அசுரன் 30

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 30

 

 

“இரு டி பாப்பா.. தொட்டுப் பார்க்கிறேன்” என்று அவன் அவனது கையை அவளது நெஞ்சின் மீது வைக்க.. உண்மையில் படபடத்தது தான் இருந்தது அவளது இதயம்.

 

“ச்சீ கைய எடு..!”  அவனது கையை  தட்டி விட்டாள் ஆருஷி கோபமாக.

 

அவனும் வாய்விட்டு சிரித்தபடி “அப்புறம் நான் சொல்லுவேன் நீ என்னை திட்டுவ?" என்று அவன் கன்னக்குழியில் நாக்கை சுழற்றி அவளை பார்க்க.. அவளோ அவனை அலட்சியமாக பார்த்து,

 

“என்ன பெருசா சொல்லிட போற? நான் பாக்காதது எதுவும் புதுசா வச்சிருக்கியானு கேக்க போற? இதையே எத்தனை தடவை தான் டா கேட்ப? எனக்கு கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..!” என்ற அசால்டாக தோளைக் குலுக்கி கூறியவளைக் கண்டு அதிர்ந்தவன்,

 

“அடிப்பாவி..! என்னடி பாப்பா நீ வர வர என்னை மாதிரி ஆகிட்ட” என்றான் புன்னகையோடு..!

 

“என்ன செய்றது நான் ஒரு மனுசனோட பழகி இருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டேன். நான் பழகினது ஒரு அரக்கன் கிட்ட இல்ல.. காதல் அன்பு நேசம் எதுவும் தெரியாத.. உடலின் மோகம் காமம் மட்டுமே தெரிஞ்ச ஒரு பக்கா அரக்கன் கிட்ட..! அப்போ அவன் புத்தியில கொஞ்சமாவது எனக்கு இருக்காதா என்ன?”  என்று வார்த்தைகளால் அவனைக் குத்தினாள்.

 

“நீ என்ன குத்தி பேசினாலும் இங்கே வலிக்காது” என்பது போல அவளைப் பார்த்தவன்,

 

“ஹா ஹா அந்த அரக்கன் கிட்ட  இத மட்டும் தான் கத்துக்கிட்டீயா வேற ஏதும் கத்துக்கலையா?” என்று சரசமாக அவளது காதுமடலில் தன் மூக்கை உரசி கேட்டவனின் கற்றை மீசை முடிகளோ அவள் கன்னக்கதுப்புகளை ஊசியாய் குத்தி பதம் பார்க்க..

 

“தள்ளி போயா.. மீசை குத்துது.!” என்று அவனை ஆருஷி தள்ளிவிட..

 

“ம்ஹீம்.. உன்னால தான்டி பாப்பா நான் மீசையே இவ்வளவோ பெருசா வச்சேன். நீ தான டி கேட்ப.. நீங்க கிஸ் பண்ணுனா எனக்கு உங்க லிப்ஸ் மட்டும் இல்ல உங்க மீசை முடியும் என்னை இம்சை படுத்தனும்னு.. இப்போ என்னடி அப்படியே உல்டாவா பேசுற?” என்றவனோ அவளை பின்புறமாக அணைத்து தன் சேவ் செய்யப்படாத இரண்டு வார தாடியையும் மீசையையும் அவள் கன்னத்தில் கழுத்தில் வைத்து இழைத்து உரசி அவளை ஒரு வழியாக்கி கொண்டிருந்தான். 

 

“விடு விடு.. சொல்றேன்ல விடுயா” என்று அவள் எவ்வளவோ முயன்றும் அவனும் அசைந்தான் இல்லை.

 

இத்தனைக்கும் அவளை அழுத்தமாக பிடிக்கவும் இல்லை அவன்.

 

அவள் சூல் தாங்கிய வயிற்றின் கீழே ஒரு கையை வைத்தவன் மற்றொரு கையை அவள் கழுத்தின் மீது இறுக்கமாக வைத்துக்கொண்டு கழுத்திலும் கன்னத்திலும் மீண்டும் மீண்டும் தனது ஈர உதடுகளாலும் கற்றை மீசையாலும் தாடியாலும் உரசி உரசி இளமை தீயை பற்ற வைத்துக் கொண்டிருந்தான். 

