அத்தியாயம் 26
அவனது நீண்ட கரங்களோ அவளது பெருத்த வயிற்றை மிக மிக மென்மையாக வருடியது.
அவளின் பின்புறமாக வந்து கட்டியணைத்தவன், அவளின் பின் கழுத்தின் கூந்தலை விலக்கி முத்தமிட்டவாறே.. “எனக்கு இந்த பெரிய வயித்த பார்க்கணும் டி பாப்பா..! என் கைபட்டதும் சிலிர்த்து போய் சிணுங்கும் உன் பொன் முடிகள பார்க்கணும்.. என் பாப்பாவே ஒரு பாப்பாவ சுமக்குற அந்த வயித்த பார்க்கணும் டி.. உன் இந்த அழகு வயித்துல அங்க இங்கனு நீந்துற நம்ம பாப்பாவ பார்க்கணும் டி.. நான் கை வைக்கும் போது நம்ம குட்டி பாப்பா உணருதானு நான் பாக்கணும்.. அப்படி அது உணரும்போது நான் கையை அங்கே இங்கே நகர்த்தும்போது அந்த குட்டியோடு அசைவுகளும் அங்கே இங்கே நகரும் பாத்தியா அதை பாக்கணும் டி பாப்பா.. அந்த குட்டியோட அசைவுக்கு ஏத்த மாதிரி உன்னோட வயிறு கொலுக்கு மொழுக்குனு இங்கேயும் அங்கேயும் ஏறி இறங்கும் அந்த அழகை பார்க்கணும் பாப்பா..” என்றவனோ தன் நெடுநாளை ஆசையை அவள் பின் கழுத்தில் உதடுகளால் வட்டம் இட்டபடியே கூறிக் கொண்டிருந்தான்..
ஆருஷியோ அவனின் இந்த ஆசையில் பதில் கூறாமல் திகைத்து நிற்க..
அவள் கழுத்தை செல்லமாக கடித்தவன், “சொல்லுடி பாப்பா.. பதில் சொல்லு. ஒரு அப்பாவுக்குள்ள நியாயமான ஆசை தானே? என் கோரிக்கையை ஏத்துக்க மாட்டியா டி பாப்பா” என்றவன் அப்படியே அவளின் டீசர்ட்டினை மேலே தூக்கி எனது அவளது வயிற்றில் தனது சுடான கைகளால் வருடினான்.
அவ்ளோ உணர்வு மேலிட “இராவணாஆஆஆஆஆ” என முனங்கினாள். அவளது கழுத்தை நாவால் வருடிக்கொண்டே “சொல்லு டி பாப்பா.. எனக்கு பார்க்க வேணும் டி” என்றான் ஹஸ்கி குரலில்.
அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். அவனுக்கு இல்லை என்று பதில் சொல்ல ஒரு நிமிடம் போதாது ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது.
கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி மோதியது,
‘ஆமாம்’ ‘இல்லை’ என்று இரு சொல்லுக்கு இடையே அது சிக்கித் தவித்தது.
ஒரு நிமிடம் அவள் மனமே ‘அவன் கேட்பதும் சரிதானே? எல்லா ஆண்களுக்கும் அப்பாக்களுக்கும் இருக்கும் இயல்பான ஆசை தானே? தன் குழந்தையின் துடிப்பைக் காண.. அதனை ஸ்பரிசிக்க..! அவனின் அந்த உரிமையை நீ தடுக்கலாமா?’ என்று அவளின் மனமே அவனுக்காக அவளிடம் வாதாட..
சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பினை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. “என்ன இது? என் மனம் அவனுக்காக வாதாடுகிறது?”
“கூடாது.. கூடவே கூடாது.. என்னை என்ன எல்லாம் பேசினான் இந்த பாவி? குளித்தால் தண்ணீரில் கரையும் அழுக்கு போல அவனின் எல்லா ஞாபகங்களும் கரைந்து போகும் என்று சொன்னான் அல்லவா? இப்பொழுது என்ன இவனுக்கு குழந்தை மீது அக்கறை பாசம்? அதை விட உரிமை என்ன வேண்டி இருக்கிறது இவனுக்கு? இது என் குழந்தை..! போடா அதை ஸ்பரிசிக்க.. ஏன் பார்க்க கூட நான் உன்னை விடமாட்டேன்” கோபத்தில் அவளது கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது. கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பெருமூச்சு விட்டாள்.
