அசுரன் 42

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 42

 

அன்று ஆருஷியிடம் பேசியவற்றை இன்று சற்றே மிகைப்படுத்தி வேண்டுமென்றே தான் அழகப்பனின் காதில் ஓதிவிட்டு வந்தான் இராவண்.

 

வீட்டில் யாருக்கும் தெரியாமல் தான் பேசி வந்தான், தெரிந்தது என்றால்???

 

மற்றவர்களுக்கு தெரிந்தால் கூட பரவாயில்லை..!

 

“ஆமா.. அப்படித்தான் பேசுவேன்.! இப்ப என்ன அதுக்கு? நான் அப்படித்தான்..!” என்று அவர்களை கண்களால் கணை தொடுப்பான்.

 

ஆனால் ஆருஷிக்கு தெரிந்ததோ?? “அச்சோ.. போச்சு..! ஏற்கனவே அவ வேதாளம் கணக்கா முருங்க மரத்துல தான் தொங்குறா.. நான் போய் அப்பப்ப என் காதல் மனசு திறந்து காட்டி விக்ரமாதித்தனாய் இழுத்து வந்தாலும்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் திரும்ப அது முருங்கை மரத்தில் தான் தொங்குவேனு ஓடிடும்..! இது மட்டும் தெரிஞ்சுச்சு..‌அவ்வளவுதான்டா ராசா நீ..!” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு அவள் இப்போது என்ன மன நிலையில் இருக்கிறாள் என்று காண சென்றான். 

 

மறுபடியும் அழகப்பனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மொத்த குடும்பமும் அங்கேதான் நின்று “என்ன இது?” என்று மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தது.

 

ஆனால் மருத்துவனான இவனோ “அவருக்கு ஹை ப்ரசர் அதனால திரும்பவும் ஸ்ட்ரோக் வந்து இருக்கு.

ஏற்கனவே உடம்பு சரியில்ல.. இதுல இவ்வளவு கோபம் தேவையா..” மருத்துவனாய் தன்னுடைய கருத்தை பதிவு செய்துவிட்டு சமர்த்தனாய் காதலியை தேடி மேலே வந்து விட்டான்.

 

‘இவ இப்போ என்ன மனநிலை இருக்கான்னு எனக்கு தெரியலையே? இவ தாத்தா வேற பேசி ஏத்தி விட்டு இருக்காரு.. இன்னும் இதுக்கு எல்லாம் காரணம் நீ தான் டா சாமினு என் சட்டை புடிச்சி இழுக்க போறா பத்திரகாளியா… எல்லாத்துக்கும் மனச திடப்படுத்திக்கடா கரிகாலா” என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டே “பாப்பா..” என்று மெல்லிய அழைத்தப்படி கதவை திறந்து அறை உள்ளே சென்றான். 

 

அவனோ தன் சட்டையை பிடித்து அவள் உலுக்குவாள் என்று எதிர்பார்ப்போடு செல்ல..

 

அவனது எதிர்பார்ப்பையெல்லாம் அடித்து உடைத்து கலங்கிய கண்களோடு ஓடி வந்து அவனை கட்டி பிடித்து “நாம இங்க இருக்க வேணாம் மாறா.. வேற எங்கேயாவது போயிடலாம்” என்று கூறிய பெண்ணை கண்டவன் சமைந்து நின்றான் சிலையென..

 

ஆருஷி அவனை நேரடியாக கட்டிக் கொள்ள முடியாமல் அவனின் கைவளைவில் ஒரு பக்கமாக கட்டிக்கொண்டு “எங்க தாத்தா மோசம்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மோசம்ன்னு எனக்கு தெரியாது. இப்போ உங்க மனநிலையில் என்னால புரிஞ்சுக்க முடியுது.. சொந்த பேத்தி என்னையே இப்படி எல்லாம் பேசுறாருனா.. அப்போ அத்தையை அதான் குளோரியா ஆண்டிய என்னெல்லாம் பேசி இருப்பாரு.. என்னால தாங்க முடியல மாறா.. அவரு நாக்கு தேள் கொடுக்கு..” என்று அவன் புஜத்திலேயே அவள் கண்களைத் துடைத்துக்கொள்ள..

