அத்தியாயம் 32
‘தன் முத்தத்தில் கிறங்கி மயங்கி அமர்ந்திருக்கும் இவளுக்கு தன் மீது காதலே இல்லையாம்? போடி பைத்தியக்காரி..! கண்கள் முழுக்க காதல்.. மனசு முழுக்க தான் டி கிறுக்கிச்சி..!’ என்று இராவண்னோ அவள் நெற்றிமுட்டி சிரித்தான்.
“டாக்டர் என்ன சொன்னாங்க நீ இன்னும் சொல்லவே இல்ல.. பேச்ச டைவர்ட் பண்ணுறிங்க” என்று கேட்டவளிடம்..
“இப்போ எனக்கு கொஞ்சம் டைட் வொர்க். லஞ்ச் சாப்பிட்டுட்டு வா நான் சொல்றேன்” என்றவன் அவள் மதிய உணவு முடித்ததும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள சொல்லி காயத்ரி மூலம் சொல்லி அனுப்பியவன், அவள் அவனை பார்க்க பிடிவாதம் பிடிக்க, அவள் அறையிலேயே சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னான்.
“மேம்.. டாக்டர் ஐவிஎஃப் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்களாம். நீங்க எடுத்திட்டு வந்ததும் பார்ப்பீங்களாம்” என்று காயத்ரி கூற, அவரை முறைத்தவள்,
“உங்க டாக்டர் இன்னும் என்னென்ன கம்பி சுத்துற வேலை எல்லாம் சொல்லுவாருனு நானும் பார்க்கிறேன்..” என்றவள், சிறிது நேரம் மருத்துவமனை மேனேஜ்மென்ட் சம்பந்தமான வேலைகளை பார்த்தாள்.
ஆனாலும் சிறிது நேரம் மட்டுமே அவளால் முடிந்தது. “என்னால முடியல.. நான் வீட்டுக்கு போறேன்” என்றவள் அவனைப் போலவே காயத்ரியிடமே தூது விட்டாள்.
“ஓஹ்.. ஓகே போகட்டும் சிஸ்டர்” என்றவன் அவள் வீட்டுக்கு பத்திரமா சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் வேலையில் ஈடுபட்டான்.
“என்னமோ எனக்கு தெரியாம இவன் மறைக்கிறான்.. கண்டுபிடிக்கிறேன்..!” என்று பொருமிக் கொண்டே இருந்தாள் வீடு சென்றும்.
இவள் தனியாக வந்ததைக் கண்டு வள்ளியமையோ “ஏன் கண்ணு பேரன் உன் கூட வரலையா?” என்று வாசலை பார்த்துக் கொண்டே கேட்க..
“இவ்வளவு நாளா தூக்கி வளர்த்த பேத்திய கண்ணுக்கு தெரியல.. இப்ப புதுசா மழைக்கு முளைச்ச காளான் அந்த பேரன் மட்டும் கண்ணுக்கு தெரியறா இல்ல? இருக்கட்டும் இருக்கட்டும் உங்கள பாத்துக்குறேன்” என்று மாடு ஏறியவள், ஆட்சித் தன் முதுகையை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து “வருவாரு.. வருவாரு.. போய் ரெஸ்ட் எடுங்க” என்று அலட்சியமாக கூறி சென்ற பேத்தியை கண்டு அவர் வருத்தமுடன் ரூபிணியை பார்க்க..
“விடுங்கத்த எல்லாத்துலேயும் நாம மூக்க நுழைக்க கூடாது.. கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்குள்ளே எல்லாம் சரியாகிடும்” என்று தேற்றினார்.
இரவின் தனிமையில் நிலவினை வெறித்திருக்கும் அவனை தான் பார்த்திருந்தாள் ஆருஷி.
‘வேண்டுதல்கள்
பலிக்குமா என்பதெல்லாம்
இரண்டாம் பட்சம் தான்.
