அசுரன் 34

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 34

இவர்கள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரியாக சண்டையிட்டுக் கொள்வது மருத்துவமனையில் மட்டும் கிடையாது. வீட்டிலும் நடைபெறும் இயல்பாகான ஒன்றாகிப் போனது அதன் பின் வந்த நாட்களில்..!

 

வீட்டில் உள்ளவர்கள் பார்த்து கவலை கொண்டாலும், பிரிந்து இருப்பதற்கு இப்படி ஒன்றாகவே இருந்து சண்டை போட்டுக் கொள்ளட்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை அடுத்து வந்த நாட்களில்..!

 

அன்று காலையில் எழுந்த போதே மிக சோர்வாக உணர்ந்தாள் ஆருஷி. இராவண்னும் எழுப்பி பார்க்க..

 

“எனக்கு முடியல ஒரே டயர்டா இருக்கு. ஏன் டா போட்டு என்னை இப்படி படுத்துற ராட்சஸா.. டெய்லி ஹாஸ்பிடல் போணுமா என்ன? நீ போய் உன் வேலையை பாரு? என்னை ஏன்டா போட்டு நீ தொந்தரவு பண்ற? எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. நைட்டு எல்லாம் தூங்க முடியல தெரியுமா? இந்த பக்கம் திரும்புனா இங்கு ஒன்னு உதைக்குது.. அந்த பக்கம் திரும்பினா அங்க ஒன்னு உதைக்குது.. எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா நானு? நீ நல்ல கும்பகர்ணன் மாதிரி குறட்டை விட்டு தூங்கின தானே?” என்று அவள் பாட்டுக்கு பொரிய..

 

கர்ப்பகால நேரங்களில் ஏற்படும் இவ்வகையான ஹார்மோன்கள் சதிராடலும்.. அதனால் பெண்களின் மனதில் ஏற்படும் நிலையில்லா உணர்வுகளும் மாறி மாறி உணர்ச்சி வசப்படுதலும் இயற்கையே..!

 

இதை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் முதல் பிரசவத்தை அவள் தன் தாய் வீட்டில் தன் உணர்வுகளை புரிந்த சொந்தங்கள் இடையே இருந்து பிரசவித்து வரட்டும் என்று அந்நாளில் அனுப்பினார்களோ என்னவோ? 

 

அதன் பின் இரண்டாம் பிரசவம் காலத்திற்குள், கணவனுக்கு மனைவியையும்.. மனைவிக்கு கணவனையும் ஓரளவுக்கு புரிந்து கொண்டு விடுவார்கள். 

 

ஆம்.. ஓரளவுக்கு தான்..!

 

“என் மனைவியை முழுதாக புரிந்து கொண்டேன்” என்று எந்த கணவனும் மார்தட்டிக் கொண்டது கிடையாது..!

 

“என் கணவனை முழுவதுமாக நான் உணர்ந்து விட்டேன்” என்று பெண்களும் தங்களை சிறப்பாக சொல்லிக் கொண்டது கிடையாது இப்பூலகில்..!

 

“அவ அப்படித்தான்.. கத்திட்டு கிடப்பா”’என்று சலித்துக் கொள்ளும் கணவனும்..

 

“அவர் அப்படித்தான் எத சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டாரு.. தன் இஷ்டத்துக்கு தான் செய்வாரு” என்று அலுத்துக் கொள்ளும் மனைவியும்..

 

தான் ஆகச்சிறந்த தம்பதிகள்..!

 

ஆனால்… இங்கு கணவனே மருத்துவனாய் போக, அவளின் இந்த ஹார்மோன்களின் சதுராடலை புரிந்து கொண்டவனோ,

 

“சரி இப்ப என்ன? தூக்கம் வருதா தூங்கு.! நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல.. ஆனா பிரஷ் பண்ணிட்டு இந்த பால் மட்டும் குடிச்சிட்டு தூங்கு” என்று அவன் அறிவுரை கூற.. அவன் அறிவுரை எல்லாம் வேப்பங்காயை கசிந்தது மனைவி அவளுக்கு. 

 

“நானே டயர்டா இருக்கேன். தூக்கம் வருது. தூங்க போறேன்னு சொல்றேன். என்ன போய் ப்ரஷ் பண்ண சொல்ற.. பால குடிச்சிட்டு தூங்கு என்று சொல்ற? ப்ரஷ் பண்ணுனா பேஸ் வாஷ் பண்ணனும்.. அப்புறம் தூக்கம் எங்கிருந்து வரும்?” என்று அவள் சிடுசிடுக்க…

 

அவனோ சிரித்த முகமாக “உனக்கு பசிக்கலைன்னாலும் உன் வயித்துக்குள்ள உள்ள குட்டிங்களுக்கு பசிக்கும் இல்லையா பாப்பா? அதனால ஒரே ஒரு  டம்ளர் பால் மட்டும் குடிச்சிடுவியாம்” என்றான் கொஞ்சலாக..

