நொடி நின்று, பின் மெல்ல சிரித்து, 

“தமிழ் பேசுவேன்..!” என்றான், அவ்வளோ தான் என்பது போல.

 

“நான் பேச மாட்டேன்..” என்ற குளோரியா கண்களில் ஒரு மெலிதான குறும்புச் சிரிப்பு. ஏனென்றால் சிவேந்திரன் அவளிடம் சொன்னது ஆங்கிலத்தில்.. ஆனால் அதற்கு குளோரியா பதில் சொன்னது என்னவோ தமிழில்..!

 

அட..! என்று ஒரு மீண்டும் ஆச்சரியமான பார்வை சிவேந்திரனிடம்..!

 

மறுநாள் காலை ரவுண்ட்ஸ் வந்த சிவேந்திரன் குளோரியாவின் அடிபட்ட காயம் எல்லாம் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து, “கெட்டிங் ஹீலிங்..! டோண்ட் வொர்ரி..!” என்றவன், செவிலியரை விட்டு அக்காயங்களுக்கு மருந்திட்டு ட்ரெஸ்ஸிங் செய்ய சொல்லியவன், சென்று இருக்கலாம் தான் ஆனால் ஏதோ ஒன்று அவனை சிறிது நேரம் அவளிடம் பிடித்து வைத்திருந்தது. 

 

அவளது ரிப்போர்ட் பார்த்தபடி அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தான்.

 

“நான் தமிழ் கலாச்சாரம் பத்தி

ஆராய்ச்சி பண்ணுறேன்..” என்றதும் அவளின் ரிப்போர்ட்ஸ்களை பார்த்துக் கொண்டிருந்த சிவேந்திரனின் கைகள் ஒரு நொடி நின்று, பின் தொடர்த்தன..!

 

“ஏன்?” என்றான். எளிய கேள்வி தான் மணிரத்னம் படத்தில் வருவதைப் போல, ஆனால் ஆழமான அர்த்தம்.

 

“தமிழ் கலாச்சாரத்திற்கு உடையவங்க

அதனைக் காப்பாத்த மாட்டேங்கிறாங்களே..” என்று தோளை குலுக்கிய குளோரியா கண்களில் இம்முறையும் சிரிப்பு. 

 

ஆனால் குறும்பாக இல்லை அவனை குற்றம் சுமத்தி..!

 

சிவேந்திரன் அவளின் பார்வையை தவிர்த்து தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவன், “என்ன பண்றது இக்கரைக்கு அக்கரை பச்சைனு.. மேற்கு பக்கம் நாங்க வந்திட.. நீங்க கிழக்கு பக்கம் வந்துட்டீங்க” என்று சென்றான் ஒரு தோள் குலுக்களோடு..!

 

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் குளோரியா..!

 

அன்றிறவு அவன் தன் வீட்டிற்கு செல்லும் முன் மீண்டும் ஒரு முறை உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு வந்தான் சிவேந்திரன். 

 

மருத்துவமனை காரிடாரில் சிவேந்திரன் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு ஒரு தமிழ் பாடல் கேட்க.. அதுவும் சற்றே பழைய பாடல்..!

 

“யாரா இருக்கும்?” என்று ஒரு சிறு ஊகம் இருந்தாலும் அதனை நிரூபித்துக் கொள்ள, பாடல் கேட்ட வழியே அவள் கால்கள் செல்ல.. அவன் எதிர்பார்த்தது போல அங்கே குளோரியா தான் அப்பழைய தமிழ்ப் பாடலை

மொபைலில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவனின் ஊகம் சரியே.. ஆனால் அவளை நெருங்காமல் தூரமே நின்று

விட்டான்.

 

காரணம், காரணமே இல்லாமல் இப்பொழுது எல்லாம் அவனின் காது.. வேற்று நாட்டுப் பெண்ணின் கொஞ்சம் தமிழுக்கு ஈர்க்கப்பட்டு வருகிறது என்றால்.. அவனது காலும் அவனின் பேச்சை மீறி அப்பெண்ணின் பக்கமே அதிக முறை நடமாடிக் கொண்டிருக்கின்றன..!

 

இன்றும் சிவேந்திரனுக்கு இந்த பக்கம் எந்தவித வேலையும் இல்லை தான். 

 

ஆனாலும் கால்கள் ‘வா.. அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்’ என்று அழைக்க.. 

