அசுரன் 2
“இந்த ஹாஸ்பிடலுக்கு மட்டும் அல்ல உனக்கும் நான் தான் பாஸ்..! என்னை வெளியில் போக சொல்வாயா நீ?” என்று கண்களில் சற்றேறிய திமிரோடு உடல் மொழியில் மிடுக்கோடு ஆனாலும் பெண்மையின் நளினத்தோடும் தன் முன்னே நின்று கேட்டவளை அலட்சியமாக பார்த்தன ராவணின் ஹாசல் விழிகள்.
அந்த ஹாசல் விழிகளின் ஹாசியத்தில் பெண்ணவளின் கூர் விழிகள் சற்றே தடுமாறின. ஆனாலும் நொடிக்கு குறைவான நேரத்தில் அதனை மறைத்தவள் தன்னை நிதானப்படுத்தி, மூச்சை சீர்படுத்தி அவன் முன்னே முறைத்துக் கொண்டு நிற்க..
அவனது ஹாசல் விழிகளோ அவளது ஒவ்வொரு நொடி நேர அசைவுகளையும் துல்லியமாக ஒளிப்பதிவு செய்தன..!
ஆருஷியின் பக்கமாக நின்றிருந்த மீராவோ கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள், இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு..!
“சிஸ்டர்…!” என்று அழுத்தமாக மீராவை அழைத்தான் ராவண்.
“எஸ் டாக்டர்..!” என்றவளிடம், அவன் கண்களை காட்ட அவள் அமைதியாக வெளியேறி சென்றாள்.
“சோ.. மிஸ்..” என்று தன் இருக்கையில் சாய்ந்தப்படி அவளை பார்க்க அவளோ “ஐ அம் ஆருஷி வள்ளியம்மை.! டைரக்டர் ஆஃப் த ஹாஸ்பிட்டல்” என்றாள்.
“ஓ ஆருஷி வள்ளியம்மை.. நாட் பேட்..! நீங்க டைரக்ட் கிடையாது ஒன் ஆப் தி டைரக்டர் தட்ஸ் ஆல். மோர் ஓவர் டைரக்டரே ஆனாலும் என் அறைக்கு வரும்போது என்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் வரணும்” என்றான். இன்னும் அந்த சாய்வு இருக்கையில் நன்றாக அமர்ந்து அரை வட்டம் மெல்ல அடித்தபடி..!
“ஹ..” என்று அலட்சியமாக அவன் பக்கம் கையை அசைத்தவள், “இப்ப நெனச்சா கூட இந்த நிமிஷமே உன்னை நான் ஃபயர் பண்ண முடியும்.!” என்றவளின் கண்கள் ஏதோ ஆண்டாண்டு காலமாய் தன் எதிரியை கண்டது போல அத்தனை பழி வெறியில் மின்னியது.
“கோ ஹட்..!” என்று தோளை குலுக்கிய ராவண் சற்றும் அசராமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
“ஹலோ.. எங்க இருக்க? சீக்கிரம் ஐவிஎஃப் செக்சன் வா” என்று அவள் ஃபோனில் அழைத்து முடித்த இரண்டாவது நிமிடம் அங்கே வந்து நின்றிருந்தான் சுக்ரேஷ்.
“ஓஹ்.. பாடிகார்ட்..?? பட் பாடி அந்த அளவு ஸ்ட்ராங் இல்ல. நல்ல மசில்ஸ் உள்ள ஒருத்தரை பாடிகார்டா வச்சுக்கோங்க மிஸ். இட்ஸ் மை கைண்ட் சஜஸ்ஷன்..!” என்றான் அலட்டாமல் ராவண்.
“ஹே.. மைண்ட் யுவர் டங்க்..!” என்று கோபமிக கூறியவள், சுக்ரேஷை பார்த்து “கூடவே வரமாட்டியா? எங்க போய் தொலைஞ்ச?” என்று அடிகுரலில் கேட்டாள்.
