Share:
Notifications
Clear all

உன் கணவனாக நான் வரலாமா-2

 

(@vrushaa-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 5
Thread starter  

அத்தியாயம்-2

சென்னை தனியார் பள்ளி ஒன்றில் மஞ்சள் வண்ணத்திலான பள்ளி பேருந்துகள் குவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலையே மிகவும் பிரபலமான பள்ளி அது. வித்யா கேந்ரா அறக்கட்டளை மூலமாக நடந்துக்கொண்டிருக்கும் பள்ளி அது. இங்கே சேர்ந்தால் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகள் பிற்காலத்தில் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகலாம் என்ற கனவுகளில் பெற்றோர்கள் அங்கு வந்து அவர்களை சேர்க்கின்றனர். அந்த கனவுகள் எப்படி மெய்ப்படுகின்றது என்பது எல்லாம் தெரியாது ஆனால் அந்த பள்ளியின் கிளை மட்டும் உலகம் முழுவதும் கிளைப்பரப்பிக்கொண்டே தான் செல்கின்றது.

அப்படிபட்ட பள்ளி ஒன்றில் தாம் இப்போது இருக்கின்றோம். அதுவும் அந்த பள்ளியின் தாளாளர் அலுவலகத்தின் உள்ளே. தாளாளர் தனக்கு முன்னால் நிற்கும் இருவரையும் முறைத்தவர் பின் திரும்பி தனக்கு இடப்பக்கம் உட்கார்ந்திருக்கும் அந்த பள்ளியின் முதல்வரை முறைக்க.. பள்ளி முதல்வரோ அவரை பயத்துடன் பார்த்தவாறே நின்றார்.

ம்ச் என்னையா இங்க பிரச்சன.. அத்தன ஸ்கூல் கூடி இருக்கும்போது சட்டைய புடிச்சி உருண்டு பிரண்டுருக்காங்க… என்ன தான்யா பிரச்சன..”என்று அவர் கத்திக்கொண்டிருக்க.. பள்ளியின் முதல்வரோ…

அது வந்து சார்.. இது ஒன்னும் பெரிய இஸ்ஸு இல்லங்க சார்.. இத நான் உடனே சரி செஞ்சிடுறேன்...”என்றார் பதட்டத்துடன்..

ஹான் நீ கிழிச்ச விசியம் தான் ஊர் ஃபுல்லா நாறுதே..”என்றவர்.. “இன்னிக்கி காலையில நியூஸ் பேப்பர்ல நம்ம ஸ்கூல் பத்தி வர வேண்டியது..”என்றவர் தனக்கு முன்னால் நிற்பவர்களை பார்த்து முறைத்தவாறே.. “நல்லபடியா இல்லையா.. நாராசமா எழுதிருப்பான்.. பள்ளிகளுக்காக நடத்தப்பட்ட ஆல் சென்னை விளையாட்டு போட்டிகள் நடந்த இடத்தில் புகழ்பெற்ற வித்யா கேந்ராவின் விளையாட்டு ஆசிரியரும், அதே பள்ளியில் மேனேஜ்மென்டின் மேனேஜரும் சட்டையை பிடித்துக்கொண்டு உருள.. அத நியூஸ் பேப்பர்ல போட்டு உருட்டிருப்பானுங்க..”என்று கத்தியவறோ.. “இது என்ன நம்ம ஸ்கூலுக்கு ஃப்ரீ அட்வர்டஸ்மென்ட்டா.. ஏதோ போட்டியில ஜெயிச்சா அத வேணா அடுத்த வருஷம் பிள்ளைங்க சேருறதுக்கு ஆட் ஆக யூஸ் பண்லாம்… இத வச்சி என்னையா பண்றது..”என்று கத்த..

அந்த முதல்வரோ தலைகுனிந்துக்கொண்டு நின்றார்.. அவர் பார்வை எதிரில் நிற்பவர்களையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது. “பாவிங்களா இப்டி இந்த ஆளுக்கிட்ட திட்டு வாங்க வச்சிட்டானுங்களே..”என்று அவர்களை பொறிந்து தள்ளியவாறே நிற்க..

