அசுரன் 44

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 44

 

 

ஆருஷி வியர்வையில் குளித்த முகமாகக் கண் மூடிப் படுத்திருந்தாள். அவளின் கூந்தலும், முன் நெற்றி முடிகளும் ஏகத்துக்கு கலைந்து போயிருந்தது. நெற்றியில் வைத்திருந்த குங்குமம் மட்டுமல்ல அவளின் உடைகளும் கூட கலைந்து பின் காணாமல் போயிருந்தது. அவனால் ஆர்வமாக ரசித்து ருசித்து சுவைக்கப் பட்ட அவளின் தேன் சுளை உதடுகள் வெளிறி போயிருந்தன…!

அவளை எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சியில் முகத்தை தூக்கி அவளைப் பார்த்தவன், எக்கி அவள் உதட்டின் மேல் தன் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டான். 

“ம்ப்ச்.. மாறா..” அவள் முகம் சுணங்கியது. ஆனால் கண்கள் திறக்கவில்லை அவள். மெல்ல தன் பற்களால் அவள் உதட்டை கவ்வினான். அவளின் வெப்ப மூச்சை தன் முகத்தில் உணர்ந்தபடி மெதுவாக அந்த உதட்டைச் சுவைத்தான்.. 

 

ஆருஷி மெதுவாக மூடிய கண்களைத் திறந்தாள். அவள் மூச்சு பலமாக இருந்தது. உச்சத் தவிப்பில் இறுக்கி அணைத்திருந்த அவனின் தேகத்தில் இருந்து தன் மேனியை பிரித்தவள், அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள்.

 

“லவ் யூ ஸோ மச் டி பாப்பா..!” அவள் கண்களைப் பார்த்து காதலைச் சொன்னான். முகத்தை திருப்பி சிகையைக் கோதிக் கொண்டு “இத எதிர்பார்க்கவே இல்ல.. உன்ன..‌ எங்கையும்.. ம்க்கும்..” என்று  தொண்டையை கணைத்துக் கொண்டவன், “எதாவுது கஷ்டப்படுத்திட்டேனா? வலி இருக்கா?” என்று இப்போது அவள் கண்களை தவிர்த்து கேட்டான்.

 

அவளோ எதுவும் பேசாமல் அவனை உற்றுப் பார்த்தாள். அவள் கண்கள் நிர்மலாய் இருந்தன. அதிலிருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை.  எந்த பாவமும் காணவில்லை..!

 

“என்ன டி பாப்பா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?” வலது கையால் அவளின் கன்னத்தை வருடி வியர்வையைத் துடைத்தான்.

கலைந்து புரண்ட முடியை காதின் பின்னே ஒதுக்கினான். பின் அவள் மூக்கையும், உதட்டையும் வருடி “சொல்லு டி” என்று கொஞ்சினான்.

 

“நாட் பேட்..!” என்றாள்.

 

“நாட் பேட்டா?” என்று அதிர்ந்தவன், பின் சிரித்து”தாங்க்ஸ் டி..! பேபீஸ் பொறக்கட்டும்.. அப்புறம் பாரு மாமன் பர்பாமென்ஸ" என்றான் கண் சிமிட்டி..

 

 

”சரியான பொறுக்கி..” என்று அவன் புஜத்தில் அடித்தாள்.

“ச்சோ ஸ்வீட்” என்று கொஞ்சினான்.

 

“ஒத்த கிஸ் தான் தானு கேட்டேன். மொத்தமா எடுத்துக்கிட்டல.. பிராடு.. பிராடு..” என்று அவன் மார்பில் குத்தினாள்.

“ஹா.. ஹா‌‌.. நான் தான் அப்பவே சொன்னேன்ல..” என்று அவளை பார்த்து உதட்டை குவித்து பறக்கும் முத்தமிட்டான்.

பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள். ஆனால்  அவனோ அவளின் உரிமையான திட்டலில் அடித்தலில் சிரித்தான்.

 

“பொறுக்கி.. பொறுக்கி.. என்னை ஏன்டா இப்படி பண்ண?”

 

“எப்படி டி பண்ணேன்.‌ ம்ம்ம் சொல்லு.. சொல்லு..?” என்று கேட்டவனை முறைத்தாள். அவள் சொல்லாததை அவள் கண்கள் கூறின..!

