அத்தியாயம் 25
முகத்தில் மந்தகாச புன்னகையோடு மெல்ல மாடியேறி சென்ற பேரனை கண்களில் அன்பு பாசம் பொங்க பார்த்திருந்தார் வள்ளியம்மை..!
“அத்த.. அதான் உங்க பேரன் வந்தாச்சுல.. வாங்க தூங்க போகலாம். இனி இங்க தானே இருக்க போறாரு.. காலையில ஆசை தீர கொஞ்சி பேசலாம் பேரன் கிட்ட” என்று அவரை அழைத்துச் சென்றார் ரூபிணி.
“அவன் முகத்த பாரு.. கொஞ்சி பேசுனா முகம் கொடுத்து பேசுறவன் போலவா இருக்கான்? ம்ஹூம்.. ஏதோ.. என் கண் முன்னே அவன் நடமாடுனா போதும்.. என் பேத்தியும் என் பேரனும் என் கண் முன்ன கண்ணிறைக்க வாழ்ந்தால் எனக்கு அதைவிட வேற என்ன வேணும்.. என் கட்ட நிம்மதியா போகும்” என்று ரூபிணியின் கையைப் பிடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்றார் வள்ளியம்மை.
இப்போதெல்லாம் அழகப்பன் மாறவேலுக்கு, அந்த விபத்தின் காரணமாக அதிக வலிகள் வருவதால் பெரும்பாலும் அவர் மயக்கத்தில் தான் வைத்திருக்கிறார்கள் மருத்துவர் ஆலோசனைப்படி..!
அதனால் இங்கு நடந்தது எதுவுமே அவருக்கு தெரியவில்லை. தெரியப்படுத்தவும் வள்ளியம்மை முயலவில்லை..!
இப்பொழுது மயக்கத்தில் இருக்கும் கணவனை பார்த்த பிறகு அத்தனை கோபம்.. அத்தனை ஆற்றாமை அவருக்கு..!
எவ்வளவு அழகாக இருக்க வேண்டிய குடும்பம்..!
மகனது குடும்பம், மகளது குடும்பம் பேரன் பேத்திகள் என்று…??
ஆனால்… ‘எல்லாத்தையும் இந்த மனிதரது வீம்பும் குடும்ப கௌரவம் என்ற ஆணவமும் சேர்ந்து படு குழியில் தள்ளி விட்டாரே..’
‘இதோ இந்த கடைசி காலத்தில் இவரை பணமா வந்து பார்த்துக் கொள்கிறது? சொந்த பந்தம் தானே வந்து பார்க்கிறது? இதெல்லாம் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவரை போல ஆட்களுக்கு எல்லாம் புரியவே புரியாது..! கௌரவம் ஆணவம் பிடிச்ச ஆணாதிக்கவாதிகள்’
என்று பெருமூச்சு விட்டபடி அவருக்கான படுக்கையில் படுத்தார், என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அவருக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வந்தது.
மாடி ஏறிச் சென்ற ராவண்னோ ஆருஷியின் அறைக்கு வெளியே நின்றிருந்தான், முகத்தில் மெல்லிய புன்னகையுடன்..!
வெகு நாள் கழித்து தன் காதல் கிழத்தியோடு கடத்த போகும் ஒரு இரவு..!
கதவு லேசாக திறந்திருந்தது. ஆனால் உள்ளே அவள் தென்படவில்லை.
“பாப்பா..” என்றவன் கதவினை திறந்து உள்ளே செல்ல..
அப்போது தான் குளியலறையில் வந்தாள் ஆருஷி. இன்று ஒரே நாளில் அவளுக்கு ஏகப்பட்ட அலைச்சல்.. மன உளைச்சல்.
‘இந்த ராவண் ஒரு பாடு படுத்துக்கிறான்னா.. இந்த ஆச்சி வேற? அம்மாடி.. இவங்கள வச்சுக்கிட்டு.. முடியல..’ என்று அறைக்குள் வந்தவளுக்கோ படுத்தால் போதுமென்று இருந்தது.