 

தான் பார்ப்பது கனவா நினைவா என்று தன்னைத்தானே கிள்ளி பரிசோதனை செய்து கொண்டான் இராவண். 

 

எரிமலையாய் வெடித்து சிதறி அக்னி குழம்பை தன் மீது கக்குவாள் என்று பலவித சமாதானங்களை மனதில் உரு போட்டுக் கொண்டே வந்தவனை.. கலங்கிய விழிகளோடு குளிர் மழையாய் அவனை தாக்கி பனியில் உறைய வைத்து விட்டாள் பாவை அவள். 

 

 

எதுவுமே சொல்லாமல் அதிர்ந்து நின்றவனை கண்டு அவள் அன்னார்ந்து பார்த்து “என் மேல உங்களுக்கு கோபம் இல்லையில.. என் மேல கோவிச்சுக்கிட்டு நீங்க போயிடுவீங்களா? அவர் இந்த வீட்டை விட்டு போக சொல்லிட்டார்ல” என்று ஏக்கமாய் கேட்கும் ஏந்திழையை கண்டவனுக்கோ மத்ததெல்லாம் மறந்து அவனின் பாப்பா மட்டுமே கண்களுக்குள் நிறைய..

 

வலது கையால் அவள் தோளோடு அணைத்தவன் இடது கையால் அவள் தாடையை பற்றி உயர்த்தி நெற்றியில் அழுத்தமாக முத்திட்டான்.

 

“அது எப்படி நான் தனியா போவேன் என் பொண்டாட்டி இல்லாம..  நான் இங்கு வந்ததே உனக்காக தான். உன்னை விட்டுட்டு நான் எப்படி மறுபடியும் போவேன்? சொல்லு டி பாப்பா..!” என்றதும், 

 

“மாறா..!” என்று ஓவென்று அழுது அவன் மார்பிலேயே தஞ்சம் கொண்டாள் ஆருஷி.

 

இத்தனை நாட்களாக அவன் மீது வைத்திருந்த கோபம் இன்று ஒற்றை நாளில் எப்படி பறந்து போனது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை.

 

தன் சொந்த தாத்தாவே காதல் கத்தரிக்காய் என்று நீ இந்த வீட்டுக்குள் இருக்கக் கூடாது.. வீட்டை விட்டு போ.. உனக்கு ஒரு சல்லி பைசா கிடையாது.‌ நீ எனக்கு பேத்தி இல்லைனு விரட்டி விட.. அது  மட்டும் அவளை இவனை நோக்கி நகர்த்தவில்லை.. 

 

அவர் வார்த்தைகளால் சொல்லாதவற்றை அவர் கண்களில் காட்டிய அந்த பாவனை..!

 

அதாவது ஏதோ அசிங்கத்தை பார்ப்பது போல தன் சூல் தாங்கிய வயிற்றினையும் தன்னையும் பார்த்ததை பார்த்து துவண்டு விட்டாள் ஆருஷி.

 

வைராக்கியமாக அவருக்கு முன் அழுது விடக்கூடாது என்று கலங்கி கண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று விட்டாள் தான்.

 

ஆனால் தனியே தன் அறைக்கு வந்ததும் அவளால் அந்தப் பார்வையை தாங்க முடியவில்லை..

 

அவள் தவறு செய்தவள் தான். திருமணம் என்று ஒரு பந்தத்துக்கு முன் குழந்தை என்று ஒரு பந்தத்தை ஏற்றுக் கொண்டவள் தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!

 

மற்றவர்கள் எப்படி வேணாலும் பார்க்கலாம், பேசலாம், தன் முதுகுக்கு பின்னே நக்கலாக கூட சிரிக்கலாம். 

 

ஆனால் தன் சொந்த தாத்தாவே அப்படி செய்தால் மனது அதை ஏற்குமா? தாங்குமா?

மனதால் மிகவும் உடைந்து போனாள்.

 

மற்ற நேரம் என்றால் தன்னை கீழாக பார்ப்பவர்களை கண்டு “நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா?” என்று கடந்து செல்ல கூடியவள். இப்பொழுது மசக்கையினால் மங்கையின் மனம் குழப்பத்தில் இருக்க.. சிறு விஷயம் கூட பெரும் பூதாகரமாய் அவளுக்கு தோன்றியது..

