அத்தியாயம் 36
இராவண் திருரேந்திரன் மாறவேல்” என்று அந்த பெயர் வெகு அழுத்தமாக அழகப்பன் காதில் கேட்க.. அந்த மாறவேலில் அவரது யூகம் சரியோ என்பது போல அவனை ஒருவித நடுக்கத்தோடு பார்த்தார்.
அவர் கைகள் மெல்ல உயர்ந்து தள்ளாட்டத்தோடு அவனை சுட்டிக்காட்டி “நீ.. நீ..” என்றார்.
அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்படியும் இருக்குமோ? என்று அவரின் சந்தேகத்தை தன் பேரைச் சொல்லி அப்படித்தான் என்று உறுதிப்படுத்தியவனின் உறுதியில் அவர் திணறிப் போனார்.
“அத்தை போச்சு.. போச்சு..மாமா கண்டுபிடிச்சுட்டாங்க போல” என்று ரூபிணி வள்ளியம்மையின் காதை கடிக்க..
“கண்டுபிடிச்சா கண்டுபிடிக்கட்டும் ரூபி. மறைச்சு வைக்கிறதவிட அவருக்கு தெரியுறதே நல்லது. அதைவிட இத்தனை நாள் என்னை கட்டி வைச்சிருந்தார் இல்லையா? இனி அந்த கட்டு என்கிட்ட சட்டு போடாதுன்னு அவருக்கும் தெரியட்டும்” என்று கண்களில் ஒரு வித உறுதியோடு கணவனை பார்த்தவாறு நின்று இருந்தார் வள்ளியம்மை.
திரும்பி அவரை தீர்க்கமாக பார்த்தவனும் நான் இன்னாரின் பிள்ளை.. இன்னாரின் பேரன் என்றெல்லாம் கூறவில்லை.
அவனின் தீட்சண்யமான தீப்பார்வையே அவன் யாரென்று அவருக்கு புரிய வைப்பதாய்..!
“நீ.. நீ..”:என்று கைகள் நடுங்க தடுமாற்றத்தோடு ராவண்னின் கொழுந்து விட்டு எரியும் அந்த கண்களை பார்த்துக் கொண்டிருந்த அழகப்பனால் அதன் வீச்சை.. அந்த கோபக்கனலை.. அந்த நேர்மையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல் சட்டு என்று கைகள் துவள தொப்பென்று கையை கீழே போட்டுவரோ..
தன் பக்கத்து தைரியத்தை கூட்ட தனது சரிபாதியை “வள்ளி.. வள்ளி..” என்று மெல்ல முணகினார்.
“நான் இங்கதான் இருக்கேன்.!” என்று அழுத்தமாக உரைத்த
வள்ளியம்மையோ அவர் அருகே நெருங்காமல் தள்ளி நின்று அவரை பார்த்தார்.
வள்ளியம்மை முகத்தில் தெரிந்த ஒரு நிமிர்வு.. முடிவு எடுத்த ஸ்திரத்தன்மை.. உள்ளம் நடுங்க இதயம் பதைப்பதைக்க படுத்திருந்த அழகப்பனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
காரணம் அவர் உள்ளமும் உணர்வும் அற்றவர்..! வெறும் அறிவால் மட்டுமே மனிதர்களை எடை போடும் அறிவீலி..!
“வள்ளி.. இவன் இந்த டாக்டரு??” என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தடுமாறி திணறியவரின் அருகில் வந்தார்.
“ஏன் அவருக்கு என்ன? என்னைத்தான் பார்க்க வந்தார்?” என்று வள்ளியம்மையும் பதிலுரைக்க..
ரூபினி ஏற்கனவே சொன்ன மருத்துவனாக இவன் வள்ளியம்மையை பார்த்துக்கொண்டிருக்கிறான். உண்மையில் இவன் யாரென்று வள்ளிக்கு தெரியவில்லையா? அவன் பெயரை வைத்தே அவனை புரியவில்லையா? என்று வினோதமாக பார்த்தார் மனைவியை.
“ஏன் புரியாம? நல்லா புரியுமே..!” என்றார் வள்ளியம்மை. கணவனது முகத்தை வைத்து அகத்தை படித்தார்ஃ எத்தனை வருட தாம்பத்தியத்தில்..
“இவன் ராவண் திறேந்திரன் மாறவேல்..! சன் ஆப் சிவேந்திரன் மாறவேல்..! சன் ஆஃப் அழகப்பன் மாறவேல்..! இன்னும் தெளிவா சொன்னா.. என் சிவாவோட பையன் என் பேரு திரேந்திரா..”’என்று ஒவ்வொரு வார்த்தையாக கூறிக் கொண்டே மெல்ல கணவனிடமிருந்து விலகி இப்பொழுது ராவண்னை நெருங்கி இருந்தவர், கடைசியாக பேரன் என்ற போது அவனை தன்னோடு அணைத்துக் கொண்டு கூறினார்.
