அசுரன் 4
அவனென்ன பெரிய கந்தவர்னா இல்லை மன்மதனா? எந்த பொண்ணு அவனை பார்த்தாலும்.. அவளுங்க எந்த வயசுல இருந்தாலும்.. அப்படி ஒரு பிரேமம் அவன் மேல..! ஆனா எனக்கு மட்டும் அவன் ஏன் அசுரனாவே தெரிகிறான்?’ என தன் எண்ண சூழலில் சுழன்று கொண்டு இருந்தவள், கால்கள் மென்மையாக ஒரு முரட்டு கையால் பற்றப்பட அதிர்ந்து விழித்தவள் முன் நின்றிருந்தான் அவளின் ஹாசல் விழி அசுரன் ராவண்.
“என்னாச்சு?” என்றவனின் பார்வை அவளின் வெண்ணிற தந்தக் கால்களில் எல்லாம் இல்லை. ஒரு மருத்துவனாக அவளது கால் சுளுக்கை தான் வெகு தீவிரமாக பார்த்திருந்தான் ராவண்.
ஏனோ அவனிடம் தன் காலை காட்டவே அவளுக்கு பிரியம் இல்லை. என்ன தான் அவன் வைத்தியனாக இருந்த போதும்..!
சட்டென்று தான் அணிந்திருந்த ஸ்கெர்ட்டால் காலை மூடிக்கொண்டவள் “நீங்க கைனக்காலஜிஸ்ட் தானே.! ஆர்த்தோ இல்லையே?” என்ற அவளின் பேச்சிலும் அவளது செய்கையிலும் அவளை திரும்பி ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தான் ராவண்.
“சோ.. அப்போ கைனியா உன்னை செக் பண்ணவா?” என்றான் அவள் காதருகே குனிந்து..!
“வாட்? கைனியா வா??” அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து அதிர்ந்தாள்.
“எஸ்…!” என்றான் இன்னும் சற்றே நெருக்கமாக நெருங்கி..!
அவனின் கற்றை மீசையின் கூர் முனைகள் அவளது பட்டு கன்னத்தை பதம் பார்க்க… அதில் வெடுக்கென்று நிமிர்ந்தவள் முகத்தை தள்ளி வைத்துக் கொண்டாள்.
அவனைப் பார்த்துக் கொண்டே மெல்ல அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரில் தன் கன்னத்தை அவள் துடைத்துக் கொள்ள..
அவளின் இந்த செய்கையில் உள்ளூற சுர்ரென்று ஓடியது ஒரு கோபம் உச்சந்தலைக்கு ராவண்னுக்கு.
“அஸ் அ டாக்டரா தான் நான் உன்னை செக் பண்ணனே தவிர உன்னோடு பாய் பிரண்டா இல்லை..!” என்றான் குரலில் நக்கல் ததும்பி வழிய..
“அந்த நினைப்பெல்லாம் வேற இருக்கா உங்களுக்கு டாக்டர் சார்? நான் இந்த ஹாஸ்பிடல்ல ஓட ஒன் ஆப் தி சேர்மன்..! நீங்க ஆஃப்ட்டர் ஆல் இந்த ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர்..! அந்த லிமிட்ல இருங்க. அதிகமா ஆசைப் படாதீங்க..!” என்றாள் அவனுக்கு மேல் வெகு நக்கலாய்..!
“ஹோ.. பாஸா..??” என்று அவன் ஸ்டைலாக ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க..
“வொய் நாட்..!” என்றாள் அவளும் அவனுக்கு இணையான அதே திமிரோடு..!
பெண்ணின் திமிரையும்..
காளையின் திமிலையும்.. கண்டால் ஆணவனை வெறிக் கொள்ள செய்யும், அதனை அடக்கச் சொல்லி..!!
