Share:
Notifications
Clear all

அத்தியாயம் 3

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 2
Thread starter  

அத்தியாயம் 3 

 

பகலும் மறைந்தது இரவும் சூழ்ந்தது.. 

 

தன் வேக எட்டுக்களுடன் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தான் அசுராந்தகன்.. 

 

அவன் கண்களில் இருந்த தீட்சண்யம் மற்றவர்களை அமைதியாக்கியது.. 

 

அவனின் ஆஸ்தான தோழன் தான் நிகில்.. அவன் அருகில் மெதுவாக வந்து நின்றான்.. 

 

“என்னாச்சி டா?..” என்றவனைப் பார்த்தவன், மெல்ல விழிகளாலேயே நோட்டமிட்டான்.. 

 

கம்ப்யூட்டரில் வேலை செய்துக் கொண்டிருந்தனர் சிலர்.. சிலர் குழுவாக நின்று துப்பாக்கியில் குறிபார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.. 

 

“இன்னைக்கு காலையில மார்க்கெட்ல சம்பவம் பண்ணது யாரு?..” என்ற கர்ஜனைக்குரலில், அங்கிருந்த சலசலப்பு அத்தனையும் அடங்கி, ஓரமாக துப்பாக்கியை செட் செய்துக் கொண்டிருந்த தயாளன் மீது தான் அத்தனை பேர் பார்வையும் படிந்தது.. 

 

அவர்களின் பார்வையே தயாளனைக் காட்டிக் கொடுக்க, அவனை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து நடந்தான் அசுராந்தகன்.. 

 

“குணசேகரை மார்க்கெட்ல போட்டது நீதானே?..” என்றான் அழுத்தமான குரலில், 

 

“ஆமா அண்ணா..” என சொல்லி முடிக்கவில்லை.. கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான் அசுராந்தகன்.. 

 

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. நாம பண்ற சம்பவமெல்லாம் நைட் நேரத்துல மட்டும் தான்னு..” என்றவனைக் கண்டு சற்று பயத்துடன் தான் பார்த்தான் அவன்.. 

“இல்லை அண்ணா அந்த குணசேகரன், ப்ளைட்ல துபாய் போகலாம்னு இருந்தான்.. இன்னைக்கு நான் அவனை போடலைன்னா, கண்டிப்பா அவன் நம்மக்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகியிருப்பான்..” என்றவனைக் கண்டு சற்று அமைதியாகினான் அசுராந்தகன்.. 

 

“நீ ஏன்டா இதுக்கு இவ்வளவு கோபப்படுற?..” என்றான் நிகில், நண்பனை சற்று சாந்தபடுத்துவதற்காகவே, 

 

“ஒரு பொண்ணு.. நம்ம மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கா?..” என்றதும், அங்கிருந்த அனைவருக்குமே சற்று திகைப்பு தான்.. 

 

“ப்ளாக் ஷேடோ..” என இவர்களைப் பற்றி தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள்.. அவ்வளவு பிரபலம் மற்றும் பயம்.. 

 

இவர்களின் மேல் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்களா?.. அதுவும் ஒரு பெண் கொடுத்தாளா?..” என நினைக்கும் போதே சிறு கோபம் துளிர்விட்டது அந்தப் பெண்ணின் மீது… 

 

“யாருன்னு சொல்லுங்க அண்ணா, போய் போட்டுட்டு வந்திடலாம்?..” என்ற சேகரை பார்த்து முறைத்தவன் 

 

“அவளை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க உங்க வேலையைப் பாருங்க..” என்றவன், நிகிலுடன் பேசிக் கொண்டே வெளியேச் சென்றான்.. 

 

அவன் வெளியே செல்வதை அறிந்த பின்பு, சேகர் தயாளன் அருகில் வந்தான்.. 

 

“என்னடா, உன் மேல ஒரு பொண்ணு கம்ப்ளையின்ட் பண்ணியிருக்கு?.. அண்ணா சொல்லுற மாதிரி அப்படியே விடப்போறீயா?..” என நாசூக்காக கேட்டான் சேகர்.. 

 

அவனுக்கு தயாளன் மீது ஆரம்பத்தில் இருந்தே சற்று வெறுப்பு தான்.. 

 

ஏனோ இருவருக்கும் ஆகவே ஆகாது.. 