தாளாளரோ தனக்கு முன்னால் நிற்பவர்களையே வெறிக்கொண்டு முறைத்தார்.. “உங்களுக்குள்ள என்னையா பிரச்சன.. இப்டி கையே ஒடச்சிக்கிற அளவுக்கு அப்டி என்னையா சண்ட போட்டுக்கிட்டீங்க..”என்று மறுபடி அவர்களை கத்தினார்.

அவரின் சத்தத்தை கேட்டவாறே கையில் கட்டுடன் நின்றிருந்தவனோ தன் அருகில் நிற்பவனை முறைத்து பார்த்தவன்.. “சார் எல்லாத்துக்கும் இந்த ஜனா தான் சார் காரணம்..”என்று எடுத்துக்கொடுக்க..

அதில் கல் போல இறுகி நின்ற ஜனாவோ தன் அருகில் நின்றவனை முறைத்து பார்த்தான்.

என்னயா அங்க பார்வ… நான் தானே கேட்டுட்டு இருக்கேன்.. அப்போ இங்க பாரு..”என்று அதட்டிய தாளாளரோ… “மனோ.. உன்ன கத சொல்ல சொல்லல.. அங்க என்ன நடந்துச்சி ஏன் ஜனரஞ்சன் உன் கைய ஒடச்சாருன்னு தெளிவா சொல்லு..”என்றார் அதட்டலாக.

அதில் சரி என்று தலையாட்டியவனோ நேற்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.

சென்னையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய அரசு பள்ளியில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கான போட்டிகள் நடந்தது. அதில் விளையாட்டு போட்டி, ஓவியப்போட்டி, ஆடல், பாடல் என்று அனைத்துமே சிறப்பாக நடக்க.. அங்கு தான் இவர்களின் பிரச்சனையும் நடந்தது.

வித்யா கேந்ரா பள்ளியும் அதில் கலந்துக்கொள்ள.. மாணவர்களை வழிநடத்த அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரான ஜனரஞ்சனும் வந்திருந்தான். ஜனரஞ்சன் முப்பது வயதான ஆணழகன். எப்போதும் அவன் முகத்தில் ஒரு புன்னகை கொடிக்கட்டி பறக்கும். அதற்கு காரணம் அவனது பாசிட்டிவிட்டி தான். அவன் கூறும் அனைத்திலும் ஒரு பாசிட்டிவிட்டி இருக்கும். அவன் வளர்ந்ததே அப்படிதான். நல்ல சிவந்த நிறம் தான். எப்போது பார்த்தாலும் வெயிலிலையே நிற்பவனுக்கு இந்த சிவந்த நிறம் எப்படி இன்னும் தாக்குப்பிடிக்கின்றது என்று தான் யாருக்கும் தெரியவில்லை. நல்ல கட்டுக்கோப்பான உடற்கட்டு. நல்ல அடர்த்தியான புருவங்களுடனும், சிவந்த உதட்டுடனும் கவர்ச்சியாகவே இருப்பான்.

சிறுவயது முதலே அவனுக்கு விளையாட்டு என்றால் அதிக ஆர்வம். அதனால் படிப்பில் மட்டம் என்றேல்லாம் கூறிவிட முடியாது.படிப்பிலும் சுட்டிதான். ஆனால் விளையாட்டு அளவிற்கு இல்லை. இவன் பள்ளியில் படிக்கும்போதே ஸ்டேட் அளவிற்கு விளையாடி பல பரிசுகளை வாங்கி இருக்கின்றான். ஒன்றெல்ல இரண்டல்ல.. பல போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிக்கோப்பையினை தட்டி செல்வான். விளையாட்டின் மீது இவனுக்கு இருந்த ஆர்வமோ என்னவோ பன்னிரென்டாம் வகுப்பு முடித்துவிட்டு பிஎட் பிஸிக்கல் எஸுகேஷன் படித்தவன்.. அதன் பின் அதிலையே எம்எட்டும் படித்து முடித்தான்.

