அசுரன் 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  
அத்தியாயம் 31
 
இருவரையும் ஒரு சேர பார்த்ததும் சாருபாலா “எஸ் இராவண்.. ஹாய் ஆருஷி.. கம்மிங்.. கம்மிங்..”  என்று பெரும் புன்னகையோடு வரவேற்றார்.
 
“எஸ் டாக்டர்..!” என்று இராவண் அமர்ந்தவன், ஆருஷியை பார்க்க.. மெல்லிய தலையசைப்பை சாருபாலாவுக்கு கொடுத்தவாறு அமர்ந்தாள்‌.
 
“தென்..” என்றவன், “வீ ஆர் பெர்க்னெட் டாக்டர். ஆருஷி மும்பையில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் பண்ணிட்டு இருந்ததுனால இவ்வளவு நாள் அங்கேயே பார்க்க வேண்டியதா போச்சு. சோ கோர்ஸ் முடிஞ்சு லாஸ்ட் வீக் தான் நாங்க வந்தோம். இனி.. இங்க தான் டெலிவரி டாக்டர். நீங்க கொஞ்சம் கேர் பண்ணினா எனக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும்..” என்றவனை பார்த்து சிரித்த அந்த அனுபவம் மிக்க மருத்துவர்,
 
“ஆஃப் கோர்ஸ்.. ஆருஷி மேடமுக்கு இல்லாததா? இன்ஃபேக்ட் இவங்க அம்மாக்கு டிரீட்மென்ட்  கொடுத்த டாக்டர் என்னோட சீனியர் தான். அப்ப நானும் இருந்தேன்.  இப்போ நான் இவங்களுக்கே டெலிவரி பார்க்க போறேன். இட்ஸ் கொய்ட் இன்ட்ரஸ்டிங்..!” என்றவர்,
 
ஆருஷி புறம் திரும்பி “வாமா ஒரு ஸ்கேன் பண்ணிடலாம்” என்று அழைத்து சென்றார்.
 
“டாக்டர் நீங்க?” என்று ராவண்னை அவர் அழைக்க.. “இட்ஸ் ஓகே டாக்டர் நீங்க பாருங்க..!” என்றவனின் கூர்பார்வையோ ஆருஷியை தான் குத்தியது ‘நீ அனுமதிக்காமல் நான் எப்படி வர?’ என்று..!
 
அவளோ அதை புரிந்தும் புரியாதது போல பாவித்து, “அவருக்கு ரொம்ப பயம்” என்று இலகுவாக கூறி சாருபாலா பின்னால் சென்றாள்.
 
ஆர்ஷியை படுக்க வைத்து வழக்கம் போல ஸ்கேன் செய்தவரின் நெற்றியோ ஒரு நிமிடம் சுருங்கி விரிந்தது. ஆனால் அதனை ஆருஷியால் கண்டு கொள்ள முடியவில்லை. 
 
அவளோ வயிற்றில் இருக்கும் தன் பிள்ளையை தான் ஆர்வமும்  மகிழ்வுமாக பார்த்திருந்தாள். 
 
“உங்களுக்கு எப்ப எல்லாம் பேபியோட மூமெண்ட்ஸ் தெரியும் ஆருஷி?” என்று சாருபாலா கேட்க..
 
“அப்படி பர்டிக்குலரா சொல்ற மாதிரி எதுவும் இல்லை டாக்டர்.. திடீரெனு மூவ்மெண்ட் இருக்கும் அப்புறம் இருக்காது..!”
 
“நான் அப்படி கேட்கல.. ஒரே பர்டிகுலர் டைம். உங்களுக்கு பசி எடுக்கும்போதோ இல்ல அதிகமான சவுண்ட் வச்சு நீங்க டிவியோ இல்ல மியூசிக் கேட்கும் போதோ.. உங்க பார்ட்னர் கிட்ட நீங்க பேசும்போதோ.. இந்த மாதிரி நேரத்துல உங்க குழந்தையோடு துடிப்பு நீங்க கேட்டு இருக்கீங்களா?” என்று கேட்டார்.
 
அவளோ பெரும் யோசனையோடு இல்லை என்ற தலை அசைத்தாள்.
 