“என்ன ஆருஷி.. என்ன ஆச்சு? எதுக்கு உடனே இந்த டிபார்ட்மெண்ட்க்கு வர சொன்ன? இன்னைக்கு வொர்க் நமக்கு பீடியாட்ரிக் ஷெக்சன்ல தானே?” என்றான் ஏதோ பள்ளி குழந்தைக்கு சொல்லி கொடுப்பதை போல..
“காட்..!! ஃபர்ஸ்ட் இப்படி பேசுறத நிறுத்து. எங்க இருக்கோம் என்னன்னு.. நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சுட்டு அப்புறம் பேசு சுக்ரேஷ்..!” என்று பல்லைக் கடித்தப்படி மெதுவாக அவள் திட்ட..
இவனும் என்ன ஆச்சு என்பது போல அங்கே பார்க்க, எதிரே அமர்ந்திருந்த ராவண்-ஐ பார்த்து நெற்றி சுருக்கினான்.
“இந்த ஆள இந்த நிமிஷமே வேலையை விட்டு தூக்கணும்..! முடியுமா? முடியாதா?” என்றப்படி ராவண் பக்கம் அவளின் ஆள்காட்டி விரல் நீட்டப்பட்டிருக்க..
ராவண் கூர்மையாக அவளின் தளிர் விரலை பார்த்தான். அதில் ஒரு சுவாரஸ்யம் வேறு..!
“என்ன ஆச்சு? ஏன் திடீர்னு இப்படி எல்லாம் பேசுற நீ?” என்று பதறினான்.
சுக்ரேஷ்க்கு இங்கே புதிதாக ஐவிஎஃப் டிபார்ட்மென்ட் வந்திருப்பது தெரியும்.
அதற்காக கிரிதரன் ரொம்ப சிரமப்பட்டு ஆட்களை கொண்டு வெளிநாட்டிலிருந்து மருத்துவரை வரவழைத்ததும் தெரியும். இங்கு வந்ததுமே கணித்து விட்டான் ராவண்தான் அந்த மருத்துவன் என்று. ஆருஷியின் இந்த கேள்வியில் கதி கலங்கிப் போய் தான் பார்த்தான் அவளையும் ராவண்னையும்..!
“நான் சொன்னதை செய்ய முடியுமா முடியாதா? அதை மட்டும் முதலில் சொல்லு. டோன்ட் டாக் அன்னெஸ்ஸரி..!” என்றாள் கண்களை சுருக்கி எதிரே நின்ற சுக்ரேஷை கோபமாக பார்த்து..
“பப்பு காம் டவுன்..! ப்ளீஸ் வெளியே வா பேசிக்கலாம்” என்று சுக்ரேஷ் அவளை சமாதானப்படுத்த..
சட்டென்று ஒரு சிரிப்பு சத்தம் அந்த அறையை அதிர வைக்க.. திரும்பி பார்த்தார்கள் இருவரும். வேறு யாரு? ராவண் தான்..!
அதுவும் தாடையில் கைவைத்து ஹாசல் விழிகள் மின்ன அவன் சிரிப்பதை சிறு பிள்ளை பஞ்சுமிட்டாயை பார்ப்பது போல பார்த்தான் சுக்ரேஷ்.
“பப்புவா? நீயா?” என்று அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தான் ராவண்.
ராவண் தன்னை கிண்டல் செய்கிறான் என்று புரிந்து இப்பொழுது முறைக்கும் பார்வையை சுக்ரேஷ் புறம் திருப்பினாள் பாவை.
“சாரி.. பப்பு..!” என்று மெல்ல இதழசைத்தவனை கண்டு அவள் பற்களை நறநறவென்று கடித்தாள்.
அடுத்த வினாடி புயல் போல சர்ரென்று அதி வேகத்தோடு அவளை நெருங்கிய ராவண் இன்னும் அவன் புறம் நீட்டியிருந்த அந்த ஆள்காட்டி விரலோடு தன் விரலை கோர்த்து அதனை பற்றி சுற்றி சுழல விட.. அவளோ நிலைக்குலைந்து போய் நிற்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி நின்றாள்.