 

அதற்குள் மீரா வந்து அவனின் அறை கதவை தட்ட.. சட்டென்று அவளிடம் இருந்து விலகி இருந்தான். ஆனால் முழுவதுமாக 

விலகவில்லை. இருவருக்கும் இடையே மிக சொற்ப இடைவெளியே..!

 

 

இருவரும் அருகருகே நின்றிருப்பதை ஒரு சுவாரசியத்தோடு பார்த்த மீராவோ “டாக்டர்.. மேடம் இப்ப ப்ரீயா தான் இருக்காங்களாம். உங்களை வர சொன்னாங்க” என்றாள்.

 

“ஓகே மீரா..! ஓபி பேஷண்ட் வந்தா நீங்க பாத்துக்கோங்க. நான் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவேன். ஓகேவா?” என்றவன்,

 

“வா பாப்பா?’ என்று ஆருஷி புறம் கையை நீட்ட..

 

“பாப்பா வா?” என்று மீரா திகைக்க..

 

தங்கள் இருவரையும் ஏதோ திரில்லிங்கான மூவி பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருக்கும் மீராவுக்கு.. தங்கள் வாழ்வை ரொமான்டிக்சைஸ் ஆக்க விரும்பாமல் அவன் கையை தட்டி விட்டு தன் சூல் தாங்கிய வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆருஷி முன்னே நடக்க..

 

இராவண்னோ இடவலமாக தலையாட்டி சிரித்தபடி பின்னே நடந்தான்.

 

மீராவிடம் லைட்டாக கண்சிமிட்டி சென்ற இராவண்னை கண்டு இப்பொழுது மீராதான் திகைத்து நின்றாள்.

 

எத்தனை எத்தனை திகைப்புகளை தான் அள்ளி அள்ளி தருவார் இந்த டாக்டர்?

 

“அச்சோ.. ஆண்டவா.. நம்ம டாக்டர் இவ்வளோ ரொமாண்டிக்கான ஆளா? இத்தனை நாள் தெரியாம போச்சே.. இப்ப இதை யார்கிட்டயாவது நான் சொல்லியே ஆகணுமே..! இல்லைன்னா என் மண்டை வெடிச்சிடுமே..! அதுவும் அந்த கடுக்கடு ஆருஷி மேமை பாப்பா  பாப்பான்னு கொஞ்சி கொஞ்சி பேசுறாரே.... ஆமா.. இந்த பாப்பாவுக்கு என்னவாக இருக்கும் அர்த்தம்?” என்று தலையை பிடித்துக் கொண்டு ஓடியது காயத்ரியிடம்.

 

“காயத்ரி அக்கா.. காயத்ரி அக்கா..” என்று காயத்ரி கை சுரண்டி கொண்டிருக்க, அப்போதுதான் ஒரு நோயாளிக்கு டிப்ஸ் மாத்திக் கொண்டிருந்த காயத்ரி அவளை முறைத்து விட்டு “வேலை செய்யும்போது டிஸ்டர்ப் பண்ணாத மீரா.!” என்று பல்லை கடித்தார்.

 

“ஐயோ.. இது ரொம்ப அவசரமாச்சே கா.. உடனே உங்களிடம் கேட்டு ஆகணும்  இல்ல இல்ல சொல்லியே ஆகணும்” என்று அவளின் பரபரப்பை கண்டு சலிப்புற்றவர்,

 

“செவிலியர்களான நமக்கு இந்த பரபரப்பு ஆகாது மீரா. கொஞ்சம் பொறுமையா இரு நான் இவங்களுக்கு வேற லைன் மாத்திட்டு வரேன். பாரு இவங்க கை ரொம்ப வீங்கிருச்சு” என்று மெதுவாக அந்த நோயாளகயின்  கையில் இருந்த சிலைன் ஊசியை மெல்ல வெளியே எடுத்து, வேறு ஒரு இடத்தில் நரம்பை கண்டுபிடித்து பொறுமையாக வேறு ஊசி போட்டியிட்டு வந்த காயத்ரியை பார்த்தவளுக்கு பொறுமை பறந்து போய் வெகுநேரமாகிறது. 

