அத்தியாயம் 24
"இப்ப என்ன உங்க பேரனுக்கு ஃபோன் பண்ணி நான் வர சொல்லணும். அவ்வளவுதானே? நான் ஃபோன் பண்றேன்” என்று ஃபோனை எடுத்து ராவண்னுக்கு அழைத்தாள் ஆருஷி.
தன் அலைபேசியில் ஸ்வீட் பாப்பா என்று எழுத்துக்கள் மின்னி மறைய அழைப்பு வந்ததை வெகு சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இராவண்… அது அடித்து முடிக்கும் வரை..!
“இதை.. இதைத்தானே நான் உன்னிடம் எதிர்பார்த்தேனடி பாப்பா.. என்னை விட்டு ஓடி மறைவாயா? என்னை பிடிக்கலைனு சொல்லி உன் மாமன் மகனை மணந்து கொள்வேனு என்னிடமே உரைப்பாயா? இப்போது பார் நீயே என்னை அழைக்கும் படி செய்து விட்டேனா? நான் இராவண் டி பாப்பா..!” என்று கர்வம் மிக, அந்த அழைப்பு முடியும் வரை அந்த அலைபேசியை பார்த்து இருந்தான் இராவண்.
அதற்கும் அவன் சென்றதுமே மனது கேட்காமல் கிரிதரன் ஒரு முறை அழைத்து அவனிடம் பேச முயல..
“சார்.. உங்களிட்ட பேச எனக்கு பர்சனலா ஒன்னும் கிடையாது. யார் கிட்ட பேசணுமோ.. நான் அவ கிட்ட பேசுகிறேன்” என்று கொஞ்சமும் தாட்சனை பார்க்காமல் அலைபேசியை சட்டென்று வைத்து விட்டான் இராவண்.
அவனின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று உணர்ந்தவர்,
மகனை அழைத்து, “ஆருஷி கூப்பிட்டா தான் அவர் வருவார் போல.. உங்க ஆச்சி மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு அவன காணும்னு ரகளை பண்ணா என்ன பண்றதுன்னு தெரியல..” என்று அவர் வருத்தம் அடைந்தார்.
“நீங்க இங்க கடைக்கு வந்து பாத்துங்கப்பா.. நான் வீட்டுக்கு போறேன்” என்று வந்தவன் ஆருஷியிடம் அதை எல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.
ரூபிணியும் கூட “ஆமாம் பாப்பா.. ஏன் இவ்வளவு வீம்பு உனக்கு? நம்மளால தானே இவ்ளோ கஷ்டம். கொஞ்சம் நாம இறங்கி போறதுல தப்பு இல்லையே பாப்பா?” என்று அன்பாக எடுத்துரைக்க.
“என்னால முடியவே முடியாது.. அவனை நான் கூப்பிட மாட்டேன். ஆச்சிக்கு பேரன் வேணும்னா அவங்களே கூப்பிடட்டும்.. அதுக்கு நான் தடை சொல்ல மாட்டேன்” என்று தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தாள் ஆருஷி இருவரிடமும்.
“அன்னைக்கு அவன் சொன்னதெல்லாம் அடர் அமிலத்தையும் காதுல ஊத்தின மாதிரி இன்னமும் எனக்கு அந்த வலியும் ரணமும் குறையல.. எப்படி மறந்து அவனை மன்னித்து நம்ம வீட்டுக்கு அவன கூப்பிட சொல்றீங்க?” என்று ஆதங்கமாக கேட்ட மருமகளின் கன்னத்தை வருடியவர்,
“குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை ஆரு..! நம்ம வீடு.. நம்ம வீடுன்னு சொல்றியே அந்த வீட்டுல அந்த பையனுக்கும் உரிமை இருக்கு தானே ஆரு? இத்தனை வருஷமா இதெல்லாம் அவங்க நம்மகிட்ட எதிர்பார்க்கல.. எந்த சொத்தையும் நம்ம கிட்ட கேட்கல.. நீயே யோசிச்சு பாரு? இப்ப கூட எதுக்கு அந்த தம்பி வந்துச்சு சொல்லு? என் தாத்தா சொத்து பேரனான எனக்கு சொந்தம்னு நம்மகிட்ட சொத்தை தேடி வந்தாரா? இல்லையே..! காசு பணம் கேட்டாரா? எதுவுமே இல்லையே..! உன்ன மட்டும் தானே கேட்டார்.. உனக்காகத்தானே வந்தார்..! அப்போ அவரோட அன்பு உண்மை தானே?” என்றதும் அவளோ அமைதியாக இருக்க அப்பொழுதுதான் வள்ளியம்மை எழுந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்ய…
இதோ அதோ என்று மீண்டும் மற்றவர்களுக்காக மற்றவர்களுக்காக மட்டுமே இராவண்னை அலைபேசியில் அழைத்தாள் ஆருஷி.