“இப்ப நானா வந்து என்னை எடுத்துக்க சொன்னேனா.. யூ. யூ.. பொறுக்கி” என்று திட்டினாலும் அதில் கோபம் இல்லை.

 

“ம்கூம்.. நீ உன் வாயால சொல்லல. ஆனா.. மனசு தவிச்சுச்சு.. உன் தேகம் சொல்லி கேட்டுச்சு..! நான் உன் மனசுல இருக்கேன். உன் மனசு இங்க இருக்கு.. அதனால் அது என்ன நினைக்கிறது என்று எனக்கு தெரியும்.. புரியும்..!” என்றவனை அவள் ஆவென்று வாய் திறந்து பார்க்க..

“இப்போ இங்க என்ன சொல்லுதுன்னு நான் சொல்லவா?” என்று அவள் நெஞ்சில் கை வைத்து சொன்னவனை, வெட்கம் பிடுங்கி திங்க.. 

 

“ச்சீ.. பொறுக்கி.. பொறுக்கி..” என்று அவன் கையை தட்டி விட்டாள். 

“ஊருக்கு நல்லவனா இருக்கலாம். ஆன்.. பொண்டாட்டி கிட்ட பொறுக்கியா தான் இருக்க முடியும்.. இருக்கணும் டி பாப்பா..!” என்றவனின் பேச்சில் அவளுக்கு தான் லஞ்ஜையாக, அவனை அடித்து தீர்த்தாள்.

அனைத்தையும் வாங்கிக் கொண்டு சிரிப்பு உடனே அமர்ந்திருந்தான் அவளின் மாறா..!

அவனை அடித்து அடித்து ஓய்ந்து பின் கைகளை முதுகிலும் கழுத்திலும் போட்டு வளைத்து இறுக்கிக் கொண்டாள். “ஏன் டா என் மேல இவ்வளவு அன்பு வைச்சிருக்க.. இவ்வளவு நேசம் வைச்சிருக்க.‌.” என்று அவனை கட்டி கொண்டு அவள் கலங்க..

அவள் முகத்தை தான் தன் இரு கைகளாலும் தாங்கி அவள் முத்தத்தை நேசம் பொங்க பார்த்தவன், அவளது முகமெங்கும் ஆசையாக முத்தமிட்டான்.

அவனின் முடிவற்ற முத்தத்தில் வேட்டையில் முற்றிலும் மயங்கி கிறங்கி சிலிர்த்து சிணுங்கி தளர்ந்து ஒரு கட்டத்தில் உடலை நெளித்து அவனைத் தன்னிடம் இருந்து தள்ளி விட்டாள்.

“மொத்த சத்தயும் உறிஞ்சி எடுத்துடாதடா..” என்று முகத்தை சுழித்தாள்.

அவனோ சிரித்தபடி அவள் அருகில் சரிந்து படுத்து அவள் இடுப்பை வளைத்து இறுக்கி அணைத்து கன்னத்தை முகர்ந்தான்.

 

“தேங்க் யூ ஸோ மச் பேபி”

 

 

“போடா பிராடு.. என்னை தொடாத..” என்று அவன் கையை விலக்கித் தள்ளி விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.

“நான் குளிக்க போறேன்” என்று அவள் செல்ல..

“எனி ஹெல்ப் பேபி?” என்றவனின் சரசக் குரலில், குளியலறையில் இருந்து மக் பறந்து வந்தது.

“ஓஹ்.. மக் அனுப்பி என்னை இன்டேரக்ட்டா வரச் சொல்லுறியா?” என்று அவன் சிரிக்க‌..

படாரென்று கதவை திறந்தவள், “அவ்ளோ தான் டாக்டர் உங்களுக்கு மரியாதை..” என்று கடுப்போடு சொல்ல..

“ம்ஹும்.. எனக்கு உன்கிட்ட மரியாதையே வேணாம் டி பாப்பா” என்று கட்டிலில் படுத்து தலையை தரையை நோக்கி சரித்து தலைகீழாய் அவளை பார்த்தான்.