‘ச்சசே.. இவனை பக்கத்திலேயே விடக்கூடாது.. கொஞ்ச நேரத்துக்குள்ள என்னை என்னென்ன எல்லாம் யோசிக்க வச்சிட்டான்’ என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவள் முகம் பார்த்து புன்னகைத்தவன் முகமோ கெஞ்சியது “ஒரு முறை.. ஒரே ஒரு வாய்ப்பு கொடுடி..!” என்று.
‘மயங்காதே.. மயங்காதே.. ஆருஷி. இவன் பொல்லாத ராட்சசன்.. இவன் சிரிப்பில் நீ மயங்காதே..! இப்பொழுது மயங்கி பின்னால் வருத்தப்படாதே..!’ என்று அறிவு எச்சரிக்க மனமோ அவன் மோகன சிரிப்பில் லயித்து நின்றது.
மனைவியிடமோ காதலியிடமோ சிரித்து புன்னகை முகமாக பேசும் ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனின் அந்த புன்னைகைக்கும் அதரங்களை அள்ளி முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது.
மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றாள். அவள் மனம் அவளை மீறிப் போய் அவனுடன் காதலாடியது. அவனை மார்புறத் தழுவி முத்தமிட்டு கொஞ்சியது. அவனின் மென் மீசையை நீவி உதட்டை முத்தமிட்டு உமிழ் நீர் உறிஞ்சி சுவைத்தது. அவன் முகம் பற்றி இழுத்து தன் மென் மென்மைகளுக்குள் புதைத்துக் கொண்டது. அவன் மூச்சுக் காற்றில் சினந்து மெல்ல தன் அதரங்களை அவனுள் பொதித்தது. எல்லாம் ஒரு சிறிய அளவில் நடந்து விட்ட கற்பனையே..!
அதில் திடுக்கிட்டவள்.. “ச்சீ.. ஆருஷி.. நீ கெட்டு போய்ட்ட.” என்று அவளுக்கு அவளே தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில்..
அவளை தன் பக்கம் திருப்பி அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி “ப்ளீஸ் டி பாப்பா.. ஒரே ஒரு தடவை தானே? நீ சொன்னதுக்காக இந்த வீட்டு மேல் வைத்திருந்த அத்தனை கோபத்தையும் நொடியில் தூக்கி போட்டுட்டு வந்தேனா இல்லையா?” என்றதும்,
அவன் கைகளை தட்டி விட்டவள் “இனி நீங்களாச்சு..! உங்க தாத்தா பாட்டி ஆச்சு..! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றாள் வெடுக்கென்று. ஆனாலும் காதல் மனது, அவன் இத்தனை நாள் வைத்திருந்த கோபத்தை எல்லாம் விடுத்து தனக்காக வந்ததை நினைத்து கர்வம் கொண்டது.
“எதே என் தாத்தா பாட்டியா? எனக்கு அவங்க தேவைன்னா.. அவங்களுக்காக நான் வரணும்னா நான் எப்பவோ வந்திருப்பேன்..! எனக்கு அவங்க சொந்தமோ பந்தமோ ஏன் சொத்தோ தேவையில்லை.. எனக்கு தேவை எல்லாம் இந்த தேவதை தான். அதற்காக தான் இங்க வந்ததே..!” என்றவன், அவளின் பிளந்திருந்த கீழ் இதழ்களை பிடித்து இழுத்தான்.
“ஸ்ஸ்ஆஆ..” அவள் அலற..
”வலிச்சிருச்சா.. ?? ஸாரி..ஸாரி டி பாப்பா” என்று அவன் கெஞ்ச..
”வலி இல்லவே இல்ல. சுகத்துல எனக்கு சொக்கிருச்சு.. !!” அவள் முறைக்க..
“அடி பாவி.. சொல்லவே இல்ல..! அப்போ.. இது அது தானே ஜெஸ்ஸி?” என்று அவன் கண்ணடிக்க..
“கண் முழிய நோண்டிடுவேன்.. போங்க போய் தூங்குற வழிய பாருங்க” என்று அவள் கத்த..
“தூக்கம் எல்லாம் தூரம் போய் நாளாச்சு டி பாப்பா” என்று அவன் கூற..
“எனக்கு தூக்கம் வருது.. தள்ளுங்க..!” என்றவள் அவள் மெத்தையில் சென்று படுத்து விட்டாள். இவனிடம் தர்க்கம் பண்ணி மாளாது.. இவன் மாறா மாட்டான். கண்டிப்பாக நினைத்ததை சாதித்து கொள்வான். இங்கு இருந்து செல்லவும் மாட்டான். அதுவும் நாமே இவனை கூப்பிட்டாகிவிட்டது. இனி இந்த இம்சையை பொறுத்து தான் ஆக வேண்டும் என்று.!
