அசுரன் 33

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 33

 

காலையில் ராவண் மருத்துவமனைக்கு செல்லும்போது அவளையும் அழைத்துச் செல்வான். காயத்ரியை அவளுக்கு பாதுகாப்பாக வைத்து விட்டு அவளது நிர்வாக வேலைக்கு எந்த இடையூறும் கொடுக்காமல் பார்த்துக் கொள்வான்.

 

அவ்வப்போது பழச்சாறு இளநீர் என்று நேரம் தவறாமல் அவள் இருக்கும் இடத்திற்கே அணி வகுத்துச் செல்லும். அதை எல்லாம் பெரும் முறைப்போடு வாங்கி பருகுவாள்.

 

காரணம் பிள்ளைகளுக்காக என்று..!

 

அவளும் நிர்வாக வேலைகளை பார்ப்பது போலவே மெதுவாக சாருபாலாவை நாள் சந்தித்து இங்கே உள்ள குறை நிறைகளை கேட்பது போலவே பேச்சை ஆரம்பித்தாள்.

 

“நிறைன்னு சொன்னா நிறைய இருக்கே ஆருஷி.. ஆனா குறைவு தான் இப்போ நம்ம நிவர்த்தி செய்யணும்” என்றார்.

 

“குறையா? நம்ம ஹாஸ்பிடல்லையா? அப்படி என்ன குறை? ஸ்டாப்ஸூக்கு போனஸ்ல சேலரில ஏதாவது விட்டுப் போச்சா? இல்ல அவங்க இங்க சேப்டியா உணரலையா? லேடிஸூக்கு இங்கு யாரும் டார்ச்சர் தராங்களா?” என்று அவள் அடுத்தடுத்து கேட்க,  

 

அவரோ இல்லை இல்லை என்றும் மறுத்து தலை அசைத்தார். 

 

“இங்க வேலை பாக்குற டாக்டர்ஸ் யாரும் லேடிஸ் கிட்ட தப்பா நடக்கும் மாட்டாங்க ஆருஷி. அதுவும் ராவண் டாக்டர் வந்ததுக்கு அப்புறம் ஒன்னு ரெண்டு பேர் இருந்ததும் இப்ப இல்ல. நான் சொல்றது முக்கியமான ஒரு விஷயம்.. என்னன்னா இந்த ஹாஸ்பிடல்ல இத்தனை சிசேரியன் பார்த்து ஆகணும். இந்த டாக்டர்ஸ்  இந்த மாசத்துல இத்தனை சிசேரியன் செஞ்சு ஆகணும் டார்கெட்.. அப்படிங்கற எழுதப்படாத சட்டம் ஒன்னு கண்ணுக்கு மறைவா சுத்திக்கிட்டு இருக்கு. வர பேஷண்ட் எல்லாருக்குமே சிசேரியனே செஞ்சா எப்படிம்மா?” என்று அவர் கேட்க..

 

அவளுக்கும் அதிர்ச்சியானது  இந்த செய்தியை கேட்டு..! 

 

“இப்படி ஒரு சட்டத்தை யார் போட்டது?” என்று அதிர்ச்சி விலகாமல் அவள் கேட்க 

 

“எல்லாம் உங்க தாத்தா தான்..!” என்று பல நிமிடங்கள் தாமதித்து பின் கூறினார் சாருபாலா.. தன் நகத்தை பார்த்துக் கொண்டே..

 

“மேம்..! எங்க தாத்தா மேல பழிய போடாதீங்க.! எங்க அம்மா குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்ட காலத்துல அதை மாதிரி வேற யாரும் படக்கூடாதுன்னு தான் எங்க தாத்தா எங்க ஹாஸ்பிடல் கட்டினதே..! ஃபர்ஸ்ட் மகப்பேறு மருத்துவமனையும் அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அடுத்தடுத்து டிபார்ட்மெண்ட்டும் வர வச்சாரு எங்க தாத்தா. அப்படி இருக்கிறவர் மேல இப்படி நீங்க பழி சொல்லலாமா? இன்னிக்கு அவர் முடியாமல் இருக்கிறாரு.. நினைவு இல்லாமல் இருக்கிறாருனு..  தப்பை எல்லாம் அவர் மேல சொல்லக்கூடாது..!” என்று நான் இங்கே நிர்வாகி என்று அமர்த்தலான குரலில் அவள் பேச..