அதில் அத்தனை பெருமை ஆனந்தம் அவருக்கு.
அவனும் அவருக்கு எதுவும் பதில் கூறாமல் அமைதியாகவே நின்றிருந்தான்.
காரணம் வள்ளியம்மை பேச பேச கணவரிடம் இருந்து விலக விலக அழக்கப்பனுக்கு முகத்தில் கோபமும் வருத்தமும் இந்நிலையில் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையும் பெருகி வழிந்தது.
“இது இது தானே வேணும்..! இன்னைக்கு இவர் ஒரு செத்த பாம்பு. செத்த பாம்பை அடிப்பதனால் எனக்கு என்ன பயன்? ஒனீறிமில்லை.. ஆனால் இவரின் தேள் கொடுத்து வார்த்தைகளால் என் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள். அந்த வேதனை கொஞ்சம் கூட அனுபவிக்காமல் இவரை விட்டு விடுவதா என்ன? பாட்டனே ஆனாலும் தப்பு தப்பு தான்..! அதற்கு தண்டனை உண்டு தான்..! நியாயம் நியாயம் தான்..!” என்று முடிவெடுத்தவன்,
இப்பொழுது அவனும் ஆச்சியை நன்றாக அணைத்து “அப்படி சொல்லுங்க ஆச்சி..! உங்க சிவாவோட பையன் தான் நானு.. உங்களுடைய பேரன் தானு..!” என்று அவர் உயரத்திற்கு இவனும் குனிந்து தோளோடு அணைத்துக்கொள்ள.. அந்த காட்சியைக் காணக்கான பத்திக்கொண்டு வந்தது அழகப்பனுக்கு.
என்னதான் மகன் வயிற்று மகன் என்றாலும் அவருக்கு பிடிக்கவில்லை.
மகன் இவர்களுக்கு தெரியாமல் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டு ஒரு கட்டத்தில் பேரன் என்கிற நிலை வரும் பொழுது பிள்ளைகள் செய்த தவறை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்வது பெற்றோரின் இயல்பு..!
அப்படி அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஆடு பகை குட்டி உறவு என்பது போல பிள்ளைகளை ஒதுக்கி வைத்தவர்களால் பேரப்பிள்ளைகளை ஒதுக்கி வைக்க இயலாது.
ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காய் சில ஜீவன்களும் உண்டு அப்படிப்பட்ட ஒரு ஜீவன் தான் இந்த அழகப்பன் மாறவேல்..!
இப்போது கூட அவர் கண்ணில் பாசமோ பேரன் என்ற பந்தமோ அன்பு சுரக்கவில்லை. அவர் கண்களுக்கு இவன் சிவேந்திரன் மகனாக தெரியவில்லை. க்ளோரியாவின் மகனாக தான் தெரிந்தான்.
அந்தக் கடுப்பில் “போடா..போ இங்கிருந்து போ.. இது என் வீடு..! போடா போ..!” என்று அவர் கத்த..
அதை துளி கூட காதல் வாங்கிக் கொள்ளாமல் “நான் போறதா? என்று சிரித்தவன்,
“நெவர் எவர்..!” என்று கர்ஜித்தவன், “என் ஜாகையை இங்க.. இந்த வீட்டுல மாத்தி ரொம்ப நாளாச்சு பாட்டனாரே..! இனி இங்கதான் இருப்பேன். அப்புறம் சட்டம் என்ன சொல்லுதுன்னா தாத்தா சொத்து பேரனுக்காம். உங்களோட ஒரே பேரன் நான் தான். அப்போ எல்லா சொத்தும் எனக்கு தானே? என்ன வீட்டை விட்டு விட்டு போக சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை..” என்று ஆளுமையாக பேசியவனின் பேச்சில் அதிர்ந்து போனார் அழகப்பன்.
“உனக்கீ இல்லாம வேற யாருக்கு கண்ணு?” என்றார் வள்ளியம்மை
“ஆச்சி மதியத்துக்கு சமைக்கும் போது என்கிட்ட கேட்டுட்டு சமைங்க எனக்கு புடிச்ச டிஷ்ஸஸ் மட்டும் செய்யுங்க சரியா?” என்று ஆட்சியின் தாடையைப் பற்றி அவர் அன்போடு கூற.. வள்ளியமைக்கு சொர்க்கமே தன் கையில் வந்து கிடைத்தது போல அத்தனை பேர் உவகை கொண்டார்.
கணவனுக்காக தான் தன்னிடம் எப்படி பேசுகிறான் என்று புரிந்தாலும் இந்த நிமிடம் எதையும் யோசிக்காமல் இந்த நொடியை அனுபவித்து..