பிரார்த்தனைகளை
முன் வைப்பது மட்டும் தான்
இப்போதைக்கு எனதாறுதல்....!!’ என்று பெருமூச்சு விட்டவனை பார்த்தவாறு ஆருஷி அமர்ந்திருக்க..
“என்ன பாப்பா.. மாமாவ ஓவரா சைட் அடிக்க ஆரம்பிச்சிட்ட வரவர?” என்றவனின் நக்கல் குரலில் அவனை முறைத்தவள்
“ஹாஸ்பிடல்லேயே கேட்டேன்.. அந்த சாருபாலா டாக்டர் என்ன சொன்னாங்கன்னு? நீ என்னை கிஸ் பண்ணி ஏமாத்தி என் மூட டைவர்ட் பண்ணிட்ட?” என்றதும் அவன் அதுவரை வாசித்து வந்த சோக கீதத்தை விட்டு இப்பொழுது டூயட் பாடலாமா என்று மூடுக்கு வந்தவன் அவளை நெருங்கி வந்து “மாமா உன்ன அவ்வளவு டெம்ப்ட் பண்றேன்னா பாப்பா?” என்று சரஸசமாக கேட்க,
“அது என்ன புதுசா மாமா? உன்னை நான் அப்படி கூப்பிட முடியாது போயா..” என்றாள்.
இரவு சாப்பிடும்போது ரூபிணி தான் “என்ன ஆருமா இப்படி மரியாதை இல்லாம பேசுற அவர.. உனக்கு தம்பி மாமா முறை இல்லையா? அப்படி வாய் நிறைய மாமான்னு சொல்லி கூப்பிடு ஆரு” என்று சொல்லி இருந்தார்.
“அப்போ மாமானு மொற வச்சு தான் கூப்பிடனுமா?” என்று கேட்ட ராவண் கண்கள் மின்ன.. அதை கண்டவள் “அப்படியெல்லாம் கூப்பிட முடியாது” என்று நறுக்குத்தெரித்தாற் போல் கூறி இருந்தாள்.
அதைக் கொண்டுதான் இப்போதெல்லாம் அவளிடம் தன்னை பேசுகையில் மாமா என்று முன்னிறுத்தி கூறுகிறான்.
“நீ கூப்பிடவில்லைனாலும்.. நீ வேணாம்னு சொன்னாலும்.. இந்த உறவு மாறப் போறது இல்ல பாப்பா..! நான் உனக்கு மாமா தானே..! ஆமா நான் மதியம் கேட்டதுக்கு நீ எனக்கு பதிலே சொல்லல.. நீ கேட்டதுக்கு மட்டும் நான் பதில் சொல்லணும்னு எப்படி எதிர்பார்க்குற?” என்றதும் அவள் என்ன கேட்டான் என்று புரியாமல் நோக்க..
“அதான் இப்படி என்னோட ஒரு முத்தத்துக்கு நீ மயங்கி கிறங்கி அமர்ந்திருக்கிறியே அதைத்தான் சொன்னேன்” என்றவன் கண்ணடிக்க..
அவனை ஆழ்ந்து பார்த்தவள் “லவ்வு மட்டும் இல்ல லஸ்ட்டும் இருபாலருக்கும் பொது தான்.. ஏன் உனக்கு மட்டும் தான் அந்த மாதிரி பீலிங்ஸ் எல்லாம் வருமா? கர்ப்ப காலத்துல எனக்கும் வரணும். நான் நெட்டுல படிச்சிருக்கேன். இதுக்காக வேறு ஒருத்தனை தேடிக்கிட்டா போக முடியும்?_ என்று வேண்டுமென்று அவன் மீது அமிலத்தை பாய்ச்சினாள்.
அந்த வேறொருத்தன் என்று அவள் கூறுகையில் அவனது முஷ்டி கோபத்தில் இறுகியது என்னவோ உண்மை..
