Thread starter 13/12/2025 10:12 am
அத்தியாயம் 39
”எத்தனை மாச ஆசை தெரியுமா.. ??” என்று வருடினான் ஆசையாக.
”ம்ம்ம்..!!” என்றாள்.
“ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிறு இவ்வளவு அழகுடன்.. ஆளை அசத்தும் கவர்ச்சியுடன் இருக்குமென எனக்குத் தெரியாது.” என்றதும் அவன் தலையில் கொட்டினாள் ஆருஷி செல்லமாக..!
அவள் புடவைக் கட்டை நன்றாக இறக்கி நாபிக்கு கீழே விட்டிருந்தாள்.!! அழகான நாபிக்கு கீழே சரலென இறங்கும் பனிச் சறுக்கல் போன்ற அடி வயிற்றில் இன்னும் கொஞ்சம் அதிகமாக பூனை ரோமங்களைப் பார்த்தபோது.. அவன் இளமை தீ பற்றிக் கொண்டதை போல கொதித்தது.. !!
அவன் பக்கத்தில் நெருங்கி வந்தாள். அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவளுக்கு
அவனிடம் வெட்கமோ தயக்கமோ துளியும் இல்லை. கலைந்த முன் நெற்றி முடி அவள் முகத்தில் புரள.. சோபையான அவள் உதடுகளின் சிரிப்பு மிகவும் வசீகரமாக இருந்தது.. !!
”நான் தொட்டா.. உனக்கு ஒண்ணும் இல்லையா.. ??” என்றவன் மெல்ல தன் கையை அவள் வயிற்றிலிருந்து எடுத்து அவளைத்தான் பார்த்தான்.
அவன் ஒரு மாதிரியான அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தான். காரணம் அவள் மீது அவன் கொண்டு அந்த மோகம்..!
ஒன்பது மாத கர்ப்பிணியான இவள் மீது மோகம் கொள்வது சரியா என்று தெரியவில்லை..
”ம்ம்.. நீ என்ன புதுசா தொடுறியா என்ன?” இப்போது அவளே அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள்.
இராவண்னுக்கு சிலிர்த்தது மேனி..! காமத்தை தாண்டியும் அவன் உடலில் ஒரு இன்பச் சிலிர்ப்பு..!! அவளின் மேடான வயிற்றை மென்மையாக வருடினான்..!!
தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் மிகவும் பெரிய விஷயம் தான் தன்னை ஆணாக உணரும் தருணம் அது அல்லவா?!
ஒரு ஆண், ஆணாக மிளிரும் தருணம் அல்லவா??
தன் விந்தில் உருவான ஓர் உயிர்..!
ஒற்றை உயிருக்கே அத்தனை பெருமை கொள்ளும் அப்பாவின் மனது.. இங்கே இரண்டு உயிர்கள் ஜனித்திருக்க பேர் உவகை கொண்டது..!
இப்பொழுது ஆருசியும் அவனிடம் தன் குழந்தை வயிற்றை கட்டுவதற்கு காரணம் காலையில் இராவண் சொன்னது தான், அவள் கைகோர்த்தபடி,
“நாளைக்கு இதெல்லாம் நடக்கலையேன்னு நீ ஏங்க கூடாது டி பாப்பா.. உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நான் செய்வேன்” என்று அவன் கூறியது அவள் மனதை அசைத்தது.
எல்லா பெண்களுக்குமே கர்ப்ப காலத்தில் இது போன்ற ஆசைகள் தோன்றும் அல்லவா?
இப்பொழுது அவன் பிடிக்காதவன் தான்.. அவன் சொன்ன சொல் அவள் மனதில் படுவாய் பதிந்துவிட்டது தான்.. ரணம் கொடுத்தது தான்.. வலி கொடுத்தது தான்.. ஆனாலும் அவன் கேட்டதும் இப்பொழுது அவளால் மறுக்க முடியவில்லை..!
இப்பொழுதே ஒன்பதாவது மாதம் இனி எப்ப வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம். அதற்குப்பின் தவற விட்டு தருணங்களை நினைத்து அதன்பின் எண்ணி பார்த்து ஏங்கக் கூடாது அல்லவா?
”தாங்க்ஸ் டி பாப்பா..!!”
தன் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான். அவள் உதடுகளில் இருந்த புன்னகை மாறாமல் அவன் முகத்தை இழுத்து தன் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டாள்.
”உள்ள துடிக்கறது கேக்குதா மாறா.??” என்றாள் மென்மையாக..!
ஆம்.. அவன் வருட வருட உள்ளே குழந்தைகள் துடித்தன..! நகர்ந்தன..!
“அப்படியா..?” என்று ஆனந்தமாக அதிர்ந்தான். உண்மையில் அப்படி எதுவும் அவனுக்கு உறைக்கவில்லை.! அவன்தான் உறைந்து போன நிலையில் இருந்தேன். ஏனெனில் அவள் சட்டென அப்படிச் செய்வாள் என்று எனக்கும் தெரியாது..!