நான் உன் முதலாளி நீ தொட்ட இடம் எனக்கு அருவருப்பாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் அவளை சிறிது நேரம் கூர்ந்து பார்த்தவன்,
“அட மாடர்ன் கேர்ளே..!! என்ன ஒரு ஆச்சாரம்!!" என்றவன், "இப்ப இன்னும் நல்லா தொடச்சுக்கோ!!" என்றவன் அவளது பின்பக்க கழுத்தில் கையை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் இடது கன்னத்தில் பச் என்று சத்தம் வருமாறு நச்சென்று ஒரு இச்சுக் கொடுத்தான் ராவண்.
ஆருஷி ஆஆஆ வென்று அதிர்ந்து பார்த்தவள், “ஹௌ டேர் யூ?? யூ.. யூ…” என்று கத்தினாள்.
“எஸ்.. மீ.. மீ.. தி கிரேட் ராவண் திரேந்திரன் மாறவேல்..!” என்றான் நெஞ்சம் முழுக்க கர்வம் மின்ன அவனின் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று..!
“இப்போ இன்னும் நாலு டிஸ்ஸூ பேப்பரை வைத்து தொடச்சிக்கோ?" என்றவனை உதடு கடித்து அவள் முறைத்து பார்க்க "இது என்ன பழக்கம்!!" என்று தன் ஆள்காட்டி விரல் கொண்டு உதட்டை அவள் பற்களிடம் இருந்து காப்பாற்றி விட்டவனின் கண்கள் இப்பொழுது உதட்டை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
அவனின் நோக்கம் புரிந்து “சீ மிஸ்டர் ராவண்..” என்று ஆரம்பிக்கும் நேரம் டாக்டர் என்று குரல் கொடுத்தபடி மீரா வருவது புரிய சட்டென்று அமைதியாகிவிட்டாள் ஆருஷி.
சில மருந்து மாத்திரைகளை எடுத்து வர சொல்லி மீராவை வரும் பொழுது அனுப்பி இருந்தான் ராவண்.
அந்த நேரம் மீரா உள்ளே நுழைந்தவள் “டாக்டர் மெடிசின்ஸ்..” என்று கொடுக்க..
அந்நேரம் ஆருஷியால் அதற்கு மேல் அவனிடம் கத்த முடியாமல் அவளின் பதவியும் அவனின் வேலையும் தடுக்க.. கண்கள் கனலாக சிவப்பேற அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மீரா கொண்டு வந்திருந்த மருந்து மாத்திரைகளை எல்லாம் பார்த்தவன் “இப்போ இந்த மெடிசன் மட்டும் இவங்களுக்கு கொடுங்க.. ஆர்த்தோ இன்பராஜ் கிட்ட இன்பார்ம் பண்ணி இருக்கேன். அவர் ஃப்ரீ ஆனதும் இவங்கள கூட்டிட்டு போய் ஒரு ஓப்பினீயன் கேட்டுக்கோங்க.. மேடம பதமா இதமா பார்த்து வீல் சேருல வைச்சு கொண்டு போங்க சிஸ்டர்..” என்று அக்கரை டன் டன்னாக வழிய கூறியவனை கண்டு ஆருஷிக்கு வெறுப்பாக இருந்தது என்றால்…
டாக்டரின் இந்த அக்கறை கண்டு “சூர் டாக்டர்.. சூர்.. கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி பத்திரமா மேடம அழைச்சிட்டு போய் ஆர்த்தோ டாக்டரோட ஒபினியன் கேட்டு மெடிசன் எல்லாம் வாங்கி கொடுத்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று சமர்த்து பிள்ளையாய் கூறும் மீராவை கண்டு இன்னும் பற்றிக் கொண்டு வந்தது ஆருஷிக்கு.
“கெட் லாஸ்ட் ஆஃப் யூ போத்..!” என்று கத்தினாள்.