 

ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்தே என்றாள் மீரா‌.

 

அதற்குள் ஒன்றிரண்டு செவிலியர்கள் “என்ன மீரா உங்கள் டாக்டர் சாரும்.. ஆருஷி மேடமும் ஒண்ணா வந்தாங்களாம்.. அதுவும் அவங்க கர்ப்பமாம்.. என்ன விஷயம்? உனக்கு தெரியாம இருக்காதே சொல்லு.. சொல்லு..” என்று கேட்டு அவளை நச்சரிக்க தொடங்க..

 

“இப்ப சொல்லு..” என்று தன் கையை துடைத்துக் கொண்டே வந்த காயத்ரி, மீராவை சுற்றி நின்றவர்களை எல்லாம் பார்த்து “என்ன விஷயம்?” என்று கேட்டு அவர்களும் சொல்ல..

 

“ஓடுங்க எல்லாம்.. இன்னும் ஒரு நிமிஷம் நின்னீங்க அவ்வளவுதான் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் சம்பளம் கட்.. பட் வேலை உண்டு..!” என்று மிரட்ட, கல் இருந்த காக்காய் கூட்டம் போல அவர்களெல்லாம் சென்றதும் மீராவை முறைத்து பார்த்தார். 

 

“நான் என்ன பண்ணட்டும் க்கா? அவங்களுக்கும் ஆர்வம் போல?” என்று சிரித்தவள், 

 

இராவண்னின் கேபினில் நடந்தவற்றையெல்லாம் கூறி “ஆமா கா.. இப்ப இந்த பாப்பாவுக்கு என்ன அர்த்தம்? வீட்ல செல்லமா சின்ன பிள்ளைகளை கூப்பிடுறது தானே இந்த பேரு? டாக்டர் ஏன் மேம அப்படி கூப்பிடுறாரு?” என்று தெரிந்து ஆக வேண்டும் என்று கட்டாயம் அவள் முகத்தில் தெரிய, காயத்ரிக்கு சிரிப்புதான் வந்தது. 

 

“அதுவா.. பொதுவா.. தங்கச்சியை கூட பாப்பான்னு தான் சொல்லுவாங்க என் வீட்டுக்காரர் அவர் தங்கச்சி எல்லாம் பாப்பா என்று தான் கூப்பிடுவாரு.. ஆனா பாரு.. என்னையும் என் வீட்டுக்காரர் செல்லமாக அப்பாடி தான் கூப்பிடுவாரு” என்று போற போக்கில் காயத்ரி குண்டை தூக்கி போட்டு போக..

 

“ஏதே? தங்கச்சியா?? வாய்ப்பே இல்லை..! அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோசா நின்னுட்டு இருந்தாங்க.. நீங்க போய் தங்கச்சினு சொல்கிறீர்களே.. வாய்ப்பே இல்லை.. ஆனா.. அப்படியும் இருக்குமோ??  இவங்களுக்குள்ள என்ன நடந்துச்சு என்ன இருக்குன்னு சீக்கிரமா நான் தெரிஞ்சுட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன்.. பை.. பை‌..” என்று ஓடியே மீராவை பார்த்த காயத்ரி,

 

“டாக்டர் ராவண்.. உங்க ஒருத்தரால இந்த ஹாஸ்பிடல்ல எப்படி மாறி இருக்குனு பாருங்க.. அவ அவ உங்களுக்கும் ஆருஷி மேம்க்கும் என்ன இருக்குன்னு தெரியாம தலைய பிச்சிக்கிறாளுங்க? இது எங்க போய் முடியுமோ..!” என்று புலம்பிக் கொண்டு நின்றார்.

 

எல்லாரையும் தலையை பிய்க்க வைத்தவனோ சாருபாலா மருத்து

வர் முன்னே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

 

வருவான் அசுரன்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top