‘இதுவரை பேரன் ஒரு வாய் வார்த்தை பேச மாட்டானா? அன்பாக பார்க்க மாட்டானா? எனக்கு இது வேண்டும் ஆச்சி னு உரிமையாக கேட்டு விடமாட்டானா?’ என்று இவர் இங்கே தவம் கிடக்க அந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் அவன் பேசி விட்டு சென்றதும் ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வழி நின்ற வள்ளியம்மையின் தோளை தொட்டார் ரூபிணி.
“என்னத்த செதுக்கி வச்ச சிலை மாதிரி நிக்கிறீங்க? போங்க போங்க.. உங்க பேரர் ஆர்டர் போட்டுட்டாருல்ல.. அதெல்லாம் செஞ்சு ரெடி பண்ணுங்க” என்றார்.
”இதோ இப்பவே கிச்சனுக்கு போறேன்” என்றவர் விரும்பினியிடம் என்னென்ன பலகாரம் செய்யலாமா என்று விவாதித்தார்.
தான் ஒருத்தன் இங்கு இருக்கிறேன் என்னை கண்டு கொள்ளாமல் இவர்கள் மட்டுமே முடிவு எடுக்கிறார்களே? அப்பொழுது நான் யார் இந்த குடும்பத்திற்கு? என்று ஆத்திரம் மிக..
“ வள்ளி ஒழுங்கா அவன வீட்டை விட்டு வெளியே அனுப்பு பேரன் கீரனு வச்சு கொஞ்சகொண்டு இருந்தனா நடக்கிறதே வேற..!” என்று பேச முடியாத இந்த நேரத்தில் கூட அதட்டலாய் மொழிந்தவரின் பேச்சை கண்டு உதடு சுழித்தார் வள்ளியம்மை.
“நானே என் பேரன் எப்ப என்கிட்ட பேசுவான்? உங்களுக்கு பிடித்தது எப்ப செஞ்சு கொடுத்து ஆசையா பரிமாறலாம் எவ்வளவு ஏக்கத்தோடு இருந்தேன் தெரியுமா? இப்ப தான் அவனே எனக்கு இன்ன இன்னது இவ்வளவு வேணும்னு சொல்லி இருக்கான்.. உங்ககிட்ட நீனாநீயா பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை.. நான் அவனுக்கு புடிச்ச பதார்த்தங்களை செய்யப் போறேன்” என்று கிளம்பி விட்டார்.
“ஏய்.. வள்ளி.. வள்ளி நீ எனக்கு சத்தியம் செஞ்சு கொடுத்து இருக்க அதுவும் உன் புள்ள மேல சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கு.. நீ அவங்கள பார்க்க கூடாது பேசக்கூடாது.. முக்கியமாக என் வீட்டுக்குள் அவனை காலடி என்ன சுவாசமே படக்கூடாது..” என்று அந்த நிலையிலும் கோபமாக பேசியவரை கண்டு ‘நீ எல்லாம் எக்காலத்திலும் திருந்த மாட்ட யா!” என்று சமையலறைக்குள் சென்று விட்டார் வள்ளியம்மை.
ஒரு மிதப்பான பார்வையோடு ராவணனும் வள்ளியம்மை பின்னால் செல்ல இங்கே நின்றிருந்தால் தன்னை பிடித்து கடித்து விடுவாரோ என்று பயந்து ரோபி இனியும் ஓடி வந்து விட்டார்.
“இவனை எப்படியாவது இங்க இருந்து வெளியே துரத்தி விடணும் இவன் காத்து இங்க படக்கூடாது. நம்ம பேச்சாலே இவனை விரட்டிவிட வாய்ப்புகள் உண்டு” என்று யோசித்தவர், அவர் கையில் கிடைத்த டிரம்ப் காட் அவரது பேத்தி தான் இவனை துரத்தனும் என்று முடிவு எடுத்துக் கொண்டார்.
அந்தோ பாவம்..! மாலை போல பேரன் அவருக்கு வைத்திருக்கும் அதிர்ச்சியை எதிர்பார்க்காதது இப்பொழுது உறங்கினார்.
எந்த பேத்தியை வைத்து பேரனுக்கு ஒரு நயா பைசா கூட கொடுக்காமல் விரட்டி விட வேண்டும் என்று நினைத்தாரோ?? அதே பேத்தியோடு கைகோர்த்து தன் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு பெரும் சுனாமி வந்து தாக்கியது போல உணர்ந்தார் அழகப்பன்
.
அதிலும் பேத்தியின் சூழ் தாங்கி வயிற்றுப் பார்த்து மயக்கமே கொண்டார்.
வருவான் அசுரன்..