 

கண்களும் ‘ஆமாம் ஆமாம் அவளையும் அப்படியே பார்த்து விட்டு வரலாம்’ என்று ஒத்து ஊத..

 

காதுகளோ ‘அவளிடம் இரண்டு வார்த்தை பேசினால் கூட நன்றாக தான் இருக்கும்’ என்று வாதிட..

 

இப்படி ஐம்புலன்களில் மூன்று அவளால் ஈர்க்கப்பட்டு அவனை இழுத்து வந்து விட்டன..!

 

வந்ததுக்கு இதோ அவள் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பாடலை அவனும் கேட்டு.. அவள் ரசிப்பது இவனும் ரசித்து.. ஒரு சிறு புன்னகையோடு சென்று விட்டான்.

 

அடுத்து வந்த நாட்களில் இப்படியாக காலை அவளை மருத்தவனாக பார்ப்பதும்.. பின்பு இரவு வீட்டிற்கு செல்லும் முன் அவளை தள்ளி நின்று யோசனையாக பார்ப்பதும்.. ரசிப்பதும்.. ஆகவே சென்றது சிவேந்திரனின் ரகசிய நாட்கள்..!

 

அன்று‌ சிவேந்திரனுக்கு ஏதோ இழந்ததைப் போல இருந்தது‌ ஏனென்றால் கிளோரியா உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டாள்.

 

அவ்வளவுதானா?

 

ஆமாம் அவ்வளவுதான்..!

 

என்று கேள்வியும் அவனே பதிலும் அவனே..!

 

அதன் பின் அவனும் அவன் மருத்துவமனை மட்டுமே உலகம்..!

 

சிறு நாட்களாக அவன் உலகத்தில் ஒரு சிறு பூ பூத்து வாசனை பரப்பி.. பின் காணாமல் போக.. மீண்டும் அதே மருத்துவ நெடி உடைய வாழ்க்கை..!

 

 

இப்படியாக சென்று கொண்டிருந்த நாட்களில்.. இதே தனிமையில் இருந்தால் பித்து பிடித்து விடும் என்று உணர்ந்தவன், ஒரு சிறு மாற்றத்திற்காக.. ஒரு முறை அவன் பொது நூலகத்திற்கு செல்ல.. 

 

அங்கே அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு பின்னே குறிப்பெடுத்துக் கொண்டிருந்த குளோரியாவை கண்டதும், இப்போது கண்களும் காதும் காலும் மட்டுமல்ல இதயமும் அவள் பால் ஈர்த்தன அவனை..!

 

நூலகத்தில் அவள் குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்க.. சிவேந்திரன் மெளனமாக ஒரு தமிழ் சித்த மருத்துவ நூலை

அவள் மேசையில் வைத்தான்.

 

அவளோ ஆச்சரிய புன்னகையோடு கண்களில் அதீத பளபளப்போடு அவனை பார்த்து “ஹலோ டாக்டர்.. வாட் அ ச்ரப்ரைஸ்..!” என்று அலறியவள், பின் நூலகத்தை அவன் கண்களால் சுட்டிக் காட்ட தலையசைப்பில்.. நயன பாஷையில்.. அவனிடம் நலம் விசாரித்துக் கொண்டாள்.

 

அதன்பின்.. இருவருமே பேசிக் கொள்ளவில்லை. எதிரெதிரேதான் உட்கார்ந்திருக்கிறார்கள்..! வெறும் மௌன மட்டுமே அங்கே ஆட்சி செய்தது..!

 

ஆனால் அடுத்தடுத்து வந்த விடுமுறை தினங்களில் குளோரியாவை அவன் அங்கே அந்த பொது நூலகத்தில் காண்பதும்.. இவனும் அவனுக்கு தெரிந்த சில தமிழ் நூல்களை அஅவளிடம் கொடுப்பதும்.. இருவரும் எதிரெதிரே அமர்ந்து மௌனமாய் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். 

 

அதன் அடுத்தபடியை.. க்ளோரியா தான் முன்னெடுத்தாள்..!

 

“காபி ஷாப் போகலாமா?” என்று, நூலகத்திலிருந்து வெளியே வரும் பொழுது..!

 

அவனைக் கேட்காமலேயே சிவேந்திரன் தலை அவளுக்கு சம்மதம் சொல்ல..

இப்போது இருவரும் காபி ஷாப்பில்..!