“நீ போக சொன்னால் போக நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா?” என்றவன், அவளை அழுத்தமாக பார்த்த ராவண் “அதும் இப்ப பாஸம்மா நீங்க இருக்கிறது என்னோட ட்ரீட்மென்ட் கேபின்ல..!” என்று அர்த்தமாய் அவளை பார்க்க அவளுக்குத்தான் அவமானமாய் இருந்தது.
ஆத்திரமிக ஆருஷி தன் ஃபோனை எடுத்து சுக்ரேஷூக்கு அழைத்தாள்.
பெரும்பாலும் மேனேஜ்மென்ட் டிபார்ட்மெண்டில் இருப்பவள் அவ்வப்போது தான் மருத்துவமனையை சுற்றி பார்ப்பாள். இன்னும் சரியாக சில இடங்கள் அவளுக்கு பிடிப்படாமல் இருக்க.. அந்த பக்கம் சுக்ரீஷ் போன் எடுத்ததும் “சுக்ரேஷ்.. நம்ம ஹாஸ்பிடல் ஃபேமஸ் டாக்டர் ராவண் இருக்கார் இல்லையா.. அந்த ஃப்ளோர்ல இருக்குற ட்ரீட்மெண்ட் ரூம்ல இருக்கேன் சீக்கிரம் வா..!” என்று ஓரக் கண்ணால் ராவண்னை பார்த்துக் கொண்டு கூறினாள்.
அதில் ராவண் நமது ஹாஸ்பிடல் வேலை செய்கிற ஒரு தொழிலாளி என்று அப்பட்டமாக உரைத்ததை கண்டு கொண்டான் ராவண்.
இப்பொழுது இராவண் கையை கட்டிக்கொண்டு நேராக அவளை பார்த்தவன் “அடங்கவே மாட்ட இல்ல..!” என்று கேட்டது அவனது ஹாசல் விழிகள்.. அவளும் அவனை பார்த்து “ஏன் என்னை நீ அடக்க போகிறாயா? முடிந்தால் அடக்கேன்..!” என்பது போல தோளை குலுக்கி கொண்டாள்.
இவர்கள் இருவரையும் சுவாரஸ்யம் கலந்து பயத்தோடு பார்த்து நின்றிருந்தாள் மீரா.
திரும்பி ராவண் மீராவைப் பார்த்து “சிஸ்டர் யூ மே கோ..!” என்றதும் அவளும் வேகமாக இருவருக்கும் தலையாட்டிவிட்டு செல்லும்பொழுது ஆருஷியிடம் மீண்டும் ஒரு சாரி உதிர்த்துவிட்டு சென்றவளை கண்டு முகம் சுழித்தாள் ஆருஷி.
“இட்ஸ் நாட் ஃபேர் ஆருஷி மேடம் அந்த பொண்ணு தெரியாம தான உங்க மேல இடிச்சா.. அதைப் பெருந்தன்மையா மன்னித்து விட்டு போகாம.. இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க? இதைத்தான் ஃபாரின்ல போய் படிச்சிட்டு வந்தீங்களா?” என்று கோபம் கலந்த எகத்தாளத்துடன் கேட்ட ராவண்னை திரும்பிப் பார்த்தவள்..
“நான் மேனேஜ்மென்ட் படிக்க தான் டாக்டர் போனேன். சைக்காலஜிஸ்ட் இல்லை” என்றாள்.
“மேனேஜ்மென்ட்ல ஒரு போர்ஷன் பீப்பிள் ஹேண்டில் வரும் இல்லையா?” என்றதும் வழக்கம் போல அவள் அலட்சியமாக முகத்தை சுழிக்க..
சற்றென்று அவள் தாடையை அழுத்தமாக பற்றி அவள் கண்களுக்குள் பார்த்தவன் “உன்னோட வீம்பு சண்டை கோபம் எல்லாம் என் மீது மட்டும்..! எங்கிட்ட மட்டும் தான் காட்டணும் ஆருஷி வள்ளியம்மை..! அதை விடுத்து என்னை சுற்றி உள்ளவங்க மேல காட்டின…” என்று அவன் அடிக்குரலில் கர்ஜிக்க..