“இந்த விரல் நீட்டி பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க கூடாது இந்த தடவ ஏதோ போனா போகுதுனு மன்னிக்குறேன்.. சின்ன பாப்பாவாச்சேனு விடுறேன். அடுத்த தடவை.. ம்ஹீம்..” இடவலமாக தலையாட்டியவன் திரும்பி சுக்ரேஷை பார்த்து,
“நீ படிச்சவன் தானே.! அவளுக்கு தான் அறிவு இல்ல. உனக்கு கூடவா அறிவு இல்லை? இப்படி தான் என்னோட பர்மிஷன் இல்லாம என் கேபின்குள்ள வந்து என் டியூட்டி டைமில் நின்னுட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பீங்களா ரெண்டு பேரும்? கெட் அவுட் ஆஃப் யூ போத்..!” என்று அடிக் குரலில் சீறியவனை கண்ட சுக்ரேஷ் ஆடிப் போய்,
“எஸ் டாக்டர்.. சாரி டாக்டர்..! இதோட டாக்டர்.. கிளம்பிட்டோம் டாக்டர்..!” என்று ஆருஷியையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
“ஹே.. விடு டா..” என்று அவனிடம் எரிந்து விழுந்தவள், திரும்பி ராவண்-ஐ பார்வையால் எரித்துக் கொண்டு அறையை விட்டு அவள் செல்ல.. அவனோ இரு விரல்களை ஆட்டி “பை பப்பு..!” என்று மெல்ல இதழ் அசைத்தான்.
அதே கடுப்போடு சுக்ரேஷை பார்த்தவள், “நீ எல்லாம் ஒரு அத்தை பையன் டா? நீ எல்லாம் ஒரு பெஸ்ட்டியாடா? அந்த ஆள வேலையை விட்டு தூக்குறத விட்டுட்டு திருக்கு புருக்குன்னு முழிச்சிட்டு இருக்க?” என்று தன் அத்தை மகனான சுக்ரேஷிடம் எரிந்து விழுந்தாள் ஆருஷி
“ஹைய்யோ ஆருஷி..! இப்படியெல்லாம் நினைச்ச நேரம் அவரை தூக்கிட முடியாது. இது என்ன ராஜாக்கள் காலமா? அப்போதே விசாரிச்சு அப்போதே தீர்ப்பு சொல்லி அப்போதே எல்லாத்தையும் முடிச்சு வைக்க..! ஜனநாயகம் மா ஜனநாயகம்..! அதுலயும் கார்ப்பரேட் கலாச்சாரம் தலைய விரித்து ஆடிட்டியிருக்கிற நேரம்..! எதையுமே பார்த்து பதமா தான் ஹேண்டில் பண்ணனும். அதான் சொல்றேன் மேனேஜ்மென்ட் நம்ம பாக்கணும்னா முதல் தகுதியே ஆளு எப்படின்னு நம்ம எதிரொளியை கணிக்காமல் நாம முடிவு எடுத்திட கூடாது. அதுலேயும் அவசரமே கூடாது..! நம்மளுடைய கோபத்தையோ பதட்டத்தையோ நம் எதிரே இருப்பவரிடம் காட்டவே கூடாது..!” என்று அவன் க்ளாஸ் எடுக்க,
காதை குடைந்து கொண்டவள் “அட்லீஸ்ட் அவன் முன்னாடி என் பேச்சை கேட்கிற மாதிரி ஓகே னாவது சொல்லி இருக்கலாம் இல்ல நீ? ஐ அம் ஹைலி டிஸ்ப்பாயிண்ட்டட்..!” என்றவள் விடுவிடுவென்று வேகமாக தன் ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப சென்று விட, இவன்தான் பின்னோடு “ஆருஷி.. ஆருஷி..!” என்று கத்திக்கொண்டே சென்றான்.
ஆருஷி வள்ளியம்மை..! மீனாட்சி மருத்துவமனை டைரக்டர் கிரிதரன் மனைவியின் அண்ணன் பெண். சுக்ரேஷ் கிரிதரனின் ஒற்றை தவப்புதல்வன்.
ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்க வேண்டி லண்டன் சென்றவள் கடந்த வாரம் தான் வந்திருந்தாள்.
ஆருஷிக்கு வால் பிடித்தபடி அவள் செல்லும் இடங்களுக்கு கூடவே அலைந்து கொண்டிருந்தான் சுக்ரேஷ். இதில் அவளுக்கு மேனேஜ்மென்ட் பாடம் எடுக்கிறேன் என்று அவன் சொன்னாலும் வெகுதடவை அவள் தான் அவனை திருத்திக் கொண்டிருந்தாள்.
அவன் ஏதாவது தவறாக சொல்லி அதை அவள் திருத்தினால்.. ஆச்சரிய பாவனையில்,
“ஓஹ்.. இப்போ இப்படி அப்டேட் பண்ணிட்டாங்க போல.. நான் படித்து முடித்து 5 இயர்ஸ் ஆகுது இல்ல. இப்ப நீ ரீசண்டா முடிச்சிருக்க தானே? அதனால உனக்கு லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சிருக்கு..!” என்று ஆட தெரியாதவன் மேடை கோணல் என்பது போல தான் சொல்லி விட்டு செல்வான் அவன்.
“இவனை எல்லாம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு கூடவே வைத்து சுற்றிக் கொண்டிருந்தாள். கடந்த ஒரு வாரமாக..
ஆனால்.. வேலை என்று கொடுத்தால் அதனை பர்ஃபெக்டாக செய்து முடித்து விடுவான் சுக்ரேஷ். அந்த வகையில் கெட்டிக்காரன் தான்..!
எப்பொழுதும் போல மருத்துவமனைக்கு வந்து சில கோப்புகளை பார்வையிட்டுவிட்டு அதன் பின் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக ரவுண்ட்ஸ் சென்று விடுவாள் ஆருஷி. கூடவே சுக்ரேஷூம் அவளுடன். முழு நேரம் அவள் கூடவே வருவான். இருவரும் சில சமயம் ராவண் கண்களில் படும் போது, இவர்களை பார்த்து அவன் ஹாசல் விழிகளின் நக்கல் பார்வையிலும் இகழ்ச்சியான உதட்டு வளைவிலும் இவள் தான் கடுகடுத்து போவாள்.
அப்போதிருந்து சுக்ரேஷை தன்னோடு ரவுண்ட் செல்லும் போது அழைத்துப் போவதில்லை ஆருஷி.
அது என்னவோ அவனது ஐவிஎஃப் டிப்பாட்மெண்ட்டை கண்டால் மட்டும் அவளுக்கு அத்தனை ஆத்திரம் வரும். குறிப்பாக இராவண் திரேந்திரன் மாறவேலை பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வரும்.
அன்று அதுபோல அவள் பார்வையிட்டு கொண்டு வரும்போது வழக்கத்திற்கு மாறாக நிறைய பெண்கள் அங்கு கூட்டமாக நின்று இருந்தனர்.
வழக்கமாக மகப்பேறு மருத்துவர்களான சாருபாலா மற்றும் விஜிதா கேன்பின்களுக்கு முன்னால் தான் நிறைய கர்ப்பிணிப் பெண்கள் நிற்பார்கள்.
ஐவிஎஃப் என்பது மிக நுட்பமான பிரிவு. அதே நேரம் அதிக செலவு வைக்கும் பிரிவு. ஆதலால் அங்கே மிக சொற்பமாகவே வருவார்கள்.
“என்னடா இவ்வளவு பேரு நிக்கிறாங்க? வாட் ஹேப்பண்ட்?” என்று யோசித்தவள், அருகில் இருந்த சிஸ்டரை அழைத்து “சிஸ்டர் என்ன நடக்குது இங்க? ஏன் இவ்ளோ லேடீஸ் கூட்டமா நின்னுட்டு இருக்காங்க.. அரேஞ்ச்மென்டே சரியில்லாம இப்படி கொச கொசன்னு எல்லாரும் பேசிட்டு நிக்கிறாங்க..!” என்று கேட்டாள்.