“மரியாத வேணாமா?” என்று ஆச்சரியப்பட்டவள், “அப்புறம் என்ன தான் வேணுமாம்” என்று நெற்றி சுருக்கி கேட்க..

விஷமமாய் அவளை பார்த்தவன், “இப்போதைக்கு உன்னை சுத்தி இருக்குற அந்த டவல் போதும்” என்று அவளை குறுகுறுப்பாய் பார்த்தப்படி கேட்க..

முதலில் புரியாமல் விழித்தவள், புரிந்ததும் “யூ டர்ட்டி நாட்டி பெல்லோ..” என்று அவனை அடிக்க வர..

“ஐ அம் வெயிட்டிங்” என்று குறும்பு புன்னகை பூத்தவனை கண்டு இவள் இப்பொழுது உஷாராகி, குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

“சரியான அரக்கன்.. டீமன் டா இராவணா நீ” என்று சிணுங்கிக் கொண்டாள் அவன் முரட்டுப் பிடிகளில் கசங்கி சிவந்து போயிருந்த அந்த அங்கங்கள் கண்டு..!

 

அதைத் தவிரவும் அங்கங்கே அவனின் பல் பதிந்த அடையாளங்கள் சின்னச் சின்ன புள்ளிகளாய்  அவன் கழுத்தில் மட்டுமல்ல பட்டு மேனியிலும் தெரிந்தன. அவள் வெட்கத்தோடு அதனை பார்த்து சிவந்தாள்.

 

அடுத்தடுத்து வந்த நாட்கள் இருவரின் நெருக்கத்திலும்‌ அன்பிலும் நேசத்திலும் தான் கடந்தன..!

 

அவன் வள்ளியம்மை ஆச்சியிடம் சொன்னது போல காலையில் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது இவளை தன்கூட அழைத்து சென்று மதியம் போல, அங்கே வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவான். 

 

அவளும் அத்தை மற்றும் ஆச்சியின் அன்பிலும் முறையான சத்தான சாப்பாட்டிலும் நன்றாகவே இருந்தாள். பெண் ஒரு தூக்கம் போட்டு மாலை இவன் வரவுக்காக காத்திருப்பாள்.

 

இவன் வேலை முடிந்து வருபவன் அவளோடு அந்த வீட்டை சுற்றிய சிறிது நேரம் நடந்து அவளுக்கு சில உடற்பயிற்சிகளை கூற சொல்லுவான் மீண்டும் இரவு உணவு முடித்து தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவான். 

 

பெரும்பான்மையாக தனது வேலை நேரங்களை காலை மற்றும் மாலைக்குள்ளேயே முடித்து விடுகிறான் ராவண் தற்போதெல்லாம்…!

 

இவர்கள் மாலை நடைப்பயிற்சி முடித்து வரும் பொழுது இவர்களுக்கான தேநீர் மற்றும் பலகாரங்களோடு அங்கே தோட்டத்திலேயே வள்ளியம்மையும் ரூபிணியும் காத்திருப்பார்கள். அவர்களோடு உரையாடியபடியே அவர்களது மாலை நேரம் சுவாரசியமாக செல்லும். வள்ளியம்மையும் இதைத்தானே எதிர்பார்த்தார் இந்த அவருக்கு மிகவும் பிடித்த நேரம்..! ரொம்ப நாட்களாக ஏங்கிய தருணம்..!

 

இதில் இடையிடையே இவர்கள் நடை பயிற்சி செய்யும் பொழுது சுக்ரேஷூம் வந்து கலந்து கொள்ளுவான். 

 

“ஆமா சுக்ரேஷ் ப்ரோ.. இப்பல்லாம் பர்சேசிங் சொல்லிட்டு அடிக்கடி மும்பைக்கு போற மாதிரி தெரியுதே.. மும்பை சூரத் எல்லாம் டிரஸ்க்கு தான பேமஸ் பாத்திரத்துக்கு மா?” என்று ஒருநாள் அனைவரும் முன்னிலையும் ராவண் போட்டு உடைக்க..