அதற்குள் நிறைய விளையாட்டுகளில் கலந்துக்கொண்டு பல பரிசினை வாங்கி குவித்தான். அதும் இல்லாமல் தமிழ் கலாச்சார விளையாட்டான சிலம்பத்தில் பல பரிசுகளை குவித்தவன் பிள்ளைகளுக்கு அதனை கற்றுக்கொடுத்தும் வந்தான். இப்படியே ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவன் அரசு வேலைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கின்றான்.

இப்போது அவன் மூன்று வருடமாக வேலை செய்யும் பள்ளியில் இருந்து தான் அந்த அனைத்து பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள வந்துருக்கின்றான்.

டேய் மாதேஷ் நீ ரொம்ப பென்ட் பண்ணி ஓடுற.. அப்டி ஓடுனா சீக்கரம் டயர்ட் ஆகிடுவ.. நிமிந்து ஓடுடா..”என்று தன் மாணவர்களுக்கு பயிற்சிக்கொடுத்தவாறே ஜனா நிற்க..

அப்போது அங்கு வந்தான் வித்யா பள்ளியின் மேனேஜர் மனோ.. “என்ன பிஇடி சார்.. இந்த வருஷம் கப்பு நமக்கு தான் போல நீங்க குடுக்குற பயிற்சிலையே தெரிதே..”என்று நக்கலாக கேட்டான் மனோ..

அவனின் நக்கலை புரிந்தவனாக ஜனாவோ.. “ம்ச் அப்டிலாம் ஒன்னும் இல்ல மனோ சார்.. பசங்க எல்லாத்தையும் ஸ்போட்டிவ்வா எடுத்துக்கனும் இல்லையா.. எல்லாரும் வின் மட்டுமே பண்ணுனா யாரு லூஸ் ஆகுறது.. இரண்டுமே ஒன்னு தான் சார்.. நா பசங்களுக்கு இத தான் முதல சொல்லித்தருவேன்..”என்றான் சிரிப்புடன்..

அட சரியா போச்சி போங்க.. தோல்விய பத்தி சொல்லித்தரவா உங்களுக்கு மாசம் நாப்பது ஆயிரம் சம்பளம் தராரு எங்க முதலாளி.. வின் பண்ணனும் சார் அதான் முக்கியம்..”என்றவனை இன்னும் விரிந்த இதழ்களுடன் பார்த்த ஜனாவோ… “பாப்போம் சார்.. இங்க வந்துருக்க எல்லா ஸ்கூல் பசங்களுமே நல்லா தான் விளையாடுறாங்க.. சோ பொருத்து பாப்போம் என்ன நடக்குதுனு..”என்றவன் பிள்ளைகளுக்கு தேவையான அறிவுரைகளை கூற..

அனைவரும் அதனை நல்லபடியாக காதில் வாங்கிக்கொண்டனர்.. பின்னே அவர்களின் ஹீரோவே ஜனா தானே.. தோல்வியில் தோள் கொடுத்து வெற்றியில் தோள் தூக்கி என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டு தான் இருப்பான். ஆனால் அந்த மனோவோ ஜனாவை ஒரு மாதிரி பார்த்தவன்.. “ம்ம் நியாயம், தர்மம்னு பாக்குறவன் போலற்கு.. பேசாம நாம களத்துல இறங்கிட வேண்டியது தான்..”என்று குறுக்கு புத்தியாக யோசித்தவனோ உடனே அந்த விளையாட்டின் ஜட்ஜையும்,சீஃப் கெஸ்டை சென்று பார்த்தான். அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க… என்ன தான் நன்றாக விளையாடினாலும் அந்த அரசு பள்ளி மாணவர்கள் வித்யா பள்ளி மாணவர்களை விட நன்றாக விளையாடினார்கள்.

அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்து போனது அந்த பள்ளி தான் வெற்றிக்கோப்பையை தட்டி செல்லும் என்று.. ஆனால் அந்த விளையாட்டின் முடிவுகளோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகுவது போல தான் வந்தது. ஆம் அனைத்து விளையாட்டு போட்டிலும் வெற்றி பெற்றது என்னவோ வித்யா கேந்ரா பள்ளி தான்.