 

அவளை ஆழ்ந்து பார்த்தவர் “நான் ஏற்கனவே சொன்னேனே ஆருஷி. உங்க அம்மா ட்ரீட்மென்ட் எடுத்த டாக்டர் என்னோட சீனியர்னு. உங்க தாத்தா ஹாஸ்பிடல் ஆரம்பித்தபோது என் சீனியர் தான் இங்க இருந்தாங்க.. அதுக்கப்புறம் அவங்க பரிந்துரைல தான் நானும் இங்க வந்து ஜாயின் பண்ணேன். நிறைய குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இங்கு குழந்தையை நாங்க கருவாக்கி உருவாக்கி கொடுத்திருக்கோம். இல்லைன்னு எல்லாம் சொல்லல..! மகப்பேறுல பேர் போனதுதான் நம்ம மருத்துவமனை தான். அதையும் நான் மறுக்கல..! ஆனா சட்டு சட்டுன்னு சிசேரியன் பண்றது எல்லாம் என்னால ஒத்துக்கவே முடியல.. இப்போ நீ கேக்குறதுனால தான் இந்த விஷயத்தையும் சொல்றேன்.. இல்லைனா இந்த விஷயத்தை நான் சொல்லி இருக்கவே மாட்டேன்” என்றார்.

 

அவள் அமைதியாக அவரை ஆழ்ந்து பார்க்க..

 

“இதனால எனக்கு எந்த லாபமும் கிடையாது ஆருஷி. நானுமே இங்கிருந்து ரிலீவ் ஆகலாம்னு ஒரு நிலைமையில இருந்தேன் டாக்டர் ராவண்னால்தான் நான் இங்கே இருக்கேன். கூடிய சீக்கிரம் நான் ரீலிவ் ஆகிடுவேன்..  அப்போ எனக்குன்னு ஒரு சின்ன கிளினிக் வச்சிட்டு நான் தனியா சுதந்திரமா செயல்படுவேன்” என்று அவர் பேச  பேச இவளுக்கு நிறைய விஷயங்கள் குழப்பமாக இருந்தது. 

 

“ஏன் டாக்டர்.. நிறைய பேர் ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல ஒர்க் பண்ணாலும், தனியா அவங்களுக்குன்னு ஒரு கிளினிக் வச்சிருக்காங்க தானே? இதுவரைக்கும் நீங்க தனியா கிளீனிக்கு ஏதும் வைக்கலையா? இனிமே தான் வைக்க போறேன்னு சொல்றீங்க?” என்று அவர் பேசிய வார்த்தைகளில் முரண்பட்ட வார்த்தைகளை இவள் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள்.

 

“இல்லம்மா..! இந்த ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணா இங்க மட்டும் தான் ஒர்க் பண்ணனும் சொல்லிட்டு வரும்போது ஒரு பாண்டில் கையெழுத்து வாங்கிடுவாங்க.. வேற எங்கேயும் கிளினிக் திறக்க முடியாது. அதுவும் இல்லாம பெருசா எனக்கு எதிர்பார்ப்புகள் கிடையாது எனக்கு இங்கே வர சேலரி சரியா இருக்கும்” என்றார் மென் புன்னகையோடு. 

 

“இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது..!” என்று அவள் மெல்லிய குரலில் கூறிக் கொண்டாள், அவள் இங்கு வந்த சில நாட்களிலே இராவண்னும் இங்கே வந்துவிட அவள் நினைவு முழுக்க.. அவனை சுற்றி இருக்க.. இம்மாதிரி சில நுணுக்கங்களை தவற விட்டு விட்டாள்.

 

“ஆனா.. நீங்க சொன்ன அந்த சிசேரியன் கேசஸ் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கு டாக்டர்” என்றாள்‌ ஆருஷி,  முன்னே அவள் குரலிலிருந்த ஸ்ருதி பேதம் இப்பொழுது அவள் குரலில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சாருபாலா…

 

