45
அத்தை வருவாங்கனு சொன்னவுடன் தான் எனக்கு ஒன்னு ஞாபகம் வருது. நானும் ரொம்ப நாளாவே உங்களட்ட கேக்கணும்னு நெனச்சிட்டே இருந்தேன்.. நீங்க இன்னும் அத்தை மாமாவோட லவ் ஸ்டோரி சொல்லவே இல்லையே?” என்று ஆருஷி இராவண்னை பார்த்து கேட்டாள்.
வெகு காலமாகவே அவள் மனதில் உறுதி கொண்டிருந்தது தான் இது. ஆரம்பத்தில் இராவண் அவளை தேடி வந்திருந்த போது குளோரியா வந்து திட்டி விட்டு செல்லும்போது, “அப்படிப்பட்டவருக்கு பிறந்த மகனாடா நீ..!” என்று கேட்டுத் தன்னை அடித்ததாக கூறியிருந்தான்.
அப்போதிருந்தே ஆருஷி மனதிற்குள் சிவேந்திரன் குளோரியாவின் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று வெகுவாக நினைத்து இருந்தாள். ஆனால் அதற்கான நேரமும் காலமும் இன்று வரை வாய்க்கவே இல்லை.
சில சமயம் யோசிப்பதுண்டு.. அவளது பிரச்சினையை பெரும் பிரச்சனையாக இருக்க இதில் எங்கிருந்து அடுத்தவர்களை பற்றி யோசிக்க? என்று அந்த நினைவினை தூக்கி போட்டதுண்டு..!
இன்று அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தருணம் சுக்ரேஷின் காதலும் வெளிவர, வள்ளியம்மை “என் மகன் காதல நிராகரிச்சு அவனை தள்ளி வைச்சதனால தான் இத்தனை அனர்த்தங்கள் நம்ம வீட்டில் நடந்திடுச்சு. ஒருவேளை அவன நாங்க ஏற்று இருந்தா.. இன்று என் பெண்ணும் உயிரோடு இருந்திருக்க கூடும். நம்ம குடும்பமும் சந்தோஷமாக இருந்திருப்போம்” என்று அடிக்கடி இப்போது எல்லாம் சொல்லிக் கொள்வார்.
அதனால்யே சுக்ரேஷின் திருமணத்தை அந்த பெண் எப்படிவள்? யார் என்ன என்று கூட அறிந்து கொள்ளாமல் சம்மதம் சொல்லிவிட்டார்.
கிரிதரனுக்கும் ரூபிணிக்கும் பெரிதாக எந்த மறுப்பும் இல்லை.
சொத்து பணம் கௌரவம் என்பதை தாண்டிலும் மகனும் அவனது மகிழ்ச்சியும் அவர்களுக்கு முக்கியம்.
மகனை இழந்து நித்தம் நித்தம் தவிக்கும் வள்ளியம்மையை கண்கூடாகவே பார்க்கிறார்களே??
அதிலும் நமக்கு முன்னால் நம் மகனோ மகளோ நம்மை விட்டு பிரிவது எவ்வளவு பெரிய சோகம்?
ஆனால் இவர் இருவரையும் இழந்து விட்டு இப்பொழுது தவிப்பதை பார்த்துவிட்டு,
‘இந்நிலைமை நமக்கு வேண்டாம். மகன் யாரையாவது அப்படி காதலிச்சா?? நல்ல பொண்ணா இருந்தா மட்டும் போதும் நம்ம கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்.. சொத்து எல்லாம் எதுக்கு? நம்ம கிட்ட இருக்கிறதே போதும்..” என்று பலமுறை ரூபிணி கணவனிடம் சொல்லி இருக்க.. அவரும் அதையே ஏற்றிருந்தார்.
அதனால் வெளியில் விளையாட்டுக்காக ரூபிணி பேசினாலும் உள்ளுக்குள் மகனின் காதலை அவர் ஏற்றுக் கொண்டார் தான்.
அதிலும் வர்ஷா ஆருஷியோடு தான் படித்தவள் என்பதை தெரிந்து, அவள் மூலம் அவர்கள் தாய் தந்தை குடும்பம் பற்றி ஓரளவு தெரிந்து அவர்களுக்கு திருப்தி தான்.
இப்படியாக சுக்ரேஷின் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், ஆருசிக்கு தன் மாமாவின் காதலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அதை இராவண்னிடம் கேட்டு விட்டாள்.
ஒரு பெருமூச்சோடு அனைவரையும் பார்த்தவன் “எங்க அம்மா அப்பா காதலை இப்பயாவது தெரிஞ்சுக்கணும் உங்களுக்கெல்லாம் எண்ணம் வந்திச்சே?” என்றதும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க..