 

“நான் ஏன்டா விடணும்?.. அந்தப் பொண்ணைக் கொன்னு அண்ணன் காலடியில வந்துப் போடுறேன்..” என்றவன் தாராவி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.. 

 

மார்க்கெட் இருந்த இடம் அங்கு என்பதால், கம்ப்ளையின்ட் அங்கே தான் பண்ணியிருப்பாள் என அறிந்தே அங்கு வந்து நின்றான்.. 

 

போலீஸ் ஸ்டேஷனில் அவனுக்கு ஆள் உண்டு… 

 

தயாளன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பழைய வண்டிகள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.. 

 

“தயா.. தயா..” என அழைத்தபடி, அவனைத் தேடி ஒரு கான்ஸ்டபிள் ஓடி வந்தார்.. 

 

“என்னய்யா, அந்தப் பொண்ணு பேர் கிடைச்சுதா?..” என்றான் தயாளன்.. 

 

“ஆமா தயா, கிடைச்சிடுச்சி.. பட் பேர் மட்டும் தான் கிடைச்சிருக்கு, அட்ரஸ் எதுவுமே பதிவாகலை..” என்ற கான்ஸ்டபிளை முறைத்தான் தயா.. 

 

“அது எப்படி ய்யா?.. அட்ரஸ் இல்லாம, ஒரு கேஸ் பைல் பண்ணுவீங்க?..” என எரிச்சலுடன் கேட்டான் 

 

“தெரியலையே..” என்றபடி கான்ஸ்டபிள் காசை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.. 

 

“அட்ரஸே இல்லாம கேஸ் பைல் ஆனது, அண்ணாவுக்கு எப்படித் தெரிஞ்சது..” என்றவன், அந்த பேப்பரை பார்த்தான்.. 

 

கீர்த்தனா தேவன்..” என அழகாக எழுதியிருந்தது.. 

 

“கீர்த்தனா தேவன்.. வர்றேன்டி.. என் மேலேயே கம்ப்ளைன்ட் கொடுக்குறீயா?..” என வன்மத்துடன் நினைத்துக் கொண்டவனின் கண்களில் சிக்கியது சிசிடிவி கேமரா.. 

 

நாற்காலியில் அமர்ந்து ஒரு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான் தேவன்.. அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டது ஓர் உருவம்.. 

 

அது யாரென்பதை அறியாதவனா?.. அவன்.. 

 

மெல்லிய புன்னகை அவன் உதட்டில்.. 

 

“மாமாஆஆ..” என்றாள் கொஞ்சலாக, 

 

“ம்ம்ம்..” என உச்சுக் கொட்டினான் அவன்..

 

“எப்போ பார்த்தாலும், நோட்டு புத்தகம்னு அலையுறீயே, உனக்குப் போரடிக்காதா?..” 

 

“என் வேலையே அது தான்.. அதுல போரடிக்க என்ன இருக்கு?..” என்றவன் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்த கனத்தில் நச் என்று பதிந்தது அவளின் மென் இதழ்கள்.. 

 

“அழகா இருக்க மாமாஆஆ..” என்றாள், இன்னொரு முத்தம் கொடுத்தபடி, 

 

“ம்ம்..” என்றவனை விட்டு சட்டென்று விலகினாள் கீர்த்தனா.. 

 

“அது என்ன எப்போ பார்த்தாலும், ‘ம்ம்..’ னு மட்டும் சொல்லுற, ஏன் ‘நீயும் தான் செல்லம் அழகா இருக்கன்னு சொன்னா குறைஞ்சா போயிடுவ?..” என அவனோடு மல்லுக்கு நின்றாள்.. 

 

“ப்சச்ச்.. உனக்கு சொல்ல தோணிச்சி.. சொன்ன?.. எனக்கு சொல்லத் தோணலை.. நான் சொல்லலை..” என்றபடி நோட்டை மூடி வைத்து அதற்குரிய இடத்தில் வைத்தவனின் கழுத்தில் ஓடிச்சென்று குரங்கு போல் தாவிக் கொண்டாள்.. 

 

சட்டென்று கீழே விழப்போன தேவன் அருகில் இருந்த டேபிளை நிலையாகப் பிடித்து பின் சரியாக நின்றுக் கொண்டான்.. 

 

நிமிர்ந்தவாறே இரு கரங்களையும் பின்னோக்கிக் கொண்டுச் சென்றவன், அவளின் முதுகோடு கைக்கோர்த்துக் கொண்டான்.. 

