அசுரன் 27

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 27

 

 

 

“ஆரு.. ஆரு..” என்று காலையில் கதவைத் தட்டும் சத்தத்தில் தான் மெல்ல கண்களை கசக்கி விழித்தாள் பாவை. 

 

“ஹான்.. அத்த.. எழுந்துச்சிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றேன்..” என்றவள் புரண்டு படுக்க முயல.. முடியவில்லை.

 

அப்பொழுது தான் தெரிந்தது ஆக்டோபஸ் போல தன்னை வளைத்து பிடித்து உறங்கிக் கொண்டிருக்கிறான் இந்த காதல் ராட்ஷஸன் ராவண் என்று..!

 

“யோவ்.. எடுயா கையை” என்று அவள் அவன் மீதி இருந்து கையை எடுக்க முயற்சித்து தோற்றாள்.

 

“ஏன் பாப்பா.. எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க ஹஸ்பெண்ட் இல்ல லவ்வர் இப்படி பின்ன பக்கமா இறுக்கி அணைச்சிட்டு தூங்கனா ரொம்ப பிடிக்கும்னு ஒரு ஆய்வு சொல்லுது.. நீ என்னடான்னா கைய எடுனு கத்துற? சோ வொர்ஸ்ட் பாப்பா நீ ” என்றவன் அவளை விடுத்து அந்த மெத்தையில் விஸ்தாரமாக படுத்திருந்தான்.

 

அவனை திரும்பி ஒரு எள்ளல் பார்வை பார்த்தாள், “எந்த பொண்ணுக்கும் தன்னை கட்டிபோடும், கட்டுபடுத்தும் ஆணை பிடிக்காது‌. அதிலும் தூங்கும் போது.. நோ வே..! எவனோ இலக்கியவாதி இல்லனா பெண்ணியம் பேசுறேனு சொல்ற கிறுக்கன் சும்மா இருக்காம இந்த மாதிரி பினாத்தி இருப்பான். அதெல்லம் கேட்டுட்டு நீ எதையாவது ட்ரை பண்றேனு என் கிட்ட வாங்கி கட்டிக்காதே..! ஸ்டே அவே” என்றவளின் பேச்சில்,

 

“பார்றா பாப்பாவ.. வரவர பாப்பா மெச்சூர் ஆயிட்டு” என்று அவன் சிலாகிக்க..

 

“வலிக்க அடி விழும் போது மெச்சூரிட்டியும் தன்னாலே வந்துருது..!” என்றவளின் கண்களில் தெரிந்த வலியில் பாய்ந்து சென்று அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான். 

 

“ஸாரி டி.. ஸாரி டி பாப்பா.. இருந்தாலும் நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது தப்புதான்.. ப்ளீஸ்.. முடிஞ்சா அந்த நாள மறந்துட்டேன்” என்று கெஞ்சினான்.

 

“மறக்கிறதா அதையா? அதுவும் கூறுவாளால முதுகுத்தண்டுல குத்துற மாதிரி நீ பேசின பேச்செல்லாம் வாழ்நாளுல மறக்க முடியுமா?” என்று விரக்தியாக சிரித்தவள், “உன்னை இங்கே என் ஆச்சிக்காக மட்டும்தான் அனுமதித்து இருக்கிறேன்.. மைண்ட் தட்” என்றவள், 

 

“அப்புறம் இன்னும் ஒன்னு.. மொதல்ல இப்படி எப்ப பாத்தாலும் பாஞ்சு வந்து கட்டி பிடிக்கிற வேலைய நிப்பாட்டு மேன். ஜஸ்ட் இரிடேட்டிங்..!” என்று அவனை தள்ளிவிட்டாள்.

 

“அப்படியெல்லாம் நீ தள்ளி விட்டா ரோசம் கொண்டு ஓடி விடுவேனு நினைக்காத..! சூடு சொரணை ரோசம் இது எல்லாத்தையும் இந்தியாவுக்கு பிளைட் ஏறும் போது கழட்டி கடலை எறிஞ்சிட்டு தான் வந்தேன்” என்றவனை அவள் கேவலமாக பார்க்க..

 

“நீ எப்படி பார்த்தாலும் அது எனக்கு காதல் பார்வை தான் டி பாப்பா” என்று அவளது தாடை பற்றி கொஞ்சியவனின் கையை தட்டி விட்டாள் ஆருஷி.

