அசுரன் 35

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 35

 

 

குளறலான குரலோடு “வள்ளி.. வள்ளி..” என்று அழைத்த அழகப்பன் மாறவேல் குரல் அந்த வீட்டின் அமைதியை கிழித்துக்கொண்டு அனைவர் காதிலும் ஒலித்தது..!

 

ரூபிணி “அத்த.. மாமா..” என்று சற்று அதிர்ச்சி நிறைந்த குரலில் வள்ளியம்மை புஜத்தைப் பிடித்துக் கொள்ள.. அவருமே யோசனையோடு ரூபிணியை பார்த்தார். அடுத்த நிமிடம் இருவரும் திகிலோடு திரும்பி தங்கள் எதிரே நின்றிருந்த இராவண்னை பார்த்தார்கள். 

 

அவன் கோபத்தையும் ரௌத்திரத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு உறுமும் வேங்கை என நின்றிருந்தான் தன் முழு உயரத்திற்கும்..!

 

“ஏன் டி ரூபி காலையில கொடுக்க வேண்டிய அந்த மருந்த கொடுக்கலையா? இந்நேரத்துக்கு இந்த மனுஷன் தூக்கத்துல தானே இருப்பாரு” என்று கேட்க..

 

“காலையில கொஞ்சமா சத்தமாவு கஞ்சிய கொடுத்துட்டு அதுக்கப்புறம் தானே மாத்திரையை கொடுப்போம் அத்த.. இந்த நேரம் தான் அது. இன்னைக்கு நேரம் தாண்டி போச்சு.. அதுவும் தம்பி வேற வேலைக்கு போல இல்லையா.. அதனால் நமக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. நான் போய் என்னன்னு பாக்குறேன்” என்று ரூபிணி வேகவேகமாக அழகப்பன் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

 

அதற்குள் வேலையாள் இந்நேரத்திற்கு அழகப்பன் மாறவேலுக்கு கொடுக்கும் கஞ்சியினை  பவ்யமாகக் கொண்டு வந்து ரூபிணியிடம் கொடுத்தார். 

 

ரூபிணியையும் அவள் கையில் இருந்த கஞ்சி கோப்பையையும் பார்த்து “உன் அத்த எங்க?” என்று குளறலாக கேட்டார் அழகப்பன்.

 

“அது அத்தைக்கு கொஞ்சம் மேல கூட முடியல..” என்றார் அவருக்கு சிறிது கஞ்சியை புகட்டிவிட்டபடியே..

 

வயதாகி இருந்தாலும்.. உடல் நலிவுற்று இருந்தாலும்.. இடுப்புக்கு கீழே அவருக்கு உறுப்புகள் வேலை செய்யவில்லை என்றாலும்.. அவர் கண்களில் இருந்த அந்த ஒளி இன்னும் குன்றா தன்மையோடு தான் இருந்தது.

 

‘நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், மயக்கத்தில் இருந்தாலும், உங்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்.!’ என்று அந்த பார்வை ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டே தான் இருந்தது. 

 

“இந்நேரத்துக்கு கிரிதரனும் சுக்ரேஷும் கடைக்கு போயிருப்பாங்களே? ஆனா.. ஏதோ ஒரு ஆம்பள குரல் கேக்குது?” என்று கேட்டவரை கண்டு இப்பொழுது நிஜத்துக்கும் ரூபிணிக்கு தூக்கி வாரி போட்டது. 

 

‘இந்த மனுஷன் இத்தனை பேரு ஆட்டி படைச்சதுல வியப்பே இல்ல இப்போ உடம்பு சரியாக இருந்தாலும் கூட ராவண் தம்பி வாய்ஸ கரெக்டா கேட்ச் புடிச்சிட்டாரு பாரேன்.. பெருசுக்கு காது ரொம்ப தெளிவா இருக்கு’ என்று யோசித்தவரை கண்டு ரூபி என்று அதட்டி அழைத்தார் அழகப்பன். 