 

அதிலும் தான் இத்தனை கேவலப்படுத்தியும் திட்டியும் ஏன் சில சமயம் அவமானப்படுத்தி பேசியும்கூட ராவண்.. தனக்காக.. பிடிக்காத வீட்டுக்குள் இருக்கிறான். என் பின்னாடியே வருகிறான் என்று நிதர்சனம் அவளுக்கு நெற்றி பொட்டில் உரைத்தது.

 

“என் மாறா மாறவில்லை..! அவன் காதல் பொய் இல்லை..! எல்லாம் இந்த தாத்தாவால் ஏற்பட்ட வலியை என்னிடம் அப்பொழுது இறக்கி வைத்து விட்டான். அவ்வளவுதான்..!” என்று தலைவனை நினைத்து அவள் பெருமிதம் கொண்டிருக்கும் தருணத்தில்…

 

“பாப்பா..” என்றவனின் மெல்லிய குரல் அவளுக்கு தேவன் குரலாக கேட்க, அனைத்தையும் துறந்து விட்டு “என் மாறா எனக்கு போதும்” என்று அவனோடு அணைந்து கொண்டாள்.

 

‘இப்பொழுது உணர்ச்சி வசத்தில் இருக்கிறாள் இவள். இவளிடம் இப்பொழுது எதையும் பேசி புரிய வைக்க முடியாது’ என்று புரிந்தவன் அவளை தோளோடு அணைத்த வாக்கிலேயே “சரி வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பியாம்” என்று அவளை படுக்க வைக்க போக..

 

“வேணாம்.. வேணாம்.. இந்த வீடு வேணாம். போலாம் உங்க வீட்டுக்கு போலாம் வாங்க” என்று அவள் ஒற்றை காலில் அடம் பிடிக்க..

 

சரி என்று தலை அசைத்தவன் அவள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் அவளுக்கான உடைகளை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு அவளோடு கீழே இறங்கி வர..

 

இருவரும் பையும் கையுமாக வருவதை கண்ட வள்ளியம்மை அதிர்ந்து தன் வயதை மறந்து பேரன் பேத்தியிடம் ஓடி வந்தார்.

 

“எங்க கிளம்பிட்டீங்க இரண்டு பேரும்?” என்று பரிதவிப்போடு அவர் கேட்க..

 

ஆருஷி கலங்கிய ஆச்சியின் முகத்தை பார்க்கவில்லை. அவள் மனதில் தைரியம் இல்லை..!

 

அவளோ அமைதியாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள்‌ அழுகையை அடக்கியபடி…

 

“கொஞ்ச நாள் அவ என் கூட இருக்கட்டும் ஆச்சி. இங்க பக்கத்துல தான் என் வீடு” என்றதும் அவரோ பதறிவிட்டார்.

 

இத்தனை ஆண்டுகள் கழித்து தன் கையில் கிடைத்த சொர்க்கத்தை தவற விட அவர் விரும்பவில்லை. 

 

“உங்க தாத்தா எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் பேசுனத கேட்டுக்கிட்டு வீட்டை விட்டு போவியா நீ ஆரு?” என்று பேத்தியின் முகத்தை கைகளால் தாங்கிக் கேட்க.. அவளோ விம்மி வெடித்து வரும் அழுகையை உதடு கடித்து பொறுத்துக் கொள்ள…

 

“நீ வாய் திறந்து பேச வேண்டாமா? இந்த வீட்டில எனக்கும் உங்களை மாதிரி உரிமை இருக்கு.. நான் இங்கதான் இருப்பேனு உங்க தாத்தா மூஞ்சியை பார்த்து பேச வேணாம்?  உங்க தாத்தா அநியாயமா எப்படி  எல்லாம் பேசினாரு..‌ இப்ப பாரு வாய் நல்லா இழுத்துகிட்டு கிடக்காரு.. இனிமே முன்ன போல அவரால பேச முடியாது” என்று சற்று வருத்தமாய் கூறினார் வள்ளியம்மை. 

 

“என்னது மறுபடியுமா?” ஆருஷி  இராவண்னை பார்க்க.. அவனும் உதட்டை பிடித்து “ஹைபிளட் பிரஷர். அவரே இழுத்து விட்டதுதான்” என்று தோளை குலுக்கினான். 