இந்த முடிவை கேட்டு புருவம் சுருக்கிய ஜனாவோ கொஞ்சத்தும் சந்தோஷப்படவில்லை.. ஏன் அவனின் நேர்மையான மாணவர்கள் கூட குதூக்கலிக்கவில்லை..

சார் இது எப்டி சார் நாம வின் பண்ணோம்னு சொல்லுறாங்க… ஆனா எல்லாத்துலையும் லீடிங்ல இருந்தது அந்த கவர்மென்ட் ஸ்கூல் தானே சார்,.”என்று அவனின் மாணவர்கள் அதிர்ச்சியுடன் கூற.. ஜனாவும் ஆம் என்று தலையாட்டியவனுக்கு ஏதோ புரிவது போல தான் இருந்தது,. சட்டென்று அவன் பார்வை அந்த இடத்தை அலசி ஆராய.. அவன் கண்களுக்கு மாட்டிக்கொண்டான் மனோ.. அதுவும் அவர்களின் பள்ளிக்கு கொடுக்க வேண்டிய கப்பினை திமிராக வாங்கிக்கொண்டு நின்றான் மனோ..

அதில் ஜனாவிற்கு எரிச்சல் வர.. நேராக அவனுக்கு போய் நின்றவன்.. “வாட் இஸ் திஸ் மனோ..”என்று கம்பீரமாக கர்ஜிக்க..

அதில் மனோவோ தெனாவட்டாக பார்த்தவன்.. “ம்ச் பின்ன என்ன சார் அதான் நம்ம தானே வின்னர்னு சொல்றாங்க.. அத கேட்டுட்டு நகராம அப்டியே நிக்கிறீங்க.. அதான் நானே வாங்களாம்னு வந்துட்டேன்..”என்றவனோ பரிசினை அவனிடம் காட்டி கேலியாக இதழ் வளைக்க..

அதில் ஆத்திரத்தின் உட்சிக்கே சென்ற ஜனாவோ… "ம்ச் நான் அத கேட்கல.. இந்த போட்டில நாம வின் பண்ல.. வெறும் ரன்னர் அப் தான் நமக்கு கிடைச்சிருக்கனும்.. உண்மையாவே வின் பண்ணுனது அந்த ஸ்கூல் தான்.. அத விட்டுட்டு நமக்கு எப்டி இந்த ஷீல்ட் கிடைச்சிது..”என்றான்

ம்ச் அதெல்லாம் எதுக்கு சார் இப்போ.. நாம சேம்பியன்ஷிப் வின் பண்ணிட்டோம்.. அவ்ளோதான் அத கொண்டாடுவோம் வாங்க..”என்று ஜனாவின் கையை பிடிக்க.. அதனை வெடுக்கென்று தட்டிவிட்டான் ஜனா..

ஜனாவை பொருத்தவரை அவனுக்கு அதிகமாக கோவம் வராது. அனைத்திலும் அவன் முகத்தில் ஒரு அழகிய புன்னகை இருக்கும்.. ஆனால் இன்றோ அவன் கோவம் எல்லையை மீறி போய் இருக்கின்றது.

லுக் மிஸ்டர் மனோ.. இப்போ இங்க என்ன நடந்ததுனு எனக்கு தெரியனும்..”என்று ஆத்திரமாக கத்தியவனை கண்ட மனோவோ.. “ம்ச் சொன்னா கேட்க மாட்டீங்க..”என்றவன்… "சரி சொல்றேன் கேளுங்க.. நம்ம ஸ்கூலுக்கு தான் இந்த கப்பு கிடைக்கனும்னு ஜட்ஜிக்கு, கெஸ்ட்க்குனு காசு குடுத்து கப் வாங்கிருக்கேன்.. போதுமா..”என்றவனின் வாய் அடுத்த நிமிடம் பாக்கு போட்டுக்கொண்டது போல் சிவந்து போய்விட்டது..

