அத்தியாயம் 29
"ஹேய் சில்.. பாப்பா” என்றான் இராவண், அவளின் அகத்தை அறிந்து உரைத்தான் அரனாய்..!
“உனக்கு என்ன மேன்.. நீ என்ன வேணாலும் சொல்லுவ ஏன்னா நீ ஆம்பள இல்ல.. ஆனா நான்.. இதுக்கு தான் நான் அங்க ஓடி ஒளிஞ்சேன்” என்று அவள் கண்ணை கசக்க..
“சரி ஓடி ஒளிஞ்சி? நாளைக்கு புள்ள பெத்துட்டு வரும்போது என்ன சொல்லுவ? இதே சமூகத்தை தான் நீ பேஸ் பண்ணனும் பாப்பா? இது என் குழத்தை இல்ல நான் தத்து எடுத்துட்டு வந்தேனு பொய் சொல்லுவியா?” என்று கேட்டதும் அவள் அதிர்ந்து குழப்பமாக அவனைப் பார்த்தாள்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. காதலுக்கு சாட்சியாக தாலியை கட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவனுடன் மனைவியாய் மனதார தான் வாழ்ந்தாள். ஆனால்.. அவனின் மாறுபாட்டில்.. அவளின் வாழ்வு தடம் மாற.. இப்போது அவனையும் ஏற்க முடியாமல்.. காதல் பரிசாக முளைத்த குழந்தையையும் விட முடியாமல் இந்த சமூகத்தின் பார்வைக்கு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறாள்.
என்னதான் பணம் இருந்தாலும் சமூகத்தில் உயரிய மதிப்பு இருந்தாலும் மற்றவர் வாய்க்கு அவலாகிப் போனோமே என்ற கவலை வேறு அவளுக்கு..!
“சீ பாப்பா.. ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி தான் அதை பத்தி நல்லா யோசிக்கணும்.. ஆழ்ந்து சிந்திக்கணும்..! அதே அந்த முடிவை எடுத்த பின்னாடி எதுக்கும் கவலை பட கூடாது. எதையும் எதிர்கொள்ள தில்லு வேணும் மனசுல.. அப்படி இல்லன்னா நீ எல்லாம் இந்த சொசைட்டில சர்வே பண்ணவே முடியாது” என்றவன், அவள் கையை அழுத்திப் பிடித்தான்.
அந்த அழுத்திய பிடியை விலகாமலே அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
“என்னடா அதிசயம்?? டாம் அண்ட் ஜெர்ரி ரெண்டு பேரும் ஒண்ணா கை கோர்த்திட்டு வராங்க… அதுவும் ஆருஷி மேடம் ப்ரக்னேன்ட்டா??” என்று மருத்துவமனையே வியந்து பார்த்தது அவர்களை..!
அவளுக்கும் சற்று கூச்சமாக இருந்தது. அதிலும் யாரேனும் ஏதும் கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று படபடப்பாகவே இருந்தது.
ஆனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அவளை கைப்பிடித்தே அழைத்து வந்தான் இராவண்.
நேராக தன் கேபினுக்கு வந்தவன் அவளை அமர வைத்து அதுவும் தன் இருக்கையிலேயே அமர வைத்தான். பெல்லை அடித்த அடுத்த நொடி ஜீனி போல் அவன் முன் பிரசன்னமானாள் மீரா.
கண்களில் அத்தனை பரவசத்துடன்..!
இடையில் மும்பை அங்கிங்கு என்று இராவண் சுற்றினாலும் எப்பொழுதும் தன்னுடைய பேஷண்டை மீரா மூலம் கண்காணித்துக் கொண்டிருப்பான்.
இராவண் இங்கே இல்லாத சமயத்தில், ஏதேனும் கிரிட்டிகல் என்றால் "சாருபாலா மேடமிடம் அழைத்துச் சென்று ஒப்பினியன் கேளு மீரா" என்று சொல்லி அனுப்பி வைத்து விடுவான்.
மற்ற மகப்பேறு மருத்துவர் போல இவன் வெறும் சாதாரண குழந்தை பேறு மட்டுமே பார்க்கவில்லையே..!
குழந்தை இல்லா தம்பதிகளுக்கு அந்த குழந்தைகளை செயற்கை முறையில் உருவாக்கி பல கஷ்டங்கள் போராட்டங்களுக்கிடையே அவர்களுக்கு அந்த கருவை தங்க வைத்திருக்கிறவன் அவன்..!
அதனால் அவர்களது முழு பொறுப்பும் அவனுடதே..! அதி கவனத்துடன் எப்பொழுதும் அவன் கண்கானித்துக் கொண்டே இருப்பான்.
“குட் மார்னிங் டாக்டர்!” என்ற மீராவின் கண்களோ குறுகுறுவென்று ஆருஷியையே பார்த்தது. ஆனால் ஆருஷியால் அவளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
இந்த மருத்துவமனையில் கொஞ்ச நாட்கள் முன் வரை இருவரும் எலியும் பூனையாக அடித்துக் கொண்டும்.. ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டும்.. இருந்திருக்கிறார்கள்.
