அத்தியாயம் 38
இளம் சிவப்பிலான ஜார்ஜெட் புடவை அணிந்து பால்கனியில் நின்று கொண்டு அங்கிருந்த சிறு சிறு பூத்தொட்டுகளை மாற்றி அடுக்குவதும், அதற்கு தண்ணீர் ஊற்றுவதுமாக சிறுசிறு வேலைகள் செய்து கொண்டிருந்தாள் ஆருஷி.
அவள் உடல் எங்கும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.
அப்படி வியர்வையில் வழிந்த வியர்வை துளிகள் முத்துக்கள் போல மாலை நேர சூரியனின் கதிர்கள் பட்டு மின்னின.
இதைப்பார்த்ததும் இராவண் உள்ளிருந்த காதலன் விழித்துக் கொள்ள.. அவளின் இந்த தோற்றத்தைக் கண்டு மோகத்தில் சுகித்த நாட்கள் அவன் கண் முன் உலா போக… எச்சிலை விழுங்கினான் விரகதாபத்தில்.
என்னதான் குழந்தைக்காக என்று அவன் தள்ளி இருந்தாலும் அவளுடன் கழித்த அந்நியோனியமான நாட்கள்.. தாபத்தில் கிறங்கி மயங்கிய இரவுகள்.. உடல்கள் பின்ன அங்கங்கள் உரச அரங்கேறிய அந்தரங்கள்.. எல்லாம் எப்படி அவனால் மறக்க இயலும்?
அதுவும் தன் கண் முன் காதல் கிழத்திய வைத்துக் கொண்டு எங்கணம் மறக்க முடியும்?
தாய்மையில் இன்னும் பேரழிலாய் செழித்த வளர்ந்த அங்கங்கள் அவள் அழகினை தூக்கி காட்ட.. அவற்றை எல்லாம் கண்கொண்டு பார்க்கும் பொழுது எங்கணம் மறக்க இயலும்?
“கொல்றாளே..!” என்று புலம்பத்தான் முடிந்தது சிகையை கோதி அவனால்..!
அதிலும் மாலை நேர மஞ்சள் ஒளி
அவளது அங்கங்களில் பட்டு அவளை மஞ்சள் தேவதையாய் காட்ட.. மயங்கி தான் போனான் மன்னவன்..!
உடலில் பூத்த வியர்வை அவளது பின்னங்கழுத்தில் வழிந்து அவள் பின்பக்க ஜாக்கெட்டை நனைத்தது.
இவனுக்கோ அதைப் பார்த்து தொண்டை வறண்டது..!
அவள் இடுப்பில் வழிந்த வியர்வை அவள் மடிப்பில் சொட்டு விட்டு கீழே இறங்கியது. அப்போது சூரிய ஒளியில் பட்டு அது மின்ன.. இராவண் கண்களோ மோகத்தில் மின்னுயது.
அவன் மெல்ல நடந்து அவள் அருகே சென்றான். ஆருஷியின் பக்கத்தில் நெருங்கி நின்றான். அதுவும் தேகத்தோடு தேகம் தொட்டும் தொடாமலும்.. பட்டும் படாமலும்.. அப்படி ஒரு நெருக்கம்..!
இராவண் தன் பக்கத்தில் நெருங்கி விட்டதை தெரிந்து கொண்ட ஆருஷி
அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் மோகம் கொண்ட கோமகனோ தனது ஒற்றை விரலால் அவளது பின்னங்களுக்கு வழிந்த வியர்வையை வழித்து சுண்டி விட..
பெண்ணவளுக்கோ அவனின் இந்த ஸ்பரிசத்தில் சிலிர்த்தது அவளது தேகம். பூனை பொன் முடிகள் எல்லாம் நேராய் சிலிர்த்து நிற்க..
அதனைக் கண்டவன் கண்களில் தாபத்தில் சிவக்க “வாவ்..! யூ கில்லிங் மீ டி பாப்பா” என்றவன், அவளது முதுகு பரப்பில் மெல்ல தனது உதடுகளை உறவாட விட்டான்.
“பாப்பா.. யூ லுக் கார்ஜியஸ் இன் சேரி டி” என்றவன் மேலும் அவளது முதுகில் உதட்டால் ஊர்வலம் போனான்.