அவள் அவன் முகத்தை இழுத்து தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டதும்.. அவனின் காதல் உச்சம் தொட்டு விட்டது..!!
ஒன்பது மாத கர்ப்பிணி பெண் மீது மோகம் கொள்ளலாமா என்கிற எண்ணம் மாறி.. அவளுடனான காதல் எனக்கு மீண்டும் வேண்டும்.. அன்று கிடைத்தது போல அவளின் மாறாவில் அவன் மூழ்கியிருந்தான்..!!
”எனக்கு தெரியலையே பாப்பா! உள்ள துடிக்குதா.. ??” அவன் கைகளை மெதுவாக அவள் இடுப்பில் படர விட்டான்.
தன் முகத்தை அசைத்தான்.. அவள் வயிற்றில் தன் மூக்கைத் தேய்த்தான்.. !!
”அது.. எப்போவாச்சும் துடிக்கும்..!!” அவள் குரல் கிறங்கியிருந்தது.
அவனின் உச்சநதலை மீது ஒரு கையும்.. அவனின் பின் கழுத்தில் ஒரு கையும் கொடுத்து அவன் முகத்தை தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு கிசுகிசுத்தாள்
”அது சன்னமா துடிச்சிசே இப்போ.. இங்கே கை வையேன் மாறா..” என்றவள் ஒரு பக்கம் அவனின் கை வைக்க.. அப்போது தான் ஒருத்தன் மெதுவாக உதைக்க துவங்கியிருந்தான்.
“ஆமா.. துடிக்குது டி பாப்பா..” என்றான் கண்கள் கலங்க.. நடுங்கும் உதடுகளை கடித்தபடி..!
“இல்ல.. உதைக்குது பாப்பா” என்று அவள் சிரித்தாள்.
அவனால் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த துடிப்பை குழந்தையின் இருப்பை உணர்ந்தான். அவன் மனம் அடைந்த உணர்ச்சிக்கு அளவே இல்லை..!
எத்தனையோ கர்ப்பிணிகளுக்கு அவர்களின் குழந்தைகளின் துடிப்பை.. ஹார்ட் பீட் சத்தத்தை காட்டி அவர்களை மகிழ்வித்துள்ளான்.
இன்று அதையெல்லாம் அவன் குழந்தைகளின் மூலம் அவன் உணரும் பொழுது.. எப்படி அதை வார்த்தைகளால் வடிப்பது என்று அந்த மருத்துவனுக்கு தெரியவில்லை.
அவள் வயிற்றின் வாசத்தை நெஞ்சு நிறைய இழுத்தான். தன் உதடுகளை மெல்லக் குவித்து அவள் வயிற்றின் மீது பதித்து மென்மையாக முத்தமிட்டான்..!!
“ஐ லவ் யு டி பாப்பா !!”
”மீ டூ மாறா.. !!”
அவள் என்னை ஆதுரத்துடன் தழுவிக் கொள்ள.. என் உதடுகளை அவள் வயிற்றின் மீது வைத்து அழுத்திக் கொண்டான். அவள் சிலிர்த்து அவனின் பிடறி மயிரை இறுக்கினாள்.
உடம்பில் நெருப்பு மூட்டியதை போல உஷ்ணம் ஏறத் தொடங்கியது. அவனின் முத்த எண்ணிக்கையும் மெல்லிய வருடலும்.. அளவின்றி
சென்றுக் கொண்டே இருக்க.. ஆருஷியோ
”ஷ்ஷ்ஷ்.. மாறா..” என்று மோகன கவிப் பாட..
இருவரும் தங்களின் கோபம் வருத்தம் துக்கம் அனைத்தையும் மறந்து தங்கள் உலகத்தில் திளைத்திருந்த நேரம்..
அப்போது அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது வேறு யாருமில்லை ரூபிணி தான்.
“ஆரு உன்னை தாத்தா பார்க்கணும்னு ஆசைப்படுறாரு.. கூப்பிடுறாரு.. கீழ வருவியாம்” என்று அவர் குரல் கொடுக்க..
இப்பொழுது இருவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“வாட்? தாத்தா வா அவர் எப்போ மயக்கத்தில் இருந்து முழிச்சாரு?” என்று பீதியுடன் தன் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் ராவண்னை அவள் பார்க்க.. அவனும் இதை எதிர்பார்த்து இருந்தான் போலும் இதழுக்கடையில் ஒரு கள்ளப் புன்னகை..!
“ஏன் தாத்தா என்ன பாக்கணும்னு ஆசைப்படுறாருன்னு தெரியலையே? நான் வந்தத அவரு கிட்ட இப்ப யாரு சொல்ல சொன்னது மும்பையிலே இருக்கேன்னு சொல்ல வேண்டியது தானே?” என்று அவள் கையை பிசைந்து கொண்டு புலம்ப..
அவளின் புடவையை அவன் பழையப்படி கட்டி விட்டான்.
அவளோ அந்த பிரக்ஞையே இல்லாம யோசனையிலேயே உழன்றுக் கொண்டிருந்தாள்.