 

ஏனோ காலையில் சோர்வாக இருந்த மனதுக்கு அவனின் கொஞ்சல் கொஞ்சமே கொஞ்சம் பிடித்ததுவோ.. அவளும் வேண்டா வெறுப்பாக எழுந்து பல் துலக்கி வந்தாள்.

 

முகம் துடைத்து வந்தவள் முன்  டம்ளர் பெரிய பால் கிளாசை அவன் நீண்ட.. அவனை அதிர்ந்து பார்த்தவள்,

 

“யோவ்.. இராவணா.. உன் நெஞ்சை தொட்டு சொல்.. இதுதான் உங்க ஊர்ல டம்ளரா? டமப்ளர முன்ன பின்ன பார்த்து இருக்கீங்களா ஆஃபிஸர் நீங்க?” என்றவள் கடுப்போடு கேட்க.. 

 

அவனோ அவள் இடுப்போடு அணைந்து கை போட்டவாறு “உள்ள ரெண்டு குட்டி இருக்காங்களே பாப்பா.. அவங்களுக்கும் கொஞ்சம் சத்துப் போனுமா இல்லையா? அதனால வம்பு பண்ணாம குடிச்சிடுடா செல்லம்..” என்று மெல்ல புகட்ட வர,

 

அவனிடம் இருந்து பிடுங்கி தானே அனைத்தையும் குடித்து முடித்தவள், “நானா எழுந்திருக்க வரைக்கும் டிஸ்டர்ப் பண்ணாதே மேன்.. நீ மொல ஹாஸ்பிடல் கிளம்பு” என்று படுத்துக் கொண்டாள் இறுகக் கண்களை மூடி…

 

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தான். அவனுக்கு அவளை நன்கு தெரியும் அல்லவா?

 

“தூங்காம.. சும்மா கண்ண மூடிட்டு படுத்து இருக்கா கொழுப்பு எடுத்தவ..” என்று திட்டி விட்டு கிளம்பி அவன் கீழே சென்றான்.

 

சிறிது நேரம் கண்களை மூடி அவன் அசைவுகளை அந்த அறையில் அவதானித்துக் கொண்டிருந்த அணங்கு அவளுக்கு அவனின் அசைவுகள் தெரியவில்லை என்றதும்.. மெல்ல கண்ணை திறந்து பார்க்க அவன் அறையிலேயே இல்லை..!

 

“இந்தா போய்ட்டான் இல்ல..! நான் உன்னை கேர் பண்ணிக்கிறேன். நான் உன்னை பார்த்துக்கிறேன். நான் உன்னை லவ்வுறேன்.. நான் உன்னை அப்படி கவனிச்சுக்குவேன் இப்படி கவனிச்சுக்குவேன்னு ஒரு நாளைக்கு 1000 முறை சொல்லுவான். இன்னைக்கு நான் ஹாஸ்பிடல் போக புடிக்கலைன்னு படுத்து இருந்தா.. இவனோ வேலை தான் முக்கியம்னு ஓடிட்டான். சுத்த வொர்க்ஹாலிக்..‌ போடா சுயநலவாதி போய் உன்னோட சேம்பரையும்..‌பேஷண்டிஸ்.. ஐவிஎஃப் டிபார்ட்மெண்ட்டையும் கட்டிக்கிட்டு அழு.. உன் கூடவே ஒருத்தி சுத்துவாளே அவ பேர் என்ன? ஹான் மீரா.. அவளையும் தான்..” என்று வெறுப்போடு கத்தி விட்டு திரும்பவும் படுத்துக் கொண்டவளுக்கோ கண்களை தூக்கம் எட்டவே இல்லை..!

 

ஆருஷி நினைத்தது போல இராவண் மருத்துவமனைக்கு கிளம்பி செல்லவே இல்லை. அவளை தனியே விட்டு செல்ல அவனுக்கு அத்தனை பயம். 

 

மருத்துவமனையில் அத்தனை மருத்துவர்கள் செவிலியர்கள் இருக்கும்போதே, அவளுக்கு பின்னே வால் போல காயத்ரியை அனுப்பி இருந்தவன் அவன்.