 

‘இப்பொழுது என்ன சொல்வது? ராவண் இவர்களது பேரன் என்று சொல்வதா? இல்லை பேத்தியின் கணவன் என்று சொல்வதா?’ எதுவுமே தெளிவாக சற்று நேரம் குழம்பியவர்,

 

‘எதா இருந்தாலும் அவரவர் வந்து கொள்ளட்டும். இப்போதைக்கு நான் எதையும் சொல்லப்போவதில்லை’ என்ற முடிவெடுத்தவர், “அது ஒன்னு இல்ல மாமா அத்தைக்கு மேலுக்கு முடியலன்னு சொன்னேன் இல்லையா? அதான் நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து டாக்டர் ஒருத்தர் பாக்க வந்திருக்காரு. அவரு குரல் தான் உங்களுக்கு கேட்டிருக்கும்” என்றார். 

 

“நான் பொய்யும் சொல்லவில்லை அதே நேரத்தில் உண்மையையும் விளம்பவில்லை. இராவண் தம்பி மருத்துவன் தானே? அதுவும் நம்ம மருத்துவமனையில் தானே இருக்கிறாரு..” என்ற உண்மை மட்டும் கூறி தப்பித்துக் கொண்டார். 

 

“அப்படியா யாரு? புதுசா?” என்றதும் 

 

“இல்ல மாமா.. புதுசா எல்லாம் இல்ல. அவர் வேலை செய்து கிட்டத்தட்ட எட்டு இல்ல ஒன்பது மாசம் இருக்கும்” என்றார். 

 

“இப்போ ஞாபகம் வருது நம்ம ஐவிஎஃப் டிபார்ட்மெண்ட்க்கு

புதுசா வெளிநாட்டிலிருந்து டாக்டர் வேலைக்கு சேர்த்து இருக்கேன்னு  கிரி சொல்லியிருந்தான் அந்த டாக்டரா?” என்று அழகப்பன் ஆர்வமாக கேட்க..

 

“ஆமா மாமா.. அவரே தான்” என்றார் ரூபிணி.

 

அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு பாதி கஞ்சியை ஊட்டி முடித்திருந்தார். 

 

“உங்க அத்தைய அவரு பார்த்துட்டாருனா.. இங்க நான் ரூமுக்கு கூட்டிட்டு வா. நான் அவரை பாக்கணும்” என்றார்.

 

“எதே?” என்று தூக்கி வாரி போட்டது ரூபிணிக்கு. 

 

“டாக்டர பாக்கணும் தானே சொன்னேன். அதுக்கு ஏன் நீ இவ்வளவு ஷாக் ஆகுற? போ.. போ.. சொல்லிட்டு வா” என்றதும் இவருக்கும் கையில் இருந்த கஞ்சி கோப்பை கிடுகிடுவென்று பயத்தில் ஆடியது. 

 

“இப்ப என்ன சொல்லி நான் இவரை சமாதானப்படுத்த? உண்மையையும் என்னால சொல்ல முடியாது. இதை போய் அந்த தம்பி கிட்ட சொன்னா அவ்வளவுதான்.. இவரு குரலு கேட்டதுக்கே அய்யனார் கணக்கா வெறச்சிக்கிட்டு நின்னுச்சு அந்த தம்பி.. இதுல..  இவரு உன்னய பாக்கணும்னு சொன்னாருன்னு சொன்னா… அம்புட்டு தான்.. ஜோலி முடிஞ்சது” என்று புலம்பி கொண்டு இருந்தாலும்..

 

இவர்கள் இருவரும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்று அறிய ஒரு  பெரும் சுவாரசியம் அவருக்கு தோன்றாமல் இல்லை..!

 

“என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே..!” என்று நினைத்தவர்,

 

“இருங்க.. இருங்க மாமா. இந்தா சொல்லிட்டு வரேன்” என்று வெளியில் சற்று பதற்றத்தோடு வேகமாக வந்தார். 