 

ஆனாலும் விடாப்பிடியாக நான் கொஞ்ச நாள் அவர் கூட இருக்கிறேன் ஆச்சி என்று அவள் பிடிவாதத்திலேயே ஆருஷி நின்றுவிட..

 

“என் பொண்ணும் என் பையனும் என்னை விட்டு போய்ட்டாங்க.. நீங்களும் என்னை விட்டு போறீங்களா? என்னை விட்டுப் போன என் பிள்ளைகள் கொள்ளு பேர பிள்ளைகளா என்கிட்டே வருவாங்கனு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?” என்று அவர் கண்கள் கலங்க இப்பொழுது இராவணனுக்குமே அவர் பால் இரக்கம் சுரந்தது.

 

யாருக்குமே புத்திர சோகம் பெரும் சோகம்..! அதிலும் இரண்டு பிள்ளைகளையும் இழப்பது என்றால் சும்மாவா?

 

அவரின் கைப்பிடித்தவன் “கொஞ்ச நாள் அவ என் கூட இருக்கட்டும் ஆச்சி.. வளைகாப்பு நடத்தி நீங்க இங்க கூட்டிட்டு வாங்க..‌  பிரசவத்துக்கு அவ அம்மா வீட்ல இங்கேயே இருக்கட்டும்..” என்றதும் இவளோ ராவணனை முறைத்துப் பார்த்தாள்.

 

“அத்தை சொல்றதை கேளு ஆரு? உன்னை எப்படி நாங்க தனியாக விட முடியும்? தம்பி ஹாஸ்பிடல் போயிட்டா.. நீ வீட்டில் தனியா தானே இருக்கணும்?” என்று அண்ணனின் ஒத்தை வாரிசை இந்த பேறுக் காலத்தில் தனியே விட முடியாமல் தவித்தார் ரூபிணி.

 

சுக்ரேஷோ “ஆமா நீங்க சொன்னா அவ கேட்டுட்டு தான் மறுவேலை  பார்ப்பா பாருங்க.. இப்படித்தான் அடம் பிடிச்சு என்னை மிரட்டி உருட்டி மும்பைக்கு போனா” என்று ஆருஷியை முறைத்தான் அவன்.

 

கிரிதரனும் அவளை சமாதானப்படுத்தி பார்க்க..

 

எல்லோருக்கும் மறுத்து கூறியவள், “கொஞ்சநாள் நா அங்க இருந்துட்டு வரேன்” என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

எல்லாருமே அயர்ந்து ஆயாசமாகி இப்பொழுது ராவண்னை தான் பார்த்தார்கள்.

 

‘நீயாவது சொல்லேன் உன் பேச்சை அவ கேட்பாள்’ என்று..!

 

அவர்களின் பார்வையை படித்தவன் “எந்த காலத்துல பொண்டாட்டிங்க புருஷனுங்க பேச்சை கேட்டிருக்காங்க..” என்று வெளிப்படையாக அவன் சத்தமாக சிரித்துக் கொண்டே கூற.. அவன் புஜத்தில் நறுக்கு என்று கிள்ளினாள் ஆருஷி.

 

“ஆச்சி.. அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க. எங்க போறோம் நாங்க? இங்கிருந்து ஒரு 5 km-ல தான் எங்க வீடு இருக்கு.. மார்னிங் ஹாஸ்பிடல் போம்போது இவளையும் கூட்டிட்டு போய்டுவேன். ஈவினிங் உங்களை பாக்குறதுக்கு நான் கூட்டிட்டு வரேன்.. அதுக்கப்புறம் நைட் டின்னர் முடிச்சு நாங்க வீட்டுக்கு போறோம். ஓகேவா ஓகேவா?” என்று ஆச்சியையும் ஆருஷியையும் அவன் மாத்தி மாத்தி பார்த்து கேட்க..

 

இருவரும் ஏதோ போனால் போகுது என்று தலையை அசைக்க..

 

ஆருஷியோ

டு  தன் வீட்டுக்குள் நுழைந்தான் இராவண்.

 

பெரும் ஆசையாய்‌‌..

வளர் நேசமாய்‌…

நனி காதலாய்…

 

வருவான் காதல் அசுரன்...!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top