 

“என்ன மும்பைக்கு போறானா? அதுவும் அடிக்கடி எதுக்கு? என்ன காரணம்? என்ன விஷயம்? மும்பையில் அப்படி என்ன இருக்கு?” என்று ரூபிணியும் வள்ளியம்மையும் மாற்றி மாற்றி புரியாமல் கேட்டு துளைத்து எடுத்தனர் சுக்கிரேஷை. 

 

ஆனால் ஆருஷிக்கு புரிந்து விட்டது.

 

“அடப்பாவி மாமா.. அப்போ நீயும் வர்ஷாவும்.. இஸ்க்.. இஸ்க்கா…” என்று அவள் அதிர்ந்து இரு கைகளாலும் வாயை பொத்திக் கொள்ள..

 

“போட்டுக் கொடுத்துட்டியே ப்ரோ..!” என்று மைண்ட் வாய்ஸோடு இராவண்னை முறைத்தான் சுக்ரேஷ்.

 

“இதெல்லாம் சகஜமப்பா காதல் வாழ்க்கையில..” என்று தோளைக் குலுக்கிய இராவண் “மறைச்சு வைக்கிறதுனால விஷயம் இன்னும் காம்ப்ளிகேட்டா தான் போகும் ப்ரோ.. எல்லார்கிட்டயும் சொல்லிட்டேனா ஈஸியா முடிஞ்சிடும் இல்ல.. என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன் கேட்டுக்கோ” என்று அவன் சிரிக்க..  தலையாட்டி சிரித்து ஆமோதித்த சுக்ரேஷ் தான் வர்ஷாவை காதலிப்பதாக அன்னையிடமும் ஆச்சியிடமும் கூறினான்.

 

ஏற்கனவே ஒரு காதல் கல்யாணத்தை ஏற்காததால் இங்கே பல அனர்த்தங்கள் நடந்திருக்க.. மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு வேண்டாம் என்று முதலில் முடிவு எடுத்த வள்ளியம்மையோ “சந்தோசமா அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ கண்ணா.. அந்த பொண்ணு ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா” என்று சுக்ரேஷின் கன்னத்தை வருடி கூற..

 

ரூபிணியோ “என்னத்த இப்படி பொசுக்கென்று ஒத்துக்கிட்டீங்க.. அப்படியெல்லாம் உடனே ஒத்துக்க கூடாது அத்த.. ஒரு ஆறு மாசம் சண்டை போட்டு..‌ மூணு மாசம் பேசாம இருந்து.. ரெண்டு மாசம் அவன பட்டினி போட்டு.. அதுக்கப்புறம் போனா போகுதுன்னு ஒத்துக்கணும்..! அப்பதானே அந்த லவ்ல அவன் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கான்னு நமக்கு தெரியும்” என்று மகனை முறைத்தவாறு கூற..

 

“பாத்தீங்களா ப்ரோ.. ஆருஷி உடைய இந்த பிடிவாத குணம் இதெல்லாம் எங்க இருந்து வந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா.. இட்ஸ் ஆல் ஃப்ரம் மை ஓன் மதர்.. அவ அத்தை கிட்டே இருந்துதான்” என்று அருகில் இருந்த ராவண்னிடம் முணுமுணுத்தான் சுக்ரேஷ்.

 

ராவண்னோ “சண்டை போட்டாலும் உங்க அம்மா க்யூட் தான்.. லைக் மை மாம்” என்று கூறிய ராவண்னின் கண்களில் அன்னைக்கான ஏக்கம் தெரிந்தது.

 

மகனின் ஏக்கம் அந்த அன்பான தாய் உள்ளத்தை அந்நேரம் அடைந்ததோ என்னவோ.. க்ளோரியாவே அவனுக்கு அழைத்து ஆருசியின் வளைகாப்புக்கு வருவதாகவும் சிறிது நாட்கள் இங்கே தங்குவதாகவும் கூறினார்.

 

அதில் அனைவரும் அகமகிழ்ந்து போக தங்கள் மகிழ்ச்சியை நெகழ்ச்சியை காட்டிக் கொண்டு சந்தோசமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். 

 

அதையெல்லாம் தன் அறையின் ஜன்னல்

வழியே பார்த்திருந்த அழகப்பன் மாறவேலுக்கு அந்நிலையிலும் பற்றிக் கொண்டு வந்தது. 

 

வருவான் அசுரன்...

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top