 

இப்பொழுது அவளை வீட்டில் விட்டு விட்டு எங்கனம் ஆணவணால் நிம்மதியாக வேலை செய்ய இயலும்?

 

இல்லை முழுமனதோடு நோயாளிகளை தான் பார்க்க முடியுமா?

 

₹முடியவே முடியாது..! சத்தியமாக இந்த ராட்சசியை விட்டுட்டு என்னால அங்கு இங்கு போகவே முடியாது..!” என்று தீர்மானம் கொண்டான் இராவணவன்..!

 

காலை உணவு உண்ண அவன் வர அங்கே இவனுக்காக காத்திருந்தார்கள் வள்ளியம்மையும் ரூபிணியும்.

 

இவர்கள் இருவரும் அமர்ந்திருப்பதை பார்த்து “நீங்க சாப்டாச்சா?” என்று பொதுவாக கேட்க..

 

ரூபிணி “ஆச்சு தம்பி.. உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கோம்” என்றவர் அவனுக்கு பரிமாற வர, கைநீட்டி தடுத்தவன்,

 

“நான் வந்த முதல் நாளே சொல்லிட்டேன் இல்லையா? எனக்கு தேவையானதை நான் பரிமாறிக்குவேன்” என்று எடுத்துக்கொண்டான்.

 

இருவரும் ஒருவரை ஒருவரை கண்களை காட்டி “நீ பேசு”  “நான் பேசு” என்று நயன பாஷையில் பேசிக் கொண்டிருக்க…

 

“எதுவா இருந்தாலும் தைரியமா என்கிட்ட நேரடியாகவே கேளுங்க.. நான் உங்க அழகப்பன் மாறவேல் போல எல்லாம் டெரர் இல்ல.. என்னை எங்கம்மா அப்பா நல்லா தான் வளரத்திருக்காங்க..” என்று சாப்பாட்டிலேயே கவனம் கொண்டவன் கூற..

 

‘எப்படி அவன் நம்மை கண்டு கொண்டான்?’ என்று இருவரும் ஒரு நிமிடம் திகைத்து, அதன் பின் வள்ளியம்மை ரூபிணியின் தோளை இடித்து “நீ சொல்லு ரூபி” என்றார் அழுத்தமாக..!

 

“அதில்ல தம்பி…”

 

“எது இல்ல? வாங்கி வரணுமா?” என்று அவன் கேட்டதும் ஙேன்று விழித்த ரூபிணி, “ஒன்னும் வாங்கி வர வேணாம் தம்பி. எல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்கு” என்றார்.

 

“தட் ஃபைன்” என்றவன் சாப்பிட்டு கை கழுவ செல்ல..

வள்ளியம்மை ரூபிணியை பார்த்து  தலையில் அடித்துக் கொள்ள..

 

“அது.. தம்பி.. நம்ம ஆறு பாப்பாக்கு 9 தொடங்கிடுச்சு இல்ல.. அதான் வளைகாப்பு பண்ணலாம்னு அத்தை ஆசைப்படுறாங்க” என்றார் அவன் பின்னே சென்று..

 

இருவரையும் திரும்பி பார்த்தவன் தோளை குலுக்கிக் கொண்டு “பண்ணலாமே.. ஆனா எவ்வளோ சீக்கிரம் பண்ண முடியுமோ பண்ணுங்க.. ஏன்னா.. அவளுக்கு எப்ப வேணாலும் பிரசவம் நடக்கலாம்” என்றவன் முகம் ஒரு கணம் வலியை சுமந்து செல்ல அதை அனுபவத்தஸ்தரான வள்ளியம்மை கண்டு கொண்டார். 

 

ரூபிணியோ பயந்து “ஏன் தம்பி.. மாசம் தப்பி போச்சா? இல்ல வேற எதுவுமா?” என்று அவர் பயத்தோடு கேட்க..

 

இவர்களிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தவன் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. அவளுக்கு ட்வின்ஸ் பேபீஸ்..” என்றதும் அவர் சந்தோஷத்தோடு 

 

“அத்த வாழ்த்துக்கள் உங்களுக்கு ரெண்டு கொள்ளு பேர பசங்க ஒரே நேரத்துல வர போறாங்க.. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா” என்று புன்னகைத்தார் ரூபிணி.