 

அவள் எவ்வளவு அவனை கழுவி கழுவி ஊத்தினாலும் அதையெல்லாம் துடைத்து போட்டு கொண்டு, அவன் என்ன விரும்புகிறானோ அதை தான் அவளுக்கு செய்து கொண்டு இருந்தான். அவளும் அதனை விரும்புவாள் என்று அவனுக்கு தெரியும்.

 

ஆனால் அதை வெளி காட்டிக்கொள்ள தான் அவளுக்கு இப்பொழுது பெரிய தடை ஒன்று இருக்கிறதே..! அந்த தடையை உடை என்று அவனது மனம் ஒவ்வொரு முறையும் துடித்துக் கொண்டிருக்கிறது. 

 

இவன் தன் நிலையில் யோசித்துக் கொண்டிருக்க.. அந்நேரத்திற்குள் குளியலறையில் தன்னை சுத்தப்படுத்தி வந்த ஆருஷி கதவை திறந்து பார்க்க அங்கே ரூபிணி நின்று இருந்தார். 

 

“ஏன் அத்த அந்த ட்ரேயை கையிலேயே வச்சிட்டு நிக்கிறீங்க? வச்சுட்டு போக வேண்டியது தானே? நான் எடுத்து குடிச்சுக்க மாட்டேன்னா.. வேற வேலையாளுங்க யாராவது எடுத்துட்டு வர சொல்ல வேண்டியது தானே? நீங்க எதுக்கு இப்ப தூக்கிட்டு மேல வந்தீங்க?” என்று அவள் அக்கறையாய் கேட்டுக் கொண்டிருக்க..

 

அவரின் பார்வையோ உள்ளேயே எட்டி எட்டி பார்த்தபடி இருந்தது. முதலில் அதை கவனிக்காதவள், பின் கவனித்து “என்ன அங்க உள்ள எட்டி எட்டி பாக்குறீங்க?” என்று கேட்க..

 

“அதான் அந்த தம்பி ராவன் இருக்கிறாரானு பார்க்கிறேன்” என்று அவர் அப்பவும் கண்களை அங்கேயே துலாவியப்படி கேட்டார்.

 

“அதெல்லாம் இருக்காரு.. இருக்காரு.. திவ்யமா இருக்காரு. என் உயிரை வாங்கிகிட்டு” என்ற அவள் அவர் கையில் இருந்து ட்ரேயில் உள்ள காஃபியை எடுத்துக்கொண்டு செல்ல..

 

“ஹேய்.. ஆரு.. அது உனக்கு இல்ல” என்று அவர் சொல்லி முடிக்க முன், அவள் அந்த காஃபியை பருக ஆரம்பித்திருக்க..

 

அதற்குள் அந்த காபியை கைப்பற்றி அருந்த ஆரம்பித்து இருந்தான் ராவண். 

 

“உன்னை காலையில காபி குடிக்காதுன்னு சொன்னா நீ கேட்க மாட்டியா?” என்று அவளை அதட்டியவன் அவள் பின்னால் இருந்த ரூபிணியை பார்த்து, அவரை என்ன சொல்லி அழைப்பது புரியாமல் “நீங்க ஏன் அவளுக்கு காலைல காஃபி கொண்டு வந்து கொடுக்குறீங்க? ஹெல்த் ட்ரிங்க் ஏதாவது கொண்டு வந்து கொடுக்கலாம்ல?” என்று கேட்டான். 

 

“ஐயோ தம்பி..! அது நான் அவளுக்கு எடுத்துட்டு வரவே இல்ல.. அந்த காபி நான் உங்களுக்கு தான் கொண்டு வந்தேன். அவ தான் எடுத்து குடிச்சிட்டா” என்றார் ரூபிணி அப்பாவியாய்.

 

தனனா.. தனனானான..‌ என்ற பிஜிஎம் ஓட ஸ்லோ மோஷனில் திரும்பி அத்தையை பார்த்தாள் ஆருஷி.