 

இரவு மெல்லிய இருள் போர்வை பொறுத்துக் கொண்டிருந்த நேரம்.. மெல்லிய பனி..!

காபி கோப்பைகள் அவர்கள் முன்னே இருக்க இருவருக்கும் அடுத்து என்ன பேச என்று பெரும் தயக்கம்..!

 

“உங்க வீட்டை

மிஸ் பண்றீங்களா?” என்று மீண்டும் ஆரம்பித்தாள் குளோரியா.

 

பெரிதாக மூச்சை விட்ட சிவேந்திரன் அதன் பின் அப்பாவை தவிர்த்து அம்மாவையும் தன் அழகிய செல்ல தங்கையையும் அவர்களைப் பற்றிய அவனின் அன்பையும் நெருக்கத்தையும் அவளோடு பகிர்ந்து கொள்ள.. 

 

அவளும், அவளது தந்தை மொழிகள் ஆராய்ச்சியாளர் என்றும் பல மொழிகளை இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் என்றும்.. 

 

அவரிடம் இருந்துதான் இந்த ஆராய்ச்சியை தான் பிடித்துக் கொண்டதாக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டாள். 

 

இவ்வாறு இருவரும் நூலகத்தில் சந்திப்பதும் அதன் பின் காபி ஷாப் சொல்வதும் வழக்கமாயின..! அந்த வழக்கமே பழக்கமாயின..!

 

என்னதான் வெளிநாட்டில் பெரிய மருத்துவமாக இருந்தாலும் சில விஷயங்களில் இன்னும் சிவேந்திரன் தமிழன் தான் என்பதை அவனது நடவடிக்கைகளில் இருந்து கண்டுபிடித்த குளோரியாவுக்கு அத்தனை சந்தோஷம். 

 

இதுவரை ஒரு டேட்டுக்கோ இல்லை அவனது அப்பார்ட்மெண்டுக்கோ அவளை அழைத்தது இல்லை..! ஏன் ஒரு கண்ணியம் அற்ற பார்வையோ.. நெருங்கி நின்று அணைத்தலோ.. முத்தம் கொடுக்க முனைந்தலோ அவனிடம் இல்லவே இல்லை..!

 

அதுவே சிவேந்திரனை பிடிக்க காரணங்களாக அமைய.. அது காதலாகி போனது..!

 

அவனின் இந்த அழகிய கலாச்சார பின்பற்றுதலை அவள் குறிப்பில் எழுதவில்லை ஏனென்றால் அதை மனதில் அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறாள்.

 

“இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் என் கூட என் அப்பார்ட்மெண்டுக்கு வாங்க” என்று குளோரியா அழைக்க தவிர்க்க முடியாமல் சென்றான் சிவேந்திரன். 

 

குளோரியா வீட்டு

சுவர்களில் எல்லாம் தமிழ்நாட்டு கிராமப் படங்கள்.

 

அவனிடம் ஒரு ஆடியோ ரெக்கார்டர் ஒலிக்க வைத்தாள் குளோரியா..!

 

அதில் ஒரு வயதான பெண்ணின் குரல்..

“உடம்புக்கு மருந்து வேணும்…

உள்ளத்துக்கு மரபு வேணும்…”

அதைக் கேட்டு சுவேந்திரன் அசையாமல் நிற்கிறான்.

 

எவ்வளோ உண்மையான வார்த்தைகள்..!

 

 

“உடல் குணமடைய

மருந்து…

மனம் குணமடைய

மரபு…! நல்லா இருக்குல்ல..” என்ற‌‌ குளோரியா இன்னும் அவளது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் அவள் திரட்டிய இது மாதிரியான வாய்ஸ் ரெக்கார்டர் எல்லாம் அவனிடம் போட்டு காண்பித்தாள்.

 

அதையெல்லாம் பார்த்து கேட்ட சிவேந்திரனிடம் நீண்ட மௌனம்..!

 

இப்படியாக அவர்கள் நாட்கள் மௌனத்தை சாட்சியாக வைத்து காதலாக சென்று கொண்டிருக்க.

. இருவருக்குமே ஒருவர் மனதில் ஒருவருக்கான இருந்த ஈர்ப்பையும் காதலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் அதனை உணர்ந்து கொண்டுதான் இருந்தனர். 

 

அதனை வெளிப்படையாக சொல்லும் நாளும் வந்தது..!

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top