“புட் நான் கரெக்ட் டைமுக்கு எடுத்திடுவேன். நான் கோர்ஸ் பண்ண போனதுனால பெருசு மூவிஸ் எனக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது. மைல்ட் மியூசிக் தான் கேட்பேன்” என்றவன் கடைசியாக சொன்ன அந்த பார்ட்னரை தவிர்த்து விட்டாள்.
 
“ஏன் டாக்டர்? எதுவும் பிரச்சனையா?” என்று அவள் சற்று திகலோடு கேட்டாள்.
 
“நாட் லைக் தட்.. பேபி மூமெண்டஸ் கொஞ்சம் கம்மியா இருக்கு. அதனால தான் உங்க கிட்ட கேட்டேன் மற்றபடி நோ ப்ராப்ளம்” என்றதும் அவளும் சரி என்றவள் உடையை சரி செய்து கொண்டு வெளியே வர, 
இருவரையும் ஆர்வமாக பார்த்தான் ராவண்.
 
“வெல் இராவணன் சார்.. டிடி செகண்ட் டோஸ் ஆருஷி எடுத்துட்டாங்களா?” என்று கேட்டு அவனும் இல்லை என்றான். 
 
“அப்போ இந்த வேக்சினேட் பண்ணிட்டு பிளட் டெஸ்ட் கொடுத்துட்டு வர சொல்லுங்க” என்றார். உடனே ராவண் எழ.. 
 
“நீங்க  இருங்க.. நான் சிஸ்டரை இவங்க கூட அசிஸ்ட் பண்ண அனுப்புறேன்” என்றவர் காயத்ரியை அழைத்தார்.
 
காயத்ரி வந்ததும் ஆருஷியைக் காண்பித்து அவருடைய பிரஸ்க்ராப்ஷனை கையில கொடுத்து “இந்த டெஸ்ட்  எடுத்திடுங்க.. இவங்களுக்கு செகண்டு டோஸ் டிடி இன்ஜெக்ஷன் போட்டுடுங்க” என்றார்.
 
“வாங்க மேடம்..” என்று பொறுமையாக அழைத்து சென்ற காயத்ரி பின் செல்லும் ஆருஷியை இவன் கவலையாக பார்க்க..
 
அவரோ “ரிலாக்ஸ் டாக்டர் சார்..  காயத்ரி ரொம்ப பொறும அண்ட் எக்ஸ்பீரியன்ஸ் டேலண்ட் வேற நல்லா பார்த்துப்பாங்க மேடம.. யு டோன்ட் வொர்ரி” என்று புன்னகை புரிந்தார்.
 
அவனும் ஆருஷி செல்லும் வரை அமைதியாக இருந்தவன், அவள் சென்ற பின், “ எஸ் டாக்டர்.. என்ன காம்ளீகேஷன் ஆருஷிக்கு?” 
சற்று பதட்டத்தோடு கேட்டான்.
 
“அஸ் அ டாக்டர்.. யூ க்நோ வெல்.. பேபி மூமெண்ட் கம்மியா இருக்கு. மே பீ கார்ட் கம்ப்ரஸன்” என்றார் அவர்.
 
ஓஹ் என்றவன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
 
“அம்ளிக்கல் கார்ட் (தொப்புள் குழாய்)  இது பேபிக்கு ஆக்சிஜன் நியூட்டிரியன்ஸ் சப்ளே செய்ற லைஃப் லைன்.
கார்ட் சுருங்கி, அழுத்தப்படுவது அல்லது நெறுங்குது.. கூடவே இரண்டு பேபீஸ்.. இப்படி
அழுத்தப்படும்போது பேபீஸூக்கு செல்லும் ஆக்ஸிஜன் ப்ளட் ஃப்லோ குறையலாம்.. இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்.. சோ.‌ கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க..” என்றவர்,
 
“அமினியாட்டிக் ஃப்ளூயுட்டும் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு.. அதனால கூட இந்த கார்ட் கம்ப்ரஸன் வந்திருக்கலாம். நிறைய ஃப்ளூயுட்ஸ் அண்ட் ப்ரஸ் ஜூஸ் கொடுங்க..” என்றவர் சில சத்து மாத்திரைகளையும் பரிந்துரைத்தார்.
 