“என்ன செய்றது ராசா.. சில விஷயங்கள தெரிஞ்சுக்க வேண்டிய நேரத்துல தான் தெரிஞ்சுக்க முடியும். என்னதான் பிரம்ம பிரயோஜனம் பட்டாலும் அதற்கான கால நேரம் வர வரை யாராலும் தெரிஞ்சுக்க முடியாது. என் புள்ள இறந்தது இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டது போல..” என்றவர் முந்தானையில் கலங்கிய விழிகளை துடைத்துக் கொள்ள ரூபிணியோ “அச்சோ அத்த.. அழாதீங்க அழாதீங்க” என்று அவரை சமாதானப்படுத்தினர்.
ஆருஷி ஒரு படி மேலே போய் இராவணன் தொடையில் நறுக்கு என்று கிள்ளி “பாருங்க உங்களால தான் இப்ப ஆச்சி அழுகுறாங்க.. கொஞ்ச நாளா இதெல்லாம் பேசாமல் மறந்து இருந்தவங்கள.. திரும்பவும் நீங்க பேச வைக்கிறீங்க..!” என்று கண்களை உருட்டி அவள் அதட்ட..
“நீ ஒன்னும் என் பேரன என்னை சொல்லி திட்ட வேணாம். மறந்தால் தானே நினைக்கிறதுக்கு? என் மனசுல எப்பவுமே என் பொண்ணு புள்ளைய பத்தி நினைவுகள் இருந்து கிட்ட தான் இருக்கும். அதை எப்படி என்னால மறக்க முடியும் சொல்லு?” என்று வள்ளியம்மை கேட்ட கேள்வியில் அனைவரும் அமைதியாய் ஆமோதித்தனர்.
அங்கே ஒரு கனமான சூழ்நிலை நிலவ சற்றுமுன் தான் சிரித்து பேசி மகிழ்ந்திருந்த தருணம் இப்படி ஆகிவிட்டது என்று உணர்ந்து சுக்ரேஷ்,
“ஓகே ஓகே ப்ரோ.. நீங்க கதை சொல்ல ஆரம்பிங்க. எனக்கும் ஈவினிங் மேல கடைக்கு போக வேண்டிய வேலை இல்லை” என்று கதை கேட்கும் ஆர்வத்தோடு அவன் அமர்ந்து இருக்க..
“அதுக்கு முன்னால உன் லவ்வ நீ சொல்லு மாமா.. அப்புறம் மேல எங்க மாமா கதையை இவர் சொல்லுவாரு” என்றாள் ஆருசி சுக்ரேஷை பார்த்து வவ்வளம் காட்டிக்கொண்டு..
அவனோ “உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? அம்மாவ ஆச்சியெல்லாம் வச்சுக்கிட்டு சொல்ல சொல்ற.. நான் காதலிக்கிறேன் அவங்க கிட்ட சொல்லலாம் எப்படி காதலிச்சேன்.. அதெல்லாம் நான் எப்படி சொல்ல முடியும்?” லேசாக வெட்கச் சிவப்போடு திணறியவனை பார்த்து ஆருஷி சிரிக்க..
“அப்போ என்ன விட சீனியர் நீங்க ரெண்டு பேரும் தான். அதனால நீங்க முதல்ல எப்படி லவ்வாங்கியானிங்கனு சொல்லுங்க.. அதுக்கப்புறம் நான் என்னோட லவ் கதையை சொல்றேன்” என்றவன் மாட்டுனடி என்னும் விதமாய் கண்களை சிமிட்டி..!
ஆருஷியோ ‘எங்க கதையை எப்படி சொல்றது?’ என்று திரு திருவென்று விழித்தாள்.
“இது உனக்கு தேவையா?” என்பது போல ஆருஷியை பார்த்தான் இராவண்.
சுக்ரேஷின் காதலாவது ஏதோ சைவத்தைப் போல தான் இருக்கும். ஆனா.. எங்கள லவ்.. அக்மார்க் அசைவ காதல்..! அதிலும் கல்யாணத்துக்கு முன்னமே லிவிங் இருந்த காதல்..! அட இப்ப மட்டும் என்ன? எங்களுக்கு கல்யாணம் நடக்கவில்லை ஆனாலும் அவள் என் மனைவி தான் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருக்கிறது. இதை எல்லாம் அவர்களிடம் சொல்ல முடியுமா? அம்மாவே ஆனாலும் அந்தரங்கம் தனி தான் இல்லையா?” என்று நினைத்தவன் அர்த்தம் புரிந்த பார்வையோடு ஆருஷியை பார்க்க..
அவளோ பெரிய கும்பிடை சுக்ரேஷை பார்த்து போட்டவள் “நீ சொல்லவே வேணாம் மாமா..! ஆள விடு..!” என்றாள்.