திடீரென்று ராவணனின் இந்த நெருக்கம் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. அவனை தடுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் பாவை.
அவள் செடியை எடுத்து பூந்தோட்டியில் வைத்துக்கொண்டு இருக்கும்போது அவன் அவள் பின்பக்கமாக நெருங்கி அவள் இடது கையைப் பிடித்துக் கொண்டான்.
அவன் 6 ஆடி இருப்பான் .
இவளோ ஐந்து அடிதான் இருப்பாள் . அவனின் விரல்கள் பட்டதும் இவளுக்கு இன்னும் சிலிர்ப்பு அதிகமாகியது. அவள் தொண்டை வறண்டு விட அவள் தயக்கத்தோடு
“இராவண்ணா ஆஆ.. என்ன செய்யுற?”
“பாப்பா.. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் டி” என்றவனின் தாடிய அடர்ந்த கன்னம் அவளது பட்டு போன்ற கனிந்த சிவந்த கன்னத்தில் இழைந்தது.
“உன்னை ஈவினிங் டைம் எக்சர்சைஸ் தானே பண்ண சொல்லி இருக்கேன். அத விட்டுட்டு இப்படி தான் வெயிட்டான தொட்டி எல்லாம் தூக்கி இறக்குவியா? தினமும் இப்படித் தான் நடக்குதா?” என்று கோபமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு தாபமாக கேட்டான் தலைவன் அவன்..!
“இல்ல.. இன்னைக்கு தான் இதெல்லாம் அரேஞ்ச் பண்ணலாம்னு செஞ்சுகிட்டு இருக்கேன்” என்ற அவள் குரலோ வெளியே வரவில்லை அவனின் நெருக்கமான நெருக்கத்தில்..!
அவளது இடது கை விரல்களை தன் விரல்களால் பிடித்துக்கொண்டு நெருங்கியவன் அவளது கூந்தலை அப்படியே ஒதுக்கினான். அவள் முதுகு எங்கும் வியர்வை முத்துக்கள் இருப்பதை கண்டதும் அவள் காதுக்குள் கற்றை மீசை உரசிட
“பாப்பா.. உன்னோட உடம்பு குப்பென்று வேர்த்துக் கிடக்கு”
என்று சொல்லிக்கொண்டே அவள் வலது கையையும் பிடித்துக் கொண்டான். அவன் அவளது இரு கை விரல்களையும் மெல்ல நிரண்ட ஆரம்பித்தான். இவன் செய்வது ஆருஷியிவன் இளமை கிளர்ச்சியை தூண்டியது..! அவளுக்குள் இருக்கும் அந்த ஹார்மோன்ல் சதிராடலை அதிகப்படுத்தியது.
அவளின் நிறைந்த அழகில் அவன் கள்ளுண்ட மயக்கத்தில் இருப்பதுபோல இருந்தான்.
இப்பொழுது அவன் விரல்களின் ஸ்பரிசம் அவளை ஏதேதோ செய்தது. அவளின் விரல்களை பிடித்த போது அவள் அமைதியாக இருப்பதை கண்ட இராவண், அவள் இரு கைகளையும் விட்டு விட்டு மெல்ல அவள் மெல்லிடையை மெல்ல பிடித்தான். வியர்வை வழிந்தோடும் அவள் இடுப்பில் அவனின் விரல்கள் பட்டதும் அவள்
“இராவண்ணாஆஆஆஆஆ .. ஸ்ஸ் என்ன பண்ற?” என்று அதட்ட தான் முயன்றால் ஆனால் குரலோ அவனிடம் பம்மியது
“பாப்பா நீ எவ்வளவு அழகா இருக்குறே தெரியுமா? முன்ன விட நீ இப்ப தான் அழகு. ம்ம்..” என்று பெரு மூச்சு விட்டவன்,
“இப்படி தனியா இதையெல்லாம் பண்ண முடியும் அதுக்காக தான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு..” என்றவன் அவன் கைகளோ இடுப்பில் தான் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தது.
“நீங்க ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம். உங்க ஹெல்ப் பண்ற விதம் தான் எனக்கு தெரியுதே..!” என்று சீற்றமாக கேட்கிறாக நினைக்க, அதுவோ காதல் வார்த்தைகள் சிணுங்கி தான் வந்தது.