“ஓகே டாக்டர்.!” என்று உள்ளே போன குரலில் கூறிய இராவண்னை பார்த்து, “ஹலோ டாக்டர்.. நாம இத விட காம்ளீகேஷன் கேஸ் எல்லாம் பார்த்திட்டோம். இத பார்க்க மாட்டோமா? சியர் அப் இராவண்” என்று அவர் கூற, மெல்லிய புன்னகையோடு தலையாட்டி சென்றவனின் முகத்தில் உயிர்ப்பு இல்லை.
 
ஏற்கனவே மும்பையில் அந்த மகப்பேறு மருத்துவர் அம்னியாட்டிக் ப்ளுயூட் குறையாக இருக்கு என்று கூறி இருந்தார். அதனால் தான் விடப்படியாக அவளை அங்கிருந்து அழைத்து வந்தான். தன் கண் முன்னே இருக்கும் போது இருக்கும் அந்த பாதுகாப்பு வேறு எங்கும் அவளுக்கும் தன் குழந்தைகளுக்கும் கிடைக்காது என்று அவன் தீர்மானமாக நம்பினான்.
 
அதனை கொண்டே அவள் திட்டினாலும்.. வெறுப்பை உமிழ்ந்தாலும்.. மனம் புண்படுத்தும் வார்த்தைகளை கொட்டினாலும்.. அவளை பொறுத்து போவதே.. கூடவே அவளை இந்நிலைக்கு மாற்றியதும் தான் தானே? “சோ.. ஐ அம் டிஸர்வ் இட்..!” என்று கூறிக் கொள்பவன்.
 
அவளோடு இருக்க வேண்டும்‌ என்று‌ தான், தான்  யார் என்ற உண்மையை அவர்கள் வீட்டில் உரைத்தான்.
 
பெரிதாக அவர்கள் மீது அவனுக்கு பந்தம் பாசம் அன்பு ஒன்றும் இல்லை..! ஆனால்.. 
 
வளர் நேசம்..
பெரும் காதல்..
அளப்பரிய அன்பு.. உண்டு அவனவளிடம்..!
 
இப்போது இப்பிரச்சனையை எப்படி கையாள்வது என்று புரியவில்லை இராவண்னுக்கு‌.
 
காரணம் ஆருஷியிடம்  சொன்னால் ஒன்று அவள் பயந்து இன்னும் நிலைமையை சீர்கெடுத்து கொள்வாள்‌. 
 
இல்லையெனில் “அனைத்துக்கும் நீ தான் டா காரணம்.!” என்று தன் மீது வெறுப்பை அதிகமாகி தன்னை இன்னும் நெருங்கி விட மாட்டாள். இரண்டுமே வேலைக்கு ஆகாது. அவளுக்கு இந்நிலையில் என் அருகாமையும் அரவணைப்பும் ஏன் என் மருத்துவ கவனிப்பும் மிக மிக தேவை என்று புரிந்தவன், அவளிடம் அவளின் உடல்நிலையை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்று முடிவெடுத்தான்.
 
 
தன் கேபினுக்கு வந்தவன், ஏற்கனவே அப்பாயிட்மெண்ட் கொடுத்தவர்களை பார்த்து பேசி அவர்களுக்கு தகுந்த மருத்துவ அறிவுரை கூறி என்று நேரம் பறந்தது. இடையே காய்தரியை அழைத்தவன், “சிஸ்டர்.. நீங்க கொஞ்சம் ஆருஷி கூட இருங்களேன்” என்றான், ஆணை இடவில்லை..! அதிகாரமாக கூறவில்லை..! 
 
அவனின் வார்த்தைகளை வைத்து உள்ளுக்குள் அவன் எவ்வளவு பரிதவிக்கிறான் என்று காயத்ரிக்கு புரிந்தது. அவரும் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்திருந்தார்  அல்லவா? ஆனால் அதனை இருவரிடமும் பகிரவில்லை.
 
“கண்டிப்பா டாக்டர். என்னோட  பெஸ்ட் ஆ கொடுப்பேன்” என்று காயத்ரி கூற,
 
“தாங்கஸ் சிஸ்டர், ஷி இஸ் கேரிங் டிவின் பேபீஸ்.. ஆல்சோ.. கார்ட் கம்பர்ஸன்” என்றான், “ஓஹ்..” என்ற காயத்ரிக்கு அவனின் இந்த பரிதவிப்பு ஏன்னென்று புரிய, சொல்லாமலே இருவருக்கும் உள்ள உறவு அவருக்கு தெளிந்தது..!
 