முழுவதுமாக போர்வையால் தன்னை மூடிக்கொண்டு உறங்கியவளை கண்டவன் அவளை சீண்டி பார்க்க தோன்ற டபக்கென்று அவளது போர்வையை பிடித்து இழுக்க..
“யோவ்.. என்னையா உனக்கு பிரச்சினை?” என்று அவள் சிடுசிடுத்தாள்.
“முகத்த மூடிட்டு தூங்காத.. ப்ரீத்திங் கஷ்டமா இருக்கும்” என்று அவன் மருத்துவமனாய் மாறி பல அறிவுரைகளை கூறினான்.
“போச்சு.. போ.. இனிமே 24 மணி நேரமும் ஹாஸ்பிடல்ல இருக்கிற பீலிங்காவே இருக்க போகுது. இத பண்ணாத.. அத பண்ணாத.. இத செய்யாதே.. அத செய்யாதேனு நொட்டியம் செய்யப் போறான். ஆண்டவா..” என்று புலம்பியவள் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டாள்.
சிறிது நேரம் விளக்கை அணைத்துவிட்டு அமைதியாக அவள் அருகில் இருந்தான். அதன் பின் தான் அவன் அன்னை க்ளோரியாவுக்கு அழைத்து பேசியது.
அன்னை பேசி முடித்ததும் ஆழ்ந்த உறங்கும் ஆருஷூயை பார்த்துக் கொண்டே மெத்தையில் அவளுக்கு அருகே படுத்தான்.
எத்தனை நாட்கள் இல்லை இல்லை மாதங்களுக்கு கழித்து அவளுடனான இந்த நெருக்கம்..!
அவளின் வாசத்தை..
அவளின் ஸ்பரிசத்தை..
அவளின் சுவாசத்தை..
அவளின் உடல் சூட்டினை.. எல்லாம் அனுபவித்தப்படி அவள் அருகில் படுத்தவன், மெல்ல மெல்ல கண்ணுறங்க ஆரம்பித்தான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு திடீரென இயற்கை உபாதை அழைக்க.. எப்போதும் அவள் மட்டுமே அந்த மெத்தையில் படுக்கும் நினைப்பில் அவன் புறம் தள்ளியப்படி எழுந்து விட,
அந்த சிறு சத்தத்திற்கும் அடித்து படித்து எழுந்தவன், “ஹேய் பாப்பா என்னாச்சு? என்ன பண்ணுது?” என்று பதற்றத்தோடு கேட்க.. அவனின் பதட்டத்தை கண்டு அவளும் பதட்டமாகி,
“தூக்கத்த கெடுத்துட்டேனா.. ஸாரி.. ஸாரி..!” கொஞ்சலான குரலில் அவள் மன்னிப்பு கேட்க..
”ஹேய் என் தூக்கத்தைதான கெடுத்த.. என்னவோ என்னைவே கெடுத்துட்ட மாதிரி பீல் பண்ற.. ?? இட்ஸ் ஓகே.. நீ என்ன பண்ற? என்னாச்சு உனக்கு?” என்று அவன் அக்கறையாய் கேட்டான்.
“எதே கெடுத்தேனா வா? கருமம் கருமம்.. வாய் இருக்குறதுனா என்ன வேணா பேசுவியா நீ?” என்று அவள் அவனை அடிக்க.. அவளின் சில அடிகளை பொறுத்துக் கொண்டவன், அவளது கைகளை பற்றி மெத்தையில் இருபுறமும் வைத்து அழுத்தி அவளை படுக்க வைத்தவன், அவளின் மேல் பட்டும் பாடாமல் படறி..
“எது டி கருமம்? என்ன கருமம்? அந்த கருமத்தால தான் நானும் பொறந்தேன். நீனும் பொறந்த.. ஏன் இப்ப உன் வயித்துக்குள்ள இருக்கிற குழந்தைக்கும் அந்த கருமம் தான் காரணம்” என்றதும் அவளுக்கு உடல் கூசியது.
சீச்சீ.. என்று அவள் முகம் சுழிக்க..
“அந்த கருமத்துக்கு பேரு காமம் இல்லடி.. அந்த கருமத்துக்கு
பேரு காதல்..!” என்றவன் கண்களோ அவளது கண்களை கொள்ளையிட்டது காதலாய்..!
வருவான் அசுரன்..!