"ஹே.. பாப்பா.. வா உங்க தாத்தா கூப்பிட்டாறாம். நீ என்னை இங்கே நின்னுட்டு இருக்க வா போகலாம்" என்று அவன் முன்னே செல்ல பாய்ந்து அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள்,
"ஆமா நீ எங்க போற இப்ப முன்னாடி? அவர் என்னதான் கூப்பிட்டார் உன்னை கூப்பிடல மேன். சம்மன் இல்லாமல் நீ ஆஜர் ஆகாதே.. ஏற்கனவே என்னை பார்த்து என்னென்ன பேச போறாருன்னு தெரியல.. இதுல உன்ன நான் கூட்டிட்டு போய்.. எனக்கு நானே குழி வெட்டிக்கவா?" என்று புலம்பியவளே தோளோடு அணைத்து "ஆல் இஸ் வெல் பாப்பா" என்று ஆறுதல் படுத்தினான்.
அவளுமே சிறிது நேரம் அந்த அணைப்பில் ஆறுதல் அடைந்தாள்.
“ம்ப்ச்.. டைம் ஆச்சு. கீழ போகணும்” என்றவள் நடந்தாள்.
கீழே அவளோடு வந்தவன் தாத்தா அறை முன் அவனை தடுத்தாள்.
“நீ இங்கேயே இருக்கணும். சரியா? என் கூட உள்ள வரக்கூடாது” என்று கண்களை உருட்டி அவனை மிரட்டினாள்.
“உன்னை பத்தி கேட்டா என்னால பதில் சொல்லவே முடியாது” என்று அவள் சலித்துக் கொள்ள…
“அப்படியெல்லாம் உன்னை விட்டு விடுவேனா நீ பயப்படாம போ பாப்பா..!” என்று நக்கல் தொணியில் அவன் கூற.. அவனை நம்பி உள்ளே மெதுவாக தாத்தா என்று சென்றவள்,
ஏதோ தோன்ற அவனை பார்த்து "உன்னை தாத்தா பார்த்துட்டாரா?” அப்படி இருக்கக் கூடாது என்று வேண்டுதலோடு அவர் கேட்க ஆமாம் என்றதும் “அச்சோ!!” அவளுக்கு உள்ளே பயந்து பயந்து வந்தது.
“ஆனா ஆச்சியை பார்க்க வந்த டாக்டர்னு உங்க அத்தை தான் அவர் கிட்ட என்னை இன்ட்ரோ பண்ணுனாங்க..” என்றான் அவள் முகம் மாறுதலை பார்த்துக்கொண்டே..
“அப்பாடி..!” என்று அவள் பெருமூச்சு விட்டு அறையின் பக்கம் திரும்ப முன்னே…
“ஆனா பாப்பா.. நான் தெளிவா சொல்லிட்டேன்.. நான் ஆச்சி பார்க்க வந்த டாக்டர் தான். ஆனா சிவேந்திரன் பிள்ளை நான் தான்ட்டு” என்றதும் அடப்பாவி என்று அதிர்ந்து திரும்பியவளை அப்பாவியாக பார்த்து,
“நீதான் ஏற்கனவே நான் பொய் சொன்னதுக்கு என் மேல கோபப்பட்டு.. கோச்சிட்டு வந்துட்டல பாப்பா.. திரும்பவும் உங்க தாத்தா கிட்ட பொய் சொன்னா.. நீ என் மேல கோபப்பட மாட்ட.. அதான் உண்மைய சொல்லிட்டேன்” சிறுபிள்ளை போல் முகத்தை வைத்து கூறியவனை என்ன செய்தால் தகும் என்று அவளுக்கு கோபம் வர..
ஆனால்.. அவனை ஒன்றும் செய்ய முடியாமல், தன் கையை மட்டும் நெறித்து அவன் கழுத்தை நோக்கி சென்றவள் “உன்னை..” என்று பல்லை கடித்து..!
“அடியே.. கொன்னுடாத டி பாப்பா.. நான் பாவம்” என்று முகத்தைப் பாவம் போல வைத்தவனை கண்டு நொந்து போய் “போ டா” என்று கையை இறக்கிக் கொண்டாள்.
‘சரி போ தொலையுது.. நம்மள பத்தி தெரியாது தானே? அதுவரைக்கும் சந்தோஷம்..!’ என்று அவள் தாத்தா அறையின் உள்ளே செல்ல..
அவரோ மெல்ல திரும்பி அவளைப் பார்க்க.. அவள் தாத்தா எனும் முன் “வணக்கம் தாத்தா..!” என்று பவ்யமாய் கூறியவனை அவள் திடுக்கிட்டு பார்க்க..
“வா பாப்பா..” என்று அவள் கை கோர்த்தவனை கண்டு அவள் திடுக்கிட்டாள் என்றால்..
இருவரையும்
சேர்ந்து பார்த்ததில் அழகப்பன் அதிர்ச்சியானர் என்றால்.. ஆருஷியின் சூல் தாங்கிய வயிற்றை கண்டதும் பேர் அதிர்ச்சியானது..!
வருவான் அசுரன்...