அவனது கண்கள் வலியையும் கோபத்தையும் ஒரு சேர காட்டியதும் உண்மை..
அவன் நெஞ்சும் தோள்களும் விரைப்பாக மாறியது உண்மை..
ஆனால் அன்று தன்னையே உலகமாய் மாறா.. மாறா.. என்று அனபொழுக காதலொழுக சுற்றி வந்தவளை, இன்று வேறு ஒருவனோடு இணைத்து பேசும் அளவுக்கு கொண்டு விட்டதும் நீதானே என்று அவனது மனசாட்சியே குத்த அனைத்தையும் கண்களை மூடி ஏற்றுக் கொண்டவன், புன்முறுவலுடன்
“அந்த வாய்ப்பை நான் எப்போதும் உனக்கு தரவே மாட்டேன் பாப்பா. உன்னோட லவ்வா இருந்தாலும் லஸ்டா இருந்தாலும் அதுக்கு நான் இருக்கேன்.! வேணும்னா.. ஒரு ட்ரயல் பார்ப்போமா? ரொம்ப நாளாச்சே..!” என்று கண்ணடித்து சிரித்தவனை கண்டதும் அவளுக்கு தான் ஆத்திரம் மிகுந்தது.
‘என்ன சொன்னாலும்.. எப்படி சொன்னாலும் கோபப்பட மாட்டேங்குறானே.. கோபப்பட்டு சண்டை போட்டு போவானு பார்த்தா.. ம்ஹூம்.. முடிய மாட்டேங்குதே..!’ என்று யோசனையாக நகம் கடித்துக் கொண்டிருந்தவளின் கையில் பட்டென்று ஒரு அடி போட்டவன்,
“நகம் கடிப்பது பேட் ஹேபிட்.. அதுவும் இப்போது பிரகனண்ட் ஆக வேற இருக்கு..” என்றவன் அவள் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு போட, அவளை முறைத்துக் கொண்டே உறங்கச் சென்றாள் பாவை.
பட்டென்று அவளை இழுத்து தன் முழு அணைப்பில் வைத்தவன், “லவ் யூ டி பாப்பா..” என்றான் கனத்த குரலில் கனிந்து.
அவன் அணைத்ததை தடுக்காமல் அவன் அணைப்பிலிருந்து நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள், “பொய் சொல்றதா இருந்தாலும் பொருந்த சொல்லணும்.. நீ யாருன்னு எனக்கு தெரியும். சும்மா இந்த மாதிரி பேசி பேசி என்னை மாற்றலாம்னு ட்ரை பண்ணாத..! வீண் முயற்சி..! மிஞ்சி மிஞ்சி போனா உன்னோட நோக்கம் என்னன்னு எனக்கும் தெரியும்..” என்ற அவளின் கண் சொன்ன அர்த்தத்தை புரிந்தவன்,
“ஆஃப் கோர்ஸ்.. எனக்கும் லவ்வுக்கு மட்டுமல்ல லஸ்டுக்கும் நீ தான்..! ஒரு பெண்ணால் தன் மனசுக்கு பிடிச்ச நம்பிக்கையான ஒருத்தன் கிட்ட எப்படி தன்னை முழுமையா ஒப்படைக்க முடியுதோ.. அதேபோலத் தான் ஒரு ஆணாலேயும் தன் மனசுக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட மட்டும் தான் ஃபுல் எக்ஸ்ப்ளோஸிவ்வா இருப்பான்..” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து..
“உன்னை போல ஆண்களுக்கு.. அது பொண்ணு இல்ல மேன்.. பொண்ணுங்க..” என்று அவள் அவனை தள்ளி விட்டு போக முயல..
“மே பீ.. மத்த ஆண்களுக்கு அப்படி இருக்கலாம். ஆனா எனக்கு நீ தான்.. நீ மட்டும் தான்..! என்னை முழுமையாக உனக்கு உணர்த்த.. உன்னை நான் முழுமையாக உணர..” என்று வார்த்தையில் வசீகரித்தவனால் அவளின் உள் மன காதல் தண்ணீர் ஊற்றிய பந்து போல மெல்ல மெல்ல மேல எழும்ப..