ஆஆஆஅ...”என்று மனோ அலற.. அவன் கையை பிடித்து அவன் முதுகுக்கு பின்னால் முறுக்கியவனோ.. “என்னடா நெனச்ச… ம்ம் என்ன நெனச்ச என் திறமைய யூஸ் பண்ணி பசங்கள நான் முன்னாடி கொண்டு வந்தா நீ என்னனா பணமா கொடுத்து வின் பண்ண வைக்கிற… அதும் அந்த ஏழை பசங்களோட திறமைக்கு காசா கொடுக்குற..”என்றவனோ அவன் கையை உடைத்துவிட்டே மறுவேலை பார்த்தான். அதன் பின் மனோவை மண்ணில் போட்டு உருட்டியது வேறு விடயம்.

அதனை பற்றி இப்போது மனோ கூற.. அவனை வெறிக்கொண்டு முறைத்தவாறே நின்றான் ஜனரஞ்சன்.. “இதுல நான் என்ன சார் தப்பு செஞ்சேன்.. என் கைய உடைச்சிட்டான் சார் இவன்..”என்று எகுற..

ஜனாவோ அவனை நெருங்கியவாறே.. “நீ செஞ்சதுக்கு நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டிருக்கனும்டா.. ஏதோ போனா போதுன்னு கைய மட்டும் ஒடச்சேன்ல..”என்று அடிக்க பாய..

ஸ்டாப் இட்..”என்று அந்த பள்ளி தாளாளரின் வார்த்தையில் அப்படியே நின்றான் ஜனா..

தாளாளரோ ஜனாவை முறைத்தவர்.. “இதுல என்ன தப்பிருக்கு ஜனா… எதுக்காக அவன அடிச்ச..”என்று கேள்வி கேட்க.. அதில் மனோ தான் ஜனாவை பார்த்து நக்கலாக சிரித்தான்.

ஜனாவோ முக இறுக்கத்துடன் கையை கட்டிக்கொண்டு தாளாளரையே முறைக்க.. அவரோ.. “இங்க பாரு ஜனா இந்த உலகமே காசு, புகழுக்கு பின்னாடி தான் ஓடுது.. அதுல நம்ம அப்டியே தனியா போய் நின்னா நம்மள அடிச்சி சாப்ட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க.. எனக்கு இந்த ஸ்கூலோட ரெப்புடேஷன விட பணம் முக்கியம்.. அந்த ரெப்புடேஷன்ன நான் காசு குடுத்து கூட வாங்குவேன்.. இந்த காம்படிஷேன்ல வின் பண்ணுனா தான் அடுத்த வருஷம் நிறைய பசங்க வந்து சேரும்.. அதுல ஸ்கூல் வளரும் கல்லாபெட்டியும் சேர்ந்து..”என்று அவர் சேரின் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தவாறே கூற..

அதில் ஜனாவோ அவரை விட்டு இம்மியும் பார்வையை நகர்த்தவில்லை.. “ம்ச் சரி இந்த ஒரு தடவ உன்ன மன்னிக்கிறேன்.. இனி இப்டி கைய நீட்டாத..”என்று அந்த தாளாளர் ஜனாவை மன்னிக்க.. அதில் உதட்டை பிதுக்கி சிரித்த ஜனாவோ.. “உன் வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்..”என்றானே பாக்கலாம்..

அதில் அந்த தாளாளர் விழி வெளியில் பிதுங்குவது போல அவனை பார்க்க.. மனோவோ அவரை விட அதிர்ச்சியாக பார்த்தான் அவனை..

என்ன பாக்குற.. உன்ன மாதிரி எல்லாத்தையும் காச யூஸ் பண்ணி வாங்குறேனு சொல்றவன்டலாம் என்னால வேல பாக்க முடியாது.. நான் திறமைய நம்பி வாழ்றவன்.. அதுக்கு இங்க இடம் இல்லாதப்போ நான் ஏன் இங்க இருக்கனும்..”என்றவன் அப்படியே ஒரு பேப்பரில் ரிசைனேஷனை எழுதி விட்டெறிந்தவன்.. மனோவை திரும்பி முறைத்தவாறே “உன்ன அப்புறம் பாத்துக்குறேன்..”என்றவாறே அங்கிருந்து சென்றுவிட்டான். போகும் ஜனாவை தான் அவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த சண்டை கூட ஒருத்தியின் வாழ்க்கையை தாமரை பூவாக மலர வைக்கத்தான் இருக்குமோ..

(வரலாமா...)

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top