 

அங்கே மெதுவான குரலில் வளைகாப்புக்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ராவண்னிடம் கேட்டுக் கொண்டிருந்த வள்ளியம்மை, “உங்க அம்மா நம்பர் தருவியா நான் அவங்ககிட்ட பேசுறேன்.. உங்க அம்மாவையும் கண்டிப்பா வளைகாப்புக்கு வர சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டிருக்க 

 

“அம்மா மேல் என்ன இந்த திடீர் பாசம்?” என்று அவனுக்கு தோன்றினாலும்,

 

‘கண்டிப்பாக அம்மா இங்கே வந்தால் என் மீது உள்ள கோபம் குறையும். அதே நேரம் ஆருஷியை கண்டு சந்தோஷப்படுவார்’ என்று நினைத்தவன் “பார்க்கலாம்” என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில்..

 

ரூபிணி “அய்யோ.. அத்தை..! கெட்டிச்சிக் குடி..!” என்றபடியே வந்து சேர்ந்தார். 

 

“என்ன ஆச்சு ரூபி.. ஏன் இவ்ளோ பதட்டமா வர! உங்க மாமாவுக்கு எதுவுமா?” என்று நடுக்கதோடு கேட்டார். என்ன இருந்தாலும் கணவன் என்று அவர் மனம் பதற..

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா நல்லாத்தான் இருக்காரு. என்ன இந்த வலி அப்பப்போ வந்து அவர் ஆட்டிப்படைக்குது. மத்தபடி பேச்சில் வலு குறையவே இல்லை.. மத்தப்படி இங்க நீங்க நானு தம்பி பேசினத கேட்டுட்டு இந்நேரத்துக்கு கிரியும் சுக்ரேஷூம் கடையில இருப்பாங்க இங்க எப்படி இன்னொரு ஆம்பள குரல் கேட்கிறதுனு ஆகரெக்டா கேட்கிறாருனா பாருங்க.. அந்த அளவுக்கு இன்னும் நுணுக்கமா எல்லாத்தையும் அவதானிக்கிறாரு மனுஷன்” என்று கண்ககளை விரித்து அவர் சொன்ன தினுசில் ராவண்னுக்கே இம்மி அளவு சிரிப்பு முகிழ்த்தது.

 

“ஆனாலும்.. இந்த  கிழவனுக்கு ஒரு பாடம் கற்பித்தால் தான் என்ன?” என்று அவனது உள் மனம் அவனை பிராண்டிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பையும் ரூபிணி கொடுத்தார். 

 

 

“சரி நீ என்ன சொல்லி சமாளிச்ச?” என்று ரூபிணியை விட அதிக பதட்டத்தோடு கேட்டார் வள்ளியம்மை. 

 

“அய்.. அய்.. நான் சொல்லி மாட்டிக்கவா? நான் வந்து உங்களுக்கு உடம்பு சரி இல்ல உங்கள பாக்க நம்ம ஹாஸ்பிடல இருந்து டாக்டர் வந்திருக்காருனு மட்டும் தான் பா சொன்னேன்” என்றார் கழுவுற மீனில் நழுவுற மீனாய்..!

 

“ரூபி..!” என்று சிரிப்போடு அவர் தோளில் தட்டிய வள்ளியம்ம “ஆக சமாளிச்சுட்ட அப்படித்தானே? ஆனாலும் உங்க தாத்தா கிட்ட சொல்லி தானே ஆகணும்?” என்று ராவணனை அவர் பார்க்க..

 

“அது உங்க விருப்பம்..!” என்று தோளை அசட்டையாக குலுக்கிய பேரனின் உருவத்தில் மகனை கண்டவர் “நீ வா.. அவர் என்னதான் செய்கிறாருனு பார்க்கலாம். சொல்லி விடுவதே உசிதம்” என்று முடிவு எடுத்தவர்,

 

“நான் போய் இத அவர்கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று முடிக்கும் முன் அவர் கைப்பற்றி தடுத்த ரூபிணி, “இவ்வளவு அவசரமா நீங்க போக வேணாம். புது டாக்டர் வந்த உடனேயே அவரை பார்க்கணும்னு சொல்லி உங்க பிராண நாதனே என்னை தூது விட்டு இருக்காரு..” என்றார் ரூபிணி.