“போயா.. போ.. சும்மா இப்படி பினாத்திட்டு இருக்காதே..!”
“எதுடி பாப்பா பினாத்துறது? இல்லடி என் உணர்வுகள்..!”
“என் உணர்வுகளை முழுமையாக கொட்டினால் உன்னால தாங்க முடியுமா பாப்பா?” என்றவன், அவளை லேசாக ஒரு சுழற்று சுழற்றி..
“இந்த அழகிய பிறை நெற்றியில அழுத்தமாக முத்தம் கொடுக்க கொள்ள ஆசை..” என்றதும் அவள் உருத்து விழிக்க..
“முறைத்துப் பார்க்கும் பொழுது உருத்து விழிக்கும் அந்த விழிகள் இரண்டுக்கும் மென் முத்தம் கொடுக்க பித்து எனக்கு..” என்றதும் அவள் கன்னங்களை சுழிக்க..
“மாம்பழ கதுப்பு கன்னங்களுக்கு முத்தத்துடன் கூடிய சிறு கடிப்பை கொடுக்க கோடி அவா டி பாப்பா..” என்றதும் உதடு கடித்து அவனை அவள் கோபமாக பார்க்க..
“சின்னதாய் இருக்கும் அந்த தாடையை உதட்டுக்குள் ஒளித்துவைத்து சுவைக்க பெரும் கனவு..”
“போதும்..” என்று அவள் அவனை நிறுத்த சொல்ல..
“ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் பேசும் அந்த ஆரஞ்சு சுளை உதடுகளை மொத்தமாக கவ்வி மென்று தின்று ரசித்து ருசிக்க.. ம்ஹீம்.. காலமுள்ள அளவு ஆசை டி பாப்பா” என்றான் தாப பெருமூச்சோடு.
“நீ சரி இல்லை” என்று அவனிடமிருந்து விலகினாள்.
“கூர்வாள் என்ன நீட்டி முழக்கி பேசும் அல்வாத்துண்டு நாவோடு நா சண்டை போட..
மென் காது மடல்கள் ஒவ்வொன்றையும்
நாவினால் தீண்டி தீண்டி விளையாட…
வெண்சங்கு கழுத்தில் இச் இச் என்று முரட்டு அதரங்களால் மென் முத்தங்கள் இட..
அதற்கு மேல் என்று..."
நான்ஸ்டாப்பாய் அவன் சொல்லிக் கொண்டே அவளை நோக்கி முன் எட்டு எடுத்து வைக்க.. அவளோ அனிச்சை செயலாய் பின்னெட்டு எடுத்து வைத்தாள்.
"ஸ்டாப்.. ஸ்டாப்" அதுவரை அவனின் வர்ணனையில் மூளை செயல் இழந்து நின்றவள், தன் தளிர் கரங்களால் அவன் வாயை பொத்த..
‘வாயை மூடினால் வார்த்தைகள் வெளிவராமல் இருக்கலாம் ஆனால் என் உணர்வுகள்?’ என்று மொத்த உணர்வுகளையும் தன் விழிகளில் காட்டி கொட்டினான் கோமகன்.
இராவண்னோ அவளை உடலோடு உடல் உரச நூலிழை இடைவெளியில் நெருங்கி.. அவள் கன்னங்களை வருடி விட்டு “இத்தனை ஆசை இருக்கு எனக்கு.. உனக்காகத்தான் உனக்காக மட்டும் தான் கொஞ்சமே கொஞ்சம் விலகி
இருக்கேன்” என்று அவள் கன்னம் வருடி சென்றான், அவளோ பேந்த பேந்த விழித்தவாறு நின்றிருந்தாள்.
வருவான் அசுரன்..