அவளும் அவனுக்கு குறையாத வீம்போடு “காட்டின.. காட்டின என்ன செய்வீங்க டாக்டரே?” என்று குத்தலாய் கேட்டவளின் கண்களோ ராவண் முகத்தில் வலியை காண வேண்டும் என்பதாய் ஜொலித்தது.
“காட்டக்கூடாதுனா காட்டக்கூடாது..! நான் காட்டவும் விடமாட்டேன்..!” என்றான் இன்னும் அவள் தாடையில் அழுத்தம் கொடுத்து..
அந்த அழுத்தம் அவ்வளவு வலித்தது ஆருஷிக்கு. ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டவள் அவனின் ஹாசல் விழிகளை அத்தனை கோபமாக பார்த்தாள்.
அப்போது சுக்ரேஷ் உள்ளே வர..
உள்ளே நுழைந்தவன் கண்டது ஆருஷி அமர்ந்திருக்க அவள் தாடை பற்றி அவள் முன் குனிந்து இருந்த ராவண்னை தான்.
நாம் கண்டது சரியா இல்லது காட்சி பிழையா என்று கண்களை கசக்கி விட்டு பார்க்க அதே தோற்றத்தை கண்டு திடுக்கிட்டான். காரணம் பின்னால் இருந்து பார்க்க இருவரும் முத்தமிட்டு கொள்வது போலவே தோன்றியது அவனுக்கு.
ராவண் வெகு நிதானமாக அவள் தாடையில் இருந்து கையை எடுத்தவன் சுக்ரேஷை பார்த்து சலனமில்லாமல்
“உங்க மேடம் கீழ விழுந்துட்டாங்க ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்தாச்சு ஆனாலும் ஆர்த்தோ கிட்ட ஒப்பினீயன் வாங்கத்தான் உங்களை வர சொல்லி இருக்காங்க.. வெறும் கையை வீசிட்டு வந்திருக்கீங்க வீல் சேர் யார் கொண்டு வருவா?” என்றதும் இராவண்னையும் ஆருஷியையும் அவன் மாறி மாறி பார்க்க..
“அதான் டாக்டர் சொல்றாருல எடுத்துட்டு வா சுக்ரேஷ்” என்று அடிக்குரலில் சீறினாள் ஆருஷி.
எதற்கு தன்னிடம் இத்தனை கோபப்படுகிறாள்? என்று புரியாமல் விழித்தவன், இருவரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.
அவர்களை அந்த தோற்றத்தில் பார்த்தவனுக்கு மனம் முழுவதும் அதிர்ச்சி மற்றும் குழப்பம். கூடவே ஆருஷியின் கோபம் எதனால் என்று புரியாமல்.. வீல் சேர் எடுக்க எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் சற்று நேரம் முழித்தவாறு நின்று இருந்தான்.
அவனுக்கு முன்னே கொண்டு வந்து வீல்ச் சேரை நிறுத்தினாள் மீரா.
“தேங்க்ஸ் சிஸ்டர்..” என்றபடி அதை எடுத்துக் கொண்டு திரும்பவும் ட்ரீட்மென்ட் ரூமுக்குள் சென்றான்.
“கமான் ஆருஷி.. வந்து இதுல உட்காரு” என்றான் ராவண்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே..
அவளும் மெல்ல எழ பார்க்க அவளால் வலது காலை ஊன்றவே முடியவில்லை.
காலை ஊன்ற முடியாமல் வலி அதிகமாக எடுக்க முகத்தை சுழித்து “ஸ்ஸ்ஆஆ.. கால ஊன்ற முடியல சுக்ரேஷ்” என்றாள் அழுக்குரலில்.