 

“ஒரே ஒரு நாள் இல்ல இல்ல.. ஒரே ஒரு ராத்திரி தான் இவன் வந்து இங்க தங்கினான். அதுக்குள்ள எனக்கு காலைல கிடைக்க வேண்டிய காஃபியை இப்படி ஒட்டுமொத்தமா அவனுக்கு தாட்டி விட்டுட்டு.. இதுல அவனுக்கே அவனுக்கு கொண்டு வந்தேன்னு பெருமை வேற..” என்று அத்தையை பார்த்து பல்லை கடித்துக்கொண்டு அவள் பேச..

 

“இங்க பாரு ஆரு.. இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது. நீயாச்சு அத்தையாச்சு.. எதா இருந்தாலும் அவங்க கிட்ட போய் கேட்டுக்கோ.. அவங்க தான் இந்த காஃபிய ஸ்பெஷலா பேரனுக்கு போட்டு கொடுத்தாங்க” என்றதும்,

 

அவள் மூக்கு விடைக்க “இந்தா போறேன் கீழே.. இருக்கு அந்த வள்ளியம்மைக்கு” என்று செல்ல முயன்றவளின் கையில் ரூபிணி “இந்த சத்துமாவு பால் குடிச்சிட்டு அதுக்கப்புறம் போ.. போய் தெம்பா சண்டை போடு” என்றார். 

 

அவளும் வாங்கி அதை வேகமாக குடித்துவிட்டு “வள்ளியம்மை.. வள்ளியம்மை..” என்று கத்திக் கொண்டு கீழே சென்றார். 

 

மருமகளின் அந்த வீம்பில் தெறித்த அழகினை கண்ணெடுக்காமல் அவர் பார்க்க.. அவர் முன் சொடுக்கிட்டவன் “என்ன ஓவரா என் ஆள நீங்க சைட் அடிக்கிறீங்க? தப்புங்க.. அதெல்லாம் ரொம்ப தப்புங்க” என்றான் ராவண்.

 

“எது நான் சைட் அடிக்கிறனா? நானெல்லாம் என் புருஷனையே சைட் அடிச்சது இல்ல தம்பி.‌ நீங்க வேற?” என்று அவன் இலகுவாக சொன்னதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு அவர் பதில் கூறி செல்ல, 

 

“நல்லவேளை ப்பா.. நீங்க என் அம்மாவை கட்டுனீங்க.. இந்த வீட்டில் மட்டும் இருந்தீங்கனா.. இவங்கள மாதிரி ஒரு ஆளத்தான் உங்க அப்பா உங்களுக்கு கட்டி வச்சிருப்பாரு.. லவ்னா என்னனே தெரியாமலே நீங்க வாழ்ந்து இருப்பீங்க” என்ற தலையாட்டி அவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அவன் குளித்து உடை மாற்றி கீழே வரும் பொழுது ‘கொண்டா.. கொண்டா இன்னும் அண்டா கொண்டா..’ என்று குண்டு குண்டு பூரியை வைத்து அடுக்கி கொண்டு இருந்தாள் ஆருஷி.

 

வெகு நாள் கழித்து வந்த பேத்திக்கு அவள் விருப்பப்பட்டது போல அவளுக்கு பிடித்தமான பதார்த்தங்களை தயார் செய்து பக்கத்தில் நின்று பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. 

 

“ஏதோ எனக்கு புடிச்ச சாப்பாடு எல்லாம் காலையில செஞ்சிருக்கீங்கன்னு தான் உங்கள மன்னிச்சு விடுறேன் மிஸ்ஸஸ் வள்ளியம்மை..” என்று காலையில் காஃபி கிடைக்காத கோபத்தில் வந்தவளுக்கு, அவளுக்கு முன் அவளுக்கு பிடித்த பதார்த்தங்களை காட்டியதும் தான் காஃபி பேய் இறங்கியது.

 

கிரிதரனும் சுக்ரேஷூம் இராவண்னுக்காக காத்திருந்தார்கள் சோபாவிலேயே.. இவன் கீழே இறங்குவதை பார்த்து “வாங்க தம்பி” என்று அழைத்தார் கிரிதரன்.

 

சுக்ரேஷ் “வாங்க ப்ரோ சாப்பிடலாம் உங்களுக்காக தான் நாங்க வெயிட்டிங்” என்றான்.

 

இருவரையும் திரும்பி ஒரு ஆச்சரிய பார்வை பார்த்தவன்,  வேறு எதுவும் சொல்லவில்லை. மெல்ல தலையசைத்து நடந்தான்.