“அது.. அந்த பயம் இருக்கட்டும்..!” என்று தன் சட காலரை தூக்கி விட்டுக் கொள்ள.. அவன் தோளில் செல்லமாக தட்டிய ராவண் “வர வர ரொம்ப தேடிட்டீங்க ப்ரோ..!” என்றான்.
“எல்லாம் உங்கள பாத்து கத்துக்கிட்ட தான் ப்ரோ..! நீங்க தான் என் லவ் குரு..!” என்றவன் அவனை பார்த்து தன்னடக்கத்தோடு வாய்வு பொத்தி காட்ட அங்கே வெடித்து சிரித்தான் ராவண்.
“அப்போ.. வர்ஷாவும் என்னைப் போலவா.. அடுத்த வாரிசு ரெடியா?” என்று கேட்ட ஆருஷி “மாட்னடா மவனே..!” என்று சுக்ரேஷை பார்த்து சிரித்தாள்.
இப்பொழுது வள்ளியம்மையும் ரூபிணியும் சுக்ரேஷை முறைக்க.. “அய்யய்யோ இல்லை..! அப்படியெல்லாம் இல்லை..! நான் இன்னும் வெர்ஜின் தான்..! எங்களது ப்யூர் வெஜ்..!” என்றவன்,
“வெசம்.. வெசம்.. உன்னால என்னவெல்லாம் பேச வேண்டி இருக்கு பெரியவங்க முன்னால” என்று வலிக்காமல் ஆருஷியின் தலையில் கொட்டினான் சுக்ரேஷ்..!
“என்ன பண்றீங்க ப்ரோ?” என்று இராவண் சத்தம் போட சுக்ரேஷ் ஒரு நிமிடம் பதற அனைவரும் ஐயையோ ராவண் தப்பாக எடுத்துக் கொண்டானோ? என்று அச்சத்தோடு பார்க்க..
அருகில் கடந்த சிறு கம்பை எடுத்து சுக்ரேஷின் புறம் நீட்டி “இதால இரண்டு போடுங்க ப்ரோ.. அப்பதான் வலிக்கும்” என்றான்.
அப்பொழுது தான் அனைவரும் மனம் சாந்தமாக “அடப்பாவி..!’ என்று இப்பொழுது ஆருஷி ராவண்னை துரத்த கண்கள் நிறைத்த சிரிப்போடு அவர்களை சுற்றி சுற்றி ஓடினான் ராவண், அதுவும் மெதுவாக தான்..! அரிசியும் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு மெல்லமாக அவனை துரத்தினாள்..!
அவனது சிரிப்பு மனதில் இருந்து பொங்கி எழுந்து கண்களையும் நிறைத்து காட்ட வள்ளியம்மையோ பேரனை அத்தனை வாஞ்சையாக பார்த்திருக்க..
அதற்கு மாறாக அவனின் தாத்தனோ அவனின் சிரிப்பை அத்தனை வன்மமாக பார்த்திருந்தார்.
ஆனாலும் அவரால் எதுவும் இந்நிலையில் செய்ய முடியாது. இருப்பினும் அந்த மனது கடைசி வரை அவர்களை ஆசிர்வதிக்கவோ அட்லீஸ்ட் வாழ்த்தவோ கிடையாது.
அவர் காணும் போதெல்லாம் அவர்களின் சிரிப்பு சத்தத்தை நிம்மதியான முகத்தையும் கண்டு வஞ்சினமும் கோபமும் தான் பெருகியது அழகப்பனுக்கு.
வயதானால் பக்குவம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் இவருக்கு வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே.. அதனால் ஒரு பிரயோஜனமும் கிடையாது..!
இருவரும் ஓடி களைத்து அமர்ந்ததும் மூச்சிரைக்க “உங்ககிட்ட நான் அத்தை மாமா லவ் பத்தி கேட்டேன் அப்படியே டிராக்க மாத்திட்டீங்க நீங்க” என்று இராவண்னின் புஜத்தில் குத்தினாள் ஆருஷி.
மற்ற நாளாக இருந்தால் “எங்க அம்மாவிடமே கேட்டுக் கொள்.!” என்றிருப்பான். ஆனால் இன்று இப்படி குடும்பமாக அமர்ந்து பேசி சிரித்து என்று அவன் மனதும் இலகுவாக இருந்தது.
“எங்க அம்மா அப்பாவுக்கு இடையில் உள்ள அந்த காதல் வெறும் சாதாரண ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் கிடையாது..!”
“இரு மனங்களை கடந்து.. இரு இனங்களை கடந்து.. இரு பாஷைகளை கடந்து.. இரு நாட்டை கடந்து.. ஏன் இரண்டு கண்டத்தையும் கடந்து நிலைத்து நிற்கும் காதல்..!!”
இராவண்னின் ஆரம்பமே அனைவரும் மனதிலும் ஒரு வித தாக்கத்தையும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள
வேண்டும் என்று ஒரு ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
வருவான் அசுரன்..