“அறிவு.. அறிவு.. மண்டைக்குள்ள மூளை இருக்கா இல்ல மசாலா இருக்கானு தெரியல..” என்று ஆருஷியை முறைத்து பார்த்த ராவண், சட்டென்று யாரும் யோசிக்காத கணம் ஒரு கையை ஆருஷியின் கால்களுக்கு அடியில் கொடுத்து அழகாக தூக்கி அந்த வீல்ச் சேரில் அமர வைத்தான்.
ஆருஷிய விட அதி அதிர்ச்சி சுக்ரேஷுக்கு தான். இவர்கள் இருவரையும் ஆவென்று வாய் பிளந்து பார்த்திருந்தான் சுக்ரேஷ்.
கண்டிப்பாக அவனால் இப்படி எல்லாம் செய்து விடவே முடியாது. முதலில் அவன் இப்படி யோசித்து இருக்க மாட்டான். அடுத்து இப்படி தொட்டு தூக்க எல்லாம் ஆருஷி அவனை அனுமதித்திருக்கவே மாட்டாள், அவன் அத்தை மகன்தான். ஆனாலும் அளவோடு தான் அவர்களது பழக்க வழக்கம்..!
“அதான் தூக்கி வெச்சிட்டேனே.. வீல் சேரை தள்ளிட்டு போக வேண்டியது தானே.. இல்ல அதையும் நான் தான் பண்ணனுமா?” என்று ராவண் சுக்ரேஷை பார்த்து அழுத்தமாக கேட்க..
சுக்ரேஷோ தட்டுத் தடுமாறி “இதோ.. இதோ.. இதோ டாக்டர்..” என்றவன் எஜமானுக்கு அடிப்பணியும் அடிமை போல ஆருஷின் வீல் சேரை தள்ளிக் கொண்டு சென்றதை பார்த்த ராவண் மனதில் அத்தனை திருப்தி.
அவன் முகத்தை வைத்து அகத்தைக் கணித்த ஆருஷியோ அத்தை மகனை அத்தனை கடிந்து கொண்டாள்.
“அறிவிருக்கா சுக்ரேஷ் உனக்கு? எதுக்கு அவர்கிட்ட அப்படி திக்கி திணறி பேசின? அந்த ராவண் ஆப்ட்ரால் ஆல் நம்ம ஹாஸ்பிடல் ஒர்க் பண்ற ஒரு டாக்டர்..! பட் நாம தான் இந்த ஹாஸ்பிடலோட சேர் பர்சன்..! புரியதா இல்லையா உனக்கு?” என்று ஆத்தா மாட்டாமல் கேட்க..
“சும்மா இரு ஆருஷி நாம இந்த ஒரு ஹாஸ்பிடல் மட்டும் தான் சேர்பர்ஷன். ஆனா இவருக்கு நம்மைப் போல எத்தனை ஹாஸ்பிட்டல் ஷேர் இருக்கு தெரியுமா? எவ்வளவு நல்ல வரவேற்பு தெரியுமா?” என்றவன், சற்றே மூச்சு எடுத்து..
“இங்க மட்டுமல்ல ஃபாரின்ல கூட இவருக்கு நிறைய ஹாஸ்பிடல் ஷேர் இருக்கு. இன்னும் கூட நிறைய காலேஜ் யூனிவர்சிட்டிக்கு ட்யூட்டரா ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கிறார். இவ்வளோ பெரிய ஆள்.. நம்ம ஹாஸ்பிடல் விட்டு கோவத்துல போனா.. நஷ்டம் அவருக்கு இல்ல நமக்கு தான்.! அதெல்லாம் பக்காவா பாண்டு போட்டு எழுதி தான் உள்ளே வந்திருக்கிறார அவர். நாம நினைச்ச நேரத்துக்கு எல்லாம் அவரை வெளியேத்த முடியாது..!