“ஆருஷி.. நீங்க இப்பதான் இந்த மேனேஜ்மென்ட்க்குள்ள என்ட்ராய் இருக்கீங்க.. நான் சொன்னது உண்மையா பொய்யானு கிரிதரன் சார்கிட்ட கேளுங்க. அவரு ரொம்ப வருஷமா இந்த ஹாஸ்பிடலில் மேனேஜ்மென்ட்ல இருக்காரு. ஆனா முழுமூச்சா கிடையாது. கண்டிப்பா இந்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுருக்கும். நீங்க அவர்கிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்கோங்க.. அதுக்கப்புறம் இத கொஞ்சம் நீங்க கன்சிடர் பண்ணா நான் சந்தோஷப்படுவேன். என் சீனியர் இங்கிருந்து ரிலீவ் ஆகி போகும்போது என்கிட்ட கூறி வருத்தப்பட்ட விஷயம் அதுதான். என் காலத்துக்கே இத்தனை சிசேரியன் வந்திருக்குனா? நீ ப்ராக்டிஸ் பண்ணும்போது ஃபுல் அண்ட் ஃபுல் சிசேரியன் தான் இருக்கும் சாரு.. ஏதோ ஒன்னு ரெண்டு தான் இயற்கை பிரசவமா இருக்கும்.. அப்படின்னு  வருத்தப்பட்டு சொன்னாங்க. அதுதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு ஆருஷி” என்றவர் முகத்திலும் உண்மையான வருத்தம் தான். 

 

“இப்போ நீங்களும் பிரக்னண்டா இருக்கீங்க ஆஃப்டர் சிசேரியன் ஒரு பொண்ணுக்கு என்ன எல்லாம் கஷ்டம் வரும் தெரியுமா?” என்று கேட்டதும் அவள் தெரியாது என்று தலை அசைத்தாள்.

 

“சிசேரியன்ஆல பொண்ணுங்களுக்கு பின்னாடி எவ்வளவு எல்லாம் பக்கவிளைவுகள் வரும் தெரியுமா?” என்று அதைப் பற்றி லேசாக விவரிக்க விவரிக்க இவளுக்கோ வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

 

அதற்குள் ஆருஷி சாருபாலாவை காண சென்ற விஷயம் இராவண்னுக்கு தெரிந்து போக அவசர அவசரமாக அவளை காண ஓடி வந்தான்.

 

இறக்கை இல்லாமலே பறந்து  வந்தவன் “என்ன ஆச்சு? என்ன விஷயம்? ஏதும் உடம்புக்கு முடியலையா?” என்றப்படி வேகமாக உள்ளே நுழைந்தவன் அவளை எழுப்பி உச்சாதி பாதம் வரை பார்த்தான், ஆராய்ச்சியாக.. அணு அணுவாக.‌.!

 

“எனக்கு ஒன்னும் இல்ல..! நான் ஆல்ரைட். ஏன் இப்படி பிபீ வந்த பேஷண்ட் மாதிரி நிக்கிறீங்க முதல்ல உட்காருங்க” என்று தன் அருகே உள்ள இருக்கையை அவள் காட்ட.. சாருபாலாவிடம் கண்களாலேயே எதுவும் கூறிவிட்டீர்களா என்று கேட்டான். 

 

அவர் இல்லை என்று கண்மூடி திறந்ததும் தான் அவனுக்கு நிம்மதியானது. ஆசுவாசமாக அமர்ந்தவன்,  சாருபாலா முன் இருந்த தண்ணீரை எடுத்து “எக்ஸ்க்யூஸ் மீ மேம்..” எடுத்து கடகடவென்று குடித்து முடித்தான். 

 

“ரிலாக்ஸ் இராவண்.. அவங்களுக்கு ஒன்னும் இல்ல. ஜஸ்ட் நார்மல் மேனேஜ்மென்ட் என்கொயரி தான்” என்றதும் அவரை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்தவன், பின் அவளிடம் திரும்பி,

 

“உன்ன காயத்ரி சிஸ்டரோட போகணும்னு சொல்லி இருக்கேன். நீ ஏன் அவங்கள விட்டுட்டு இப்படி நீ தனியா சுத்திட்டு நிக்கிற?” என்றவன் சற்று அதட்டலோடு கேட்க..

 

அவளோ அவனை முறைத்து பார்த்து சிறு குரலில் “என்ன அதட்டலெல்லாம் பலமா இருக்கு. உனக்கு என்ன வந்தது நான் எங்க போன என்ன? என்ன பண்ணினா என்ன?”:என்று கடிந்தவள்,

 

பின்பு சாருபாலா மருத்துவரை பார்த்து ஒரு பெரிய புன்னகையை கொடுத்து “கடவுளே இங்க இருக்காங்க..! அப்புறம் பூசாரிக்கு என்ன வேலை? அதான் அவங்கள அவங்க வேலையை பார்க்க அனுப்பிட்டேன்” என்றாள் அவளுக்கே உரிய நக்கல் தொணியில்..!!