கேட்டது வேற யாரிடம் இல்லை, ராவணின் பிரத்தியேக செவிலியர் மீராவிடம் தான்.
“அதுவா மேடம்.. எங்க சார் ஒரு பெரிய கேம்ப் நடத்திட்டு இருக்காங்க. அதுக்கு தான் இவ்வளவு கூட்டம் வந்துருக்காங்க..” என்றாள் பெருமையாக..
இந்த பத்து நாட்களில் ராவண் கூட பழகியதில் அவனைப் பற்றிய பிரமிப்பு அதிகம் மீராவிற்கு. யாரிடமாவது அவனைப் பற்றி தானாகவே பேசிக்கொண்டே இருப்பாள். அதுவும் பேசும்போது அவள் கண்களும் முகமும் அத்தனை மின்னும்.
அதுக்கு எதிர்மாறாக முகம் கசங்க மீரா பேசுவதை அசூசையோடு பார்த்த ஆருஷி.. “உங்க டாக்டர் கேம்ப் நடத்துனா முன்னாடியே மேனேஜ்மெண்ட் கிட்ட இன்பார்ம் பண்ணனும். ஏதும் இன்பார்ம் பண்ணாரா? அப்படியே கேம்ப் ஆர்கனைஸ் பண்ணாலும் இப்படியா திருவிழா கூட்டத்தில் பொங்கல் வாங்கி திங்கற மாதிரியா கூட்டத்த வைச்சிக்கிறது?” என்று இகழ்வாக கேட்டாள்.
பெண்கள் கூட்டம் நிறைய வந்திருந்தது. அதிலும் அந்த பிரிவில் இருந்த சிறு நாற்காலிகளிலும் பல பெண்கள் அமைந்திருக்க, மற்றவர்களெல்லாம் சற்று தள்ளி கூட்டம் கூட்டமாக தான் நின்றிருந்தனர். இதற்கென்று பிரத்தியேகமாக காயத்ரியிடம் கூறி இன்னும் இரண்டு செவிலியரை வரவழைத்திருந்தான் ராவண்.
ஓரளவு எல்லாரும் நாகரீகம் தெரிந்தவர்கள் தான். மருத்துவமனையின் அமைதி காத்து இருக்க வேண்டும் என்று புரிந்தவர்கள் தான். ஆனால் குசுகுசு பேச்சுவோடு பெண்கள் நின்றிருக்க.. அது என்னவோ இந்த லண்டன் சென்று படித்து வந்த அம்மணிக்கு பெரும் அநாகரிகமாக தோன்றியது. அவர்களின் நடத்தையை கண்டு முகத்தை சுழித்தாள்
பெரும்பாலும் அப்படி நினைப்பவள் இல்லை ஆருஷி. ஏனோ இந்த டிபார்ட்மெண்டும் அதன் தலைவன் ராவணை கண்டால் மட்டும் அப்படி ஒரு வெறுப்பு மண்டி கொண்டு வருகிறது அவளிடம்.
“கேம்ப் எல்லாம் ஓகே.. பட் உங்க டாக்டருக்கு இதெல்லாம் ஒழுங்கா ஹேண்டில் பண்ண தெரியலையே?” என்று இன்னும் நக்கலாக கூறிய ஆருஷியை முறைப்பாக பார்த்தாள் மீரா.
ஆருஷி அங்கே ஒன் ஆப் தி டைரக்டராக இல்லை என்றால் அங்கேயே குடுமியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி இருப்பாள், ராவணின் அகில உலக ரசிகை மன்றத்தின் தலைவி மீரா..!