இன்று இருவரும் ஒத்துமையாக வந்தால் என்ன நினைப்பதாம்?
அதுவும் இவளது கர்ப்பம் அங்கே யாரும் எதிர்பார்க்காத ஒரு நிலை அது..!
இந்நேரம் இந்த மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்குள் என்னென்னவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று ஒரு அனுமானம் இருந்தது ஆருஷிக்கு.
அதுவும் இந்த மீராவிடமே எத்தனை முறை ராவண் பற்றி அத்தனை பேசியிருக்கிறாள்.. இன்று அவள் முன்னாலே அவனது கேபினில் அதுவும் உரிமையாக அவனது இருக்கையிலேயே ஜம்பமாக இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறோமே என்று சற்று சங்கடமாகவும் இருந்தது அவளுக்கு.
ஆனால் அந்த சங்கடம் வெங்காயம் எல்லாம் ஒன்றுமே இல்லை இராவண்னுக்கு.
“ஹான் மீரா குட் மார்னிங். எனக்கு சாருபாலா மேம் கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வேணுமே?” என்று அவன் இலகுவாக கூற..
அவளோ குறுகுறு என்று அவனை பார்த்துக்கொண்டு “கண்டிப்பா சார்..! ஆனா என்னனு சொல்லி கேட்கிறது?” என்று மெல்லிய குரலில் கேட்டால் ஒரு ஆவலோடு..!
அந்த ஆவல் என்பது விஷயத்தை இவனிடமிருந்து கறந்து சாருபாலாவை பார்க்க செல்லும் முன் காயத்ரி விஜிதா என்று இன்னும் பலரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே..!
“எனக்கு தானே எங்க டாக்டர் பத்தின விஷயம் முதல்ல தெரியும்..! அதுவும் எங்க டாக்டர் என் கிட்ட அவ்வளோ க்ளோஸ்..” என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டுமே.. என்று அத்தனை எண்ண ஓட்டங்கள் அவளிடம்.
அதையும் தாண்டி ஒரு சின்ன வெற்றி புன்னகை அவள் முகத்தில்..!
‘இந்த ஆருஷி மேம் எங்க டாக்டர என்னன்னெல்லாம் பேசி இருப்பாங்க.. இப்ப கடைசியில் அவங்களே எங்க டாக்டர் கிட்ட விழுந்திட்டாங்களே!’ என்று இன்னும் என்னென்னவோ எண்ணங்கள் அவள் எண்ணத்தில் உலா போயின..!
இராவண், மீராவுக்கு மட்டுமல்ல அங்கு வேலை பார்க்கும் நிறைய பெண்களுக்கு ஆதர்ஷ நாயகன்..!
தன் வேலையாகட்டும் அதை அவன் எடுத்துச் செல்லும் விதமாகட்டும் அவர்களை நடத்துமுறையாகட்டும் அனைத்துமே ஒரு பக்கா ஜென்டில்மேன்..!
அவன் பார்வையில் கள்ளத்தனம் இருக்காது..! அவன் அருகே வேலை செய்யும்போது அசூசையாக உணர முடியாது..!
இது போதும் அல்லவா?
அதனால் அங்கே அவனுக்கு பல விசிறிகள் உண்டு. ஆனால் அந்த க்ரிஷ் என்பது அவனை ஆதர்ஷிப்பது மட்டுமே ஒழியே.. அவனிடம் காதலை சொல்வதோ.. அவனில் காதலில் விழுவதோ அல்ல..!
அவளின் எண்ணப் போக்கை புரிந்து கொண்டான் இராவண்,
“ஹே நாட்டி..!” என்று சிரித்த ராவண் “நம்ம ஆருஷி மேடமுக்கு தான். அவங்க எப்ப ஃப்ரீயா இருப்பாங்கன்னு கேட்டுட்டு கண்டிப்பா எனக்கு இன்பார்ம் பண்ணனும்” என்றவன் அதற்கு மேல ஒரு சிறு குறிப்பு கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை..!
“அவ்வளவுதானா டாக்டர்?” என்று பீஸ் போன பல்பு போல நின்றிருந்த மீராவை பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
“ஏன் வேற ஏதாவது சேர்த்து சொல்லணுமா?” என்றவன் ஆருஷி பக்கம் திரும்பி “நீயே வேணுமா மேடம் கிட்ட கேட்டுக்கோயேன்?” என்றான் மீராவிடம்.
“எதே?” என்று அதிர்ந்து பார்த்தாள் மீரா.
இப்பொழுது அப்பட்டமாக இராவண்னை முறைத்த ஆருஷி.. அதே பார்வையை மாற்றாமல் மீராவை பார்த்து, “எனி க்கொஸ்டின்ஸ்?” என்று சற்று அதிகாரமாகவே கேட்க..
அவளோ பயந்து “நோ டாக்டர்.. நோ.. மேம்..! நான் இப்பவே போய் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வரேன்” என்று அவள் வேகமாக ஓடிவிட,
“சில்லி கேர்ள்!” என்று சிரித்தான் ராவண்.