அந்த மற்றவர்கள் என்பது அவளின் அன்பான ஆச்சி.. அருமையான அத்தை.. ஒரு நாளை பார்த்து பழகினால்ம் அன்பொழக பேசிய க்ளோரியா என்று அனைவருக்காகவும் தான் அவனை அழைத்தாள்.
இதனிடையே கிரிதரனும் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார் அவளிடம்.
“நாள பின்ன சொத்துக்காக உன்ன நாங்க இங்கே மயக்கி வைத்திருக்கோம்.. எங்களுக்கு அடிமையாக வைத்திருக்கிறோம்னு பேரு வேணாம். ஒரு வார்த்தை யாரும் சொல்லக்கூடாது. யாரு எது செஞ்சாலும் நீ கவனமா யோசிச்சு முடிவெடுத்து செய் ஆரு” என்று சொல்லி சென்றிருக்க..
இத்தனை வருடம் தன்னை நல்லபடியாக பார்த்து வளர்த்து தங்கள் சொத்தை பேணிக்காத்த அத்தை மாமா சுக்ரேஷ் அவர்களுக்காகவும் தான் இராவண்னுக்கு அழைத்தாள் ஆருஷி.
இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை. மொத்த குடும்பமும் அவளை சுற்றி நின்று அவளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தது.
“நேரம் பார்த்து வேணும்னே என்ன பழிவாங்குறான் இவன்.. டாமிட்” என்று முணுமுணுத்தபடி மீண்டும் அவனுக்கு அழைத்தாள் ஆருஷி.
முகத்தில் கள்ள புன்னகையோடு தன் இருக்கையில் அரைவட்டம் அடித்தபடியே அந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ராவணுக்குள் இப்பொழுது குறும்பு கூத்தாட..
“ஹாலோ ஹூஸ் திஸ்?” என்று அந்நியரிடம் பேசும் பாவனையில் கேட்டான்.
“யாரா? என்ன சொல்றான்.. நாம அவனுக்கு தான் ஃபோன் போட்டோ மா?” என்று காதிலிருந்து அலைபேசியை எடுத்து மீண்டும் அவனின் எண்ணை சரி பார்த்து “ஹலோ நான் தான்” என்றாள் கொஞ்சம் அதிகாரமாகவே ஆருஷி..
“நான் தான்னா.. அந்த நானுங்கறது யாரு? உங்களுக்கு பெயர் இல்லையா? ஊர் இல்லையா? உங்களை மாதிரி வெட்டியா நான் இல்லை.. ஐ அம் சோ பிஸி.. ஜஸ்ட் டிஸ்கஸ்சிங் வித் திஸ் மார்க்கெட்டிங் பீப்பிள்” என்று வேண்டுமென்றே ஃபோனை கட் செய்தான் இராவண்.
“இங்க பாருங்க இவன் பண்ற லூட்டிய.. உங்களுக்காக வேண்டி தானே அவனுக்கு ஃபோன் பண்ணுனேன். ஃபோன் பண்ணுனா நான் யாருன்னே தெரியலன்னு சொல்லிட்டு ஃபோன கட் பண்றான் அந்த மட பைய” என்று அவள் ஆத்திரமிகு கத்த..
வள்ளியமையோ “வார்த்தையை ஒழுங்கா பேசுடி..!” என்று அதட்ட, தலையில் கை வைத்துக் கொண்டான் சுக்ரேஷ்.
“ஏன் ஆரு இப்படி இருக்க.. உன் ஃபோன் சிம்ம தான் மும்பை ஏர்போர்ட்டிலேயே தூக்கி போட்டுட்டு வந்துட்ட இல்ல.. இப்போ உன்கிட்ட இருக்கிறது என்னோட செகண்ட் நம்பர்.. அந்த நம்பர் அவருக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் யோசிக்க மாட்டியா நீ?” என்று பெரியவனாய் அவன் கண்டிக்க..
தப்பு செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் அடமோடு நிற்கும் குழந்தை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்த ஆருஷியை கண்டவன் மனம் இறங்கியது.