ஆனாலும் அதை அப்படியே விட்டு விடவும் அவளுக்கு மனதில்லை. “மேடம் சும்மா நீங்க இஷ்டத்துக்கு எதுவும் பேசாதீங்க.. இங்க என்ன கேம்ப் நடக்குதுனு உங்களுக்கு தெரியுமா? 30 வயது அதுக்கு மேல உள்ள பொண்ணுங்களுக்கு மார்பக புற்றுநோய் சீக்கிரமா வருது. அதற்காக ஃப்ரீ கேம்ப் தான் இங்கு நடக்குது. எத்தனையோ பெண்கள் கூச்ச சுபாவத்தால இந்த டெஸ்ட்க்கு வர மாட்டேங்கிறாங்க. எங்க டாக்டர் எவ்ளோ கஷ்டப்பட்டு கேம்ப் அரேஞ்ச் பண்ணி.. கேன்வாஸ் பண்ணி.. கொண்டு வந்திருக்காங்க தெரியுமா? நீங்க இவ்ளோ அலட்சியமா பேசுறீங்க?” என்று சற்று சூடாகவே கேட்டதும் சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏறியது ஆருஷிக்கு.
“இடியட்..! ஆப்டர்ஆல் இந்த ஹாஸ்பிடல வேலை பார்க்கிற எம்ப்ளாயி நீ என் கிட்ட அதிகாரமா பேசுற.. ஹௌ டேர் யூ..???” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு ஆருஷி சீற..
அப்பொழுதுதான் தன் நிலைமையை உணர்ந்த மீரா நாக்கை கடித்துக் கொண்டாள். ‘அய்யய்யோ.. நம்ம சார பேசுறாங்கன்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடோமோ? மண்டு.. மண்டு..!’ என்று தனக்கு தானே கொட்டிக் கொண்டவள்,
“சாரி.. சாரி.. மேடம். உங்களை எதிர்த்து பேசணும்னு பேசல.. இந்த கேம்ப்புக்காக நாங்க நிறையவே உழைச்சிருக்கோம். நிறைய ஃபீல்டு ஒர்க் பண்ணி இருக்கோம். கூட்டத்தை பார்த்து திருவிழா கூட்டம் சொன்னது என்னால தாங்கிக்க முடியல.. வெரி சாரி மேடம்” என்று ‘இதுவே எப்படி நீங்க என் டாக்டரை பற்றி பேசலாம்?’ என்று வாய் துடுக்காக ஒரு வார்த்தை வந்து விழுந்து இருந்தாலும் அடுத்த நொடி ஆருஷியின் கண்களில் இருந்து வரும் நெருப்பு மீராவை ஃபயர் பண்ணி இருக்கும்.
சற்றென்று சரணாகதி ஆகி விட்டாள் மீரா. மத்திய குடும்பத்தை சேர்ந்த பெண்ணான மீராவுக்கு இந்த சம்பளம் எத்தனை உதவி புரியும் என்று நன்றாகவே தெரியும்.
பாவம் போல முகத்தை வைத்து மன்னிப்பு கேட்கும் மீராவை தண்டிக்க விரும்பவில்லை ஆருஷி.
ஆனால்.. அப்படியே விடவும் முடியவில்லை.
‘அவன்கிட்ட வேலை பாக்குற பொண்ண கூட அவன மாதிரியே திமிரு புடிச்சவளா இருக்கா’ என்று மனதில் நினைத்தவள் அதை நேரடியாகவும் சொல்லிவிட்டாள்.
“நீங்கள் டாக்டர் ராவண் திரேந்திரன் மாறவேல் கிட்ட வேலை பார்த்தால்.. நீங்களே அவர் கிடையாது..!” என்ற வார்த்தைகளில்
“சாரி சாரி மேடம்.. நான் இன்டென்ஷனா எதுவும் பேசல.. எங்க டாக்டர் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கேம்ப்ப அரேஞ்ச் பண்ணாங்க. நீங்க இப்படி பேசவும் என்ன மீறி ஒரு வருத்தத்துல.. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க மேடம்..” என்று பக்குவமாக வார்த்தைகளை கோர்த்து மீரா பேச…
“இந்த அம்மாவுக்கு அதெல்லாம் புரியாது சிஸ்டர்.. நீங்க போங்க..!” என்று அவளை தீயாய் முறைத்துக் கொண்டே நெருங்கினான் ராவண்.
அவன் பார்வைக்கு கொஞ்சம் கூட பயப்படாமல்.. எதிர் பார்வை பார்த்தாள் ஆருஷி.
தொடரும்..