 

“ஏன், மாமாஆஆ.. என்னை உனக்குப் பிடிக்குமா?..” என்றாள் சற்று நலிந்த குரலில், 

 

ஏனோ ஒரு வித ஏக்கம் அவளுக்குள்.. 

 

அவள் அவனைப் பிடித்திருக்கிறது என ஆயிரம் முறை சொல்லியிருப்பாள்.. ஆனால் அவன்?.. வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறானே?.. என அவளுக்குள் ஒரு வித ஏக்கம் இருந்துக் கொண்டேயிருந்தது.. 

 

“பிடிக்குமே?..” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் கீர்த்தனா.. 

 

“அது என்ன பிடிக்குமே?.. இந்த சேர், டேபிள் பிடிக்கும்ங்கிற மாதிரியே சொல்றீயே மாமா.. என்னைப் பிடிக்கும்னு சொல்லு மாமாஆஆஆ.. உன் காதலோடு என் கண்ணைப் பார்த்து நீ சொல்லணும்னு ஆசையா இருக்கு..” என்றவளின் விழிகள் கசங்கி கண்ணீரை சட்டென்று வெளியிட்டது.. 

 

ஏனோ அந்த வார்த்தை சொல்லும் போதே அவளையும் அறியாமல் கண்ணீர் கண்களில் தொக்கி நின்றது..

 

சாதாரண வார்த்தை தான்.. ஆனால் அதில் அவளின் உயிரை அல்லவா புதைத்து வைத்திருக்கின்றாள்.. 

 

வேகமாக தன்னிடமிருந்து விலக்கி நிற்க வைத்தவன், “உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கீர்த்தனா..” என்றவனை பார்த்து சப்பென்றாகி போனது அவளுக்கு.. 

 

அவளின் கசங்கிய முகத்தைப் பார்த்தவன், “என்னாச்சி டி?..” என்றான்.. 

 

“இல்லை மாமாஆஆ.. ஏதோ ஒன்னு குறையுது.. நீ என்னை உயிருக்கு உயிரா நேசிச்சு காதலை சொல்லலை.. போனா போகுது, நீ கேட்டுட்ட.. நான் சொல்லிட்டேங்குற மாதிரி சொல்லுற?.. எனக்கு உன் காதலே வேண்டாம் போ..” என்றவள், முறுக்கிக் கொண்டே அறைக்குள் சென்றாள்.. 

 

அதே நேரம் தேவனின் அலைபேசியில் மெசேஜ் வந்ததற்கான ஒலி வந்தது.. 

 

எடுத்துப் பார்த்தவனின் விழிகளில் சின்ன சிவப்பு.. அது கோபத்தின் சாயலோ?.. 

 

“கீர்த்தனா?..” என சத்தமாக அழைத்தான்.. 

 

“நான் வரமாட்டேன், நீ போ மாமா..” என்றாள் கோபத்தில், 

 

“நான் காலேஜ் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்..” என பதட்டமாக கிளம்பியவனைக் கண்டு கீர்த்தனாவின் கண்கள் இடுங்கியது.. 

 

“எங்கே மாமா போற?..” 

 

“காலேஜ்ல ஒரு பொண்ணை டீஸ் பண்ணியிருக்காங்க.. அந்தப் பொண்ணு காலேஜ்ல தற்கொலைக்கு ட்ரை பண்ணி இப்போ ஹாஸ்பிட்டல்ல உயிருக்குப் போராடிட்டு இருக்காம்.. அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் வந்து காலேஜ் அடிச்சி உடைச்சிட்டு இருக்காங்களாம்..” என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்து நிறுத்தியிருந்தாள் கீரத்தனா.. 

 

“அங்கேயே கலவரமா இருக்கு?.. நீ எங்கே மாமாஆஆ.. போற?.. எனக்குப் பயமா இருக்கு.. நீ எங்கேயும் போகத் தேவையில்லை. இங்கேயே இரு..” என்றவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தபடி பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.. 

 

அவனின் முதுகையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் கீர்த்தனா.. 

 

கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க மறந்திருந்தாள்.. 

 

பைக்கில் வேகமாக சென்ற தேவன் காலேஜிற்குள் இறங்கிய நேரம்.. போலீஸார் வந்து இறங்கியிருந்தனர்.. 