“சில்லி கேர்ளா.. எல்லாம் உங்க ரசிக்க பட்டாளங்க..! யூ நாட்டினு நீங்க சொன்னது அவளுக்கு யூ பியூட்டின்னு காதுல கேட்டு இருக்கும். இந்த மாதிரி ஒருத்தியை லவ் பண்ணி அவளுக்கு வாழ்க்கையை கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் டா என் லைஃப்ல குறுக்க வந்து என்னை இப்படி ஆக்கி வைச்சிருக்க?” என்று தன் பெருத்த வயிற்றை அவன் முன்காட்டி வித விதமாய் பேசினாள் ஆருஷி.
அவனும் மெதுவாக அவள் அருகில் வந்து அவள் மூக்கு நுனியை பிடித்து மெல்ல ஆட்டி “என்ன செய்வது எனக்கு இந்த படபட பட்டாச தானே புடிச்சிருக்கு. நான் ஏன் அந்த மாதிரி பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்? ஃபார் அ சேஞ்ச்.. நீ எனக்கு வாழ்க்கை கொடேன் பாப்பா” என்றவனின் காதல் குழைவில் சரிய இருந்த மனதை இறுக்கிப் பிடித்தாள் ஆருஷி
“சரிதான் போயா.. அதெல்லாம் உன் கனவுல கூட நினைக்காதே..!” என்றாள்.
“ஆமா இப்ப என்னத்துக்கு என்ன சாருபாலா மேடம் கிட்ட கூட்டிட்டு போற?” என்று அவள் கேட்க..
“நீ மும்பையில பார்த்த வரைக்கும் எல்லாம் போதும். உன்னோட டெலிவரி இங்க தானே அதுக்கு தான் சாருபாலா மேடம் கூட்டிட்டு போறேன்.. ஒபினியன் அதோட பர்தரா ஏதும் டெஸ்ட் எடுக்கனும்னாலும் எடுக்கலாம்” என்றான்.
“நீயும் ஒரு கைனகாலஸ்ட் தானே அப்ப நீ என்னை பாக்கலையா?” என்று மனதில் எழும் குறுகுறுப்பு அடக்கியபடி அவள் கேட்க..
“ம்ஹூம்.. எனக்கும் ஆசை தான். இந்த பெரிய வயித்துல இருக்கிற என் குட்டி பாப்பாவ தொட்டு ஸ்பரிசிக்க ஆசைதான். ஆனா அதை தாண்டி உள்ளுக்குள்ள கொஞ்சமே கொஞ்சம் பயமா இருக்கு டி பாப்பா” என்றவன் அவள் கையைப் பிடித்து தனது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
“ஒரு டாக்டர்.. இவனுக்கே ஏன் பயம் வர வேண்டும்?”
அவனின் விசித்திரமான சைகையை கண்டு ஏன் என்று குழம்பியபடி அவள் கேட்டாள்.
“குழந்தைக்கு எல்லாம் நல்லபடியா இருக்கணும்.. எந்த அப்நார்மல்டிஸும் இருக்கக் கூடாதுன்னு..” என்றான் மெல்லிய குரலில்..!
“என்ன? இவனே இப்படி சொல்கிறானே?” என்று பயந்து போனது புதிதாய் தாய்மை கொண்ட ஆருஷியின் மனது.
அவளுக்கு படபடப்பாகி போக “அது.. அதுலாம் ஒன்னும் இல்ல.. நான்தான் ஏற்கனவே மும்பையில் செக் பண்ணி இருக்கேன் தானே? நீ கூட தான் அந்த டாக்டர் கிட்ட வந்து பேசுனியே?” என்றாள் படப்படப்பாக..!
ஆம் என்ற தலை அசைத்தான்.
மெல்ல நடந்து வந்து அவள் முன்னால் இருந்த மேசையில் அமர்ந்தவன், “எதுவும் இல்ல தான்.! ஆனாலும் ஒரு சின்ன பயம். அது சாருபாலா டாக்டர் செக் பண்ணிட்டு எல்லாம் ஓகே ன்னு சொன்னா எனக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்கும்” என்றதும் அருகில் இருந்த அவனது நோட்பேட்டை எடுத்து அவன் புஜத்திலேயே வேக வேகமாக இரண்டு அடி போட்டாள்.
“நீ எல்லாம் மனுசனாடா? இல்லை டாக்டராடா? இப்படித்தான் புள்ளதாச்சி பிள்ளைய பயமுறுத்துவியா? எனக்கு கொஞ்ச நேரத்துல திக்கு திக்குனு ஆயிடுச்சு.. பாரு எப்படி எல்லாம் வேகமாக துடிக்குது என் ஹார்ட்?” என்றாள் அவள்.
“இரு டி பாப்பா.. தொட்டுப் பார்க்கிறேன்
” என்று அவன் அவனது கையை அவளது நெஞ்சின் மீது வைக்க.. உண்மையில் படபடத்தது தான் இருந்தது அவளது இதயம்.
வருவான் அசுரன்...