 

“வாயாடி..” என்று அவள் கன்னத்தை தட்டிய வள்ளியம்மை இப்பொழுது பேரனை கெஞ்சலாய் பார்த்தார். 

 

அதில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டேன் என்று கெஞ்சல் இருந்தது. 

 

“அஃப்கோர்ஸ்..! கண்டிப்பாக போகலாம்” என்று ரூபிணியிடம் கூறியவன், “அந்த ரூம்தானே..!” என்ற முன்னால் நடக்க இவர்கள் இருவரும் அவன் பின்னே பதற்றத்தோடு ஓடினர். 

 

கூரிய பார்வையோடு கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தன் முழு உயரத்திற்கும் நின்று தன்னை பார்வையாலேயே அளந்து கொண்டிருக்கும் அந்த புதியவனை

தான்…

 

சற்று அதிர்ச்சியோடு..

பெரும் குழப்பத்தோடு..

கண்களில் கேள்வியோடு.. பார்த்திருந்தார் அழகப்பன் மாறவேல். 

 

அதற்குள் வள்ளியம்மை வந்துவிட “இவர்தான் உனக்கு பார்த்த டாக்டரா?” என்ற கணவனின் கேள்விக்கு,  

 

ஆமாம் என்று வேக வேகமாக தலையசைத்தார் வள்ளியம்மை.

 

அப்பொழுது ரூபினி “மாமா இன்னும் கொஞ்சம் இருக்கு சாப்பிட்டு முடிச்சிடுங்க” என்று கஞ்சி கோப்பை எடுத்து வர, 

 

“எனக்கு வேண்டாம்” என்று மறுத்தவர்,

 

“நீங்கதான் புதுசா சேர்ந்த டாக்டரா?” கேட்டதும் ஆம் என்று தலையை மட்டும் அசைத்தான் ராவண். 

 

வாயை திறந்து ஒற்றை வார்த்தை பேசவில்லை அவன். ஆனால் அவனின் கண்கள் அவரிடம் நிறைய செய்திகளை பேசின..! 

அவரை குற்றம் சாட்டின..!! 

அவர் மீது பழியை சுமத்தின..! கோபங்களை கொட்டின..!

 

“கிரி உங்ககிட்ட சில விஷயம் எல்லாம் பேசி இருப்பானே? இந்த சிசேரியன் பத்தி..” என்றதும் அவன் அமைதியாக அவர் முன் குனிந்து 

 

“செய்த பாவம் எல்லாம் போதவில்லையா மிஸ்டர் அழகப்பன் மாறவேல்..! இவ்வளவு பட்ட பின்னும், பெத்த பிள்ளைகளை கண்ணு முன்னே பறிகொடுத்த பின்னும்.  இன்னும் பணம் பண்ணனும் அலையுறீங்களே? பணம் பாதாள வரைக்கும் பாயும்னு சொல்றதெல்லாம் பொய்.. நம்மள பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் தான் மெய். இதோ எவ்வளவு பணம் இருந்தாலும் அனுபவிக்க முடியாமல் ஏன் சொந்தமா யூரின் கூட போக முடியாத நிலைக்கு உங்களை வைத்திருக்கிறது.. இதிலிருந்து தெரியலையா?” என்றவனை  அவர் பயந்து அவனை பார்க்க…

 

“இனியாவது திருந்துங்க..! செஞ்ச பாவத்துக்கு வருந்துங்க..!’ என்று வேகமாக அவன் வெளியே செல்ல முயல..

 

“நீ யாரு? என்ன உன் பேரு?” என்று ஏதோ தோன்ற மனதில் பெரும் புயல் அடிக்க.. ஆனால் வெளியே அமைதியை காட்டிக் கொண்டு கேட்டார் அழகப்பன் மாறவேல்..!

 

அவனும் மிகப் பொறுமையாக திரும்பி அவர் கண்களை நேராக பார்த்து “ஐ அம்

இராவண் திரேந்திரன் மாறவேல்” என்றான் அவன்,

 

சற்றே திமிரோடு..

அதி கர்வத்தோடு..

பெரும் நிமிர்வோடு..! 

 

வருவான் அசுரன்..!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top