“புரிஞ்சுக்கோ ஆரு..! மறுபடியும் போன் பண்ணி எடுத்த உடனே அதிகாரமா நான் தான் சொல்லாம நான் தான் ஆருஷினு சொல்லு.. அதுவும் பொறுமையா சொல்லு..” என்று அவனும் அவள் அருகிலே நிற்க.. வேறு வழியின்றி மீண்டும் ராவண்னுக்கு அழைத்தவள் “மிகப் பொறுமையாகவே நான் ஆருஷி பேசுறேன்” என்றாள்.
“பார்றா.. என்ன அடக்கம்? என்ன பணிவு? அப்படியே புல்லரிக்குது போ.. மகாராணியர் தாங்கள், தான் என்று ஈகோவில் இருந்து.. கோவத்திலிருந்து இவ்வளவு சீக்கிரம் மலை இறங்கி வர மாட்டீங்களே? இவளோ சீக்கிரம் வந்து இருக்கீங்கனா.. அதுக்கு பெருசா வலுவான காரணம் பின்னாடி இருக்கனுமே? அப்படி என்ன காரணமோ? தாங்கள் என்னை இந்த ராத்திரி நேரம் அழைக்க?” என்றவனின் கிண்டல் பேச்சில் பற்றி கொண்டு வந்தாலும்,
‘ஈஸி ஈஸி.. ரிலாக்ஸ் ஆருஷி... ரிலாக்ஸ்.. இவன் வேணும்னே உன்ன டெம்ப் பண்ணவே இப்படி எல்லாம் பேசுறான். அப்பதான் நீ அவன் கிட்ட கத்துவ.. வீட்டில திட்டு வாங்குவ.. அவன் வலையில் சிக்கிடாத..!’ என்று தனக்கு தானே அறிவுரை கூறிக் கொண்டவள்,
“கொஞ்சம் வீட்டுக்கு வாங்க.. ஆச்சி உங்கள பாக்கணும்னு சொல்றாங்க” என்றாள் தன்மையாகவே..!
“அப்போ அம்மையாருக்கு என்ன பாக்கணும்னு விருப்பம் இல்ல.. ஆச்சிக்கு பார்க்கணும். அதனால தான் என்னை இப்ப நீ கூப்பிட்டு இருக்க..” என்றதும் அவள் அமைதியை ஆம் என்று அவனுக்கு பதில் உரைக்க..
“அப்படி எல்லாம் நாங்க வந்து எனக்கு என்ன கிடைக்கப் போகுது சொல்லு? உனக்கு உங்க ஆச்சியை சமாதானப்படுத்த நீ இறங்கி வந்து இருக்க.. ஆனா அதனால எனக்கு என்ன பயன்?” என்று அவன் கேட்க
“ஆரம்பிச்சிட்டான்.. ஏதோ பெருசா அடி போடுறான். என்ன பண்ண போறான்னு தெரியலையே?” என்று அமைதியாக இருந்தாள் அவள்.
“சொல்லுங்க மேடம்.. சொல்லுங்க.. எனக்கு ஏதாவது அதுல ஒரு என்டர்டைன்மென்ட் என்ஜாய்மென்ட் இருக்கணும் இல்லையா? எதுவுமே இல்லாம அங்க வந்து நான் எதுக்கு இருக்கணும்? அவங்க உனக்கு வேணா ஆச்சியா இருக்கலாம் எனக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது”
“அவங்க உனக்கும் ஆச்சி தான்” என்றாள் மெல்லிய குரலில்..
“அது வெறும் உறவு..! அதுக்கு நான் எல்லாம் பெரிய முக்கியத்துவம் கொடுக்குறதா இல்ல.. நீ சொல்லு நான் வரேன். அவங்களுக்காக இல்ல உனக்காக..!” என்றான் ஆழ்ந்த குரலில்..!
இந்த வார்த்தையை அவன் முன்னால் காதலோடு சொல்லியிருந்தால்.. கண்டிப்பாக அவனுக்காக எதுவும் செய்திருப்பாள் ஆருஷி. ஆனால் அவனின் கயமையை போலித் தன்மையை கண்டு கொண்டால் அல்லவா? அதனால் அவன் எந்த பேச்சுக்கும் வினையாற்றாமல் அமைதியாக இருந்தாள்.