 

“அராத்து.. அராத்து..! என் உயிர் எடுக்க நீ வந்திருக்க டி” என்று அவள் தலையில் இரண்டு கொட்டு கொட்டியவன், “கொஞ்ச நேரத்துல மனுசன பதற வச்சுட்டா தெரியுமா நீ? நீ சொன்னத ஒழுங்காவே என்னிடம் அவங்க வந்து ரிப்போர்ட் சொல்ல.. சொல்லி இருக்கணுமா  இல்லையா? நான் எதர்சியா இன்பேஷண்ட் செக்ஷன் போனா அங்க காயத்ரி நின்னுட்டு இருக்காங்க.. என்னன்னு கேட்டா.. நீ  சாருபாலா மேடம் ஐ பார்க்க வந்திருக்கேன்னு சொல்றாங்க.. ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போச்சு டி” என்று மீண்டும் கத்தியவனை கண்டவள்,

 

“உஷ்..! போதும். சத்தம் போடாதீங்க இட்ஸ் ஹாஸ்பிடல்..!” என்றாள் அவன் உதட்டில் தன் விரலை வைத்து.. அவனோ அவளையே விடாமல் பார்க்க..

 

“சாந்தி.. சாந்தி.. எதுக்கு இவ்ளோ டென்ஷன் உனக்கு? எனக்கு டியூ டேட்டுக்கு இன்னும் காலம் இருக்கு. சும்மா நீயும் பயந்து என்னையும் பயப்பட வச்சு.. ஹாஸ்பிடல கலவரம் படுத்துற நீ.. வேற யாரும் டெலிவருக்கு இதுவரை வந்ததே இல்லையா ஹாஸ்பிடலுக்கு? அதுவுமில்லாம இது மகப்பேறு மருத்துவமனை தானே? நீ இப்படி பண்றது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?” என்று அவள் விடாமல் பொரிய..

 

“அப்பாடி நார்மலா தான் இருக்கா..” ஆசுவாசம் கொண்டான் இராவண்.

 

“வர வர வாய் உனக்கு ரொம்ப ஓவர் ஆயிடுச்சு டி பாப்பா” என்றவன், சட்டென்று ஏதோ தோன்று திரும்பி சாருபாலாவை பார்க்க.. அவரோ இவர்களின் இந்த ஊடல் மோதலை வெகுவாக ரசித்தவாறு அமர்ந்திருந்தார். 

 

“சாரி மேம்..!” என்று லேசாக வெட்கப்பட்டவன் சிகையை கோதிக்கொள்ள..

 

“ஹேய்.. இராவண்.. யூ ஆர் ப்ளஷிங் மேன்” என்று‌ அவன் வெட்கப்பட்டதை கண்டு முறுலித்தார் அவர்.

 

சாருபாலா கூறியதும் இவளும்  “அப்படியா?” என்று திரும்பி ராவண்னை பார்க்க..

 

அவளின் முகத்தை தன் கை வைத்து அவன் மறைக்க..

 

“ஹேய்.. யூ சீட்டர்.. காட்டு மேன்.. அந்த வெட்கப்படுற முகத்தை இங்க கொஞ்சம் காட்டு மேன். நான் அதைப் பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று வம்பு இழுத்தவாறு அவளும் தன் முகத்திலிருந்து அவன் கையை விடுவிக்க போராடி, அவன் முகத்தைப் பார்த்து எத்தனிக்க.. 

 

அவனோ இப்பொழுது முகத்தை திருப்பிக் கொள்ள.. இவளோ கஷ்டப்பட்டு  அவன் தாடையை பற்றி அவன் முகத்தை தன் புறம் திருப்ப முயல.. “காட்ட மாட்டேன் போடி” என்று அவன் வீம்பாய் உரைக்க..

 

ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி முகத்தை மறைக்க.. அதை விலக்க.. என்று கடைசியாக அவளை இழுத்து சட்டென்று தன் மார்பில் அவள் முகத்தை புதைத்துக்கொண்டவன் “கொஞ்ச நேரம் அமைதியா இருடி பாப்பா..! என்னால முடியல..!” என்றான்.

 

எதிரே ஒருவர் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது அவர்கள் நினைவிலேயே இல்லை..!

 

வழக்கம் போல அங்கு காதல் ஆட்சி செய்தது..!

 

இதுவரை இருந்த வன்மம் கோபம் ஆத்திரம் எல்லாம் மறந்து போய் நேசமும்

பேரன்புமாய் இருந்த அந்த ஊடல் மிக அழகானது..!

 

ஊடலே அழகு தானே..!!

 

 

வருவான் காதல் அசுரன்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top