ராவண்னோ அவளிடம் சிறு சிறு சண்டைகள் வார்த்தைகள் மூலம்
தன் முன்புறத்தை அவள் பின்னோடு சேர்த்து அழுத்தியபடி அவள் இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளது இடுப்பை மெல்ல வருடிக் கொடுத்தவன் அவள் முதுகில் மெல்ல முத்தமிட்டான்.
தன் உதடுகளால் அவளது வியர்வை முத்துக்களை ஒவ்வொன்றாக ஒற்றி எடுத்தான்.
இவன் செய்யும் சித்து வேலை ஆருஷியின் அனைத்து உணர்ச்சிகளையும் தூண்டி விட்டது.
அவள் பெண்மை அவளை தடுக்க பார்த்தது.. ஆனால் முடியவில்லை.
அவள் கொஞ்சம் கொஞ்சமாக இவனின் ஸ்பரிசத்தில்.. முத்தத்தில் மயங்கிக் கொண்டு இருந்தாள். அவள் இடுப்பை வருடி கொண்டே மெல்ல தனது கைகளை உயர்த்தி அவளது பெரிய வயிற்றை தொட்டுப் பார்த்தான்.
அவள் கழுத்தில் தனது மீசையால் கோலம் இட்டுக் கொண்டே “ப்ளீஸ் டி பாப்பா..! ஒரு தடவ நான் பாக்கணும் என் பாப்பாக்கள எனக்கு காட்டுடி..!” என்றவன் கெஞ்சி கொஞ்சி கொஞ்சி கேட்டதும் ஏனோ இம்முறை அவளால் மறுக்க முடியவில்லை.
ம்ம்ம் என்றவள் அவன் முன் திரும்பி நிற்க..
நம்ப முடியாமல் அவளை பார்த்தவனுக்கோ அத்தனை ஆனந்தம்..!
அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வு..!
மெல்ல அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் காலை எடுத்து தன் தொடை மீது வைத்து அதற்கு குனிந்து தன் முத்தத்தை கொடுத்தான்.
இது ஒரு மாதிரி மன்னிப்பு கேட்கும் படலம்..!
அவளோ அமைதியாக அவனை பார்த்திருந்தாள்.
மெல்ல முந்தானையை விலக்கி அவள் காட்ட.. அழகான நாபி குழி..! அந்த நாபியைச் சுற்றிலும் வயிறு மேடிட்டிருக்க.. ஒருவித பளபளப்பைக் காட்டும் அவளின் ஓரங்களில் மெல்லிசான பூனை முடிகள் மினுக்கிக் கொண்டிருந்தது..!
கர்ப்ப காலத்தால் தோன்றும் அந்த நெடுங் கோடும்.. சிறு சிறு விரி கோடுகளும் அவனுக்கு அத்துணை பேரழகாய் தெரிந்தது. அவனை அதனை மெதுவாக வருட..
“எப்படி இருக்கு? அசிங்கமா இருக்கா.. இந்த கோடும்.. அந்த வரி கோடுகளும்? பயங்கரமா இருக்கு தானே? அருவருப்பான இருக்கு தானே? பார்க்கவே பிடிக்கல தானே?
எனக் கேட்டவளோ
அவன் மேல் இருந்த பார்வையை மாற்றவில்லை.
அவள் பார்வையில் இருக்கும் வீச்சு இராவண்னை ஏதோ செய்தது..!!
” யாரு சொன்னது இது அசிங்கம் அருவருப்புனு.. செம்ம அழகு டி பாப்பா..! தாய்மையின் அழகு” முனகினான்.
தன் மனதில் உருவான தவிப்பை மறைக்க அவன் மிகவும் சிரமப்பட்டான். தாய்மை எவ்வளவு அழகு..! அதை விட எவ்வளவு உயர்வு..!
‘இவளை நான் என்னென்ன வார்த்தைகள் கூறி நோகடித்தேன்?’ என்று வருந்தியவனால் அவள் கண்களை அவனால் நேராகப் பார்க்க முடியாமல் மீ
ண்டும் அவள் வயிற்றைப் பார்த்தான்..!!
நடுங்கும் விரல்களால் அந்த வரி கோடுகளை வருடினான்..!
வருவான் அசுரன்...