அயர்ச்சி கொடுத்த அலுப்பில் படுத்தவளுக்கு நேரம் சென்று சாப்பிட்டது நேரத்திற்கு சாப்பிடாதது என்று அனைத்தும் தொண்டையில் கரித்துக் கொண்டே இருந்தது.
தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டே இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் அனைத்தும் குமட்டிக் கொண்டு வர, குளியலறை சென்று அனைத்தும் வாந்தி எடுத்தாள்.
ஃபர்ஸ்ட் ட்ரைமஸ்டர்ல தான் இப்படி இருந்துச்சுன்னா.. இப்பவும் இபப்டி வாந்தி வாந்தியா வருதே ஆண்டவா..! என்று களைத்துப் போனவளுக்கு, உடம்பில் மட்டுமல்ல மனதிலும் வலுவில்லை..!
‘எல்லாம் இந்த இராவண்னால.. அவன் மட்டும் நல்லா சந்தோஷமா சாப்பிட்டு.. நிம்மதியா தூங்கிட்டு.. ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கிறான். ஆனா என்ன பாரு.. உட்கார்ந்தா எழுந்துக்க முடியல.. விருப்பப்பட்டத சாப்பிட முடியல.. ஒரு ரெண்டு வாய் எக்ஸ்ட்ரா உள்ள போச்சுன்னா சாப்பிட்ட மொத்தமும் கொமட்டிட்டு வந்துருது… அதுக்கு மேல இப்படி மூச்சு வேற வாங்குது.. ஆண்டவா.. ஒரு குழந்தை பெத்துகிறது இவ்வளவு கஷ்டமாவா இருக்கும்? அந்த காலத்துல எல்லாம் எப்படி வருஷத்துக்கு ஒரு ரிலீஸ் பண்ணாங்கன்னு தெரியலையே..!’
என்று மன அலுப்போடு குளியலறையில் இருந்த கண்ணாடியில் முகத்தை கழுவிட்டு அதை பார்த்தபடியே புலம்பிக் கொண்டிருந்தாள்.
பெண்களுக்கு தாய்மை என்கிறது மறுபிறப்பு என்பது நிதர்சனம். ஆனால் அதை வீட்டில் உள்ளவர்களின் அன்பாலும் அணுசரனையினாலும் கணவனின் நேசத்தாலும் கடந்து வந்து விடுவார்.
ஆனால் இவள் தான் வீட்டுக்கு தெரிய கூடாது என்று தன்னில் ஏற்படும் மாற்றத்தை எல்லாம் மறைத்து வைத்து கஷ்டப்பட்டு இருந்தாளே.. அவளுக்கு குற்ற உணர்ச்சி ஏற்கனவே அதுவோ காதலில் தோற்று வைத்திருக்க.. மனதளவில் மிகவும் வலு குறைந்திருந்தாள்.
அதிலும் இராவண்னுக்கு தெரிந்தவுடன் ஊரை விட்டு ஓடி அவனிடம் மாட்டக்கூடாது என்று பதுங்கி வாழ்ந்து சமயத்திலும் கூட அவளுக்கு அவளே தான் துணை..!
இப்படி மற்றவர்களிடமிருந்து தன்னை மறைத்து வாழ்ந்தே பழகியிருக்க.. இப்போது மனதளவில் பெரும் சோர்வு அவளிடம்.
குளியலறையில் முகம் கழுவி தன்னுள் ஏதோதோ நினைத்தபடி
வந்தவளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அறைக்குள் நின்றிருந்தான் ராவண்.
”ஆத்தி.. பயந்திட்டேன்..! இப்படியா சடனா வந்து நிப்பீங்க ரூமுக்குள்ள..” என்று நெஞ்சில் கை வைத்து அவள் கூற..
கள்வனின் கண்களோ அவளின் ஏறி இறங்கிய தனத்தின் மீதே இருந்தது.
“ம்ம்ம.. சர்ப்ரைஸ் தான்” என்றவனின் பார்வையை கண்டவள், தன் கையில் வைத்திருந்த பூந்துவாளையை தன் மீது போட்டுக் கொள்ள..