கண்களால் பார்த்து தான் ஓர் உறவின் அன்பை அறிய முடியும் என்று இல்லை..! சிறு சிறு செய்கைகள்.. வார்த்தைகளில் வெளிப்படும் அந்த அன்பு.. அக்கறை கொண்டே புரிந்துக் கொள்ளலாம்.
 
காய்திரியின் இத்தனை வருட அனுபவத்தில் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. வேலை அனுபவம் இல்லை.. ஒரு நல்லவனோடு அந்நியோன்யமாக வாழ்ந்து பார்த்த.. பார்க்கும் அனுபவம்.
 
“ஓகே டாக்டர். நான் ஆருஷி மேம கேர் பண்ணிக்கிறேன்” என்று அவர் விடைபெற, தயைசைத்தவன், கையை தலைக்கு மேல் வைத்து கண்களை மூடி இருந்தான்.
 
ஏதோ ஏதே சிந்தனைகள்..! பெரும் யோசனைகள்..!
 
காயத்ரி சென்ற சிறிது நேரத்திலேயே வேகமாக கோபமாக கதவை திறந்து வந்த ஆருஷியோ..
 
“என்ன நினைக்குறிங்க இரண்டு பேரும்?  அந்த காயத்ரி சிஸ்டர் என்னான்னா.. நான் எங்க போனாலும் என் கூடவே வருவேனு சொல்லிட்டு வராங்க.. கேட்டா நீங்க தான் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணா தான் சொல்றாங்க..? நான் என்ன நீங்க ஆட்டிவிக்கும் பொம்மையா?” என்று அவள் பொரிய..
 
முகத்தில் இருந்து கையை எடுத்தவன், அவளை‌ பார்க்க..
அவனின் சிவந்த விழிகளை கண்டவள்,
 
“அந்த டாக்டர்.. எனக்கு தெரியாம உங்க கிட்ட என்ன சொன்னாங்க? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க..
 
அவனோ அவளை பக்கத்தில் இழுத்து தன் எதிரே அமர வைத்தான். அவன் முகத்தை அவள் முகம் நோக்கிக் கொண்டு வந்தான். அவனது சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோதியது.! அடுத்து அவன் என்ன செய்வான் அனுமானம் அவருக்கு இருந்தது.
 
”ஐயோ.. வேணாம்.. !!” என்று அவள் மறுக்க.. விலக.. அவனை தள்ள.. 
 
“ப்ளீஸ்.. டி பாப்பா.. காலையிலிருந்து பயங்கர பிஸி.. கொஞ்சம் கருணை காட்டு டி..!” என்றவன்,  அவன் முகத்தை நோக்கி செல்ல..
 
“எனக்கு பிடிக்கல..!” என்றாள்,
 
“இட்ஸ் ஓகே.. எனக்கு புடிச்சிருக்கு”
 
“எனக்கு வேணாம்..!”
 
“இட்ஸ் ஓகே.. எனக்கு வேணும். நானே எடுத்துக்கிறேன்” என்றான்,
 
இப்போது அவளிடம் முதலில் இருந்த மறுப்பு இல்லை. ஆசை இருந்தது..! அதனை‌ மறைக்த
அவள் முகத்தை லேசாக திருப்பிக் கொண்டாள்.  
 
அவன் உதடுகள் அவள் கன்னத்தில் உரசியது. அவனது ஒரு கை அவளது கழுத்தை வளைத்திருக்க.. இன்னொரு கை அவளது வயிற்றை மென்மையாக வருடிக் கொடுத்தது.
 
“பிடிக்குதுனா பிடிக்கும்னு சொல்லி பழகு டி பாப்பா. முகத்தை திருப்பி வைக்காத..!” எனச் சிரித்தபடி தன் பக்கம் சாய்ந்து  இழுத்து அவளின் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான்..!! அவளின் பெண்மையிலும் மோகத்தின் கிளர்ச்சி அதிகமாக இருந்தது. அவன் அவளது உதடுகளை விடும்வரை.. தன் முகத்தை அவனுக்கு
வசதியாக காட்டிக் கொண்டிருந்தாள்..!
 
காதலும் அன்பும் மட்டுமல்ல..
 
காமமும் மோகமும் இருபாலருக்கும் பொதுவே..!
 
வருவான் அசுரன்...
 

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top