“சரி உனக்கு பிடிக்கல போல.. நான் போன கட் பண்ணிட்டு தூங்க போறேன். டோன்ட் டிஸ்டர்ப் மீ”’என்று அவன் மீண்டும் வலைப்போட..
பல்லைக் கடித்துக் கொண்டே “என்ன வேணும் சொல்லித்தொலை?” என்றால் மெல்லிய குரலில்..
“நீதான்..! நீ மட்டும் தான் வேணும் முழுக்க முழுக்க வேணும்.. திகட்ட திகட்ட வேணும்..” என்றவனின் சரச குரலில்..
”ச்சீ.. போன வெய்யி ..”என்று விட்டு உடனே போனைக் கட் பண்ணிவிட்டாள்.
மனதில் அவள் தன்னை எப்படி எல்லாம் திட்டுவாள் என்று புரிந்த ராவண்னுக்கு அத்தனை உல்லாச சிரிப்பு. இம்முறை அவனே அவளை கூப்பிட்டான். அவள் எடுக்கவில்லை
மீண்டும் மீண்டும் கூப்பிட்டான். அவள் எடுக்கவில்லை. அப்படியும் விடாமல் மீண்டும் மீண்டும் கூப்பிட்டான்.
மூன்றாவது முறை எடுத்து..
”என்னடா...?” என்று அடிக்குரலில் சீறினாள்.
”அதுக்குள்ள ஏன் டி பாப்பா கட் பண்ணுன..?”
”ஏன்… கட் பண்ணாம வேற என்ன செய்வாங்க? இவ்வளவு நடந்து பிறகும் உனக்கு திமிறு அடங்கல....?” என்றாள்.
“அது எப்படி அடங்கும் ருசி கொண்ட பூனை அல்லவா? அடங்கா அசுரன் நானடி..! அதுவும் காதல் அசுரன்..!” என்றவனின் உல்லாச பேச்சில் இவளுக்கு தான் தீப்பற்றியது போல எரிந்தது.
“இப்ப என்ன வர முடியுமா? முடியாதா?” என்று அவள் சீற..
“ அங்க நான் வரணும்னா எனக்கு என்ன தேவைன்னு நான் உன்கிட்ட சொல்லிட்டேன் இல்ல.. இனி தான் பதில் சொல்லணும்” என்றவனின் தெனாவட்டான பதிலில் கடுப்பானவள்,
”ஒரு ம**** உனக்கு கிடையாது. போய் வேலைய பாரு…” என்று விட்டு காலை கட் பண்ணிவிட்டாள்.
அவன் மீண்டும் கூப்பிட.. ஸ்விட்ச் ஆப் என்றது..!
ஆனால்.. அவளை நன்றாக சீண்டி விட்டது புரிய ஒரு சிரிப்புடனையே அவர்கள் வீட்டிற்கு வந்தான் இராவண்.
அவளுக்காக..! அவனின் காதல் கிழத்திக்காக மட்டுமே வந்தான்..!
ஆனால் தன்னை இத்தனை சீண்டி பேசியவன் வருவான் என்ற நம்பிக்கை ஆருசிக்கு இல்லை. ஆனால் ஆச்சிக்கு முன் அதை காட்டிக் கொள்ளாமல் “சொல்லிட்டேன் வந்துருவாரு” என்று அவள் அறைக்குள் சென்று விட்டாள்.
பேரன் வரும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று வள்ளியம்மை சோபாவில் அமர்ந்து விட.. அவருக்கு அருகிலேயே ரூபிணியும் அமர்ந்திருந்தார் அவருக்கு துணையாக..!
இரவு ராவண் அவர்கள் வீட்டுக்கு வரும் போது.. ரூபிணி ஃபோனில் டிவி ஓடிக்கொண்டிருந்தது.
உள்ளே வந்தவனை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் வள்ளியம்மை..!
ஆனால் இந்த பாசம் நேசம் அன்பு எல்லாம் கண்டவனுக்கு ஏதோ செயற்கையாய் தெரிய.. “நான் டயர்டா இருக்கேன் தூங்க போறேன்”’என்றவன் ரூபினியை பார்க்க..
அவரின் கை நீண்டு ஆருஷியின் அறையை காட்டியது..!
“குட்..! இனி நான் பார்த்துக்கிறேன்..!” என்றவன் அவளின்
அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்..!
அறைக்குள் நுழைந்தவன் அவன் வாழ்க்கைக்குள்ளும் நுழைவானா?
வருவான் அசுரன்..!