“ஆமா.. ஆமா.. பெரிய தடை தான் அது. அதுவும்..” என்றவன் அவள் காதருகே குனிந்து, “நான் பார்க்காத எதுவும் மிச்சம் இருக்கா உன்கிட்ட” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
அவளுக்கோ அவனின் பேச்சில் திகுதிகுவென்று கோபம் வர..
”நீ ஏன்… இங்க வந்துருக்க…?” என்றாள் ஆத்திரத்தோடு.
“அடிப்பாவி.. நீதான டி பாப்பா வா வானு இவ்ளோ நேரம் என்ன வம்படியே கூப்பிட்ட.. வந்தவனை ஏன் வந்தேன்னு இப்ப கேக்குற நல்லா இருக்கு டி பாப்பா உங்க வீட்டு நியாயம்?” என்றான்.
“ஆமாமில்ல.. நாம தான கூப்பிட்டோம்” என்று யோசித்தவள், “அது சரி.. நான் கூப்பிட்டேன் சரி.. நீ எதுக்கு என் ரூமுக்கு வந்துருக்க?” என்று அவள் உருத்து விழிக்க..
சின்ன வயசுல எங்க அம்மா அப்பா தெரியாதவங்க வீட்டுக்கு போக கூடாது.. தெரியாதவங்க எத கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்காங்க..” என்று கதை பேசியவனை கண்டு இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..
‘இப்ப எதுக்கு இந்த கதை விடுற!’ என்பதாய்.
“இரு.. இரு.. சொல்றேன்.. ஃபர்ஸ்ட் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றவன் குளியலறைக்குள் நுழைய, அவன் வந்தால் வேண்டும் என்றே தன்மீது இருக்கும் இந்த துண்டை தான் எடுப்பான் என்று புரிந்தவள், அவசரமாக அதை எடுத்து லாண்டரி பின்னில் போட்டுவிட்டு துப்பட்டாவை எடுத்து போட்டுக் கொண்டாள்.
குளியலறையில் இருந்து வந்தவன் அவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்து,
“ஆஹான்.. என்ன சொன்னேன்..” என்று அவன் கேட்க..
“ம்ம்ம்.. உங்க அம்மா அப்பா உங்கள வளர்த்த புராணத்தை படிச்சீங்க” என்றாள் அலட்சியமாக..
“எஸ்.. எஸ்..! சோ எங்க வீட்ல தெரியாதவங்க கூட பழக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. ஆனா இங்க பாரு இங்க இருக்குறவங்க எல்லாருமே எனக்கு தெரியாதவங்க.. பின்ன நான் எப்படி இங்கு இருக்க முடியும்? அதுதான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தி நீ மட்டும் தான்..! அதனால உன் ரூமுக்கு வந்துட்டேன்" என்று அவனின் விளக்கத்தில் அவள் வாய் பிளந்து நிற்க..
“சரிதானே நான் சொன்னது? நாளைக்கு நம்ம பிள்ளைகிட்டயும் நாம அப்படி தான் சொல்லி வளர்க்கணும்..” என்றவன் அவளது துப்பட்டாவை கையில் பிடித்து சுழற்றி இழுத்தான்.
அவள் தடுக்க.. அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தான். பின்
அவள் பக்கத்தில் போய் அவளிடமிருந்து துப்பட்டாவை பிடுங்காமல் அதிலேயே தன் முக ஈரத்தை துடைத்தான் மிக பொறுமையாக..!
”திமிருதான..?” என்று எகிறிவள் உதடுகள் அவனின் உதடுகளுக்கு பொதிந்தது.! அவனது நீண்ட கூர்
மூக்கோ அவளது மூக்கினை நிமிண்ட.. அவன் மீசையோ அவளது கன்னங்களை கண்டபடி
குத்திக் குத்தி.. சுக வேதனையில் அவளை தத்தளிக்க வைத்தது..!!
அவ
னது கரங்களோ மென்மையாக மிக மகி மென்மையாக அவளது பெருத்த வயிற்றை வருடியது..!
வருவான் அசுரன்..