 

50 போலீஸ் சுற்றி வளைக்க, கலவரம் பண்ணிக் கொண்டிருந்த இறந்துப் போன பெண்ணின் உறவினர்களை அடக்கவே முடியவில்லை… 

 

அந்தப் பெண் பிரபல தாதா ஒருவரின் தம்பி மகளாம்.. தன் தம்பி மகளுக்கு, அந்த தாதாவின் ஆட்கள் அனைவரும் காலேஜிற்கு வந்து விட, கலவர பூமியாக காட்சியளித்தது அந்த இடமே.. 

 

தேவனுக்கோ பெருமூச்சு தான் வந்தது.. இந்தக் கலவரத்தை அடக்கியாக வேண்டும்.. என்ன செய்வதென்றே தெரியவில்லை.. 

 

நேராக பிரின்சிபல் அறைக்குத் தான் சென்றான்.. அவரோ சேரின் அடியில் பதுங்கிக் கொண்டிருந்தார்.. 

 

“சார்..சார்..” என்ற குரலில், வேகமாக திரும்பினார் பிரின்சிபல் ப்ரமோத்.. 

 

“சார்.. போலீஸ் வந்திருச்சி.. வந்து பேசுங்க..” என்ற தேவனின் அருகில் வந்தவர், 

 

“அட நீ வேற ஏன்பா என் உயிரை எடுக்கிற?.. காலையில ஒருத்தனை அடிச்சி மண்டையை பொளந்துட்டான்.. இங்கே பாரு..” என ஹிந்தியில் அழுதுக் கொண்டே அவர் கைக்காட்டிய இடத்தில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.. 

 

பார்க்கவே சற்று பரிதாபமான தோற்றத்தில் தான் இருந்தார் அவர்.. 

 

“சார்..  வாங்க நாம பேசிப் பார்ப்போம்.. இப்படியே விட்டா, காலேஜ் பேர் சுத்தமா டேமேஜ் ஆகிடும்..” என்றவன், நேராக வெளியே சென்றான்.. 

 

ஆங்காங்கே போலீஸ் பேச்சுவார்த்தைகளும், அடக்குமுறையும் நடந்துக் கொண்டிருந்தது..

 

“நிறுத்துங்க..” என்றான் தேவன்.. அவன் பேச்சிற்கு யாருமே செவி சாய்க்கவில்லை.. 

 

“பார்த்தீயா, நான் சொன்னேன்ல..” என்பதை போல் அவர் தேவனைப் பார்க்க, 

 

தேவனோ அமைதியாக நின்றிருந்து அங்கே ஓரிடத்தில் தன் பார்வையை நிலைக்க விட்டான்.. 

 

“எங்கே பார்க்கிறான்?..” என எட்டிப் பார்த்த இடத்தில், பிரபல தாதா நின்று யாரையோ கட்டையால் அடித்துக் கொண்டிருந்தான்.. 

 

“அவனை ஏன் பார்க்கிற தேவா?..” என்ற ப்ரமோத்தின் புறம் திரும்பியவன், “ஷ்ஷ்..” என்றவன், நேராக சென்றது என்னவோ பிரபல தாதா இருக்குமிடத்திற்குத் தான்.. 

 

பிரபல தாதாவின் ஆட்களின் கவனங்கள் காலேஜை அடித்து நொறுக்குவதில் தான் இருந்தது.. 

 

யாருமே தேவாவை கவனிக்கவில்லை.. “என்ன செய்யப் போகிறான் இவன்?..” என ப்ரமோத் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், நடந்துச் சென்றுக் கொண்டிருந்த தேவா, ரெளடி ஒருவனின் பின்பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை  லாவகமாக எடுத்தவன், கண்ணிமைக்கும் நொடியில் பிரபல தாதாவின் கழுத்திலேயே கத்தி வைத்திருந்தான்.. 

 

“இப்போ நிறுத்தப் போறீங்களா, இல்லை இவன் கழுத்தை அறுத்துப் போடட்டுமா?..” என்றவனின் கர்ஜனைக்குரலில், ஆங்காங்கே அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் ஒன்று போல் அசைவற்று நின்று விட, 

 

ப்ரமோத்தோ, ஆத்தாடி இவன் என்னைக் கொல்லாம விடமாட்டான் போலேயே..” என மயங்கியே விழுந்து விட்டார்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top