 

வள்ளியம்மைக்கு மனதில் சந்தோஷம்தான். ஆனாலும் பேரன் எதுவோ பேத்தியின் உடல் நிலையை மறைக்கிறான் என்று புரிந்தவர்,

 

“திரேந்திரா.. அவளுக்கு வேற ஏதாவது பிரச்சனைனாலும் எங்ககிட்ட மறைக்காமல் சொல்லு யா. நாளைக்கு நீ இல்லாத நேரம் அவளுக்கு ஒன்னுனா நாங்க என்ன பண்ணுவோம் சொல்லு?” என்றதும் அவன் நிமிர்ந்து அவரை தீர்க்கமாக பார்க்க..

 

“நான் அப்படி சொல்லல. உனக்கு ஆறு எவ்வளவு முக்கியம்னு நீங்க வந்து தங்கி இருக்கிறதிலேயே எங்களுக்கு புரியுது.  நீ வேலைக்கு போற நேரம்.. அப்படி சொல்ல வந்தேன்..” என்றதும் தலையாட்டி சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,

 

“அவளுக்கு கார்டு கம்ப்ரஷன்” என்றான் வலியோடு. 

 

அவனின் காதல் அன்பு நேசம் எல்லாம் அவர்களுக்கு நன்கு புரிவதாய்..! 

 

இந்த மருத்துவனின் மருத்துவ பெயரில் இருவரும் புரியாமல் வெறிக்க..

 

“கார்டு கம்ப்ரஸனா.. தொப்புள் கொடி சுத்துறது. எப்படி நடக்கும்னா..

வயித்துல தண்ணி கம்மியாகும் பேபிஸ் மூவ் பண்ண ஸ்பேஸ் கம்மி.. சோ.. கார்ட் ஈஸியா ப்ரஸ் ஆகிவிடும். பேபி மூவ்மெண்ட்ஸ் போது கார்டுக்கு மேலே அழுத்தம் வருவது. சில சமயம் கழுத்தை சுற்றிக் கொள்வது.. ஒரு தடவைக்கு மேல் சுற்றினால் ப்ரஸர் அதிகம்..” என்றதும்.. இருவரும் அவளை பயத்துடன் பார்த்தனர். 

 

வள்ளியமைதான் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “தொப்புள் கொடி சுத்துறது கொஞ்சம் ஆபத்து தான் இன்னும் எனக்கு தெரியும்.. ஆனா.. ஆருவுக்கு..” என்று இழுத்தார்.

 

“அதெல்லாம் பாத்துக்கலாம் ஒன்னும் பயம் இல்லை” என்று முதல் முறை ஆச்சியின் முகத்தை பார்த்து பதில் கூறினான்.

 

அதற்குள் ரூபிணி “கார்டு கம்ப்ரஷன் வந்தால் என்ன நடக்கும்? கொஞ்சம் விவரமும் சொல்லுப்பா.. இதெல்லாம் நானும் தெரிஞ்சு வச்சிக்கிறேன்” என்றார்.

 

“பேபிஸோட ஹார்ட் ரேட் சடனா டிராப் ஆகும்.. 

பேபிஸூக்கு ஆக்ஸிஷன் சப்ளை குறையும் மூச்சு திணறும்..

அவங்களோட மூவ்மெண்ட் குறைவா இருக்கும்.. இந்த சிச்சுவேஷன் எல்லாம் அடுத்தடுத்து வந்த உடனே சிசேரியன் தான் செய்ய வேண்டி இருக்கும்” என்றான் தெளிவாக.. அவர்களுக்கு புரியும் படியாக..!!

 

“இப்ப புரியுது நீ ஏன் ஆபீஸ்க்கு போகும்போதும் அவளை கூடவே அழைச்சுட்டு போறேன்னு.. அவள வற்புறுத்தி ஒவ்வொன்னா குடிக்க கொடுக்கிறனு” என்று ரூபிணி கண்கள் கலங்க சொல்ல.. மெல்ல புன்னகைத்துக் கொண்டான். ஆனால் அவன் புன்னகை அவன் கண்களை எட்டவில்லை.

 

“எல்லாம் சரியாகும் ராசா கவலைப்படாதே..! பேத்தி நல்லபடியா  பெத்து பொழச்சு வருவா..  நான் நம்ம குலதெய்வத்துக்கு இப்பவே காசு முடிஞ்சு வைக்கிறேன்” என்று அவனை அணைத்து கூற.. 

 

ஏனோ அவரை விலக்கும் எண்ணம் இல்லாமல் அமைதியாக நின்று இருந்தான் இராவண்.

 

 

அதே நேரம் “வள்ளி.. வள்ளி..” என்று தன் அறையில் இருந்து குளறலாக குரல் கொடுத்தார் அழகப்பன் மாறவேல்..!

 

வருவான் காதல் அசுரன்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top