அதனால நாம கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கணும்.. நாம படிச்ச படிப்பை அப்படியே இங்கு பயன்படுத்தணும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கணும்.. இப்படி முட்டி முட்டி பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது” என்று அவளுக்கு மீண்டும் மேனேஜ்மென்ட் கிளாஸ் எடுத்தவனை ஆயாசமாக பார்த்தாள் ஆருஷி..!
“ஆமா ஆருஷி.. நீ ஏன் எப்ப பாத்தாலும் அவர்கிட்ட சண்டைக்கு நின்னுக்கிட்டே இருக்க? நேத்தி கூட ஏதோ அவர் கேம்ப் நடத்தும் போது நீ ஏதோ பேசினேன்னு எனக்கு இன்பர்மேஷன் வந்துச்சு?” என்று அவனை முறைத்து பார்த்தாள் ஆருஷி.
ஆருஷியின் காலுக்கு ஆர்த்தோ டாக்டர் இன்பராஜிடம் காட்ட “பிராக்சர் ஒன்றுமில்லை மேம். லேசான சுளுக்கு தான் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா போதும்” என்று அதற்கான மருந்து களிம்பு போன்றவற்றை அவர் பரிந்துரை செய்ய.. அனைத்தையும் வாங்கிக் கொண்டு.. ஆருஷியை வீட்டில் விட சுக்ரேஷ் பார்க்கிங் நோக்கி அழைத்து சென்ற போதுதான் இந்த சம்பாஷனை எல்லாம்..!
“அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா? அவன் கூட எனக்கு வாயக்கா வரப்பு தகராறா? எதுவுமே கிடையாது!! அந்த டேஷ்க்கும் எனக்கும் ஒரு உறவும் கிடையாது!! எல்லாம் உன்னால.. உன்னால.. மட்டும் தான். முதன் முதலில் அவனுக்கு எனக்கும் நீ சரியா இண்ட்ரோ பண்ணல.. அங்க ஆரம்பிச்சது எங்களுக்குள்ள பிரச்சனை!” என்றாள் பயங்கர கடுப்போடு.
“ஆருஷி.. நாம எங்க மோதுனுமோ அங்க மோதணும். எங்க பதுங்குனாமோ அங்க பதுங்கனும். ஆர் யூ காட் மை பாயிண்ட்?” என்று அவளுக்கு புத்திமதி சொன்னவனின் பிடறிலேயே ரெண்டு போட தோன்றியது ஆருஷிக்கு.
“ம்ம்ம்.. அதனால தான் அவன் மூக்கை பேக்காம வந்தேன். அதுவும் அவன.. நம்ம ஹாஸ்பிடல்லே சேர்ந்து கொண்டாடும்போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது. அவன் முடியை இப்படி.. இப்படி புடிச்சு.. நம்ம பார்க்கிங்லிருக்குற பெரிய தூணில் வைச்சு சும்மா நங்கு நங்குன்னு முட்டணும் போல வெறியா இருக்கு” என்று ஆக்ஷனோடு சொல்லியவள்..
“என்னடா சத்தத்தையே காணோம்?” என்று அருகில் நின்ற சுக்ரேஷை பார்க்க…
அவனோ கண்கள் வெளியே தெறிக்க.. தொண்டை வரள.. எதிரே இருந்தவனை பயத்தோடு பார்த்து நின்றிருந்தான்.
“நான் இங்க எவ்வளவு உணர்ச்சி வசமா பேசிகிட்டு இருக்கேன். அங்க என்னடா தெரியுது உனக்கு?” என்று அத்தை மகனை திட்டியபடி திரும்பிப் பார்க்க.
இவர்கள் இருவரையும் தான் ரொம்ப சு
வாரஸ்யத்தோடு.. அவள் சொன்ன அதே பார்க்கிங் தூணில் தோளை முட்டுக் கொடுத்து பார்த்தப் படி நின்றிருந்தான் ராவண் திரேந்திரன் மாறவேல்..!
“அவ்வ்…!!"
தொடரும்..