 

இப்படியும் இங்கே இருந்தால் மட்டும்தான் ஆருஷியின் பிரசவ நேரம் அருகே இருக்க முடியும். ‘இல்லையென்றால் இந்த ராட்சசி கண்டிப்பாக என்னை அவள் பக்கத்தில் அலோ செய்யவே மாட்டாள்’ என்று புரிந்துதான் இங்கே வந்தான். 

 

‘அதுவும் தப்பு செய்தவரை விட்டு தப்பு செய்யாத இவர்கள் மீது ஏன் என் கோபத்தை காட்ட வேண்டும்? இவர்களெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை.!’ என்பது போல மெல்லிய தலையாட்டலுடன் டெயனிங் ஹால் நோக்கி சென்றவன், அங்கே ஆருஷி தட்டில் இருந்தவற்றை பார்த்து “ஓஹ்.. நோ..!” என்று அலறி ஓடினான்.

 

“என்னடி இது? தட்டில் அந்த காலத்து பாட்டில் வர மாதிரி அடுக்கி வச்சிருக்க..” என்று அவன் கோபப்பட..

 

“யோவ் கண்ணு வைக்காதயா.. நானே ரொம்ப நாள் கழிச்சு எங்க பாட்டியோட கை வண்ணத்துல உருவான இந்த குண்டு குண்டு பூரியை ஆசை தீர சாப்பிடலாம்னு எடுத்து வச்சிருக்கேன். கை வச்ச நீனு.. அவ்வளவுதான் பார்த்துக்கோ?” அவள் விரல் நீட்டி மிரட்ட.. நீட்டி அவ்வல் விரலில் தன் விரலைக் கோர்த்தவன் ஒரு சுற்று சுற்றி, 

 

“என்னது எடுத்து வச்சிருக்கியா? நீ அடுக்கி வச்சிருக்க..!” என்றவனின் பேச்சில் அவள் தன் தட்டை பார்த்தாள்.

 

“அப்படி ஒன்னும் நான் அடுக்கி வைக்கலையே.. வெறும் அஞ்சு பூரி தான் இருக்கு” என்றாள்.

 

“அது புள்ள ஆசையா சாப்பிடணும்..” வள்ளியம்மை சொல்ல அவரை திரும்பி பார்த்தவன் பின்பு ஆருசியை முறைத்து

 

“ஏற்கனவே நைட்டெல்லாம் சரியா டைஜஸ்ட் ஆகாம வாந்தி எடுத்துட்டு இருந்தே.. இப்ப காலையிலேயே இவ்வளவு எண்ணெய் ஐட்டமா? இதுல எங்கடி ப்ரோட்டீன் இருக்கு எல்லாம் கார்ப்ஸ்..” என்றான் அதி தீவிரமாக அவள் தட்டில் உள்ளதை ஆராய்ந்து..

 

“இங்க பாருங்க இந்த பூரி கோதுமையினால ஆனது. கோதுமை பைபர் ஓகேவா? இதுக்கு தொட்டுக்க டால்தான் தொட்டுக்குறேன்.. அது புரோட்டீன் ஓகேவா? பத்தாததுக்கு தயிர்ல வெள்ளரி போட்டு இருக்கு. அது ப்ரோபயாட்டிக் தானே? பத்தாத்துக்கு எங்க ஆச்சி நல்லா வெள்ள உளுந்த பஞ்சு போல ஆட்டி சும்மா கும்மு கும்முன்னு பணியாரம் செஞ்சு வச்சிருக்காங்க.‌. அதுக்கு தொட்டுக்க நிலக்கடலை சட்னி..! பாத்தீங்களா எல்லாமே பேலன்ஸ் டயட் தான் வச்சிருக்காங்க.. சும்மா அது நொட்டை இது நொள்ளனு ஏதாவது சொல்லிட்டு இருந்தீங்க அவ்வளவுதான்..! தள்ளி போயா புள்ள சாப்பிடுவதை கண்ணு வைக்காதே..!” என்ற அவள் சா

ப்பாட்டில் தீவிரமாக அவளையே கைகட்டி பார்த்து நின்றிருந்தான் முறைப்பாக ராவண். 

 

 

வருவான் அசுரன்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top